​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 8 August 2025

சித்தன் அருள் - 1916 - அன்புடன் அகத்தியர் - மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 6


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 6

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1.சித்தன் அருள் - 1903 - பகுதி 1 
2.சித்தன் அருள் - 1905 - பகுதி 2
3.சித்தன் அருள் - 1911  - பகுதி 3
4.சித்தன் அருள் - 1914 - பகுதி 4
5.சித்தன் அருள் - 1915 - பகுதி 5)

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ, கூட்டுப் பிரார்த்தனை என்பது ரொம்ப ரொம்ப அவசியம் என்கின்றார் அகத்தியர். அப்போ single ஆக வழிபடுவதைவிட கூட்டுப் பிரார்த்தனை மிக மிக பெரியது. 

குருநாதர் :- இதனால்தான் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு விசை உண்டு. அவ்விசைகள் எங்கு செல்கின்றது ? முதலில் பாவத்தை நசுக்குகின்ற பாபநாசத்தில் நிச்சயம் இவ்வாறாக அனைவரும் கூட்டுப் பிரார்த்தனைகள் செய்தால் தண்டனைகள் அனைவருக்குமே குறைக்கப்படும். 

(தண்டனைகள் = கிரகங்களின் கதிர்வீச்சுக்கள் பூமியை தாக்குதல் , இதனால் கும்பல் கும்பலாக மக்கள் இறப்பது) 

(நம் குருநாதர் அருளால் கடந்த மாதம் 27.7.2025 அன்று நம் குருநாதர் அன்பு அடியவர்கள் மகத்தான கூட்டுப் பிரார்த்தனையை நிகழ்த்தியதை இங்கு அடியவர்கள் அறியத் தருகின்றோம். நம் குருநாதர் அருளால் பல புண்ணியங்கள் அவ்அடியவர்களுக்கு.) 

அடியவர்கள் :- திருநெல்வேலி பாபநாசம். 

குருநாதர் :- அடுத்து நிச்சயம் தன்னில் அண்ணாமலையில் சக்திகள். 

————————————
( நம் குருநாதர் அருளால் திருவண்ணாமலையில் மாபெரும் சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை நடக்க உள்ளது. 
நாள் - 31. 08.2025 ஞாயிற்றுக்கிழமை
காலை 8 மணி - மாலை 6 மணி வரை 
இடம் - ராஜா ராணி மஹால் , அவலூர் பேட்டை பை பாஸ் ஜங்ஷன் அருகில் , திருவண்ணாமலை. ராகு கிரகத்தால் உண்டாக உள்ள பேரழிவைத் தடுக்க,  அடியவர்கள் அவசியம் உலகைக் காக்க  இவ்கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ளுங்கள். ) 
—————————

குருநாதர் :- இன்னும் எதனையும் பொருத்து நிச்சயம் இவ்வாறெல்லாம். அதாவது பின் கடல் அலைகள் பலமாக நிச்சயம் ராகுவானவன் புவியை நெருங்குகின்ற பொழுது, நிச்சயம் அதாவது எப்படி நெருங்குகின்றானோ,  அதே வேகத்தில் நிச்சயம் (கடல்) நீரும்  அதாவது ஊருக்குள் நுழைந்துவிடும். இதைத்தடுக்க நிச்சயம் தன்னில் கூட நீர் நிலை , எதை என்று கூற சில புண்ணிய நதிகளுக்குச் சென்று அங்கு நிச்சயம் தன்னில் கூட  (சிவபுராணம்) இதைப் பாடிக் கொண்டே இருங்கள். 

அப்பனே நிச்சயம் அறிந்துள்ளீர்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் அதாவது உங்களுக்காக யான் போராடுகின்றேன். மற்றவர்களுக்காக நீங்கள் போராடுங்கள். அவ்வளவுதான் வாழ்க்கை.  

அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் என் பக்தர்கள் எதையும் , அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் சக்தி அப்பனே இருக்க வேண்டும். அதனையும் கூட யான் கொடுத்திட்டேன். கொடுத்தும் விடுவேன் வருங்காலத்தில் இன்னும். 

இதனால்தான் சொன்னேன். யான் பாசத்திற்காகவே அடிமைப்பட்டவன். 
அதனால் எங்கள் பிள்ளைகளே நீங்கள் அனைவரும். 

நிச்சயம் என் பிள்ளைகளை யான் பள்ளத்தில் வைத்துப் பார்ப்பேனா என்ன? நிச்சயம் நீங்களே சொல்லுங்கள்?  

அடியவர் :- இறைவா!!!!!!!

குருநாதர் :- அப்பனே நிச்சயம் அனைத்திற்கும் காரணங்கள் எவை என்று புரியாமல் இருந்தாலும் , இன்னும் விளக்கத்துடனே யான் நிச்சயம் சொல்வேன். இதனால் அப்பனே இங்கு நிலை உள்ளோர், நிலை இல்லோர் எதை என்றும் புரிய ( யார் யார் )? 

அடியவர் :- (…………….)

குருநாதர் :- அப்பப்பா!!! நிச்சயம் யாருமே இல்லையப்பா.  அப்பா, இறைவனே இல்லை. 

அடியவர்கள் :- ( ஆச்சரியம் !!!! )

குருநாதர் :- ஏன் எதற்கு அப்பனே நிச்சயம் யாரும் தன்னில் கூட யாரும் இவ்வுலகத்தில் இல்லையென்றால் இறைவனுக்கு என்ன வேலையப்பா? இறைவனும் மயக்கத்தில்தான் இருப்பான் அப்பனே. 

அப்பனே நிச்சயம் இவ்வாறுத்தான் ஆகப்போகின்றது என்பேன் அப்பனே. அப்பனே இவ்வாறாகவே ராகுவானவன் வந்து வந்து சென்றடைந்து அதாவது புவியை நோக்கி சென்று கொண்டிருந்தால் அப்பனே, புத்திகள் மட்டுப்படும். (ராகு கிரகம் புவியை நெருங்க நெருங்க புத்திகள் மந்தமடையும்.) 

அப்பனே இதனாலும் அழிவுகளப்பா இல்லத்துக்குள்ளே. (இல்லத்தில் பல சண்டைகள் வரும்) இதனால் அப்பனே யார் யாருக்கு இறைவன் எல்லை இல்லாதவன் என்பேன் அப்பனே. உங்களை காக்கத்தான் அப்பனே இதனால் அப்பனே அனைவரையுமே யாங்கள் சித்தர்கள்,  மனிதர்களை காக்க வேண்டும் என்பேன் அப்பனே. 

அம்மையே, அப்பனே, மனிதன் சொல்லிக்கொண்டே இருப்பான். நிச்சயம் அவை அழிவுகள் வருகின்றது. இவை இப்படி நடக்கின்றது.  அப்படி நடக்கின்றது என்று. ஆனால் காப்பாற்றச் சொல்லவில்லையே!!!! 

இதனால் நிச்சயம் என் பக்தர்கள் மற்றவர்களுக்காக நிச்சயம் பின் நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக இறைவன் இருக்கின்றான். 

சுவடி ஓதும் மைந்தன் :- மற்றவர்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். உலகம் நன்றாக இருக்க வேண்டும். 

குருநாதர் :- நிச்சயம் அனுதினமும் பக்கத்தில் உள்ள நீரோடையில் , அழிவு வரக்கூடாது என்று நிச்சயம் பின் நீர்,  பின் தேவியே என்றெல்லாம். 

சுவடி ஓதும் மைந்தன் :- Daily உங்கள் பக்கத்தில் உள்ள நீர் நிலைகளில், நீரால் அழிவு வரக்கூடாது ( என்று ஒன்று கூடி வேண்டிக் கொள்ளுங்கள்.) 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட நிலத்தினாலும்…

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ பூகங்கள் எல்லாம் வரும். நிலத்தினாலும் அழிவுகள் வரக்கூடாது என்று (நிலத்தில்) வணங்குங்கள். 

குருநாதர் :- நிச்சயம் சூரியனையும் , சந்திரனையும் வணங்குங்கள். ( வெப்பம் அதிகமாகும்) வானத்தை நோக்கியும் ( வணங்குங்கள் - மழை அதிகமாக வரும் அதனால். ) 
இதனால் உங்களையே நீங்களே பக்குவப்படுத்திக்கொண்டு , பின் அனைவரும் நிச்சயம் நம் சொந்தக்காரர்களே என்று மற்றவர்களுக்காகப் போராடினால்,  உங்களுக்காகப் போராட யாங்கள் தயார். 

நிச்சயம் எங்களைத் தேடி ஓடோடி வரத்தேவையில்லை. 

அடியவர்கள் :- (நம்) கூடவே இருக்கின்றார்கள். 

குருநாதர் :- உங்கள் ஆசைகளையும் கூட. இதனால் நிச்சயம் கலியுகத்தில் சாதாரணமாக நோய்கள்தான் அதிகம். இதனால்தான் அப்பனே நற்பண்புகள்   அதாவது ஒரு குழந்தைக்கு நிச்சயம் தந்தையானவனும், தாயானவளும் நற்பன்புகளோடு நிச்சயம் இவ்வாறு சொல்லிச் சொல்லி வளர்த்திட்டாலே , அவன் மிகப் பெரிய ஆளாகப் போய்விடுவானப்பா. அதனால்தான் என் பக்தர்களை  இவ்வாறாக இவ்வாறாக நடந்து கொண்டாலே , நிச்சயம் மற்றவர்களுக்காக எப்பொழுது நீங்கள் நினைத்து நிச்சயம் தீபம் (ஏற்றி) பின் இறைவனிடத்தில் வேண்டிக் கொள்கின்றீர்களோ , பின் நிச்சயம் அப்புண்ணியம் உங்களைச் சாரும் அப்பா. அப்புண்ணியத்தின் மூலம் நீங்கள் வெற்றி கொள்ளலாம் அப்பனே. இதனால் அப்பனே புண்ணியப் பாதையில் செல்லுங்கள் என்று காண்பித்துவிட்டேன். அவ்புண்ணியப் பாதையில் சென்றால் நன்று. யான் பாவப்பாதையில் செல்வேன் என்றால் அப்பனே, நிச்சயம் அப்பனே அடிபட்டுத்தான் எழ வேண்டும். 

________
(நவகிரக தீப வழிபாடு மற்றவர்களுக்காகச் செய்ய மிக்க புண்ணியங்கள். தனக்கென்று செய்ய, பாவங்கள்/கஷ்டங்கள் உண்டாகி அடிபட்டு மீண்டும் எழவேண்டும்)
_______

குருநாதர் :- அப்பனே இன்னும் சொல்கின்றேன் அப்பனே. இதனால் அப்பனே ஒரு நாள் பிறந்தால் , ஒரு நாள் நிச்சயம் இயற்கைத் தாய் அழைத்துக்கொள்ளும் அப்பா. அப்பனே நினைத்துக் கொள்ளுங்கள். நடுப்பகுதியில் நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்று!!!!

அப்பனே நல்லதைச் செய்தாலும் அதற்குறிய பலன். தீயவை செய்தாலும் அதற்குறிய பலன். பலனையும் நிச்சயம் யானே தருவேன். நிச்சயம் தண்டனைகளும் குறைப்பேன். அப்பனே நிச்சயம் நீங்களும் கேட்கலாம். இவ்வாறு பிறந்து, வளர்ந்து அதாவது மனிதப் பிறப்பே தேவையில்லையே என்று? 

அடியவர்கள் :- உயர்ந்த ஒரு வேலையை கொடுத்திருக்கின்றார்களே!!!

குருநாதர் :- அப்பனே ஏன் எதற்கு , உலகம் எப்படி இயங்கப் போகின்றது? மனிதர்கள் ஏன் எதற்குப் பிறந்துள்ளார்கள் என்பதையெல்லாம் யான் தெளிவுடனே அப்பனே உரைத்திடுவேன். முதலில் அப்பனே,  சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பு அப்பனே இவற்றிலெல்லாம் தேர்ச்சி பெற்று வந்தால்தானப்பா இவற்றையெல்லாம் சொல்ல முடியும். நிச்சயம் உங்களுக்குத் தெரிவிப்பேன். தெரிவித்துக் கொண்டே இருப்பேன். 

“””””””அப்பனே நலமாகவே அதனால் அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா.””””””

“”””””நிச்சயம் அதிவிரைவிலேயே உங்கள் பிரச்சினையும்  தீரும் அப்பா. “”””””””

ஆனாலும் அப்பனே உங்களுக்கு வேலை கொடுத்திருக்கின்றேன் அப்பனே. 

நிச்சயம் இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை. ஆனால் இங்கு (பூலோகத்திற்கு) வந்த வேலை சரியாகவே முடிப்பதில்லை மனிதன். 
ஆனாலும் நீங்களும் கூட அவ்வாறுத்தான்  சரியாகவே முடிக்கவில்லை. 

“”””””இதனால் அப்பனே என் பக்தர்கள் யார் சொன்னாலும் அமைதியாக இருக்க வேண்டும்.”””””

“”””நிச்சயம் சித்தர்களுக்கு அமைதி மட்டுமே பிரதானமானது.”””””

“”””அமைதியாக பின் அனைத்தும் சாதிக்கலாம்.”””””””

நிச்சயம் இதில் கூட அதாவது ஒளிவு மறைவுகள்  பல பல. 

“”””நிச்சயம் வழிநடத்துகின்றேன் உங்கள் அனைவரையும் கூட. “”””

தந்தையிடம் ஏதாவது கேட்டால்தான் தருவான் என்று. ஆனாலும் நிச்சயம் பின் பிள்ளைகள் நீங்கள். 

“””””தந்தை (அகத்திய மாமுனிவர் ) உங்கள் மீது பாசம் வைத்திருப்பது எல்லையற்றது.”””””

“””””இதனால் அப்பனே அனைவருக்குமே அவரவர் விரும்பியதை யான் கொடுப்பேன்.”””””

நிச்சயம் பின் தேவையானதாக இருக்க வேண்டும். தேவை இல்லாதது எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் நிச்சயம் யான் கொடுப்பதில்லை. இவ்தந்தைக்குத் தெரியும் தேவையானதெல்லாம் கொடுத்து விட்டால், மீண்டும் நீங்கள் படுகுழியில் விழுந்து விடுவீர்கள் , பாவத்தில் என்று.

“””நன்மைகளே, நிச்சயம் தன்னில் கூட மிகப்பெரிய சக்தி - இறைவன் சக்தி. அதைத் தன் நிச்சயம் இயக்குகின்றது. இதனால் அஅங்கிருந்துதான் மின்சாரம் வந்து கொண்டே இருக்கின்றது. இறைவன்தான் மிகப்பெரிய சக்தி.”””

இதனால்தான் நால்வரும் சேர்ந்து இன்னும் இறைவனிடத்திலிருந்து சக்திகள் அதிகமாக வேண்டும் என்று , நிச்சயம் பல பல அதாவது எவர் தேவாரத்தையும், வாசகத்தையும் எடுத்து எதை என்று கூற இவ்வாறாக இதையெல்லாம் பின் படித்தாலே போதுமானது. இறைவனிடத்திலிருந்து இன்னும் சக்திகள் அதிகமாகக் கிடைத்து உடல் ஆரோக்கியங்கள் பெறும்.

இவ்ஆலயத்தின் முகவரி :- 

Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

வணக்கம் அடியவர்களே, 

திருவண்ணாமலை சிவபுராண கூட்டுப் பிரார்த்தனைக்கு வருக! வருக!!
நாள் : 31.08.2025 & ஞாயிற்று கிழமை 
நேரம்: காலை 8 மணி முதல் மாலை ஆறு மணி வரை 
இடம் -  ராஜா ராணி திருமண மஹால், அவலூர்பேட்டை பை பாஸ் அருகில் ,  திருவண்ணாமலை

நோக்கம்:- உலக நன்மைக்காக அகத்திய மாமுனிவர்  அடியார்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நவகிரக வழிபாடு மற்றும் கோளறு பதிகம் சிவபுராணம் பாடுதல். 

அனைத்து அடியார் பெருமக்களையும் அன்புடன் வரவேற்கிறோம்...

இணைப்பில் உள்ள Google form link/ QR code ஐ பயன்படுத்தி அன்பர்கள் தங்கள் வருகையை உறுதி செய்யவும்...

நன்றி!! நன்றி!!

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScqXjyfDpp-WqKwwLzsZytofS49rxHEFlTov1E--bO_zB2JFg/viewform

தொடர்புக்கு :- 
மதுரை  +91 9842170513 
தூத்துக்குடி  +91 9965044034 
கோவை +91 94425 04060 & +91 94447 43180 
தென்காசி - +91 99445 18074 
ஈரோடு- +91 95668 25599 
கடலூர் - +91 94872 68761
சேலம் - +91 7358-933225
தஞ்சாவூர் +91 97904 27107
சென்னை +91 7904612352

(நம் குருநாதர், அகத்திய மாமுனிவர் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…... )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. இவை அனைத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  3. ANANDHA VALLI SAMEDHA AGATHEESWARA KOIL ,CHENNAI,REDHILLS ARUGIL PANJETTI ENDRA EDATHIL ULLATHU.AT THIS PLACE AGATHIAR HAS DONE SOME YAGNAS ,ANGU NAAM KETKALAMA KOOTU PRARTHANAIKKU.
    AGATHIAR ASIGAL

    ReplyDelete