​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 25 May 2016

சித்தன் அருள் - 334 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!


"இல்லமும் ஒரு பணிபுரியும் இடம். கர்மவினையால் இந்த பணிபுரியும் இடத்திற்கு வந்திருக்கிறோம். வினைக்கு ஏற்ப உறவுகள் அமைந்திருக்கின்றன. இங்கே  செய்ய வேண்டிய பணிகளை செய்ய வேண்டும். ஆனால் தீவிர பற்றையோ, பாசத்தையோ வளர்த்துக் கொள்ளக் கூடாது என்ற அளவிலே மனதிலே எண்ணத்தை வளர்த்துக் கொண்டு அதனை முறையாக, ஒரு பயிற்சியாக  வித விதமாக ஒரு மனிதன் கையாண்டு பார்க்க வேண்டும். பல விதமான ஸ்தலங்களுக்கு சென்று பிரார்த்தனைகளை செய்து கொண்டே வர, மெல்ல மெல்ல அதீத பற்றும், பாசமும் குறைய, கட்டாயம் புலன்களை முழுமையாக வெல்ல முடியாவிட்டாலும், மெல்ல, மெல்ல வெல்லக் கூடிய நிலைமை வரும். பற்றையெல்லாம் விடு, பாசத்தையெல்லாம் விடு என்றால், கட்டிய கணவன் எங்காவது சென்று விடுவானோ? என்று மனைவியும், அல்லது தாரம் தன்னைவிட்டு எங்காவது சென்றுவிடுவாளோ? என்று கணவனும், அல்லது தாயும், தந்தையும் இப்படி ஆன்மிகம் பார்த்துக் கொண்டு தங்களை எல்லாம் விட்டுவிடுவார்களோ? என்று சேய்களும் எண்ணலாம். நாங்கள் அதனை கூறவரவில்லை. எல்லாம் செய்ய வேண்டும்; அதே சமயம் எதற்குள்ளும் ஆழ்ந்து விடக்கூடாது." அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!

No comments:

Post a Comment