அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 7 (ஒரு தந்தையின் பாசப் போராட்டங்கள்)
ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
(இவ்தொடர் சத்சங்க வாக்கின் முந்தைய பதிவுகள்:-
1. சித்தன் அருள் - 1867 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1869 - பகுதி 2
3. சித்தன் அருள் - 1876 - பகுதி 3
4. சித்தன் அருள் - 1879 - பகுதி 4
5. சித்தன் அருள் - 1881 - பகுதி 5
6. சித்தன் அருள் - 1889 - பகுதி 6 )
குருநாதர் :- ( ஒரு அடியவருக்கு மாபெரும் சித்த ரகசியங்களை எடுத்து உரைத்தார்கள். )
அப்பனே வாகனத்தை ஓட்டு. அப்பனே அவனை யான் கேட்கவில்லை.
அடியவர் 4 :- ( நான் வெளிப்படையாக என்ன வேண்டும் எனக்கு என்று கேட்டுவிட்டேன். ஆனால்) அவர் மனதில் பிரார்த்தனை செய்திருப்பார். வெளியில் சொன்னால்தானே தெரியும். இல்லையென்றால் அவர் மனதில் உள்ளதை நீங்கதான் புரிந்து கொள்ள முடியும்.
குருநாதர் :- அப்பனே அவன் பாடும் பாடு எந்தனுக்கு மட்டுமே புரியும் அப்பா. உந்தனுக்கு கூட புரியாதப்பா. அப்பனே உன்னைவிட பலமடங்கு ( அவன் தன் குழந்தைகளைப் பற்றி யோசிக்கின்றான்).
அடியவர் 4 :- அது நியாயமானது தானே ஐயா.
குருநாதர் வாக்கை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- உங்களுக்கு தேவை நடக்கவில்லை என்ற குறையை , நீங்கள் சொல்லிவிட்டீர்கள். ஆனால் அவர் உங்களைவிட அதிக பாசம் ( தன் குழந்தைகள் மேல் ) வைத்திருக்கின்றார். ஆனால் வெளியே சொல்ல முடியாத ஒரு கடுமையான மனநிலையில் இருக்கின்றார். அப்படி இருந்தும் (அகத்தியன்) என்னிடத்தில் கேட்கவில்லை என்று சொல்கின்றார் ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- சரியாக சொன்னீர்கள். இப்ப சொல்லுங்க ஐயா? ஏன் நீங்கள் கேட்டீர்கள்?
அடியவர் 4 :- ஐயா ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு நடைமுறை இருக்கும். நம்ம பழக்க வழக்கம்…
குருநாதர் :- அப்பனே அதேபோல்தான் அப்பனே. ஒரே மாதிரியாகத்தான் சாதம் இடுகின்றார்கள் இப்பொழுது.
அடியவர் 4 :- அது நம் கண்முன் தெரிவதுதானே. தினமும் செய்வதுதானே.
குருநாதர் :- அப்பனே இதே போலத்தான் அப்பனே. தினசரி பாவம் , புண்ணியம் செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்.
அடியவர் 4 :- சரிங்க.
குருநாதர் :- அப்பனே நீ கேட்டுவிட்டாய். அவந்தன் ஏன் கேட்கவில்லை கூறு?
(இப்போது அந்த அடியவர் தன் மனநிலையை எடுத்துரைக்க ஆரம்பித்தார்கள்)
அடியவர் 5 :- என்னால் ஒன்றும் இல்லை. என்னால் ஒன்றும் செய்ய இயலாது.
குருநாதர் :- அப்பனே (அடியவர்# 4) புரிகின்றதா?
சுவடி ஓதும் மைந்தன் :- நம்மால் ஒன்றும் செய்ய இயலாது ஐயா. ஆனாலும் உங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.
குருநாதர் :- அப்பனே ஆனாலும் அவன் கடமையைச் செய்கின்றான். ஆனால் (அவனால்) முடியவில்லையே. அப்பனே இன்னும் வளர்ந்தால் பிள்ளைகள் என்ன ஆகும் என்றெல்லாம் யோசிக்கின்றான் அவன்.
அடியவர் 4 :- ஆமாங்க ஐயா. நாள் மட மடன்னு போய்விடும். அந்த யோசனை இருந்தால்தான் அந்த இடத்துக்குப் போக முடியும்.
குருநாதர் :- அப்பனே இதுதான் அப்பனே? ஏன் யோசனை செய்கின்றான்? கூறு.
அடியவர் 4 :- அந்த காலத்துக்கு அது வேண்டும்.
குருநாதர் :- அப்பனே இங்கு இதை (காலத்தைப் பற்றி) கேட்க வில்லை யான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் ஐயா?
அடியவர் 4 :- ( அமைதி )
அடியவர் 5 :- அந்த வாகனத்தை ஒட்டுவதுதான் நம்ம வேலை. அது எங்க போகனும்? யார் எப்போ ஏறனும்? அதை அவங்க பாத்துக்குவாங்க. அந்த வாகனத்தை ஓட்டுவது மட்டும்தான் என் வேலை. அந்த வாகனத்துக்கு சொந்தக்காரன் நான் இல்லை. வாகனத்தில் உட்கார்ந்து இருக்கின்றவர்களுக்கு நான் ஒரு இடத்திற்கு ஓட்டிக்கொண்டு போக வேண்டும். அவ்வளவுதான். அனைத்தும் அகஸ்தியப் பெருமான் (பார்த்துக்கொள்வார்)
குருநாதர் :- அப்பனே ஆன்மா வேறு வேறு அப்பா. இதனால் அவ் ஆன்மா என்னென்ன தவறுகள் செய்திருக்கின்றது என்பதை எல்லாம், அப்பனே அதை பயன்படுத்தி , (வாகன) உடம்பைப் பெற்று அப்பனே தீர்த்துக்கொள்ளும் அப்பா.
அவ்வளவுதான். சொந்த பந்தங்கள் யார் என்று சொல்?
அடியவர் 4 :- சொந்த பந்தம் ஒன்னும் இல்லைங்க.
குருநாதர் :- அப்பனே அனைவருமே சொந்தம் அப்பனே. இதனால்தான் தான் பாசம் அதை யாங்கள் எதிர்கின்றோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )
அடியவர் :- புரியுது ஐயா. நம்ம சோசனை செய்யனும். செய்ய வேண்டியதைச் செய்யனும்.
குருநாதர் :- அப்பனே ஆனால் அவ்ஆன்மா என்ன செய்தது என்று உந்தனுக்குத் தெரியுமா அப்பா?
அடியவர் 4 :- தெரியாதுங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- தெரியாது. இதில்தான் பிரச்சினையே.
குருநாதர் :- அப்பனே அதனால்தான் அவன் சொன்னானே, அதோடு விட்டு விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் சொன்னார் பாருங்க. வாகனத்தை ஓட்டுவது நம்ம கடமை. உங்க பிள்ளைகளுக்கு இது போல் செய்யனும் என்று செல்லனும். வாகனத்தை ஒட்ட என்னென்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். பிரேக் பிடிக்க வேண்டிய இடத்தில் பிரேக் பிடிக்கனும். (வேகமூட்டும் கருவி) Accelerator என்றால் அதை இயக்க வேண்டும். Stearing பிடிக்க வேண்டும். ஓட்டும் போது Left , right பார்கனும். அதனால நீங்க நல்ல செய்திகளை அந்த ஆன்மாவுக்கு சொல்ல வேண்டும். ஐயா (குருநாதர்) அருமையாக explain செய்து உள்ளார். ஐயா புரியுதுங்களா? Superஆக வேற level எடுத்து வந்து விட்டார் அகத்தியர். இது மாதிரி சொல்லிக்கொடுக்கனும்.
குருநாதர் :- அப்பனே இப்படிச் சொல்லிக் கொடுத்தும், பின் வாகனத்தை இயக்கத் தெரியாததால் அப்பனே என்ன ஆகும்?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அந்த ஆன்மாவுக்கு (இந்த உடம்பு என்ற வாழ்க்கை) வாகனத்தை இயக்கச் சொல்லிக் கொடுத்து விடுகின்றோம். ஐயா புரியுதுங்களா? அப்படி சொல்லிக் கொடுத்தும், வாகனத்தைச் சரியாக இயக்கவில்லை என்றால் என்ன ஆகும்? என்று கேட்கின்றார்.
அடியவர் 4 :- இது அவங்க புரிஞ்சிக்கனும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ போய் சேர்ந்துவிடும்.
அடியவர் 4 :- (நாம் எடுத்துச் சொல்லி) அவங்க நடைமுறைப் படுத்தாத போது என்ன செய்வது?
குருநாதர் :- அப்பனே இதைச் சொல்லிவிட்டேன் அப்பனே. மீண்டும் சரி செய்து, அப்பனே நொறுக்கி, அப்பனே தூள் தூள் தூளாகி மீண்டும் (இறைவனிடம்) வந்துவிடும் என்பேன் வண்டி.
அப்பனே உன்னையும் இவ்வாறு இயக்க வைத்து அப்பனே நீயும் எதை என்று அறிய அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களை இவ்வாறு பேச இயக்கி வைத்தது கேள்வி கேட்க வைத்ததே நான்தான் என்று அகத்தியர் சொல்கின்றார் ஐயா.
அடியவர் :- நன்றாகச் சொல்லிக்கொடுத்தும் இடிக்கின்றது என்றால் என்ன அர்த்தம்?
குருநாதர் :- ஒழுங்காகக் கற்றுக்கொடுக்கவில்லை என்று அர்த்தம்.
அடியவர் :- அதை கவனக்குறைவு என்று எடுத்துக்கொள்வதா?
குருநாதர் :- அப்பனே மனிதன் மதுவும் அருந்துகின்றான். ஆனாலும் அவ்மதுவிலே எழுதுகின்றார்கள் மனிதர்கள். அதைக் கடைப் பிடிக்கின்றார்களா என்ன?
அடியவர்கள் :- மது வீட்டுக்கு கேடு.
குருநாதர் :- அப்பனே யாங்கள் சொல்லியும் நடந்து கொள்ளவில்லை என்றால் அப்பனே, மீண்டும் கல்லீரல் இன்னும் எதை எதையோ இழந்து மீண்டும் கடைசியில் எங்களிடத்திலேயே வருகின்றான் அப்பனே.
அடியவர் :- குழந்தைகளுக்கு (வாகனத்தை ஓட்டுவது எப்படி என்று activate) ஆக்டிவேட் செய்து ஆசி வழங்கி ஆக்டிவேட் செய்தால் நன்றாக இருக்கும்.
குருநாதர் :- அப்பனே ஆசிகள் பல கோடியப்பா. ஆனாலும் உபயோகிப்பதும் , உபயோகம் இல்லாததும் அவர்களிடத்திலே.
அப்பனே உன் பக்கத்தில் உள்ளவன் சரியாக உபயோகப்படுத்தி விட்டான் அப்பனே.
அடியவர் 4 :- நான் கேட்பது என்னவென்றால் அந்த மாதிரி மன நிலையில் இருக்கின்றார்கள். அப்படி மன நிலைக்குப் போகாமல் இருக்க (அகத்தியர்) அப்பாவுடைய அருள் ஆசியைக் கேட்கின்றேன். அதை பிரார்த்தனையாக கேட்கின்றேன்.
குருநாதர் :- அப்பனே இவ்வளவு நேரம் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்களுக்கு அருமையாகச் சொல்கின்றார் அகத்தியர். இது மாதிரி (live) லைவில் எப்படி எல்லாம் சூப்பராக சொல்கின்றார் பாருங்கள்.
குருநாதர் :- அப்பனே அறிவிருந்தும் அறிவில்லையே அப்பனே.
அப்பனே அறிவில்லாமலும் அறிவிருந்தும். இதற்கு பதில் கூறும்?
சுவடி ஓதும் மைந்தன்:- இதற்கு யாராவது பதில் கூறுங்கள்.
அடியவர் 7:- அறிவு இருக்கு. ஆனால் அறிவில்லாமல் இருக்கின்றதற்கு காரணம் மாயையில் சிக்குவது.
அடியவர் :- புண்ணியம் இல்லாமல் இருப்பது.
சுவடி ஓதும் மைந்தன் :- (சுவடியை வாசித்து ..எதை என்று..) இது பதில் இல்லை.
அடியவர் 5:- இறைவன் படைப்பில் மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் எதுவுமே , அறிவு இல்லை என்று மனிதன் சொல்லலாம். ஆனால் அது எதுவுமே அதன் பாதையிலிருந்து மாறுவதே கிடையாது.
குருநாதர் :- ஆனால் இதில்தான் பாவம் சேருகின்றது. புரிந்து கொண்டீர்களா?
சுவடி ஓதும் மைந்தன் :- (மனிதன்) தன் பாதையிலிருந்து மாறிவிட்டால்தான் பாவம் சேர்கின்றது.
குருநாதர் :- அப்பனே குரங்கு புத்தியைப் பார். ஆனால் குரங்கு என்று சொல்லக்கூடாது. அனுமான் என்றே சொல்ல வேண்டும். காகத்தின் அப்பனே காகம் என்று சொல்லக்கூடாது. புசண்டனே என்றே சொல்ல வேண்டும். அதன் வேலையைக் கூட சரியாக செய்கின்றது என்பேன் அப்பனே. ஆனால் மனிதன் செய்யவில்லையே!
( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால் April 2024 ஆம் ஆண்டு ஈரோட்டில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…..)
வணக்கம் அகத்திய மாமுனிவர் அடியவர்களே!!!
உலகம் அழிவு நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது. இதனைத் தடுக்க குருநாதர் மதுரை சத்சங்கத்தில் அனைவரும் செய்து வரவேண்டிய வழிபாட்டு முறைகளை குருநாதர் அவசர உத்தரவாக வந்திருக்கின்றார் அதை நினைவூட்டல் பதிவு.
சித்தன் அருள் - 1884 - அன்புடன் அகத்திய மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் 22.06.2025 :-
ராகு கிரகம் மற்றும் கேது கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. இதனால் நிச்சயம் அழிவுகள். வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள். இந்த அழிவுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.
(1) அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவபுராணத்தை பாடுதல் வேண்டும். மக்கள் அனைவரும் 50 /100 / 200 / 500 /1000 அளவில் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும். பூமியைத் தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி இவ் சிவபுராணம் பாடல் இதை ஓதுதல் வேண்டும். கோளறு பதிகம், தேவாரம், திருவாசகம் விநாயகர் அகவல் படிக்க வேண்டும்.
(2) அனுதினமும் உங்கள் இல்லங்களில் நவகிரக தீபம் ஏற்றி , நவகிரக காயத்ரி மந்திரம் ஓதி , மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் என்று வழிபாடு செய்ய வேண்டும்.
(3) பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில், மற்றும் திருவண்ணாமலையில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால், தியானங்கள் செய்தால், மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும்.
(4) புண்ணிய நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடிச் சென்று சிவபுராணம் பாராயணம் செய்ய வேண்டும். நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!. நதிக்கரையோரம் இருப்பவர்கள், கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி, கூட்டுப் பிரார்த்தனை செய்து, சிவபுராணம் படித்து வரவேண்டும்.
(5)அனைவரும் ஆடி மாதம் பூர்த்தியாகும் வரை அம்பாள் ஆலயத்திற்குச் சென்று அபிராமி அந்தாதி அம்பாளின் பாடல்களைப் பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பு பெறும்.
இவ் வழிபாட்டினை அனைவரும் ஒன்று கூடி ஆலயங்களில் கூட்டுப் பிரார்த்தனை செய்து, மற்றும் இல்லங்களில் நவகிரக தீபம் ஏற்றி , அனைவரும் முடிந்த வரை ஒன்றாக இணைந்து சேர்ந்து அனைவரும் இந்த உலகம் அழிவிலிருந்து விடுபட பாடுபடுவோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteகோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete