​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 27 August 2022

சித்தன் அருள் - 1175 - அன்புடன் அகத்தியர் - சஞ்சீவிராயன் மலைக்கோயில்!






16/8/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் : சஞ்சீவிராயன் மலைக்கோயில். பாப்பாரபட்டி. தர்மபுரி 

மூலிகையின் ஸ்தலம். 

ஆதி பரமேஸ்வரனை மனதில் நினைத்து செப்புகின்றேன் அகத்தியன்!!!! நலமாக!! நலமாக!!! இன்னும் ஏற்றங்கள் இத்தலம் பெறும்.

பெறும்!!! என்பேன். எதனைப்பற்றி சிந்திக்கும் எதனை பற்றி சிந்திக்காத அளவிற்கு கூட நிச்சயம் அனுமானே இங்கு வந்திட்டுத்தான் செல்கின்றான்.

எதை ஆனாலும் ஒரு முறை இவை என்றும் கூற சிறிது மூலிகையை (யுத்த சமயத்தில் சஞ்சீவினி மூலிகை தேடிவந்து) அதாவது பின் எடுத்து பின் செல்கின்ற பொழுது இங்கு எவை என்று அறியாமலே ஆனாலும்(ராமாயணம்) இவைதன் அனைவரும் உணர்ந்ததே!!!! 

உணர்ந்து!! உணர்ந்து!! செயல்பட்டு!! செயல்பட்டு!! ஆனாலும் பின் சிறிது தூரம் சென்று எதை என்று அறியாமலே மீண்டும் சிறிதளவு சிறிதளவு ( அவசரமாக எடுத்து செல்லும் போது) மூலிகைகள் கீழே விழுந்து விட்டது) கொட்டிற்று!!!  கொட்டிற்று.!!! இவை அறிந்து! அறிந்து! இவையெல்லாம் இதில் ஏதாவது நல்ல மூலிகைகள் இருந்தால் யாம் என்ன செய்வது? என்பதை கூட.. மீண்டும் திரும்பி இவ் அனுமான் எதை என்று அறியாமலே திரும்பி வந்த பொழுது இங்கே மயக்க முற்றான்.(உறக்கம்) 

எதை என்று சிந்திக்காத அளவிற்கு கூட இங்கேயே மயக்கமுற்று அழகாகவே படுத்து உறங்கினான்!!!

ஆனால் அவந்தனுக்கு எவை என்று தெரியாமலே!! களைப்புடனே வந்தவனுக்கு அதிகம் உறக்கம்.

ஆனாலும் இதை என்று அறியாத ஆனாலும் இவற்றினின்று தன்மைகள் உணராது பிரம்மனும்..........

அனுமான் இப்படி செய்திட்டானே!!!! .. இதையென்று அறியாத எவை என்றும் ஆனாலும் அனைத்தும் தெரிந்த இவந்தனுக்கு எப்படி??........

எதை என்று கூறாத அளவிற்கும் இப்படி இருக்கின்றதே!!!!

ஆனாலும் விதியின் பாதையையும் கூட யோசித்துப் பார்த்தால் பிரம்மனும் இப்படித்தான் எழுதி இருக்கின்றான் என்பதை கூட..........

ஆனால் இவந்தன்(அனுமன்) மயக்கமுற்றது(விதியில்) எழுதப்படவில்லை.

உடனே பிரம்மா இறங்கி எவை என்று எவற்றை என்று கூற ஆனாலும் இவற்றில் இருந்து வந்தவை என்பதை அறியாமல் நிச்சயம் பிரம்மாவும் வந்து எவை...என்று.... 

அனுமானே !!! அனுமானே!!! 

என்று அழைக்க!!! நிச்சயம் அனுமானும் எழுந்திட்டு .........

இப்படி எவற்றில் இருந்து கூட இப்படி படுத்து உறங்குகின்றாயே!!!! என்று!!! 

மன்னிக்கவும்!! எதை என்று உணராமலே!!!! பிரம்ம தேவனே!!!! இவற்றில் இருந்து வந்தவை என்று தெரியாமல் இவ்வளவு சுற்றி சுற்றி மயக்கம் அடைந்து விட்டேன். இதனால் இங்கே எதை என்று அறியாது. அதனால் இங்கே வைத்துவிட்டு மயக்கமுற்றேன் என்பதை கூட........

அதனால் இவ் மலை உருவாகிவிட்டது(சஞ்சீவிராயன் மலை) இதையென்று அறியாமலே!!!

இதை !! இதையென்று செப்புக்கின்ற அளவிற்கு கூட நிச்சயம் பின்        காக்க வேண்டுமே!!! காக்க வேண்டுமே!! என் தாயவளை(சீதை) எதை என்று உணராமலே எவை என்று உணராமலே என் தந்தையவனையும்( ஸ்ரீ ராமர்) இவற்றில் இருந்து கூட பல பல சித்தர்கள் வழியிலும் கூட.........

எவற்றை என்பதை கூட பல மனிதர்களையும் கூட காக்க வேண்டுமே!!!.... ஒவ்வொரு மூலிகையும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது!!! வாய்ந்தது!!! என்பதற்க்கிணங்க எங்கெங்கோ அலைந்து! திரிந்து! எதையென்றும் அறியாமலே உணர்ந்து!! உணர்ந்து!! எடுத்து வந்தேன்.

ஆனாலும் எங்கெல்லாம் சிந்தியதோ? அங்கெல்லாம் நிச்சயம் மேன்மைகள்.

அதனால் எதை என்று அறியாமலே!! மீண்டும் உடனடியாக சென்றான்!! ஆனாலும் அவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து அவந்தன் எடுத்துச் செல்கின்ற வழிகளிலே எதை என்றும் உணர்ந்த அளவிற்கு கூட நிச்சயம் சிறிது யோசித்தான்.

எதை எவற்றில் இருந்து தீராத கவலைகளுக்கும் உண்டா? வழிகள். இதனால் நிச்சயம் பின் அனுமானே எதை என்று இப்படி அங்கங்கே விழுந்து நிற்கின்றதே!!! அதையெல்லாம் மீண்டும் எடுத்து வருவோம்!! என்பதற்கிணங்க ஆனால் முன்பே எதை என்று உணராமலே மீண்டும் அவந்தன் யோசித்து யோசித்து யோசனைகள் பல பல.

இப்படி எதை என்று அறியாமலே அதனால் நிச்சயம் பின் திரும்பி வர ஆனாலும் அவந்தனக்கு யோசனைகள்!!!!!!

 ஆனால் இதையும் மாற்றியவன் பின் பிரம்மா.

இதை என்றும் அனுமான்  எப்பொழுதும் எதற்கும் துணிந்தவன்!!!! ஆனாலும் இதற்குப் பின் ஆனாலும் மனதில் உதித்தது எங்கெல்லாம் மூலிகைகள் இவற்றின் தன்மைகள் உணர்ந்து சிந்தியதோ!!! அங்கெல்லாம் நிச்சயம் இதை அறிந்து நிச்சயம் அங்கு வருபவர்களுக்கெல்லாம் நோய் நொடிகள் நீங்கும்!!!!

பல கஷ்டங்கள் நீங்கும்!!! பல துன்பங்கள் நீங்கும்!!! என்பதை கூட அறிந்து அறிந்து அதனால் அங்கங்கே(கீழே சிந்திய மூலிகைகள்) இருக்கட்டும் என்று கூட.

பலவகையான!! பலவகையான!! மூலிகைகளை கூட.... பல பல வகைகளிலும் கூட அறிந்து எங்கெல்லாம் விழுந்ததோ? அங்கெல்லாம் நிச்சயம் அனுமான் இதை என்றும் அறியாமலே தங்கி!! தங்கி!! அடிக்கடி வந்து கொண்டே சென்று கொண்டே இருக்கின்றான்.

இதனால் நிச்சயம் அங்கங்கே சென்று சென்று வழிபட்டுக் கொண்டே வந்தால் நிச்சயம் பாவங்கள் கஷ்டங்கள் குறையும்.

ஒன்றையும் சொல்கின்றேன் எதை என்று அறியாமலே கிரகங்களும் நிச்சயம் அனுமானை வணங்குபவர்களுக்கு நிச்சயம் ஏதும் செய்யாது!!!

இதன் சூட்சுமமும் ரகசியத்தையும் கூட இன்னும் வரும் காலங்களில் யான் எடுத்துரைத்துக் கொண்டே வருவேன்!!! நிச்சயம் இதையென்று!!!!

அதனால் பின் எங்கிருக்கும் அனுமானும் எதை என்று அறியாது சனியவனும் அருகிலே இருப்பான்!!!(அனுமான் எங்கெல்லாம் இருக்கின்றாரோ அங்கெல்லாம் சனிபகவான் உடன் இருப்பார்)  அதனால் அனுமான் எதையென்று உணராமலே பின் பக்தியுடையவனையும் கூட !!!மீண்டும் சனியவன் மட்டும் அல்ல மற்ற கிரகங்களும் நிச்சயம் வழிவிட்டு விடும்.

அதனால் நிச்சயம் அனுமான் மிக்க! மிக்க!! மிக்க!! சலனத்தை ஏற்படுத்தி!! ஏற்படுத்தி!! மனிதனுக்கு பல கஷ்டங்கள்........

ஆனால் உண்மையாக இருக்க வேண்டும்.
உண்மையாக!!! நேர்மையாக!!! மதிக்கத்தக்க!!

எதை என்று கூற அநியாயத்தில் சென்றிருக்கக் கூடாது!! என்பதே அனுமானின் கட்டளை!!!!!

இவ்வாறு நிச்சயம் இருந்தால் அனுமான் தம் தன் இல்லத்திற்கே வந்து அனைத்தையும் செய்வான் கிரகங்களுக்கும் முறையிடுவான்!!! எவை என்று கூட....

இதனால் நிச்சயம் அமைதியாக இருந்து அனுமானை வழிபட்டு வழிபட்டுக் கொண்டு வந்தாலே!! நிச்சயம் பல வழிகளிலும் கூட ஞானங்கள் பிறந்து விடும் தன்னை யார் என்று கூட புரிந்துவிடும் இதனால் நிச்சயம் பக்திகள் சிறந்தவையாக..........

அதனால் நிச்சயம் ஒன்றை மட்டும் சொல்கின்றேன் இவந்தனுக்கு பிடித்தவை முதலில் வருபவை!!!

நேர்மை!! நிச்சயம் நேர்மை இருந்தால் ஒரே படியாக உயர்த்தி விடுவான்.

அடுத்தது நீதி தவறாமை!!!
தன் கடமையை சரிவில்லாமல் செய்து வருவது!!! இதனால் பிற உயிர்களை கொல்லாமை!! 

இதையென்று சாந்த குணம்!!!

அதாவது மனதில் என்ன எவை என்று கூட தீய எண்ணங்கள் இல்லாமல் அமைதியாக தியானங்கள் செய்து கொண்டு வந்தாலே நிச்சயம் இவ் அனுமானின் பேரருள் கிடைக்க பெற்று நிச்சயம் உயர்ந்து விடுவான்!!!

அப்படி இல்லை என்றாலும் அனைத்தும் மாறுபட்டவையாக இருந்தாலும் நிச்சயம். இவந்தனை வந்து அடைந்தாலும் இவந்தன் நிச்சயம் கீழ் நோக்கி அழைத்துச் செல்வான். இதுதான் உண்மை.

இன்றளவும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றான் அனுமான்!!!

மறைமுகமாக இரவில் இங்கே தங்கி அவந்தன் செல்கின்றான்.. அப்படி தங்கிச் செல்லும் பொழுது பல மனிதர்களையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான். பல ஆசிகளையும் தந்து கொண்டே தான் இருக்கின்றான்.

அதனால்தான் இவ்மலை எப்படி சிறப்புக்கள் வாய்ந்தவை!!! என்பதையெல்லாம் வரும் காலங்களில் கூட சொல்லிக்கொண்டு இன்னும் ஏனைய சித்தர்களும் சொல்லுவார்கள்!! எதனை என்று அறிந்து அறிந்து!!!!

அதனால் பின் ராமனும் பின் லட்சுமணனும் எவை என்று உணராமலே ஆனாலும் பின் இங்கு வந்து பல நாட்கள் பல நாட்கள் தங்கியிருந்து ஆனாலும் இவைதன் உணர உணர இன்னும்.

ஆனாலும் இங்கெல்லாம் இவற்றின் தன்மை உணர்ந்து உணர்ந்து இன்றளவும் கூட அனுமான் சுற்றி சுற்றி வந்து கொண்டே இருக்கின்றான்.

ஆனால் கடைசியில் இங்கு தான் தங்கி சில மணி நேரங்கள் தங்கி தங்கி எழுந்து நின்று பின் மலையை வலம் வந்து கொண்டே இருக்கின்றான்.

ஆனாலும் இதிலும் கூட சூட்சுமங்கள் உள்ளது!!! ஆனாலும் இதனை அறிந்து கொண்ட பல ஞானியர்கள் நிச்சயம் அனுமான் எங்கு? இருக்கின்றான்? என்பதை கூட பார்த்து இங்கு ஓடோடி வந்து விட்டார்கள்!!! இங்கேயே தங்கி விட்டார்கள்.அவ் ஞானியர்கள் இவ் மலையை சுற்றி. 

ஆனாலும் நிச்சயம் அனுமான் தம்தனக்கு ஏதாவது செய்வான் என்று நினைத்து நினைத்து இங்கேயே தங்கி தங்கி வழிபட்டு ஆனாலும் பல ஞானியர்கள் உயிரையும் விட்டனர்!! இதனால் நிச்சயம் அவர்களும் அதாவது அவ் பரிசுத்த ஆன்மாக்களும் சுற்றி சுற்றி வந்தடைவதால் நிச்சயம் பல மனிதர்களுக்கு விடிவெள்ளியாகவே உள்ளது!!!!

ஆனாலும் இவை என்று ஆனாலும் உண்மைதனை புரிந்து கொண்டால் நிச்சயம் நல்லவையே நடக்கும்.

அதனால் எதை என்று உணராத ஆனால் நிச்சயம் ஒன்றை சொல்கின்றேன்!!!

அனுமான் எங்கு இருக்கின்றானோ? அங்கு சீதாதேவிக்கும் பிடித்தமான இடம்.!!! அதனால் பின் எவை என்று உணராமலே பின் சனிதோறும்(சனிக்கிழமை) இங்கே வந்துவிடுவாள் சீதாதேவி. ராமனுக்கு நல்லதை செய்ய!!!!!!!

ஏனென்றால் அப்பப்பா!!!!! எதை என்று அறியாத அளவிற்கும் கூட பின் அனுமான் பல வழிகளிலும் கூட தன் அன்னையாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றான்!!! இன்றளவும் சீதா தேவியை!!!!...... 

அதனால் பின் சீதா தேவியே!!! வந்து நிச்சயம் அனுமானுக்கு இங்கே சில விசேஷங்களை செய்து வைப்பாள்!!!! பின் சனிதோறும் இதை பல ஞானியர்கள் தான் அறிவார்கள்!!!. மற்றவர்கள் அறியவும் மாட்டார்கள் எதை என்று!!!

ஆனாலும் யான் இதை சூட்சமத்தை சொல்லி விட்டேன்!!!! எதை என்று கூட வரும் வரும் காலங்களில் நிச்சயம் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றாள் சீதா தேவியே!!!!

இதனையும் பின் ராமனிடம் கூறி கூறி !!!

ராமா!!!!!ராமா!!! 

இப்படி எல்லாம் கலியுகத்தில் இப்படி எல்லாம் திருத்தலங்கள் ஆகி கொண்டிருக்கின்றதே!!! எவ்வாறு என்பதையும் கூட...........

ராமனும்....... சீதா தேவியே!!!! 

மேன்மை நிலை பெற்று இதனால் நிச்சயம் அனுமானுக்கு அனைத்தும் தெரியும்.

அவந்தன் அனைத்தும் உணர்ந்தவன் எப்பொழுது எதை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்!! என்பதைக் கூட அவந்தனுக்கே தெரியும்!! அதனால் நிச்சயம் ஏற்படுத்தி கொள்வான் என்பதைக் கூட!!!!

அதனால் சீதா தேவியும்!!!.......

இல்லை!!! என் அனுமான் எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட இன்றளவும் குழந்தையாகவே இருக்கின்றான்!!!!! அதாவது என் குழந்தையாகவே இருக்கின்றான்!!! என்று கூட.... சீதாதேவி சொல்லிவிட்டாள்!!!

அதனால் நீ ஏதாவது செய்!!! நிச்சயம் அவந்தனுக்கு எத் திறமைகள் இருந்தாலும் ஆனால் அவன் என் குழந்தை தான்!!!

அதனால் என் குழந்தைக்குப் பின் ஏதாவது செய்!! என்று கூட அதாவது எதை என்றும் உருவாக்கும் அளவிற்கு கூட.... நிச்சயம் எதை என்றும் செய்து கொண்டே செய்து கொண்டே பின் அனுமானும் சரி!!!!! எதை என்று உணராத அளவிற்கு யாம் குழந்தையாகவே இருந்து விடுவோம் என்று எண்ணி எண்ணி!!!!

ஆனாலும் கலியுகத்தில் நிச்சயமாய் பல வடிவங்களிலும் கூட பல ரூபங்களிலும் கூட பல கோணங்களிலும் கூட தவழ்ந்து கொண்டு இருக்கின்றான் அனுமான்!!!....

ஆனாலும் இங்கே தங்கி!! நிச்சயம் எதை என்று கூட......சீதா பிராட்டியோ இங்கே நிச்சயம் சனிதோறும் பின் அனைத்தும் செய்வாள்!!!!

ஆனாலும் அனுமான்  மகிழ்ந்து மகிழ்ந்து!!! யான் விளையாடச் செல்கின்றேன் என்று கூட ஏழுமலையான் அதாவது தற்போது!! திருமலை திருப்பதி தலத்திலே விளையாட சென்று விடுவான்.

அவை மட்டும் இல்லாமல் அங்கு விளையாடிவிட்டு பின்பு எதையென்றும் பல ரூபங்களில் கூட அலைந்து கொண்டிருப்பான். சிறப்பான தலம்!! சிறப்பான தலம்!! என்று கூட!!!!

என்றும் சிறப்படைய உண்டு வழிகள். ஆனால் நிச்சயம் நிச்சயம் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்.

அனுமான் எப்படிப்பட்டவன்!! என்பதை கூட யான் அறிந்து தான் இருக்கின்றேன் பல முனிவர்களும் பல சித்தர்களும் இங்கே வந்து இம்மலையைக் கூட எதற்காக? வரவேண்டும்? என்பதை கூட.......

கப்பலை இவ்வுலகத்தைக் காக்கும்!!! எதை எதை என்று கூட மனிதருக்கு தெரியாமல் அலைந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

நிச்சயம் பின் மயக்கமுற்ற மயக்கமுற்று இருக்கும் பொழுது அனுமானும்....... பின் அனைவரும் தேவர்களும் இந்திரனும் அனுமானுக்கே!!!!!!!! இப்படிப்பட்ட நிலைமையா???? என்று கூட யோசித்து அனைவரும் வந்து விட்டனர். இவையொன்று கூட அதனால் பார்த்தால் கடைசியில் அவந்தன் ஓய்வுற்றுக் கொண்டிருக்கின்றான் என்பதை கூட நினைவுபடுத்தி நினைவுபடுத்தி மயக்கமுற்று!!!!

ஆனாலும் அலைந்து திரிந்தான் அலைந்தான் ஆனால் ஓர் உண்மையையும் சொல்கின்றேன்!!!!

உண்மையான பக்தனுக்கு அதாவது ஏதும் எதையென்றும் இவ்வுலகத்தில் ஏதும் சுகங்கள் எந்தனுக்குத் தேவையில்லை என்கின்ற பொழுது........

""""" இவ்மலையில் ஓர் மூலிகை உண்டு.!!!!

அவ் மூலிகையை நிச்சயம் பின் பறித்துக் கொண்டாலே அனுமானை நேரடியாகவே காண்பான் ஒரு மனிதன். ஆனால் அது நிச்சயம் இக்கலியுகத்தில் மனிதனுக்கு கிடைக்காது.

ஆனால் கிடைக்கும் என்பேன் !!நிச்சயம் சில மனிதர்களுக்கு..!!!

அதனால் அவந்தனே துணை என்று இருப்பவர்களுக்கும்!!!!!! எந்தனுக்கு ஏதும் தேவையில்லை என்பவனுக்கும்!!!

பின் அனுமானே!!! நீ மட்டும் போதும்!! என்பவனுக்கும் நிச்சயம் அவ்முலிகை இவ் மலையிலே கிடைக்கும் என்பது மெய்!!!!!!

ஆனால் இதையென்று அதனை உண்பவர்களுக்கும் நிச்சயம் எதை என்று எவ் நோயும் வராது!!!!! வயதும் ஆகாது!!!!! அப்படியே இருப்பார்கள் என்பது திண்ணமான வாக்கு!!!!!

இன்னும் ஏராளமான மூலிகைகளும் இவ்வுலகத்தில் இருக்கின்றது. எங்கெங்கே என்பதைக் கூட ஆனால் அவையெல்லாம் சொல்லிவிட்டாலும் மனிதன் கர்மா எதை என்று எப்படி என்று தெரியாமல் போய்விடும் அதனால் தான் யாங்கள் மூலிகைகளை கூட இன்னும் சதுரகிரி மலையிலும் கூட வாழ்ந்து!!!! 

ஆனாலும் மனிதர்கள் எப்படியாவது எடுத்துச் செல்ல வேண்டும்!!! இதனை எடுத்துச் சென்று பல மனிதர்களை மயக்க வேண்டும்!!! பல மனிதர்களுக்கு ஏதாவது ஒன்றை செலுத்தி காசுகள் பறிக்க வேண்டும்!!! என்பதையெல்லாம் வந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்!!

ஆனால் கோரக்கன்(கோரக்கர் சித்தர்) விட்டு விடுவானா!!! என்ன???????????

நிச்சயம் அவ் மூலிகையை மறைத்து விடுவான்!!!! திடீரென்று கூட!!!!

இதனால் நிச்சயம் எதை என்று கூட அதனால்....... ஒருவன் !!   அதாவது இக்கலியுகத்திலே அதாவது மூன்று வருடங்களுக்கு முன்பே!!!
ஓர் எதையென்று அறியாமலே ஈசன் பக்தன் போல் நடித்து! நடித்து! இவ் மூலிகையை பறித்துக்கொண்டால்!!!........... அதாவது அவன் ஒரு புத்தகத்தில் படித்தான்.
 
இவ்மூலிகையை பறித்துக்கொண்டால் மக்களை வசியம் செய்து கொள்ளலாம். அவந்தனுக்கு எதை என்று கூட இதனால் பல வழிகளிலும் கூட காசுகள் பறித்து விடலாம் என்று இதனால் சதுரகிரி மலைக்குச் சென்றான்.

ஆனால் அவ்மூலிகையும் அங்கே இருந்தது!!!

அங்கே இருந்தது!!! ஆனாலும் அதை எப்படியாவது எடுத்துக் கொள்ளலாம்!! என்று கூட சந்தோஷப்பட்டான்.

அதனால் நிச்சயம் பின் வருவோம் பின் சந்திர (பொது பக்தர்கள் அனைவரும் சந்தன மகாலிங்கம் என்றே கூறிக்கொண்டு வருகின்றனர். ஆனால் அவ் லிங்கம் சந்திர மகாலிங்கம்) மகாலிங்கத்தை தொழுது தொழுது எதை என்று சுந்தர மகாலிங்கத்தை தொழுது!! தொழுது!! ஆனாலும் சந்தோசங்கள்!!!

ஆனாலும் விட்டு விடுவானா!!!! என்ன???? கோரக்கன்!!!.......

அப்படியா!!...  மனிதா!!!! உன் ஆட்டம்!!!

நீ எதற்காக? இதை பறிக்கின்றாய்?? என்பதை யான் உணர்ந்து விட்டேன்!!!
நீ நியாயத்திற்காக பறித்துக் கொண்டால் யான் விட்டு விடுவேன்!!!!!

ஆனால் நீ அநியாயம் செய்ய காத்திருக்கின்றாய்!!
செல்!!! செல் !!! என்று மனதில் நினைத்துக் கொண்டான் கோரக்கன்! 

இதனால் அவ் மனிதன் வணங்கி விட்டான் சந்திர மகாலிங்கத்தையும் சுந்தர மகாலிங்கத்தையும் ஆனால் குடியிருப்பு எதனை என்பதை அறியவில்லை.

இதனை ஆனாலும் அவந்தனுக்கோ பெரும் மகிழ்ச்சி!!! அவ் மூலிகைகள் எந்தனுக்கு வரப் போகின்றது!!! இதனால் பெரும் பணமும் நம் தனக்கு வரப்போகின்றது இதனால் பல பல இழிவான செயல்களையும்......

யார்?? இப்பொழுது யான் தான் இறைவன்!!! இறைவனுக்கு பக்தன்!! என்று ஆடினான்!! பாடினான்!! அங்கிருந்து இறங்கிய பொழுதே!!!! 

ஆனால் நிச்சயம் கோரக்கனோ!!!!!  பின் பார்த்திட்டு!! அடியோடு அவ் மூலிகையை மறைத்து விட்டான்!!!!! 

ஆனாலும் வந்துவிட்டான் அவந்தனும்!!!!! தேடினான் இங்கு தான் இருந்ததே எங்கு சென்றது!????? எங்கு சென்றது?? !!என்றெல்லாம்!!!

அடையாளம் எல்லாம் வைத்துவிட்டு சென்றோமே!!! ஆனால் இல்லையே? என்று கூட ஆனாலும் பின்பு அவ் மலையிலேயே இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் திரிந்தான்.

ஆனாலும் அவந்தனுக்கு யோசனைகள்!!!!

இங்கே தான் இருந்ததே!!! இருந்ததே!!!! 

ஆனாலும் பார்த்துவிட்டுச் செல்லும் பொழுது ஒரு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தாலும் இங்கே தான் இருந்ததே!!! என்பதைக் கூட.

ஆனாலும் மயக்கமுற்று பின் அவந்தனும் எழுந்து அமைதியாகவே சோகத்தில் வந்தான்.

எப்படி?? காணாமல் போய்விட்டது!!!!

புகைப்படம் நம்மிடத்தில் இருக்கின்றது!! ஆனாலும் எப்படி?? என்பதை கூட!!!

ஆனால் புத்தி கெட்ட அந்த மனிதனுக்கு இறைவன் மீது சந்தேகம் வரவில்லை.

ஆனால் எப்படி? அழிந்தது? எப்படி? மறைந்தது? எப்படி? போனது ?!!என்பதையெல்லாம் தான் அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

ஆனால் அவன் செய்த தவறுகள் எப்படி? என்பதை கூட அவந்தனுக்கு தெரியாமல் போய்விட்டது.

சரி!!! பார்த்துக் கொள்வோம் என்று எண்ணி மீண்டும் இறங்கி வந்தான்!!!

ஆனால் இப்படி ஆகிவிட்டதே!!!! எப்படியாவது மனிதர்களை மயக்கி நாம் முன்னேறி விடலாமே என்று நினைத்தான் அவன்.

ஆனாலும் இதனையென்று கூட திரும்பவும் செல்வோம்!!.. அங்கு இருக்கின்றதா? என்று பார்ப்போம்!! என்று ஒரு மாதமாக அதற்கு பல பல வழிகளிலும் கூட பிரார்த்தனைகள் என்ன!? பல பல வழிகளிலும் கூட ஹோமங்கள் என்ன!? எதையென்று கூட......

ஆனாலும்....கோரக்கன் !!!அவ்மலையிலேயே இருந்து பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான்......

அதனால் எதை என்று அறியாத அளவிற்கும்.... மீண்டும் செல்வோம் என்று.

ஆனாலும் எதை என்று உணராமலே பின் அங்கே சென்றான்.

ஆனால் அவ் மூலிகை அங்கே இருந்தது!!!

ஆனாலும் அவந்தனுக்கு புத்தி கெட்ட மனிதனுக்கு எப்படி?? இல்லாமல் போயிற்று???!!!!!! இப்போது எப்படி வந்தது என்றெல்லாம் தெரியவில்லை!!!!

ஆனாலும் குதித்தான்!!!!! பின் இங்கே இருக்கின்றதே!!! என்று எண்ணி!!!!

அதனால் நிச்சயம் பறிப்போம்!! ஆனாலும் அவந்தனுக்கு ஒரு யோசனை!!!! பின் இதனை பறிக்கும் பொழுது கூட ஆனாலும் இறைவனை நினைத்து தியானம் செய்து பறிப்போம்!! என்று கண்ணை மூடினான். தியானம் செய்தான்.

ஆனால் நிச்சயம் கண்ணை திறக்கும் பொழுது அவ் மூலிகையும் மறைந்து விட்டது.........

இதனால் அவந்தனுக்கு ஆச்சரியம்!!!!!!!

இங்குதான் இருந்தது!!!!!! எங்கு ??எதை??? எப்படி??? என்று கூட.      

ஆனாலும் அவந்தனுக்கு யோசனைகள் வரவில்லை.. நாம் எதற்காக??? பயன்படுத்துகின்றோம்!!! நல்லதிற்கா?? பயன்படுத்தின்றோம்!!! தீயவைகளுக்காக தான் பயன்படுத்துகிறோம்!!! என்று தெரியாமல் போய்விட்டது.

இதனால் மனம் வருந்தினான்!! எதை ஆனாலும் அங்கே கோரக்கன் இருந்து பலமாக ஒரு """""""""அடி அடித்தான்"""""!!!!!!!!!!...

இதனால் திரும்பிவந்து கீழே வந்து அவன் கைகளும் கால்களும் உடைந்தும் விட்டது!!!!

இப்பொழுது அழகாகவே இருக்கின்றான் கை கால்களை இழந்து அங்கேயே ஒருவன் இன்னும் கூட!!!!! அவந்தன் சதுரகிரி அடிவாரத்திலே... எதையென்று நினைக்காமல் பக்கத்திலே இருக்கின்றான்.

இவையெல்லாம் தேவையா????????!

அதனால்தான் உண்மையானவர்களுக்கு மட்டுமே மூலிகைகள் கிடைக்கும்!!! சொல்லிவிட்டேன்!!!!!

அவை அறிந்து !!!!இதை அறிந்து!!!!! ஏதாவது எதை எடுத்துக் கொண்டு வந்தாலும் நிச்சயம்.........

ஏனென்றால் மனிதன் அதை வைத்துக் கொண்டு பின் எதையெதையோ செய்து விடுவான்!! பல மனிதர்களை பல வழிகளிலும் கூட கர்மத்திற்கு இழுத்துச்செல்வான். 

ஏனென்றால் பல பல பல வழிகளிலும் வந்த சித்தர்கள் எதை என்று அறியாமலே பல மனிதர்கள் இக்கலியுகத்தில் இதைத்தான் செய்வார்கள்!!! என்பதைக் கூட யாங்கள் அறிந்து விட்டோம்.

அதனால் உண்மையான மனிதர்களுக்கே நிச்சயம் மூலிகைகள் கிடைக்கும்.

அவ் மூலிகைகளை எடுத்துக்கொண்டு பல நோய்களையும் குணப்படுத்த முடியும்.

அதை விட்டுவிட்டு எதைச் செய்தாலும் அப்படி செய் !!இப்படி செய் !!.....என்றாலும் நோய்கள் தாக்கும்!! இக்கலியுகத்தில் நிச்சயம் மாறாது!! மாறாது.!!

இதனால் ஏனென்றால் நோய்கள் இதையென்று எவற்றினின்று!!!!!
"" ஈசன் இட்ட கட்டளை"""" இதை இதை என்று கூட அதனால் சொல்கின்றேன்.

நிச்சயம் இவ் மலையில் ஓர் மூலிகை உண்டு!!!!

யான் சொல்லிவிட்டேன். அதை நிச்சயம் ஏதும் அறியாமல் பின் அனுமானே!!!!!!

யான் உன் குழந்தையாகவே இருக்கின்றேன்!!!!!

எந்தனுக்கு ஏதும் தேவையில்லை!!! என்று என்ற பொழுது தான் அவ் மூலிகையும் கிடைக்கும்.

ஆனாலும் அனுமான் யோசிப்பான்!!!!!!

இவந்தன் .....இவ்மூலிகை கிடைத்து விட்டாலும் மாறிவிடுவானா? என்ன!!!! என்று கூட ......

அதனால் யோசித்து தான் அவ் மூலிகையையும் எடுக்க முடியும்.

பல எதனையென்று அவ் மூலிகையை உணர்ந்தாலே போதுமானது!!!! நம்தனக்கு எவ் நோயும் வராது!!!!!

அவை மட்டும் இல்லாமல் சில கர்மாக்கள் போய்க் கொண்டே இருக்கும்.

அதுதான் இங்கே தங்கி வழிபட வேண்டும் என்பதை கூட கட்டளையாக உள்ளது!!!!!!

இப்படி பின் அனுமான் இருக்கும்(அனுமான் மலைக்கோயில்கள்)  இடத்திற்கெல்லாம் சென்று வழிபட்டு தங்கி!! தங்கி!! வந்தால் அவன் கர்மா சிறிது சிறிதாக மாறும்!!!!

அவை மட்டும் இல்லாமல் பெருமாளும்(ஏழுமலையான்) நிச்சயமாய் இவ்மலைக்கு வந்து ஸ்ரீதேவி பூதேவி இதையென்று அறிந்து இங்கே நிச்சயம் புரட்டாசி மாதத்தில் நிச்சயம் பின் நான்கு சனி(கிழமைகள்) வாரங்களும் நிச்சயமாய் அதாவது ஒரு மணி நேரம் இங்கு அமர்ந்திட்டு செல்வான்!!!!!

அப்பொழுது நிச்சயம் ஏதாவது மனித ரூபத்திலே வருவான்!!!! நிச்சயம்!!!! நிச்சயம்!!!! பெருமாள் என்பேன்.

இதனை அறிந்து!! நிச்சயம் பயன்படுத்திக் கொள்க!!!!!!

கலியுகத்தில் உண்மையான பக்தர்களும் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்!!! அவர்களுக்காவது என் வாக்கை நிச்சயம் எடுத்துக்கொண்டே செல்வேன்!!!!

ஏனென்றால் நிச்சயம் மாறும்!! அவர்கள் நிலைமை மாற வேண்டும் இயலாதவர்கள் நிலைகளும் மாற வேண்டும் என்பதே சித்தர்கள்!!!! இதை காலம் காலமாகவே மனிதர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றோம்!! வருகின்றோம்.!!

நல் மக்களை காக்க வேண்டும் என்று கூட!!!!

அதனால் நிச்சயம் அழிவு காலம் வந்து கொண்டே தான் இருக்கின்றது!!! அதனால் நிச்சயம் எதை என்று உணராத அளவிற்கும் கூட யாங்கள் திருத்தலங்களை நிச்சயம் மகிழ்வாகவே!!!!!!!

ஆனாலும் இதை என்று கூட நிச்சயம் இறை பலங்கள் கூடிக் கொண்டே இருக்கின்றது!!! ஒவ்வொரு திருத்தலத்திலும் நிச்சயம் இப்படி இறைபலங்கள் கூடிக்கொண்டே சென்றால் நிச்சயம் அதை எதிர்க்கும் சக்திகள் அவர்கள் அடியோடு கீழே வந்து விடுவார்கள்!!!! இதுதான் மெய்யப்பனே!!!! 

இதனால் நிச்சயம் வரும்!! வரும்!! காலங்களில் அதாவது கலியுகத்தில் அநியாயங்கள் அக்கிரமங்கள் பெருகுகின்ற பொழுது அனுமான் அதை அழித்து விடுவான்!!! என்பதை கூட மறைமுகமாகவே இப்பொழுது கூட சீதா தேவியிடம் சொல்லிக்கொண்டே இருக்கின்றான்!!!!

தாயே!!!!! தாயே!!!!!! இப்படியெல்லாம் அநியாயம் அக்கிரமங்கள் நடக்கின்றதே!!!! 

யான் அதையும் பார்த்து அமைதியாக இருக்கின்றேனே!!!! என்று கூட!!!......

ஆனால் சீதா தேவியும்!!!!

மகனே!!!! எதையென்று என்னிடம் அதிக அளவு பாசத்தையும் காட்டி விட்டாய்!!!! அதனால் நிச்சயமாய் பொறுத்திரு!!!!

ஆனால் விடிவு காலம் எவை என்று உணராமலே வரும்!!!! அப்பொழுது உன் ஆட்டத்தை காட்டு!!! காட்டு!!! என்றெல்லாம் கூறிக் கொண்டே இருக்கின்றாள்.

நிச்சயம் அனுமான் தன் ஆட்டத்தை காட்டத் தொடங்கினால்....... யாரும் நிச்சயம் தலை எழும்பவும் முடியாது!!!! என்பேன்.

இதனை நிச்சயம் வரும் காலங்களில் நீங்கள் பார்க்கலாம்!!!!

அதனால்தான் எதை எதை என்று உணர்ந்து !!உணர்ந்து!! உணர்ந்து!! பாடுபட்ட அளவு !!அளவு!! நிச்சயமாய் இவையென்று கூட இப்பொழுதும் கூட இங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான் அனுமான் கூட!!!!!

ஆனாலும் இதையென்று அறியாத அளவிற்கும் கூட ஓர் முறை!! ஓர்முறை !!எதை என்று ஆனாலும்..... ஒரு சமயம்  பிரம்ம தேவனுக்கே மூலிகைகள் தேவைப்பட்டது.

இதையென்று அறிந்த ஆனால் இவ் மூலிகை இங்கேதான் இருக்கும் !!!என்பதை கூட பிரம்மதேவன்!!! இதனால் எதை என்றும் அறியாத உணர்ந்து!! உணர்ந்து!! ஆனால் யோசித்தான்.

பின் அனுமானை இங்கே வர வைக்கலாமா??? வரவைத்து விடலாமா?? பின் நாம் அங்கு செல்லலாமா??? என்ற நிபந்தனைக்கு பிரம்ம தேவனுக்கும்.

ஆனாலும் யாம் அங்கு செல்வோம்!!! என்று கூறி அதனால் இங்கே வந்துவிட்டு அவ் மூலிகையை எடுத்து எடுத்து கொண்டு ஆனாலும்

அனுமானும்!!!!..........
 
பிரம்ம தேவனே! நில்!!!! எதற்காக !?எதற்காக!? என்று கூற

இல்லை!! இல்லை !!அனுமானே!!!! 

!யான் நினைத்திருந்தால் என்னிடத்திலே இவ்மூலிகை வந்திருக்கும். ஆனாலும் நீ மக்களை காப்பதற்காகவே பல போராட்டங்கள் பட்டுப்பட்டு """"" சிரஞ்சீவி""""" ஆகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றாய் !!!! அதனால் உன்னையே யான் கவலைக்கிட செய்ய வேண்டும் என்று யானே வந்து விட்டேன் என்று கூற !!!

ஆனாலும் அனுமானும்!!!!........

பிரம்மதேவனே!!!!!! என் அனுமதி இல்லாமல் நீ எப்படி?? மூலிகையை பறிக்கலாம்???? என்று கூற

அதனால் பிரம்ம தேவனும் !!!பின் பின் அனுமானே!!!! மன்னித்து விடுங்கள்!!!!
எதற்காக ?என்று கூட.... நிச்சயம் அனுமதி இல்லாமல் பறித்தது என் தவறு தான்!!!! என்று பிரம்மதேவன் பின் மன்னிப்பு கேட்டறிந்தான்!!! அனுமானிடம்.!!!

ஆனாலும் அனுமானும்..........

இல்லை !!!இல்லை!!! இல்லை !!இல்லை!!!
பிரம்ம தேவரே!!!! இப்படி மன்னிப்பு கேட்கக் கூடாது!!!

ஆனாலும் மூலிகை ஒன்றை பறித்துக் கொண்டாய்!!! அதற்கு பதிலாக நீ ஒன்று எந்தனுக்கு செய்ய வேண்டும் என்று கூற!!

ஆனால் நிச்சயம் பிரம்மனும் யான் செய்கின்றேன் அனுமானே!!!!!

என்ன ??இவ்வுலகத்தில் உந்தனுக்கு என்ன வேண்டும்??? என்று கூற... 

ஆனாலும் அனுமானும் நிச்சயம் இங்கு வந்து செல்பவர்களுக்கு நிச்சயம் விதியினை நீ மாற்ற வேண்டும்!!! அதாவது பல கஷ்டங்கள்! துன்பங்கள்! துயரங்கள் படுபவர்களையும் கூட இயலாதவர்கள் அதாவது பின்  நோய்நொடிகள் உள்ளவர்களையும் கூட அதாவது பின் பணத்திற்காகவே பின் எவை என்று கூட உணவிற்காகவே கஷ்டப்படுபவர்கள் இங்கு வந்தார்களென்றால் நிச்சயம் நீ சிறிதளவாவது அவ் விதியை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூற......

அதனால் நிச்சயம் பின் பிரம்மாவும்........ எப்படி? முடியும்? இவையெல்லாம்??!!!!!
எப்படி முடியும் என்று அனுமானிடம் கேட்டறிந்த பொழுது

ஆனாலும் அனுமானும்!!!! நிச்சயம் பிரம்ம தேவனே!!! நிச்சயம் உன்னால் முடியும்!!! நல்லோர்கள்!!! ஆனால் நல்லோர்கள்!! உயர்ந்த பக்தி உடையவர்கள்!! திருந்தியவர்கள் தான் இங்கு வந்தடைய முடியும் அதனால் அவர்களுக்காவது நீங்கள் நிச்சயம் நல்லதை செய்யுங்கள் என்று கூட கேட்டு!!!!!

மன்னிப்பு !!!  எதையென்று பிரம்ம தேவனே!!! உன் காலடியில் கூட யான் விழுகின்றேன்!!! இதனை நீ நிச்சயம் செய்ய வேண்டும் என்று கூறி!!!!!
பின் அனுமான்!!!!!

இதனால் பின் பிரம்மதேவனும் நிச்சயமாய் யான் செய்கின்றேன்!! நல்லோர்களுக்கு செய்கின்றேன்.!!! அதை மீறி தீயவர்கள் வந்தால் அவர்களுக்கு விதியில் கடுமையாகவே செய்யச் செய்வேன் சொல்லிவிட்டேன் என்று!!!!

ஆனால் நிச்சயம் இதை அறிந்து அனுமானும் நிச்சயம் நல்லோர்கள் தான் வருவார்கள் . யான் நல்லோர்களையே வரவழைக்கின்றேன் இவர்களுக்காவது விதியை மாற்றும் மாற்று நிச்சயம் என்று கூறி!!!!!

இதனால் நிச்சயம் இங்கு வருபவர்களுக்கு கூட விதியின் பாதையை சற்று குறைப்பான் பிரம்மதேவன்.

இதனால் நிச்சயம் தன் குறிக்கோளோடு வாழலாம் இதுதான் இதனை அறிந்து அறிந்து செயல்பட்டு!!!! ஆனாலும் இன்னும் சித்தர்கள் ரகசியமாகவே வந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். 

யானும்(அகத்தியர்)  வந்து வந்து தான் சென்று கொண்டிருக்கின்றேன்.

எவை என்று இதனால் கருவூரானும் (கருவூர் சித்தர்) அடிக்கடி இங்கே வருவான் வருவான் என்பதைக் கூட!!!

அதனால் புசுண்ட(காகபுஜண்டர்)  முனியும் இங்கு வந்து!!!!!அவைமட்டுமில்லாமல் வசிஷ்டனுக்கும்(வசிஷ்ட மகரிஷி) இது ஒரு பிடித்தமான ஸ்தலம்.எவை ஆனால் வசிஷ்ட முனிவரும் ராமன் மீது பக்தி  எதையென்று அறியாத உண்மை எதையென்று கூற பின் அவ்வளவு மதிப்பு!!!! இதனால் நிச்சயம் எதை என்று ஒரு !!உணராமலே ஒரு முறை பின் வசிஷ்டனும் இங்கே வந்து வந்து உறங்குகின்ற பொழுது நிச்சயம் இதனால் வசிஷ்டமகரிஷிக்கு சில எவை என்று கூட தலைசுற்றி தலை சுற்றி அடிக்கடி மயக்கம் !!!இதனால் நிச்சயம் அறிந்து கொண்டான்.

ஆனாலும் பின் வசிஷ்டனும் தன்னால் அனைத்தும் முடியும். அவந்தனுக்கே அனைத்தும் தெரியும் இருந்தபோதிலும் ஆனாலும் இதையென்று ஆனால் தன் மகன் அனுமானே!!! இதை தீர்க்க வேண்டும் என்று எண்ணினான்.

இதனால் நிச்சயம் இங்கே தங்கி இதனால் ஒரு முறை அனுமானும் இதை நன்றாக புரிந்து கொண்டான்.

இதனால் நிச்சயம் பின் வசிஷ்டன் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது அனுமான் தன் மடியில் தலையை எதை என்று உணராமலே வசிஷ்டன் தலையை வைத்து தடவினான்.

ஆனாலும் மறுநாளே எவை என்று ஆனாலும் வசிஷ்டனை மயக்க நிலைக்கு ஆக்கினான்.

ஆனால் நிச்சயம் பின் எழுந்தான் மறுநாள் வசிஷ்டன் !!!!!

அதனால் அவந்தனுக்கு மகிழ்ச்சி. ஆனால் புரிந்து கொண்டான் வந்திருப்பது நிச்சயமாய் அனுமானே!!!என்று!!!! 

இப்படி புரிந்து கொண்டு இதை அறிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றானே!!!! என்று ஆசிகள் !!!!.........

இதனால் சொல்கின்றேன் அன்போடு!!! பாசத்தோடு!!! வந்தால் நிச்சயம் அனுமானே!!! தன் மடியில் நிச்சயம் எவை என்று கூட மனிதனை உறங்கவும் வைப்பான்!!! இன்றளவும் அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. பல மனிதர்களும் அதை உணர்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். உணர்ந்து சென்று கொண்டு தான் இருக்கின்றார்கள்!!!!

அதை விட்டுவிட்டு சில தரித்திர மனிதர்கள் இங்கு வந்தாலும் நிச்சயம் வேரோடு அழித்து விடுவான் அனுமானே!!!!!!

பல மனிதர்களை அப்படி அழித்தும் விடுகின்றான்!!! வாழவும் வைத்துக் கொண்டிருக்கின்றான்!!!

இனி வரும் காலங்களில் வாழ வைக்கத்தான் போகின்றான்!!!! சொல்லிவிட்டேன்!!!

இதனை அறிந்து அறிந்து இன்னும் ஏராளமான சூட்சுமங்களும் உண்டு!! உண்டு!! அதனால் இத்தன்மையை இன்னும் எவற்றில் இருந்து கூட.......அவ் மூலிகையானது.... அதாவது சிந்தியது இங்கிருந்து ஓர் அரை!!!!எதை?! சொல்லும் பொழுது அரை மீட்டர்!!! இதை வகுத்து கூட்டலாக்கி பின் வந்தால் என்னவென்று நான் கூறுவது??????

அதை யான் நிச்சயம் சொல்லிவிட்டாலும் மனிதன் அற்ப சுகத்திற்காகவே அலைந்து திரிந்து அதையும் பறித்து விடுவான்.

அதனால் இதையென்று அறியாமலே இங்கு சிறிது தொலைவிலேயே இருக்கின்றது அவ் மூலிகை!!!!!

ஆனால் நிச்சயம் அது நல்லோர்கள் கண்களுக்கு மட்டுமே தெரியும்!!!!

இதனை யான் குறிப்பிட்டிருந்தேன்!!!!!!

சதுரகிரியிலே எப்படி பறித்தான் என்பதை கூட ஒரு முட்டாள் மனிதன் அப்படித்தான் இருக்கின்றது!!!!!!

அதனால் இங்கே நிச்சயம் படுத்து உறங்குபவர்கள் நிச்சயம் அவ் மூலிகையின் வாசனை!!!!! ஆனால் உறங்கும் பொழுது பின் அவ் மூலிகை வாசனை வரும்!!!!

இதனால் சில சில நோய்கள் நீங்கும் நிச்சயமாய் மறையும் என்பதே உண்மை!!!!!!

இதை உண்மையானவர்கள் எதையென்று கூற ஒரு உயிரை கொல்லாமல் இருத்தல் வேண்டும்!!!!!

அனுமானின் தரிசனம் எப்போது கிடைக்கும் என்றால் ஒரு உயிருக்கு கூட நிச்சயம் தீங்கு செய்திருக்கக் கூடாது செய்யக்கூடாது என்பதே நிச்சயம்!!!!

அப்படி தீங்கு செய்யாமல் இருந்தால் அனுமான் நிச்சயம் அனைத்தும் கொடுப்பான்!!!!

"""""அனுமான் கொடுத்தால் எதை என்று கூட அனைத்தும் கொடுப்பான்!!!!!

இதற்கு  அனுமான் என்பது சனி பகவான் என்று எடுத்துக் கொள்ளலாம்!!!!!!

இதையறிந்து கூட அதனால் நிச்சயம் எதை என்று கூற நீதி தவறாமல் வாழ்ந்து வந்தாலே போதுமானது!!!!

அனுமானும் சுற்றி சுற்றி அங்கும் இங்கும் வந்து வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றான்!!!!

இன்னும் ஏராளம் ஏராளம் செய்திகளும் காத்துக் கொண்டிருக்கின்றது!!!!!!

ஒவ்வொரு திருத்தலத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு!!!!

சிறப்பு இல்லாமல் இல்லையப்பா!!!!

இதனால் எதை என்று உணரும் அளவிற்கு கூட ஆனால் இன்றளவோ எங்கெங்கோ? மனிதர்கள் திருத்தலம் அமைத்து விடுகின்றார்கள்.

ஆனால் முன்பெல்லாம் எதை என்று அறியாத பின் உண்மையான தெய்வங்கள்......... பின் குடியிருக்கும் இடத்திலே நிச்சயம் அங்கே தானாகவே பின் எழுந்து(சுயம்பு)  விடுவார்கள்!!!! இப்பொழுது கூட!!!.........

எதையென்று கூற அவர்களுக்கு உடம்பு எங்கு வேண்டுமானாலும் இட்டு செல்லலாம்........

 """"""இது பாம்பின் கால் பாம்பறியும் ""என்பதை கூட!!!!

பாம்பினுடைய சட்டையை பார்த்தால் அங்கே விட்டுவிடும்........ இதுதானப்பனே!!!! 

எங்கு எதையென்று கூற மக்களைக் காப்பதற்கே அங்கங்கே!!! எதை என்று கூட சக்திகள் விட்டு செல்வான் இறைவன்!!!! அங்கேதான் அழகாகவே!!!!!

அதனால்தான் இன்னமும் கூட நிச்சயம் சித்தர்கள் வந்து வந்து யாங்கள் அதாவது சித்திரை மாதத்தில் நிச்சயம் இங்கே வந்து பல சித்தர்கள் படுத்து உறங்குவார்கள்!!!! என்பேன் அப்பனே!!!!

அது மட்டும் இல்லாமல் வைகாசி தன்னில் முருகனும் இங்கே வந்து வந்து வந்து சென்று கொண்டு நல்விதமாகவே எதை என்றும் உணராத அளவிற்கு கூட!!!!!

இன்னும் மயில் வாகனத்தில் பின் முருகன் பின் சுற்றும் பொழுது இங்கே மூலிகை எவை என்று கூட படர்ந்து இருந்தது!!!!

அழகாகவே முருகனை நோக்கி வணங்கியது!!!!!

அதாவது கீழே பார்த்தான் முருகன்!!!! இது எவ்வாறு என்பதையும் கூட ஆச்சரியம்!!!!!!

இவ்வாறு நம்தனையும் வணங்குகின்றதே!!!!!!!!
என்று முருகன் கூறி பின் கீழே இறங்கினான்!!!!

ஆனால் அவ் மூலிகையோ!!! பின் என்னை பறித்துக் கொள்! முருகா!!!!!! முருகா!! என்னை பறித்துக் கொள் முருகா!!!!! உன்னடியில் வைத்துக்கொள்!!! முருகா!!!! என்றெல்லாம் சொல்லியது!!

ஆனாலும் எதை என்பதை எப்படி அறிந்து அதனால் நிச்சயம் இவை தன்னில் ஆனால் பின் மூலிகையிடம் பின் முருகனும் விசாரித்தான்!!!!!

எதற்காக ? என்று கூட!!!!!

அவ் மூலிகையும்!!!...... என்னை பயன்படுத்தினால் மனிதனுக்கு வயது என்பதே ஆகாது!!!!!

அவை மட்டும் இல்லாமல் எவ் நோய் நொடிகளும் வராது!!!!!

இதனால் நிச்சயம் ஆனாலும் நிச்சயம் என்னை பறித்துக் கொள் முருகா என்று!!!!!

ஆனாலும் முருகனோ!!!!!! 

அப்படியே ஆகட்டும்!! நிச்சயம் என் பக்தர்களும் நிச்சயம் இருக்கின்றார்கள்!!!!!
அதனால் நிச்சயம் அவர்களுக்கும் உண்மையான பக்தி உள்ளவர்களுக்கும் நிச்சயமாய் யான் சுற்றிக்கொண்டே தான் இருக்கின்றேன்... அதனால் அவர்களையும் கூட உண்மையான ஞானத்தையும் பக்தியையும் என் மேல் அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பவர்களுக்கு நிச்சயம் உன்னிடம் யான் அனுப்புவேன் என்று!!!

ஆனால் மூலிகையோ சொன்னது!!!!

முருகா!!!!....... அப்படிப்பட்டவர்களை கலியுகத்தில் நீ நம்புகின்றாயா??? என்று!!!!!

நிச்சயம் முருகனும் கூட நம்பிக் கொண்டே தான் இருக்கின்றேன்!!! நம்பித்தான் ஆக வேண்டும் என்று!!!!!

எதை என்று அதனால் அவ் மூலிகைக்கும் பேசும் திறன் அதிகம்!!!! இவ் மலையில் கூட உள்ளது.

ஆனால் எதையென்று கூட ஆனாலும் இவை சொல் !!திறமை!! ஆனாலும் மூலிகைக்கும் பேசும் திறமை உண்டா???? என்றால் நிச்சயம் உண்டு!!!!!

எதையென்று கூட சில மூலிகைகளுக்கு அவ் பேசும் திறமை ,அவ் பேசும் திறமை கொண்ட மூலிகைகள்!!! மனிதனின் நிலைமையையே மாற்றும் சக்திகள் கொண்டவை!!!!

அவை வந்து விட்டால்!! உடம்பில் நுழைந்து விட்டால்!! என்னென்ன?? செய்யும் என்பதை கூட யான் அறிவேன்!!!! 

அதனால் பல சூட்சும அதாவது ரகசியங்கள் காத்துக் கொண்டே இருக்கின்றது!!!!

நிச்சயம் இவை நல்லோர்களுக்கு போய் சேரும்!!!!!!

இன்னும் எவை என்று உணராமலே பக்திமான்கள் கூட இருக்கின்றார்கள் இவ்வுலகத்தில்!!!!!

அவர்களுக்காவது நிச்சயம் செல்ல!! செல்ல!! நன்முறைகளாக்கி அவர்கள் பிள்ளைகளுக்கும் நன்முறைகளாக்கி நிச்சயம் விடிவெள்ளி ஆகும் என்பேன்!!!!!

இதனால் நிச்சயம் வரும் வரும் காலங்களில் பல வகைப்பட்ட மூலிகைகள்!! ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன்!!!!

எங்கள் அருள்கள் இல்லாமல் எவ் மூலிகையை பயன்படுத்தினாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை சொல்லிவிட்டேன்!!!!!!

இதையும் அறிந்து அறிந்து யானும் போகனிடம்(போகர் சித்தர்) சென்றேன்!!!!
பின் கேட்டேன்!!!! 

மனிதர்களுக்கு மந்திரத்தை உபதேசிக்கலாமா!???? என்று!!!!

போகன்!!!!!...... அகத்திய மாமுனிவரே!!!!! நிச்சயம் வேண்டாம்!!!!வேண்டாம்!!!!! 

மனிதன் மூலிகைகளை பயன்படுத்திக் கொண்டு எதை எதையோ செய்து விடுவான்!!! அவன் தான் சித்தன் என்று கூட சொல்லி விடுவான்!!! அதனால் நிச்சயம் நல் உயர்ந்த மனிதர்களுக்கே யாமே!! சென்று அவர்களை நல்முறையாக்குவோம் என்று போகனும் கூறிவிட்டான்!!!!!

இதனால் நிச்சயம் சொல்கின்றேன்!!!!

எவ் மருந்தும் தன் எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் குரு மந்திரம் இல்லாமல் உண்டாலும் அது வீண் என்பேன்!!!!!

எதையென்று அறிந்து அறிந்து இதனால் அவை சரி செய்யப்படும்!!!(நோய்)  ஆனால் திரும்பவும் வந்துவிடும் இதுதான் அப்பனே!!!!

ஆனாலும் எத்தனை???? எத்தனை??? பிறவிகளடா!!!!!!  மனிதனுக்கு!!!!!!......... என்பதைக் கூட பின் எவை அறிந்து கூட .........

புசுண்ட முனியும் கூட!!!!!
பின் இப்படியெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றானே !!!மனிதன்!!!!!!!
மனிதனுக்கு என்ன தான் அறிவுகள் இல்லையா??? என்றெல்லாம் புலம்பி கொண்டிருக்கின்றான்!!!!!!

அதனால் நிச்சயம் அவந்தனும் சில மனிதர்களை ஆட்டத்தான் ஏற்படுத்தி ஆனால் அவந்தனே... எதை என்று அறியாமலே வந்து கொண்டே இருப்பான் இன்னும்!! இன்னும்!!! 

இதனால் அப்பனே!!!!!

அப்பன்களே!!!!!!!!! 

எவை என்று கூற அதனால் நல்வழிப்படுத்தி நன்றாக நீங்கள் வாழ்ந்தால் உங்களைத் தேடி அனைத்தும் வரும்!!!! உங்களை தேடி யாங்களே வரவழைப்போம்!!!!

அவை மீறி நீங்கள் செயல்பட்டால் உங்களிடம் எவை எவை இருக்கின்றதோ?!!! அவையெல்லாம் எடுத்து விடுவோம் சொல்லிவிட்டோம்!!!!! இதுதான் உண்மை!!!!!

நீ எதற்கு? வாழ்கின்றாய்?? என்பதைக் கூட நினைத்து வாழுங்கள்!!!!!

நீ அடுத்தவருக்காக எப்போது வாழ்கின்றாயோ?? அப்போது உந்தனுக்கு எவை என்று கூறாமலே அனைத்தும் யாங்கள் சித்தர்கள் கொடுப்போம்!!!!

அவை இல்லாவிட்டாலும் எதை என்று மீறி .....தான் மட்டும் தன் இனத்தை பெருக்க வேண்டும் என்று நீ நினைத்தால் நிச்சயம் உன் இனத்திற்கே நிச்சயம் அழிவு என்பது தெரிந்து கொள்!!!!

அதனால் நிச்சயம் மற்றவர்களுக்காக நல்லதை செய்யாவிடிலும் அதாவது முடியாவிடிலும் என்னால் செய்ய முடியவில்லையே!!!!!!!! என்று ஏங்குபவர்களுக்கும் யாங்கள் உதவிகள் செய்வோம்!!!! இதுதான் எதையென்று சித்தர்கள் எங்கள்  கருணை!!!!

யாங்கள் இப்பொழுதும் கூட உலாவிக் கொண்டே இருக்கின்றோம் அங்கங்கே!!!!! 

இதனால் நிச்சயம் வரும் காலங்களில் அழிவு!!! அழிவு!!! என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்!!!

அதை நிச்சயம் மனிதனை !!பின் மனிதனை!! மேன்மையாக்க வேண்டும்!! அழிவு! அழிவு! என்பதை கூட மனிதன் தெரிந்து கொண்டு இவ்வுலகத்தில் ஏதுமில்லை அனைத்திற்கும் காரணம் இறைவனே!!!! என்று எப்பொழுது ஒருவன் உணர்கின்றானோ!!!!! அவந்தன் நிச்சயம் அவன் வாழ்க்கை மாறும்!!!!

அதனால் எதையெதையோ செய்து செய்து எங்கெங்கோ நம்பி!! நம்பி !! வீணாகப் போய்க் கொண்டிருக்கின்றான் மனிதன்!!!

அதனால் எதை என்று உணராமலே!!!! ஆனால் இங்கு ஒருவன் வந்து கொண்டிருந்தான்!!!

ஆனால் அவந்தனுக்கு இறைவன் மீது நாட்டம் இல்லை!!! இறைவன் மீதே நாட்டம் இல்லை!!!

எதையென்று அதனால் அவந்தனுக்கு உற்றார் உறவினர் யாரும் இல்லை!!!

சரி!!!!!!! இங்கே வருவோம்!!! ஏதாவது நிச்சயம் எதை என்று அறிந்து இங்கேதான் அவந்தனுக்கு இடம்.(கோயில் வளாகத்தில் ) 

பின் இங்கே வந்து படுத்தால் நன்றாக உறங்குவான். உறங்கி உறங்கி செல்வான்!!!

இதனால் கஷ்டங்கள் பட்டு பட்டு ஆனாலும் இதனை பார்த்து கொண்டே இருந்தான் அனுமானும்!!!!

இவந்தனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே!!!!
ஆனால் இவந்தன் மனது தூய்மையானது!!!!!

பின் பகலெல்லாம் கஷ்டங்கள் பட்டு இரவில் வந்து பின் அழகாகவே உறங்குவான்!!!!

இவந்தனுக்கு எண்ணங்கள்(ஆசைகள்) எவையுமே இல்லை!!!!!

இதுதான் ஆனால் எப்படியாவது உயர்த்திட வேண்டும் என்று கூட அனுமானும் எதை என்று உணராமலே திடீரென்று பின் அவந்தன் போகும் வழியிலே ஓர் தங்கத்தை இட்டான் !!!!

ஆனாலும் அவ்மனிதன் அதனை பார்த்தான்!!! இது என்ன???
தங்கமாகவே இருக்கின்றதே!!!!!!  எடுத்துக் கொள்வோம் என்று கூட!!!!

ஆனாலும் அவந்தன் அத் தங்கத்தை சாதாரணமாகவே பார்த்து நிச்சயம் பின்பு எடுத்துச் சென்று நம்தனுக்கு எவை என்று இதனால் பகலெல்லாம் கஷ்டங்கள் பட்டு இரவில் இங்கு வந்து தங்கினான்.

ஆனால் நிச்சயம் தங்கம் கிடைத்துவிட்டது அவந்தனுக்கு..... இதனால் அதை வைத்து அவன் என்ன செய்ய வேண்டும்?? என்று யோசிக்கவில்லை!!!!

இதனால் இத் தங்கம் பின் """""அனுமானுக்கே உரித்ததாகும்!!!!!!!!...... என்று கூட அனுமானிடத்திலே இங்கே வைத்து விட்டான்!!!!

ஆனால் அனுமானும் மகிழ்ந்தான்!!!!!!

இவந்தன் இப்படிப்பட்டவனா!!!!! என்று கூட!!!!!..........

அவந்தனை மென்மேலும் உயர்த்தத் தொடங்கினான் அனுமான்!!!! அவனும் உயர்ந்தான்!! அதனால் உயர்ந்து உயர்ந்து பல மனிதர்களுக்கு உதவிகள் செய்ய ஆரம்பித்தான்!!!!

பல இல்லங்களை அமைத்தான்!! பல வழிகளிலும் கூட பல சொத்துகளை குவித்தான்!!!

ஆனால் அனைத்தையும் பின் தான தர்மங்களாகவே இட்டிட்டு,இட்டுவிட்டு பின் கடைசியில் நிச்சயமாய் திரும்பவும் இங்கே வந்து தங்கினான்!!!!!

இதனால் நிச்சயம் எதை என்று கூட அனுமான் பின் காட்சிகள்!!! தன் தரிசனம் காட்டினான்!!!!! யான் தானப்பா!!!! அனுமான் என்று கூட!!!!!! 

மனம் மகிழ்ந்தான்!!!! மனம் மகிழ்ந்தான்!!!!!!

அனுமானே!!!! பின் இவ்வாறு யான் ஏழையாக இருக்கும் பொழுது கூட ஆனாலும் உன்னை பற்றி சிந்திக்கவில்லை!!!!

ஆனாலும் பன்மடங்கு என்னை உயர்த்தி விட்டாய்!!!!

ஆனால் எந்தனுக்கு இதுதான் நிம்மதி!!! என்று கூட இங்கே வந்தேன்!!!! அதனால் நிச்சயம் எந்தனுக்கு பிறப்புக்களே தேவையில்லை!!! தேவையில்லை!!! உன்னிடமே இருக்கின்றேன் என்று கூற!!!!! 

அதனால் அனுமானும்!!!! 

நிச்சயம் உந்தனுக்கு கூட பிறப்புக்கள் இருக்கின்றன!!!

உன்னை போன்ற ஆட்கள் இவ்வுலகத்திற்கு தேவை!!! என்று கூற!!!! 

அதனால் நிச்சயம் உந்தனுக்கு பிறப்பு கொடுப்பேன் என்று கூட!!!!!

இப்பிறப்பிலும் அவந்தனை எதை என்று கூற நிச்சயம் பிறப்பில் தள்ளிவிட்டான் அனுமான்!!!!

அதனால் அவந்தனும் பெரும் அனுமான் பக்தனாகவே இருந்து இன்னும் ஏராளமான உதவிகளும் செய்து கொண்டு தான் இருக்கின்றான் இன்னும் கூட!!!!!!!

நிச்சயம் இவ்வாக்கும் அவனையே போய் சாரும்!!!! அவந்தனிடத்தில் போய் சேரும்!!!!! சொல்லிவிட்டேன்!!!

எதை என்று அறியாத அளவிற்கும் கூட அவந்தனே புரிந்து கொள்வான்!!!! என்பேன்!!! 

எதை எதை என்று அறிந்து இன்னும் பக்தர்கள் எதை என்று அறியாமலே சுற்றி அலைந்து திரிந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

அதனால் என்னுடைய வாக்கு நல்லோர்களுக்கு எங்கிருந்தாலும் வந்து சார்ந்துவிடும்!!!!  போய் சேர்ந்துவிடும் !!!!சொல்லி விட்டேன்!!!

இதையென்று அறிந்து இன்னும் """"""""முருக பக்தர்களுக்கும் கூட!!!!!!!!!!
யான் உரைக்கின்றேன்!!!! =

அவன் நாமத்தைச் சொல்லி!!!!!! இங்கிருந்தே உரைக்கின்றேன்!!!!!!!

அவ் வாக்கு அவனைப்போய்ச் சேரும்!!!!

வரும் வரும் காலங்களில் சித்தர்கள் இதைத்தான் யாங்கள் செப்பபோகின்றோம் !!!!! ஏனென்றால்? எதை என்று அறியாத அளவிற்கு கூட அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது !!இதனால் அழிவுகளை தடுக்க வேண்டும்!!!

ஆனால் இவையெல்லாம் நல்லோர்களை காக்க வேண்டும்!! உண்மையான பக்தியுள்ளவர்களை கூட உயர்த்த வேண்டும் !!!என்பதே எங்களுடைய சித்தர்களுடைய எண்ணம்!!!!!

இதனால் நிச்சயம் உண்மையான பக்தி உங்களுக்கு இருந்தால்?? இறைவனே உங்களிடத்தில் இறங்கி வந்து அனைத்தையும் செய்வான்!!!

அப்படி இல்லையென்றாலும் வீணே!!!!!!

யான்!!! பல மனிதர்களை பார்த்து விட்டேன்!!!!!! யுக யுகங்களாக!!!!!!!

இறைவா!!! இறைவா!!!! என்றெல்லாம் எதற்காக??? வணங்குகின்றானென்றால்????? ஏதோ!!!! அவன் சுயநலத்திற்காகவே வணங்குகின்றான்!!!!

அப்படிப்பட்டவனுக்கு நிச்சயம் இறைவன் ஏதும் செய்ய மாட்டான்!!!!! என்பதையும் கூட பல வழிகளிலும் கூட இப்பொழுது கூட உரைத்து விட்டேன்!!!!

இதனால் நிச்சயம் எவை என்று அறிந்து செயல்பட்டால்!!!!"""" பெருமாள் இங்கே அடிக்கடி வந்து சென்று கொண்டே இருப்பான்!!!

இதனால் """""""""மூலிகை ஸ்தலம்!!!!!!!! 

எவையென்று கூற!!!!...

யான்!!! இதனை"" மூலிகை ஸ்தலம் !!!!!!! என்றே குறிப்பிடுவேன்!!!!!

ஏனென்றால் அவ்வளவு சிறப்புக்கள் வாய்ந்தவை!!!!

இங்கே தங்கிச்சென்றால் சில சில வியாதிகள் அகன்று போகும்!!!!!

ஆனால் உண்மை!!! நேர்மை!!! நீதி!!!! உன்னிடத்தில் இருக்க வேண்டும்!!!!!
அதற்கு தகுந்தார் போல் இருந்தால்!!!! நிச்சயம் அனுமான் அனைத்தையும் கொடுப்பான்!!!!!

ஏன்??? சனி தேவனும் இங்கே வந்து தங்கிச்செல்வான்!!! எப்பொழுது எதை எதை என்று அறிந்து!!!!!

அதனால் நிச்சயம் இங்கே வந்து தங்குபவர்களை கூட சனியவன் கவனித்துக் கொண்டே இருப்பான்!!! நலமாகவே அனைத்தையும் பூர்த்தி செய்து விடுவான்!!!!!

அதனால் கவலைகள் இல்லை!!! இன்னும் சிறப்புக்கள் ஏராளம்!!! ஏராளம்!!!

இன்னும் சொல்கின்றேன்!!!! இன்னும் சித்தர்களும் ஏராளமான செய்திகளையும் செப்புவார்கள்!!!! செப்புவார்கள்!!!

மீண்டும் வாக்கில் செப்புகின்றேன் ஒரு விரிவான வாக்கினை கூட!!!!.........

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

சஞ்சீவிராயன் மலைக்கோயில். 
சஞ்சீவிராயபுரம்.
தித்தியோப்பன ஹள்ளி ஊராட்சி. 
தம்புரான் மலை அடிவாரம்.
பாப்பாரபட்டி .
பென்னாகரம் தாலுகா. 
தர்மபுரி மாவட்டம் 636809.

சஞ்சீவிராயன் மலைக்கோயில் தர்மபுரி இரயில் நிலையத்திலிருந்து 19 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பாலக்கோடு இரயில் நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

சஞ்சீவிராயன் கோவில் அருகிலே ஸ்ரீ ராமர் கோயிலும் உள்ளது. 

பௌர்ணமி அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறுகின்றது. மற்ற சனிக்கிழமைகளிலும் பூஜை வழிபாடுகள் நடக்கின்றன.

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் மற்றும் சித்ரா பவுர்ணமியில் விசேஷ வழிபாடுகள் தேரோட்டம்  நடைபெறுகின்றன.

ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் தங்குவதற்கு மகாமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 

ஆலய அன்னதான கமிட்டி சார்பில் பௌர்ணமி தோறும் அன்னதானங்கள் மிகச்சிறப்பாக நடக்கின்றது.

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

2 comments:

  1. ஓம் அருள்மிகு அன்னை லோபமுத்திரா தாய் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நம... அய்யா... அப்பா... ஒன்றை மட்டும் நன்கு உணர்கின்றேன். இந்த அருள்வாக்கின் மூலமாய் என்னோடு இருக்கின்றீர்கள் - என்னோடு பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை நன்றாகவே உணர்கின்றேன்... நலம் நலமே தொடரட்டும் எம்பெருமானே அனைவருக்கும் அருள்செய் ஞானக்கடலே

    ReplyDelete