​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 11 June 2023

சித்தன் அருள் - 1349 - அன்புடன் அகத்தியர் - காசி அனுபவம்!





மைந்தனுக்கு கிடைத்த அன்னையின் தரிசனமும் ஸ்பரிசமும்

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!!!

நம் குருநாதரான அகத்தியப் பெருமான் இந்த உலக நன்மைக்காக யுகம் யுகமாக இந்த உலகம் செம்மையுடன் இயங்க ஒவ்வொரு பிறவிக்கும்  மும்மூர்த்திகள் அருளாலும் சித்தர்கள் அருளாலும் புண்ணிய ஆத்மாக்களை தேர்ந்தெடுத்து சுவடியை வழங்கி உலக மக்கள் புண்ணியத்துடன் கூடிய பக்தியை கடைப்பிடித்து நல்ல முறையில் வாழவும் கர்ம வினைதனை அகற்றவும் ஜீவனாடியில் வந்துதித்து உபதேசங்களை நல்கி வழிநடத்தி வருகின்றார்!!!

இப்படி நம் குருநாதர் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு ஏன் சொல்லப் போனால் ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் புண்ணி ஆத்மாக்களை தேர்ந்தெடுத்து சுவடியை வழங்கி சுவடியின் மூலம் நல் உபதேசம் செய்து வரும் நம் குருநாதர் இன்றைய காலகட்டத்தில் திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு ஜீவநாடி சுவடியை வழங்கி அதன் மூலம் நம் அனைவரையும் வழிநடத்தி வந்து கொண்டிருக்கின்றார்.

குருநாதர் இடும் கட்டளையை அப்படியே அனுசரித்து குருநாதர் உத்தரவிடும் ஆலயங்களுக்கெல்லாம் ஓய்வின்றி தொடர் பயணங்களாக சென்று கொண்டே இருந்து பல புண்ணிய திருத்தலங்களை குருநாதர் குறிப்பிடும் பொழுது அந்த புண்ணிய திருத்தலங்களில் சென்று ஏனென்றால் சில புண்ணிய திருத்தலங்களில் இருந்து சில முக்கியமான வாக்குகளையும் நாம் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் ஒவ்வொரு புண்ணிய தலத்திலும் எங்கெங்கு எதனைச் செப்ப வேண்டும் என்பதை உணர்ந்து குருநாதர் அதன்படியே வழி நடத்தி வருகின்றார்.

குருநாதர் உத்தரவினை சிரம் தாழ்ந்து ஏற்றுக்கொண்டு திரு ஜானகிராமன் ஐயா ஒவ்வொரு புண்ணிய தலங்களுக்கும் சென்று நாடி வாசித்து வாக்குகளை மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்.

புகழுக்கோ பொருளுக்கோ எதனைப் பற்றியும் கவலைப்படாமல் குருநாதர் கட்டளை அதுவே என் வாழ்க்கை என்று நடந்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்.

சில சமயம் சொந்த வீட்டிற்கு கூட வந்து தங்க முடியாத சூழ்நிலையும் வந்துவிடும் .

திருப்பதி திருவண்ணாமலை காசி பொதிகை மலை ஓதிமலை நட்டாற்றீஸ்வரர் திருக்கடையூர் என அவருடைய பயணம் இந்த தேசம் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும்.

குருநாதர் என்ன உத்தரவிடுகின்றாரோ அதை அப்படியே மேற்கொண்டு பயணத்திட்டம் வகுத்து அதன்படி ஒவ்வொரு ஆலயங்களுக்கும் சென்று விடுவார்.

குருநாதர் தனது வாக்குகளில் குறிப்பிட்டதை போல அப்பனே இறைவனே கதி என்று இருந்தால் தன்னலம் இன்றி பொதுநலம் கருதி அனைவருக்கும் சேவை செய்து வாழ்ந்து வந்தால் அந்த இறைவனே வந்து கையைப் பிடித்து இழுத்துச் செல்வான்!!!!!

