​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 30 June 2023

சித்தன் அருள் - 1353 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் பிரார்த்தனை!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

காலம் காலமாக இறைவன் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்த அடியவர்கள் பாடலாகவும் பதிகமாகவும் மனமுருக பாடி இறைவனை தொழுது பக்தி நெறியை செலுத்தினர்!!!!!

எந்த இனமாக இருந்தாலும் சரி எந்த மொழியாக இருந்தாலும் சரி இறைவனை மனதுருக வேண்டி பாடுவது எல்லா காலகட்டங்களிலும் நடந்திருக்கின்றது எல்லாம் மொழிகளிலும் இருக்கின்றது!!!!


இறைவனுக்கு சொந்தமான மொழிகளில் அதுவும் தமிழில் தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் திருமுருகாற்றுப்படை கந்தர் அனுபூதி கந்தர் அலங்காரம் என நாயன்மார்கள் ஆழ்வார்கள் முதற்கொண்டு நக்கீரர் அவ்வையார் அருணகிரிநாதர் என இறைவனை மனதார தொழுது நடந்து அழுது காதலாகி கசிந்து உருகி பதிகங்களை பாடினர் அந்த பதிகங்களின் வழியாக நாமும் அதை படித்து நாமும் பாடி இறைவனை வழிபாடு செய்கின்றோம்.


அந்த வகையில் நம் குருநாதர் அகத்தியர் பெருமானை குறித்து அகத்தியர் அடியவர்கள் பாடல்களாகவும் எழுதி அவர் மீது கொண்டுள்ள பக்தியை மனதில் எண்ணி  பதிகங்களாகவும் எழுதி போற்றி துதித்து பாடி வணங்கி வருகின்றனர்.


இதில் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் நம் குருநாதர் அகத்தியர் பெருமான் சீடரான புலத்திய மகரிஷி நம் குருநாதரை எண்ணி எண்ணி மனம் உருகி உருகி வணங்கி வணங்கி பொதிகை மலை உச்சிதனில் தன் வாக்கின் மூலம் நம் குருநாதன் மேல் கொண்ட பக்தியை காதலாகி கசிந்து உருகி உரைத்த வாக்கே ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும்.

பக்திமான்கள் ஞானிகள் மனிதர்கள் எழுதிய பாக்களை நாம் கேட்டிருக்கின்றோம் படித்திருக்கின்றோம்.


ஆனால் பிறப்பு இறப்பு வயது மூப்பு காலம் இவற்றையெல்லாம் கடந்து வாழும் சித்தர்களில் நம் குருநாதரின் சீடராக இருந்து கொண்டு அகத்திய பெருமானை குறித்து புகழ் மாலை சூட்டி புலத்தியரின் இந்த வாக்கினை நாம் அனைவரும் அன்றாடம் குருவை நினைத்து தொழுது வணங்கி பிரார்த்தனைகள் பூஜைகள் செய்யும் பொழுது புலத்தியர் மகரிஷி எப்படி எல்லாம் தன் குருநாதரை உருகி பாடினாரோ!!!!

அதே மாதிரி நம்மை அந்த இடத்தில் வைத்துக்கொண்டு நம் குருநாதரை புலத்திய மகரிஷியின் வாக்கினை வாக்காக பார்க்காமல் ஒரு பதிகம் என கருதி அனுதினமும் பாடி வணங்கி வருவோம்!!!


சித்தர்களின் போக்கு சிவன் போக்கு மட்டுமல்ல சித்தர்களின் வாக்கும் சிவன் வாக்கு ஆகும்.

மாணிக்கவாசகர் மனமுருகி பாடிய பொழுது அதை ஏற்றுக் கொண்டு தன் கைப்பட எழுதி அரவணைத்த எம்பெருமான் ஈசன் கருணையை நாம் அறிவோம்.

மனிதனாகப் பிறந்து மாணிக்கவாசகனார் பக்தியுடன் எழுதியதை ஏற்றுக் கொண்ட ஈசன் அதுபோல் சித்தராக இருந்து பாடிய பதிகத்தை நம் குருநாதரும் பெருமையோடு ஏற்றுக் கொள்வார் நாமும் இலக்கிய மகரிஷியின் இந்த வாக்கினை அனுதினமும் அகத்திய மகரிஷி போற்றி திரு அகவல் போல எண்ணி அன்றாட வழிபாட்டின் போது இந்த வாக்கினை அதாவது இந்த பதிகத்தை பாடி நாமும் தொழுவோம்!!!

இந்த வாக்கினை இசை ஆர்வம் உள்ளவர்கள் இதை பாடலாகவும் ராகத்துடன் கூடிய இசையாக வெளிப்படுத்தி அனைவருக்கும் தெரியப்படுத்தினாலும் மிக்க பெரும் உபகாரமாக இருக்கும் காலம் காலமாக கடந்து நிற்கும் அகத்தியர் போற்றி பாடல்களில் புலத்திய மகரிஷியின் புகழ் மாலையாக பாடிக்கொண்டே இருக்கும் வருங்கால சமுதாயமும்!!!!!

அகத்தியர் கூடத்தில் புலத்தியரின் புகழ் மாலை!

புலத்தியனின் புகழ்மாலை!!!!

உலகத்திற்கெல்லாம் ஆதிகுருவான எங்கள் அகத்தியனை பணிகின்றோம்

குருவா!!!!!!!

முதல்வா!!!!!!

முத்தமிழ் இறைவா!!!!!

இறைவா!! என் மனதில் அன்பான வடிவத்தில் குடி கொண்டிருக்கும் பின் அனைத்தும் நீயே!!!!!

முத்தா!!!

முதல்வா!!!!

இளஞ்செழியனே!!!!!!

கந்தா!!!!

கடம்பா!!!!!

ஈசா!!!!!!

அனைத்தும் நீயே!!!!!

வருபவருக்கெல்லாம் அள்ளிக் கொடுப்பவனே!!!!!

அனைத்தும் நீயே!!!!!

ஏமாற்றுபவர்களையும் கூட திருடர்களையும் கூட பின் அரவணைத்து செல்லும் என் குருநாதருக்கு மிஞ்சிய குரு இவ்வுலகத்தில் இல்லை!!!!!

என் குருவானவனே!!!!! எதை அனைத்தும் தெரிந்தவன் அனைத்தும் தெரிந்தவன்!!!!!

அனைத்து தெய்வத்திற்கும் கூட பின் உபதேசம் செய்பவன்!!!!!

ராமனுக்கும் கூட!!! சீதைக்கும் கூட!!!! கிருஷ்ணனுக்கும் கூட!!!! பஞ்ச பாண்டவர்களுக்கும் கூட!!!! இன்னும் ஏனைய ஞானிகளுக்கும்!!!!!

பல பல பல சீடர்களையும் கூட உருவாக்கும் தகுதி!!!! என் மைந்தன் இனிமேலும் என் மைந்தன் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இறைவா என் மனதில் உள்ள குறைகளையும் நீக்குவாயாக!!!!

நீக்குவாயாக மனிதர்களை வரும் காலங்களில் கலியுகத்தில் நிச்சயம் நல்வழி படுத்துபவனே உன்னை வணங்குகின்றேன் லோபா முத்திரையோடு!!!!!

அன்பானவனே!!!!!

பண்பானவனே!!!!!

பாசத்திற்கு அடையாளமே!!!!

கருணை உள்ளம் கொண்டவனே!!!!!

உன்னை யான் எப்படி பாடுவது!???
எப்படி துதிப்பது????

உன்னை அகத்தியா என்று சொல்வதற்கும் பின் எவை என்று கூட யான் எத்தனை ஜென்மத்தில் புண்ணியங்கள் செய்தேனோ!!!!!!!!!!!!!!!

(அகத்தியா என்று சொல்வதற்கு எத்தனை ஜென்மங்கள் நாங்கள் புண்ணியம் செய்தோமோ)

இவ் புலத்தியன்  இவ் அடிமை என்னையும் கூட இத் திருடனையும் கூட அதாவது பின் நாயினின் கூட அதாவது இன்னும் விலங்கினின் கூட கீழானவனையும் கூட பின் சீடனாக அதாவது புலத்தியனை சீடனாக ஏற்று கொண்டமைக்கு.... எவை யான் உன்னை எப்படி எதை அறிந்து !!!!!

 ( நாயிற்கடையேனின் கடையேனுக்கும் கடையேன் ஆகிய திருடர்கள் எங்களையும் உங்களை வணங்க வைத்த )

இறைவா!!! இறைவா!! நீயே அனைத்தும்!!!!

நீயே ஈசன்!!!!!

நீயே விஷ்ணு!!!!

நீயே பிரம்மா!!!!

அறிந்து அறிந்து அனைத்தும் உன்னிடத்திலே இருக்கின்றது!!!!!!!!!!!!!! அதை வைத்துக் கொண்டும் நிச்சயம் ஒன்றும் தெரியவில்லையே என்றெல்லாம் ஒன்றும் தெரியவில்லை என்றெல்லாம் கருணை உள்ளம் படைத்தவனே!!!

அனைவருக்கும் உதவிகள் செய்யும் உன்னுடைய அருளால் அருளால் இவ்வுலகத்தை வெல்வாய்!!! அனைத்து சித்தர்களையும் கூட வெல்வாய்!!!! வென்று விட்டாய்!!!!
அனைத்து சீடர்களையும் கூட வென்று விட்டாய்!!!

என் மனதில் அழகாகவே குடி கொண்டிருக்கின்றாய் இறைவா!!!!!

அகத்தியா!!!!!!

அப்பா!!!!!!!

எதை என்றும் அறிய அறிய உன்னை அகத்தியன் என்பதா?????

இறைவன் என்பதா???!

இன்னும் கருணை என்பதா?????

அன்பிற்கு அன்பான வடிவம் என்பதா????

பாசம் என்பதா?????

புரியவில்லை புரியவில்லை நிச்சயம் எதை என்று அறிய அறிய!!!

இன்னும் இன்னும் எப்பிறப்பு எடுத்தாலும் நீ எதை என்று உடம்பினுள் உயிர் இருக்கின்றதா? உயிருக்குள் உடம்பு இருக்கின்றதா? என்பதை எல்லாம் தெரியப்படுத்த ஆளில்லை இவ்வுலகத்தில்!!!!!!

அகத்தியனை அதாவது என் தந்தையை நிச்சயம் இவ்வுலகத்தில் யார் தெரிந்திருக்கக் கூடியவர்கள் நிச்சயம் இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் என் (நம்) அப்பன் அதாவது என் குருவானவனை பற்றி யாரும் இவ்வுலகத்தில் தெரிந்திருக்க கூடியது ஒரு துளி கூட இல்லை!!!

என்(நம்) தந்தை அகத்தியனை வழிபடுவதற்கும் கூட (நாங்கள்) நீங்கள் ஏதோ ஒரு தலத்தில் எதை என்றும் அறிய அறிய பிறந்து பின் எவை என்று கூட அதனால் பல பிறவிகள் கடந்து கடந்து வந்தால் தான் என் குருவானவனையும் கூட அகத்தியா என்ற பெயரை அழைத்து நீங்கள் முற்று ( முக்தி)

( நாங்கள் அழைத்தால் எங்களுக்கு முக்தி)

எவை என்று கூட பின் அதாவது என் தந்தையை அகத்தியா என்று அழைத்து விட்டாலே போதுமானது மோட்ச பிறவி தான் உங்களுக்கு!!!!!!!!

(அப்பா என்று அகத்தியனை அன்போடு அழைத்தால் நமக்கு மோட்சமே)


அனைவருக்குமே!!!!!!!

அப்படிப்பட்டவன்!!!! (நம்) என் குருவானவன்!!!!!

ஆதி குருவானவன்!!!!!

கருணை வடிவானவன்!!!!

எங்கும் பரந்து நிற்பவன்!!!!
ஒளி வடிவமாக!!!!!!

அப்பா!!!! என்று அழைத்தாலே ஓடோடி வருபவன்!!!!!

உலகத்தில் உள்ள அனைத்தும் கற்று உணர்ந்தவன்!!!!!

இன்னும் சொல்லத்தான் போகின்றான் இவ்வுலகத்தில் புதுமையான விஷயங்களை உலகத்திற்கு கொண்டு வந்து இவ்வுலகத்தையே மாற்றப் போகின்றான் என் குருநாதன்!!!!

குருநாதா!!!!!! குருநாதா!!!!!

போதும் உன்னுடைய பொறுமை பொறுத்தார் பூமி ஆள்வார் என்றெல்லாம்.... நீ எந்தனுக்கு (எங்களுக்கு) சொல்லி சொல்லி வளர்த்தாய்!!!

இன்னும் பொறுக்க வேண்டாம் மனிதர்களுக்கு நல்வழிப்படுத்தி இன்னும் பல கஷ்டங்களையும் நீக்கி இன்னும் எதை எதையோ செய்து கொண்டு வா!!!!!!

பின் குரு முனியே!!!!! குரு முனியே!!!!

 வெற்றி !!!வெற்றி !!!இன்னும் உந்தனுக்கே!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Sri LopaMudraDevi Sametha Sree Agastheeswaraya Namaha

    ReplyDelete
  3. அற்புதமான வரிகள் ஓம் அகத்தியர் ஐயா போற்றி போற்றி

    ReplyDelete
  4. Om Sri lopamudra Samantha Agasthiyar thiruvadigal potripotri.

    ReplyDelete
  5. இறைவா!! நீயே அனைத்தும்!!!!

    அகத்தியர் கூடத்தில் புலத்தியரின் புகழ் மாலை!

    https://www.youtube.com/watch?v=kFs0ZM-Lu30

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  6. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    NANRI AYYANE
    GURUVADI SARANAM
    THIRUVADI SARANAM

    ReplyDelete