​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 10 September 2025

சித்தன் அருள் - 1929 - அன்புடன் அகத்தியர் - போகர் சித்தர் வாக்கு - 31.08.2025






அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் போகர் சித்தர் உரைத்த வாக்கு - 31.08.2025 - திருஅண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு

ஆதி மூலனை மனதில் எண்ணி, என் வேலோனையும் மனதில் எண்ணி பரப்புகின்றேனே போகனவனே!!!

அருளும் பொருளும் கூர்ந்து கொடுக்கும் இறைவா!!! இறைவியே!!! போற்றி!!!

மகன்களை உள்ளத்திலே வைத்து உரைக்கின்றேனே!!!

மானிடன் பல கர்மங்களைச்  சேர்த்து வைத்திருக்கின்றான். அதாவது பாவ கணக்கையும் , புண்ணிய கணக்கையும் எடுத்துரைக்கப் போகின்றேன். 

(திருஅண்ணாமலையார், திருஉண்ணாமலை தாய்) 
பின்
ஈசனே!!! உன் முன்னாலே, 
தாயே!!! உன் முன்னாலே, 

முதலில் பாவத்தை எப்படித்  தொலைப்பது என்பதை மானிடனுக்கு எடுத்துரைக்கப் போகின்றேன். 

அறியா மானிடனே!!!
இருந்தும் பலன் என்ன? 
இல்லாவிடிலும்  பலன் என்ன? 

இருந்தும் பலன் இன்னும் மேம்படுத்த , வாழ்கையில் இன்பம் பெற்று , மற்றவர்களையும் இன்பத்திற்கு அழைத்துச் செல்ல, என் பின் மைந்தனான வேலவனை மனதிலே நினைத்து, கர்மம் சேராமல், பிரம்மாவை நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட அவனிடமும் பின் கேட்டு, பின் என் மைந்தன் அறிந்தும் புரிந்தும் வேலவனே!!!!!! 

உனை நினைத்தே நிச்சயம் எடுத்துரைக்கப் போகின்றேன்.

இன்னும் மனிதனிடத்தில் பாவங்கள்   சேர்க்கச்  சேர்க்க,  நிச்சயம் அதாவது கஷ்டங்களும்  வாழ்விலும் இன்னும் இன்னும் நோய்களும் வந்து கொண்டே. 

அதனை நிச்சயம் 
“”””உன் தாய் மடியின் மீதே, தந்தையின் மடியின் மீதே நிச்சயம் யான் சொன்னால் நிச்சயம் அது பின் உடனடியாக நடந்திடும். “”””

“”””யானே நடத்திடவும் முடியும். தீர்வும் கிட்டும்.””””

மானிடர்களே!!!! அறிந்தும் புரிந்தும் நிச்சயம் என் பிள்ளையிடம் வந்து கொண்டே இருக்கின்றீர்கள். 

அதாவது அறுபடை வீடுகளுக்கும் கூட. ஆனாலும்  என்னென்ன பின் என் மைந்தன் செய்தான் என்பவையெல்லாம் விளக்கங்களாக இன்னும் என்னென்ன , எப்படி அங்கு வந்தால் இன்னும் அருள்கள் தித்திக்கும் என்பதையெல்லாம். ஆனால் நிச்சயம் அங்குச் சென்றால் அவை நடந்துவிடும் என்றெல்லாம் நிச்சயம் பொய்யான கணக்கு. 

ஆனாலும் முதலில் பாவத்தைச்  சிறிதாவது எறிந்து அதாவது எரித்து எறிந்து தூரே!!! 

நிச்சயம் அவ்வாறாக வந்தால் மட்டுமே உங்களுக்கு இன்பம் கிடைக்கும்.  அதனை இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். யான் எடுத்துரைக்கப் போகின்றேன். 

முதலில் நிச்சயம் ஈசனையும்!!!!! அதாவது பஞ்ச பூதங்களையும் தரிசிக்க, (அதன் பின்) அதாவது அறுபடை வீடுகளையும் தரிசிக்க (வேண்டும்). நிச்சயம் இவ்வாறுதான் செய்ய வேண்டும். 

இவ்வாறு செய்தால் மட்டுமே சிறு பாவ கணக்கை எரித்து , நிச்சயம் புண்ணியக் கணக்குத் தொடங்கும்.  அவ்வாறு இல்லையே என்றால் நிச்சயம் பின் (அறுபடை வீடுகளுக்கு) வந்து வந்து ஒன்றும் நடக்கவில்லையே என்றெல்லாம் புலம்புதல். 

இவ்வாறுத்தான் , பின் நிச்சயம் பன்னிரண்டு  அறிந்தும் புரிந்தும் கூட , இதனை தன்மையும் கூட அதாவது புண்ணிய நதிகளில் முதலில் நீரை எடுக்க வேண்டும். அவ்வாறு அங்கு எடுத்த நீரை இல்லத்திற்கு அழகாக எடுத்திட்டு. பின் எங்கெங்கு எடுத்து அறிந்தும் , எங்கெங்கு எடுக்கின்றீர்களோ அங்கெல்லாம் ஒவ்வொரு திருத்தலமும் இருக்கும். அத்திருத்தலத்தில் நிச்சயம் பரிபூரணமாக பின் அதாவது கந்த புராணத்தையும் கூட நல் ஓதி, அவைமட்டும் இல்லாமல் பின் சிவபுராணத்தையும் ஓதி நன்முறைகளாகவே, பின் அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் அவ் ஆற்றிலே சில மணல்கள் எடுத்து சிறிய அளவில்,  நிச்சயம் ஒவ்வொரு  பின் அதாவது விதவிதமாக நிச்சயம் நிறத்திலும் கூட சரியாகவே, அதாவது கிரகங்களின் நிறத்தில் நிச்சயம் அறிந்தும் கூட  ஒவ்வொரு  கிரகத்திற்கும் ஒவ்வொரு நிறம் உள்ளது அல்லவா? நிச்சயம் அறிந்தும் இதைத்தன்  எடுத்திட்டு அதாவது சரியாக பின் கட்டிக்கொண்டு இல்லத்தில் வைத்து , இல்லத்தில் வைத்து அவைதன் பூசை செய்ய நன்று. 

அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் இவை அறிந்து மீண்டும் இவை நிச்சயம் பின் இல்லத்திலேயே வைத்துவிட்டு, நிச்சயம் அகத்தியன் பின் உருவாக்கிய பின் குற்றால நாதனிடம் சென்று அங்கும் கூட நீரை பின் சரியாக எடுத்திட்டு , எடுத்திட்டு அதனையும் இல்லத்தில் வைத்து , நிச்சயம் இவைதன் கூட இதனால் அதாவது இப்பொழுது சொன்னேன் நிச்சயம். 

இவை அறிந்தும் கூட அதில் கூட நிச்சயம் திரிபலா, திரிகடுகம் அதனை அப்படியே அதில் இடக்கூடாது. ஒவ்வொன்றாகப்  பச்சையாகவே இடவேண்டும். 

அதாவது நெல்லிக்கனி என்று வைத்துக் கொள்ளுங்கள். நெல்லிக்கனியைச்  சரியான சமளவில் அதில் இடவேண்டும். 

இதேபோலத்தான் நிச்சயம் பின் அவ் நீரில் இட்டு, அவை மட்டும் இல்லாமல் வெற்றிலை சாற்றையும் சிறிதளவு இட்டு, மிளகையும் சீரகத்தையும் இட்டு, அவை மட்டும் இல்லாமல் இன்னும் பல வகையான கீரைகளையும் கூட இட்டு , இவைதன் அதிலே நிச்சயம் தன்னில் கூட சரியாகவே,  இவை மட்டும் அல்லாமல்  அனுதினமும் சிறிதளவே பின் நீரை எடுத்திட்டு , நிச்சயம் இவையெல்லாம் அதாவது இன்னும் பொன்னாங்கண்ணி, இன்னும் கரிசலாங்கண்ணி, இன்னும் பின் மணத்தக்காளி,  இன்னும் முருங்கை இலைகளையும் கூட , இன்னும் வில்வத்தையும் கூட இன்னும் பல மூலிகைகளையும் கூட இட்டு நசுக்கி பின் சாறை (மூலிகைச் சாற்றை )  நிச்சயம் அதனுள்ளே இட்டு. 

இட்டிட்டு நிச்சயம் அதிகாலையிலும் மாலை வேளையிலும் அதாவது உறங்கச் செல்வதற்கு நிச்சயம் ஒரு 5 நிமிடம் அல்லது 10 நிமிடங்களுக்கு முன்பு இதை நிச்சயம் பின் அதாவது சரியாகவே , பின் இவ்வாறாகவே அனுதினமும் அதாவது இரவில் ஊற வைத்து நிச்சயம் அதிகாலையிலும் சிறிதளவு நிச்சயம் அவைதன்னை மாலை வேளையிலும் கூட அருந்திவர அருந்திவர நிச்சயம் சில நோய்கள் நீங்கும் அப்பா. 

இவைதன் தொடர்ந்து செய்ய வேண்டும். 

ஏனென்றால் அனைவருக்குமே நோய்கள் காலமாகப்  பெருக்கெடுத்து ஓடுகின்றது. அதை முதலில் நிறுத்தினால்தான், ஆரோக்கியம் நல் முறையாக இருந்தால் மட்டுமே உங்களால் இன்னும் இன்னும் இறைவனைச்  சேவிக்க முடியும். இன்னும் மன சந்தோசங்கள் ஏற்பட்டு அனைவருக்கும் சொல்ல முடியும். 

இதைச் செய்து கொண்டே வர வேண்டும். 

உடலில் உள்ள அழுக்குகள் நீக்கப்பெற்று இறை சக்திகள்,  இறை பலங்கள் இன்னும் அதிகமாகும். 

இவ்வாறாகவே  அவை மட்டும் இல்லாமல் இவை தொடர்ந்து நிச்சயம். 

அவை மட்டும் இல்லாமல் என் செல்லப் பிள்ளை பழனிதன்னில் இருக்கின்றானே, அங்கு வந்து நிச்சயம் இவைதனும் கூட சிறிதளவு பின் சந்தனத்தையும் நிச்சயம் தன்னில் அங்கிருக்கும் சில பிரசாதங்களையும் கூட எடுத்து வந்து அனுதினமும் அதிகாலையிலே அவையும் கூட கடுகளவு உட்கொள்ள வேண்டும். 

அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் இதைத்தன் அறிய பின் இவை என்று கூர்ந்து, செந்தூரில் அழகாக என் மைந்தன் நிற்கின்றானே அங்கேயும் 
நிச்சயம் நீரை எடுத்திட்டு , அதைத்தன் பின் அனுதினமும் நிச்சயம் பின் இவைதன் பின் நீராடுகின்ற பொழுது நிச்சயம் சிறிதளவு அவையும் சேர்த்து, அவை மட்டும் இல்லாமல் ராமேஸ்வரத்திலும் பின் நீரை எடுத்திட்டு நிச்சயம் பின் அனுதினமும் நிச்சயம் பின் அதாவது நீராடிவர , அதாவது அதிகளவு நீர் இருந்தாலும் அதில் சிறிதளவு இட்டு, நிச்சயம் அதிகளவு (பல முறை) நீராடிக்கொண்டே வந்தாலே கிரக தோஷங்கள் மறையும்.

பின்பு இவைதன் இப்படியே செய்யச் செய்ய பின் மறைந்திருக்கும் அழுக்குகள் நீங்கி, மறைந்திருக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு உங்களுக்குக் கிட்டும். 

இதை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விவரிக்கலாம். ஆனாலும் எங்களுக்கு அனைவருமே ஒன்றுதான். அதனால்தான் இதை யாங்கள் இங்கு சொன்னோம்.  

அண்ணாமலையிலும் அறிந்தும் பின் புரிந்தும் என் தாயிடமே நிச்சயம் மடியின் மீதே அமர்ந்து யான் எடுத்துரைத்தேன்.  

இதை சரியாக யார் ஒருவன்  கடைப்பிடிக்கின்றானோ நிச்சயம் அவந்தனக்கு உண்மை நிலை, கிரக நிலைகள் இன்னும் எதை எவை என்றும் ஒரு சக்திகள் ஏற்படும் நிச்சயம் அறிந்தும். 

“””””” இதற்கும் சில புண்ணியங்கள் வேண்டும். இப்புண்ணியங்கள் நிச்சயம் இருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும். “”””””

இதனை, இப்புண்ணியங்கள் நிச்சயம் எப்படிச் செய்துவர? 

அனுதினமும் பின் அதாவது பின் கோமாதாக்களுக்கு உணவு கொடுத்துவர, கொடுத்துவர சிறப்பு. 

அவை மட்டும்  இல்லாமல் எறும்புகளுக்கும்,  இன்னும் பல ஜீவராசிகளுக்கும் நிச்சயம் ஈர் மாதம், மும் மாதம் கொடுத்துக் கொண்டே வந்தாலே சில புண்ணியங்கள் ஏற்படும். 

“””””அப்புண்ணியத்தின் மூலம் நிச்சயம் இதைச் செய்யும் பாக்கியம் கிட்டும். “”””””

“””””அனைவருக்கும் நிச்சயம் பின் கிடைக்காது. “””””

அனைத்தும் இப்பொழுது நிச்சயம் ஈசன் அருளாலும், நிச்சயம் பார்வதிதேவியின் அருளாலும் நிச்சயம் யான் இங்கு சொல்ல வந்தேனே!!!! 

இதைப் பயன்படுத்துகின்றவர்களுக்கு இன்னும் இன்னும் அழகாகப் பக்குவங்கள் ஏற்பட்டு, இறை சக்தியும் பலமாயிற்று,  நிச்சயம் இவை உணர்ந்து இன்னும் பன்மடங்கு இன்னும் நீங்கள் என்ன விரும்பியதெல்லாம் கிடைக்கும். 

அவள் மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் பல யோகங்கள் கிட்டும். 

பின் மணச்சநல்லூர் சென்று நிச்சயம் இறைவனிடத்தில் வேண்டி, நிச்சயம் அங்கு இருக்கும் பிரசாதங்களைக்கூட இல்லத்தில் வைக்க,  நிச்சயம் சில யோகங்கள் உண்டு உண்டு.  ஏற்றங்கள் உண்டு. 

இவ்வாறாகவே பணத்தேவைகளைப்  பூர்த்தி செய்ய நிச்சயம் அதாவது அனைத்தும் பின் (குடும்பத்துடன்) ஒன்றாக இனைந்து கூத்தனூர் பின் தேவிக்கு நிச்சயம் தன்னில் கூட அதாவது சென்று அங்கு நிச்சயம் இயலாதவர்களுக்கு எதை எங்கிருந்தாலும் சரி ,நிச்சயம் பின் பாடப்  புத்தகங்களை எழுதுவதற்கு, எழுதி அறிந்தும் அவர்களுக்குக்  கொடுத்து…..

 நிச்சயம் இவைதன் நிச்சயம் அதாவது தாங்கள் தங்கள் பிள்ளைகளையும் கூட கல்வி ஸ்தானத்தில் உயர் நிலை வகிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களும், 
 நிச்சயம் பொருளுக்காகவும் அதாவது பணத்திற்காகவும் பின் கூத்தனூர் தேவியே சாலச் சிறந்தது. 

அப்படியே பக்கத்தில் இருப்பானே ஞான கணபதி அங்கும் வணங்கி வர,  நிச்சயம் அறிந்தும் புரிந்தும் அதாவது அப்படியே எதை என்று புரிந்து கொள்ளும் அளவிற்கும் கூட சில விதிகளை மாற்றி பின் கணபதி அங்கு கொடுத்திருக்கின்றான். 

அவை மட்டும் இல்லாமல் கும்பகோணத்தில் வசிக்கும் பின் வலஞ்சுழியும் நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட ஞான கணபதி வீற்றிருக்கின்றான் அல்லவா, அங்கும் சென்று தரிசித்து, பின் அப்படியே சுவாமிமலை ஏறி, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய , அப்படியே பின் வைகை நதியில் அழகாக வீற்றிருக்கும் நிச்சயம் தேவி, பார்வதி தேவி மீனாட்சி என்றே அழைக்க,  நிச்சயம் அவளையும் வணங்கி , பின் அங்கிருக்கும் குங்குமத்தையும் எடுத்து வந்து,  இல்லத்தில் வைக்க உங்களுக்கு சில அதிர்ஷ்டங்கள்  ஏற்படும். 

ஏனென்றால் நீங்கள் அனைவருமே பின் என்ன விரும்புகின்றீர்கள் எதை, எவை என்றெல்லாம். 

ஆனாலும் பின் இவையெல்லாம் கஷ்டங்கள் பட்டு செய்தால் மட்டுமே சில புண்ணியங்கள் ஏற்பட்டு , அனைத்தும் கிட்டும். 

அதாவது நீங்களும்  கேட்கலாம்.  சுலபமான  வழி இல்லையா? இவை கஷ்டம் என்று. 

ஆனாலும் படிப்பதும் இங்கு கஷ்டம்.  

அதாவது உயர் கல்விகளைப் படிப்பதும் கஷ்டம். 

அதாவது பணங்களும் கஷ்டம். வேலைக்குச் செல்வதும் கஷ்டம். 

உண்ணுவதும் கஷ்டம் என்றால் யாங்கள் என்ன செய்வது? 

ஆனால் நிச்சயம் அதற்கு ஏற்றவாறு பின் இப்புண்ணியத்தைச் செய்தால் தானாக அதையும் செய்து விடலாம். 

இதை நிச்சயம் செய்திட்டு வாருங்கள்.  

உங்களுக்கு நோய் நொடிகளும் தீரும். 

நிச்சயம் உங்கள் பிரச்சனைகளும் தீரும். 

நிச்சயம் இவையன்று அறிய அதாவது போகனவன் இன்னும் வாக்குகளை உரைப்பேன் (திருஅண்ணாமலை) இங்கே. ஆசிகள்! இப்பொழுது ஆசிகள்! 


—————————————————

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

வணக்கம் அடியவர்களே,

இவ் வாக்கின் செயல் முறை விளக்கம்:- 

1. இவ் பூசை வழிபாடு செய்ய ஆரம்பிக்கும் முன்னர் 60 அல்லது 90 நாட்கள் அவசியம் கோமாதாக்களுக்கு உணவளிக்க வேண்டும். அத்துடன் 60 அல்லது 90 நாட்கள் பல ஜீவராசிகளுக்கும் , எறும்புகளுக்கும், பறவைகளுக்கும் கட்டாயம் உணவு வழங்குதல் வேண்டும். இந்த புண்ணிய பலத்தினால் மட்டுமே இவ் பூசையை செய்ய இயலும்  என்பது போகர் சித்தர் வாக்கு. 
2. 90 நாட்கள் செய்து இப்போது புண்ணிய பலம் பெற்று இருப்பீர்கள். நல் வாழ்வு காண வாழ்த்துக்கள். 
3. அடுத்து பஞ்ச பூதத்  தலங்களை மட்டும் முதலில் கீழ்க்கண்ட  வரிசையில் தரிசிக்க வேண்டும். திருஅண்ணாமலை, திருக்காளகத்தி காளத்த்தீஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயம், சிதம்பரம் நடராஜப்பெருமான் ஆலயம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம். இந்த முறை தரிசனம் ரகசிய வாக்காக நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளியது. சித்தன் அருள் - 1280 என்ற பதிவில் படித்து, ரகசியங்களைத் தெரிந்து கொள்க. https://siththanarul.blogspot.com/2023/02/1280.html   அதன்படி இவ்வாறு முதலில் பஞ்ச பூத திருத்தலங்களை முதலில் தரிசிக்கத்  துன்ப வினைகள் பாவங்கள் நீங்கும். பாவங்கள் எரிந்துவிடும் என்பது அன்புடன் போகர் சித்தர் இங்கு உரைத்த வாக்கில் படித்து அறிந்து கொள்க.
4. பஞ்ச பூத திருத்தலங்களை தரிசனம் செய்த பின்னர் மட்டுமே,  அறுபடை வீடு மட்டும் தரிசனம் தொடர்ந்து செய்ய வேண்டும்.  அறுபடை வீடுகளை எந்த வரிசையில் செய்ய வேண்டும் என்ற விபரம் அறிய சித்தன் அருள் 1861 என்ற பதிவில் உள்ளது. திருச்செந்தூரில் ஆரம்பித்து திருத்தணியில்  முடிக்கலாம். அல்லது திருத்தணியில்  ஆரம்பித்து திருச்செந்தூரில் முடிக்கலாம். இவை இரண்டில் ஒன்று உங்கள் விருப்பமே. https://siththanarul.blogspot.com/2025/05/1861.html இப்போது நிச்சயம் உங்கள் புண்ணியக் கணக்குத் தொடங்கும் என்று அன்புடன் போகர் சித்தர் உரைத்துள்ளார்கள். 
5. அடுத்த நிலையில் பன்னிரண்டு  (12) புண்ணிய நதிகளில் நீர் எடுக்க வேண்டும். அதனை இல்லத்திற்குக் கொண்டு வருதல் வேண்டும். 
6. அந்த நதிகளின் அருகில் உள்ள திருத்தலங்களில் சிவபுராணம் மற்றும் கந்தபுராணம் , சிவபுராணத்தையும் நல்மனதாக பாட வேண்டும். 
7. அந்த நதிகளிலிருந்து மணல் எடுக்க வேண்டும். நவகிரகங்களின் நிறத்தில் உள்ள மணல்களை எடுத்து கட்டிவைத்து (மஞ்சள் துணியில் கிழி போல்) இல்லத்தில் வைத்து பூசை செய்தல் வேண்டும். 
8. நம் குருநாதர் உருவாக்கிய திருக்குற்றாலத்தில் உள்ள திருக்குற்றால நாதர் ஆலயம் சென்று அங்குள்ள நீரையும் எடுத்து வர வேண்டும். 
9. இப்பொழுது உங்களிடம் 13 வகையான நீர் சேர்ந்து இருக்கும். அதாவது 12 புண்ணிய நதி நீர், மற்றும் திருக்குற்றாலம் நீர். 
10. இந் நீரில் திரிகடுகம் மற்றும் திரிபலா செய்ய உதவும் மூலப் பொருளைப் பச்சையாக அந்த 13 நீர் கலந்த, நீரில் இட வேண்டும். (10.1) திரிபலா என்பது கடுக்காய் (Chebulic Myrobalan), தான்றிக்காய் (Beleric Myrobalan), மற்றும் நெல்லிக்காய் (Indian Gooseberry) ஆகிய மூன்று பழங்களின் கலவையாகும். (10.2) திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் கலவையாகும். இந்த  6 மூல மூலிகைகளை பச்சையாக அந்த 12 நீர் கலவையில் சேர்க்க வேண்டும். உதாரணமாக நெல்லிக்கனி என்றால் பச்சையாகச்  சரியான சம அளவில் மற்ற 5 மூலிகைகளுடன் சரியான சம அளவில் கலக்க/இட வேண்டும்.  நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்  நமக்கு உரைத்த சித்த வைத்தியர் திரு. தனகுமார் ஐயா (Mobile no +91 95668 25599). அவர்களை டொடர்பு கொண்டு விபரங்கள் அறிந்து கொள்க. 
11. இந்த நீரில் வெற்றிலை சாறு சிறிதளவு, மிளகு, சீரகம், பல வகையான கீரைகள் சாறு, பொன்னாங்கண்ணி  சாறு, கரிசலாங்கண்ணி  சாறு, மணத்தக்காளி  சாறு, முருங்கை இலைச் சாறு, வில்வ இலைச் சாறு இன்னும் பல மூலிகைச் சாறுகளையும் இடவேண்டும். 
12. இப்போது  நீங்கள் தயார் செய்த ஆற்று நீர் மற்றும் மூலிகைச்  சாறு கலந்த நீரை அதி காலையிலும், மாலையில்/இரவில் உறங்கும் முன்னர் 10 நிமிடங்களுக்கு முன்னர் சிறிதளவு தொடர்ந்து அருந்திவர வேண்டும். இப்படிச் செய்தால் சில நோய்கள் நீங்கும் என்று போகர் சித்தர் வாக்கு.
13. இதன் மூலம் நல் ஆரோக்கியம் கிட்டி, இறைவனை நிம்மதியாக வழிபட முடியும். உங்களுக்கு  மனம் சந்தோசம் அடைந்து பலருக்கும் இதனை எடுத்துச்  சொல்லி செய்யச்சொல்லுங்கள். 
14. இப்படித் தொடர்ந்து செய்ய உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி இறை பலம் அதிகரிக்கும். 
15. இவ் நீருடன் பழனி முருகப் பெருமானின் சந்தனத்தையும் அங்குள்ள பிரசாதங்களையும் எடுத்து வந்து அதிகாலையில் கடுகளவு உண்ண வேண்டும்.
16. இதனுடன் திருச்செந்தூர் மற்றும் இராமேஸ்வரத்தில் உள்ள புனித நீரை எடுத்து வந்து தினமும் நீராடினால் கிரக தோஷங்கள் உங்களுக்கு மறையும். அழுக்குகள் நீங்கி மறைந்திருக்கும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தானாக உங்களைத் தேடி வரும்.
17. இதனைப்  பயன் படுத்தும் போது உங்களுக்குப்  பக்குவங்கள் உண்டாகி, இறை பலங்கள் அதிகரித்து , பன்மடங்கு நீங்கள் விரும்பியது   எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். 
18. மண்ணச்சநல்லூர் பூமிநாதர் ஆலயம் சென்று , இறைவனை நல் முறையாக வேண்டி, அங்குள்ள பிரசாதங்களை இல்லத்தில் வைக்க சில யோகங்களும் உங்களுக்கு கிட்டும். ஏற்றங்களும் உங்களுக்கு உண்டாகும்.
19. பின்னர் கூத்தனூர் சரஸ்வதி தேவி ஆலயம் குடும்பத்துடன் சென்று அங்குள்ள இயலாதவர்களுக்குப்  பாடப்  புத்தகங்கள், எழுதுவதற்கு  நோட்டு புத்தகங்கள் , எழுது கோல் முதலியவற்றை தானம் அளிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் கல்வியில் சிறந்து உயர மற்றும் உங்கள் பொருளாதாதர் உயர்வும் கூத்தனூர் சரஸ்வதி தேவியே சாலச்சிறந்த வழிபாடு என்று அன்புடன் போகர் சித்தர் உரைத்துள்ளார்கள். 
20. அதன் பின் திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே 2 கிலோ மீட்டர் அருகே சிதிலபதியில் உள்ளது ஸ்ரீமுக்தீஸ்வரர் ஆலயம். இந்தக் கோயிலில் இருக்கும் விநாயகர் யானை முகமின்றி மனித முகத்துடன் , “ஆதி விநாயகர்"  என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார். இந்த ஞான கணபதியை வணங்க வேண்டும். விதிகளை மாற்றி அருளிய கணபதி என்று வாக்கு.
21. திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்  - வலஞ்சுழி விநாயகர் சென்று தரிசித்து, சுவாமிமலை தரிசித்து , மதுரை  மீனாட்சி தேவி வணங்கி அங்கிருக்கும் குங்குமத்தையும்  எடுத்து வந்து,  இல்லத்தில் வைக்க உங்களுக்கு சில அதிர்ஷ்டங்கள்  ஏற்படும்.  
22. இதை நிச்சயம் செய்திட்டு வாருங்கள். உங்களுக்கு நோய் நொடிகளும் தீரும். நிச்சயம் உங்கள் பிரச்சனைகளும் தீரும் என்று அன்புடன் போகர் சித்தர் அருளிய வழிமுறைகளை வழிமுறைகளைக்  கடைப்பிடித்து, வாழ்வில் நீங்களும் உயர்ந்து , மற்றவர்களுக்கும் எடுத்துச் செய்யச் சொல்லி, அவர்களையும் உயர்வடையச் செய்யுங்கள். இதன் மூலம் நீங்களும் உயர் தர முதல் வகைப் புண்ணியங்கள் பல மடங்கு பெற்றுக் கொள்ளுங்கள். 

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

ஓம் ஸ்ரீ லோபபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!