​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 21 July 2025

சித்தன் அருள் - 1908 - பாபநாச கூட்டு பிரார்த்தனை - சிறு விளக்கம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் திருவருளால், லோக ஷேமத்திற்காக 27/07/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலி > அம்பாசமுத்திரம் அருகில் இருக்கும் பாபநாசத்தில், அகத்தியர் அடியவர்கள் ஒன்று கூடி கூட்டு பிரார்த்தனை நடத்துகிறார்கள். அதன் விவரம், கீழே தரப்பட்டுள்ளது.

நித்ய பூஜையில், தியானத்தில் அகத்தியப்பெருமானிடம், "என்ன! பாபநாசத்தில் கூட்டு பிரார்த்தனையாமே?" என்று வினவிய பொழுது, அவர் காட்டிய காட்சி மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. விளக்கு ஏற்றி இருக்க, அதன் அருகில் பத்மாசனத்தில் அமர்ந்து, ஒரு குரு தன் மாணாக்கர்களை எப்படி கவனிப்பாரோ, அந்த நிலை காட்சி கிடைத்தது. அவர் ஏற்பாட்டில் நடப்பதால், அன்றைய தினம் யாம் அங்கிருப்போம் என்பதையும் உணர்த்தினார். அங்கு அன்று என்ன நடக்கும் என்று கேட்ட பொழுது, உடன் பதில் கூறாவிடினும், பலப்பல வருடங்களுக்கு முன் திரு ஹனுமந்ததாசன் அவர்கள் கஞ்ச மலையில் அகத்தியப்பெருமானின் ஜீவநாடி வாசித்து, இது வரை வெளி வராத வாக்கு ஒன்றிலிருந்து ஒரு சிறிய தகவல், தானாகவே அடியேனிடம் வந்து சேர்ந்தது. அந்த நாடி வாசிப்பை கீழே தருகிறேன்.

"அகத்தியன் பொய்ச் சொல்லமாட்டேன், நடந்ததை உண்மையாக சொல்லுகிறேன், அகத்தியனுக்கு ஞாபகமறதி மிக அதிகம்  என்று எல்லோரும் சொல்லுவார்கள், அதை நினைவுகொண்டு சொல்லுகிறேன், முன் இதுபோல் காலங்கிநாதன் ஒருபொழுதும் மனிதர்களை வரவழைத்து, தன் இருப்பிடத்திற்கு வரவைத்து, எதோ சொல்லப்போகிறாரே, அது என்னவென்று, எனக்கு இன்னும் தெரியவில்லை. அவர் வரவழைத்தது மிகப்பெரிய காரியமடா.  அவர் சொல்லி நீங்கள் எல்லோரும், எத்தனையோ இடையூறுகள் இருந்தபோதும், எத்தனையோ பிரச்சனைகள் இருந்தபோதும், எத்தனையோ போராட்டங்களை தினம்தினம் சந்தித்து கொண்டிருக்கிற வேளையிலும் கூட, அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, காலாங்கிநாதன் சொன்னான், அகத்தியன் சொன்னான் என்று அத்தனையும் தூக்கி எறிந்துவிட்டு ஓடி வந்திருக்கிறீர்களே, உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்? என்றுதான் கேட்பேன் . மனிதனல்ல நான் நன்றிக்கடன் செய்வதற்கு. சித்தனாகி இருந்தால் கூட, ஓ! எனக்கும் சில கடமைகள் உண்டு. அதை கடமைகள் எல்லாம் நினைத்து பார்க்கும்பொழுது எல்லாம், என் பேச்சுக்காகவும், காலாங்கிநாதன் சொல்லுக்காகவும் கேட்டு, நீங்கள் எல்லாருமே எல்லா வேலைகளையும் விட்டு, எல்லா பிரச்சனைகளையும் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, ஓடிஓடி இங்கு வந்திருக்கிறீர்களே ! உங்களை நான் எப்படி பாராட்டுவேன் !

எவ்வளவு பெரிய பாக்கியம் நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று நான் சொல்லமாட்டேன் , நான் நிறைய பாக்கியம் செய்திருக்கிறேன் என்று சொன்னால் , அதை தற்புகழ்ச்சியாக எண்ணக்கூடாது. அகத்தியனுக்கு எதற்கு தற்புகழ்ச்சி என்று கேட்காதே? எல்லாவற்றையும் துறந்தவன் என்றாலும் கூட, அகத்தியன் சொன்னதற்கு ஒருகட்டளைக்கு தலைவணங்கி ஓடோடி வந்திருக்கின்ற நீங்கள் எல்லாம், மிகவும் புனிதமானவர்கள்! உங்களுக்கு ஏதேனும் கைமாறு செய்யவேண்டும்

காலாங்கிநாதரே வியக்கும் அளவுக்கு கோடி கோடியாய் இவர்களால் சம்பாதிக்க முடியும்! குபேரனே மலைத்துப்போய் நிற்கும் அளவுக்கு இவர்களால் பொருளை ஈட்டக்கூடிய வன்மை இந்த மாந்தர்களுக்கு உண்டு! ஆனால் அதைவிட மிகப்பெரியபுண்ணியம் இப்பணம் சம்பாதிப்பதல்ல, புண்ணியத்தை சம்பாதிப்பது! அந்த புண்ணியத்தை காலாங்கிநாதரும் தான்செய்த 3747 ஆண்டுகளாக தவம் செய்தேன் என்று சொன்னேனே, அந்த தவத்தின் புண்ணியத்தில் 1 / 8 இல் பகுதியை , இங்குள்ள அத்தனை பேருக்கும் பிரித்து கொடுக்கிறானாம்!  அதையும் நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள்! அகத்தியன் கொடுத்த புண்ணியம் என்பது வேறு, நேபாள நாட்டிலே எனக்கு கிடைத்த புண்ணியம் அளிப்பது வேறு, சிலருக்கு ஏற்கவே புண்ணியத்தை வாரி வழங்கியிருக்கிறேன், அதை கணக்கு போட்டு கொடுத்திருக்கிறேன் .

இவனோ கணக்கில்லாமல் ஓர் ஆழாக்கு என்கிறான். ஆழாக்கு என்றால் எட்டில் ஒரு பங்கு , ஒரு படி . ஆழாக்கு புண்ணியம் என்று விளையாட்டாக சொல்லுவார்கள் அந்த காலத்திலே. ஆழாக்கு என்றால் ஆழமான நாக்கு உள்நாக்கில் இருந்து ஆத்மார்த்தமாக சொல்லக்கூடிய புண்ணியம். காலாங்கிநாதர் தான்பெற்ற 3747 ஆண்டுகளாக கடும் தவம் செய்து பெற்ற புண்ணியத்தை , இங்கு அமர்ந்து கேட்கின்ற அத்தனை பேர்களுக்கும் , தனமாக வழங்குகின்றான், தாரைவார்த்து கொடுக்கிறான்! சற்று நேரத்தில் கூட வானத்திலே மேகம்கூடியது. மேகம் கூடியது கூட அங்கங்கே ஒருதுளி விழுந்தது, அந்த துளியே தாரையாக எண்ணிக்கொண்டு நீங்கள் பெற்றிட வேண்டும். இன்னும் சில சமயத்தில் துளி விழலாம், அந்த துளியில் காலாங்கிநாதரின் புண்ணியம் உங்களுக்கு வந்து சேரலாம்! ஆகவே இதுவும் நல்ல நாள் !

அவன் அழைத்தும் கேட்டதில்லை, அவன் அழைத்தும் தன் புண்ணியத்தி உங்களுக்கு குடுக்கிறானென்றால், நீங்கள் மிகப்பெரிய புண்ணியசாலிகள்தான். ஏனென்றால் இது கிடைக்காததுதான். நாளைக்கே உங்கள பணம் சம்பாதிக்க முடியும் , புகழ் சம்பாதிக்க முடியும், ஆபரணங்கள் சம்பாதிக்க முடியும், வீடுகள்  சம்பாதிக்க முடியும் , மனிதர்களை சம்பாதிக்க முடியும், புதையல்களை சம்பாதிக்க முடியும், ஆனால் உங்களால் காலாங்கிநாதர் பெற்ற புண்ணியத்தை சம்பாதிக்க முடியாது. அந்த புண்ணியத்தை இன்றைக்கு அவர் தந்திருக்கிறார்! ஆகவே நீங்கள் அத்தனை பேருமே மிகச்சிறந்த பாக்கியசாலிகள் என்பதால் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! ஏ மைந்தர்கள், என் குழந்தைகள், என் பேரப்பிள்ளைகள், எல்லாரும் நன்றாக இருக்கவேண்டுமென்று அகத்தியன் ஆசைப்படுவதுகூட, ஒரு சமயம் தன் நிலையை விட்டு, என் சித்த நிலையயை விட்டுக்கூட இறங்கி வந்திருக்கின்றேனோ என்று நான் நினைப்பது உண்டு. ஆனால் அது அல்ல, பக்திக்கு முன் எல்லாமே பித்து பித்தர்கள் தான், சித்தர்கள் தானடா. அந்த பக்தியின் அடிப்படையில் தான் அகத்தியன் நான் சொல்லுகிறேன், இங்கு உள்ள அனைவருக்கும் நல்லதொரு பொற்காலம்  ஆரம்பித்திருக்கிறது !

இவர்கள் 102 (அன்று) கோடி மக்கள் இல்லை, மிக மிக புண்ணியம் பெற்றவர்கள் இங்கு இருக்கிறார்கள். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் இருக்கிறது என்று அகத்தியன் சொல்லுவதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் அகத்தியன் சொல்லி வரவேண்டியது கட்டாயம் இல்லை, எத்தனையோ பிரச்னைகள் இருக்கிறது, எத்தனையோ பேர் இன்றைக்கு கூட தொடர்ந்து நிழலாக வந்து கொண்டிருக்கிறது. ஒரு சமயம் இங்கு வரும் பலருக்கு கூட, காலாங்கிநாதர் இங்கு வரச்சொன்னாய் போகிறோம் என்று சொன்னால் கூட, எண்ணமெல்லாம் வீட்டிலும், குழந்தைகள் மேலும், அவர்கள் மேல் பாசத்தோடு அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் . பாசம் அவர்கள் கண்ணை மறைப்பதெல்லாம் எனக்கு தெரியும். ஆக எதோ வந்துவிட்டோம் எப்பொழுது திரும்ப போகிறோம் என்ற எண்ணம் கூட சிலருக்கு இருக்கலாம். ஆனால் அவர்கள் தாண்டி அவர்கள் செய்த தவறுகளையும், இன்னும் ஆன்மீக நெறியில் இன்னும் ஈடுபடாமல் இன்னும் அலைபாய்கிறார்களே அவசியம் வருத்தப்பட்டாலும் கூட, என்னருமை நண்பன் காலாங்கிநாதனே வரச்சொல்லி, அதையும் மரியாதை கொடுத்து வந்தீர்கள் அல்லவா? சித்தனுக்கு மரியாதையை கொடுக்கின்ற காலம் எதுவோ? இனி சித்தர்களே இந்த காலத்தை உலகத்தை ஆட்சி செய்யப்போகிறார்கள்! காலாங்கிநாதர் தான் அதற்கு தலைமை ஏற்பார்! நான் பின்னிருந்து செயல்படுவேன்! இனி தெய்வத்தை நோக்கி கூட நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டாம், சித்தர்களை நெருங்கினால் தெய்வத்திடம் நேரடியாக போய் சேர்ந்துவிடும்! இனி எதிர்காலம் முழுவதும் சித்தர்களின் ஆட்சி என்பதற்கு இன்றைக்கு தான் முதல்முதலாக ஒப்பந்தம் கையெழுத்து ஆகின்றது ! [விரிவான கஞ்சமலை வாக்கு பின்னர் வரும் என நம்புகிறேன்!]

மேற்கூறிய அகத்திய பெருமானின் கருத்துக்களை வாசித்து அதன் உள் அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். பாபநாசம் சென்று அவரின் சத்சங்கத்தில் (கூட்டு பிரார்த்தனை) கலந்து கொண்டு, புண்ணியவான் ஆகிவிடுங்கள். காரணமின்றி, அகத்தியப்பெருமான் இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்க மாட்டார் என்று நம்புங்கள். நம்பிக்கைதான் நல் வாழ்க்கை. இது ஒரு நல்ல வாய்ப்பு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

7 comments:

  1. அகத்தீசாய நம நன்றி அய்யா 🙏🏽🙇🏽‍♂️

    ReplyDelete
  2. நன்றி ஐயா ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  5. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி.

      Delete
  6. அய்யன் திருவடிகளே சரணம் ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete