​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 30 June 2023

சித்தன் அருள் - 1353 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் பிரார்த்தனை!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

காலம் காலமாக இறைவன் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்த அடியவர்கள் பாடலாகவும் பதிகமாகவும் மனமுருக பாடி இறைவனை தொழுது பக்தி நெறியை செலுத்தினர்!!!!!

எந்த இனமாக இருந்தாலும் சரி எந்த மொழியாக இருந்தாலும் சரி இறைவனை மனதுருக வேண்டி பாடுவது எல்லா காலகட்டங்களிலும் நடந்திருக்கின்றது எல்லாம் மொழிகளிலும் இருக்கின்றது!!!!


இறைவனுக்கு சொந்தமான மொழிகளில் அதுவும் தமிழில் தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் திருமுருகாற்றுப்படை கந்தர் அனுபூதி கந்தர் அலங்காரம் என நாயன்மார்கள் ஆழ்வார்கள் முதற்கொண்டு நக்கீரர் அவ்வையார் அருணகிரிநாதர் என இறைவனை மனதார தொழுது நடந்து அழுது காதலாகி கசிந்து உருகி பதிகங்களை பாடினர் அந்த பதிகங்களின் வழியாக நாமும் அதை படித்து நாமும் பாடி இறைவனை வழிபாடு செய்கின்றோம்.


அந்த வகையில் நம் குருநாதர் அகத்தியர் பெருமானை குறித்து அகத்தியர் அடியவர்கள் பாடல்களாகவும் எழுதி அவர் மீது கொண்டுள்ள பக்தியை மனதில் எண்ணி  பதிகங்களாகவும் எழுதி போற்றி துதித்து பாடி வணங்கி வருகின்றனர்.


இதில் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் நம் குருநாதர் அகத்தியர் பெருமான் சீடரான புலத்திய மகரிஷி நம் குருநாதரை எண்ணி எண்ணி மனம் உருகி உருகி வணங்கி வணங்கி பொதிகை மலை உச்சிதனில் தன் வாக்கின் மூலம் நம் குருநாதன் மேல் கொண்ட பக்தியை காதலாகி கசிந்து உருகி உரைத்த வாக்கே ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும்.

பக்திமான்கள் ஞானிகள் மனிதர்கள் எழுதிய பாக்களை நாம் கேட்டிருக்கின்றோம் படித்திருக்கின்றோம்.


ஆனால் பிறப்பு இறப்பு வயது மூப்பு காலம் இவற்றையெல்லாம் கடந்து வாழும் சித்தர்களில் நம் குருநாதரின் சீடராக இருந்து கொண்டு அகத்திய பெருமானை குறித்து புகழ் மாலை சூட்டி புலத்தியரின் இந்த வாக்கினை நாம் அனைவரும் அன்றாடம் குருவை நினைத்து தொழுது வணங்கி பிரார்த்தனைகள் பூஜைகள் செய்யும் பொழுது புலத்தியர் மகரிஷி எப்படி எல்லாம் தன் குருநாதரை உருகி பாடினாரோ!!!!

அதே மாதிரி நம்மை அந்த இடத்தில் வைத்துக்கொண்டு நம் குருநாதரை புலத்திய மகரிஷியின் வாக்கினை வாக்காக பார்க்காமல் ஒரு பதிகம் என கருதி அனுதினமும் பாடி வணங்கி வருவோம்!!!


சித்தர்களின் போக்கு சிவன் போக்கு மட்டுமல்ல சித்தர்களின் வாக்கும் சிவன் வாக்கு ஆகும்.

மாணிக்கவாசகர் மனமுருகி பாடிய பொழுது அதை ஏற்றுக் கொண்டு தன் கைப்பட எழுதி அரவணைத்த எம்பெருமான் ஈசன் கருணையை நாம் அறிவோம்.

மனிதனாகப் பிறந்து மாணிக்கவாசகனார் பக்தியுடன் எழுதியதை ஏற்றுக் கொண்ட ஈசன் அதுபோல் சித்தராக இருந்து பாடிய பதிகத்தை நம் குருநாதரும் பெருமையோடு ஏற்றுக் கொள்வார் நாமும் இலக்கிய மகரிஷியின் இந்த வாக்கினை அனுதினமும் அகத்திய மகரிஷி போற்றி திரு அகவல் போல எண்ணி அன்றாட வழிபாட்டின் போது இந்த வாக்கினை அதாவது இந்த பதிகத்தை பாடி நாமும் தொழுவோம்!!!

இந்த வாக்கினை இசை ஆர்வம் உள்ளவர்கள் இதை பாடலாகவும் ராகத்துடன் கூடிய இசையாக வெளிப்படுத்தி அனைவருக்கும் தெரியப்படுத்தினாலும் மிக்க பெரும் உபகாரமாக இருக்கும் காலம் காலமாக கடந்து நிற்கும் அகத்தியர் போற்றி பாடல்களில் புலத்திய மகரிஷியின் புகழ் மாலையாக பாடிக்கொண்டே இருக்கும் வருங்கால சமுதாயமும்!!!!!

அகத்தியர் கூடத்தில் புலத்தியரின் புகழ் மாலை!

புலத்தியனின் புகழ்மாலை!!!!

உலகத்திற்கெல்லாம் ஆதிகுருவான எங்கள் அகத்தியனை பணிகின்றோம்

குருவா!!!!!!!

முதல்வா!!!!!!

முத்தமிழ் இறைவா!!!!!

இறைவா!! என் மனதில் அன்பான வடிவத்தில் குடி கொண்டிருக்கும் பின் அனைத்தும் நீயே!!!!!

முத்தா!!!

முதல்வா!!!!

இளஞ்செழியனே!!!!!!

கந்தா!!!!

கடம்பா!!!!!

ஈசா!!!!!!

அனைத்தும் நீயே!!!!!

வருபவருக்கெல்லாம் அள்ளிக் கொடுப்பவனே!!!!!

அனைத்தும் நீயே!!!!!

ஏமாற்றுபவர்களையும் கூட திருடர்களையும் கூட பின் அரவணைத்து செல்லும் என் குருநாதருக்கு மிஞ்சிய குரு இவ்வுலகத்தில் இல்லை!!!!!

என் குருவானவனே!!!!! எதை அனைத்தும் தெரிந்தவன் அனைத்தும் தெரிந்தவன்!!!!!

அனைத்து தெய்வத்திற்கும் கூட பின் உபதேசம் செய்பவன்!!!!!

ராமனுக்கும் கூட!!! சீதைக்கும் கூட!!!! கிருஷ்ணனுக்கும் கூட!!!! பஞ்ச பாண்டவர்களுக்கும் கூட!!!! இன்னும் ஏனைய ஞானிகளுக்கும்!!!!!

பல பல பல சீடர்களையும் கூட உருவாக்கும் தகுதி!!!! என் மைந்தன் இனிமேலும் என் மைந்தன் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இறைவா என் மனதில் உள்ள குறைகளையும் நீக்குவாயாக!!!!

நீக்குவாயாக மனிதர்களை வரும் காலங்களில் கலியுகத்தில் நிச்சயம் நல்வழி படுத்துபவனே உன்னை வணங்குகின்றேன் லோபா முத்திரையோடு!!!!!

அன்பானவனே!!!!!

பண்பானவனே!!!!!

பாசத்திற்கு அடையாளமே!!!!

கருணை உள்ளம் கொண்டவனே!!!!!

உன்னை யான் எப்படி பாடுவது!???
எப்படி துதிப்பது????

உன்னை அகத்தியா என்று சொல்வதற்கும் பின் எவை என்று கூட யான் எத்தனை ஜென்மத்தில் புண்ணியங்கள் செய்தேனோ!!!!!!!!!!!!!!!

(அகத்தியா என்று சொல்வதற்கு எத்தனை ஜென்மங்கள் நாங்கள் புண்ணியம் செய்தோமோ)

இவ் புலத்தியன்  இவ் அடிமை என்னையும் கூட இத் திருடனையும் கூட அதாவது பின் நாயினின் கூட அதாவது இன்னும் விலங்கினின் கூட கீழானவனையும் கூட பின் சீடனாக அதாவது புலத்தியனை சீடனாக ஏற்று கொண்டமைக்கு.... எவை யான் உன்னை எப்படி எதை அறிந்து !!!!!

 ( நாயிற்கடையேனின் கடையேனுக்கும் கடையேன் ஆகிய திருடர்கள் எங்களையும் உங்களை வணங்க வைத்த )

இறைவா!!! இறைவா!! நீயே அனைத்தும்!!!!

நீயே ஈசன்!!!!!

நீயே விஷ்ணு!!!!

நீயே பிரம்மா!!!!

அறிந்து அறிந்து அனைத்தும் உன்னிடத்திலே இருக்கின்றது!!!!!!!!!!!!!! அதை வைத்துக் கொண்டும் நிச்சயம் ஒன்றும் தெரியவில்லையே என்றெல்லாம் ஒன்றும் தெரியவில்லை என்றெல்லாம் கருணை உள்ளம் படைத்தவனே!!!

அனைவருக்கும் உதவிகள் செய்யும் உன்னுடைய அருளால் அருளால் இவ்வுலகத்தை வெல்வாய்!!! அனைத்து சித்தர்களையும் கூட வெல்வாய்!!!! வென்று விட்டாய்!!!!
அனைத்து சீடர்களையும் கூட வென்று விட்டாய்!!!

என் மனதில் அழகாகவே குடி கொண்டிருக்கின்றாய் இறைவா!!!!!

அகத்தியா!!!!!!

அப்பா!!!!!!!

எதை என்றும் அறிய அறிய உன்னை அகத்தியன் என்பதா?????

இறைவன் என்பதா???!

இன்னும் கருணை என்பதா?????

அன்பிற்கு அன்பான வடிவம் என்பதா????

பாசம் என்பதா?????

புரியவில்லை புரியவில்லை நிச்சயம் எதை என்று அறிய அறிய!!!

இன்னும் இன்னும் எப்பிறப்பு எடுத்தாலும் நீ எதை என்று உடம்பினுள் உயிர் இருக்கின்றதா? உயிருக்குள் உடம்பு இருக்கின்றதா? என்பதை எல்லாம் தெரியப்படுத்த ஆளில்லை இவ்வுலகத்தில்!!!!!!

அகத்தியனை அதாவது என் தந்தையை நிச்சயம் இவ்வுலகத்தில் யார் தெரிந்திருக்கக் கூடியவர்கள் நிச்சயம் இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் என் (நம்) அப்பன் அதாவது என் குருவானவனை பற்றி யாரும் இவ்வுலகத்தில் தெரிந்திருக்க கூடியது ஒரு துளி கூட இல்லை!!!

என்(நம்) தந்தை அகத்தியனை வழிபடுவதற்கும் கூட (நாங்கள்) நீங்கள் ஏதோ ஒரு தலத்தில் எதை என்றும் அறிய அறிய பிறந்து பின் எவை என்று கூட அதனால் பல பிறவிகள் கடந்து கடந்து வந்தால் தான் என் குருவானவனையும் கூட அகத்தியா என்ற பெயரை அழைத்து நீங்கள் முற்று ( முக்தி)

( நாங்கள் அழைத்தால் எங்களுக்கு முக்தி)

எவை என்று கூட பின் அதாவது என் தந்தையை அகத்தியா என்று அழைத்து விட்டாலே போதுமானது மோட்ச பிறவி தான் உங்களுக்கு!!!!!!!!

(அப்பா என்று அகத்தியனை அன்போடு அழைத்தால் நமக்கு மோட்சமே)


அனைவருக்குமே!!!!!!!

அப்படிப்பட்டவன்!!!! (நம்) என் குருவானவன்!!!!!

ஆதி குருவானவன்!!!!!

கருணை வடிவானவன்!!!!

எங்கும் பரந்து நிற்பவன்!!!!
ஒளி வடிவமாக!!!!!!

அப்பா!!!! என்று அழைத்தாலே ஓடோடி வருபவன்!!!!!

உலகத்தில் உள்ள அனைத்தும் கற்று உணர்ந்தவன்!!!!!

இன்னும் சொல்லத்தான் போகின்றான் இவ்வுலகத்தில் புதுமையான விஷயங்களை உலகத்திற்கு கொண்டு வந்து இவ்வுலகத்தையே மாற்றப் போகின்றான் என் குருநாதன்!!!!

குருநாதா!!!!!! குருநாதா!!!!!

போதும் உன்னுடைய பொறுமை பொறுத்தார் பூமி ஆள்வார் என்றெல்லாம்.... நீ எந்தனுக்கு (எங்களுக்கு) சொல்லி சொல்லி வளர்த்தாய்!!!

இன்னும் பொறுக்க வேண்டாம் மனிதர்களுக்கு நல்வழிப்படுத்தி இன்னும் பல கஷ்டங்களையும் நீக்கி இன்னும் எதை எதையோ செய்து கொண்டு வா!!!!!!

பின் குரு முனியே!!!!! குரு முனியே!!!!

 வெற்றி !!!வெற்றி !!!இன்னும் உந்தனுக்கே!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday, 28 June 2023

சித்தன் அருள் - 1352 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் கூடத்தில் புலத்தியரின் புகழ் மாலை!




10/5/2023 அன்று புலத்திய மகரிஷி உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : பொதிகை மலை அகத்தியர் கூடம்.

புலத்தியனின் புகழ்மாலை!!!! 

உலகத்திற்கெல்லாம் ஆதிகுருவான என் அகத்தியனை பணிந்து புலத்தியனே செப்புகின்றேன்!!!!!!

குருவா!!!!!!! 

முதல்வா!!!!!! 

முத்தமிழ் இறைவா!!!!! 

இறைவா!! என் மனதில் அன்பான வடிவத்தில் குடி கொண்டிருக்கும் பின் அனைத்தும் நீயே!!!!!

முத்தா!!! 

முதல்வா!!!! 

இளஞ்செழியனே!!!!!! 

கந்தா!!!! 

கடம்பா!!!!! 

ஈசா!!!!!! 

அனைத்தும் நீயே!!!!!

வருபவருக்கெல்லாம் அள்ளிக் கொடுப்பவனே!!!!!

அனைத்தும் நீயே!!!!!

ஏமாற்றுபவர்களையும் கூட திருடர்களையும் கூட பின் அரவணைத்து செல்லும் என் குருநாதருக்கு மிஞ்சிய குரு இவ்வுலகத்தில் இல்லை!!!!!

என் குருவானவனே!!!!! எதை அனைத்தும் தெரிந்தவன் அனைத்தும் தெரிந்தவன்!!!!!

அனைத்து தெய்வத்திற்கும் கூட பின் உபதேசம் செய்பவன்!!!!!

ராமனுக்கும் கூட!!! சீதைக்கும் கூட!!!! கிருஷ்ணனுக்கும் கூட!!!! பஞ்ச பாண்டவர்களுக்கும் கூட!!!! இன்னும் ஏனைய ஞானிகளுக்கும்!!!!!

பல பல பல சீடர்களையும் கூட உருவாக்கும் தகுதி!!!! என் மைந்தன் இனிமேலும் என் மைந்தன் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இறைவா என் மனதில் உள்ள குறைகளையும் நீக்குவாயாக!!!!

நீக்குவாயாக மனிதர்களை வரும் காலங்களில் கலியுகத்தில் நிச்சயம் நல்வழி படுத்துபவனே உன்னை வணங்குகின்றேன் லோபா முத்திரையோடு!!!!!

அன்பானவனே!!!!!

பண்பானவனே!!!!!

பாசத்திற்கு அடையாளமே!!!!

கருணை உள்ளம் கொண்டவனே!!!!!

உன்னை யான் எப்படி பாடுவது!???
எப்படி துதிப்பது????

உன்னை அகத்தியா என்று சொல்வதற்கும் பின் எவை என்று கூட யான் எத்தனை ஜென்மத்தில் புண்ணியங்கள் செய்தேனோ!!!!!!!!!!!!!!! 

இவ் புலத்தியன்  இவ் அடிமை என்னையும் கூட இத் திருடனையும் கூட அதாவது பின் நாயினின் கூட அதாவது இன்னும் விலங்கினின் கூட கீழானவனையும் கூட பின் சீடனாக அதாவது புலத்தியனை சீடனாக ஏற்று கொண்டமைக்கு.... எவை யான் உன்னை எப்படி எதை அறிந்து !!!!!

இறைவா!!! இறைவா!! நீயே அனைத்தும்!!!!

நீயே ஈசன்!!!!!

நீயே விஷ்ணு!!!!

நீயே பிரம்மா!!!!

அறிந்து அறிந்து அனைத்தும் உன்னிடத்திலே இருக்கின்றது!!!!!!!!!!!!!! அதை வைத்துக் கொண்டும் நிச்சயம் ஒன்றும் தெரியவில்லையே என்றெல்லாம் ஒன்றும் தெரியவில்லை என்றெல்லாம் கருணை உள்ளம் படைத்தவனே!!!

அனைவருக்கும் உதவிகள் செய்யும் உன்னுடைய அருளால் அருளால் இவ்வுலகத்தை வெல்வாய்!!! அனைத்து சித்தர்களையும் கூட வெல்வாய்!!!! வென்று விட்டாய்!!!!
அனைத்து சீடர்களையும் கூட வென்று விட்டாய்!!! 

என் மனதில் அழகாகவே குடி கொண்டிருக்கின்றாய் இறைவா!!!!!

அகத்தியா!!!!!!

அப்பா!!!!!!! 

எதை என்றும் அறிய அறிய உன்னை அகத்தியன் என்பதா?????

இறைவன் என்பதா???!

இன்னும் கருணை என்பதா?????

அன்பிற்கு அன்பான வடிவம் என்பதா????

பாசம் என்பதா?????

புரியவில்லை புரியவில்லை நிச்சயம் எதை என்று அறிய அறிய!!!

இன்னும் இன்னும் எப்பிறப்பு எடுத்தாலும் நீ எதை என்று உடம்பினுள் உயிர் இருக்கின்றதா? உயிருக்குள் உடம்பு இருக்கின்றதா? என்பதை எல்லாம் தெரியப்படுத்த ஆளில்லை இவ்வுலகத்தில்!!!!!!

அகத்தியனை அதாவது என் தந்தையை நிச்சயம் இவ்வுலகத்தில் யார் தெரிந்திருக்கக் கூடியவர்கள் நிச்சயம் இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் என் அப்பன் அதாவது என் குருவானவனை பற்றி யாரும் இவ்வுலகத்தில் தெரிந்திருக்க கூடியது ஒரு துளி கூட இல்லை!!!

