​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 18 September 2025

சித்தன் அருள் - 1936 - திரு ஹனுமந்ததாசனின் கஞ்சமலை வாக்கு - 2!




சித்தன் அருள் - 1935ன் தொடர்ச்சியாக.......

இதுவரை நடந்திடாத செய்தியடா! அகத்தியன் பொய்ச் சொல்லமாட்டேன், நடந்ததை உண்மையாக சொல்லுகிறேன், அகத்தியனுக்கு ஞாபகமறதி மிக அதிகம்  என்று எல்லோரும் சொல்லுவார்கள், அதை நினைவு கொண்டு சொல்லுகிறேன், முன் இதுபோல் காலங்கிநாதன் ஒருபொழுதும் மனிதர்களை வரவழைத்து, தன் இருப்பிடத்திற்கு வரவைத்து, எதோ சொல்லப் போகிறாரே, அது என்னவென்று, எனக்கு இன்னும் தெரியவில்லை. அவர் வரவழைத்தது மிகப்பெரிய காரியமடா.  அவர் சொல்லி நீங்கள் எல்லோரும், எத்தனையோ இடையூறுகள் இருந்த போதும், எத்தனையோ பிரச்சனைகள் இருந்தபோதும், எத்தனையோ போராட்டங்களை தினம் தினம் சந்தித்து கொண்டிருக்கிற வேளையிலும் கூட, அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, காலாங்கிநாதன் சொன்னான், அகத்தியன் சொன்னான் என்று அத்தனையும் தூக்கி எறிந்துவிட்டு ஓடி வந்திருக்கிறீர்களே, உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்? என்றுதான் கேட்பேன். மனிதனல்ல நான் நன்றிக்கடன் செய்வதற்கு. சித்தனாகி இருந்தால் கூட, ஓ எனக்கும் சில கடமைகள் உண்டு. அதை கடமைகள் எல்லாம் நினைத்து பார்க்கும்பொழுது எல்லாம், என் பேச்சுக்காகவும், காலாங்கிநாதன் சொல்லுக்காகவும் கேட்டு, நீங்கள் எல்லாருமே எல்லா வேலைகளையும் விட்டு, எல்லா பிரச்சனைகளையும் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, ஓடிஓடி இங்கு வந்திருக்கிறீர்களே ! உங்களை நான் எப்படி பாராட்டுவேன் !

எவ்வளவு பெரிய பாக்கியம் நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று நான் சொல்லமாட்டேன், நான் நிறைய பாக்கியம் செய்திருக்கிறேன் என்று சொன்னால், அதை தற்புகழ்ச்சியாக எண்ணக்கூடாது. அகத்தியனுக்கு எதற்கு தற்புகழ்ச்சி என்று கேட்காதே ? எல்லாவற்றையும் துறந்தவன் என்றாலும் கூட, அகத்தியன் சொன்னதற்கு ஒரு கட்டளைக்கு தலை வணங்கி ஓடோடி வந்திருக்கின்ற நீங்கள் எல்லாம், மிகவும் புனிதமானவர்கள்! உங்களுக்கு ஏதேனும் கைமாறு செய்யவேண்டும்.

ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். சமீப காலத்தில் நேபாள நாட்டிற்கு நான் சென்றபொழுது, எனக்காக கொடுக்கப்பட்ட 144 கோடி ஜெபங்கள், பிரார்த்தனைகளை எனக்கு வாங்கிக் கொண்டு, அந்த புண்ணியத்தை வாங்கி கொண்டு வந்தவன். இடையிலே ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்ட பொழுது, என் மகிழ்ச்சியின் காரணமாக இங்கிருக்கிற சிலருக்கெல்லாம், அங்கு யாம்பெற்ற 144 கோடி புண்ணியத்தை, ஒருகோடி புண்ணியத்தை அவர்களுக்கு வழங்கியிருக்கிறேன். மறுபடியும் இங்குக்கிருக்கிற சிலருக்குக்கூட, இங்கு வராத்திருக்கிற சிலருக்கு கூட, ஏன் யாம் பெற்ற அந்த 1 கோடி புண்ணியத்தயும் தாரை வார்த்து கொடுத்திருக்கிறேன். ஆக மீதம் இருக்கிற இந்த புண்ணியத்தை வைத்து அகத்தியன் என்னடா செய்யப் போகிறேன். ஆக காலாங்கிநாதன் வேண்டுகோளுக்கு இணங்க அன்னவன் பிறந்திட்ட இந்த புனிதமான நாளுக்காக, அந்த 144 கோடிகள் நான் குடுத்த புண்ணியங்கள் தவிர மீதம் இருக்கிற புண்ணியத்தில் ஒருபகுதி மட்டும் வைத்துக்கொண்டு பாக்கி அத்தனையும், இங்குள்ள அனைவருக்கும், இந்த நேரத்தில் நான் தாரைவார்த்து கொடுக்கிறேன் ! அந்த புண்ணியங்கள் எல்லாமே உங்களுக்கு வந்து சேரட்டும்! ஏன்னென்றால் நீங்கள் எல்லாம் இந்தப் புண்ணியம் பெறுவதற்கு பலஆண்டுகள் தவம் இருக்க வேண்டும். பலகோடி த்யானங்கள் செய்திருக்க வேண்டும். பல புண்ணிய நதியில் நீராடியிருக்க வேண்டும், பலகோடி தரும் உத்தமமாக, சுத்தமாக இருந்து தவம் பண்ணியிருக்க வேண்டும், மந்திரங்களை ஜெபித்திருக்க வேண்டும், ஆனால் அதையெல்லாம் இல்லாமல், அத்தனையும் தாண்டி, உங்களுக்கு இந்த நல்ல நாளில், என்னருமை நண்பருக்காக, அன்னவன் குடுத்த வேண்டு கோளுக்காக, இங்குள்ள அனைவரும் புண்ணியசாலிகள்! மிகமிக புண்ணியசாலிகள்! அவர்களுக்கு மறுபிறவி இல்லை எல்லாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இங்கு கிடைக்காத ஒருசிலருக்கு கூட, இன்றையதினம் காலாங்கிநாதர் தன் வாக்கிற்கு சொல்லியிருக்கிறார், இங்குள்ள சிலர் மிக விரைவிலே, தன் ஆயுள்காலத்தை முடித்துக் கொண்டு போகும் பொழுதெல்லாம், மண்ணோடு மண்ணாக, ஐம்பூதங்களில் ஒன்றாக கலக்கப் போவதில்லை. அன்றைக்கே சொன்னேன், ஏதேனும்  ஒன்றை செய்ய வேண்டுமென்று சொன்னேன், காலாங்கிநாதர் என்னிடம் கேட்கின்றார், அவர்களையெல்லாம் எதாவது ஒரு வழி செய்து, நிரந்தரமாக விண்ணிலே நட்சத்திரமாக மின்ன வைக்கக்கூடாதா? என்று கேட்கிறானே? அவனுக்கு காலங்கிநாதருக்கு எதாவது நான் செய்ய வேண்டாமா?  அன்னவன் பிறந்தநாளில் எனக்கு விண்ணப்பம் விடுகின்றான்! இங்குள்ள மனிதர் சிலரை விண்ணிலே  நிரந்திரமாக, துருவ நட்சத்திரம் போல் சொல்லுகிறார்களே, அதுபோலத்தான் ஆக்கலாமா என்று என்னை கேட்கிறான்? நான் விதிமகளிடம் ஒரு வார்த்தை கேட்கிறேன், அவள் சம்மதித்தால் இங்குள்ள ஒருசிலருக்கு அந்த புண்ணியம் கிடைக்கும்! இவர்களுக்கு மறைவு என்பது இல்லை! விண்ணிலே மின்னலாக ஒளிவிடும் நட்சத்திரமாக ஜொலிக்கப் போகிறார்கள்! எத்தனை பிரளயங்கள் வந்தாலும் சரி, அத்தனை இடர்பாடுகள் உலகத்தில் ஏற்பட்டாலும் சரி, என்னன்னவோ நடந்தாலும் சரி, அவர்கள் அத்தனை பேருக்கும் அந்த விண்ணிலிருக்கும் நட்சத்திரங்களாக பாக்கியம். அவர்கள் தேவர்களை விட அதிகமானவர்கள். தேவர்களுக்கும் அழிவு உண்டு அசுரர்களால். கோபங்கள் நிறைய ஏற்பட்டு, சாபங்களாலும் அழிவு உண்டு. இந்திரனே சாபம் ஏற்பட்டு போனவன் தானடா. ஆகவே தேவர்களையும் தாண்டி விண்ணிலே உயர்ந்த நிலை அடைய வேண்டுமென்றால் எத்தனைபேருக்கு கிடைக்கும்? அந்த ரகசியங்களை, அந்த பாக்கியத்தை இங்குள்ள ஒரு சிலருக்கு இன்றைய தினம் காலாங்கிநாதர் வேண்டுகோளுக்கு இணங்க விதிமகள் துணையோடு, பிரம்மா, விஷ்ணு துணையோடு, அன்னவரும் ப்ரரம்மாவும் வந்திருக்கிறார், விஷ்ணுவும் வந்திருக்கிறார், என்னப்பன் முருகனும் அருகிலே இருக்கிறார் !

அன்னவனும் தன் வேல்கையால், ஆனந்தமாக  மாலைசூட்டி மகிழ்விப்பது போல, கழுத்திலே மாலை சூட்டி மகிழ்விப்பது போல, வேலால் மாலை சூட்டுவது மிகப்பெரிய புண்ணியம்! அப்படிப்பட்ட இங்குள்ள சிலருக்கு விண்ணிலே நிரந்தரமாக, நட்சத்திரமாக, கடைசி வரை நட்சத்திரமாக ஜொலிக்கின்ற பாக்கியம் கிடைக்கபோகின்றது !யாரென்று பின்னால் சொல்லுகின்றேன். இப்பொழுது சொன்னால் நல்லதல்ல. ஆனால் அந்த பாக்கியம் செய்த பாக்கியவான்கள் இங்கு அமர்ந்திருக்கிறார்கள்! இது அகத்தியனாக குடுக்கின்ற பரிசு அல்ல. காலாங்கிநாதரே வரச்சொல்லி ஆனந்தத்தோடு, தன் கழுத்திலிருந்த ருத்ராட்சம் மாலை போட்டுக்கொள் என்று சொன்னான் !

அது சிவபெருமானுக்கே இணையான ருத்ராட்சமடா !  சிவபெருமான் கழுத்திலே இருந்த ருத்ராட்சம் உன் கையில்  எடுத்து கொடுத்துவிட்டு, நீ அணிந்துகொள் என்று சொன்னால்? நீ சிவபெருமனாகிவிடுவாய்! காலாங்கிநாதராக இங்கு சிலர் ஆகப்போகிறார்கள்! காலாங்கிநாதர் சொல்லுகிறார், எனக்கு பிறகு என் பேர் சொல்லுவதற்கு ஒரு வாரிசுகள் வேண்டும், பல வாரிசுகள் வேண்டும், பல அன்பர்கள் வேண்டும், பல பக்தர்களும் வேண்டும் என்று கேட்டார். இங்குள்ள அத்தனை பேருமே காலாங்கிநாதரின் பக்தராக அகத்தியன் மாற்றிக் காட்டுகிறேன் !

காலாங்கிநாதருக்கு பக்தராக இருந்தால் என்ன? அகத்தியனுக்கு சீடனாக இருந்தால் என்ன? அதெல்லாம் ஒன்று தான். எனக்கும் காலங்கிநாதருக்கும் எந்த வேறுபாடும் இதுவரைக்கும் கிடையாது. ஏற்கனவே முன்புவரை உரைத்திருக்கிறேன், சிலசமயம் அனுமன்மைந்தன் கூட, அதை சில பத்திரிகைகளுக்கும் எழுதி இருக்கிறான்.  அனைத்து உலகமே ப்ரளயமாக ஏற்பட்ட பொழுது இரண்டே இரண்டுபேர் தான் உலகத்தில் வாழ்ந்தார்கள். ஒன்று அகத்தியன்,  இன்னொருவர் காலங்கிநாதன் என்றுகூட சொல்லுவதுண்டு! அந்த காலாங்கிநாதரின் வேண்டுகோளை அகத்தியன் இப்போது நிறைவேற்றுகிறேன். ஏனென்றால், அன்னவன் மனம் பொதுவாக சாந்தி அடையாது, அவன் எளிதில் சமாதானமடைய மாட்டான், வியத்தகு வித்தகன், சித்தத்திலே  உயர்ந்த நிலை அடைந்தவன் அன்னவன்! அன்னவன்  வித்தகன் அல்ல, அப்படிப்பட்ட வித்தகனுக்காக, அகத்தியன் குடுக்கின்ற மருந்துதான் மாமருந்து தான் இதுதான். ஆகவே அத்தனையும் தாண்டித்தான் இங்குள்ள அத்தனை பேரும் வந்திருக்கிருறீர்களே ! உங்களுக்கு எல்லாம் நினைவு பரிசு ஒன்று கொடுக்கு வேண்டும் என்பதற்காகத்தான், காலாங்கிநாதர் உங்களை வரச்சொன்னானோ என்னவோ என்று தெரியவில்லை, அவன் முதலில் கையை பிடித்து கேட்டான், என் அருமை நண்பர்களுக்கு, என் வேண்டுகோளுக்கு ஏற்று இங்கு வந்தவர்களுக்குஎல்லாம் நல்லதொரு வழிதனை காட்டு, அவர்கள் உடலிலுள்ள நோய்களையும், குடும்பத்தில் உள்ள கஷ்டங்களையும் போக்கு, அதுமட்டுமல்ல அவர்களுக்கு பின்னால் எந்தவித சந்ததிகளும், எந்தவித குறையுமில்லாமல் வாழ்வாங்கு வாழவைக்க வேண்டுமென்றெல்லாம் கேட்டுக் கொண்டான். அவன் பிறந்தநாளில் அகத்தியனிடம் பல கோரிக்கைகள் வைக்கின்றான். அவனே செய்ய முடியும். அவனே அருபெரும்கரியங்களை அகத்தியன் துணையில்லாமல் செய்யமுடியும். ஆனால் தலையாய சித்தன் என்பதாலோ? தலைமை பீடத்தில் அகத்தியன் இருக்கிறேன் என்பதாலோ? தெரியவில்லை, என்னையும் மதித்து இந்த வேண்டுகோளை விடுத்தான். அந்த வேண்டுகோளை உங்கள் சார்பாக நானே ஏற்று, இங்குள்ள அத்தனைபேருக்கும் காலங்கிநாதரின் முழுப்பயன் தவசு பயன் அன்னவன் செய்த தவம் ஏறத்தாழ 3747 ஆண்டுகள் கடுமையாக தவம் செய்திருக்கிறான்! அந்தரத்தில் நின்று தவம் செய்திருக்கிறான்! அக்னிமேலிருந்து  தவம் செய்திருக்கிறான்! ஓடுகின்ற நீரிலே உட்கார்ந்து கூட நீரின் வேகத்தை கூட பொருட்படுத்தாமல் அசையாமல் தவம் செய்திருக்கிறான்! நீருக்குள் அமர்ந்து கொண்டும் தவம் செய்திருக்கிறான்! வானத்தில் இருந்து கொண்ட நட்சத்திரமாக கூட தவம் செய்திருக்கிறான்! அத்தனை தவத்தின் பலனை எல்லாம் எனக்கு எதற்கடா இனிமேல், என்னருமை மாந்தர்களுக்கு, என் பக்த்தர்களுக்கு பிரித்து கொடுக்கலாம் என்றுசொல்லி, சொத்தை பிரித்து கொடுப்பதுபோல, தான் புண்ணியத்தை குடுக்க நினைக்கிறான். அந்த புண்ணியமும் உங்கள் அத்தனை பேருக்கும் வந்து சேரும். இன்னும் 45 நாளில் அந்த நல்லதொரு எண்ணம் உங்கள் மனதிலே தோன்றும். இந்த உலகிலே அந்த அதிர்வலை ஒளிக்கற்றை ஆனது உங்கள் உடம்பிலே தோன்றும், உங்கள் எண்ணங்கள் வெளிப்படும்,  காலாங்கிநாதர் தன் நினைவு பரிசாக, இன்றைய தினம் அவன் பிறந்தநாள் என்பதால் அவன் அகத்தியன் மூலம் கொடுக்கின்ற அன்பு பரிசு ! இங்குள்ள அத்தனை பேருக்கும் வந்து சேரும்! ஆக இன்னும் 45  நாட்களில், இங்குள்ள அத்தனை பேருக்கும் ஏதேனும் விதத்தில் மிகச்சிறந்த ஒருவித்யாசமான நல்லதொரு மகிழ்வான, இயல்பான, சந்தோஷமான, ஆனந்தமான எதோ செய்திகள் கிடைக்கும் !

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

7 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் காலங்கி நாதர் சித்தர் அப்பன் திருவடிகள் போற்றி போற்றி
    ஓம் ஞான குருநாதர் அகத்தியர் சித்தர் அப்பன் திருவடிகள் போற்றி போற்றி

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  4. அக்னிலிங்கம் ஐயா வணக்கம், காலங்கிநாதரும் புசுன்டரும் ஒருவரா?

    ReplyDelete
    Replies
    1. அடியேனுக்கு தெரிந்தவரை இருவர். அதில் காகபுசுண்டரை பற்றி அதிகம் தகவல் இல்லை. காலாங்கி நாதர், திருமூலரின் சிஷ்யர், போகர் பெருமானின் குரு.

      Delete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete