​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 10 August 2022

சித்தன் அருள் - 11 71 - அன்புடன் அகத்தியர் - அமர்நாத் பனிலிங்கம்!






வணக்கம் அகத்தியர் அடியவர்களே

கடந்த  மாதம் வைகாசி விசாகம் தினத்தன்று காசியில் குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்குகள் உரைத்தபோது நல்முறையாக அமர்நாதனை காண செல்ல வேண்டும் என்று வாக்குகள் உரைத்திருந்தார்.

அமர்நாத் பனிலிங்க யாத்திரை என்பது எல்லா நாட்களும் வருடத்தில் எல்லா நாட்களும் பயணம் மேற்கொள்ள முடியாது.

இந்த ஆண்டிற்கான இந்த புனித யாத்திரை ஜூன் மாதம் 30 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை புனித பயணம் மேற்கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

மோசமான வானிலை மற்றும் மேக வெடிப்புகள் பெருமழை பெருவெள்ளங்கள் என எப்போது வேண்டுமானாலும் யாத்திரை நிறுத்தப்படும் என்ற நிலைமையும் இருந்தது.

அமர்நாத் பனிலிங்கத்தை காண்பதற்கு உடற்தகுதி சான்றிதழ்களும் முறையான மத்திய அரசாங்கத்தின் அனுமதி இருந்தால் மட்டுமே பயணத்திற்கான அனுமதி கிடைக்கும்.

இந்திய அரசாங்கத்தின் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமர்நாத் யாத்திரை தொடர்பான முன்னேற்பாடுகள் அனைத்தும் நடந்து கொண்டிருக்கும் பொழுது பனிலிங்கம் உருகுதல் மேக வெடிப்பு காரணமாக பெருமழை காரணத்தினால் யாத்திரை செல்ல தடை என்ற தகவலும் வந்து கொண்டே இருந்தன.

குருநாதர் அகத்தியர் பெருமானிடம் இதைப்பற்றி மறுவாக்கு கேட்ட பொழுது

அப்பனே யான் அருகிலேயே இருக்கின்றேன் அனைத்தையும் யான் ஏற்பாடு செய்கின்றேன்... ஈசன் அங்கேதான் அமர்ந்திருப்பான். யானே துணையாக இருந்து வழிநடத்திச் செல்வேன் கவலைகள் இல்லை என்று வாக்குரைத்து இருந்தார்.

குருநாதரின் ஜீவனாடி வாக்கு உத்தரவின்படியே மள மள வென யாத்திரை  முன்னேற்பாடுகள் நடந்தன.

யாத்திரையில் பங்கு பெற்ற முன்னாள் மத்திய ரிசர்வ் காவல் துறை அதிகாரியும் குருவின் திருவருளால் குருவின் ஆணைப்படி இணைந்து கொண்டார்.

ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்திய அரசாங்கத்தின் ராணுவத்தால் பாதுகாக்கப்பட்டு ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் குருவின் அனுக்கிரகம் கொண்டு யாத்திரை தொடங்கியது.

அந்த முன்னாள் காவல்துறை அதிகாரியின் நண்பரும் தமிழ்நாட்டில் சிதம்பரத்தைச் சேர்ந்த சிவனடியாரான மற்றும் அகத்தியரின் பக்தரான கணபதியின் பெயர் கொண்ட தமிழக அதிகாரி சி ஆர் பி எப் காவல் பணி தலைவராக ஒரு கம்பெனி பட்டாலியன் படைப்பிரிவின் தலைவராக கமாண்டோ வாக பணிபுரிந்து வருகிறார்.

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீ நகரில் அவர் யாத்திரைக்கு செய்த உதவிகள் அளப்பரியது.

எல்லாம் குருநாதரின் ஏற்பாடுகளால் நன்றாகவே நடந்தது.

யாத்திரைக்கு சென்ற அனைவருக்கும் உணவு பாதுகாப்பு இருப்பிடம் என அவரால் அவருடைய படை வீரர்களால் முடிந்தவரை  பேருதவிகள் செய்தார்.

உடன் வந்த அனைவருக்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்த அவருடைய அறைக்கு சென்ற பொழுது சிறு விளக்கும் ஈசனுடைய புகைப்படமும் அகத்திய பெருமானுடைய நாடி மருத்துவம் பற்றிய நூல்களும் இருந்தது மிக அதிசயமாக இருந்தது.

உடன் வந்த அடியவர் ஒருவர் தன்னிடம் கொண்டு வந்திருந்த அகத்தியர் புகைப்படமும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் அபிஷேக திருநீறும் பால ராமபுரம் அகத்தியர் அபிஷேக திருநீரும் உண்ணாமலை தாய் லோப முத்திரை அன்னை குங்குமமும் அவருக்கு வழங்கினார். இவை அனைத்தும் குருவின் திருவருளால் நன்றாகவே நடந்தது.

அந்த கமாண்டோ அதிகாரியும் மிகச் சிறந்த ஈசனின் பக்தர் 20 வருடங்களாக பாதுகாப்பு பணியில் பயங்கரவாதிகளுக்கு இடையே உயிரையும் பணயம் வைத்து பல பொது மக்களை காப்பாற்றி இருக்கின்றார். பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலிலும் இறைவன் அருளால் காப்பாற்றப்பட்டு ஐந்து முறை மரணத்தின் விளிம்பிற்கு சென்று வந்தாலும் இறைவன் அருளால் தன்னுடைய பணியை திறன் பட செய்து வருகின்றார். ஒவ்வொரு முறையும் சொந்த ஊருக்கு செல்லும் பொழுது திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமலை தாயையும் கண்டு கிரிவலம் செய்து விட்டு தான் ஊருக்கு செல்வேன் என்று பக்தியோடு எங்களிடம் கூறிய அன்போடு உபசரித்தார்.

தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொடுத்து நல்லபடியாக சென்று வாருங்கள் என்று வழியனுப்பினார்.

25 ஆம் தேதி அமர்நாத் சென்று அன்று மாலை பிரதோஷம் திங்கட்கிழமை பவித்திர சிராவண மாத வழிபாடு நேரத்தில் பனிலிங்க குகையை அடைந்து ஜீவனாடி பெட்டகம் அமர்நாதனின் மடியில் வைத்து ஆர்த்தி பூஜைகள் செய்யப்பட்டது.

அமர்நாத் ஈசனின் இருப்பிடமாக அறியப்பட்டாலும் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று!!

பார்வதி தேவியாரின் கழுத்து பகுதி விழுந்த இடம் அமர்நாத் பனிலிங்கத்தின் இடது புறத்திலே அம்மையின் பனி ரூபத்தில் கழுத்து பாகமும் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.

பிராணவாயு குறைவான அந்த மலை உச்சியிலே அமர்நாத் குகையில் வாழும் புனித புறாக்களின் தரிசனமும் கிடைத்தது.

நல்படியாக தரிசனமும் பூஜையும் கண்டு வந்து கூடாரங்களில் அன்று இரவு தங்கி அன்றே ஈசனார் ஜீவநாடியில் வந்து வாக்குகள் உரைத்தார்.

அடுத்த நாள் காலை வானிலை சீராக இருந்தது பயணத்தை முடித்துவிட்டு திரும்பி பாதி வழியில் வந்து கொண்டிருந்த பொழுது மீண்டும் அமர்நாத் அருகே மலைச்சிகரங்களுக்கு இடையே மேக வெடிப்புக்கள் ஏற்பட்டு பெருமழை பெய்ய தொடங்கியது.... யாத்திரைக்கு வந்த பக்தர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இச்சம்பவத்தை குறித்து குருநாதர் அகத்தியர் பெருமானிடம் வாக்குகள் கேட்ட பொழுது...

அப்பனே எவை எவை என்று உணர நேற்றைய பொழுது தான் யான் வாக்குகள் சொல்லிட்டேன் அப்பனே!!! எதை எதை என்று கூற அங்கே ஈசன் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே அவன் தான் முடிவு எடுக்க வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே சரியான முடிவை எடுப்பான்.

என்று வாக்குகள் தந்தார். அனைவரும் பயந்து கொண்டிருந்த பொழுது சிறிது நேரத்திலே வெள்ளம் வடிந்து நிலைமைகள் சீராகி சிக்கிக் கொண்டிருந்த பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பான நிலைமையை அடைந்தனர்.

அமர்நாத் பனிலிங்க யாத்திரையை முடித்துவிட்டு மீண்டும் ஸ்ரீநகர் வந்தடைந்து விட்டு காவல் துறை கமாண்டோ அதிகாரிக்கு மீண்டும் நன்றிகள் கூறினோம்.

அடுத்த நாள் அங்கிருந்து கிளம்பிய பொழுது அவர் சிவில் சீருடையில் நெற்றியில் திருநீறு குங்குமம் துலங்க எங்களை வரவேற்றார்.

அவருக்கும் ஜீவனாடி பற்றி ஒன்றும் தெரியாது நாங்களும் எடுத்துக் கூறினோம். நமது சித்தன் அருள் வலைத்தளத்தின் இணைப்பையும் அவருக்கு வழங்கினோம் இந்த வலைத்தளத்தில் குருநாதரின் ஒவ்வொரு வாக்குகளையும் நீங்கள் படிக்கலாம் என்று கூறினோம். அவரும் மிக்க ஆவலாக குருநாதரின் வாக்குகளை கேட்பதற்கும் மிக பக்தியோடு ஆர்வமாக இருந்தார்.

பரபரப்பான சூழ்நிலை இருக்கும் ஸ்ரீ நகரில் ஒரு முக்கியமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரை நாங்கள் தொந்தரவு செய்யாமல் அனைவரும் தயாரானோம் கிளம்புவதற்கு தயாராகி கிளம்பி சென்று அவர் பணிபுரியும் இடத்திற்கே சென்று அவரை மீண்டும் கண்டோம்.

பரபரப்பான சூழ்நிலையில் ஒரு முக்கியமான சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த அவருக்கு குருநாதர் வாக்குகள் தந்தார்.

சிவில் சீருடையில் இருந்தாலும் நாங்கள் இருந்த வாகனத்திற்கு உள்ளே தன்னுடைய காலணிகளை கழட்டி வைத்து விட்டு வந்தது ஜீவனாடியை வணங்கினார்.

அவர் செய்து கொண்டு வரும் சிறப்பான சேவைக்கும் பக்திக்கும் குருநாதர் ஆசிர்வாத வாக்குகளை தந்தருளினார்.

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே அப்பனே எதை என்று கூற அப்பனே நீ இறந்தவனப்பா!!!!

ஆனாலும் அப்பனே ஈசனின் துணையால் அப்பனே எவை என்று கூற பல சேவைகளை செய்ய வேண்டும் என்பதே!!!

அதனால்தான் இறைவனே நல்லோர்களுக்கு சில உதவிகள் செய்வான் என்பேன் அப்பனே!!!

அதுதான் உண்மை என்பேன்!!!!

அதனால் விதியை கூட ஆராய்ந்து பார்த்தால் அப்பனே விதியும் முடிந்து விட்டது அதனால் நீ என்ன நினைக்கின்றாயோ அதைத்தான் செய்ய முடியும்.

இதனால் கவலைப்பட்டு விடாதே!!!! உன் குடும்பத்தை பற்றியும் கூட!!!

ஈசன் இருக்கின்றான் அப்பனே நலமாக நலமாக அனைத்தும் செய்வான் அப்பனே!!!!

அப்பனே பல மக்களை அப்பனே காக்கின்றவர்களுக்கு அப்பனே யான் இங்கு கூட வந்து வாக்குகள் உரைக்கின்றேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே பின் யார் மூலம் எதை எடுத்து எவை கொண்டு வந்து அப்பனே!!!!

ஆனால் கடைசியில் பார்த்தால் ஒன்றும் இல்லாமல் சென்று விடுகிறார்கள் அப்பனே!!! இது பிறவி அல்ல அப்பனே!!!

மற்றவர்களுக்காக யார் உழைக்கின்றார்களோ !!! அவர்களை தான் யாங்கள் சித்தர்கள் இவ்வுலகத்தில் நிச்சயமாய் உதவிகள் செய்வோம் அப்பனே!!!

உன்னால் மற்றவர்களும் வாழ்கின்றார்கள் அப்பனே வாழத்தான் போகின்றார்கள் இனிமேலும்!!!!

அதனால்தான் அப்பனே இங்கிருக்கும் இப்பொழுது கூட யான் வந்து வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே

கவலையை விடு அப்பனே!!!

உலகத்தில் நிரந்தரம் யாரும் இல்லையப்பா!!!

அப்பனே ஆனால் எதை எதையோ நோக்கி மனிதர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள் அவையெல்லாம் ஒரு பிறப்பில்லையப்பா!!! சொல்லிவிட்டேன்.

அப்பனே நல்விதமாக எங்களுடைய ஆசிகளால் நிச்சயம் அப்பனே மீண்டும் மீண்டும் எதை என்று உன் குடும்பத்தில் உள்ள எவையென்று அனைவருக்கும் நல்லாசிகள் கொடுத்து அப்பனே எதை விரும்புகின்றீர்களோ அவைகளும் கொடுத்து அவர்களுக்கும் ஈசன் நிச்சயம் நன்மைகளாகவே செய்வான் என்பேன் அப்பனே.

அதனால் கவலைகள் விடு!!

அப்பனே சிறப்பு வாய்ந்த அப்பனே தலங்களையும் யாங்கள் உருவாக்குவோம் அப்பனே!!! அதனால்தான் இத் தேசத்தில் எதை என்று கூட அப்பனே அநியாயம் அக்கிரமங்கள் எல்லாம் மிஞ்சி போகின்றது அப்பனே அதையெல்லாம் எதை என்று கூற அப்பனே சில நல்லோர்களை யாங்கள் உருவாக்குவோம்!!

பின் உருவாக்கி பின் எதை என்று கூட யாங்களே காத்துக் கொள்வோம்.

அதனால் அப்பனே உங்களை நிச்சயம் எதையன்றி கூற யாங்களே காத்துக் கொள்வோம் அப்பனே... அதனால்  உன்னிடத்தில் உள்ள அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்!!!

அப்பனே பலமுறை உன்னை யான் பார்த்திட்டேன்.. அப்பனே யான் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டே வந்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

நலமாக நலமாக நல்லோர்களுக்கே யான் உதவிகள் செய்கின்றேன்!!!

அப்பனே இக்கலியுகத்தில் அப்பனே உலகத்தில் இன்னும் அநியாயங்கள் அப்பனே அக்கிரமங்கள் அழியக்கூடியது என்பேன் அப்பனே.அதனால் மற்றவர்களுக்காக பின் யார் உழைக்கின்றார்களோ அவர்களுக்கு சித்தர்களே!!! நல் விதமாக யாங்கள் உழைப்போம் யாங்கள் உழைப்போம் அப்பனே!!!

அதனால் தைரியமாக இரு!! மற்றவை எல்லாம் யான் பார்த்துக் கொள்கின்றேன்!!

ஈசன் உன் அருகிலே இருக்கின்றான்!!!! அப்பனே நலமாக நலமாக அப்பனே அதனால் உன் விதியை நீயே எழுதிக் கொள் அப்பனே நன்மைகளாக முடியட்டும் எம்முடைய ஆசிகள் எம்முடைய ஆசிகள்!!!! 

என்று குருநாதர் மிகுந்த கருணையோடு பாசத்தோடு அந்த அதிகாரிக்கு வாக்குகள் தந்தார்!!!!

வாக்குகள் தந்த இடம் மிகப் பரபரப்பான பாதுகாப்பான சூழ்நிலையில் இருக்கும் ஒரு சாலையில் ஒரு வாகனத்திற்கு உள்ளே அவர் எந்த அளவுக்கு  உண்மையான பக்தியும் தன்னுயிர் நலனை பாராது பொது மக்களுக்கு பாதுகாப்பு சேவையும் செய்திருந்தால் குருநாதர் அந்த இடத்தில் வைத்து வாக்குகள் தந்திருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுதே மெய்சிலிர்க்கின்றது.

குருநாதர் அகத்திய பெருமான் தன்னுடைய ஒவ்வொரு வாக்கிலும் பிறர் நலனை வேண்டுங்கள் மற்றவர்களையும் தன்னைப் போல எண்ணுங்கள் பிறருக்காக உதவி செய்யுங்கள்... யாங்களே கலியுகத்தில் நேரடியாக வந்து ஆட்கொண்டு அரவணைப்போம் என்று ஒவ்வொரு வாக்கிலும் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றார்.

அதன்படியே இந்தச் சம்பவமும் நடந்தது எத்தனையோ பேர் ஜீவநாடி வாக்குக்காக காத்திருக்க!!!! ஜீவனாடி என்பது குறித்து அறியாத ஒரு அதிகாரி மற்றவர்களை காத்து சேவை செய்து வரும் அதிகாரிக்கு குருநாதர் தந்த கருணையை பார்த்தீர்களா!!!!

அடுத்து ரகுநாத் ஜி ஆலயத்திலும் வியக்கத்தக்க சம்பவங்கள் நடந்தது.

எப்படி ரகுநாத் ஆலயத்தில் ஸ்ரீ லட்சுமணன் சிறை இருந்த பொழுது அகத்தியரை பார்க்க அனுமதி அளிக்காமல் பொதுமக்கள் தடையை ஏற்படுத்தினார்களோ அதே போல ஆலயத்திற்கு உள்ளே ஜீவநாடியை கொண்டு செல்வதற்கு முதலில் தடைகள் ஏற்பட்டது. சிறிது நேரம் விவாதமும் செய்ய நேரிட்டது.

அதன் பிறகே ஜீவனாடிப் பெட்டகம் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் கருவறைக்கு சென்றது எல்லாம் அகத்தியரின் திருவிளையாடல்கள்.

மனித ரூபத்தில் அகத்தியர் தரிசனம்!!!!!

ரகுநாத் ஆலயத்தில் ஜீவனாடி பெட்டகத்தை வைத்து பூஜை எல்லாம் செய்துவிட்டு ஆலயத்தில் தனித்தனி பிரகாரங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 12 லட்சத்து 25 ஆயிரம் சாளக்கிராமங்களை எல்லாம் தரிசனம் செய்துவிட்டு மற்ற பரிகாரங்களையும் தரிசனமும் செய்துவிட்டு எதிரில் இருக்கும் யாகசாலையில் அமர்ந்து குருநாதர் இடம் வாக்குகள் கேட்ட பொழுது ஆலயத்தை பற்றி குருநாதர் வாக்குகளாக உரைத்தார்.

குருநாதர் வாக்குகள் உரைத்தபின் குருநாதரின் வாக்குகளை குறித்து ஒரு அடியவர் விளக்கிக் கொண்டிருந்த பொழுது அதுவும் குறிப்பாக

எதை என்று அறியாமல் நிச்சயமாய் சொல்கின்றேன் மனிதர்களே எதை என்று அறியாமலே நிச்சயமாய் என்னை பிடித்தவர்கள் நிச்சயம் என்னையே நம்புகின்றவர்களுக்கு யான் நிஜமாகவே மனித ரூபத்தில் வந்து எதை என்று அறியாமலே நிச்சயம் கொடுத்து விட்டு செல்வேன் கலியுகத்தில் செப்பி விட்டேன்.... இந்த வாக்கினை மொழிபெயர்த்து உரைத்துக் கொண்டிருந்த பொழுது

நல்ல நெடுநெடுவென உயரம் மஞ்சள் நிறத்தில் பஞ்சகச்சம் நெற்றியில் தென்கலை ஸ்ரீமன் நாமம் அணிந்து ஒரு 60 வயது மதிக்கத்தக்க பெரியவர் வாக்குகள் தந்த இடத்திற்கு வந்தார்.

அவர் அந்த இடத்திற்கு வரவேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் ஒதுக்குப்புறமாக உள்ள தோட்டப்பகுதியில் உள்ள யாகசாலை இடம் அது பக்கத்தில் இருந்த ஸ்படிகலிங்க ஆலயத்திற்கு செல்ல வேண்டுமானால் தனி வழி இருந்தது.

வந்தவர் அனைவரையும் பார்த்து யாகசாலையை வணங்கினார்.

உடன் அமர்ந்திருந்த அடியவர் ஒருவர் எழுந்து அவரை பார்த்து கைகூப்பி வணங்கி அவரிடம் உரையாடினார். அந்த அடியவரின் தோளை தட்டிக் கொடுத்து புன் சிரிப்புடன் உரையாடினார் யான் அயோத்தியாவில் இருந்து வருகின்றேன். மிக்க சந்தோஷம் மிக்க சந்தோஷம் என்று அனைவரையும் பார்த்து கையை உயர்த்தி புன்னகைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

அடியவர்களும் அதனைக் குறித்து பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை

அடுத்த நாள் மற்றொரு தலத்தில் குருநாதர் வாக்குரைத்த பொழுது வந்தது யான் தானப்பா!!!! வந்து அனைவரையும் ஆசீர்வாதம் செய்து விட்டு தான் சென்றேன்.

இக்கலியுகத்தில் உண்மையான பக்தியை எவர் ஒருவர் சரி முறையாக கடைபிடிக்கின்றார்களோ தான தர்மங்களை முறையாக செய்து வருகின்றார்களோ அவர்களுக்கு மனித ரூபத்தில் இப்படி அடிக்கடி வந்து என்னுடைய தரிசனத்தை காட்டிக் கொண்டே இருப்பேன் அனைத்து தெய்வங்களையும் தரிசனத்தையும் காட்டுவேன் என்று வாக்குகள் தந்தார்.

கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் மெய்சிலிர்த்து விட்டது!!!! வந்தது குருநாதர் அதுவும் நமக்காக வந்துள்ளார் என்று எண்ணி பக்தியுடன் வணங்கினோம்.

ரகுநாத் ஆலயத்தில் உரைத்த வாக்கின்படியே நிச்சயமாய் அகத்தியரை பரிபூரணமாக நம்புகின்றவர்களுக்கு பக்தியை காட்டுபவர்களுக்கு அவர் வழியில் செல்பவர்களுக்கு அவர் தரிசனம் கிடைக்கும் என்பது இச்சம்பவமும் ஒரு உதாரணம்!!!

குருநாதரின் வாக்கின்படியே மற்றவருக்காக இல்லாதவர்களுக்காக இயலாதவர்களுக்காக நாமும் நம்மால் முடிந்த வரை உதவிகளை செய்து நம் குருநாதர் அகத்திய பெருமானின் கருணையைப் பெறுவோம்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்....... தொடரும்!

3 comments:

  1. அருமையான தெய்வீக அனுபவம் ஐயா.ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  2. எம் பெருமானே அகத்தீசா.... அனைவரையும் நல்வழிப்படுத்தி நல்லாசிகள் கூறி வாழ்த்துங்கள் - வளர்கிறோம் - ஞானக்கடலே....

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete