​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 22 January 2026

சித்தன் அருள் - 2075 - அகத்தியர்!!! எத்தனை அகத்தியரய்யா! - பகுதி 3


சித்தன் அருள் 2061இன் தொடர்ச்சியாக......

2. பஹ்ருளி ஆற்று தலைப்பாச்சல் முத்தூர் அகத்தியர்! (காலம் - 14550 B.C )

இவர்  சூரபதுமன் காலத்துக்கு முந்தி இருந்த செங்கோவின் காலத்தில் வாழ்ந்தவர். பெருவள நாட்டில் இருந்த பஹ்ருளியாற்றின் தலைப்பாய்ச்சலில் உள்ள மூதூர் என்னும் ஊரில் வாழ்ந்தவர். 

பெருவள நாட்டிற்கு தெற்க்கே உள்ளது ஒளிநாடு. ஒளிநாட்டு வேளாளர் குடியை சேர்ந்தவன் செங்கோன் என்னும் அரசர்க்கரசன் (சக்ரவர்த்தி). இவன் வடக்கே திபெத் (Tibet) நாட்டையும், கிழக்கே கடாரத்தையும் (Burma) வென்று தமிழ்நாட்டுடன் இணைத்து அரசாண்டவன். 

இவன் காலத்தில் பெருவள நாட்டில் உள்ள மேரு மலைத்தொடரின் கொடுமுடிகளில் ஒன்றான மணிமலையை அரச இருக்கையாக்கி அங்கே தமிழ் சங்கம் ஒன்றை நாட்டி, முத்தமிழையும் வளர்த்து ஆட்சி புரிந்து வந்தான். 

இந்த மணிமலை தமிழ் சங்கத்தில் தலைமை புலவனாக சக்கரன் என்பவனும், முத்தூர் அகத்தியன் என்பவர் புலவராகவும் இருந்தார்.

இம்முத்தூர் புலவர் செய்த எந்த நூல்களும் கிடைப்பதிற்கில்லை. 

அக்காலத்தில் புலவர்களுக்கு, "எழுத்தச்சன்" "அக்கரக்கோ" போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டது. எழுத்தச்சன் என்றால், எழுத்துக்களுக்கு தகப்பன் என்று பொருள். அதாவது எழுத்துக்களினுடைய பிறப்பு  மற்றும், பன்னிரண்டு இலக்கணங்களை நன்றாக அறிந்தவன் என்று பொருள். எழுத்தச்சனுக்கு மேற்பட்ட பட்டம் "அக்கரக்கோ" என்பது. அதாவது எழுத்துக்களுக்கு அரசர்க்கு அரசன் (சக்கரவர்த்தி) என்பது பொருள். 

இமயமலைத் தொடரில் கயிலாயத்திலும், மலயமலைத் தொடரில் பொதிகை மலையிலும் மேருமலைத் தொடரில் மகேந்திர மலையிலும் மணிமலையிலும் தமிழ் வளர்க்கப்பட்டு வந்ததால் புலவர்கள் இவ்விடங்களை மிகவும் புகழலானார்கள்.

திருநெல்வேலி ஜில்லாவில், திருவைகுண்டம் தாலுகாவில், பெருங்குளம் (வழுதி மாநகரம்) என்னுமிடத்தில் செங்கோன் மேடம் என்று ஒன்று உள்ளது. இது ஒரு தனி மேடம், இதன் வரலாறு அறிய தக்கது. அதில் முத்தூர் அகத்தியரை பற்றிய சில குறிப்புகள் உள்ளன.

3. சூரபதுமன் காலத்து வாதாபி அகத்தியர் (ஒளியர்) (காலம் 14058 B.C)

இவர் சூரபதுமன் காலத்தில் வாழ்ந்தவர். வில்வலன், வாதாபி எனும் இருவர் மேற்கு மலையின் தொடரில் இருந்த குடகு மலையின் ஒரு பகுதியான மலையக்கூடத்துக்கு பக்கத்தில் உள்ள வாதாபி புரத்தில் இருந்து கொண்டு அதன் பக்கத்து நாடுகளை ஆண்டு வந்தனர். வாதாபிபுரம் (Badami) தற்போது ஹைதராபாத்துக்கு அருகில் உள்ளது. 

வில்வலன், வாதாபி இருவரும் மிக கொடுமையான அவுணர்கள் (நரமாமிசம் புசிப்பவர்கள்). குமரவேள் சூரபதுமன் மீது போர் தொடுத்த பொழுது, அகத்தியரை பெரும் சேனையுடன் வாதாபிக்கு அனுப்பி, வில்வலன், வாதாபி இருவரும் சூரபதுமனுடைய உதவிக்கு வராமல் பார்த்துக்கொள்ளவும், அவர்கள் இருவரையும் கருவறுக்கும்படி ஆணை தந்து அனுப்பினார்.

குமரன் ஆணையை சிரம் மேற்கொண்டு அகத்தியர் பெரும் சேனைகளுடன் வாதாபி சென்று பாசறை அமைத்துக்கொண்டு, வில்வலன்-வாதாபியுடன் போர் தொடுத்தார். அவ்விருவர்களின் வஞ்சப் போரினை அகத்தியர் நன்கு உணர்ந்து, வேண்டிய ஏற்பாடுகளை செய்து, இருவரையும் தாமே கொன்றார்.

அவர்களை கொன்ற பாபத்தை போக்க, கொங்கு நாட்டில் உள்ள திருத்துடிசையம்பதியில் உள்ள சிவபெருமானை வணங்கி தன் பாபம் போகப் பெற்றார். 

திரிபுரம் எரித்த விரிசடைப்பெருமானுக்கு எப்படி பொதியமலை அகத்தியர் உகந்தவரோ, அதுபோல் குன்றமெரிந்த குமரவேளுக்கு வாதாபி அகத்தியர் வேண்டியவர்.

இந்த வாதாபி அகத்தியர், குமரவேளிடமிருந்து சில நாடுகளை பெற்று பாண்டியனுக்கு கொடுத்தார் என்று திருநெல்வேலிப் புராணம் கூறுகின்றது. 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    நமக்கு தற்போது ஜீவ நாடி அருள்வாக்கு குடுப்பது ஐயா?
    அறியாமல் கேட்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம் ஐயா








    சித்தர்களு

    ReplyDelete