இறைவன் ஒருவனே அனைத்திற்கும் காரணம் என்று இருந்தால் இறைவனை மட்டும் நம்பிக் கொண்டு இருந்தால் இறைவன் வந்து நம் பக்கத்தில் அமர்ந்து கொள்வான் அனைத்தையும் வழங்கி வழி நடத்திச் செல்வான் என்று குருநாதர் தன்னுடைய ஒவ்வொரு பொதுவாக்கிலும் இறை தரிசனத்தையும் இறைவனை அடைவது எப்படி என்பதையும் இப்படி சில சில வாக்குகளாக உபதேசங்களாக குறிப்பிட்டுச் செல்வார்.

அப்படியே வாழ்ந்து வரும் திரு ஜானகிராமன் ஐயாவிற்கு இன்று 11/6/2023 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை அஷ்டமி இன்று காசியில் கிடைத்த அன்னை லோப முத்திரையின் தரிசனமும் அன்னைக்கும் ஜானகிராமன் ஐயாவுக்கும் இடையில் நடந்த அன்பு பரிமாற்ற நிகழ்வையும் தற்பொழுது காண்போம்.

திரு ஜானகிராமன் ஐயாவிற்கு குருநாதர் காசிக்கு சென்று வருக என்று உத்தரவு கொடுத்திருந்தார்!!!!

அதன்படியே திரயம்பகேஸ்வர் ஜோதிர்லிங்கம் நாசிக் ஸ்தல யாத்திரையை முடித்துவிட்டு காசிக்குச் சென்ற திரு ஜானகிராமன் ஐயா கங்கை ஆர்த்தி தரிசனம் காசி விஸ்வநாதர் தரிசனம் என்று நேற்றைய பொழுதில் செய்து விட்டு இன்று காலையில் காசியின் காவல் தெய்வமான அஷ்ட பைரவர்களில் மிகப்பெரியவரான காசி காலபைரவர் பாபா ஆலயத்திற்கு சென்றார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாள் ஆனதால் கூட்டம் என்றால் கூட்டம் கட்டுக்கடங்காத கூட்டம் ஆலயத்திற்கு உள்ளே செல்ல எந்த ஒரு வழியும் இல்லை. ஆலயத்தின் முன் வாசலிலும் சரி பின்வாசலிலும் சரி கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம்.

அதுமட்டுமல்லாது இன்றைய நாளில் இந்தியாவின் முக்கிய அரசியல் பிரமுகர் காசிக்கு புனித யாத்திரை வந்ததால் பாதுகாப்பு விதிமுறைகள் கெடுபிடிகள் அதிகம் இருந்தது.

திரு ஜானகிராமன் ஐயாவும் ஆலயத்தைச் சுற்றிலும் காணப்பட்ட மக்கள் வெள்ளத்தைக் கண்டு ஒருகணம் திகைத்து நின்று விட்டார்.

ஏனென்றால் இந்த கூட்டத்திற்கு உள்ளே சென்று எப்படி காலபைரவரை காண்பது????

அரசியல் பிரமுகர் வருகை காரணத்தினால் நகரம் முழுவதும் போக்குவரத்துகள் மாற்றியமைக்கப்பட்டு விட்டு மிகுந்த நெரிசல் ஏற்பட்டு விடும் இன்று மாலையை ஊர் திரும்புவதாக இருந்ததால் நகரத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும் ஏற்கனவே காசி நகரம் கடும் மக்கள் கூட்டம் நெரிசல் இருக்கும் பகுதி அதனால் எப்படி நாம் என்ன செய்வது ?? இந்த கூட்டத்திலேயே இப்படியே நின்றுகொண்டிருந்தால் மாலை வரை ஆகிவிடும் என்று யோசித்துக் கொண்டே!!!!!!

சரி!!!  சரி!!!!! நம்மைத்தான் குருநாதர் மாதா மாதம் எப்படியாவது காசி அழைத்து வந்து விடுகின்றாரே சரி அடுத்த முறை வரும்பொழுது கால பைரவரை தரிசனம் செய்து விடுவோம் என்று எண்ணி ஆலயத்தின் வாசலிலேயே இருந்து கொண்டு அப்பனே காலபைரவா!!!!!! அடியேன் உன்னை காண வந்தேன் இங்கே கடும் மக்கள் கூட்டம் அதனால் அடுத்த முறை வரும்பொழுது உங்களை தரிசனம் செய்கின்றேன் என்று மனதில் வேண்டிக்கொண்டு ஆலயத்தை பார்த்துக் கொண்டே வணங்கி விட்டு வெளியே வரும்பொழுது!!!!

ஒரு வயதான பெண்மணி விரைவாக ஓடி வந்து திரு ஜானகிராமன் ஐயாவை கையை பிடித்து நிறுத்தினார்!!!!!

திரு ஜானகிராமன் அய்யாவும் என்ன அம்மா என்று கேட்க!!!!

வடமொழியில் அந்த அம்மையும் என்ன மகனே காலபைரவனை தரிசனம் செய்ய வேண்டுமா????

என்னுடன் வா!!!! என்று வாஞ்சையுடன் கையைப் பிடித்து அந்தக் கூட்டத்தின் நடுவே இழுத்துச் சென்றார்!!!

திரு ஜானகிராமன் அய்யாவிற்கும் வடமொழி புரிந்து கொள்ளும் அளவிற்கு தெரியும்!!!!

யார் இந்த அம்மை??? நம் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் செல்கின்றாரே!!!!! யாராக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே பின்னாலே சென்றார்.

கடும் மக்கள் கூட்டத்தின் எதிர்ப்பும் ஆலய காவல் பணியாளர்கள் எதிர்ப்பும் இருந்த போதிலும் உள்ளே இழுத்துச் சென்றார்.

அப்படி ஆலயத்தின் வாசலில் இருந்து உள்ளே இழுத்துச் செல்லும் பொழுது இரண்டு காவல்துறை பணியாளர்கள் வந்து தடுத்து நிறுத்தினார்.

வடமொழியில் அம்மையே எங்கே போகின்றீர்கள்???? உள்ளே உங்களை அனுமதிக்க முடியாது கூட்டம் அதிகமாக உள்ளது என்று தடுத்து நிறுத்த!!!!

அந்த அம்மா!!!!!!

இவன் என் மகன்!!!

இவனை காலபைரவனை காண அழைத்துச் செல்கின்றேன்!!!!!

யாரும் தடுக்காதீர்கள்!!!!

என்று அந்த அம்மா உத்தரவு வாய்மொழியாக சொன்னவுடன் அங்கு என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை. அனைவரும் சாதாரணமாக கண்டுகொள்ளாமல் போய்விட்டனர்!!!!

வா!!! மகனே வா!!!! என்று கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து விரைவாக அழைத்துச் செல்லும் பொழுது திரு ஜானகிராமன் ஐயாவிற்கு நொடிப்பொழுது கண்கள் கலங்கிவிட்டது அந்த தாயின் பாசத்தை கண்டு!!!!

யார் என்று தெரியாத ஒரு பெண்மணி ஒரு வயதான அம்மா இத்தனை கூட்டத்திற்கும் நடுவே அனைவரையும் எதிர்த்துக்கொண்டு என் கையைப் பிடித்து அழைத்துச் செல்கின்றாரே இவரும் என் தாய் தான் என்று நினைத்துக் கொண்டே ஒரு நிமிடம் நெகிழ்ந்து விட்டார்!!!!

அப்படி அழைத்துச் சென்ற அந்த அம்மா காலபைரவர் சன்னதிக்கு எதிரில் கொண்டு போய் நிறுத்திவிட்டார்!!!!!

மகனே !!!  நன்றாக நின்று தரிசனம் செய்!!!! உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் நான் இருக்கின்றேன்!!!! என்று பக்கத்தில் இருந்து கொண்டு நல்லபடியாக தரிசனம் செய்வித்தார்!!!!

திரு ஜானகிராமன் அய்யாவும் தரிசனம் செய்துவிட்டு ஆலய பிரகாரத்தில் சுற்றிலும் மக்கள் வெள்ளத்திற்கு இடையே வந்து மிக்க நன்றி தாயே !!!!உங்கள் உதவியால் காலபைரவரை தரிசனம் செய்தேன் மிக்க நன்றி என்று சொல்லி.....

தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் அம்மையே!!! ஏதாவது கைச்செலவிற்கு ஏதாவது வாங்கி சாப்பிடுங்கள் என்று காசுகள் எடுத்துக் கொடுக்க!!!!!

அந்த அம்மையோ எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டே தலையசைத்து மறுத்துவிட்டார்கள்!!!!

மேலும் மேலும் வற்புறுத்தி எனக்காக பெற்றுக் கொள்ளுங்கள் அம்மா தேநீர் செலவிற்காகவாவது வைத்துக் கொள்ளுங்கள் என்று நூறு ரூபாயை வற்புறுத்திக் கொடுத்த பொழுது அர்த்த புஷ்டியுடன் பார்த்து சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டார்கள்.

சரிங்க அம்மா!!!! நான் சென்று வருகிறேன் எனக்கும் நேரம் ஆகிவிட்டது தமிழ்நாடு செல்ல வேண்டும் என்று அந்த அம்மாவிடம் உத்தரவு வாங்கி விட்டுச் செல்ல!!!!!

ஒரு நிமிடம் மகனே!!!! என்று சொல்லிவிட்டு காசி காலபைரவர் ஆலயத்தை சுற்றிலும் இருக்கும் பண்டித்துக்கள் எனப்படும் பூசாரிகளிடம் மயிலிறகு கொண்டு வருட செய்தும் ஒரு கருப்பு நிற காசி கயிறு எடுத்து தன் கையால் ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு அணிவித்து சிரித்துக் கொண்டே தட்டிக் கொடுத்து வழி அனுப்பி வைத்தார்.

திரு ஜானகிராமன் ஐயாவும் காலபைரவர் தரிசனத்தை முடித்துக் கொண்டு விட்டு காசியில் கங்கை கரையில் மீர் காட் இல் சாதுக்களுக்கு அன்னதான சேவையும் செய்துவிட்டு மாலையில் புறப்படும் முன்பாக குருநாதரிடம் பொதுவாக்கு உத்தரவு கேட்டு வாக்குகள் படித்தார்.

பொதுவாக்கு குருநாதர் கூறி முடித்தவுடன்!!!!!

அப்பனே!!!!  அன்பு மகனே!!!!! இன்று நீ கண்டது காலபைரவனை மட்டுமல்ல அப்பனே!!!!!

எவையன்றி கூற அப்பனே வந்தவள் உன் தாய் தானப்பா!!!!!

மைந்தனுக்காக உதவி செய்ய உன் தாய் லோப முத்ராவே வந்தாள் என்பேன் அப்பனே!!!!!!! உன்னுடன் வந்து அவளுடைய ஆசிகளையும் தந்து காலபைரவனின் ஆசிகளையும் வாங்கி தந்து விட்டாள் அப்பனே!!!!!! நலம் அப்பனே எங்கள் அருளால் இனியும் உந்தனுக்கு முன்னேற்றம் தான் ஏற்படும்!!!!! மகனுடன் சிறிது நேரம் உரையாடி விட்டு வருகின்றேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தாளப்பா!!!!!!!

காசி விஸ்வநாதனின் அருளும் பரிபூரணம்!!!! விசாலாட்சி அன்னையவளின் ஆசிகளும் எம்முடைய ஆசிகளும் லோபா முத்திரையோடு வந்து நல் ஆசிர்வாதங்கள் அப்பா!!!!!!!!

என்று குருநாதர் வாக்குரைத்தார்!!!!

சுவடியில்  குருநாதர் கூறியதை கேட்டு திரு ஜானகிராமன் ஐயா மெய்யுருகி போய்விட்டார்!!!

நீங்களே கதி என்று இருக்கின்றேன் எனக்காக வந்தீர்களா என் தாயே!!!! என் அம்மா லோபமுத்ரா தாயே!!!! எனக்கு எதுவும் வேண்டாம் நீங்கள் மட்டுமே போதும்!!!! என்று மனம் நெகிழ்ந்து உருகி விட்டார்.

அன்பு அடியவர்களே!!!! இந்த சம்பவம் எதற்காக என்றால் நம் குருநாதர்  வாக்கினை அப்படியே கேட்டு அப்படியே நாம் நடந்து வந்து கொண்டிருந்தால் இறை தரிசனம் !!! இறையின் ஸ்பரிசம் வெகு தூரம் அல்ல!!!! அது விரைவில் நமக்கும் கிட்டிவிடும் என்பதற்கு உதாரண சம்பவம் தான் இது!!!!

நாம் அனைவரும் நம் குருநாதர் வாக்கினை கேட்டு அப்படியே நடப்போம் இறை தரிசனத்தையும் இறை அருளையும் நாமும் பெறுவோம்!!!!

ஓம் ஸ்ரீ லோப முத்ரா தாயார் சமேத அகஸ்தியர் திருவடிகளே போற்றி போற்றி!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

11 comments:

  1. கருணைக் கடலே ஆசான் அகத்தீசர் பாதங்கள் போற்றி
    அம்மா லோபமுத்ரா தாயே போற்றி போற்றி..

    ReplyDelete
  2. ஜானகி ராமன் ஐயாவுக்கு எத்தனை வயது .திருமணம் ஆகிவிட்டதா.அவர் எப்படி இருப்பார் என்று அறிய ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா. அகத்தியர் அனுமதி கொடுத்தல் ஜானகிராமன் அய்யாவின் புகை படத்தை பதிவிடுங்கள் அய்யா. ஓம் அகத்தீஸ்வராய நமஹ.

      Delete
  3. படிக்கும் போதே கண்கள் கலங்குகின்றது அய்யா. எத்தனை பெரும் பேறு ,அன்னையின் அன்பும் ஸ்பரிசமும் கிடைப்பது.அன்னையின் திரு வாக்கால் "இவன் எந்தன் மைந்தன்" என்று சொல்வதற்கு எத்தனை சிரத்தையுடன் அகத்திய பெருமான் சொல்வதை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கடைப்பிடித்திருக்க வேண்டும்....திரு.ஜானதிராமன் அய்யா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🙏🙏.அதி அற்புதமான அனுபவம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா.

    ReplyDelete
  4. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏 🙇‍♂️

    ReplyDelete
  5. அம்மா... லோபா அம்மா... இந்த மகனையும் சற்று ஏறெடுத்து பாரேன்... தாயே... இவனை உனக்கு நன்றாக தெரியுமே... எது எப்படியோ உன்னை எனக்கு நன்றாக தெரியும்...வருகிறேன் அன்றைய திருமண நாளுக்கு...

    ReplyDelete
  6. Ammai Appane Saranam படிக்கும் போதே கண்கள் கலங்குகின்றது.ஓம் ஸ்ரீ லோப முத்ரா தாயார் சமேத அகஸ்தியர் திருவடிகளே போற்றி போற்றி!!!!

    ReplyDelete
  7. Om Sri LopaMudra Devi Sametha Sree Agastheeswaraya Namaha

    ReplyDelete
  8. அருமை மிக அருமை அனைத்தும் குரு அருள் அகத்தியர் திரு பாதமே கதி

    ReplyDelete
  9. அருமை அருமை அருமை அனைத்தும் குருவருள் ஆசிகள் குரு பாதமே கதி

    ReplyDelete