​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 6 May 2016

சித்தன் அருள் - 318 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!


"கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் என்று எந்த கவசமாக இருந்தாலும் அதை ஒரு மனிதன் தன் சொந்த கவசம் என்று எண்ணி பாராயணம் செய்யாமல், பிறர் கஷ்டம் நீங்க பாராயணம் செய்தால் நன்றாக இருக்கும். ஏன் என்றால், இது போன்ற பாசுரங்களை இறை வழிபாட்டுப் பாடல்களைப் பாடியவர்கள் யாரும் தன் கஷ்டம் நீங்க வேண்டும் என்று பாடவில்லை. அதனால்தான் ஆதிசங்கரர் பிக்ஷை எடுத்தார். தனக்காக அன்னை மஹாலக்ஷ்மியை அவர் வேண்டவில்லை. பிறர் வறுமை நீங்கத்தான் வேண்டினார். எனவே இது போன்ற விஷயங்களை பிறர் துன்பம் நீங்க ஒரு மனிதன் பயன்படுத்தினால்  பலிதமாகும். அதிலேயே பிறர் நலத்தைப் பார்ப்பதால் அவன் பாபங்கள் குறைந்து அவனுக்கும் இறைவனருளால் நலம் கிட்டும்.  இவை எல்லாம் ஒன்றுதான்." அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

3 comments:

  1. Sir ungal mail address tharavum. Agathyar Lobamuthra photo anupukiren.

    ReplyDelete