என் தந்தை அகத்தியனை வழிபடுவதற்கும் கூட நீங்கள் ஏதோ ஒரு தலத்தில் எதை என்றும் அறிய அறிய பிறந்து பின் எவை என்று கூட அதனால் பல பிறவிகள் கடந்து கடந்து வந்தால் தான் என் குருவானவனையும் கூட அகத்தியா என்ற பெயரை அழைத்து நீங்கள் முற்று ( முக்தி) 

எவை என்று கூட பின் அதாவது என் தந்தையை அகத்தியா என்று அழைத்து விட்டாலே போதுமானது மோட்ச பிறவி தான் உங்களுக்கு!!!!!!!!

அனைவருக்குமே!!!!!!! 

அப்படிப்பட்டவன்!!!! என் குருவானவன்!!!!!

ஆதி குருவானவன்!!!!!

கருணை வடிவானவன்!!!!

எங்கும் பரந்து நிற்பவன்!!!!
ஒளி வடிவமாக!!!!!!

அப்பா!!!! என்று அழைத்தாலே ஓடோடி வருபவன்!!!!!

உலகத்தில் உள்ள அனைத்தும் கற்று உணர்ந்தவன்!!!!!

இன்னும் சொல்லத்தான் போகின்றான் இவ்வுலகத்தில் புதுமையான விஷயங்களை உலகத்திற்கு கொண்டு வந்து இவ்வுலகத்தையே மாற்றப் போகின்றான் என் குருநாதன்!!!!

குருநாதா!!!!!! குருநாதா!!!!!

போதும் உன்னுடைய பொறுமை பொறுத்தார் பூமி ஆள்வார் என்றெல்லாம்.... நீ எந்தனுக்கு சொல்லி சொல்லி வளர்த்தாய்!!!

இன்னும் பொறுக்க வேண்டாம் மனிதர்களுக்கு நல்வழிப்படுத்தி இன்னும் பல கஷ்டங்களையும் நீக்கி இன்னும் எதை எதையோ செய்து கொண்டு வா!!!!!!

பின் குரு முனியே!!!!! குரு முனியே!!!!

 வெற்றி !!!வெற்றி !!!இன்னும் உந்தனுக்கே!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

Monday, 26 June 2023

சித்தன் அருள் - 1351 - அன்புடன் அகத்தியர் - குருநாதரின் பொதிகை வாக்கு!




10/5/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு: -  வாக்குரைத்த ஸ்தலம் பொதிகை மலை அகத்தியர் கூடம்.

"""""" என்னிடத்தில் வந்து விடுங்கள்!!!!!!!!!

அகிலமெல்லாம் ஆளக்கூடிய அகிலாண்டேஸ்வரியையும் அகிலமெல்லாம் ஆளக்கூடிய பின் அகிலாண்டவனையும் கூட பணிந்து...... மனதில் நிச்சயம் எதை என்று அறியாமலே அறியாமலே தெரியாமலே வந்து வந்து என்னை வணங்கும் என் பக்தர்களுக்கும் இங்கிருந்து பின் என் இடத்திலிருந்து உரைக்கின்றேன் அகத்திய முனி!!!!!!!

அப்பனே !!  வரும் காலங்களில் எண்ணற்ற கர்மங்கள் மனிதனுக்கு சேரப் போகின்றது என்பேன் அப்பனே!!! அவை மட்டும் இல்லாமல் துன்பங்கள் அப்பனே தாராளமாக வரும்!!! அவை மட்டும் இல்லாமல் நோய்களும் வருமப்பா!!! 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் குடும்பத்தில் கூட நிம்மதிகள் கெடுமப்பா!! எதை என்று கூட ஒருவரை ஒருவர் மதிக்காமல் போகும் நிலையப்பா!!!!! தாய் தந்தையரை கூட தன் பிள்ளைகள் மதிக்காமல் போகும் நிலையப்பா!!!! தந்தையர் எதை என்றும் அறிய அறிய பெற்றவர்களும் கூட ஏன்??? தன் பிள்ளைகளை ஏன் இவ்வாறு பெற்றோம் என்பதை கூட.... வரும் அப்பா வரும் காலங்களில் அப்பனே!!! இது கலியுகம் அப்பா!!!

பின் ஏன் பக்தர்களுக்குள்ளே சண்டைகள் வரும் அப்பா யான் தான் பெரியவன் யான் தான் பெரியவன் எந்தனுக்கு அனைத்தும் தெரியும் என்று கூட அப்பனே!!!!

பின் ஈசனை பின் முருகனை அப்பனே இன்னும் தெய்வங்களை வைத்துக் கொண்டு... அப்பனே பின் தெய்வம் பின் இருப்பான் ஆனால் இல்லாமல் மனிதன் மனதில் நினைத்துக் கொண்டு பல காசுகள் சம்பாதிப்பான் அப்பா சம்பாதித்து அப்பனை எதை என்று... அப்பனே வினைகளையும் கூட கூட்டிக் கொள்வானப்பா!!!! 

அதனால் அப்பனே என் மக்களே!!! திருந்துங்கள்!!!

அப்பனே என்னிடத்தில் வந்து விடுங்கள் அப்பனே!!!அனைத்தும் யான் பார்த்துக் கொள்கின்றேன் அப்பனே!!!!!

அப்பனே உலகம் எதை என்றும் அறிய அறிய கலியின் இடத்தில் போய்க் கொண்டே இருக்கின்றது அப்பனே!!!!! அழிந்து கொண்டே இருக்கின்றது!!!

அதனால் அப்பனே இவ் எதை என்று கூட நல்லோர்களை அப்பனே இன்னும் இன்னும் அப்பனே ஏனைய மனிதர்களையும் கூட காக்கவே அப்பனே யாங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றோம்!!!!! பல சித்தர்கள் அப்பனே!!!

நிச்சயம் எம் மக்களை யாங்கள் காத்து அப்பனே இன்னும் இன்னும் ஏராளமப்பா!!!!!

அப்பனே இவ்வுலகத்தில் பொய்களப்பா!!!! பக்திகள் வைத்துக் கொண்டு இனி மேலும் பின் ஏமாற்றுவார்களப்பா அதைச் செய்கின்றேன் இதை செய்கின்றேன் என்றெல்லாம்!!!!

அப்பனே நம்பி ஏமாந்து விடாதீர்கள் அப்பனே!!!! அப்படி சென்றாலும் கர்மம் ஏற்றிக் கொண்டு அப்பனே கடைசியில் நோய்வாய்ப்பட்டு அப்பனே யாருமே உன்னை கண்டுகொள்ளாத அளவிற்கு நீ போய் விடுவாய் அப்பனே!!!!!
அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்!!

காசுகள் இல்லை வீடுகள் அப்பனே அதாவது இல்லங்கள் இல்லை அப்பனே தனியாக இருந்து பார் அப்பனே உன் மதிப்பு உந்தனுக்கே தெரியும் அப்பனே!!!!

ஏதாவது உன்னிடத்தில் இருந்தால் தான் வருவார்களப்பா!!!!

அதனால் மனிதன் சரியாக அதாவது இறைவனை வைத்துக்கொண்டு பிழைத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றான். 

ஆனால் இறைவன் அவந்தனுக்கு வழி விடுவதே இல்லை!!!!!! பக்கத்தில் இருந்தாலும் நீ என்னென்ன செய்கின்றாய் செய்து கொண்டே இரு!!!! நிச்சயம் ஒரு நாள் அடிப்பேன் என்பதை கூட பின் ஈசன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே!!!!

அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! 

வேண்டாமப்பா!!!! பொய்கள்!!!! 

அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே வரும் காலங்களில் கூட திருத்தலங்களை எல்லாம் பொய்யாக்குவான் எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!!

அப்பனே ஏராளமான திருத்தலங்கள் அப்பனே இவ் தேசத்தில் உள்ளது ஆனாலும் அதையெல்லாம் அப்பனே சரியாக கட்டுக்குள் எதை என்றும் அப்பனே பின் நல்முறையாக வழிநடத்தாமல் அப்பனே பின் புது புது திருத்தலங்களை உருவாக்குகின்றானே!!!!! ஏன்??? எதனால் என்பதை கூட யாராவது சிந்தித்தீர்களா !! அப்பனே!!!

நிச்சயம் அப்பனே அதனால் அவந்தனுக்குத் தான் வினை அப்பனே!!!!!

ஏற்கனவே புசுண்ட முனியும் சொல்லிட்டான் அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே எதை என்று புரிந்து புரிந்து அப்பனே பின் அதாவது திருத்தலங்களை கட்டுவது!!!!! அவற்றின் மூலம் அப்பனே சம்பாதிப்பது!!! அப்பனே அனைவருக்கும் ஏதாவது சிறிய காலம் செய்து விடுவது பின் சம்பாதித்துக் கொள்வது அதன் மூலம் அப்பனே அனைத்தும் செய்வது.... இன்பங்கள் எல்லாம் அனுபவிப்பது!!!!

ஆனாலும் அப்பனே கடைசியில் பார்த்தால் அப்பனே இறைவனை அனாதையாக வைத்து விடுவது!!!!!

அப்பனே இது நல்லதல்ல!!!!

அப்பனே எவ்வளவுக்கு எவ்வளவு நீ இறைவனை அனாதையாக விட்டுப் போகின்றாயோ அப்பனே அப்பொழுது உந்தனுக்கு அப்பனே எவை என்று கூட கர்மா அப்பனே ஆரம்பமாகிவிட்டது என்பது தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!

உன் பிள்ளைகளும் எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் வரும் சந்ததிகள் எல்லாம் அனுபவிக்க வேண்டும் அப்பனே!!!!

இதனால்தான் புண்ணியம் இருப்பவனுக்கே எங்கள் அருள் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே என்னுடைய அனுமதி இல்லாமல் கூட இங்கும் வரவும் இயலாது அப்பனே!!!!!

ஏன்????  எதற்காக???? உச்சியில் யான் இருக்கின்றேன் அப்பனே!!!!

நீங்களும் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் பல கஷ்டங்கள் பட்டுப்பட்டு தான் அப்பனே என்னை வந்து காண்கின்றீர்கள் என்பேன் அப்பனே!!!

அதுபோலத்தான் அப்பனே மோட்சத்திற்கான செல்லும் வழிகள் அப்பனே மோட்சத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பல கஷ்டங்களையும் பல இன்னல்களையும் கூட பல துன்பங்களையும் கூட பட வேண்டும் அப்பனே!!!!

பின் பட்டால்தான் அப்பனே நிச்சயம் மோட்சக் கதியை அடைய முடியும் அப்பனே!!!பின் இவ்வுலகத்தில் அப்பனே கஷ்டங்கள் எந்தனுக்கு கஷ்டங்கள் பின் ஜோதிடம் பார்க்க முடியுமா எங்களை கணிக்க முடியுமா என்றெல்லாம் கிரகங்களை கணிக்க முடியுமா என்றெல்லாம் அப்பனே மனிதன் போய்க்கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!

அவைகளெல்லாம் பொய்களப்பா!!!!

ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே... மேற்சொன்னவற்றில் அப்பனே அனைத்து கிரகங்களையும் கூட அப்பனே அணுவானது அப்பனே பின் இயக்கிக் கொண்டிருக்கின்றது அப்பனே!!!!

பின் எதை என்று சமாளிக்கும் அளவிற்கு கூட அவ் அணுவானது நம் உடம்பில் பதிந்து உள்ளது என்பேன் அப்பனே!!!

நீங்கள் எதை என்றும் அறிய அறிய கர்மாக்களை அதாவது பல ஞானிகள் சொல்லிவிட்டார்கள் எது எதெல்லாம் கர்மாக்கள் என்பதை எல்லாம்!!!!

அப்பனே கர்மாக்கள் நீங்கள் செய்யும் பொழுது அப்பனே அணுவானது அப்பனே பின் ஒவ்வொரு கிரகத்திலும் உள்ள அணுவானது எதை என்றும் அறிய அறிய அங்கு இருக்கும் என்பேன் அப்பனே!!!!

அதாவது எவை என்றும் அறிய அறிய நீங்கள் தவறு செய்கின்ற பொழுது அப்பனே பின் உன் உடம்பில் உள்ள அணுவானது அப்பனே மேல் உள்ள கிரகங்களையும் கூட அணுவானது கூட அதாவது பின் ஈர்க்கும் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே கஷ்டங்களும் வருகின்றது என்பேன் அப்பனே!!!!

இப்பொழுது உதாரணத்திற்காக எடுத்துக் கொள்வோம்

அப்பனே எதை என்று கூட பின் குருவானவன் அதாவது மன்னனவன்!!!! பொன்னனவன்!!!! என்றெல்லாம் அவனை அழைப்பார்கள்!!! கிரகமானதை எதை என்றும் அறிய அறிய!!!!!

அக் கிரகத்தில் ஒரு துகள் அதாவது அணுவானது இருக்குமப்பா!!!!!

அவ் அணுவானது சமமாகவே நீங்கள் பிறந்துள்ளீர்களே முதலிலே அப்பொழுதே நவகிரகங்களின் பின் அணுக்கள் நம் உடம்பில் கூட தங்கி இருக்கும் அப்பா சொல்லிவிட்டேன்.

அப்பொழுது எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால்  அவ் அணுவானது உருவானதை அப்பனே எதை என்று அறிய நீங்கள் வளரும் பொழுது அப்பனே அவ் அணுவானதும் வளரும் என்பேன் அப்பனே......

எதை என்றும் அறிய அப்பனை அதனால் நீங்கள் பின் சரியாகவே பின் வழிமுறையை பயன்படுத்தா விடில் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அப்பனே பின் அக் குருவானது பின் இவ் அணுவை தாக்கும் பொழுது அப்பனே மீண்டும் எதை என்றும் அறிய அறிய கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று போய்க்கொண்டே இருக்கும் அப்பனே.

அதை மாற்றும் விதமாக அப்பனே நல்வழியில் சென்றால் அப்பனே நிச்சயம் அது தாக்குகின்ற பொழுது அதாவது குருவின் எதை என்று அறிய கிரகத்தில் உள்ள அணுவானது தாக்குகின்ற பொழுது அப்பனே நிச்சயம் எதை என்று கூட நல்வழி தான் ஆகுமப்பா!!!

அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே குரு பலம் வந்துவிட்டது பின் ராகு பலம் வந்துவிட்டது....அப்பனே சனிபலம் வந்துவிட்டது என்பதாலும் அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!!!!!

நீங்கள் செய்ததற்கு நீங்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்!!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய ஏழரை (சனி) தன்னில் கூட பல பெரிய ஆட்களைக் கூட அப்பனே பின் சனியவன் உயர்த்தி எதை என்று கூட அப்பனே இன்னும் இன்னும் சரியான வழியில் கர்மங்களை அப்பனே எவை என்றும் அறிய அறிய தண்டனை அப்பனே உண்டு எதனால் என்பதைக் கூட!!!!!

"""""முக்கிரகங்கள்!!! என்பேன் அப்பனே !!!!!

சனி!!!!!  ராகு!!!!  பின் எவை என்றும் அறிய அறிய கேது!!!!  அப்பனே!!!! 

இவைகளை யாராலும் எவை என்று கூட எவ் பரிகாரத்தை செய்தாலும் கூட இவர்களை நிச்சயம் தடுக்க முடியாது என்பேன். அப்பனே!!!!!

இவர்கள் எதை என்றும் அறிய அறிய ஏற்கனவே யான் சொல்லிவிட்டேன் எவரவர் என்பதையும் கூட அதனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

நல்முறையாகவே பக்திக்குள் நுழைந்து விட்டால் தவறு செய்யாதீர்கள் அப்பனே பக்திகள் இல்லாவிடிலும் கூட நீங்கள் அப்படியே சென்று விட்டாலும் யாங்கள் உங்களை அழகாக பார்த்துக் கொள்வோம்!!!

எதை என்று கூட மீண்டும் இவ்வளவு நல்லவனாக இருக்கின்றானே ஆனால் பக்தி தெரியவில்லையே என்று நிச்சயம் எவை என்று கூட ஓர் நிறுத்தம் போல் செய்துவிட்டு மீண்டும் அழைத்து பக்திக்குள் நுழைத்து மீண்டும் உயர வைப்போம் அப்பனே

ஆனால் பக்திக்குள் இருந்து ஏமாற்றுவது தான் பெரும் தரித்திரம் அப்பா இதைத்தான் மனிதன் செய்து கொண்டிருக்கின்றான்  அப்பனே!!!!!

யானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய கோபங்கள் அப்பனே இன்னும் பொறாமைகள் அப்பனே இன்னும் காமம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே.... இவ்வுலகத்தில் எவை என்று அறிய அறிய அப்பனே பல திருத்தலங்கள்....

ஆனால் அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்!!!!

ஒருவனை பார்த்தேன் யான்!!!! அப்பனே எதை என்று கூட பக்தி!!!

ஆனாலும் யான்தான் சித்தன் என்று சொல்லிவிட்டான் அப்பனே எவை என்றும் அறிய அறிய பொய்களப்பா பொய்கள்!!!!

சித்தனுக்கு அனைத்தும் தெரியும் அப்பனே!!! ஏற்கனவே சொல்லிவிட்டேன் """பறப்பான் நீரில் மிதப்பான்!!! அப்பனே அக்னியில் அப்படியே சென்று விடுவான் அப்பனே இன்றைய நிலத்தில் இங்கே இருப்பான் நாளை எங்கோ இருப்பான் அப்பனே!!!!

ஓர் நொடி!!!! ஓர் நொடியில் எங்கெங்கோ சுற்றி வருவான் அவன் தான் சித்தன் அப்பனே!!!! 

ஆனால் இன்றைய அளவில் அப்பனே பெயருக்குத்தான் அப்பனே சித்தன் என்று வைத்துக்கொண்டு ஆனாலும் சொல்கின்றேன் அப்பனே சித்தன் என்று பெயரை வைத்துக் கொண்டான் ஆனால் பின் பெண்கள் எல்லாம் எவை என்று கூட நம்பி நம்பி அவனை நம்பி நம்பி சென்றார்களப்பா!!!!

ஆனாலும் அப்பனே பின் அவந்தனோ!!!!  எதை என்றும் அறிய அறிய அப்பனே இப்படி செய்தால் நலமாகும் என்பதை எல்லாம் அப்பனே கற்புக்களை எல்லாம் அழித்துவிட்டு ஏமாற்றி விட்டான் அப்பனே!!!!!

இவையெல்லாம் அடுக்குமா??????????  அப்பனே!!!!! 

எதை என்றும் அறிய அறிய அப்பனே இதனால் நிச்சயம் யான் தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் அப்பனே!!!!

எவை என்று கூட பின் என்னை வணங்கினாலும் யான் தண்டனை இனிமேல் கொடுப்பேன் சொல்லிவிட்டேன் அனைவருக்கும் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று கூட!!!

பின்பு எதை என்று கூட யான் அகத்தியனை வணங்கினேனே ஒன்றும் செய்யவில்லையே அகத்தியனின் மந்திரங்களை சொன்னேனே!!!!!!! சித்தர்களின் மந்திரங்களை சொன்னேனே!!!!! எவை என்று இறைவனின் மந்திரங்களை சொன்னேனே!!!!! என்றெல்லாம் அப்பனே!!!!!......... நிச்சயம் தகுதிகள் இல்லை அப்பனே தண்டிப்பேன்!!!! தண்டிப்பேன்!!!!! தண்டிப்பேன்!!!!! அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!

யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே எந்தனுக்கு எதற்காகடா எவை என்றும் அறிய அறிய அப்பனே பூசைகள் பல பல வழிகளிலும் கூட

அப்பனே யான் எதுவுமே கேட்கவில்லை......

நல்லோர்களாக வாழுங்கள்!!! அன்பை காட்டுங்கள்!!!!

இவ்வாறு காட்டினாலே யானே உன்னிடத்தில் வருவேன்!!!! உந்தனுக்கு என்னென்ன தேவையோ அப்பனே அதை அனைத்தும் கொடுப்பேன் அதை விட்டுவிட்டு என்னை குளிப்பாட்டுவது எந்தனுக்கு குங்குமம் இடுவது சந்தனம் இடுவது அப்பனே!!!!! இவையெல்லாம் நியாயமா!!!???????

இதையெல்லாம் விட்டுவிட்டு நல்லதை செய்தாலும் பரவாயில்லை ஆனால் கெட்டதை சொல்லிக் கொண்டிருக்கின்றான் பொறாமை மேல் பொறாமை அப்பனே!!!

அதனால்தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே மோட்சத்திற்கு நிச்சயம் நீங்கள் வரவேண்டும் என்றால் நிச்சயம் கஷ்டங்கள் படத்தான் வேண்டும்!!!!

அப்பனே பல காடுகள் பல மலைகள் ஏறி ஏறி திரிந்து ஒருவன் சொன்னானாம்!!!!.....

இறைவன் நம் பக்கத்திலே இருக்கின்றான் என்று!!!....

அப்பனே காடுகள் மலைகள் ஏறும் பொழுதே உன் கர்மா அழிந்து விடுகின்றது அப்பனே பின்பு அங்கிருந்தே சித்தர்கள் எவை என்று கூட இறைவன்கள் பக்கத்திலே இருந்து விடுகின்றான்!!!! அப்பொழுது தான் தெரியும் அப்பனே!!!

அதனால் அலைந்து திரிந்து அப்பனே சென்றால் தான் பின் கர்மாக்களும் நீங்கும் பல வழிகளிலும் கூட இன்னல்களும் நீங்கும் அப்பனே எதை என்று கூட அப்பனே இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே யாங்கள் இவ்வுலகத்தை நிச்சயம் மாற்றத்தான் போகின்றோம் சொல்லி விட்டோம் அப்பனே!!!!!

யாராலும் ஒன்றும் செய்ய இயலாது!!!!!

எதை என்றும் அறிய அறிய பொருத்தது போதும்!!!! போதும் !!!அப்பனே இப்படியே சென்று கொண்டிருந்தாலும் அப்பனே பின் மனிதர்கள் சித்தர்கள் இல்லை என்ற நிலைமைக்கு!!......... எவை என்று அறிய அறிய மனிதனே யான் சித்தன் யான் காகபுஜண்டன்.... யான் முருகன்!!!!......  யான் தான் சிவன் என்று சொல்லிவிட்டு இருப்பான் அப்பனே!!!!

அவ்வளவு பின் கர்வம் ஏற்பட்டு விட்டதப்பா!!!!! மனிதனுக்கு!!!!!!!

அப்பனே  இன்னும் என்னென்ன விளையாட்டுக்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே !!!

அப்பனே ஒன்றை சொல்கின்றேன்!!!!!

அகத்தியன் பக்தன் என்றால் அப்பனே சிறிது... அவனை உள்நோக்கிப் பாருங்கள் அவன் என்னென்ன செய்கின்றான் என்று!!!!

ஆனாலும் அப்பனே நம்பி விடாதீர்கள் என் பெயரைச் சொல்லியும் கெடுப்பார்களப்பா!!!!!

என் பெயரைச் சொல்லியும் ஆசிரமத்தை அமைப்பார்களப்பா!!!!!

என் பெயரைச் சொல்லியும் எதை எதையோ செய்வார்களப்பா!!!!!

நம்பி விடாதீர்கள் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய

எதை என்று கூட!!!!

என்னை அன்பால் வணங்குங்கள்!!!

அகத்தியனே!!!!! தந்தையே!!! அப்பா!!!! என்று வார்த்தை கூறுங்கள் யான் ஓடோடி உன் இல்லத்திற்கே வந்து விடுகின்றேன்!!!! 

ஆனால் அப்பனே மயக்கி பேசும் வார்த்தைகளை கூட ஆசை வார்த்தைகளை கூட அகத்தியன் எவை என்று கூட இருக்கின்றான் அகத்தியன் என்னிடத்தில் பேசுகின்றான் என்பதை எல்லாம் நம்பி விடாதீர்கள் அப்பனே!!!!

அனைத்தும் உன்னிடத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாம் அவன் எடுத்துவிட்டு சென்று விடுவான் அப்பனே உன்னை அனாதையாக விட்டு விட்டு செல்வான் அப்பனே!!!!

இதனால் தான் சொல்கின்றேன் முதலில் அப்பனே யான் எதை என்றும் அறிய அறிய அதனால் யாரையும் நம்பி விடாதீர்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!! 

என்னை எவையென்றும் அறிய அறிய அப்பா!!! என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள் தந்தையே!!! அகத்திய மாமுனிவரே!!!! எதை என்றும் அறிய அறிய என்று சொல்லுங்கள்!!!

யான் உங்களுக்கு வழிகாட்டுவேன் அப்பனே!!!

பின் எவை என்றும் அறிய அறிய உலகம் அப்பனே பொய்யானதப்பா!!!!!

எதை எதையோ செய்து கொண்டிருக்கின்றது!!!

எங்களை அதாவது சித்தர்களை வைத்து பிழைத்து எவை என்றும் அறிய அறிய அன்னதானங்கள் செய்கின்றோம் வேறு எது எதுவோ செய்கின்றோம் என்றெல்லாம் பணங்கள் பிடுங்கி பிடுங்கி அவன் செய்வதில்லையப்பா!!!!!

ஏதோ சில!!.......... செய்துவிட்டு பின்பு அவன் காசுகள் எடுத்து விடுகின்றான் அப்பா!!! ஒரு பயனும்  இல்லையப்பா!!! சொல்லி விட்டேன் அப்பனே!!!! 

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் இவ்வுலகத்தை படைத்தவன் இறைவன் அவனால் செய்ய முடியாதது மனிதனால் செய்ய முடியுமாம்!?!?!?!?!?!? 

அப்பனே யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே அதனால் தான் ஆறாவது அறிவு ஒன்றை இறைவன் படைத்து வைத்திருக்கின்றான்!!!! எதை என்று கூட அதை ஒழுங்காக மனிதன் பயன்படுத்தியதாக சரித்திரம் இல்லையப்பா!!!!!

அதை பயன்படுத்திக் கொண்டால் யாங்கள் உங்களிடத்தில் வருவோமப்பா!!!!!! 

அப்பனே யான் சிரஞ்சீவி ஆகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!!!

பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் ஒவ்வொருவர் நிலைமையும்!!!!

எவை என்று கூட நோய்கள் எதற்காக வருகின்றது??? அப்பனே!!!

நீ செய்யும் வினைதானப்பா நோய்!!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய துன்பங்கள் ஏன் வருகின்றது??? அப்பனே!!!!

நீ செய்கின்ற அப்பனே எவை என்று கூட வினைதானப்பா!!!!! 

அதனால் அப்பனே ஒவ்வொரு வினைக்கும் வரும் காலங்களில் எவை செய்ய வேண்டும் என்பதை எல்லாம் யான் செப்புவேன்!!!

ஆனாலும் அதை செய்து விட்டு மீண்டும் தரித்திரத்திற்குள் தான் நுழைவான் கர்மத்தைத்தான் சேர்த்துக் கொள்வான்!!!!

அப்பனே எவை என்று கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் அப்பனே அன்பானவர்களே எதை என்று கூட அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!! அனைவரையும் யான் பார்த்து விட்டேன்!!!! லோபாமுத்திரையோடு வந்து அப்பனே!!!! 

கவலைகள் இல்லை நலம் அப்பனே  இன்னும் இன்னும் ஏனைய வாக்குகளையும் கூட நிச்சயம் செப்புவார்கள் அப்பனே........ 

இவ்வுலகம் சித்தர்கள் உலகம்!!!  செப்பி விட்டேன் அப்பனே!!!!! 

மாற்றுவோம்!!!! மாற்ற வைப்போம் அப்பனே!!!! 

பின் விதியில் என்னவாக இருந்தாலும் விதியினை கூட நாங்கள் மாற்றும் தகுதி எங்களுக்கு உண்டு அப்பனே!!!! 

எதையென்றும் அறிய அறிய நிச்சயம் அப்பனே ஆசிகள்!!!! ஆசிகள்!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday, 14 June 2023

சித்தன் அருள் - 1350 - அன்புடன் அகத்தியர் - திருமூலர் வாக்கு!



22/4/2023 அன்று திருமூலர் சித்தமுனி உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் . திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில். 

உலகத்தை அழகாக படைத்து தன் கையில் வைத்துக்கொண்டிருக்கும் இறைவா!!!!!!!!!! உந்தனை மனதில் எண்ணி மூலன் தெரிவிக்கின்றேன்!!!!!! 

அறியாத ஒன்றை அறிந்து அறிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கையில்!!!!!!!!! 

மனிதன் மூடனே!!!! 

நில்லாது செல்மின்!!! செல்மின்!!!! 

(நிற்காமல் ஓடிக்கொண்டே இருங்கள் இறையை தேடி) 

எதற்கு? ஏந்தி ஏந்தி உண்டு!!!!!  உண்டென்பதை நிச்சயமாய் அறிந்து திரிந்து அலைந்து.............அலைந்தும் வீணடா!!!!!!! 

( எதற்காக ?ஆசைப்பட்டு விருப்பப்படுவது எல்லாம் அடைவதற்கு அலைவது??  தேடி தேடி சென்று தின்று வாழ்க்கை நிரந்தம் என்று நினைத்து கொண்டு பொருளாசையோடு அலைந்து திரிந்து வாழ்வது வீண்) 



வீண்!!!!!  என்று வந்துவிட்டால் ஏதடா பிறவிகள்!!!!!!!!!!!! (அனைத்தும் மாயையே அனைத்தும் வீணே என்று நினைத்து விட்டால்... அடுத்த பிறவிகள் இருக்காது)

பிறவி தன்னை முடித்திட்டு முடித்திட்டு... மீண்டும் பிறவி எடுத்தால் என்ன லாபம்??? 

லாபங்களையும் கூட்டி கழித்தாலும் ஒன்றுமில்லை!! 

ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்ற போதிலும்.... ஒன்றுமில்லாமல் வருபவன் இடத்தில் கூட என்ன இருக்கின்றது??????? 

என்ன இருக்கின்றது ??என்று கண்கூடாக பார்த்தாலும் இல்லையடா!!! 

இல்லையென்பது இருந்து விட்டால் இருப்பினும் மேலானது ஏதடா???? 

கூறடா!!!!!! 

கூறிய பின் வருந்துவது!!! 

வருந்தி!!!  பின் வருவது ஏது?????? 

ஏதென்பதை மறந்து விட்டாலும் மறப்பதற்கு ஒன்றுமில்லை!!! 

மறப்பதை நினைத்து நினைத்து பார்த்து பார்த்து பின் ஓடினால்!!!??........ 

எங்கு ஓடுகின்றாய்????? 

ஓட்டம் பிடித்து...... பிடித்து பின் கடைசியில் நின்று மீண்டும் இப்படியே வந்தால் நலன்கள் உருவாகுமா?????? 

போலியான மனிதர்கள் தான் நிற்கிறார்கள் இவ்வுலகத்தில்!!!! 

ஆடி அசைந்தும் அசைந்து வீணாக போய் கொண்டிருக்கின்றார்கள்!!! இதனால் என்ன லாபம்!???? 

லாபம் என்பதை கூட நின்று பார்த்தால்.... பார்த்திட்ட பின் ஓடி விடுவதாம் !?!?!?!! 

கணக்கு!!!!!  மனிதனுடைய கணக்கு!!!! 

மனிதனுடைய கணக்கூ எப்பொழுது தீருமோ??

அப்பொழுது இறைவன் நேரில் வந்து நிற்பான்!!!!

எதை என்றும் இன்னும் சித்தர்களின் ஆசிகள் மனிதனுக்கு கூடிக்கொண்டே தான் போய்க்கொண்டிருக்கும்!!!!

ஏனென்றால் இவ்வாறு கூடிக் கொண்டே போய்க் கொண்டிருக்கையில் மனிதன் மாற்றம் அடைந்து இன்னும் கர்மா சேர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது எங்கள் கடமையாகவே!!!!!

ஆனாலும் கடமை தன்னை விட்டொழித்தால் மனிதன் நிச்சயம் வாழ்ந்திடலாம் வாழ்ந்தும் விட்டுச் சென்றும் விடலாம்!!!

எங்களை நம்பியும் வந்து விட்டால் கஷ்டங்களை இட்டு இட்டு தீர்ப்பதே எங்கள் கடமையாகவே உள்ளது!!!!!

மாய வலையில் சிக்கிக் கொண்ட மனிதனை மீட்டெடுக்கும் வல்லமை எங்களைப் போன்ற சித்தர்களாலே முடியும்!!!!

ஆண் எதை என்று பெண் உணர்ந்து அறிவின் தன்மையையும் பொறுத்தறிந்து பொறுத்தறிந்து... பொறுப்பதாகவே இல்லையே.... மனிதனின் மனம்..... 

மனம் ஒன்று பின் கட்டுப்படுத்தி தனக்குள்ளே பின் நிச்சயம் ஆடினால் ஆடாதது ஏதடா?????

ஏதடா??? அடிபணிந்து பணிந்து கூறடா நமச்சிவாயனை!!!!!!!!! 

நமச்சிவாயனை பின் பணிந்து கூறுவது கூறுவது நிற்பதால் ஒன்றும் லாபமில்லை

நிற்பது எதை என்று யான் கூறுகின்றேன் கால்களை தானடா!!!! 

கால்களை வைத்து ஓட ஓட ஓடிக்கொண்டிருக்கும் பொழுது நிற்கின்றதால் அங்கு இறைவன் செயல்பட்டு நட்சத்திரங்களும் நவகிரகங்களும் கூட ஈசனுக்கு அடிமையாக போனதடா!!!!! 

ஆனாலும் ஈசனை கண்டு களிக்க நிச்சயமாய் அலைந்து திரிந்து திரிந்த பின் என்ன லாபம்???

ஆனால் கடைசியில் உன்னுள்ளே உன் ஊண் உடம்புக்குள்ளே நிச்சயம் ஈசன் வந்துவிடுவானா வந்து விடுவது ஏது எதற்கு நிச்சயம் தாழ்ந்து தாழ்ந்துசென்றாகையால் உம்மை!!! உம்மை காணவே நிச்சயம் பின் முடியாதடா!!!!

முடிந்த பின் கூறிற்று வழி விடுவது வழிந்த பின் ஏதடா அழுவது!!!!

அழுவது பின் நித்திரையில் நித்திரையில்  மீண்டும் பின் அனைவரும் அழுது தொழுது மீண்டும் பின் எழுந்தால் இது மாயம்!!! 

மாயப்பிறப்பு மாயப்பிறப்பு வந்து கொண்டே தான் இருக்கின்றது மனிதனுக்கு

மனிதனின் தன்மைகள் மனிதனுக்கே புரியவில்லை

புரிந்தும் அதை சரியாக செயல்படுத்த முடியவில்லை!!!

ஏனடா வருந்துவது... வருத்தத்திற்கு பின் வருவது ஏதடா கூறடா நோய்கள் வருமடா வருத்தப்பட்டாலே நோய்கள் வந்துவிடுமடா!!! 

இதனை யான் நிச்சயம் அறிந்து அறிந்து பல வழிகளிலும் உண்மைகளை கூட திரிந்து திரிந்து ஆண்டுகள் பல தவமிருந்து தவமிருந்து எங்கடா ஈசனை காணப் போகின்றாய்????

முட்டாளே அறிந்தும் செயல்பட்டுக் கொண்டிருந்தால் அண்ணாமலையிலே காண்பாய்!!!!

அண்ணாமலைக்கும் வருவதற்கும் அவ்வளவு சுலபங்கள் இல்லை ஆனாலும் சில தரித்திரங்கள் நீக்கிய பின்பே அண்ணாமலை வருவது சிறப்பு!!!

சிறப்பு என்பது தாழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்வது உன்னுடைய இயல்பு!!!

உன் உடம்பை ஊண் உள்ளே உன் உடம்பு எதை என்றும் அறிவது மூச்சை கட்டுப்படுத்துவதே வயிற்றின் உள்ளே!!!

வயிற்றின் உள்ளே அலைய வைப்பது நிச்சயம் பின் காற்றடா!!!!!

அக் காற்றை வயிற்றுக்குள்ளே சுற்றி சுற்றி வந்தாலே ஞானங்கள் வருமடா !! இறைவனை உன் மனதில் வைத்துக் கொள்ளலாமடா!!!! 

ஆனால் தெரிவதில்லை மனிதனுக்கு அலைந்தும் திரிந்தும் இறைவனை இல்லை என்று தான் சொல்கின்றானே தவிர இன்னும் இறைவனை உணர்வதே இல்லை மனிதன்

மனிதனுக்கு எட்டாத ஒன்று நமச்சிவாயன் தான்!!!

அதை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு கூட நீங்கள் தகுதிகள் பெற வேண்டும் என்றால் சுற்றித் திரிய வேண்டும் அன்பை காட்ட வேண்டும்!!!!!

ஆனால்  அவ் அன்பு இல்லையடா!!!! இருந்தும் பயன் இல்லையடா

புத்திகள் இருந்தும் பயனில்லை உடம்பிற்குள் அனைத்தும் இருந்தும் பயனில்லை அறிவுகள் இருந்தும் பயனில்லை கைகள் இருந்தும் பயனில்லை கால்கள் இருந்தும் பயனில்லை கண்கள் இருந்தும் பயனில்லை பற்கள் இருந்தும் பயனில்லை வாய் இருந்தும் பயனில்லை!!!

ஆனால் உபயோகிக்க தெரிவித்து கொள்கின்ற மனிதா இதை எப்படி உபயோகிக்கலாம் என்பதை கூட நிச்சயம் பின் வழிகள் காட்டுவார்கள் சித்தர்கள்

ஆனால் அதற்கும் புண்ணியங்கள் தேவைப்படுகின்றது!!!

 தேவைப்பட்டால் மனிதன் இறைவனை வணங்குவானாம்!?!?!?!!

தேவையில்லாமல் போடா என்று பின் போயிட்டு சென்று விடுகின்றானாம்!?!?!?

இதுதான் கலியுகத்தில் பிறப்பு மனிதனின் பிறப்பு பின் ஈடு இணை உள்ளது

ஆனாலும் இணை அவை என்று கூட பின் கீழாகவே சென்று கொண்டிருக்கின்றது மனிதனின் பிறப்பு இதனால் தான் ஊண் உள்ளே அனைத்து திறமைகளும் இருக்கின்றது!!

அதை எப்படி பின் அறிந்து செயல்படுத்தி செயல்படுத்திக் கொண்டு வருவது என்பதை கூட தெரியாமல் போய்விட்டது மனித ஜென்மங்களுக்கு!!!!

ஆடி அசைந்து போவது ஏதடா????

ஆடி அசையாமல் போவது ஏதடா????

ஆடி அசைந்த பின் வருவது ஏதடா???

வந்த பின் நிற்பது ஏதடா???

நிற்பது பின் தவன்று விட்டால் ஒன்றும் புரியாது
புரியாது!!!! 

அனைத்தும் புரியுமாம் மனிதனுக்கு!!!!!

வாக்குகள் புரியாதாம்!!!! 

தெரிந்து தெரிந்து நடந்து கொண்டால் பயனற்றது புத்திகள்

ஆனாலும் இறைவன் இல்லை என்று ஆனால் மனிதனின் கணக்கு

ஆனாலும் ஆனாலும் உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான் ஆனால் இறைவன் உள்ளதை கூட

 ஆனால் வணங்கிக் கொண்டே இருக்கின்றான் இறைவனை

பின் இறைவன் என்ன செய்யப் போகின்றான் என்று

 ஆனாலும் இறைவன் பக்கத்திலே இருந்து பார்த்துக் கொண்டே இருக்கின்றான் இக்கலி யுகத்தில் கூட

இதனால் பொய்யானவர்கள் கோடி கணக்கில் இன்னும் பக்தர்களாக செயல்படுவார்கள் இவ்வுலகத்தில்

மனிதனை மனிதன் ஏமாற்றுவதற்கு தான் இவ் வேடங்கள்!!! 

அவ் வேடங்கள் எப்பொழுது முடியுமென்றால் என் அண்ணாமலையிலே ஈசன் ஒவ்வொருவரையும் கூட பார்த்திட்டு இவ்வுலகத்தில் சித்தர்களைக் கூட அனுப்பி அனுப்பி நிச்சயம் அடி பலமாகத்தான் விழப்போகின்றது என்பதை கூட

சித்தர்கள் அகத்திய மாமுனி நிச்சயம் எவ் வகையிலெல்லாம் மக்களுக்கு என்னென்ன தெரிவிக்க வேண்டும் என்பதை எல்லாம் சுற்றி திரிந்து கொண்டிருக்கின்றான்.

ஆனாலும் மனிதன் மாயையில் சிக்கிக் கொண்டிருக்கின்றான்!!!!

யான் அகத்தியன் பிள்ளை!!! அகத்தியனை நன்றாக தெரியும் அகத்தியன் என்னிடத்தில் பேசுவான் என்று பொய்தான் கூறுகின்றான்

ஆனால் அவ் பொய் கூறுகின்றவன் நன்றாக இருக்கிறானா என்றால் நிச்சயமாக இல்லை!!!!

அப்பொழுது அவந்தனுக்கே தெரிகின்றது....ஏன் இவ்வளவு ஆட்டங்கள் என்பதையெல்லாம்!!!!

அதனால் அகத்தியன் சொன்னான் பின் கனவில் வந்தான் அனைத்தும் சொன்னான் என்பதெல்லாம் பொய் கூற்று!!!!

அகத்தியன் பார்க்கவா போகின்றான் என்று நினைப்பு!!!!

ஆனாலும் சாட்டையடி விழ போகின்றது!!!!

ஆனால் அகத்தியன் அமைதியாக இருந்தாலும் பின் தந்தை ஈசன் அமைதியாக இருக்கப் போவதில்லை!!!!ஏனடா இன்னும் கஷ்டங்கள் ஏற்கனவே!!!! உந்தனுக்கு!!!

மனைவி பிரிந்து போதல் இல்லத்தில் சண்டைகள் பிள்ளைக்கு சண்டைகள் நோய்கள்.

அடிபட்டும் திருந்தவில்லையடா!!!!

எதற்காக???

மீண்டும் எச்சரிக்கின்றேன் யானே!!!! 

வருந்தி வருந்தி வருந்திய பிறகு வருவது ஏதடா கூறடா கூறிய பின் யோசித்து செயல்படுத்துவது ஏதடா

வாயில் வார்த்தை விட்டால் உந்தனுக்கு சொந்தமடா

சொந்தம் பின் யாருக்கு சொந்தமடா சொந்தம் என்பதை கூட விட்டு விட்டால் உங்களுக்கு சொந்தம் இல்லையடா அனாதையடா!!!

அனாதை பின் இறைவனிடத்தில் வந்து விட்டாலும் யார் அனாதை என்பவை எல்லாம் இறைவன் மூச்சு உயிர் மூச்சு உயிர் மூச்சை பிறகு விட்டொழித்தால் ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை நிஜமாகவே வருந்தி வருந்தி ஒன்றும் பயனில்லை.

வருந்தி வருந்தி இப்படியே உடம்பும் கெட்டுப் போகின்றது உயிரும் பிரிந்து போகின்றது

இறைவன் இறைவனை எதை என்று அறிந்து இறைவன் மனிதனைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றான்!!!

ஆனால் மனிதனால் தான் பார்க்க முடியவில்லையே தரித்திர மனிதா!!!

இவ்வாறு செயல்பட்டு கொண்டிருக்கின்ற உந்தனுக்கே நாயினும் பிறவி எவை என்றும் அறிய பின் எவை என்று புரிய புரிய 

நாய்க்கு கூட இறைவனை கண்டால் பின் வாலாட்டும் ஆனால் மனிதன் கண்களுக்கு தெரிவதில்லையே

அப்பொழுது எண்ணிப் பார்!!

நாயை விட கேவலமான பிறவி மனித பிறவி....அறிந்து அறிந்து!!! 

நாய்களுக்கு கூட கண்களுக்கு இறைவன் எதை என்று கூட சரியாக தெரிந்து விடும்

ஆனால் மனிதனுக்கு தெரிவதில்லையே!!!!

ஏன்????? 

ஆசைகள் பேராசைகள் மற்றவர்களை கெடுக்க வேண்டும் என்பதை கூட மனதில் உறுதியாக இட்டுக்கொண்டு இருக்கின்றான்.

நிச்சயம் பேய் பிடித்த மனிதா குழப்பமடைந்த மனிதா பைத்தியக்கார மனிதா

திருந்திவிட்டால் திருந்திவிடு!!!

எதை என்று கூட அதனால் நாயினை விட சிறிது மேலாக வருவாய்!!!

ஆனால் இறைவன் கண்ணுக்கு தெரிவான்.

இப்பொழுது மனிதன் நாயை விட கீழாகவே இருக்கின்றான்.

அதனால்தான் நாய்களுக்கு இறைவன் தெரிகின்றது.

மனித ஜென்மங்களுக்கு தெரிவதில்லை.

இன்னொரு படி மேலாக சிறு உயிரினத்திற்கும் ஓர் நாள் இரு நாள் வாழ்கின்ற உயிர்களுக்கும் இறைவனை காண தகுதி உள்ளது!!! அவைகள் இறைவனை கண்டுவிடும்.

ஆனால் மனிதனால் காண முடியவில்லையே!!!!! 

எதற்காக??????

பொய் பித்தலாட்டங்கள் ஆசைகள் ஆசைகள் கோடி கோடி...

அப்படி இருந்து பணத்தின் மீது ஆசைகள் பெண்கள் மீது ஆசைகள் இன்னும் பல பல ஆசைகள் இவ்வாறே பின் சென்று கொண்டிருந்தால் சென்று கொண்டே இருக்க வேண்டியதுதான்!!!!!

மீண்டும் பாழாய்ப்படுத்தி மீண்டும் வருவது அதையே எண்ணிக் கொண்டிருப்பது மீண்டும் மீண்டும் வருவது பின் வட்ட வடிவமாக!!!!

ஆனாலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!!!!

எப்பொழுது ஒருவன் ஈசனை நினைக்கின்றானோ அப்பொழுதே கஷ்டத்திற்கு வந்து விட்டான் என்பது பொருள்!!!!

அப்பொழுது கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்

ஆனால் ஈசனை வணங்கினோம் கஷ்டங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றது என்று மீண்டும் சென்று விடுவது!!!

இவ்வாறு சென்றுவிட்டால் மனிதா மீண்டும் பிறப்பு எடுத்து வர வேண்டும் இங்குதான் வரவேண்டும் அலைந்தும் திரிந்தும் அனைத்தும்.

அதனால் முதலிலே வணங்கி விடு ஈசனை!!!!

ஈசனை நின்றன் பின் நின்றபொழுது தொழுவது ஏதடா தொழுது பின் நின்றொழித்து பின் உடம்பில் உள்ள அழுக்குகளை கூட நீக்குவது எக்காலமடா???

காலம் இல்லையடா!!!!!

சிறிது காலமே மனிதனுக்கு கொடுக்கப்பட்டது அதனைக் கூட சரியாக பயன்படுத்த தெரியவில்லை என்றால் இன்னும் என்னதான் லாபம்????

கஷ்டங்கள் யார் கையில் இருக்கின்றது????

ஆனால் இறைவன் அதற்குரிய சம்பந்தங்கள் நிச்சயம் விஞ்ஞானம் தெரியாதா? அகத்தியனுக்கு!!!!!

நிச்சயம் எடுத்துரைக்கப் போகின்றான்!!!!

மனிதனை மாற்றவும் தெரியும் பின் பன்மடங்கு உயர்த்தவும் தெரியும்!!!! அகத்தியனுக்கு !!!!

ஏன்? உங்களை மாற்ற??

ஆனாலும் முடியவில்லை எதற்காக என்றால் நீங்கள் தான் காரணம் என்று தான் யான் தெரிவிப்பேன்!!!!

ஏனென்றால் மனிதன் மனிதன் எதை என்று அறிய அறிய பொய் சொல்லி பொறாமை பட்டு இன்னும் எண்ணங்கள் வேறு வேறு!!!!

இன்னும் அதை என்று அறிய அறிய இன்னும் புத்திகளே இல்லையடா

இன்னும் சொல்கின்றேன் ரேகைகளைப் பற்றியும் சொல்கின்றேன்!!!!

இடைக்காடனும் கூட இன்னும் சொல்வான் வாக்குகள்!!!!! மனிதனுக்கு!!!

அப்பொழுதுதான் புத்திகள் வருமே தவிர இன்னும் எதையெதையோ புத்தகத்தில் எழுதிக் கொண்டிருப்பதை படித்துப் படித்து அதைக் கூட இன்னும் எவை என்று பின்பற்றி பின்பற்றி தோல்விகளை தான் தழுவிக் கொண்டிருக்கின்றான்.

ஏதாவது உண்மை இருக்கின்றது என்றால் ஏதும் இல்லை!!!!

பொய் கூறுவது தான் மனிதனுடைய உண்மையான சக்தி என்பதை யான் புரிந்து கொண்டேன்.

ஆனால் அறிந்து செயல்படுத்தி நீ வாழலாம் இவ்வுலகத்தில் பல ஆண்டுகள் பல ஆண்டுகள் கோடிகள் கூட வாழ்ந்து விடலாம் உன்னால்.

ஆனால் ஏன் எழுவதை( 70 வயது) கடக்க முடியவில்லை???? பின்பு எண்பதையும்( 80வயது) கடக்க முடியவில்லை தொண்ணூறையும் கடக்க முடியவில்லை

ஏன்???  மனிதா!!!! பின் அழிந்து விடுகின்றாய்

ஏனென்றால் திரிந்து அலைந்து இறைவன் மீது பற்று இல்லாமல் எதை எதையோ நோக்கி சென்றால்...... நிச்சயம் உன் ஊண் உடம்புள்ளே சிறிய காற்று பின் பட்டு பட்டு அக் காற்றானது சேமிக்கும் திறன் அதிகம் என்பதை கூட ஊன்றி பார்த்து விட்டால் மூளையின் சோர்வுகள், மூளையில் பல துகள்கள் உள்ளது!!!!!

ஆனால் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது???

எதை எதையோ நீ யோசித்தால் அவை அழிந்து கொண்டே தான் போகின்றது

 அதை அழியாமல் காப்பதற்கு யான் வழிகள் கூறுகின்றேன்.

ஆனால் நீங்கள் கட்டாயம் சரியாக வழியில் ஆனால் சரியான வழிகளில் வருவீர்கள் என்றால் யானும் பார்ப்பேன் கற்றும் கொடுப்பேன்!!!

அப்படி இல்லை என்றால் மூளையை தட்டிட்டு அப்படியே சென்று விடுவேன்!!!!

அறிந்தும் அறிந்தும் சித்தர்கள் இல்லையா!???

சித்தர்கள் எதற்காக என்பதை எல்லாம் தாழ்ந்து ஏது பின் படி.....படின் படி ஒன்றின் படி, படி அறிந்து ஒன்றின் படி மேலாக மேலாக நிமித்தம் காட்டி மீண்டும் இறங்கி இறங்கி வந்து இதில் கூட பின் கல் என்று கல்லென்று தெய்வமடா தெய்வத்தை தொழுது அக்கல்லானது வெற்றி பெற்று விட்டது .மனிதன் தோல்வியுற்று விட்டான்!!!

ஆனால் கடைசியில் பார்த்தால் கல் என்று!!! அறிந்தும் செயல்படாத புத்தி இல்லாத மூளைக்கு எவ்வளவு சொன்னாலும் புரிவதில்லை புரிவதும் இல்லை. பூரிப்பதும் இல்லை

ஐயோ!!!! கஷ்டம் என்கின்றான்!!!

எதனால் வந்தது??? என்பதைக் கூட தெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான்!!!

வருவோமாம்!?!?!?!?!?!!!?  சித்தர்கள் இவர்களை வழிநடத்த!?!?!?!!!!

ஆனால் கடைப்பிடிக்க மாட்டார்களாம்!?!?!?!?!!!  அறிந்தும் அறிந்தும்!!!!

இதனால் பின் சாகும் நிலை வருவாயினும் அப்பொழுதுதான் ஈசனை பிடிப்பானாம் !?!?!!?!?!?!!

ஈசனே!!!!!!! ஈசனே!!!!!  என்று ஓடோடி ஓடி!!! ஓடி!!!! வந்துவிடுவானாம் !?!?!?!

எதனை என்று கூட அதனால் மூளையில் செல்கள் அறிந்து அதை அழித்துவிட்டு தான் எவை என்று கூட யாங்கள் அதனைத் தான் வழிகள் காட்டுவதற்கு தகுதியாக இருக்கின்றோம்!!!!!

வரும் காலங்களில் சித்தர்கள் இன்னும் ஒவ்வொன்றாக உரைப்பதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி!!!!!

இல்லையென்றால் குலமும் அழிந்து விடும் அனைத்தும் அழிந்து விடும்!!! நீ அனைவரையும் அழித்துவிட்டு நீயும் கூட அழிந்து விடுவாய் பயனில்லை!!!!

பயனற்ற பிறவியை பயனுள்ளதாக மாற்றுங்கள்!!!

நிச்சயம் உதவிடுவோம் யாங்கள் சித்தர்கள்!!!!

அருளாசிகள் கோடிகளப்பா கோடிகள்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday, 11 June 2023

சித்தன் அருள் - 1349 - அன்புடன் அகத்தியர் - காசி அனுபவம்!





மைந்தனுக்கு கிடைத்த அன்னையின் தரிசனமும் ஸ்பரிசமும்

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!!!

நம் குருநாதரான அகத்தியப் பெருமான் இந்த உலக நன்மைக்காக யுகம் யுகமாக இந்த உலகம் செம்மையுடன் இயங்க ஒவ்வொரு பிறவிக்கும்  மும்மூர்த்திகள் அருளாலும் சித்தர்கள் அருளாலும் புண்ணிய ஆத்மாக்களை தேர்ந்தெடுத்து சுவடியை வழங்கி உலக மக்கள் புண்ணியத்துடன் கூடிய பக்தியை கடைப்பிடித்து நல்ல முறையில் வாழவும் கர்ம வினைதனை அகற்றவும் ஜீவனாடியில் வந்துதித்து உபதேசங்களை நல்கி வழிநடத்தி வருகின்றார்!!!

இப்படி நம் குருநாதர் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு ஏன் சொல்லப் போனால் ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் புண்ணி ஆத்மாக்களை தேர்ந்தெடுத்து சுவடியை வழங்கி சுவடியின் மூலம் நல் உபதேசம் செய்து வரும் நம் குருநாதர் இன்றைய காலகட்டத்தில் திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு ஜீவநாடி சுவடியை வழங்கி அதன் மூலம் நம் அனைவரையும் வழிநடத்தி வந்து கொண்டிருக்கின்றார்.

குருநாதர் இடும் கட்டளையை அப்படியே அனுசரித்து குருநாதர் உத்தரவிடும் ஆலயங்களுக்கெல்லாம் ஓய்வின்றி தொடர் பயணங்களாக சென்று கொண்டே இருந்து பல புண்ணிய திருத்தலங்களை குருநாதர் குறிப்பிடும் பொழுது அந்த புண்ணிய திருத்தலங்களில் சென்று ஏனென்றால் சில புண்ணிய திருத்தலங்களில் இருந்து சில முக்கியமான வாக்குகளையும் நாம் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் ஒவ்வொரு புண்ணிய தலத்திலும் எங்கெங்கு எதனைச் செப்ப வேண்டும் என்பதை உணர்ந்து குருநாதர் அதன்படியே வழி நடத்தி வருகின்றார்.

குருநாதர் உத்தரவினை சிரம் தாழ்ந்து ஏற்றுக்கொண்டு திரு ஜானகிராமன் ஐயா ஒவ்வொரு புண்ணிய தலங்களுக்கும் சென்று நாடி வாசித்து வாக்குகளை மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்.

புகழுக்கோ பொருளுக்கோ எதனைப் பற்றியும் கவலைப்படாமல் குருநாதர் கட்டளை அதுவே என் வாழ்க்கை என்று நடந்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்.

சில சமயம் சொந்த வீட்டிற்கு கூட வந்து தங்க முடியாத சூழ்நிலையும் வந்துவிடும் .

திருப்பதி திருவண்ணாமலை காசி பொதிகை மலை ஓதிமலை நட்டாற்றீஸ்வரர் திருக்கடையூர் என அவருடைய பயணம் இந்த தேசம் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும்.

குருநாதர் என்ன உத்தரவிடுகின்றாரோ அதை அப்படியே மேற்கொண்டு பயணத்திட்டம் வகுத்து அதன்படி ஒவ்வொரு ஆலயங்களுக்கும் சென்று விடுவார்.

குருநாதர் தனது வாக்குகளில் குறிப்பிட்டதை போல அப்பனே இறைவனே கதி என்று இருந்தால் தன்னலம் இன்றி பொதுநலம் கருதி அனைவருக்கும் சேவை செய்து வாழ்ந்து வந்தால் அந்த இறைவனே வந்து கையைப் பிடித்து இழுத்துச் செல்வான்!!!!!

இறைவன் ஒருவனே அனைத்திற்கும் காரணம் என்று இருந்தால் இறைவனை மட்டும் நம்பிக் கொண்டு இருந்தால் இறைவன் வந்து நம் பக்கத்தில் அமர்ந்து கொள்வான் அனைத்தையும் வழங்கி வழி நடத்திச் செல்வான் என்று குருநாதர் தன்னுடைய ஒவ்வொரு பொதுவாக்கிலும் இறை தரிசனத்தையும் இறைவனை அடைவது எப்படி என்பதையும் இப்படி சில சில வாக்குகளாக உபதேசங்களாக குறிப்பிட்டுச் செல்வார்.

அப்படியே வாழ்ந்து வரும் திரு ஜானகிராமன் ஐயாவிற்கு இன்று 11/6/2023 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை அஷ்டமி இன்று காசியில் கிடைத்த அன்னை லோப முத்திரையின் தரிசனமும் அன்னைக்கும் ஜானகிராமன் ஐயாவுக்கும் இடையில் நடந்த அன்பு பரிமாற்ற நிகழ்வையும் தற்பொழுது காண்போம்.

திரு ஜானகிராமன் ஐயாவிற்கு குருநாதர் காசிக்கு சென்று வருக என்று உத்தரவு கொடுத்திருந்தார்!!!!

அதன்படியே திரயம்பகேஸ்வர் ஜோதிர்லிங்கம் நாசிக் ஸ்தல யாத்திரையை முடித்துவிட்டு காசிக்குச் சென்ற திரு ஜானகிராமன் ஐயா கங்கை ஆர்த்தி தரிசனம் காசி விஸ்வநாதர் தரிசனம் என்று நேற்றைய பொழுதில் செய்து விட்டு இன்று காலையில் காசியின் காவல் தெய்வமான அஷ்ட பைரவர்களில் மிகப்பெரியவரான காசி காலபைரவர் பாபா ஆலயத்திற்கு சென்றார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாள் ஆனதால் கூட்டம் என்றால் கூட்டம் கட்டுக்கடங்காத கூட்டம் ஆலயத்திற்கு உள்ளே செல்ல எந்த ஒரு வழியும் இல்லை. ஆலயத்தின் முன் வாசலிலும் சரி பின்வாசலிலும் சரி கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம்.

அதுமட்டுமல்லாது இன்றைய நாளில் இந்தியாவின் முக்கிய அரசியல் பிரமுகர் காசிக்கு புனித யாத்திரை வந்ததால் பாதுகாப்பு விதிமுறைகள் கெடுபிடிகள் அதிகம் இருந்தது.

திரு ஜானகிராமன் ஐயாவும் ஆலயத்தைச் சுற்றிலும் காணப்பட்ட மக்கள் வெள்ளத்தைக் கண்டு ஒருகணம் திகைத்து நின்று விட்டார்.

ஏனென்றால் இந்த கூட்டத்திற்கு உள்ளே சென்று எப்படி காலபைரவரை காண்பது????

அரசியல் பிரமுகர் வருகை காரணத்தினால் நகரம் முழுவதும் போக்குவரத்துகள் மாற்றியமைக்கப்பட்டு விட்டு மிகுந்த நெரிசல் ஏற்பட்டு விடும் இன்று மாலையை ஊர் திரும்புவதாக இருந்ததால் நகரத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும் ஏற்கனவே காசி நகரம் கடும் மக்கள் கூட்டம் நெரிசல் இருக்கும் பகுதி அதனால் எப்படி நாம் என்ன செய்வது ?? இந்த கூட்டத்திலேயே இப்படியே நின்றுகொண்டிருந்தால் மாலை வரை ஆகிவிடும் என்று யோசித்துக் கொண்டே!!!!!!

சரி!!!  சரி!!!!! நம்மைத்தான் குருநாதர் மாதா மாதம் எப்படியாவது காசி அழைத்து வந்து விடுகின்றாரே சரி அடுத்த முறை வரும்பொழுது கால பைரவரை தரிசனம் செய்து விடுவோம் என்று எண்ணி ஆலயத்தின் வாசலிலேயே இருந்து கொண்டு அப்பனே காலபைரவா!!!!!! அடியேன் உன்னை காண வந்தேன் இங்கே கடும் மக்கள் கூட்டம் அதனால் அடுத்த முறை வரும்பொழுது உங்களை தரிசனம் செய்கின்றேன் என்று மனதில் வேண்டிக்கொண்டு ஆலயத்தை பார்த்துக் கொண்டே வணங்கி விட்டு வெளியே வரும்பொழுது!!!!

ஒரு வயதான பெண்மணி விரைவாக ஓடி வந்து திரு ஜானகிராமன் ஐயாவை கையை பிடித்து நிறுத்தினார்!!!!!

திரு ஜானகிராமன் அய்யாவும் என்ன அம்மா என்று கேட்க!!!!

வடமொழியில் அந்த அம்மையும் என்ன மகனே காலபைரவனை தரிசனம் செய்ய வேண்டுமா????

என்னுடன் வா!!!! என்று வாஞ்சையுடன் கையைப் பிடித்து அந்தக் கூட்டத்தின் நடுவே இழுத்துச் சென்றார்!!!

திரு ஜானகிராமன் அய்யாவிற்கும் வடமொழி புரிந்து கொள்ளும் அளவிற்கு தெரியும்!!!!

யார் இந்த அம்மை??? நம் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் செல்கின்றாரே!!!!! யாராக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே பின்னாலே சென்றார்.

கடும் மக்கள் கூட்டத்தின் எதிர்ப்பும் ஆலய காவல் பணியாளர்கள் எதிர்ப்பும் இருந்த போதிலும் உள்ளே இழுத்துச் சென்றார்.

அப்படி ஆலயத்தின் வாசலில் இருந்து உள்ளே இழுத்துச் செல்லும் பொழுது இரண்டு காவல்துறை பணியாளர்கள் வந்து தடுத்து நிறுத்தினார்.

வடமொழியில் அம்மையே எங்கே போகின்றீர்கள்???? உள்ளே உங்களை அனுமதிக்க முடியாது கூட்டம் அதிகமாக உள்ளது என்று தடுத்து நிறுத்த!!!!

அந்த அம்மா!!!!!!

இவன் என் மகன்!!!

இவனை காலபைரவனை காண அழைத்துச் செல்கின்றேன்!!!!!

யாரும் தடுக்காதீர்கள்!!!!

என்று அந்த அம்மா உத்தரவு வாய்மொழியாக சொன்னவுடன் அங்கு என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை. அனைவரும் சாதாரணமாக கண்டுகொள்ளாமல் போய்விட்டனர்!!!!

வா!!! மகனே வா!!!! என்று கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து விரைவாக அழைத்துச் செல்லும் பொழுது திரு ஜானகிராமன் ஐயாவிற்கு நொடிப்பொழுது கண்கள் கலங்கிவிட்டது அந்த தாயின் பாசத்தை கண்டு!!!!

யார் என்று தெரியாத ஒரு பெண்மணி ஒரு வயதான அம்மா இத்தனை கூட்டத்திற்கும் நடுவே அனைவரையும் எதிர்த்துக்கொண்டு என் கையைப் பிடித்து அழைத்துச் செல்கின்றாரே இவரும் என் தாய் தான் என்று நினைத்துக் கொண்டே ஒரு நிமிடம் நெகிழ்ந்து விட்டார்!!!!

அப்படி அழைத்துச் சென்ற அந்த அம்மா காலபைரவர் சன்னதிக்கு எதிரில் கொண்டு போய் நிறுத்திவிட்டார்!!!!!

மகனே !!!  நன்றாக நின்று தரிசனம் செய்!!!! உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் நான் இருக்கின்றேன்!!!! என்று பக்கத்தில் இருந்து கொண்டு நல்லபடியாக தரிசனம் செய்வித்தார்!!!!

திரு ஜானகிராமன் அய்யாவும் தரிசனம் செய்துவிட்டு ஆலய பிரகாரத்தில் சுற்றிலும் மக்கள் வெள்ளத்திற்கு இடையே வந்து மிக்க நன்றி தாயே !!!!உங்கள் உதவியால் காலபைரவரை தரிசனம் செய்தேன் மிக்க நன்றி என்று சொல்லி.....

தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் அம்மையே!!! ஏதாவது கைச்செலவிற்கு ஏதாவது வாங்கி சாப்பிடுங்கள் என்று காசுகள் எடுத்துக் கொடுக்க!!!!!

அந்த அம்மையோ எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டே தலையசைத்து மறுத்துவிட்டார்கள்!!!!

மேலும் மேலும் வற்புறுத்தி எனக்காக பெற்றுக் கொள்ளுங்கள் அம்மா தேநீர் செலவிற்காகவாவது வைத்துக் கொள்ளுங்கள் என்று நூறு ரூபாயை வற்புறுத்திக் கொடுத்த பொழுது அர்த்த புஷ்டியுடன் பார்த்து சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டார்கள்.

சரிங்க அம்மா!!!! நான் சென்று வருகிறேன் எனக்கும் நேரம் ஆகிவிட்டது தமிழ்நாடு செல்ல வேண்டும் என்று அந்த அம்மாவிடம் உத்தரவு வாங்கி விட்டுச் செல்ல!!!!!

ஒரு நிமிடம் மகனே!!!! என்று சொல்லிவிட்டு காசி காலபைரவர் ஆலயத்தை சுற்றிலும் இருக்கும் பண்டித்துக்கள் எனப்படும் பூசாரிகளிடம் மயிலிறகு கொண்டு வருட செய்தும் ஒரு கருப்பு நிற காசி கயிறு எடுத்து தன் கையால் ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு அணிவித்து சிரித்துக் கொண்டே தட்டிக் கொடுத்து வழி அனுப்பி வைத்தார்.

திரு ஜானகிராமன் ஐயாவும் காலபைரவர் தரிசனத்தை முடித்துக் கொண்டு விட்டு காசியில் கங்கை கரையில் மீர் காட் இல் சாதுக்களுக்கு அன்னதான சேவையும் செய்துவிட்டு மாலையில் புறப்படும் முன்பாக குருநாதரிடம் பொதுவாக்கு உத்தரவு கேட்டு வாக்குகள் படித்தார்.

பொதுவாக்கு குருநாதர் கூறி முடித்தவுடன்!!!!!

அப்பனே!!!!  அன்பு மகனே!!!!! இன்று நீ கண்டது காலபைரவனை மட்டுமல்ல அப்பனே!!!!!

எவையன்றி கூற அப்பனே வந்தவள் உன் தாய் தானப்பா!!!!!

மைந்தனுக்காக உதவி செய்ய உன் தாய் லோப முத்ராவே வந்தாள் என்பேன் அப்பனே!!!!!!! உன்னுடன் வந்து அவளுடைய ஆசிகளையும் தந்து காலபைரவனின் ஆசிகளையும் வாங்கி தந்து விட்டாள் அப்பனே!!!!!! நலம் அப்பனே எங்கள் அருளால் இனியும் உந்தனுக்கு முன்னேற்றம் தான் ஏற்படும்!!!!! மகனுடன் சிறிது நேரம் உரையாடி விட்டு வருகின்றேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தாளப்பா!!!!!!!

காசி விஸ்வநாதனின் அருளும் பரிபூரணம்!!!! விசாலாட்சி அன்னையவளின் ஆசிகளும் எம்முடைய ஆசிகளும் லோபா முத்திரையோடு வந்து நல் ஆசிர்வாதங்கள் அப்பா!!!!!!!!

என்று குருநாதர் வாக்குரைத்தார்!!!!

சுவடியில்  குருநாதர் கூறியதை கேட்டு திரு ஜானகிராமன் ஐயா மெய்யுருகி போய்விட்டார்!!!

நீங்களே கதி என்று இருக்கின்றேன் எனக்காக வந்தீர்களா என் தாயே!!!! என் அம்மா லோபமுத்ரா தாயே!!!! எனக்கு எதுவும் வேண்டாம் நீங்கள் மட்டுமே போதும்!!!! என்று மனம் நெகிழ்ந்து உருகி விட்டார்.

அன்பு அடியவர்களே!!!! இந்த சம்பவம் எதற்காக என்றால் நம் குருநாதர்  வாக்கினை அப்படியே கேட்டு அப்படியே நாம் நடந்து வந்து கொண்டிருந்தால் இறை தரிசனம் !!! இறையின் ஸ்பரிசம் வெகு தூரம் அல்ல!!!! அது விரைவில் நமக்கும் கிட்டிவிடும் என்பதற்கு உதாரண சம்பவம் தான் இது!!!!

நாம் அனைவரும் நம் குருநாதர் வாக்கினை கேட்டு அப்படியே நடப்போம் இறை தரிசனத்தையும் இறை அருளையும் நாமும் பெறுவோம்!!!!

ஓம் ஸ்ரீ லோப முத்ரா தாயார் சமேத அகஸ்தியர் திருவடிகளே போற்றி போற்றி!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 10 June 2023

சித்தன் அருள் - 1348 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை அனுபவம், கேள்வி/பதில்!


21/4/2023 அன்று  குருநாதர் அகத்திய பெருமான் கருணை வாக்கும் உபதேசங்களும்.

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

நம் குருநாதர் அகத்திய பெருமான் கருணையே வடிவானவர்.. என்பது அனைவரும் அறிந்ததே!!!!!

ஜீவநாடி வாக்குகள் அனைவருக்கும் கிடைக்கின்றதா என்பதை பார்த்தால் தேடலும் பக்தியும் நம்பிக்கையும் இருக்கின்றவர்களுக்கு குருநாதர் ஏதாவது ஒரு ரூபத்தின் மூலம் தன்னுடைய வாக்கினையும் வழிகாட்டுதலையும் உபதேசத்தையும் நலமுடன் நல்கி வழி நடத்துகின்றார்.

சில நல்லுள்ளங்களுக்கும் ஜீவனாடி பற்றியே அறியாத பக்தி செலுத்தும் சேவைகள் செய்து வரும் மக்களுக்கும் குருநாதர் கருணையுடன் வாக்குகள் தந்து கொண்டே இருப்பதை நாம் அறிவோம்.

ஒவ்வொரு திருத்தலங்களிலும் திரு ஜானகிராமன் ஐயா யாத்திரை செய்யும் பொழுது கூட அடியவர்களுக்கு மட்டுமல்ல ஆங்காங்கே இருக்கும் நல் பக்தியுள்ளங்களுக்கும் வாக்குகள் தந்து அருளாசிகள் செய்வார்!!!

அதேபோன்று கடந்த மாதம் திருவண்ணாமலையில் பிரம்ம தீர்த்தம் குளத்திற்கு அருகே மாலை வேளையில் திரு ஜானகிராமன் ஐயா குருநாதரின் உத்தரவுப்படி வாக்குகள் தந்து கொண்டிருக்கும் பொழுது திருவண்ணாமலை ஆலயத்தில் பணிபுரியும் துப்புரவு பெண் பணியாளர்கள் அனைவரும் குருநாதர் வாக்கினை கேட்டுக்கொண்டே நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் முகத்தில் ஒரு வியப்பும் ஒரு தயக்கமும் புரிந்தும் புரியாமலும் இருக்கும் மனோநிலையும் அவர்களிடம் தேங்கி நின்றது!!!

ஆனால் கருணை கடலான நம் குருநாதர் அவர்களை அருகே அழைத்து வரச் சொல்லி உத்தரவிட்டு அவர்கள் அனைவருக்கும் அங்கு கூடியிருந்த அனைத்து மக்கள் முன்பாக அவர்களுக்கு நல்வாக்குகள் தந்தார் அந்த இடமும் ஆலய வளாகமும் பிரமிப்பும் பக்தியும் நிறைந்த ஒரு அற்புத சூழலாக அமைந்தது.

நமக்கு எப்பொழுது?? வாக்குகள் கிடைக்கும் !!! நமக்கு ஏன் குருநாதர் வாக்குகள் தரவில்லை திரு ஜானகிராமன் அய்யாவை தொடர்பு கொள்ள முடியவில்லை எவ்வளவு கட்டணம் ஆயினும் சரி கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம் ஆனால் வாக்குகள் எப்பொழுது கிடைக்கும் என்று பலவித எண்ணங்கள் பல விதமான மக்கள் மனதில் அலை பாய்ந்து கொண்டு இருக்கின்றது.

