ஒரு சில அகத்தியர் அடியவர்களை ஒன்று கூடி இன்றைய தினம் (அந்த நாள்-இந்த வருடம் 08/08/2022) நம்பி மலையில் பெருமாளை தரிசனம் செய்து அவர் அருள் பெற்று வந்துள்ளனர். வானிலை, சரியாக இல்லாத போதும், மிகுந்த சிரமங்களை தாண்டி, உறுதியுடன் மலை ஏறி பெருமாள் தரிசனம் செய்து வந்திருப்பதை அவர்கள் பகிர்ந்து கொண்ட படங்கள் வழி உணர முடிந்தது. அவர்கள் அனைவரும், எல்லா அருளும் பெற்று நலமுடன் வாழ பிரார்த்தித்து கொண்டு, அவர்கள் அனுப்பிய படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்............. தொடரும்!
எங்க ஊர் பெருமாள் பார்த்த உடன் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எனது தந்தை உடன் நானும் எனது திருமணத்திற்கு முன்பு கடைசி சனிக்கிழமையன்று பெருமாளை பார்க்க ஓடோடி சென்று விடுவேன். அப்பா நடக்க கடினமாக இருக்கிறது வண்டியில் செல்வோமா அப்படி கேட்பார்கள். நான் அப்போது இல்லை அப்பா என்று அவருக்கு கதை சொல்லி கொண்டு நடப்பேன். அந்த கதை இது தான் ஒரு முறை ஒரு சஏழை மனிதன் பெருமாள் மீது பக்தியுடன் அவரை பார்க்க மலை ஏறி நடந்து சென்றாராம் பெருமாள் கிட்டே சென்றதும் அங்கு பார்த்தால் பணம் கொடுத்து சென்றவர்களுக்கு மிக அருகில் தரிசனமும் இவருக்கு தூரத்தில் நின்று சாமி தரிசனம் செய்யும் பாக்கியமும் கிடைத்ததாம். வருத்தத்துடன் பெருமாளை பார்த்து கேட்டாராம் உன் அருகில் வந்து தரிசனம் செய்ய முடிய வில்லையே இது என்ன கொடுப்பனை என்று கவலை பட்டாராம். பெருமாள் கருனையோடு சொன்னாராம் கவலை வேண்டாம் மகனே அவர்கள் என் அருகில் வந்து என்னை பார்க்கிறார்கள் ஆனால் "நான்" உன்னை தான் பார்க்கின்றேன் என்றாராம். பக்தன் ஆடி போய் விட்டாராம். இந்த கதையை கேட்டதிலிருந்து வண்டியில் செல்ல வேண்டும் என்று சொல்ல மாட்டார். எனது திருமணத்திற்கு பிறகும் அவர் பொறிகடலையை வாங்கி கொண்டு குரங்குகளுக்கு போட்டு கொண்டு செல்வார் மகளின் விருப்பத்திற்காக.
ReplyDeleteஎப்போது தர்மம் ஜெயிக்கும் எப்போது அதர்மம் அழியும் அளிக்கிறேன் அளிக்கிறேன் என்று கூறி கொண்டு இருந்தாள் அதர்மம் அழிந்து போகுமா அதர்மத்தை அழிக்க எப்போது இறங்கி வருவீர்
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDelete