​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 27 August 2025

சித்தன் அருள் - 1925 - அன்புடன் அகத்தியர் - விநாயகர் வாக்கு!




14/6/2025 சங்கட ஹர சதுர்த்தி அன்று மூத்தோன் பிள்ளையோன் விநாயகப் பெருமான் ஜீவநாடியில் வந்து உரைத்த வாக்கு.


வணக்கம் அகத்தியர்  அடியவர்களே உங்கள் அனைவருக்கும் மூத்தவன் முதல்வன் பிள்ளையோன் ஞான கணபதியின் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

வாக்குரைத்த ஸ்தலம்: மீர்காட் கணபதி ஆலயம் கங்கை கரை.காக்கும் சிவன் காசி.

வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!

வைகாசி தன்னில் காசிக்கு செல்ல வேண்டும்... காசிக்கு செல்ல வேண்டும் என்று குருநாதர் உத்தரவு கொடுத்திருந்தார். 


ஏற்கனவே வைகாசி மாதம் காசிக்கு ஏன் செல்ல வேண்டும் என்பதை பற்றி... குருநாதர் ஏற்கனவே வாக்குகளில் கூறியிருக்கின்றார். 

வைகாசி காசி முக்கியத்துவம்.

காசியில் முருகப்பெருமான் 

சித்தன் அருள் 1153 அன்புடன் அகத்தியர் கேதார் கார்ட். 

வாக்கில் முருகப்பெருமான் உரைத்திருந்தார்.


அகத்தியனோ மாபெரும்....!!! அகத்தியனுக்கு கூட இவைதன் பிடிக்கும் ஸ்தலம் (காசி).... அதனால்தான் என்னவோ!!!! பின் அவனுடைய சுவடியை (ஜீவநாடி) இங்கே அடிக்கடி வரவழைத்து கொண்டே இருக்கின்றான்.

இன்னும் ஏனைய சித்தர்களும் வருவார்கள்..!!! எவையென்று கூற இன்னும் பல ரிஷிகளும் இங்கே தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!

அதனால் சாதாரணமாக வர முடியாது....

என் தந்தையின் அருள் இருந்தால் தான் இங்கே வரவும் முடியும்!!! காலடியும் வைக்கமுடியும்!!!

ஆனால் ஒரு வாக்கில் புசுண்டனவன் (காக புஜண்டர்) அழகாக உரைத்துவிட்டான்.....

காசிக்குச் செல்லுங்கள் என்று!!!!!!

[16/4/2022 அன்று காகபுஜண்டர் ரிஷி சித்ரா பவுர்ணமி அன்று திரயம்பகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் வாக்கில்..

 """"வைகாசி என்று சொல்கின்றீர்களே... அதுவே காசி...

அவ் காசிக்கு அவைதன் முறையாகவே பயணம் மேற்கொள்ள வேண்டும் ...

மேற்க்கொண்டால் நலன்களே உறுதியானது அதனால்தான் வைகாசி. !!....என்று உரைத்திருந்தார்.
சித்தன் அருள் 1116 ல் வெளிவந்துள்ளது]



ஆனால் எத்தனை??? மனிதர்களுக்கு அவ் பாக்கியம்!!! கிடைத்ததென்றால்!!!! நிச்சயம் இல்லை...சில மனிதர்களுக்கே!!!!!

என்று முருகப்பெருமான் வாக்குகளில் கூறியிருந்தார்


சித்திரை மாதம் செய்யும் தான தர்மங்கள் சேவைகள் இவற்றின் புண்ணியங்கள் எல்லாம் சித்திரை மாதத்தில் சித்திரகுப்தன் அவரவர் புண்ணிய கணக்கில் எழுதுவார்.

அனைவருடைய புண்ணிய கணக்கு சித்திரை மாதம் துவங்கும். 



சித்தன் அருள் 1593.பதிவு எண்.22/4/2024 அன்புடன் அகத்தியர்.

சத்தியமங்கலம் பவானிசாகர் வீரபத்திர சோமேஸ்வரர் மங்களாம்பிகை ஆலயத்தில் குருநாதர் உரைத்த வாக்கில்.



சித்திரை மாதம் புண்ணியங்களை செய்து விட்டு வைகாசி மாதம் காசிக்குச் சென்றால் பல பாவங்களை ஈசன் அகற்றுவார் கங்கை தன்னில் கூட என்றும் குருநாதர் வாக்குகளை கூறியிருந்தார். 


முருகப்பெருமான் காகபுஜண்டர் மகரிஷி குருநாதர் அகத்தியர் பெருமான் வைகாசி மாதம் காசி செல்வதன் மகத்துவம் ஏற்கனவே வாக்குகளில் கூறியிருக்கின்றார்கள். 


அதன்படி இந்த வருடம் சுவடி ஓதும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவை காசிக்கு செல்லச் சொல்லி குருநாதர் உத்தரவிட்டார்.

குருநாதர் வாக்குகளை அப்படியே பின்பற்றும் சில அடியவர்களும் காசிக்கு சென்றிருந்தனர்.


14/6/2025 அன்று சங்கடகர சதுர்த்தி விநாயகருக்கு உகந்த நாள் அன்றைய தினத்தில் திரு ஜானகிராமன் ஐயா உட்பட அனைவரும் மீர்காட்டில் உள்ள கங்கைக்கரையில் நீராடிக் கொண்டிருந்த பொழுது கங்கை நீரில் அடியில் ஏதோ ஒரு பொருள் தட்டுபட்டது.

நீரில் மூழ்கி அந்த பொருளை எடுத்துப் பார்த்தால்... சாட்சாத்.. விநாயகப் பெருமானுடைய சிறிய சிலை ஒன்று கங்கை நதியில் இருந்து கிடைத்தது...

கிடைத்த விநாயகர் சிலையை எடுத்துக்கொண்டு ஜீவனாடி பெட்டகத்துடன் மீர் காட்டில் உள்ள... கணபதி ஆலயத்தில் வைத்து ஜெயதேவ ஜெயதேவ ஸ்ரீ மங்கள மூர்த்தி பாடல் பாடி கணபதியை பொழுது ஆராதனை செய்யப்பட்டது.


அதன் பிறகு திரு சுவடி ஓதும் அகத்தியர் மைந்தன் ஜானகிராமன் ஐயா சுவடியை வணங்கி ஓதத் தொடங்கிய பொழுது..

மூத்தோன் முதல்வன் பிள்ளையோன்... ஸ்ரீ விநாயகப் பெருமான் சுவடியில் வந்து வாக்குகள் பாடல் வடிவில் உரைத்துச் சென்றார்.

அவ் வாக்கு பின்வருமாறு!!!

அன்பென்று அசைந்தாடும் தந்தையே!!!
அடிபணிந்தேனே!!


காத்தருளி தாயே!!
மதித்து பரப்புகின்றேனே வாக்குகளாக!!
அன்பென்று இருந்தேனே!! மூத்தோனே !! மூத்தோனே!! பரப்புகின்றேனே!!!

அன்பென்று நன்றென்று இல்லோமே உள்ளோமே
அதை செய்தோமே!!
நன்று!!
அன்னையின் அருள் பெற்றோமே!!

அன்பின் எல்லை கருணை தன்னை 
தன்னையே வெளி காட்டா அருளை நின்றவனே தந்தையே!!

பின் அன்பின் கருணை என்றெல்லாம் மனிதனுக்கு தெரிவதே இல்லையே இல்லையே!!

அன்பென்ற உருவத்திற்கு அடையாளமாய் நிற்பவனே எங்கும் நிறைந்தும் நிறைந்தும் நிற்பவனே!!

அல்லல் பின் துன்பங்களை பின் நீக்குபவனே!! என்றென்றும் பின் பரிசுத்தமாக.. அனைவரின் இல்லத்தில் பின் இதயத்தில் குடியிருப்பவனே என்றென்றும் நீங்காது இறைவனே!!

பின் அன்பென்ற உருவத்திற்கு சொல்லாத தத்துவம் என்ற நிலைக்கு பின் ஆட்கொண்ட இறைவா என் தந்தையே!!

அன்னையே! அன்னையே!
 உனை மதித்து 
பெருமையும் கூட யான் கூறிடுவேன்.
அல்லல் பின் துன்பத்தை யான் பின் அறிந்து. 

அறிந்து அறிந்து பின் மக்களையே தாயே தாயே உன்னை உன்னையே தேடி வந்து
அதனையும் அதனையும் ஏற்று ஏற்று பாவத்தை பின் ஏற்று ஏற்று... அனைத்தும் பின் கொண்டாயே தாயே தாயே.. அனைத்தும் கொண்டாயே தாயே தாயே!!!
அணைத்தும் கொண்டாயே தாயே தாயே!!

இன்பம் எல்லாம் அருள்பவனே... இன்பம் எல்லாம் அருள்பவனே 
அனைத்து உலகும் காப்பவரே!!
அருள் எல்லை இல்லா எம் தந்தையே!!

தந்தையே என் தந்தையே அனைவரின் பாவத்தை பெற்றோனே
அனைவரின் பாவத்தை பெற்றிட்டு நிச்சயம் கங்கைக் தன்னில் பின் அமர்ந்தாயே!

கங்கையின் பின் தாயின் பின்.. தாயின் மடியில் அமர்ந்தாயே!!

உன்னை காண ஓடோடி வந்து 
உன்னை காண ஓடோடி வந்து 
கந்தனே பின் தாயே தந்தையே.. என்று பின் அணைத்தானே!!
தந்தையே தாயே என்றென்றும் பின் அன்னையும் தந்தையும் ஒன்றே பின் ‌.

நில்லும் அதனையும் பின்.. மக்கள் கோடி கோடி கோடி செத்து மடிவார்கள் உலகத்திலே. 

தாயே தந்தையே பாவம் ஏற்று... நிச்சயம் தன்னில் புண்ணியங்கள்.. பெருக்கி தன் பின் அனைவரையும் காக்க 
ஓடோடி வா ஓடோடி வா 
அன்னையே தந்தையே ஓடோடி வா!!

அன்னையே தந்தையே ஓடோடி வா
ஓடோடி வா ஓடோடி வா 

அனைத்தும் நீயே என்று சொன்னவரே! 
அனைத்தும் நீயே என்று சொன்னவரே!!!

நிச்சயம் தன்னில் முடிந்தவரை மனிதனுக்கு அருள்கள் தந்து கொண்டே இருக்கின்றேன். 
இருக்கின்றேனே பிள்ளையோன் பட்டியில்!! (பிள்ளையார்பட்டி)

இருக்கின்றேனே பிள்ளையோன் பட்டியில்!!

வருக வருக என்று துயர் துன்பங்களை அழிப்பதற்காகவே வந்தோமே 

தூய இன்பத்தை கொடுத்து பின் 
துன்பத்தை அறிந்தும் பின் கொன்றோமே. 

அன்பின் எல்லையில் பின் மனிதன் உணராதவனே பின் 
அன்பின் எல்லை உணர்ந்த போதிலும் 
அதற்கு மேலாக ஈடு இல்லையே. 

அன்பின் எதனை கண்டோமே 
அன்பின் எதனை கண்டோமே 
அம்மை அப்பரை துதித்து துதித்து 
நாட்களாக போய்க் கொண்டிருக்க!!

 
கலியுகத்தில் மனிதனாலே மனிதன் மனிதன் துன்பத்தில் மிகுந்து.. மிகுந்து மிகுந்து வருவதாலே நிச்சயம் தன்னில் காப்பாற்றுவாய் 
காப்பாற்றுவாயே தந்தையே!!
காப்பாற்றுவாயே தாயே!! தாயே!!

உன்னை நம்பி வந்தவர்களுக்கு விடிவெள்ளி கொடுப்பாயே 

என்றென்றும் நிச்சயமாய் 
என்றென்றும் நிச்சயம் நிச்சயமாய் 
கலியுகத்தில் மனிதன் அழிவானே
அழிவானே தந்தையே!

தந்தையே உந்தனுக்கு அனைத்தும் புரியுமே 
தாயே உந்தனுக்கும் புரியுமே 
பாவத்தை ஏற்று ஏற்று பின் புண்ணியத்தை பின் தந்தருளி கொண்டு இருக்கின்றீர். 

இன்னும் இன்னும் எத்தனை ? எத்தனை? இன்னும் இன்னும் எத்தனை எத்தனை 
பாவங்கள் மனிதன் சுமந்து இருந்தாலும் 
பின் நிச்சயம் தன்னில் அவற்றை அகற்ற 
அவற்றை அகற்றி நிச்சயம் தன்னில் தாயே பின் மனிதனுக்கு புத்திகள் கொடுப்பாயே!!


புத்திகள் கொடுத்தும் வாழத் தெரியாமல் 
புத்திகள் கொடுத்தும் வாழத் தெரியாமல் 
மனிதன் வாழ்ந்தாலும் 
யான் பார்த்துக்கொள்கின்றேன்!! தாயே தந்தையே தாயே தந்தையே!!


பாசம் உன் மீது அதிகரிக்குமே 
பாசம் உன் மீது அதிகரிக்குமே
நிச்சயம் தன்னில் காப்பாற்றுவாயே! 
இறங்கி வந்து காப்பாற்றுவாயே!!
காப்பாற்றுவாயே இறங்கி வந்து தாயே தந்தையே அணைத்து கொள்ளும்.

அனைத்தும் உன் பிள்ளைகள் தானே இங்கு!!
அனைத்தும் உன் பிள்ளைகள் தானே இங்கு!!

ஒவ்வொரு குறைகளையும் நீக்கி தன்னை நிச்சயம் தன்னில் பாவத்தை போக்கி புண்ணியத்தை அருளிடும் என் தாயே தாயே தாயே தாயே. 

கங்கை தன்னில் பின் இருக்கின்றாளே 
கங்கை தன்னில் இருக்கின்றாளே
பாவம் தன்னில் போக்கிடும் அதை  என் தாயே பின்  ஏற்றுக் கொண்டு 
தாயே தன்னே ஏற்றுக்கொண்டு 
அனைவருக்கும் புண்ணியத்தை அருளிட செய்பவளே!!

என் தாயைப் போல எவரும் இல்லை 
என் தாயைப் போல எவரும் இல்லை 
எத்தனை பாவங்கள் செய்தாலும் அதை ஈர்த்துக் கொள்ளும் என் தாயே தாயே!!
உனை பணிந்தேனே உனை பணிந்தேனே 
உனை பணிந்தேனே 
உனை பணிந்தேனே 

அப்பொழுது கூட புத்திகள் இல்லையே 
கலியுகத்தில் புத்திகள் இல்லையே 
புத்திகள் இல்லையே மனிதனுக்கு!!!

எத்தனை பாவங்கள் செய்துட்டு வந்தாலும் 
கருணை மிக்க மன்னித்து அருளும் தாயே தந்தையே உங்களையே போற்றி! 
தாயே தந்தையே உனையே போற்றி. 

எத்தனை பின் துன்பங்கள் வந்தாலும் மனிதனுக்கு அதை இன்பத்தை மாற்றி விட முயற்சி செய்து கொண்டிருக்கும் தாயே தந்தையே... உங்களைப் போல் இவ்வுலகத்தில் எவரும் இல்லையே எவரும் இல்லையே!!

கலியுகத்தில் மனிதன் தன்னை பின் நிச்சயம் தன்னில் யானே கடவுள் என்று சொல்வானே.. இதுதான் தன்னை அழிவிற்கு காரணம். காரணம் காரணம் என்றோமே. 

காரணம் காரணம் மனிதன் தான் மனிதன் என்று சொன்னோமே 

நிச்சயம் தன்னில் எங்களுக்கு நிச்சயம் தன்னில் எங்களுக்கு 
ஏதும் தேவையில்லை. 

குடும்பத்தோடு அன்பைச் செலுத்தினால் மட்டும் போதுமே!!!

மனிதன் பேய்களோடு வாழ்வானே 
மனிதன் பேய்களோடு வாழ்வானே 
பணத்தாசை பிடித்து அழிவானே
அழிவானே அழிவானே
அழிவானே 

மூத்தோனுக்கு அதாவது எந்தனுக்கு பின் திருத்தலங்கள் கட்டி கட்டி பின் தம்பிக்கும் (முருகனுக்கு) பின் கட்டி கட்டி பின் தாயிற்கும் கட்டி கட்டி பின் நிச்சயம் தன்னில் தந்தைக்கும் கட்டி கட்டி பின் வீணாக போவானே வீணாக போவானே!!

ஏன்??

அன்பு என்ற மனம் இல்லையே!!
மனம் என்ற உள்ளம் இல்லையே 
இல்லையே இல்லையே 
மனம் என்று அன்பு அது உள்ளே இல்லையே 

எத்தனை பின் (திருத்தலம்) கட்டினாலும் 
அன்பு இல்லையென்றால் நிச்சயம் தன்னில் எப்படி?? யாங்கள்? நிச்சயம் தன்னில்!! நிச்சயம் தன்னில் ஆசீர்வதிப்போம்????

நிச்சயம் இல்லை இல்லை இல்லை !!

அறிந்தும் உள்ளம் நிச்சயம் தன்னில் அகத்தியன் அனைத்தும் சொன்னானே!!!

அதை எப்பொழுதும் மனிதன் காக்கின்றானோ!?
அப்பொழுது நிச்சயம் விடிவெள்ளியே!! விடிவெள்ளியே!!
விடிவெள்ளியே!!

தந்தையே தாயே சித்தர்கள் எண்ணி 
தந்தையே தாயே சித்தர்கள் எண்ணி 
அனைத்தும் காப்பாய் போற்றுவாய் நிச்சயம் தன்னில்  கூட பின் அழிப்பதற்கு.

அழிப்பதாக இருந்தாலும்  நிச்சயம் தன்னில் பின் பின் இன்னொரு சந்தர்ப்பத்தை கொடுப்பாயே!!!

கொடுத்து கொடுத்து பார்த்தாயே தந்தையே 
பின் மனிதன் திருந்துவதாக இல்லையே 

பின் தானே தானே காரணம் நோயும் தானே காரணம்.. துன்பத்திற்கு தானே காரணம் 
அனைத்திற்கும் காரணம் மனிதன் பின் விளங்குகின்றானே விளங்குகின்றானே 

பின் தன்னில் அனைத்தும் பின் அனைத்தும் எவை என்று அறிந்து அறிந்து 
தன்னைத்தானே கர்மத்தில் நுழைந்து பின் பின் இறைவன் என்று சொல்கின்றானே 
இறைவன் என்று சொல்கின்றானே. 

இன்னும் இன்னும் அழியுகத்தில் 
இன்னும் இன்னும் அழியுகத்தில் என்னென்ன? நடக்கப் போவதென்று சித்தர்கள் வந்து செப்புவார்களே!!!
என்னென்ன நடக்க போவது என்று சித்தர்கள் வந்து செப்புவார்களே!!

அழியும் காலம் வந்து கொண்டே இருக்க 
நோய்களின் காலம் வந்து கொண்டே இருக்க 
நிச்சயம் தன்னில்  அதில் யாரும் காப்பாற்ற முடியாதே!! காப்பாற்ற முடியாதே!!

தாயே தந்தையே வரும் வரும்!
தாயே தந்தையே காப்பாற்ற முடியும் நிச்சயம் தன்னில்..
நிச்சயம் தன்னில் அதனால் தானே 
உள்ளம் என்பது பெரும் கோயிலாக 
உள்ளம் என்பது பெரிய கோயிலாக 
அதில் தானே அன்பு முளைத்தாலே அனைத்துலகும் அன்பு முளைத்தாலே அனைத்துலகும் நல்லோர்  போற்ற வாழ்வீர்களே மனிதர்களே பின் சிந்தித்து வாழ்வீர்களே வாழ்வீர்களே. 

அனைத்தும் தாயும் தந்தையே.. அனைத்தும் தாயும் தந்தையே கொடுத்தார்களே!!

நிச்சயம் தன்னில் அவற்றை பின் ஒழுங்காக பின் பயன்படுத்தவில்லையே!!!
அவற்றை தன் ஒழுங்காக பயன்படுத்தவில்லையே! பயன்படுத்தவில்லையே! 

எப்படி? எப்படி ?மனிதன் வாழ்கின்றான்? 
எப்படி? எப்படி? மனிதன் வாழ்கின்றான்? 

பணத்தாசை கொண்டே வாழ்கின்றானே 
பணத்தாசை கொண்டு வாழ்கின்றானே 

அப்பொழுது தாயும் தந்தையுமே 
அப்பொழுது தாயும் தந்தையுமே 
கொடுத்து கொடுத்து நிச்சயம் தன்னில் சந்தோசத்தை பின் கொடுக்கின்றானே 

அதையும் தாண்டி நிச்சயம் தன்னில் 
கொடுத்து கொடுத்து எவை என்று கூட பாவத்தை சேர்த்துக் கொண்டு பின் மீண்டும் தாயின் மீதும் பின் தந்தையின் மீதும் பழி போடுகின்றானே!!

இதற்காகத்தான் நிச்சயம் தன்னில் இன்னும் கஷ்டங்கள் வருகின்றது. 
இன்னும் கஷ்டங்கள் வருகின்றது. 
எவராலும் மாற்ற முடியாதே!
எவராலும் மாற்ற முடியாதே!

எதை என்றும் எவை என்றும் நிச்சயம் தன்னில் முடியாதே 

மனசாட்சியோடு வாழ்ந்தால் போதும் 
மனசாட்சியோடு வாழ்ந்தாலே போதும் 
நிச்சயம் தன்னில் அவ்வாறாக பின் 
வாழப் போவதில்லை பின் மனிதனே!!
அவ்வாறாக மனிதன் பின் வாழப் போவதில்லை வாழப்போவதில்லை. 

எப்படி? எப்படி? எதை என்று !
எப்படி எப்படி எதை என்று... மனசாட்சியோடு வாழ்பவர்களுக்கு மட்டுமே அனைத்தும் அனைத்தும் கொடுப்போமே. 
மனசாட்சியோடு வாழ்பவர்களுக்கு அனைத்தும் அனைத்தும் கொடுப்போமே. 

ஏன்? எதற்கு? அனைத்தும் அனைத்தும் கொடுத்திட்டாலும் மனிதன் தன்னில் ஒழுங்காக அதை பயன்படுத்தவில்லையே பயன்படுத்தவில்லையே 

தானும் கெட்டிட்டு அனைவரையும் கெடுக்கின்றான் 
தானும் கெட்டிட்டு அனைவரையும் கெடுக்கின்றான் 
நிச்சயம் தன்னில் பின் அறிந்தும் கூட 

இன்னும் இன்னும் என் பக்தர்களே வருவார்கள்.
இன்னும் இன்னும் என் பக்தர்கள் வருவார்கள். 

யானும் கூட அறிந்து அறிந்து.. என் பக்தர்களை உருவாக்கி உருவாக்கி... அனைத்து தெம்புகளும் கொடுத்து கொடுத்து அனைத்து சக்திகளும் கொடுத்து கொடுத்து... இவ்வுலகத்தை நிச்சயம் தன்னில் மாற்றுவோம்.

மனிதன் எதை என்று என்னென்ன மனிதன் என்று என்னென்ன 
நிச்சயம் தன்னில் பயன்படாத மனிதனை 
இவ்வுலகத்தில் வாழ்ந்தும் பிரயோஜனம் இல்லையே
எதற்கும் பயன்படாத மனிதனே இவ்வுலகத்தில் வாழ்ந்தும் பயன் இல்லையே 

நிச்சயம் தன்னில் தாயும் தந்தையும் 
ஏதோ ஒரு நலனுக்காகவே பிறப்பு பிறப்பு எடுக்க வைத்திருக்கின்றான்.
நிச்சயம் தன்னில் அதனையும் கூட 
நிச்சயம் தன்னில் அதனையும் கூட 
அறிவதில்லையே தெரிவதில்லையே
என்னவென்று பின் மீண்டும் போவானே
போவானே போவானே பின் கட்டையில் போவானே...

நிச்சயம் தன்னில் அனைத்தும் கொடுக்க 
நிச்சயம் தன்னில் அனைத்தும் கொடுக்க 
யாங்கள் தானே தயாராக இருக்கின்றோமே என்று பல உரைகளில் உரைத்திட்டோமே 
பல உரைகளை உரைத்திட்டோமே 

ஆனால் மனிதன் என்னென்ன? 
தன் வினையாலே தன்னைத்தானே 
தன்வினையாலே தன்னைத் தானே 
நிச்சயம் தன்னில் மனிதன் என்பது மனம் என்பது பேயாக 
மனம் என்பது பேயாக கலியுகத்தில் பேயாக பேயாக பேயாக நிச்சயம் தன்னில் அறிவுகள் இல்லை 
நிச்சயம் தன்னில் அறிவுகள் இல்லை. 

அறிவுகள் என் தந்தை கொடுத்தாலும் அதை  பயன்படுத்த இங்கு ஆள் இல்லை 

அறிவுகள் தாயும் தந்தையும் கொடுத்தாலும் 
அதை பயன்படுத்த இங்கு ஆள் இல்லை 

எப்படி எப்படி நிச்சயம் தன்னில்  தாயும் தந்தையும்.. அனைவரைம் தான் குழந்தைகளாக நினைக்கின்றார்களே மனிதர்களை குழந்தைகளாக நினைக்கின்றார்களே 

நிச்சயம் தன்னில் அனைத்தும் கொடுத்து 
அனைத்தும் கொடுத்து கொடுக்கின்றானே 

ஆனால் புத்தி கெட்ட மனிதனோ!?
என்னவென்று பின் பாவத்தை பாவத்தை சுமந்து கொண்டிருக்கின்றான். 

மீண்டும் மீண்டும் தந்தையே தாயே 
வாய்ப்பு அளிக்கின்றீர்கள் நீங்களே 

கருணைமிக்க என் தந்தை போல் தாயைப் போல்... யாரை கூறுவீர்கள்??? யாரை கூறுவீர்கள்???

நிச்சயம் தன்னில் பாவத்தை பாவத்தை நிச்சயம் தன்னில் பாவத்தை பாவத்தை 
கங்கையில் பின் காவேரி தன்னில் எங்கெங்கோ பின் நதியிலும் கூட 
அனைத்தும் பின் என் தாயே அனைத்தும் தாங்கி கொண்டு மீண்டும் மீண்டும் பின் அறிந்தும் கூட ஏற்றுக்கொள்கின்றாள்.

அப்பொழுது  கூட புத்திகள் வரவில்லை 
அப்பொழுது கூட புத்திகள் வரவில்லை 
இன்னும் இன்னும் அதற்காகத்தான் அழியுகத்தில் மனிதன் அழிந்து கொண்டு இருக்கின்றான். 

எத்தனை பிறவிகள்? எத்தனை பிறவிகள்? 
என் தாயையும் தந்தையையும் காண ஓடோடி வந்தீர்களே! ஓடோடி வந்தீர்களே! 

என்ன பிரயோஜனம் என்று சொல்லுங்களே!
என்ன பிரயோஜனம் என்று சொல்லுங்களே! சொல்லுங்களே!!

மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது மனிதனால் வரும் காலத்தில் ஒன்றும் செய்ய முடியாது 

யாங்கள் ஆட்டம் தொடங்குவோமே 
யாங்கள ஆட்டம் தொடங்குவோமே 

மனிதனை விட்டு விட்டால் மனிதனை விட்டு விட்டால் யான் நான் கடவுள் என்று சொல்வானே கலியுகத்தில் பின் யான் தான் கடவுள் என்று சொல்வானே 
எந்தனுக்கு அபிஷேகங்கள் செய்யுங்கள் எந்தனுக்கு அபிஷேகங்கள் செய்யுங்கள் என்று சொல்வானே 

இதுதான் பின் கலியுகம் பின் முற்றும் முற்றும் என்று முற்றிற்றே!!
இதுதான் முற்றும் கலியுகம் பின் முற்றிற்று!! முற்றிற்று!! பின் முற்றிற்றே!!!

நிச்சயம் தன்னில் பின் மனிதனுக்கு அபிஷேகங்கள் மனிதன் செய்வானே 
செய்வானே செய்வானே இதுதான் பின் கலியுகத்தில் முற்றி முற்றி முற்றிற்றே!

இதனால் இன்னும் வருங்காலங்கள் 
இதனால் இன்னும் வரும் காலங்கள் 
அநியாயங்கள் அக்கிரமங்கள் நடக்குமே 

இதை யாராலும் பின் தடுக்க முடியாதே!!

நிச்சயம் தன்னில் கருணை மிகுந்து 
தாயும் தந்தையும் வந்து வந்து நிச்சயம் ஒரு சந்தர்ப்பத்தை பின் தந்து தந்து பின் நீக்குவார்களே 

அதையும் பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லை 
அதையும் பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை 

நிச்சயம் தன்னில் நிச்சயம் தன்னில் 
இதனால் பின் அய்யோ பாவம்... அப்பொழுது கூட பின் தாயே சொல்வாளே சொல்வாளே!!!
நிச்சயம் தன்னில் மனிதா உந்தனுக்கு 
தன் குழந்தை போன்று அனைத்தும் கொடுத்தார்களே 

அதை வீணாக பயன்படுத்திக் கொண்டாயே அதை வீணாக பயன்படுத்திக் கொண்டாயே!!

எண்ணற்ற எண்ணற்ற பிறவிகள்! 
எண்ணற்ற எண்ணற்ற பிறவிகள்!!

உணரவில்லையே மனிதன்!!.. என் தாயை தந்தையை உணரவில்லையே என் தாயை தந்தையையும் உணரவில்லையே!!

இன்னும் இன்னும் என் தாயையும் தந்தையையும் யாரும் இவ்வுலகத்தில் உணரவில்லையே உணரவில்லையே!!!

ஆசிகள்!! ஆசிகள்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....;தொடரும்!

1 comment: