​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 4 May 2016

சித்தன் அருள் - 316 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!


"உலகியல் ரீதியான வெற்றி ஒரு மனிதனுக்கு இல்லையென்றால் அத்தனை எளிதாக விட்டுவிடுகிறானா? போராடிப் போராடி, அது வேண்டுமென்று அதன் பின்னால் செல்வது போல, நல்ல காரியங்களை, நல்ல அறச்செயல்களை, நல்ல தர்மங்களை தொடர்ந்து செய்ய, விதியே, ஒரு மனிதனுக்கு தவறாக எழுதப்பட்டிருந்தாலும், (அதாவது, அவன் இந்தப் பிறவியில் தவறே செய்து வாழவேண்டும் என்று இருந்தாலும்) கூட, அந்த விதி மெல்ல மெல்ல மாறத்துவங்கும். இஹுதொப்ப, ஒருவன் பருக வேண்டிய மோரிலே சிறிதளவு உப்பை சேர்க்கலாம். தவறுதலாக அதிக அளவு உப்பை சேர்த்துவிட்டால், "இல்லை இல்லை! இதை குடிக்க முடியவில்லை. உப்பின் சுவைதான் தூக்கலாக இருக்கிறது.  என்ன செய்வது என்று தெரியவில்லை! எனவே இதில் உள்ள உப்பை மட்டும் பிரித்துத் தா! என்றால், அது கடினம். அதற்க்கு பதிலாக என்ன செய்யலாம். இன்னும் சிறிதளவு மோரை ஊற்றி, உப்பின் அளவை அதன் மூலம் குறைக்கலாம். எனவே, ஏற்கனவே செய்த பாபங்களின் அளவை ஒரு மனிதன் பிறப்பிலிருந்து பிரிப்பது கடினம். ஆனால் மேலும், மேலும் புண்ணியத்தை சேர்க்க, பாவங்களின் அளவு குறையும், என்பதை  புரிந்து கொண்டிட வேண்டும். அதற்குத்தான் ஜீவ அருள் ஓலையிலே புண்ணியம், புண்ணியம், புண்ணியம், புண்ணியம் என்று ஒவ்வொரு மனிதனையும் அறச் செயல் செய்ய நாங்கள் தூண்டிக் கொண்டே இருக்கிறோம். ஏன் என்றால், இந்த புண்ணியத்தின் அளவு அதிகமாக, அதிகமாக, கரிக்கின்ற உப்பைப் போன்ற பாபங்களின் அளவு சரி விகிதமாகிவிடும் என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்."

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு! 

No comments:

Post a Comment