​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 11 July 2025

சித்தன் அருள் - 1895 - அன்புடன் அகத்தியர் - சுருளிமலை வாக்கு!









10/7/2025 குரு பூர்ணிமா...ஆனி பௌர்ணமி அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்.குழந்தை வேலப்பர் சன்னதி சுருளி மலை. தேனி மாவட்டம்.

ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே எம்முடைய ஆசிகள் அனைவருக்குமே அப்பனே!!

அப்பனே அதாவது சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... ஒரு பிறவியில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட வாழ்ந்தவர்கள்.. அப்பனே இங்கு பின் நிச்சயம் வரமுடியாதப்பா!!!

அப்பனே பல பிறவிகள் எனை தேடி தேடி வந்தவர்கள் மட்டுமே.. முருகனை தேடி தேடி வந்தவர்கள் மட்டுமே இங்கு வர முடியுமப்பா!!

இதனால்தான் அப்பனே நீங்கள் இங்கு தேடி வந்திருக்கிறீர்கள் இன்றைய நாளில் என்பேன் அப்பனே. 

முருகனே உங்கள் அனைவரிடத்திலும் இருக்க!!!......

அப்பனே அனைவரின் இல்லத்திலும் இருக்க!!!

முருகனே வழிகள் செய்வானப்பா!!

குற்றங்கள் இல்லை குறைகள் இல்லை அப்பனே!!!

நிச்சயம் தன்னில்  கூட அப்பனே பல கோடி பிறவிகள் எடுத்தால் மட்டுமே... அப்பனே  நிச்சயம் தன்னில் கூட அப்பனே !!

இவ் அப்பனே பின் சுருளியப்பனை... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பார்க்க அறிந்தும் கூட!!!

அவனே இங்கு அனைவரையும் அழைத்தானப்பா!!!
நிச்சயம் தன்னில் கூட..

அறிந்தும் அறியாமலும் நிச்சயம் தன்னில் கூட.. நீங்கள் வந்து விட்டீர்கள் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அன்போடும் ஆதரவோடும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அங்கங்கும் கூட அண்ணாமலையிலும் கூட உங்களை யான் சந்தித்தேன் என்பேன் அப்பனே!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட... அதாவது ஒரு ஜென்மத்தில் எங்கு இருக்கின்றான்?. முருகன்? என்றெல்லாம் அப்பனே தேடி தேடி..!!

இங்கு வந்திருப்பவர்கள் எல்லாம் நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் பின் எவை என்று புரிய அப்பனே பின் தேடி தேடி அலைந்தவர்கள் தான் என்பேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே இல்லத்தில் அப்பனே அனைவரின் இல்லத்திலும் அப்பனே பின் நிச்சயம் அப்பனே பின் எவ்வாறு.. ரூபம் எடுத்து கந்தன் அழகாக நிற்கின்றானப்பா!!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட குறைகள் வேண்டாம் குற்றங்கள் வேண்டாம்.. அவரவர் வினைகள் நிச்சயம் கந்தனே.. எதை என்று புரிய அப்பனே பின் வினைகளை தீர்த்து வைத்து அப்பனே அவரவர் நிச்சயம் மேன்மையை அப்பனே நிச்சயம் தன்னில் கூட கொடுத்து அருள்வான் என்பேன் அப்பனே. எதை என்று புரிய இதனால் அப்பனே குறைகள் வேண்டாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே எதை என்று அறிய நிச்சயம் தன்னில் எதை என்று அறியாமல் கூட...

அப்பனே பின் அண்ணாமலையிலே!!

நிச்சயம் தன்னில் கூட ஒரு அதிசயம் நடக்கப் போகின்றது அப்பனே !! அதி விரைவிலே!! என்பேன் அப்பனே!!!

இதனால் அப்பனே பின் முருகன் எதை என்று கூற அறிய நிச்சயம் தன்னில் கூட... இவ்வாறாக அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் அருள்களாக வருகின்ற பொழுது... அப்பனே பலத்த சத்தத்துடன் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதிருமப்பா!!! பூமி!!!

எதை என்று கூற ஆனாலும் பின் எவை என்று புரிய... மக்களுக்கு இவை தன் அப்பனே துணையோடு அப்பனே அறிந்தும் கூட கவலைகள் இல்லை என்பேன் அப்பனே!!!

இதனால் அப்பனே என்னோடு எதை என்று புரிய இன்றைய நாளில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பௌர்ணமி அமாவாசை தினங்களில் தன்னில் கூட... அப்பனே பின் வசிஷ்டன் ரிஷியும் கூட இங்கு வந்து முருகனுக்கு அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் பல உபதேசங்கள் செய்வானப்பா!!! மறைமுகமாகவே என்பேன் அப்பனே!!

அவை மட்டும் இல்லாமல் அத்திரியும் (அத்ரி மகரிஷி) கூட அப்பனே மறைமுகமாக வந்து ஆசிகள் எதை என்று புரிய முருகனுக்கு..!! அப்பனே 

அவை மட்டும் இல்லாமல் பல கோடி அப்பனே எவை என்று அறிய அறிய சித்தர்களும் கூட எங்கு? ஏது? எவை என்று புரிய அப்பனே.... இன்றைய நாளில் அப்பனே எங்கு? பின் அமர்ந்து எதை என்று கூற... அப்பனே அவர்கள் நிச்சயம் தன்னில் கூட பின்...

அதாவது 
 
 """***நமச்சிவாயா !!!!!!!

 என்ற நாமத்தை அப்பனே கூறிக் கொண்டிருக்கையில் அப்பனே அது நிச்சயம் காதுகளுக்கு... உங்களுக்கு விளங்காதப்பா!!.. அதாவது காதுகளில் கேட்காதப்பா!!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் அதிர்வுகள் அப்பனே பின் வந்து சேர்கின்ற பொழுது அப்பனே... மனிதனின் பீடைகள் மறையுமப்பா!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!

(கோடி சித்தர் பெருமக்கள் சூட்சுமமாக நமச்சிவாயா.. எனும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த சப்தம் சாதாரண மனித காதுகளுக்கு கேட்காது... ஆனால் அந்த சித்தர்களின் மந்திர ஜபம் அதிர்வலைகள் மனிதர்களை வந்து அடையும் பொழுது மனிதர்களுடைய தரித்திரங்கள் குறையும்)

அப்பனே இதனால் அப்பனே எதை என்று புரிய அப்பனே அதாவது வரும் காலத்தில் மனிதன் அப்பனே நோய்களோடு சுற்றிக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே. 

அதாவது நோய்கள் என்பது.. அதன் பெயர் நிச்சயம் அதாவது.. அதன் மறு பெயர் பாவம் என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட.

அதனால் அப்பனே அவ் நோய்களை எப்படி?? அதாவது பாவத்தை அகற்றுவது??? என்பதையெல்லாம் அப்பனே..

இங்கு (சுருளிமலை) ரகசியமாகவே   அதாவது அப்பனே பின் எதை என்று கூற... இன்னும் அப்பனே பல கோடி ஆண்டுகள் அப்பனே பின் வாழ்ந்து அப்பனே பின் பெரிய ஒரு பெரிய நாக தேவதை.. இங்கு உள்ளதப்பா. 

அப்பனே அது தன் நிச்சயம் தன்னில் கூட இங்கு உமிழ்ந்து கொண்டே இருக்கின்றது நீரை அப்பனே!!!... நிச்சயம் தன்னில் கூட...

(சுருளி மலையில் இருக்கும் புனித தீர்த்தம்... இந்த தீர்த்தத்தில் நாக தேவதையின்... உமிழ் தன்மை பரிமளிக்கின்றது... இந்த குணம் உள்ள நீரை அருந்தி வர வேண்டும். 

இதேபோன்று குருநாதர் ஏற்கனவே 

சித்தன் அருள் 1313 தலைக்காவேரி குடகு மலைவாக்கில் 

குற்றாலம் அருவி நீரில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வரும் நாக கன்னிகை பிரம்ம முகூர்த்தத்தில் வெளிப்படுத்தும் உமிழ் தன்மை மகத்துவம் குறித்து குருநாதர் ஏற்கனவே வாக்குகளின் உரைத்திருக்கின்றார் அந்த வாக்கையும் மீண்டும் படிக்கும் பொழுது நாக தேவதையின் மகிமை புரியும்)

அவ்வாறாக அப்பனே இங்கு நீரை... நிச்சயம் தன்னில் கூட அதாவது. அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அதாவது இல்லத்திற்கு எடுத்துச் சென்று... அருந்திக் கொண்டே வந்தால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பின் இன்னும்... பலவகை நோய்கள் தீரும் அப்பா..

இன்னும் அப்பனே எங்கும் எங்கும்... எவையெல்லாம் எங்கெல்லாம் ?அவ் நாக தேவதை அலைந்து கொண்டிருக்கின்றது!!.. என்பதையெல்லாம் அப்பனே... நிச்சயம் அப்பனே... அது பின் அப்பனே நாளுக்கு நாள்.. மாறும்ப்பா!!

(நாக தேவதையின் நடமாட்டம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும் அதாவது அதன் இடப்பெயர்ச்சி நடந்து கொண்டே இருக்கும்)

இங்கு ஒரு நாள்!!..(சுருளிமலை க்கு) அப்பனே... எப்பொழுது வரும் என்பதை எல்லாம் அப்பனே... திடீரென்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்...

"""..பொதிகை!!!... இன்னும் அப்பனே.. என்றெல்லாம் அப்பனே மாறிக்கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே..

இவ்வாறாக என்றைய தினத்தில் அவ் நீரை எடுக்க வேண்டும்?? என்பவையெல்லாம் அப்பனே... உரைக்கின்ற பொழுது அப்பனே புரியுமப்பா!!

இதனால் அப்பனே அனைவருக்குமே ... எம்முடைய ஆசிகள் அப்பனே!! நிச்சயம் தன்னில் கூட சித்தர்கள் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட வந்திருக்கின்றார்கள்.. இன்றைய நாளில் கூட அழகாகவே!!!

அனைவருக்குமே ஆசீர்வாதங்கள்!!!

அவரவர் விருப்பப்படி நடக்கட்டும்... ஆசிகள் ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…

    ReplyDelete
  3. நன்றி ஐயா ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete