​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 23 August 2022

​சித்தன்​ அருள் - 1174 - அன்புடன் அகத்தியர் - ​ஸ்ரீ சங்கராச்சாரியா ஜி மந்திர், ஸ்ரீ நகர், ஜம்மு காஷ்மீர்!





26/7/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு ! வாக்குரைத்த ஸ்தலம் ஸ்ரீ சங்கராச்சாரியா ஜி மந்திர். ஸ்ரீ நகர். ஜம்மு காஷ்மீர்வித்யா பீடம்! 

ஆதி மகேஸ்வரனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே நலமாக!! நலமாக!! என்னை நம்பி வந்து விட்டால்.... யான் நிச்சயம் பல அதிசயங்களை காட்டுவேன்.

அவை மட்டும் இல்லாமல் அப்பனே எங்கெல்லாம் யான் சென்று வந்தேனோ அங்கே எல்லாம் அழைத்துச் செல்வேன். பல அருள்களை கொடுப்பேன். அதன் மூலம் நிச்சயமாய் என்ன? விரும்பினீர்களோ? அதை போலவே வாழலாம்!!! என்பேன். அப்பனே இதை அனைவரும் உணர்ந்ததே!!! என்பேன் !அப்பனே.

எதையென்று அறியாமலே இன்னும் இன்னும் எதையென்று தெரியாமலே வாழ்ந்து தான் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்!!!

இப்படி வாழ்ந்தால் எப்படி???? இறைவன் நன்மைகளை செய்வான்???? அப்பனே!!!!!

எதையென்று அறியாமலே பல பல ரூபங்களில் கூட ஆதிசங்கரச்சாரியன் எதையென்று அறியாமலே இங்கு வந்து பல தவங்களை மேற்கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தான் என்பேன்.வாழ்ந்தான் என்பேன் அப்பனே!!! இவையன்றி கூற ஆனாலும் பல படை வீரர்களும் போர் தளபதிகளும் அப்பனே எதை என்று அறியாமல் ஓர் இடத்தில்  எதையென்றும் நின்றிட்டு அப்பனே இவந்தனை வணங்கி வந்தார்கள்.

ஆனாலும் அப்பனே இவன் செய்த லீலைகள் எதை என்று அறியாமலே நிச்சயம் இவந்தனுக்கு இன்னும் கேட்கக்கூடிய அருள்கள் அவர்களுக்கு கொடுத்து !!!கொடுத்து அவர்கள்!!! பல பல வழிகளிலும் வெற்றி கொண்டார்கள்.

இதனை நன்கறிந்து எவை என்று மக்களை எப்படியாவது இங்கிருக்கும் மக்களை கூட நிச்சயம் காக்க வேண்டும் என்று உணர்ந்து இங்கு பல தவங்களை மேற்கொண்டான் இவ் சங்கராச்சாரியன். 

எதையென்றும் அறியாமலே அதனால் நிச்சயம் பல பல மனிதர்களும் இங்கு வந்து  எதையென்று அறியாமலே ஒன்றும் இல்லாமலே வந்தவர்களும் பன்மடங்கு உயர்வுகளை பெற்று இப்பொழுது கூட வாழ்ந்து தான் கொண்டிருக்கின்றார்கள்.

அப்பனே!!! 

அதனால் தான் எங்கெங்கு சக்திகள் மிகுந்து காணப்படுகின்றதோ அங்கெல்லாம் நிச்சயம் என்னுடைய அருள்களை பெற்றவர்களை யான் அனுப்புவேன் அப்பனே!!!!

அவைமட்டுமில்லாமல் அப்பனே அவை வேண்டும்!!! இது வேண்டும்!!! பின் தன் சுயநலத்திற்காக நிச்சயம் கேட்டுக் கொண்டே இருந்தால் நிச்சயம் யான் தருவதில்லை சொல்லிவிட்டேன் அப்பனே.

அதனால் என்னுடைய பின் நிச்சயம் யான் எதை என்று தீர்மானிக்கின்றேனோ.........  எதை என்று அறியாமல் அதனால் அமைதியாக அன்பை செலுத்துங்கள் போதுமானது. நிச்சயம் அன்பை செலுத்தினால் பன்மடங்கு எப்படி?? எப்படி?? வாழ வேண்டும்!!! என்பதை எல்லாம் நிச்சயம் யானே நல் மக்களுக்கு அருளை தந்து அனைத்து ஸ்தலங்களுக்கும் ஏற்படுத்தி நல்விதமாக பல ஆசிகள் தந்து அனைத்தும் என்னுடைய ஆசிகளோடு என்னுடைய அனுகிரகங்கள் கிடைக்கப்பெற்று யான் நேரில் வருவேன் அப்பனே!!!! லோபா முத்திரையோடு!!!!! நிச்சயம் தரிசனமும் கொடுப்பேன்! அப்பனே சொல்லிவிட்டேன்!!!

எதையென்று அறியாது இதை பல மக்களும் தெரியாமல் வாழ்ந்துதான் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!

அகத்தியன் அனைத்தும் தருவான் தருவான் என்று அப்பனே!!!

எதற்கு? தர வேண்டும்? உந்தனுக்கு???????

சொல்!!!!!!!!! மகனே!!!!! 

எதையென்று அறியாமலே எவையென்று உணராமலே.... உன் சுயநலத்திற்காகவே அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தால்......... எப்படி?? யான் தருவது!!!!!!!

பின் அவை தந்தாலும் வீணப்பா!!!!!!

நீ மட்டும் பிழைப்பாய்! உன் குடும்பத்தில் உள்ள அனைவரும் தான் பிழைப்பார்கள்!!!!

மற்றவர்கள் பிழைக்க மாட்டார்கள் என்பேன் சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

ஏதாவது ஒரு வழியில் நிச்சயம் அகத்தியனை நம்பி விட்டால் பின் அன்போடு அப்பனே எதை நீ செய்தாயோ பின் உன்னால் எதை என்று உலகத்திற்கு அறிந்ததே!!!!!! 

பின் உன்னால்  என்ன செய்ய முடியுமோ!!!!!! அவை போன்றே செய்!!! என்று நிச்சயம் என்னிடத்தில் விட்டு விட்டால் அப்பனே யான் பன்மடங்கு உயர்வுகள் பெற நிச்சயம் பாடுபடுவேன் என்பேன் அப்பனே!!!

பல ஆசிகளை பெற்று தருவேன் அப்பனே!!!!!

இன்னும் இவ் சங்கராச்சாரியன் அப்பனே எங்கெங்கோ பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளான் அப்பனே!!!!

அவையெல்லாம் ஆனாலும் சக்தி மிகுந்த தலங்களாகவே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.... அதனடியில்  பல மந்திரங்களும்.......!!!!!

இவன் தவம் செய்யவில்லை அப்பனே!!! தவத்தை போல் செய்து சித்திகளையும் செய்து !!செய்து!! அப்பனே எதையன்றி கூற 
இறைவனை நேரடியாக அழைத்து அழைத்து !!..

இங்கு இரு!!!!!

பல சக்திகளை இடு!!! இடு!!!

என்றெல்லாம் கூறி பல திருத்தலங்களை அமைத்துள்ளான்!!!!!!!

இதனால் அப்பனே ஆனாலும் பல வினைகள் மனிதனை சூழ்ந்துள்ளதால் அங்கெல்லாம் சென்றடையாமல் மக்கள் தவித்து தவித்து வருகின்றனர்! அப்பனே!!!!

அதனால் நிச்சயம் இச் சங்கரன் நிச்சயம் அருள்கள் வேண்டுமென்றால் அப்பனே நிச்சயம் எதை என்று கூட தேடித்தேடி செல்லுங்கள் அப்பனே!!!!

நிச்சயம் பல வழிகளிலும் கூட பல பல உண்மைகள் நிச்சயம் புரியவைக்கும் அளவிற்கு கூட என்ன விரும்புகின்றீர்களோ அவையெல்லாம் நிச்சயம் நிறைவேறும் என்பேன்!!!அப்பனே!!! நல்விதமாக!!!

அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே என் மீது எதை என்று அறியாமலே!!!

யான் எதையும் கேட்கவில்லை அப்பனே அன்பைத்தான் கேட்டேன்!!!

அவ் அன்பை மட்டும் நீங்கள் செலுத்தினால் போதுமானது மற்றவை எல்லாம் யானே பார்த்துக்கொள்வேன்!!!

எங்கு அழைத்துச் செல்ல வேண்டும்?? எங்கெல்லாம் திருத்தலங்களை எதையெல்லாம் எங்கு நோக்கி செல்ல வேண்டும் ??ஆனாலும் அப்பனே இவ் மாய உலகத்தில் மனிதன் அப்பனே எதை என்று அறியாமலே தன் கர்மத்திற்காகவே பின் கர்மத்திற்காகவே பின் பாவங்களை எதை என்று கூட சுமந்து சுமந்து கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

ஆனாலும் யானும் கூட சென்று !!சென்று!! பாவம் என்று பார்க்கின்றேன்.

ஆனாலும் அப்பனே அவந்தனுக்கு கொடுத்தாலும் யான் மூன்றாவது கண்ணில் பார்த்து விடுகின்றேன்.
இவந்தன் வாழ்வானா?? என்று கூட......

அனைத்தும் கொடுத்து விட்டாலும் அவந்தன் என்னையும் மறந்து விடுவான்... இறைவனையும் மறந்து விடுவான் அப்பனே எதை என்று அறியாமலே பின் பல மனிதர்களை கேலி செய்து இறைவன் எங்கு இருக்கின்றான்??? என்று கேட்டு விடுவான்....

மகன்களே !!!அதனால் தான் யான் நிச்சயம் என் பக்தர்களாயினும் யான் உயர்த்துவதில்லை அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!!

எவையெவை என்று கூற காலை பிடிப்பான்!!!!
அகத்தியா!! என்று சொல்வான்!!!
பற்று கொள்வான்!!!
ஏதும் இல்லாத பொழுது அப்பனே!!!!

ஆனால் நிச்சயம் எதை என்று அறிந்த பிறகு தான் யான் நிச்சயம் கொடுப்பேன் அப்பனே!!!!

அதனால் எதையென்று எவை என்று கூட அப்பனே அங்கு செல்!! இங்கு செல்!!( மனிதர்கள் உரைப்பது போல பரிகாரமாய்) என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்க மாட்டேன்!!!

எதையென்று அறியாமலே அதனால் அன்பால் என்னை வணங்கினாலே அப்பனே யானே அழைத்துச் செல்வேன்!!!!
அப்பனே எங்கெங்கெல்லாம்!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே ஈசனிடத்தில் சென்று கூட முறையிட்டு இவந்தனை எதை என்று அறியாமலே.... உன் ஸ்தலத்திற்கு நீ அழைத்து வா என்று முறையிடுவேன்.

அதனால் நிச்சயம் மனதை மாற்றி அங்கெல்லாம் நீங்கள் செல்வீர்கள் அப்பனே!!!!

இதுதான் உண்மை நிலை!!!!

அப்பனே அவை மட்டும் இல்லை இவை தன் நிச்சயம் எதை எதை என்று அறியாமலே இவ்வாக்குகளையும் நிச்சயம் வரும் காலங்களில் நிச்சயம் மனிதர்களுக்கு பல மனிதர்களுக்கு போய் சேரும் என்பேன் அப்பனே!!!!

இன்னும் நல்லோர்கள் திருந்துவார்கள் அப்பனே!!!!

நல்லோர்கள் நன்மையைச் செய்வார்கள்  அப்பனே!!!

அப்பனே  நிச்சயம் என்னுடைய வாக்குகளும் பல பரிசுத்தமான ஆன்மாக்களை சென்றடைந்து கொண்டே இருக்கின்றன அப்பனே நலமாகவே!!!!!

இதனால் மேற் சொன்ன வார்த்தைகள் இன்னும் நீண்டு நீண்டு அப்பனே நன்மைகளை செய்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே!!!

அப்பனே இன்னும் யான் வாழ வைப்பேன் நல் மனிதர்களை அப்பனே!!!!
உயர்த்துவேன் என்பேன் அப்பனே!!!! நலமாகவே நலமாகவே உண்டு உண்டு ஏற்றங்கள்!!!!!

அப்பனே எவை என்று கூட கல்விக்கு எதை என்று அதிபதியாக சரஸ்வதி தேவியும் நிச்சயம் எதை என்று அறியாமலே எவை என்று உணராமலே நிச்சயம் இங்கு வந்து செல்பவர்களையும் அவள்தனும் ஆசிர்வதிப்பாள் என்பேன் அப்பனே!!!!

நல்விதமாக அப்பனே பிள்ளைகளும் நல் ஆசீர்வாதங்கள் பெற்று உயர்ந்த படிப்புகளை பெறுவார்கள் என்பேன் அப்பனே!!!! நலமாகவே உண்டு உண்டு அப்பனே!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் இத்திருத்தலம் எதை என்று அறியாமலே அதனால் அப்பனே முன்னொரு காலத்தில் சங்கராச்சாரியன் இங்கு பல வருடங்களாக தவம் செய்து கொண்டிருந்தான்.

ஆனாலும் அப்பனே எதை, எதை என்று கூட அப்பனே ஆனாலும் சரியாக எவை என்று கூட சக்திகளை(சிவலிங்கத்தின் அடியில்) இறக்கினான் நிச்சயமாக..... பின் அமர்ந்தான் எதை என்று கூட.....

அதனால் நிச்சயம் ஓர் போர் வீரன் இங்கு வந்து வழிபட்டுக் கொண்டே இருந்தான்

பின் தவங்களை அவந்தனும் பின் சங்கராச்சாரியார் மீது பாசம் கொண்டு அனுதினமும் வருவான் எதை என்று அறியாமலே!!!!
திடீர் திடீரென்று!!!!

பின் மனித ரூபமாக தோன்றி சங்கராச்சாரியன் அப்பனே உன்னால் நிச்சயம் இந்த தேசத்தை காக்க முடியும் இதனால் உன்னால் தான் முடியும் என்பதைப் போல் நிச்சயம் எதை என்று அறியாமலே இதுபோல் இவ்வுலகத்திற்கு எவை என்று அறியாமலே சிறு அழிவுகள் வரக்கூடும் அதனால் இப்பொழுதே சொல்லிவிடுகிறேன் உந்தனுக்கு!!!

அதை சரியாக கவனித்து கொண்டு நீ சென்றால் அதை வெல்ல முடியும்!!!!

இதனை  இவ் விஷயத்தை நீ யாருக்கும் எப்பொழுதும் தெரியப்படுத்தக் கூடாது... ஆனாலும் எப்பொழுது எதையன்றி கூட ஆனாலும் சிறு மாதங்களுக்குள் அவை வந்து விடும்.

அதனால் நீ தயாராகிக் கொள்!!! தயாராக கொண்டே இரு என்று சொல்லி இதனை மறுப்பதற்கு அவ் போர் தளபதியும் எதை என்று அறியாமலே ஆனாலும்.... யாரோ ஒருவன் சொல்கின்றான் என்று எதை என்று அறியாமலே!!!!

ஆனால் பக்தன்!!!! எதை என்று அறியாமல் எப்படி எப்படி என்பதை கூட இல்லத்திற்கும்(போர் தளபதி அவர்) சென்று விட்டான்.

ஆனாலும் எதை என்று அறியாமலே சிறிது யோசித்தான்!!! எதை என்று ஆனால் சங்கரன் மீது பல பக்திகள் யாம் கொண்டோமே ஆனாலும் இப்படி சொல்கின்றானே யாரோ ஒரு மனிதன் என்று கூட.......

ஆனாலும் சரி பின் உறங்கவில்லை ஒரு மாதம் இப்படி சொல்லிவிட்டானே அவன் யார்? யார்? என்று கூட எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனாலும் அவனிடையே வேலை செய்யும் ஆட்களிடமும் தேட சொன்னான் இவ் மனிதனை எதை என்று அறியாமலே!!!

எவை என்றும் ஆனாலும் பின் சில அடையாளங்களையும் காட்டினான். இவ் அடையாளங்களுடன் எங்கேயாவது பின் யாராவது இருக்கின்றார்களா என்று கூட தேடச் சொன்னான்.
அனைவரும் சென்று விட்டனர்!!!

மீண்டும் அவந்தன் யோசனைக்கு பின் எட்டியது எதை என்று அறியாமலே பார்த்து எதையென்றும் தன் திரும்பவும் இங்கே வந்தான்(மலையுச்சி ஆலயத்திற்கு) 

எதை என்று அறியாமலே சில மணி நேரங்கள் தவமும் மேற்கொண்டான்!!

திரும்பவும் அவ் மனிதன் வந்தான்(மனித ரூபத்தில் சங்கராச்சாரியன் )

இப்படியே சொன்னான் அப்பொழுதுதான் புரிந்தது அவந்தன்.... எதை என்று அறியாமலே...

கண்ணீர் மல்கியது!!! நிச்சயம் யான் காப்பேன்!!! என்று கூட..... ஆனாலும் எதை என்று அறியாமலே நீயும் உயிரை விட்டு விடுவாய் !!!!( எதிர் வரும் யுத்தத்தில்) 

எதையென்று அறியாமலே ஆனாலும் உன் உயிர் எதை என்று அறிய நோக்க இவ்வுலகத்திற்கே எவை என்று பாடுபடாத அளவிற்கும் கூட பாடுபட்டு ஆனாலும் இதற்காகவே மக்களை பாதுகாப்பதற்கே நீ பிறந்துள்ளாய்.

இதனால் நிச்சயம் எவை என்று அறியாமல் மக்களையும் காத்து கட்டிக் காப்பாற்றி நல்விதமாகவே அனைவரையும் எதை என்று அறியாமலே!!!! அதனால் உன் உயிரும் அங்கேயே பிரிந்து விடும் என்று.... ஆனாலும் இவை என்று கண்களில் கண்ணீர் விட்டான் அவந்தன்.

ஏனப்பா!!??? எதை என்று அறியாத இப்பிறவி என்று கூட.....

ஆனாலும் இப்பிறவியின் ரகசியத்தை அனைத்தையும் இச்சங்கரன் கூறிவிட்டான். அதனால் அவன் கண்ணீர் மல்க இப்படியா??!!! எதை என்று கூட ஆனால் ஒரு காலத்தில் அவன் அரசனாக இருந்து பல வடிவங்களில் பல நன்மைகளை செய்தவன் ஆனாலும் நிச்சயம் எதை என்று அவ்வரசன் இதை இதை என்றும் கூட எவற்றின் பின் எவற்றின் அறியும் என்பதைப் போல சிவாஜியின் நாமம் கொண்டவனும் எதை என்று அறியாமலே பின் பிறப்பெடுத்து வந்தான்.(யுத்தத்தில் மக்களை காத்து உயிரை பிரிந்த அந்த போர்தளபதி அடுத்த பிறவியில் சத்ரபதி சிவாஜி ஆக பிறப்பெடுத்தார்). 

ஆனால் சிறிது எதை என்று இன்னும் மக்களை காக்க வேண்டும் என்பதைக் கூட இறைவன் தீர்மானித்தது போல பின் இறைவனை வேண்டிக் கொண்டு!!!!!!!

இதனால் சங்கராச்சாரியனும் அப்பனே எதை என்று நீயும் புகழ்பெற்ற அரசன்!! அதனால் இறைவனிடத்தில்!!...... ஒரு அழிவு பெரும் அழிவு அதனை யான் காக்க வேண்டும் மீண்டும் பிறவிகள் வேண்டும் என்பதை கூட பின் தெரிவித்து விட்டு வந்தாய்.

அதனால்தான் அப்பனே இவ் மக்களையும் காப்பாய்!!! உன் உயிரும் அங்கே பிரிந்து விடும். அதனால் எவை என்று அதனால் மீண்டும் பிறவிகள் உந்தனுக்கு உண்டு நீ எப்பொழுதெல்லாம் இறைவனை நோக்கி பின் தவங்களை மேற்கொள்கின்றாயோ!!! அப்பொழுதெல்லாம் நிச்சயம் பிறவிகள் வரும்!!!
என்பதைப் போல் என்று உணர்ந்து!!!!

மீண்டும் மகிழ்ச்சி அடைந்தான் அதனால் தைரியமாக போருக்கு சென்றான் இதனால் பல மக்களை காப்பாற்றினான்!!!!!

இன்றளவும் எதை என்று அறியாமலே பின் அவந்தனும் துடித்துக் கொண்டிருக்கின்றான் .

மீண்டும் பிறவி எடுக்க வேண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டும் என்று !!!!!

நிச்சயம் பிறப்பெடுப்பான் நிச்சயம் பின் மனிதனை எதை என்று அறியாமலே நிச்சயம் காப்பான் என்பேன் அப்பனே.

இதனால்தான் சொல்கின்றேன் அப்பனே நல்லோர்கள் எங்களுக்கு தேவை என்பேன்!!!  அப்பனே இவ்வுலகத்தில்!!!!

ஆனாலும் அப்பனே பொய் சொல்லி திரிந்து கொண்டிருக்கின்றார்களே அவர்களைப் பார்த்தால் தான் அப்பனே எப்படி என்பதை கூட!!!!!

அதனால்தான் அப்பனே எங்கள் பெயர்களை சொல்லிச் சொல்லி ஏமாற்றுபவர்களை நிச்சயம் யான் தண்டனைக்கு எதை என்று நிரூபிக்காமலே ஆனாலும் அப்பனே பல சித்தர்களும் என்னிடத்தில் கூறி விட்டார்கள் எதை என்று அறியாமலே!!!!

அகத்தியா!!!!  இதை என்று கூட இதைச் செய்தால் அவை நடக்கும் அவை செய்தால் இவை நடக்கும் எவை எதையோ செய்து கொண்டிருந்து மனிதர்களை திசை திருப்பிக் கொண்டிருக்கின்றான் அப்பனே மாய உலகில்.

அதனால் நிச்சயமாய் என் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களை யான் தண்டிப்பேன் அப்பனே!!!!

நிறுத்திக் கொள்ளுங்கள்!!!!

ஏற்கனவே தண்டனைகள் அதிகமாக கொடுத்துவிட்டேன் அப்பனே!!!!

ஆனாலும் எதை என்று அறிய ஆனாலும் பின் என்னையும் வணங்கி விட்டீர்கள்!!!!

ஆனால் லோபாமுத்திரையும் எவை என்று அறியாமலே பின் அகத்திய பெருமானே!!!!!......... எவை என்று கூட அன்பானவனே!!!! இதையென்றும் சிறிது நில்லுங்கள்!!! நில்லுங்கள்!!! என்றெல்லாம் நிச்சயம் லோபாமுத்திரையும் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றாள் அப்பனே!!! 

அதனால்தான் அப்பனே நிச்சயம் உயர்ந்த உள்ளங்களோடு இருங்கள் அப்பனே!!!! 

யாங்களே வருவோம்!!! உயர்ந்த உள்ளங்களோடு இல்லம் அமைப்பதற்காக அப்பனே!!!

இதனால் நிச்சயம் அப்பனே எதை என்று அறியாமலே அப்பனே பிறருக்காக போராடுங்கள்!!!! அப்பனே!!!

அவை விட்டுவிட்டு அதை செய்து தருகின்றேன் இதை செய்து தருகின்றேன் இவையெல்லாம் சொன்னால் அவையெல்லாம் நடக்கும் என்பதெல்லாம் பொய்களப்பா!!!!

நம்பி விடாதீர்கள்!!!!!

அப்பனே யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே ஆனாலும் பல சித்தர்களும் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றார்கள் அப்பனே!!!

விதியில் என்ன உள்ளது அதைத்தான் நிச்சயம் எவை என்று இவ்வுலகத்தில் நிச்சயம் நடந்தேறும் என்பேன்!!!

அவை தவிர்த்து விட்டு அப்பனே நிச்சயம் ஏதும் நடக்காது என்பேன்.

ஆனாலும் பின் எங்கள் போன்ற சித்தர்கள் நிச்சயம் விதியினை கூட மாற்றுவார்கள் அப்பனே!!! 

அதனால்தான் அப்பனே எதை என்று அறிய அதனால் என்னிடம் வந்து அதிக பாசத்தோடு........ """அகத்தியா!!!!! பின் ""அப்பனே!!!!! என்று சொல்லிவிட்டால் அப்பனே என்று யானும் கண்ணீர் விட்டு அணைத்துக் கொள்வேன் அப்பனே!!!!!!

அனைத்தும் செய்வேன்!!!!!

அதை மட்டும் பின் எதிர்பார்த்து மற்றவை எல்லாம் என்னிடத்தில் ஏதும் கேட்கத் தேவையில்லை அவசியம் இல்லை அப்பனே!!!!

ஒரு ஒரு பக்தனுக்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை கூட யான் அறிந்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே நலமாகவே நலமாகவே!!!

அதனால் இவ்வுலகத்தில் அப்பனே பல அழிவுகள் நிகழத்தான் போகின்றது என்பேன் அப்பனே!!!

அதை தடுப்பதற்காகவே அப்பனே நிச்சயம் அப்பனே யாங்களே பல மனிதர்களை உருவாக்குவோம் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே எதை என்று நேற்றைய பொழுதிலும் கூட அப்பனே இவையன்றி கூட(அமர்நாத் வாக்கு)  ஈசன் கூட அழிவுகள் அழிவுகள் என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றான்......... ஆனாலும் அப்பனே யாங்கள் நிச்சயம் எதை என்று அறியாமலே சில மனிதர்களை நிச்சயம் திருத்தி நல்வழிப்படுத்தி அப்பனே நல்லோர்களையாவது வாழச் செய்வோம் அப்பனே நிச்சயம் எதை எதை என்று கூட அப்பனே தீயவர்களும் நல்லோர்களை கூட கெடுத்து விடுகின்றார்கள் அப்பனே மாய உலகத்தில் அப்பனே!!!

இப்படி இருந்தால் என்னதான் நிகழப் போகின்றது??? அப்பனே!!!

யான் அபிஷேகங்கள்!!!! அப்பனே எதை எதை என்று கூட தின்பதற்கு உணவுகள்!!!! அப்பனே அவை மட்டும் இல்லாமல் அலங்காரங்கள்!!!! இவை எல்லாம் யான் கேட்பதில்லை!!! அப்பனே!!

அப்பனே நல்விதமாக அன்பைக் காட்டினாலே அப்பனே நிச்சயம் போதுமானது.... அவ் அன்பை காட்டி மற்றவை நீ செய்!!! அப்பனே!!!

மற்றவை எல்லாம் செய்து விட்டு அன்பை மட்டும் காண்பிக்காமல் போகின்றாயே !!!!பொய்யான மனிதா!!!!

 இவை எல்லாம் எப்படி யாம் ஏற்பது????

அதனால் நிச்சயம் அன்போடு செய்யுங்கள்!!! அனைத்தையும் ஏற்றுக் கொள்கின்றேன் அப்பனே!!!!

வரும் காலங்களில் பின் பல சித்தர்கள் எதை எதை என்று கூற அப்பனே எதனை எதனையோ நின்று கொண்டிருக்கும் பொழுது அப்பனே ஆனாலும் பல பரிசுத்த ஆன்மாக்கள் நிச்சயமாய் வழிவிடும் என்பேன் அப்பனே நல்விதமாகவே!!!!

அப்பனே ஓர் பிறவியில் அப்பனே ஒரு சிறுவன் இருந்தான்!!! அப்பனே ஆனாலும் அதை என்று உணர்ந்த அப்பனே அவந்தனுக்கும் பின் ஈசன் மீது பற்றுக்கள்!!!!

பலமாக பாடிய பாடல்கள் ஏராளம்!!! ஏராளம்!! அப்பனே!!!!

ஆனாலும் பாடிட்டு அப்பனே ஆனாலும் அன்னை தந்தையை இழந்து விட்டான் அப்பனே.

ஆனாலும் பின் அண்ணாமலையிலே எதை என்று அறியாமலே பல வழிகளிலும் கூட பல திருத்தலங்களுக்குச் சென்று அப்பனே பாடி துதித்து ஈசனையே!!!.....

ஆனாலும் அவந்தனுக்கு எதை என்று கூட அப்பனே ஆனாலும் அவந்தனுக்கு பெயர்கள் கெட்ட பெயர்கள் தான் உருவாயிற்று!!!!

இவ்வளவு பின் ஈசன் பக்தியுடன் இருக்கின்றானே!!!!!! என்று கூட பல மனிதர்கள் இவனை ஏளனம் செய்தார்கள்!!!!

அப்பனே இதை இதை என்று அறிய ஆனாலும் ஈசன் மீதே பற்று கொண்டான்!!!! பல ஆலயங்களுக்கு சென்றான் அப்பனே எவை எவை என்று உணராமலே...

இதனால் அப்பனே நல்விதமாகவே பின் உண்டு!!

ஈசனே பின் மறுவடிவில் வந்து அப்பனே யாரப்பா?? என்று கேட்க!!!

அப்பனே  எதையென்று அறியாமலே யானும் ஒரு ஈசன் பக்தன் என்று கூற!!!

அப்பனே இவையென்று உந்தனுக்கு!!!! என்னதான் வேண்டும்??? என்று கேட்க!!

அச் சிறுவன் அப்பனே!!! ஆனாலும் பின் வயது காலத்தில் பின்  எதையன்று அறியாமலே பின் அனைத்தையும் கேட்பார்கள்!!!!

திருமணம் வேண்டும் பணிகள் வேண்டும் பின் இன்பமாக வாழ வேண்டும் என்றெல்லாம்!!!!............

ஆனால் அவன் அச் சிறுவன் ஒரு வார்த்தை கூறிவிட்டான்!!!!!

"""""என் ஈசன் என்னிடத்திலே இருக்க வேண்டும்!!!!....... என்று கூட!!!!!!! 

ஆனால் வந்திருப்பது ஈசன் என்று அறியவில்லை!!!!

ஆனாலும் பின் ஈசனே!!! கண்ணீர் மல்க ஆனாலும் இதையன்றி கூட.....ஆனாலும்..... 

யான் தான் அப்பனே!!!! இவையென்று அறிய... பின் ஈசன்!!!!!!!!!!! என்று கூறிவிட்டு அப்பனே அணைத்துக் கொண்டான்!!!!!பின் அவந்தனையும். 

இச் சிறுவயதில் உனக்கு என்னதான் தேவை?? என்று கூட!!!!!

ஆனால் அச் சிறுவன் சொன்னான்!!!!! 

ஆனால் அவ் வயது அவந்தனுக்கு இல்லையே இல்லை !!!

ஆனாலும் அப்பனே இதை என்று அறிய ஆனாலும் கலியுகத்தில் கலியுகத்தில் மனிதர்கள் எப்படித்தான் வாழப் போகின்றார்கள் என்பதை கூட எந்தனுக்கு தெரியவில்லை!!! யானும் சிறுவயதிலே பல கஷ்டங்களை பட்டுவிட்டேன். 

உண்ண உணவில்லை!!!
உடுக்க ஆடை இல்லை!!!
இல்லமும் இல்லை!!!!
அன்னை தந்தையையும் இழந்து விட்டேன்!!!

ஆனாலும் வீடு வீடாகச் செல்வேன் ஆனாலும் ஒருவர் கூட பின் எதை என்று அறியாமலே!!!  இவந்தன் அனாதை என்று சொல்லிவிடுவார்கள்!!!

ஆனாலும் இதை என்று அறியாமலே!!!!!

 ஈசனே !!நீயே!! எந்தனுக்காக வந்துவிட்டாய்!!!!...என்று கூற!!!! 

ஆனாலும் போதாதது அதனால்தான் அப்பனே!!! பின் ஏழை!!!!!!

எதை என்று அறியாமலே ஏதும் தேவையில்லை!!!! என்று எவன் ஒருவன் சொல்லுகின்றானோ!!! அங்கு நிச்சயம் இறைவன் குடி கொண்டிருப்பான் அப்பனே!!!!

அவந்தனுக்கு தான் இறைவன் அனைத்தும் நல்குவான் என்பேன்!!!

அதை விட்டுவிட்டு அப்பனே அவை இவை தேவை என்றெல்லாம் அப்பனே நிச்சயம் இறைவன் கொடுக்க மாட்டான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

அதனால் உணர்ந்து கொள்ளுங்கள் அப்பனே அச்சிறு வயதிலேயே அனைத்தையும் பார்த்து விட்டான் எதை என்று அறியாமலே!!!

ஆனாலும் இவை இவை என்று அறிய ஆனாலும் எங்கெங்கோ சென்று சென்று ஈசனே இதை என்று அறிய ஆனாலும் அச்சிறுவன் ஈசனிடத்தில் கேட்டுக் கொண்டான்!!!

ஆனாலும் பின் அப்பனே எதை என்று ஆனாலும்!!!! ஒரு வார்த்தை( ஒரு கோரிக்கை ) 

உன்னை (ஈசனை) அப்பன்!!!!! என்று கூப்பிடலாமா????
என்று அச்சிறுவன்!!!! 

ஆனாலும் ஈசனோ!!!!!!!!!!!!!! 

அப்பனே!!! யான் உன்னைத்தான் (அச் சிறுவனை) அப்பன் என்று சொல்ல வேண்டும்!!!!!

இச்சிறுவயதில் இப்படி ஞானங்கள் ஆனாலும் என் மீது பக்திகள் என்று கூற!!!! 

உந்தனுக்கு என்ன தான் தேவை!??? என்று கூற!!! 

அச்சிறுவன் சொன்னான் ஒரு வார்த்தை!!!!!!

இவ்வுலகத்தில் நல்லோர்கள் வாழ்கின்றனர் அவர்களை காப்பாற்ற வேண்டும்!!!!

எதையெதை என்று கூற நல்லோர்கள் இருக்கின்றார்கள் ஆனால் ஏதும் இல்லாமல் இருக்கின்றார்கள்!!! அவர்களுக்கெல்லாம் நன்மை செய்ய வேண்டும் நிச்சயம் என்று கூற!!!!!

அதனால்  நமச்சிவாயனும் எதை என்று அறிய எதை என்று அறியாமலே நிச்சயம் நன்மைகள் செய்வேன் என்று கூட!!!!!


ஆனாலும் அது போலத்தான் அப்பனே ஏதும் இல்லாதவர்களையும் கூட பின் நல்விதமாகவே ஈசன் அணைத்துக் கொண்டு அணைத்து கொண்டு நன்மைகள் தான் செய்து கொண்டிருக்கின்றான்!!!!

ஆனாலும் அப்பனே அதை மீறி அப்பனே செல்வோர்களை தான் ஈசனும் தண்டித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!

ஈசனை!!! அப்பனே யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!!!!!!!!

கருணை உள்ளவன் அப்பனே!!!!

ஆனாலும் கோபம் வந்து விட்டால்!?!!!!! அனைத்தையும் அழித்துவிட்டு செல்வான்!!! அப்பனே!! சொல்லிவிட்டேன்.

அதனால் அப்பனே ஏமாற்றாதீர்கள்!!!! பக்தி என்ற நிலைக்கு வந்து ஏமாற்றாதீர்கள்!!! அப்பனே

ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன் இப்பொழுது!!! இங்கிருந்து!!!! அப்பனே
பக்திக்கு எதற்காக வருகின்றார்கள் என்றால் ஏமாற்றி பிழைப்பு நடத்துவதற்காகவே!!! 

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதற்காக ??

அன்பு எங்கு?? பாசம்!!! எங்கு??? எங்கு?? அமைதி!! அப்பனே!!!! எவை எவை என்று கூட அதனால் அப்பனே பல மனிதர்கள் இப்படித்தான் வருங்காலங்களில் யோசிப்பார்கள்!!!!

கலியுகத்தில் அப்பனே மனிதர்களுக்கு பல கஷ்டங்கள் வரும் பொழுது இறைவனிடத்தில் சென்று விட்டால் ஏதாவது வழியில் பிழைத்துக் கொள்ளலாம் என்று கூட ஆனாலும் இறைவன் கொடுப்பான் அப்பனே!!!

ஆனால் நீங்கள் நிச்சயம் நன்மைகளை செய்து நல்லதை செய்து தர்மத்தை கடைபிடித்து செல்லுங்கள் போதுமானது!!! அப்பனே!!
நல்முறையாகவே!!! 

அதை விட்டுவிட்டு அப்பனே எதைஎதையோ செய்து விட்டு அப்பனே மனக்குழப்பத்தை மனிதனுக்கு ஏற்படுத்திக் கொண்டால் அப்பனே நிச்சயம் உன் வாயால் உன் வாய்க்கு அழிவுகள் ஏற்படும்!!! என்பேன் அப்பனே..

அதனால்தான் சொல்லிவிட்டேன் அப்பனே வேண்டாம் அப்பனே!!!
எதை எதை என்று கூட இன்னும் ஏராளமான ஆசிகள் அப்பனே!!!

அதனால் நிச்சயம் கல்விகள் அப்பனே எவை என்று கூட பின் மேல் படிப்புகள் அப்பனே மருத்துவங்கள் இன்னும் மேற்படிப்புக்கள் தம் தன் பிள்ளைகளுக்காக பின் எண்ணி இங்கு வந்து சென்றால் எண்ணியவை நிச்சயமாய் இவ் ஆதிசங்கரனே கொடுப்பான் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் நிச்சயம் பல வழிகளிலும் உண்மைகள் புரியவரும் என்பேன். அப்பனே அதனால் படிப்புகள் மிகுந்த !!!ஸ்தலமப்பா (வித்யா பீடம்) இவையன்று கூற!!!! 

அதனால் எவை என்று அறியாமலே இன்னும் பல திருத்தலங்கள் தேங்கி நிற்கின்றது அப்பனே ஒவ்வொன்றையும் அங்கு நிச்சயம் சென்று அப்பனே எதை என்று அறியாமலே சென்று வழிபட்டு வந்தால் நிச்சயம் ஓங்கும் என்பேன் அப்பனே!!!! சில சில வழிகளிலும் கூட!!!

ஆனாலும் அவற்றிற்கெல்லாம் அத்திருத்தலங்களுக்கு எல்லாம் நிச்சயம் பின் விரதங்கள் கடைபிடிக்க வேண்டும்.

விரதம் என்றால் அப்பனே உண்ணாமல் இருப்பதல்ல!!!!!!!!

அப்பனே சரியாக நேர்மை நீதி பொய் சொல்லாமை அப்பனே எதை என்று கோபம் கொள்ளாமை அப்பனே எவை என்று கூற ஒரு உயிரை கொல்லாமை!!! அப்பனே எவர் மனதையும் புண்படுத்தாமை!!!! 

அப்பனே இவையெல்லாம் கடைப்பிடித்து அப்பனே இறைவனே எதை என்று கூட பல இயலாதவர்களுக்கும் அன்னதானத்தை அளித்து நிச்சயம் அத் திருத்தலங்களுக்கு சென்று வந்தால் அப்பனே இறைவனே உதவி செய்வான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

இன்னும் மாற்றங்கள் ஏராளம் இவ்வுலகத்தில் அப்பனே அதனால் நன்மைகளை செய்வதற்காகவே யான் பூலோகத்தில் நிச்சயம் திரிந்து கொண்டே இருக்கின்றேன்.... ஆனாலும் பல மனிதர்களை யான் பார்த்து விட்டேன்!!!

அகத்தியா!!! அகத்தியா!!! என்று என்னை சொல்லியும் கூட அப்பனே ஆனாலும் எதை என்று அகத்தியன் எந்தனுக்கு என்ன செய்தான் ????என்று கூட கூறிக் கொண்டே தான் இருக்கின்றார்கள் அப்பனே!!!

அதனால் நீ என்ன செய்தாய் ???முதலில்!!!
நீ எப்படி எல்லாம் இருக்கின்றாய்???

என்னைத்தான் நம்பினாயா???????????

எங்கெல்லாம் சென்று எதையெதையோ நம்பி எதை எதையோ பயன்படுத்தி மாந்திரீகத்தையும் எவை எவையோ வழிகளில் அப்படியெல்லாம் அவையெல்லாம் பயன்படுத்தி திரும்பவும் என்னிடத்தில் வந்தால்??......

 யான் என்ன?? நல்லது செய்வேனா??? என்ன??!!!

அதனால் நிச்சயம் அன்பை காட்டுங்கள் அன்பை காட்டுங்கள் அப்பனே!!! 

நல்முறையாக இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்கின்றன!!!! 
இன்னும் விளக்கமான வழிகளும் உண்டு உண்டு அப்பனே!!!

நல்லாசிகள்!!! நல்லாசிகள்!!! மீண்டும் வாக்குகள் செப்புகின்றேன்!!!!

ஆலயம் முகவரி மற்றும் விபரங்கள் 

சங்கராச்சாரியா ஜோதீஷ்வரர் ஆலயம். 
துர்க்ஜன். 
தால் ஏரிக்கரை. 
சங்கராச்சாரியா ரிசர்வ் பாரஸ்ட். 
ஸ்ரீநகர். 
ஜம்மு காஷ்மீர். 190001.

ஆலயம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை. 

கோடை காலத்தில் அதிகாலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை திறந்திருக்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........தொடரும்!

3 comments:

  1. சர்வம் சிவார்ப்பணம்,
    ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  2. அகத்தியா!!!!! அப்பா!!!!! அம்மா!!!!! அனைவருக்கும் நல்லருள் செய்வீர் ஞானக்கடலே. இந்த அருள்வாக்கை படிக்கும் பொழுது அருள்வாக்கின் எழுத்துக்களோடு கூடிய வாசகங்கள் மிகவும் மென்மையாக மிருதுவாக எம் பெருமான் மிகக் கருணையோடும் சிறு கண்டிப்போடும் மிகுந்த மிகுந்த அக்கரையோடும் மனிதர்களுக்கு உணர்த்தியிருக்கின்றீர் உரைத்தும் இருக்கின்றீர். ஈசனுக்கு மட்டுமா கருணை உள்ளம்!!!!! அதைவிட என் அப்பன் அகத்தியன் உமக்கு ஏக கருணை அனேக கருணை அதிக அதிக அதிக அதிகமான கருணை. நல்லோர்கள் வாழட்டும். தீயோர்கள் திருந்தட்டும். மனம் கனக்கிறது - மணக்கின்றது - மிகவும் நெகிழ்ந்துவிட்டேன் உங்களின் வார்த்தையில் வாக்கில் அருள்வாக்கில். மனித சமுதாயம் மேலும் மேலும் புண்ணியம் செய்து நல்வாழ்வு வாழ வழிகாட்டிக்கொண்டே வாருங்கள் அப்பா ஏனைய சித்தர்களுடனும். அகத்தியா அப்பா அம்மா என்னுடனும் இருங்கள்....

    ReplyDelete
  3. ஐய்யா அப்பாவிடம் தனிப்பட்ட வாக்குகள் கேட்க முடியாமல் இருக்கும் தற்போதைய சூழலில், சுவாமியின் இந்தப் பொது வாக்குகளில், இந்த அடி நாயின் வாழ்வுக்கும் சேர்த்து வாக்குறைத்தது போல் உள்ளது. லோபா அம்மா அகத்தீஸ் அப்பாவின் அருளாசி எப்போதும் வேண்டும் வேண்டும். குருநாதர் மலரடிகள் திருவடிகள் சரணம் சரணம் சரணம் , குருநாதரின் கருணைப் பிச்சைக்கு என் கடன் பணி செய்து கிடப்பதே அப்பா , காத்துக்கொண்டு இருக்கிறேன் ,🙇🙇🙇🙇🙇

    ReplyDelete