அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 2
வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-
1.சித்தன் அருள் - 1903 - பகுதி 1 )
குருநாதர் :- அப்பனே நிச்சயம் உன் மூளையை நீ பயன்படுத்தவேண்டும். பின் உன் மூளையை, அடுத்தவன் பயன் படுத்தினால் அனைத்து கர்மாக்களும் சேருமப்பா. அப்பனே புரியாத புதிர் வாழ்க்கை. அப்பனே அவ்வாழ்க்கை உங்களுக்குக் கற்பித்துவிட்டால் நீங்களே உங்களை வென்றுவிடுவீர்கள்.
இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பல வாக்குகளைச் செப்பிச் செப்பி, இதன்படி நடந்தால், உங்கள் விதியைக் கூட யான் சொல்வேன். விதியைக் கூட யான் மாற்றுவேன்.
அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட என் பக்தர்களுக்காக யான் எது வேண்டுமானாலும் செய்வேன். ஆனால் பக்குவங்கள் இல்லையே. நிச்சயம் இவ்வாறு நடக்கும், சுகமாக நடக்கும் என்று தெரிவித்தால் ஓடோடி விடுவது.
அப்பா! நிச்சயம் தன்னில் கூட சிந்திக்க வேண்டும். அப்பனே யார் ஒருவன் மூளைக்குப் பின் வேலை கொடுக்கின்றானோ அவன் உயர்ந்தவன் ஆகின்றானப்பா. நிச்சயம் எங்களுக்கும் சந்தோசம்.
நிச்சயம் மற்ற மூளையை நம்பினால், மூலையில்தான் அமர வேண்டும்.
அப்பனே இறைவனுக்கு வேலையே இல்லையப்பபா.
நிச்சயம் அம்மையே , அப்பனே இறைவன் அனைத்தும் கொடுக்கத் தயார். வாங்கிக்கொள்ள உங்களிடம் கைகள் இல்லை.
அறிந்தும் இரு கைகள் போதாது. அறிந்தும் ஆனாலும் பக்குவங்கள் படவேண்டும். தாயே, தந்தையே அறிந்தும் நிச்சயம் தான் தன் பிள்ளைகள் நிச்சயம் உயர்வான கல்வி நிச்சயம் பின் பெற்று, உயர்ந்த இடத்தில் உயர்ந்த பதவிகள் பின் வகிக்க வேண்டும் என்று நிச்சயம் அடித்தாவது நிச்சயம் பின் படித்து எதை என்று கூற பின் கல் அதி என்று சொல்கின்றீர்கள் அல்லவா? அதேபோல்தான் இறைவனும் தன் பிள்ளைகள் உயர்ந்த இடத்தில் அழகு பார்க்க வேண்டும் என்று எண்ணுகின்றான். அதற்காகத்தான் துன்பங்களை எல்லாம் வைத்து வைத்து பக்குவப்படுத்தி நிச்சயம் தன்னில் கூட. ஆனால் அதனுள்ளே இவ்துன்பங்கள் எல்லாம் வேண்டாம் என்று ஓட விடுகின்றீர்கள் அப்பனே.
அறிந்தும் தாயே பின் நிச்சயம் தன்னில் கூட ஏன் எதற்கு எவை என்றும் புரியாத நிலையிலும் கூட நிச்சயம் பின் அறிந்தும் கூட இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றான். ஆனாலும் எப்படி பார்ப்பது?
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா கேள்வி கேட்கின்றார். சொல்லுங்க ஐயா? அம்மா யோசித்துக் கேளுங்கள்?
அடியவர் 1 :- கண்ணுள்ளே காணலாம்.
குருநாதர் :- தாயே நிச்சயம் தன்னில் கூட தன்னுள்ளே இறைவனைக் காண்பது எப்படி?
அடியவர் 1 :- நீங்கதான் வழி சொல்லலாம்.
அடியவர் 2 :- அன்பின் வடிவாக…
குருநாதர் :- நிச்சயம் எதை என்று புரிய இவை இல்லை இப்பொழுது.
சுவடி ஓதும் மைந்தன் :- அன்பு பற்றி இப்பொழுது அந்த topic எடுத்து வர வேண்டாம்.
அடியவர் :- பக்தி
குருநாதர் :- அப்பப்பா. அனைத்தின் மீதும்தான் பக்தி இருக்கின்றதே. பணத்தின் மீதும் இருக்கின்றது. பின் பெண்ணின் மீதும் இருக்கின்றது. எப்படியப்பா?
சுவடி ஓதும் மைந்தன் :- எந்த பக்தி என்று கேட்கின்றார் ஐயா.
அடியவர் 3 :- குரு பக்தி மூலமாக
குருநாதர் :- அப்பப்பா அதற்கும் இப்பொழுது இல்லை.
அடியவர் 1 :- கஷ்டத்தை எனக்கு மீண்டும் கொடு. நான் இன்னும் பக்குவப்படுகின்றேன்.
குருநாதர் :- தாயே நிச்சயம் தன்னில் கூட இறைவன் உன் பக்கத்திலேயே வந்து விடுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்படி சொன்னால் மட்டும்தான் இறைவன் என்ன செய்வார்? பக்கத்திலேயே வந்துவிடுவார்.
குருநாதர் :- தாயே நிச்சம் அப்பொழுது நீங்கள் சுற்றினாலும் இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து, பின் உரையாடிவிட்டு செல்வான். நிச்சயம் இப்படிச் செய். அப்படிச் செய் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த அம்மா சொல்வது போல் செஞ்சா, இறைவன் உங்க பக்கத்திலேயே வந்துடுவாரு. வந்துட்டு நீங்க எங்காவது கோவிலுக்கு போறீங்கள்ல , அப்போ யாராவது சொல்லுவாங்க. பக்கத்திலேயே இருந்துகிட்டு, மனிதனை இயக்கிடுவார். அம்மா இப்படிச் செய், அப்படிச் செய் என்று யாரோ உங்களுக்கு சொல்லுவாங்க. தெரியாத ஆளே உங்களுக்குச் சொல்லிடுவார். அப்போ இறைவன் எங்க வேண்டுமானாலும் இருக்கலாம். Okங்களா. அப்போ இது மாதிரி யார் ஒருத்தர் நினைக்கின்றார்களோ , அம்மா இதைல்லாம் தெரிஞ்சுக்னும். ( சுவடி ஓதும் மைந்தனுக்கும் , மற்றும் பல அடியவர்களுக்கும் இவ்இறை உரையாடல்கள், தரிசனங்கள் பலமுறை பல ஆலயங்களில் நடந்துள்ளது என்று அடியவர்கள் அறியவும்)
இறைவன் அருகில் இருப்பார். அம்மா நீங்க சொல்லுங்கம்மா. நானே கேட்கனும். இப்போ சொன்னீங்க அதை திருப்பி சொல்லுங்கம்மா.
அடியவர் 1 :- வேண்டிக்கிட்டது அதான் வேண்டிக்கொள்வேன் ஐயா. எனக்கு இன்னும் கஷ்டத்தைக் கொடு. அதற்கான தீர்வைக் கொடு. தைரியத்தைக் கொடு. தன்நம்பிக்கையைக் கொடு.
குருநாதர் :- அப்பனே இதுபோல் இறைவனிடத்தில் யாராவது வேண்டிக் கொண்டீர்களா? என்ன?
சுவடி ஓதும் மைந்தன் :- யாராவது இருக்கின்றீர்களா? யாரும் இல்லை.
குருநாதர் :- எதை என்றும் புரிய அப்பனே அதைத் தருவான், இதைத் தருவான் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே. நிச்சயம் மூளை இல்லாதவனுக்கு கொடுத்தாலும் ஒன்றும் புரயோஜனம் இல்லையப்பா.
அம்மையே அனைவரிடத்திலும் சொல். நிச்சயம் எதைக் கொடுப்பான் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா மைக் கொடுங்க இந்த அம்மாவிடம்.
(அடியவர்கள் மைக் கொடுத்தனர் அவ்அம்மையாரிடம் (அடியவர் 1) )
சொல்லுங்கம்மா. உங்களை சொல்லச் சொல்லிட்டார்.
மற்றொரு அடியவர் :- நிறைய பாடத்தை கடந்து வந்திருக்கின்றீர்கள். அதனால தெளிவாகச் சொல்லுங்கள் அம்மா.
அடியவர் 1 :- நான் பத்து வருசத்துக்கு முன்னாடி ரொம்ப கஷ்டப்பட்டேன். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எங்க வீட்டை விட்டு ஒரு வருட வந்துள்ள குழந்தையுடன் வெளியே வந்தேன். அப்ப நான் நினைத்து வேண்டுனது , நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யல. இனிமேலும் செய்யப் போவதில்லை. ஆனால் (இறைவா) உன்னை நம்பி சரணாகதி அடைகின்றேன். நீ எனக்கு நல்லது செய். நான் உன்னோட வழியில் வந்துவிட்டேன் அப்படி நினைத்து வேண்டிக் கொள்வேன். எந்த கோவிலுக்குச் சென்றாலும் எனக்கு கஷ்டத்தைக் கொடு. கஷ்டத்திற்கான தைரியம், தன்நம்பிக்கை, விடா விடா முயற்சியைக் கொடு. உன்னை நான் எப்போதும் துதிக்கின்றதை நம்பிக்கை கொடு என்று எப்பவுமே, இப்ப வரைக்கும் வேண்டிக்குவேன். ஆனால் ஒவ்வொரு வருஷமும் நான் இதை வேண்ட வேண்ட , நான் படுப்பதற்கு பாய் கூட இல்லாமல் நான் அழுதிருக்கின்றேன். நான் என் குழந்தை, என் குடும்பம் படுப்பதற்கு பாய் இல்லாமல், தலையனை இல்லாமல், வெறும் தரையில கொட்டுர மழையில கூட இருந்திருக்கின்றோம்.
அவ்வளவு கஷ்டத்திலேயும்,ஆனால் ஒவ்வொரு வருசத்திலும் நாங்க வந்து, ஒருத்தர் வந்து எனக்கு சொன்னாங்க. அவங்க கோயில்ல ஓதுவாரா இருக்காங்க. அவங்க wife சொன்னாங்க என்கிட்ட, நீ வரலட்சுமி நோன்பு எடுத்துக் கும்பிடு. நீ நல்லா முன்னேறி வருவாய் அப்டீன்னு. ஆனால் அவங்க எனக்கு கொடுத்தது வந்து , அதை எனக்கு செய்வதற்கான பக்குவம் என்னிடம் கிடையாது. அப்போ அவங்க ஒரு செம்பு கலசம் எடுத்துக் கொடுத்து, இதை இப்படி வச்சு செய். நீ ஒன்றும் குடுக்க வேண்டாம். ஒரு வெற்றிலை , பாக்கு, பூ மட்டும் வைச்சு கொடு மத்தவங்களுக்கு. அதே போல யார் எப்போ வந்தாலும் சரி, எந்த கிழமையில வந்தாலும் சரி, சுமங்கலிகளுக்கு ஒரு குங்குமத்தையும், நிறைஞ்ச செம்புத் தண்ணீரும் கொடு அப்படின்னு சொல்வாங்க. அதே போல அவங்க சொன்னதை நான் follow செஞ்சு வர்ரேன். வேண்டும் போதும் இதேதான் . இன்றைக்கு வரைக்கும் அதை நான் கைவிடவே இல்லை. இன்றைக்கு ஆண்டவன் முன்பு சொல்கின்றேன், நான் நன்றாக இருக்கின்றேன். என் friendக்கு தெரியும். நான் அவ்வளவு கஷ்டப்பட்டு வந்தாலும் இன்னைக்கு நானும் என் குடும்பமும். என் வீட்டுக்காரர் என்ன சொல்லுவார் (என்றால்) நம்ம பாப்பாவுக்கு சொத்து சேர்த்து வைக்க வேண்டாம். அதாவது பாவத்தை சேர்க்க வேண்டாம். புண்ணியம் சேர்த்தால் போதும் என் குழந்தைக்கு. அதுவே இறைவன் நல்ல வழி காட்டுவார் என்று சொல்லுவார். இன்னவரைக்கும் என் பாப்பாவும் நல்லா படிக்கின்றாங்க.
குருநாதர் :- தாயே இது போலத்தான் இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில்
சென்று கொண்டிருந்தால் இறைவனே பேசுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- கண்டிப்பாக. ஏன் இதை அந்த அம்மாவை சொல்லச் சொன்னார்கள் என்றால், இப்ப சொன்னார் பார்த்தீர்களா? இறைவன் பக்கத்தில் வந்துவிடுவார். உங்களுக்கு சொல்லிவிடுவார் அம்மா.
அடியவர் 2 :- ( இவ்அடியவர் சதுரகிரி மலை ஏறிய பொழுது பாதம் எல்லாம் புண் ஆகி கடுமையான வலி எடுத்துள்ளது. அப்பொழுது இவ்அடியவருக்கு பின்னால் ஓர் அம்மை மற்றொரு அம்மையிடம் பாதத்தில் வலியிருந்தால் தேங்க எண்ணெய் தடவிவிட்டு படுத்தால் சரியாகிவிடும் என்று சொல்ல, அதை கேட்டு இவ்அடியவர் அதுபோல் செய்து வலி நிவாரணம் உடன் கிட்டியது இல்லத்தில் என்று தனது இறை வழி அனுபவங்களை எடுத்துரைத்தார்கள்.)
அடியவர் 1 :- ( மற்றொரு இறை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்.)
அடியவர் 3 :- ஐயா ஒரு கேள்வி. நமக்கு ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் யாராவது சொல்லனும் இல்லை புத்தகத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். இது சரி எப்படி உணர்ந்து கொள்வது?
குருநாதர் :- அப்பனே, இப்பொழுதுதான் சொன்னேன். மகளே சொல்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இறைவன் பக்கத்தில் வந்து எப்படி அருளுவார் என்று விளக்கம் )
அடியவர் 4 :- ( கஷ்டம் என்ற பாதையில் கூட இருந்து நம்மை இறைவன் வழிநடத்துவார் என்று அழகாக அங்குள்ளவர்களுக்கு விளக்கினார். இதற்கு… )
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரியும் அளவிற்கும் கூட இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே என் பக்தர்களுக்கு நன்மைகள்தான் யான் செய்வேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் அப்பனே அனைவருமே பக்குவங்கள் படவேண்டும் அப்பனே.
அப்பனே இதனால் அப்பனே முதலில் யான் தருவது என்றாலும் அப்பனே அதைப் பயன்படுத்துவதற்கு நிச்சயம் துன்பம் வேண்டுமப்பா. அப்பனே அதைக் கொடுத்தால்தான் அப்பனே தாங்கிக் கொள்ள முடியும் அப்பா.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர், மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :-
Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteகுந்தி தேவி செய்த துதி
ReplyDeleteபீமனுக்கு விஷம் வைத்தார்கள். நீ காப்பாற்றினாய்.
அரக்கு மாளிகையோடு கொளுத்தப்பட்டபோதும் காத்தாய்
ஹிடும்பன் முதலிய ராக்ஷஸர்களிடமிருந்தும், சூதாட்ட சபையில் த்ரௌபதியையும், வனவாஸத்தில் ஒவ்வொருநாளும் ஏற்பட்ட கண்டங்களிலிருந்தும், காப்பாற்றினாய். ஒவ்வொரு சண்டையிலும், பீஷ்மர் போன்ற மஹாரதர்களின் அஸ்திரங்களிலிருந்தும் இப்போது ப்ரும்மாஸ்திரத்திலிருந்தும் நீயே எங்களைக் காத்தாய். உலகனைத்திற்கும் குருவாய் விளங்குபவன் நீ.
நீ ஒடி வந்து தர்சனம் அளித்துக் காக்கும் படியான விபத்துக்களும் கஷ்டங்களும் எங்களுக்கு அடிக்கடி வரட்டும். ஒவ்வொரு கஷ்டமும் உன் தரிசனத்தாலேயே விலகுகிறது.