​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 20 July 2025

சித்தன் அருள் - 1907 - அன்புடன் அகத்தியர் - தென்குடித்திட்டை வாக்கு!




18/7/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: சுகுந்த குந்தளாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் ஆலயம். தென்குடித்திட்டை. திட்டை குரு பகவான் ஆலயம். 

ஆதி பகவானின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள். 
அப்பனே குறைகள் வேண்டாம். 
அப்பனே  நிச்சயம் தன்னில் கூட

அனைத்தும் யான் அறிவேன் அப்பனே யார் யாருக்கு என்னவென்று??

அப்பனே இப்படியே அனைத்தும் யான் மாற்றி தருவேன் அப்பனே குறைகள் வேண்டாம் என்பேன் அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட 

அப்பனே நீங்கள் கேட்டுத்தான் அப்பனே யாங்கள்.. கொடுக்க வேண்டும் என்றால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட ஏதப்பா? 

பின் நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாகவே.. இதனால் அப்பனே.. நிச்சயம் அப்பனே பின் நம்பிக்கையோடு.. எங்களை சரணடைந்தாலே போதுமானதப்பா. 

உங்கள் குறைகள் எப்படி.. ஏது என்று யாங்களே அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பக்குவம் ஏற்படுத்தி அப்பனே.. நிச்சயம் சில வெற்றிகளை.. இவ்வாறாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட... 

(குருநாதர் இவ்வாக்கில் முருகனுடைய ஆலயமான விராலிமலை குறித்து குருநாதர் ஒரு பக்தருக்கு தனிப்பட்ட முறையில் விராலி மலைக்கு காவடி எடுத்துச் செல்லும்படி கூறிய பொழுது விராலிமலை சிறப்பை பற்றி வாக்குரைத்தார்)

அப்பனே பின் அதாவது எதை என்று அறிய.. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. எண்ணக்கூடாத அளவிற்கு அப்பனே பின் 

கந்தன் அப்பனே தன் நிச்சயம் விரலை... என்று அழைக்க.....அவ் மலை விராலி மலை. 

(முருகனின் விரல் ஆக இருக்கும் ஸ்தலம் விராலிமலை... இந்த ரகசியத்தை குருநாதர் கூறினார்) 

அப்பனே சொன்னேனே அப்பனே... முன் உரைத்த வாக்கில் கூட அப்பனே 

(திருவையாறு வாக்கு.. சித்தன் அருள் 1906.

இவ்வாறாகவே அங்கு சென்று அப்பனே...

(அதாவது திருவையாறு

மற்றும் பார்வதி தேவியார் குழந்தை ரூபத்தில் சுற்றித்திரிந்த பஞ்ச ஆரண்ய திருத்தலங்கள்...

பஞ்ச ஆரண்ய தலங்கள்: 
திருக்கருகாவூர்: முல்லைவனம், கர்ப்பரட்சாம்பிகை கோயில்.

திரு அவளிவநல்லூர்: பாதிரிவனம்.

அரித்துவாரமங்கலம் (அரதைப்பெரும்பாழி): வன்னிவனம்.

ஆலங்குடி (திரு இரும்பூளை): பூளைவனம்.

திருக்கொள்ளம்புதூர் (களம்பூர்): வில்வவனம்)

இவ்வாறாகவே அப்பனே அங்கு சென்று.. அப்பனே பின் தியானங்கள்... அதாவது தீபங்கள் ஏற்றி அப்பனே...

(அந்த ஆலயங்களோடு தொடர்ச்சியாக)


அப்படியே இவ் திட்டை வந்து 

(தென்குடி திட்டை தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) 


நிச்சயம் தன்னில் கூட 

 திருநாகேஸ்வரம் (ராகு ஸ்தலம்) 

கீழ்பெரும்பள்ளம் (கேது ஸ்தலம்) 

அப்பனே... நிச்சயம் தன்னில் கூட இப்படியே பின்

உப்பிலியப்பன் 

(திருவிண்ணகர் உப்பிலியப்பன் திவ்ய தேச திருத்தலம் கும்பகோணம்) 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும் அப்பனே

கடைசியில் அப்பனே 

திருவிடைமருதூர் சென்றடைய... அப்பனே நிச்சயம் சில பாவங்கள்.. போகுமப்பா!!

ஆனாலும்.. இவைதன் மனிதனுக்கு பின் தெரியாதப்பா. 


அப்பனே இவ்வாறாகத்தான் மனிதனுக்கு ஒன்றும் தெரியாமல்... அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான். 

அப்பனே இவ்வாறாக கலியுகத்தில்... நோய்களும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. கஷ்டங்களும் அப்பனே பின்.. வரும் என்பது இறைவன் தீர்ப்பப்பா. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் தான் அப்பனே... சித்தர்கள் யாங்கள் வந்து வந்து வந்து அப்பனே பின்... மக்களை பின் தெளிவுபடுத்தி... அப்படி தெளிவு பெறாவிடிலும் கூட அடித்து.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட திருத்தி... அப்பனே பின் வழிகள்.. செய்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே. 

அதனால் குறைகள் வேண்டாம் அப்பா நிச்சயம் தன்னில் கூட. 

ஏனென்றால் கலியுகத்தில் அப்பனே... தீயவை தான் பின் நடக்க வேண்டும்... என்றெல்லாம் காலத்தின் கட்டாயம் 
 என்பதை எல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்

அதை தன் நல்வழிப்படுத்த அப்பனே பின் சில அப்பனே பின் மனிதர்கள் எங்களுக்கு தேவை என்பேன் அப்பனே.. யார் யார் என்பதை எல்லாம் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. நல் எண்ணங்களாக இருங்கள் புண்ணியவானாக இருங்கள்.. என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம்.. உங்களுக்கு சொல்லித் தந்து விட்டால் அப்பனே... அதை ஏற்று அப்பனே.. அனைத்து சித்தர்களின் ஆசிகளும் கிடைத்து அப்பனே... பாவங்களும் பின் அப்பனே போக்கி.. அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட எங்கள் அருகில்.. வந்தால் அப்பனே நீங்களும் கூட.. சேவைகள் செய்யும் பாக்கியம் கிடைக்கும் என்பேன் அப்பனே. 

இவ்வாறாகத்தான் அப்பனே எவ்வாறாக.. மனிதனைத் தேர்ந்தெடுப்பது??
எவ்வாறாக பின் உணர்த்துவது??
பின் எவ்வாறாக.. உணராவிடிலும் கூட அப்பனே... எவ்வாறு எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட எங்கள் அருகில் வந்து விட்டால்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட யாங்களே... வழி விடுவோம் என்போம் அப்பனே.

கர்மத்தை அதாவது பாவத்தை முதலில் நீக்க வேண்டும் என்பேன் அப்பனே.

எவை என்று கூற.. இதனால் அப்பனே சில பாவங்கள்... அவரவர் இடத்தில் இருக்கின்றது என்பேன் அப்பனே. 

அதை நீக்குவேன் யான் என்பேன் அப்பனே. 

எங்களுக்கு தெரியுமப்பா எப்பொழுது எங்கு நீக்க வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.

இதனால் அப்பனே பின் நன்மைகள் தான் ஏற்படும் என்பேன் அப்பனே 

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் ஆசிகளப்பா!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete