​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 11 August 2022

சித்தன் அருள் - 1172 - ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமானுக்கு சமர்ப்பணம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நம் குருநாதர் அகத்தியப்பெருமான் பல அடியவர்களுக்கும் அவர்கள் எண்ணத்தில் தோன்றி, அவருக்கு அபிஷேக பூஜைகளை செய்கிற உத்தரவை கொடுக்கிறார். சமீபத்தில், சென்னையில் வசிக்கும் ஒரு அகத்தியர் அடியவரின் நீண்டநாள் எண்ணமான, தரிசனத்தையும், அவருக்கு சேவை செய்கிற பாக்கியத்தையும் பலராம புறம் கோவிலில் நிறைவேற்றி வைத்தார்.

இன்றைய தினம் (11/08/2022-வியாழக்கிழமை அன்று) திருவோண/அவிட்ட நாளில் அவருக்கு குடும்பத்துடன் பலராமபுரம் வந்திருந்து அபிஷேக பூஜைகள் செய்து, வஸ்திரம் சார்த்தி, மாலை மரியாதைகளுடன், அவருக்கும், லோபாமுத்திரை தாய்க்கும், கல் பதித்த அட்டிகை, கிரீடம், போன்றவை அணிவித்து மனம் மகிழும் பாக்கியத்தை உருவாக்கினார். அவருக்கான மரியாதை மிக சிறப்பாக நடந்தது.

இதில், ஒரு சிறு அனுபவமும் கலந்துள்ளது. அடியேனும் ஒரு சில நண்பர்களும், அவருக்கு வெள்ளியில் கவசம் செய்து  சமர்ப்பிக்க தீர்மானித்திருந்தோம். அதற்கான வேலைகளில் இறங்கிய பொழுது, ஒரு நாள், திரு.ஜானகிராமன் (நாடி வாசிப்பவர்) அடியேனை அழைத்து, "ஒரு உத்தரவு உள்ளது எனக்கூறி" ஒளி நாடாவை அனுப்பித்தந்தார்.

அதில், "என்னுடைய விஷயத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் முருகனுக்கு கவசம் வரட்டும். அது வரை விலகி நில்லுங்கள்" என்றாரே பார்க்கலாம். எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம். இதென்ன? இப்படி ஒரு உத்தரவு?

"சரி! அப்படியே ஆகட்டும்! என முருகரின் கவசத்திர்க்கு ஏற்பாடு செய்யலாம் என்று தீர்மானிக்கும் முன், வேறொரு அகத்தியர் அடியவர் "முருகருக்கான கவசப் பொறுப்பை" வாங்கி சென்றுவிட்டார். எல்லாம் கை விட்டு போனது.

"சரி! இவர் எங்கு போகப்போகிறார், இங்கு வந்துதானே ஆக வேண்டும்! வரட்டும். அவராக கேட்கட்டும். அதன் பிறகு செய்யலாம்" என்று எல்லோரும் ஒதுங்கி நின்றோம்.

இப்படிப்பட்ட சூழலில், சென்னை அகத்தியர் அடியவரிடம் கல் பதித்த அட்டிகை, கிரீடம் உத்தரவு செல்ல, அவரும் வாங்கி, கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, அவர் விருப்பப்படியே மிகச்சிறப்பாக செய்து முடித்து விட்டார்.

எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியம். "ஏன் இப்படி!" என கேட்ட நண்பர்களுக்கு ஒரு பதில் தான் கூற முடிந்தது.

"எல்லாம் அவர் செயல். எல்லாவற்றிர்க்கும் ஒரு காரணம் இருக்கும். பொறுமையாக இருங்கள்" என கூறினேன்.

இன்று அலங்காரம் செய்து எடுத்த ஓரிரு படங்களை, உங்கள் பார்வைக்காக கீழே தருகிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.






சித்தன் அருள்........... தொடரும்!

5 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. தீயவை அழியட்டும் நல்லவை பெருகட்டும் தர்மம் ஜெயிக்கட்டும்

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நம... நலம் நலமே தொடரட்டும் அய்யனே... அனைவருக்கும் நல்லாசிகள் அருளி காத்தருளுங்கள்...

    ReplyDelete
  4. வணக்கம்.ஐயன் குறிப்பிட்ட அனைத்து ராசிகளின் பரிகாரங்களை தெரியப்படுத்தவும்.தயவு செய்து தவறு என்றால் மன்னிக்கவும்

    ReplyDelete