​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 18 May 2016

சித்தன் அருள் - 328 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!


"தீபம் ஏற்றுவதும், தூப தீபங்கள் காட்டுவதும், மலர் ஆரங்கள் சாற்றுவது மட்டும் பூசை என்று எண்ணிவிடாதே. புற சுத்தியும், இது போன்ற தூப தீபங்களும் முக்கியம் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. இந்த சூழல் மனித மனதிற்கு, அமைதியையும், நெகிழ்ச்சியையும் தரலாம். ஆனால் இவைகள் மட்டுமே பூஜைக்குரிய விஷயமல்ல. மனம் பக்குவப்பட்டு (ஒரு கலையை ரசிக்கும் பொழுது, எப்படி அங்கே ஐம்புலன்களும் ஒடுங்குகிறதோ), இறைவன் மீது ஒடுங்க மனதிற்கு பயிற்சி தந்து கொண்டே இருக்க வேண்டும். மனம், வாக்கு, காயம், சிந்தனை புலன்கள் எல்லாம், வேறு எதனையும் நோக்கியும் சென்றிடாமல், இறை நாமத்தில், இறைவனின் திருவடியில், தனக்கு தெரிந்த இறை உருவத்தை எண்ணி பிறகு, அந்த உருவமும்  மறைந்து போய், நீக்கமற நிறைந்துள்ள அந்த பரம்பொருளின், திவ்ய தரிசனத்தை ஒளியாக, ஒலியாக, எஹ்தும் அற்ற நிலையாக, அது வேறு, தான் வேறு அல்லாத நிலைக்கு ஒன்றிவிடவேண்டும். செய்கின்ற வேலையிலே, தன்னை மறந்து ஒரு மனிதன் எப்படி விருப்பமுடன் ஈடுபடுகிறானோ, அதைப்போன்று, செய்கின்ற வழிபாடும், பூசையும்தான் உயர்ந்தது. எடுத்த எடுப்பிலேயே இது வராது என்றாலும், மெல்ல, மெல்ல முயற்சி செய்து மேலேற வேண்டும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு! 

2 comments:

  1. அய்யா நான் அகத்தியப் பெருமானை நேரடியாக பார்க்க வேண்டும். அவர் எங்கும உள்ளார்.

    ReplyDelete