ஆனால் உண்மையான பக்தியும் சேவை மனப்பான்மையும் இருந்தால் குருநாதரே தேடி சென்று வாக்குகள் தருவார் என்பதற்கு உதாரண சம்பவங்களில் திருவண்ணாமலை வாக்கும் ஒன்று.

பொருளுக்காக ஜீவநாடி வாக்குகள் வாக்கு வாசிப்பது என்பது ஒரு காலத்திலும் நடக்காத ஒன்று!!!!!  குருநாதர் மைந்தனும் குருநாதரின் உத்தரவுப்படிதான் நடந்து கொள்வாரே தவிர மற்றவைகளை ஒதுக்கிவிடுவார். 

அங்கு செல்க!!!! இந்த ஆலயத்திற்கு விரைக!!! என்று குருநாதர் உத்தரவுகள் தரும் பொழுதெல்லாம் அதை அப்படியே அனுசரித்து மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அந்த இடத்திற்கு சென்றால் அங்கு யார் யாருக்கு என்னென்ன வாக்குகள் தர வேண்டும் எதனை உரைக்க வேண்டும் எந்த இடத்தில் எதைச் சொன்னால் மதிப்பு என்பதை குருநாதரே தன்னுடைய வாக்குகளால் அனைவருக்கும் புரியும் படியான வாக்குகள் தந்து நல்வழிப்படுத்துகின்றார்!!

அப்படியான அற்புதம் நிறைந்த திருவண்ணாமலையில் நடந்த குருநாதரின் கருணை வாக்குகள் நல்கிய சம்பவத்தினை தற்பொழுது காண்போம்!!!!

குருநாதர் வாக்குகள் தந்து கொண்டிருந்த பொழுது தயங்கி நின்ற துப்புரவு பெண் பணியாளர்கள் அவர்களை அழைத்து இதில் பார்வதி தேவியின் மாற்று பெயர்கள் கொண்டவர்கள் இங்கே வந்து அமருங்கள் என்று குருநாதர் உத்தரவிட்டார்!!!

என் பெயர் உண்ணாமலை என்று  ஆலய பணியாளர்களில் ஒரு பெண்மணி முன்னே வந்து அமர!!! மீதி இருந்த பணியாளர்கள் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக அமர்ந்த குருநாதர் வாக்குகளை கேட்க தொடங்கினர்!!!

அம்மையே எதை என்றும் அறிய அறிய அம்மையே பின் எவை என்று உணர்ந்து உணர்ந்து அம்மையே ஈசன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான் அம்மையே கவலைகள் பல பல ஆனாலும் நிச்சயம் கவலைகள் பட்டு பட்டு ஆனாலும் கவலைகள் இல்லை!!!

ஈசன் அனைத்தும் செய்து விடுவான் என்பேன் அம்மையே கவலைகள் விடுங்கள்!!!!! உங்கள் அனைவரின் இல்லத்திற்கும் ஈசன் வந்து வந்து ஆசீர்வதித்து சென்று கொண்டே தான் இருக்கின்றான் அதனால் கவலைகள் விடுங்கள் ஈசனுக்கு நல் படியாக சேவைகள் செய்யுங்கள்!!!!

அம்மையே எதை என்று அறிய அறிய ஈசன் தவழ்ந்து வந்து கொண்டே இருக்கின்றான்!!! உங்கள் ஒவ்வொரு மனதையும் ஆராய்ந்து கொண்டே தான் இருக்கின்றான் அதனால் அம்மையே எவை என்று கூட.... உங்கள் கடமையை சரியாக செய்து வந்தாலே ஈசன் அனைத்தும் கொடுப்பான் உங்கள் அனைவருக்கும் சொல்லிவிட்டேன் அம்மையே!!!!

யாரும் எதை என்று கூட கவலைப்பட அவசியம் இல்லை!!!!

நீங்கள் அனைவரும் ஈசன் இடத்தில் இருந்து கொண்டு அம்மையே!!!!  யாங்களும்( சித்தர்கள்) உங்களைப் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம் இங்கேதான்!!! அதனால் அம்மையே நீங்கள் அனைவரும் புண்ணியம் செய்தவர்கள் தான்!!!

ஏனென்றால் நீங்கள் அனைவருமே பின் ஒரு பிறப்பில் ஈசனுக்காகவே சேவைகள் செய்ய வேண்டும் என்று எண்ணி வந்துள்ளீர்கள்!!!

ஆனால் எதை எதையோ மனதில் எண்ணி எதையும் கேட்டு விடாதீர்கள் அனைத்தையும் ஈசன் உங்களுக்காக செய்வான் நிச்சயம் நீங்கள் கேட்டதை எல்லாம் ஈசன் அறிவான் அதை எல்லாம் நிச்சயம் ஈசன் தருவான் கவலையை விடுங்கள்!!!

நீங்கள் செய்துவரும் பணிகளை இங்கிருக்கும் யாரையாவது செய்ய சொல்லி பாருங்கள் செய்வார்களா?? என்று அம்மையே!!!!! ஆனால் அம்மையே நீங்கள் ஈசனுக்காகவே சேவைகள் செய்ய வேண்டும் என்று பிறப்பெடுத்து வந்தவர்கள் நீங்கள் செய்யும் பணிகளை இங்கிருக்கும் யாராலும் செய்ய முடியாது!!! புதிதாக யாராக  வந்தாலும் சண்டைகள் போட்டு விடுவீர்கள் யார் என்று நீங்கள்!!!

அதனால்தான் பின் எவை என்று கூட ஈசன் எவை என்று கூட சேவைகள் செய்வதற்கு உங்களுக்கு பாக்கியம் கொடுத்துள்ளான் அதை வைத்துக் கொண்டு நிச்சயம் அப்படியே செல்லுங்கள் அம்மையே ஈசன் நிச்சயம் உங்கள் குடும்பத்திற்கு எவை என்று அறிய அறிய என்னென்ன தேவையோ நிச்சயம் ஆனாலும் அம்மையே சில கஷ்டங்கள் வரலாம் அதையெல்லாம் பொறுத்துக் கொள்ளுங்கள் அம்மையே கவலைகள் இல்லை.

கஷ்டங்கள் இல்லாமல் யாரும் இல்லை அம்மையே ஆனாலும் ஈசன் நிச்சயம் அம்மையே நிச்சயம் ஒன்றைச் சொல்கின்றேன் எவை என்று கூட நீங்களே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் அம்மையே ஈசன் இடத்தில் இருந்து கொண்டே!!..... 

ஆனாலும் அம்மையே பின் யோசித்துப் பாருங்கள் இன்னும் ஈசன் இல்லாமல் எவை என்று கூட பக்திகள் இல்லாமல் எவை என்று கூட எவ்வளவு பேர் கஷ்டப்படுகிறார்கள் என்பதை கூட!!!

அதனால் அம்மையே உயர்ந்தவர்கள் பணக்காரர்கள் எதை என்று கூட அம்மையே வேறுபாடுகள் இல்லை அம்மையே ஈசனுக்கு !!

எவை என்று கூட ஈசனுக்கு முன் அனைவரும் சமமானவர்களே!! அனைவருக்கும் கஷ்டங்கள் உண்டு தாயே கவலைகள் இல்லை எதை என்று அறிய அறிய!!!

நிச்சயம் யானும் இங்கே வந்து கொண்டே தான் இருக்கின்றேன் அம்மையே உங்கள் கவலைகள் அனைத்தையும் தீர்த்து வைத்து விடுகின்றேன் அதி விரைவிலேயே அம்மையே!!!

கவலைகளை விடுங்கள்!!!!

அம்மையே எதை என்று அறிய அறிய எவை என்று உணர உணர அம்மையே எதை என்று கூட உங்கள் பிள்ளைகள் இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயம் ஈசன் தன் பக்கத்தில் அமர்த்தி கொண்டு அம்மையே பின் அரசு சார்ந்ததையும்( அரசாங்க உத்தியோகம்) கூட ஏற்படுத்தி விடுவான் அம்மையே!!!

என்று நல்லாசிகள் தந்து அவர்களுக்கு வாக்குகள் தந்தார்!!!!!

இந்த வாக்குகளுக்கிடையே ஆலயத்திற்கு வந்த ஒரு பெண்மணி வந்து வாக்குகள் தந்து கொண்டிருந்த பொழுது ஓ இதுதான் அகத்தியர் ஜீவநாடியா என்று கேட்டார் அவருக்கு சில விளக்கங்கள் தந்த பொழுது!!! நானும் நிறைய இடங்களில் இது போன்று நாடி பார்த்துள்ளேன் என்று கூறினார்!!!

அவருக்கு ஜீவனாடி குறித்தும் வெற்று பனை ஓலையில் பொன்னிற அக்ஷரங்களில் குருநாதர் வந்து வாக்குகள் தருவதை எடுத்துக் கூறி அவரும் அருகே வந்து பார்த்துவிட்டு இப்பொழுதுதான் முதல் முறையாக ஜீவநாடி சுவடியை பார்க்கின்றேன் அது மட்டுமல்லாது நான் நிறைய இடத்தில் நாடிகள் படித்துள்ளேன் ஆனால் எந்த ஒரு நாடி படிப்பவர்களும் ஆலயத்திற்கு வந்து ஆலயத்திற்கு உள்ளே நாடி வாசித்து வாக்குகள் தந்ததை பார்த்ததில்லை தனித்தனியே தனக்கென்று ஒரு அறைகளை அமைத்து கட்டணத்தைப் பெற்றுக் கொண்டுதான் நாடி வாசிக்கின்றார்கள் ஆனால் முதல் முறையாக காசு பணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் அனைவருக்கும் வாக்குகள் குருநாதர் தருகின்றாரே திரு ஜானகிராமன் ஐயாவும் படிக்கின்றாரே என்று பேசிக்கொண்டே குருநாதரிடம் குருவே எனக்கும் தங்களுடைய உபதேசம் வேண்டும் என்று நாடி வாசிக்கும் இடத்தில் வந்து முன்பே நின்று கொண்டார்!!!

அவருக்கும் குருநாதர் நல்வாக்கினை தந்தார்!!!!

அம்மையே உந்தனுக்கு ஈசனே துணை இருப்பான் கடைநாள் வரையிலும் அம்மையே அதனால் எதை என்றும் அறிய அறிய ஈசன் வழி நடத்துவான் என்பேன் அம்மையே!!!! ஆனாலும் சோதனைகள் உண்டு அம்மையே ஆனாலும் கடைசியில் வெற்றி வாய்ப்புகள் உண்டு!!!!!

என்று குருநாதர் வாக்கினை தந்த பொழுது

என்னுடைய மகளுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அந்த பெண்மணி கேட்ட பொழுது!!!!

அம்மையே எதை என்றும் அறிய அறிய நீ இவ்வாறு கேட்டதே தவறு என்பேன் அம்மையே!!!!

ஈசனுடைய குழந்தை என்று நீ சொல்லி இருந்தால் இன்னும் மேல் நோக்கி தூக்கிச் சொல்லி இருப்பேன்!!!

நீ என்னுடைய குழந்தை என்று எப்படி சொல்லலாம் ஈசனுடைய குழந்தை என்று சொல்!!!! ஈசனே அனைத்துமாக இருக்கும் பொழுது ஈசனே அனைத்தையும் உங்களுக்கு செய்வான் அம்மையே என்று குருநாதர் வாக்குகள் தந்தார்!!!!!

இந்த இடத்தில் நாம் அனைவரும் உணர வேண்டிய ஒன்றும் உள்ளது என் குழந்தை என் மகள் திருமணம் என் மகன் படிப்பு என் மகன் கல்வி என் மகன் வேலைவாய்ப்பு என்று நிறைய இடங்களில் குருநாதரிடம் வாக்குகளாக சில பேர் கேட்கின்ற பொழுதெல்லாம் குருநாதர் தரும் வாக்குகள் எல்லாம் அந்த நேரத்தில் மக்கள் அப்படியே மறந்து விடுகின்றனர் யாரும் முழுமையாக உணர்வதே இல்லை!!!!

ஒரு இடத்தில் குருநாதர் இதைப் பற்றி உரைத்ததை இங்கே மீண்டும் குறிப்பிடுகின்றோம் ஒரு பெண்மணி என் மகன் நன்றாக இருக்க வேண்டும் என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று ஒரு பெண்மணி குருநாதரிடம் கோரிக்கை வைத்த பொழுது

அம்மையே!!! முதலில் உணர்ந்து கொள்!!! இங்கே இருக்கும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்!!! அனைத்து பிள்ளைகளும் நன்றாக இருக்க வேண்டும்!!! அனைவருக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று நீ வேண்டிக் கொள்!!!! உன் மகனுக்கும் நல்லதே நடக்கும் !!! அதை விட்டுவிட்டு தம் தனக்கு என்று சுயநலத்தோடு கேட்டுக் கொண்டே இருந்தால் என்ன தான் லாபம்??? என்று குருநாதர் கடுமையுடன் உத்தரவு தந்தார் அதை நாம் இங்கே உணர்ந்து கொள்ள வேண்டும்.

அடுத்து துப்புரவு பணியாளர்களுக்கு வாக்குகள் தந்து கொண்டு இருந்த பொழுது தூரத்தில் இருந்து அண்ணாமலையார் தரிசனத்திற்காக வந்து சென்ற ஒரு தம்பதியினர் ஒரு ஓரமாக இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர் அவந்தனையும் அழை!!!! என்று குருநாதர் உத்தரவிட்டார்!!!!!

அப்பனே பெருமாள் நாமம் கொண்டான் அவனை அழை என்று குருநாதர் உத்தரவிட!!!!! சிறிது தூரமாக இருந்து கொண்டு ஓரமாக கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் அவரிடம் தங்களுடைய பெயர் என்று கேட்ட பொழுது ராமச்சந்திரன் என்று கூறும் பொழுது நீங்கள் தான் வாருங்கள் என்று அழைத்து குருநாதர் முன்பு அமர்த்த!!!!

எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே கவலைகள் இல்லை நன்றாகவே எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் உன் இல்லத்தில் அங்காள பரமேஸ்வரி அருள் பரிபூரணம் அப்பா!!!

இதனால் ஒருமுறை அங்கு சென்றிட்டு வா!!! இன்னும் நீ விரும்பியதை எளிதில் அடைந்து கொள்ளலாம் அப்பனே அதனால் தான் சொன்னேன் அப்பனே கவலையை விடு அப்பனே எதை என்றும் அறிய அறிய உன் இல்லத்தில் கூட உயர உயர நிச்சயம் அங்காள பரமேஸ்வரியும் வந்து வாக்குகளும் செப்புவாள் அப்பனே!!!!

அந்த அடியவரும் என்னுடைய குல தெய்வமே மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி தான் என்று மனமகிழ்ந்து நன்றியை தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் குருநாதர் அடியவர்கள் கேட்ட கேள்விகளுக்கு குருநாதர் தந்த உபதேசங்கள்!!!

குருவே இந்த கேள்வியை கேட்பதற்கு முதலில் மன்னிப்பை கேட்கின்றோம் தங்களிடம் சில விஷயங்கள் செய்யலாமா வேண்டாமா சிலவற்றை எப்படி செய்வது என்று உங்களிடம் உத்தரவு கேட்டு அதனை செய்கின்றோம் அதில் சில விஷயங்கள் தோல்வியில் முடிவடைகின்றது அல்லது ஏதாவது ஒரு வகையில் இழப்பும் ஏற்படுகின்றது இதனால் மன சஞ்சலம் அடைகின்றது பயம் ஏற்படுகின்றது  இதற்கு காரணங்கள் என்ன???

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் எதை என்று கூட ஏனென்றால் அப்பனே பின் எவை என்று கூட உங்களுக்கும் கூட தெரியவில்லை என்பேன். அப்பனே!! எதை என்று கூட

கர்மா அப்பனே அவைதன் விலக்குவதற்காகவே அப்பனே ஏதோ ஒரு ரூபத்தில் அப்பனே யான் செய் என்று சொல்லிவிடுகின்றேன் அது தோல்வில்தான் முடியும் என்பதை கூட எந்தனுக்கு தெரியும் என்பேன் அப்பனே!!! எவை என்று கூட ஆனாலும் அதன் மூலம் அப்பனே எவை என்று அறிய அறிய பின் கர்மா அப்படியே இருந்தாலும் கூட உங்கள் பிள்ளைகளை பாதித்துவிடும் என்பேன் அப்பனே அதனால்தான் அப்பனே பின் தைரியமாக எவை என்று அறிய அறிய யான் இருக்கின்றேன் என்று கூட அப்பனே உங்களை நுழைத்து விடுகின்றேன். ஏனென்றால் கர்மா வினை அப்படித்தான் அகற்ற முடியும்.

 ஏன் அனைவரையும் கூட இப்படித்தான் செய்கின்றேன். அப்பனே ஏதாவது ஒரு முறையில் கர்மத்தை  அழிக்கத்தான் வேண்டும் என்பேன் அப்பனே. என்னை நம்பியவர்களுக்கு அப்பனே.

குருவே தங்களுடைய வாக்கினை நாங்கள் ஈசனுடைய வாக்கினையும் பார்வதி அம்மாவின் வாக்கினையும் கேட்கின்றோம் தங்கள் உரையாடலை நாங்கள் கேட்கின்றோம் ஆனால் எங்கள் அம்மா லோப முத்ரா தாய் எப்பொழுது வந்து உரையாடுவார்கள்????

எதையென்றும் அறிய அறிய நிச்சயம் யாங்கள் இருவரும்( அகத்தியர் லோபமுத்ரா  தாய்) உரையாடுவோம் மிகப்பெரிய திருத்தலத்தில்.

குருவே நீங்கள் கருங்காலி குறித்து நிறைய வாக்குகளில் குறிப்பிட்டுள்ளீர்கள் கருங்காலி மர வகைகளில் இரண்டு வகை உள்ளது செம்மை நிறத்திலும் அதாவது பழுப்பு நிறத்திலும் மற்றொன்று கருப்பு நிறத்திலும் உள்ளது வட மாநிலங்களில் பழுப்பு நிறத்தில் கிடைக்கின்றது தென்னிந்திய பகுதிகளில் கருப்பு நிறங்களில் கிடைக்கின்றது இதில் எது உண்மையான கருங்காலி எது சக்தி மிக்கது???!

அப்பனே!!! எதை என்று கூட சிதம்பரத்தில் இருக்கும் சிவனா? அண்ணாமலையில் இருக்கும் சிவனா? யார் பெரியவன் என்று நீ கூறு!!!!

குருவே எல்லா இடத்திலிருக்கும் ஈசன் ஒன்றே தான் அவர் ஒருவர் தான் பெரியவர்.

அப்பனே அப்படியானால் உணர்ந்து கொள்!!!!

( அதாவது இரண்டு கருங்காலி வகைகளும் ஒன்றே தான்!!! இரண்டும் சம பலம் மிக்கது)

குருவே சில யந்திரங்களை/ தாயத்துகளை அணிந்து கொள்ளச் சொல்லி நீங்கள் கூறுகின்றீர்கள் நாங்கள் அதை இரவிலும் அணிந்து கொண்டே இருக்கலாமா? ஏனென்றால் இரவில் உறக்கம் மட்டுமல்ல குடும்பமாக இருக்கும் பொழுது இரவிலும் அணிந்து கொள்ளலாமா?

அப்பனே எவை என்று அறிய அறிய இருக்கட்டும்!!!!

குருவே கருமஞ்சள் சிறிது நீல நிறமாக இருக்கின்றது அது கருமஞ்சள் அதனுடைய மகத்துவம் என்ன??

அப்பனே எதை என்றும் அறிய அறிய அதை வைத்துக் கொண்டாலே போதுமானது அப்பனே!!!!

நீல நிறமாக இருப்பதும் கருப்பு நிறமாக இருப்பதும் அனைத்தும் ஒன்றே!!!

அதை அருகில் வைத்துக் கொண்டாலே போதுமானதப்பா!!!!!

குருவே ஜெபம் செய்யும் பொழுதும் தியானங்கள் செய்யும்பொழுதும் சில மரப்பலகைகளை உபயோகிக்க நேரிட்டால் எந்த மரப்பலகையை பயன்படுத்துவது??? உதாரணத்திற்கு  சிலர் பலா மரத்தை பயன்படுத்த சொல்கின்றார்கள்

அப்பனே பின் முதலில் பக்தி தான் முக்கியம் அப்பனே எந்த மரத்தை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் அப்பனே!!!

இருப்பினும் அப்பனே சொல்லிவிடுகின்றேன் அப்பனே கருங்காலிக்குத்தான் சக்திகள் அதிகம்!!!!

குருவே தினமும் ஜெபம் செய்யும் மாலைகளை நீரில் கழுவலாமா???

அப்பனே முதலில் தம்தனை கழுவ வேண்டும்!!! அப்பனே எதை என்று கூட தியானங்கள் செய்யும்பொழுது எவை என்று அறிய அறிய அப்பனே சில மாயைகள் வந்து தடுக்குமப்பா!!! எண்ணங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய எங்கெங்கோ செல்லுமப்பா அதனால்தான் கழுவச் சொன்னேன் அப்பனே!!!!( தியானத்திற்கு முன்பாக நீராட வேண்டும்)

குருவே எங்கு பார்த்தாலும் பசுவதைகளும் பசு கொலைகளும் நடக்கின்றது!!!

அப்பனே இதை யாங்கள் பார்த்துக் கொள்வோம் அப்பனே விட்டுவிடு!!!

குருவே நாங்கள் அனைவரும் ருத்ராட்ச மாலைகள் அணிந்திருக்கின்றோம் இயற்கை உபாதைக்காக நாங்கள் ஒதுங்கும்பொழுது ருத்ராட்சம் அணிந்து கொண்டு இருப்பதால் தோஷங்கள் ஏற்படுமா???

அப்பனே இல்லை!!!!

குருவே மனிதர்களாகிய எங்களுக்கு நோய்கள் வருவதற்கு சில பரிந்துரைகள் மூலிகைகள் எங்களுக்காக கூறி எங்களை ஆரோக்கியமாக வாழ வழி நடத்துகின்றீர்கள் அதுபோல் கால்நடைகளான கோமாதாக்களுக்கும் சில விசித்திர நோய்களும் ஏற்பட்டு அதனால் அவர்கள் மடிய நேரிடுகின்றது அவர்களுக்கும் மூலிகை மருந்துகள் ஏதாவது இருக்கின்றதா கொடுப்பதற்கு நீங்கள் கூறுங்கள்

அப்பனே அதை யாங்கள் பார்த்துக் கொள்வோம் அப்பனே எதை என்று அப்பனே நிச்சயம் உண்டு என்பேன் அப்பனே அதற்கும் கூட அப்பனே ஏதாவது ஒரு வடிவில் அப்பனே!!!

கோசாலையிலே அப்பனே யான் உறங்கிக் கொண்டே இருக்கின்றேன் பல கோசாலைகளில் அப்பனே!!!

குருவே புராணங்களில் படித்திருக்கின்றோம் தங்களுக்கு இரு மகன்கள் இருக்கின்றார்கள் என்று அதைப் பற்றி குருநாதர் விளக்கங்கள் தாருங்கள்

அப்பனே அனைத்தையும் யான் சொல்கின்றேன் அப்பனே நேரங்கள் வரும்பொழுது அப்பனே!!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே என் பக்தர்களுக்கு யான் சொல்லுவதை கேட்டு நடந்தாலே அனைவருக்கும் நன்மையே ஏற்படும் அப்பனே அண்ணாமலையை நாட சொன்னால்.... அப்பனே அண்ணாமலைக்கு வந்து விட வேண்டும் பல பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு இடம் அண்ணாமலையே என்பேன் அப்பனே இங்கு வரச் சொல்லில் யானே அனைத்தையும் நீக்கி நல்லாசிகள் கொடுத்து அனுப்புவேன் அப்பனே!!!

அண்ணாமலையிலே பல ரகசியங்கள் இருக்கின்றன அப்பனே பல பேருடைய பிரச்சினைகளை தீர்க்கும் தலம் அண்ணாமலையை என்பேன் அப்பனே இங்கு அடிக்கடி வந்து செல்பவர்களுக்கு ஈசனே அனைத்தையும் தருவான் என்பேன் அப்பனே!!! எனது ஆசிகளும் கிட்டிக்கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே..

அப்பனே நலமாக ஆசிகள்!!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday, 7 June 2023

சித்தன் அருள் - 1347 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்!


21/4/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் :திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்

"""' திருத்தலம்!!!... திருத்தும் தலம்!!!!! 

ஆதி பரமேஸ்வரனையும் பரமேஸ்வரியையும் பணிந்து வாக்குகள் ஈகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே எண்ணற்ற கோடிகள் பின் பிறவிகள் பிறவிகள் அப்பனே மனிதன் அப்பனே பிறந்தாலும் ஆனாலும் புத்திகள் இல்லையப்பா!!!

ஆனாலும் அண்ணாமலையின் ரகசியம் பல பல வழிகளிலும் கூட இருக்குதப்பா!!!!!

இதனால் அப்பனே நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே ஏற்கனவே எதை என்றும் அறியாத அளவிற்கு கூட ஈசனே!!!!!!!! பின் அப்பனே 

"""அவன் தாள் வணங்கி அவன் அருளாலே!!!!!!!!! என்பதையெல்லாம் உங்களுக்கே தெரியும் என்பேன் அப்பனே!!!!

இவைதன் உணர்ந்து உணர்ந்து அப்பனே யார் யார் எவ்விடம் எப்பொழுது சேர்க்க வேண்டும் என்பதை எல்லாம் ஈசன் கட்டளை அப்பனே!!!!!!!!

அப்படித்தான் இணைய முடியுமே தவிர அப்பனே மற்றவைகள் எல்லாம் வீண்!!!!!!!

அப்பனே ஒவ்வொரு ஆன்மாவும் பிறப்பெடுத்து பிறப்பெடுத்து எதனால் ஓடுகின்றது என்பதை எல்லாம் அப்பனே ஆனாலும் அப்பனே சொந்த பந்தங்கள் அப்பனே விட்டொழிந்து ஆனாலும் அப்பனே தேடுகின்றது என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய

அப்பனே பின் எதுவும் அதாவது  எதை என்று அறிய அறிய

 """"""ஈசன் மட்டும் போதும் !!!!!!!!.............................என்ற நிலைமைக்கு யார் ஒருவன் பின் வந்து விடுகின்றானோ!!!!!!!!!

அவந்தனக்கு தொல்லைகள் இல்லையப்பா!!!!!!!! ஏதும் இல்லையப்பா!!!! அனைத்தும் எதை  என்று அறிந்து அறிந்து!!!!!

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே அவ் ஆன்மா பின் உடலை விட்டு பிரியும் பொழுது அப்பனே எதுவும் எண்ணக்கூடாது என்பேன் அப்பனே!!!!!

அவை மட்டும் இல்லாமல் """"நமச்சிவாயா!!!! """"நமச்சிவாயா!!!!! என்று மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே பிறவிகள் இல்லையப்பா!!!! அவ் ஆன்மாவிற்கு!!!!!

ஆனாலும் அப்பனே ஆசைகள் பலவிதம் அப்பனே!!!!!....... எவ்வாறு என்பதையும் கூட!!!!

அதனால் அப்பனே மீண்டும் அவ் ஆன்மா ஆசைகளோடே பிறக்கின்றது அப்பனே இதனால் துன்பங்களை அனுபவித்து அனுபவித்து அப்பனே எதை என்று எண்ணிலடங்கா!!!!!!!

இதனால் தான்  அப்பனே கர்மா பூமியில் அப்பனே பிறப்புக்கள் வேண்டாம் பிறப்புகள் வேண்டாம் என்பவை எல்லாம் யாங்கள் நிச்சயம் அப்பனே மனிதர்களுக்கு எடுத்துரைத்து அப்பனே அப்பிறவியை அதாவது கடந்து அதாவது எப்படி கடப்பது என்பதையும் கூட யாங்கள் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!!!

பிறவிகள் வேண்டாமப்பா!!! வேண்டாமப்பா!!!!!

அறிந்து அறிந்து அப்பனே அப்படி பிறவிகள் எடுத்தாலும் கஷ்டம் தானப்பா!!!! 

அதனால் இறைவனை வணங்குவது இறைவனுக்கு பூஜைகள் செய்வது அப்பனே எவை என்று அறிய அறிய அதனால் உன்னை நீ கட்டுப்படுத்தவில்லை என்றால் அப்பனே!!!!!!!!!

நீ!!!!! எது செய்தாலும் புண்ணியம் இல்லையப்பா!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அதனால் முதலில் தன் மனதை கட்டுப்படுத்தி வர வேண்டும் அப்பனே!!!!!

இவ் கட்டுக்குள் வர வேண்டுமென்றால் முதலில் முதல் வகையானவன் அப்பனே ஈசனே என்பேன்!!!!

அதுவும் """"""""அண்ணாமலையனே!!!!!!!!! என்பேன்!!!!!!

இவ்வாறு பல பல ரிஷிகளும் அப்பனே பல பல குருமார்களும் அப்பனே முனிவர்களும் தேவர்களும் கூட அப்பனே அண்ணாமலையை நோக்கி படையெடுத்து வந்து அப்பனே மோட்ச கதியையும் அடைந்து விட்டார்கள் என்பேன் அப்பனே!!!!!!.... 

""""இங்கேயே கூட!!!!!!!!!

இதனால் அப்பனே இன்றளவும் கூட அப்பனே யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே சிவராத்திரி ( மாத சிவராத்திரி தினமும்) அன்று அப்பனே ஞானியர்கள் அப்பனே பின் வலம் ( கிரிவலம்) வந்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே அது மட்டுமல்லாமல் அமாவாசை திதிகளிலும் கூட வலம் வந்து கொண்டே தான் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!!

இவ்வாறு அப்பனே வலம் வந்து கொண்டிருக்கையில் அப்பனே யார் எவை என்று அறிய அறிய ஓர் ரிஷியோ அல்லது எதை என்று அறிய அறிய இன்னும் ஞானிமார்களோ அப்பனே பின் உராய்ந்து செல்லும் பொழுது தான் அப்பனே அவந்தன் பாவக் கணக்கு முடிவடைகின்றது என்பேன் அப்பனே!!!!!

( நம் குருநாதர் அகத்திய பெருமான் ஏற்கனவே திருவண்ணாமலை கிரிவலம் குறித்து பலமுறை வாக்குகள் தந்திருக்கின்றார்!!!! அண்ணாமலையை வலம் வரும் பொழுது அங்கு இருக்கும் ஞானிகள் சித்தர்கள் ரிஷிகள் நம்மை பார்த்து நாம் உண்மையான பக்தியுடன்  சுயநலமில்லாத தன்மையுடன் தான தர்மங்கள் செய்து புண்ணியங்கள் பெற்றிருந்தால் அவர்கள் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து உரசி செல்வார்கள் அப்படி அவர்கள் உரசி செல்லும் பொழுது நம்முடைய கர்ம வினையை மாற்றி எடுத்துச் சென்று விடுவார்கள் நம்முடைய பாவங்களை மாற்றி விடுவார்கள் !!! அரிசிகளும் ஞானிகளும் சித்தர்களும் ஏதாவது ஒரு சூட்சும ரூபத்தில் வந்து உரசி செல்வார்கள் என்று ஏற்கனவே வாக்குகள் தந்திருக்கின்றார் அதை இந்த இடத்தில் நினைவில் கொள்க!!!!.அவர்கள் நமக்காக இறங்கி வந்து உரசி செல்வதற்கான தகுதிகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்)

ஆனால் எவை என்று அறிய அதற்கும் புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!!!

அதனால்தான் புண்ணியங்கள் செய்யுங்கள் புண்ணியங்கள் செய்யுங்கள் என்பதைல்லாம்!!!!!...........

நீ புண்ணியம் செய்து கொண்டே வந்தால் அப்பனே உன் உடம்பு அப்பனே எதை என்று அறிய அறிய பிரதிபலிக்கும் அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட ஞானியர்கள் எதை என்று கூட குருமார்கள் வரும்பொழுது ஈர்க்கும் என்பேன் அப்பனே!!!!! அப்படியே அப்பனே பின் உடம்பு உராயும் பொழுது உன் கர்மத்தை அவன் சுமந்து எடுத்துச் சென்று கொண்டே இருப்பான் அப்பனே!!!!!

இதனால்தான் அண்ணாமலைக்கு வரும்பொழுது அப்பனே எவை என்று அறிய அறிய முதலில் அப்பனே புண்ணியம் தான் ஓங்கி நிற்கின்றது என்பேன் அப்பனே!!!!

பின் மற்றவை எல்லாம் அப்பனே பிறகு தான் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்பனே பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே!!!!!

""" அண்ணாமலையில் ஈசனே பிச்சை எடுத்தான் என்பேன். அப்பனே!!!!!

எதற்காக ????? ஈசன் பிச்சை எடுத்தான்????

எதற்காக பிச்சை எடுக்க வேண்டும்??? என்பதையெல்லாம் சொல்கின்றேன் அப்பனே!!!

ஒரு பெண்மணி இங்கே அமர்ந்திருந்தாள் அப்பனே அதுவும் அப்பனே இப்பொழுது எவ்விடம்? என்பதை அறியும் பொழுது அப்பனே பின் ராஜகோபுரம் அருகிலே எவை என்று உணர்ந்து அப்பனே முதலிலே முருகன் இருப்பான் அப்பனே( கம்பத்து இளையான் சன்னதி / அருணகிரிநாதருக்கு முருகன் காட்சி அளித்த இடம்)....

அங்கேயே அவ் பெண்மணி அப்பனே ஈசனையே நினைத்து நினைத்து !!!!

ஆனாலும் உள்ளே அனுமதிக்க எதை என்று அறிய அப்பனே பல பல எவை என்று அறிய அறிய பூசைகள் செய்பவர்களும் கூட இவள்தன் தரித்திரம் பிடித்தவள்!!! இவள் தனை அனுப்பி எவை என்று கூட ஈசனிடத்திலும் கூட அம்பாளிடத்திலும் கூட பின் தரித்திரம் தான் மிச்சம் என்பதை கூட!!!!( அப்பெண்மணிக்கு ஈசனின் தரிசனத்தையும் அம்பாள் தரிசனத்தையும் காண்பிக்க ஆலயத்திற்கு உள்ளே அனுமதிக்கவில்லை. இவள் சென்று தரிசனம் செய்தால் இறைவனுக்கும் இறைவிக்கும் தரித்திரம் பிடித்து விடும் என்று எண்ணி அனுமதி தரவில்லை)

ஆனாலும் அப்பனே பின் அப் பெண்மணியின் கண்களில் கண்ணீர் சிந்தியது!!!!!! எவை என்று கூட அப்பனே!!!!!!!! மீண்டும் மீண்டும் அப்பனே ஈசனை நினைத்துக் கொண்டு!!!!

""""" ஈசனே!!!!!! யான் என்ன செய்தேன்??? 

எதை என்று கூட அப்பனே எவை என்று கூட!!!!!!!

அம்மையே!!!!! (உண்ணாமலை தாய்) இதையென்றும் உணர்ந்தும் உணர்ந்தும் என்னை உள்ளே அனுமதிக்க மாட்டார்களா?????!!!!! இவர்கள்!!!!!!!! எதை என்று அறிய அறிய!!!!!

ஆனாலும் அனைத்து தவறுகளையும் செய்து வருகின்றார்களே எதை என்று அறிந்தும் அறிந்தும் ஆனால் மனதிலே நமச்சிவாயா நமச்சிவாயா என்றெல்லாம்!!!!

ஆனாலும் இதனை உணர்ந்து உணர்ந்து ஈசனே வந்து விட்டான் இவள்தனுக்கு!!!!! அதாவது இவளிடம்!!!!! இப் பெண்மணியிடம்!!!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் ஈசனும் பார்த்து !!!!!!!

ஆனாலும் கருணையோடு நிச்சயம் எதை என்று உணர்ந்து!!!! உணர்ந்து!!!!

"""""" ஈசனை நமச்சிவாயா !!!!!நமச்சிவாயா!!!! என்று அழைத்தால்!!!!!!  கண்ணீருடன்  அவந்தன் வருவான்!!!!!! இதுதான் அவனுடைய கருணை!!!!!!!! 

""""" கருணைக்கு ஈடில்லாதவன் ஈசன்!!!!!!!!!!!

ஆனால் இன்றும் உணர்வதில்லை மனிதர்கள்!!!!!!

ஆனாலும் கஷ்டங்கள் கொடுத்து கொடுத்து பக்குவங்கள் பட்டுப்பட்டு எழச்செய்வான் ஈசன்!!!!! எதை என்று அறிய அறிய இது போலத்தான் நிச்சயம் ஒரு தந்தையாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றான் ஈசன்!!!!!!!

ஆனாலும் இதைப் பற்றியும் கூட விஞ்ஞான முறையில் யான் விளக்க முடியும்!!!! ஆனாலும் இப்போதய நிலைமைக்கு இல்லை!!!!!

எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட மீண்டும் மீண்டும் வந்து உரைக்கின்றேன்!!!! அப்பனே கேளுங்கள் எதை என்று அறிய அறிய இவ்வுலகத்தில் புண்ணியங்கள் தான் ஜெயிக்கும் என்பேன் அப்பனே!!!!!

புண்ணியங்கள் கூட அப்பனே சக்தி எனலாம் அப்பனே!!!! 

அவ் சக்தியை எவ்வாறெல்லாம் விஞ்ஞான முறையில் அப்பனே பின்பற்றி எதை என்று கூட இன்னும் எவற்றின் மூலம் எவை என்று கூட ரசாயன (வேதியல்   chemistry) முறையிலும் கூட யான் வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே!!!!!!

அனைத்தும் என்னால் முடியும்!!!!!

ஏனென்றால் மனிதன் மாய வலையில் விழுந்து விட்டான் அப்பனே!!!!

இதனால் அப்பனே அவ் மாய வலையில் இருந்து மீட்டெடுப்பதற்கு அப்பனே படாத பாடுகள் அப்பனே!!!

இதனால்தான் அப்பனே மனிதனுக்கு வாழ்க்கை என்னவென்றே தெரிவதில்லை என்பேன் அப்பனே!!!!

அப்படி தெரியாததனால் தான் பிரச்சனைகளப்பா!!!!!!!

அப் பிரச்சனைகள் எங்கு சென்றாலும் முடியாதப்பா!!!!!

எங்களைப் போன்ற சித்தர்களால் மட்டுமே முடியும் அப்பனே!!!!

இப்பொழுதும் கூட அப்பனே தேகம் இல்லாமல் அப்பனே எவை என்று கூட அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றோம்!!!!

ஏதாவது யாராவது மக்கள் அதாவது நல்லோர்கள் இருக்கின்றார்களா???? இருக்கின்றார்களா???? என்பதையெல்லாம் அப்பனே!!!!!...............................

தேவை  இல்லை. நீ!!!!!! 

உன் மனசாட்சிக்கு தகுந்தவாறே நடந்து கொண்டால் யாங்கள் வருவோம்!!!! நீங்கள் எங்களை தேடி வர அவசியமில்லை அதாவது ஈசனை தேடி வரவும் அவசியம் இல்லை""" ஈசனே உன்னை அழைத்துக் கொள்வான் இது தான் நிச்சயம் அப்பனே!!!!

பல வாக்குகளிலும் கூட இதை யான் செப்பி  விட்டேன்!!!!!! அப்பனே நன்றாகவே !! நன்றாகவே!!

 இதனால்தான் அப்பனே!!!

அப் பெண்மணியும் கூட ஆனாலும் ஈசன் வந்து விட்டான்!!!!!

"""" பின் அம்மையே!!!!!! 

எதை என்று அறிந்து அறிந்து ஏன் இங்கே அமர்ந்திருக்கின்றாய்?????

ஆனாலும் ஈசனுக்கு அனைத்துமே தெரியும் இவ்வுலகத்தில் என்னென்ன நடக்கின்றது என்பதை எல்லாம்!!!............

ஆனாலும் அழுது புலம்பிக் கொண்டு எதை என்று உணர்ந்து உணர்ந்து யான் எதை என்று கூட யாரும் இல்லாதவள்!!!!!! யான் ஒரு அனாதையே!!!!!!!! எதை என்றும் அறிய அறிய!!!!!

ஆனாலும் எவை என்று கூட ஈசனையும் பார்க்க வேண்டும்!!!!

யான் ஈசனை தந்தையாக நினைத்துக் கொண்டிருக்கின்றேன் பார்வதி தேவியையும் கூட தாயாக யான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்!!!!!

ஆனாலும் வழிகள் (உள்ளே அனுமதி) விடவில்லை!!!!

இங்கு அபிஷேகம் செய்கின்றார்கள் எதையெதையோ என்று பிரசாதம் செய்கின்றார்கள்!!!

ஆனாலும் ஈசன் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட பின் எந்தனுக்கு வழிகள் விடவில்லையே மக்கள் !!!!!!

ஏன்?????  இப் பிறப்பு??? ஈசா!!!!!!!!!!!!!!!!!!! என்று அழுக தொடங்கி விட்டாள்!!!!!!!!!

ஆனாலும் ஈசனோ!!!!!

அம்மையே!!!!!! நீ கவலைப்பட அவசியமில்லை!!!!! அவர்கள் கொடுக்காவிடிலும் கூட எதை என்று அறிய அறிய பின் யான் உந்தனுக்கு கொடுக்கின்றேன் என்று!!!!!

நிச்சயம் எதை என்று உணர்ந்தும் உணர்ந்தும் உணர்ந்தும் அப்பனே!!!! கேளுங்கள் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!!!!!

முருகன் தற்பொழுது இருக்கும் எதை என்று கூட அங்கேயே ஈசன் அமர்ந்து விட்டான்!!!!!! 

""""பிச்சையிடுங்கள்!!!!!!!!!!! """"பிச்சையிடுங்கள்!!!!!!!!!!! 

என்றெல்லாம் பிச்சைகள் எதையென்றும் அறிய அறிய பிச்சைகள் பல எவை என்று அறிய அறிய!!!!!

ஈசனுக்கு பல மனிதர்கள் பிச்சையிட்டனர்!!!!!!

இவையெல்லாம் (காசுகளை) எடுத்துக்கொண்டு பின் எவை என்று அறிய அறிய அங்கே பூஜை செய்கின்றார்களே !!!!அங்கே சென்று ஈசன் கொடுத்தான்!!!!!( பூஜை செய்பவர்களிடம் அந்தப் பெண்மணிக்காக அனுமதி வேண்டி)

இந்தா!!!!!!!! காசுகள்!!!!!!! எவையென்று கூட அப் பெண்மணியை உள்ளே விடுங்கள் என்று கூட!!!!!

ஆனாலும் எதை என்று கூட ஆனாலும் சரி!!! சரி !!!!என்று அப் பெண்மணியை உள்ளே விட்டு விட்டார்கள்!!!!

இப்பொழுது புரிகின்றதா பக்தியின் மார்க்கம் என்பதை கூட!!!!!

பின் ஈசனே பார் எவை என்று கூட ஆனாலும் மனிதர்கள் எதை என்று கூட அங்கே பூஜைகள் செய்கின்றார்கள் ஆனால் வந்தது ஈசன் என்று தான் தெரியவில்லை!!!!!

இதனால்தான்ப்பா கஷ்டங்கள்!!!!!

எவை என்று கூட புரிந்து கொள்வதற்கு கூட தகுதிகள் மனிதனிடத்தில் இல்லை அப்பனே!!!!!

அதனால்தான் உங்களை திருத்துவதற்காகவே யாங்கள் வந்து வந்து வாக்குகள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!!!

இவை செய்தால் அவை நடக்கும் அவை செய்தால் இவை நடக்கும் இவைகள் எல்லாம் பொய்களப்பா!!!!!!

நம்பி விடாதீர்கள் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே சிறிது காலமே அப்பனே மாந்திரீகம் எவை என்று அறிய அறிய சில சில வசிய தேவதைகளை வைத்துக்கொண்டு அப்பனே எதை என்று அறியாமல் ஆனாலும் அப்பனே சிறிது காலமே நன்றாகவே இருக்க முடியும்!!!

அவ்வளவுதான் அப்பனே ஆனாலும் மாறிவிட்டால் அப்பனே எவராலும் காப்பாற்ற முடியாது என்பேன். அப்பனே!!!!!

இதுபோலத்தான் இன்றைய காலகட்டத்தில் அப்பனே சிக்கி தவித்துக் கொண்டு அலைந்து கொண்டு இருக்கின்றார்கள் மனிதர்கள் அப்பனே கஷ்டங்களில் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய வரும் காலமெல்லாம் அப்பனே கஷ்ட காலங்கள்  தான் என்பேன் அப்பனே!!!

எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே ஈசன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே

அங்கங்கேயே அடிப்பான்!!!! அப்பனே!!!!! 

எவை என்று கூட இச் ஜென்மத்தில் செய்த தவறுகள் பின் அடுத்த ஜென்மத்திலாம்! பின் அடுத்த ஜென்மத்தில் செய்த தவறுகள் பின் அடுத்த ஜென்மத்தில் அடுத்த ஜென்மத்தில் என்று போய்க்கொண்டிருந்தால் அப்பனே மனிதன் திருந்துவதற்கான வழிகளே இல்லை !!!!!!!!!

அப்பனே நிச்சயம் சித்தர்கள் முடிவுகள் எடுத்து விட்டார்கள் அப்பனே!!!!!

பின் எதை என்றும் அறிந்து அறிந்து தண்டனைக்கு!!!!!!

அப்பனே அப்பொழுதே உடனுக்குடன் கொடுத்து விடுவார்கள் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய நோய்கள் வருமப்பா!!!!

தாக்குமப்பா!!!!!! 

எதை என்றும் அறியாமல் அப்பனே அதனால் யான் சொல்லிய மூலிகைகளை கூட சரியாக எடுத்து வாருங்கள் அப்பனே!!!!

அதுவும் புண்ணியம் இருந்தால்தான் உங்களால் எதை என்றும் அறிய அறிய!!!!

அதனால்தான் புண்ணியங்கள் செய்யுங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் யாங்கள் வரவழைத்து...... உங்களை எதை என்றும் அறிய அறிய அப்பனே திருத்தலங்களுக்கு அப்பனே எவை என்று அறிய அறிய இன்றைய காலகட்டத்திலும் கூட திருத்தலங்கள் கூட  கட்டுகின்றனர் அப்பனே!!!!

அவையெல்லாம் வீணே!!!! அப்பா!!!!!

ஏனென்றால் ஒரு திருத்தலத்தை கட்டினால் அப்பனே பல மனிதர்கள் எவை என்றும் அறிய அறிய அதனால் பயன் பெற வேண்டும் என்பேன் அப்பனே!!!!!

இதனால் அப்பயன் பெற்றால் தான் திருத்தலம் அப்படி இல்லை என்றால் அது திருத்தலம் இல்லையப்பா!!!!!

இதனால் கட்டியவனுக்கே கஷ்டங்கள் வந்து விடும் என்பேன் அப்பனே!!!!

யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!!

அதை நீங்களும் உணர்வீர்கள். கடைக்காலங்களில் அப்பனே இதுதான் உண்மையப்பா!!!!

அதனால் திருத்தலம் என்றால் என்ன???? அப்பனே!!!!

திருத்துவதே !!! அப்பனே!!! மனிதர்களை எவை என்றும் அறிய அறிய!!!

அதனால்தான் அப்பனே அண்ணாமலை பின் எதை என்று சிறப்பு பங்கு வகிக்கின்றது அப்பனே!!!!

இன்னும் சித்தர்கள் இங்கே வலம் வந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்!!!!! அங்கங்கே தவம் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள் அப்பனே!!!

இதனால் பார்த்தார்கள் அப்பனே முன்பெல்லாம் அதாவது 20 வருடங்களுக்கு முன்பு எதை என்று அறியாமலேயே இங்கெல்லாம் ஞானிகள் சித்தர்கள் தங்குவார்களப்பா!!!!!

ஆனாலும் மனிதர்கள் உள்ளே வந்து விட்டார்கள் அப்பனே ஆனாலும் எதை என்றும் அறியாமல் எதை எதையோ தவறுகள் செய்து விட்டார்கள் அதனால் நிச்சயம் சித்தர்களே அவர்களை வெளியேற்றி விட்டார்கள்!!!!!

இப்பொழுது கூட நிம்மதியாக இருக்கின்றார்கள் அப்பனே!!!!

அதனால் மனிதர்கள் செய்த தவறுகள் அப்பனே ஏராளம் கலியுகத்தில் கலியுகத்தில் அப்பனே பக்தி நிலைக்கு வந்து விட்டு அப்பனே எதை எதையோ என்று அறிய உண்மையான பக்திகள் எவை என்றும் அறிய அறிய செல்லுமப்பா!!!!!!

""""""""" ஈசனே வருவானப்பா!!!!!

யான் பலமுறை பார்த்து விட்டேன்!!! இவ் அண்ணாமலையிலே!!!!!!

அப்பனே எவை என்று கூட இங்கு சாதுக்களும் தங்குகிறார்கள் அப்பனே !!!!

""""""ஈசனே வந்து பிச்சை இட்டுச் செல்வதும் உண்டு!!!! அப்பனே!!!

எதை என்று கூட பார்வதி தேவியும் அப்பனே வலமும் வருவாள்!!!!!! இருவரும் கூட அப்பனே!!!!

இது யாருக்குத்தான் தெரியும் ???அப்பனே!!!

ஆனால் எந்த நாளில்???? என்று கூட யானும் சொல்லி விடுவேன்!!!!!

அப்பனே வரும் காலத்தில்!!!!

ஆனால் இப்பொழுது சொல்லிவிட்டால் அப்பனே எதை என்று கூட!!!! """"பறப்பார்கள்!!!!!!! என்பேன் அப்பனே!!!!!

அப்பனே நிச்சயம் மனிதன் தரம் கெட்டவன் என்பேன் அப்பனே!!!!!

எவை என்று அறிய அறிய நிச்சயம் அப்பனே பின் தரத்தை மேம்படுத்த வேண்டுமே தவிர இக்கலி யுகத்தில் பின் தரத்தில் கீழாகவே சென்று கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!!

அதனால்தான் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே!!!!

அப்பனே யான் சொல்லிவிட்டேன் முன்பே அப்பனே தன்னை அறிந்தால் நிச்சயம் அனைத்தையும் சாதிக்கலாம்!!!!!

தன்னை அறிந்து விட்டால் அப்பனே இறைவனே வந்துவிடுவான் உன்னிடத்தில்!!!!! அதனால் அனைத்தும் சாதித்துக் கொள்ளலாம்!!!!!

ஆனால் தன்னை அறியவே இல்லை!!!!! """"

தன்னை அறிய அப்பனே எவை என்று கூட """""ஈசன் தான் முக்கியம்!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய

இன்னும் கூட இங்கு ஒரு ஞானி தங்கி இருக்கின்றான் அப்பனே வலம் வரும்போது அப்பனே சரியான மனிதர்களுக்கே தெரியும் என்பேன் அப்பனே!!!!!

அவன் தன்னை அறிந்து விட்டான்!!!!!!

""""" ஈசன் அவன் பக்கத்திலே படுத்து உறங்கி சென்று தான் கொண்டிருக்கின்றான்!!!!! அப்பனே!!!! 

இது யாருக்காவது தெரியுமா ???? என்ன!!!!! அப்பனே!!!! 

அப்பனே முட்டாள் மனிதனே என்று கூட எவை என்று கூட சித்தர்கள் திட்டுவார்கள் பைத்தியக்காரர்கள் என்று கூட திட்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!!!!

ஏன்??????  எதற்கு??????

அப்பனே நீ செய்யும் தவறினால் இறைவன் பெயரையே கெடுக்கின்றார்கள் அப்பனே எதையென்றும் அறிய!!!!

அதனால் தான் அப்பனே இறைவன் பெயரை கெடுக்காதீர்கள் அப்பனே!!!

மறுபடியும் அத்துன்பம் உன்னைத்தான் சாரும் என்பேன் அப்பனே!!!!!

இதை சரியாக கவனத்தில் கொள்ள வேண்டும்!!!!!

இன்னும் அப்பனே பணங்கள் அதிகமாகிவிட்டால் அப்பனே எதை என்று அறிய எப்படி செலவு வேண்டும் என்பதை தெரியாமல் இன்னும் பாவ கணக்கிற்குள் நுழைந்து விட்டார்கள்!!! ஈசனை பிடித்து கொள்ளலாம் என்று கூட!!!!

ஆனாலும் அதுவும் சரி இல்லையப்பா!!!!!!!

அனைத்தும் வீணே!!!! 

எவை என்று கூட அப்பனே உண்மைதனை கூர்ந்து உணர்ந்தால்!!!! அவ் உண்மைதனக்கு ..... பன்மடங்கு அர்த்தங்களாம்!!?!?!!??

அர்த்தங்கள் இட்டு சென்று கொண்டிருந்தால் அர்த்தங்கள் இல்லாமல் போய்விடுமாம்!!?!!!?!!!!

போய்விடும் எதை என்றும் அறிந்தும் உயிரும் மூச்சும்!!!!

உயிர் என்பது மூச்சு ஆகிவிட்டால் மூச்சையும் பின் உயிரையும் பின் இரண்டு என்பார்கள் அறிவு கெட்ட மூடர்கள்!!!!

இதற்கு தகுந்தார் போல் பதிலளித்தால் ஈசன் நிச்சயம் வருவான் எதை என்று இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்கின்றது!!!!!

அப்பனே அதனால் எதையும் நம்பி விடாதீர்கள் அப்பனே !!!!

முதலில் உன்னை நீங்கள் நம்புங்கள் எதை என்று அறிய அறிய நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

அப்படி தெரிந்து கொண்டால் தான் அப்பனே நிச்சயம் இறைவனை தெரிந்து கொள்ளலாம்!!!!

அப்படி தெரிந்து கொள்ளாவிடில் அப்பனே நீங்கள் அலைந்தாலும் திரிந்தாலும் அப்பனே துன்பங்கள் தான் மிஞ்சுமப்பா!!!!! இவ்வுலகத்தில் அப்பனே!!!

ஏனென்றால் கலியுகம் என்றால் அப்பனே எவை என்று அறிய அறிய பாவம் என்பேன் அப்பனே!!!

அதனால் பின் இப்பாவத்தில் நீங்கள் அனைவரும் பிறந்துள்ளீர்கள் அப்பனே அதனால் நிச்சயம் சம்பளம் கஷ்டங்கள் தான் என்பேன் அப்பனே!!!!!( பாவத்தின் சம்பளம் கஷ்டங்கள்)

இக் கஷ்டங்கள் இல்லாமல் பாவத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது!!!!

அதனால்தான் மனிதன் பாவம் என்று!! பாவம் என்று!! நாங்கள் தீர்த்து தீர்த்து எதை என்றும் எங்கள் இடத்தில் வாருங்கள் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்!!!

ஆனால் முட்டாள் மனிதனோ!!!! பின் அவை வேண்டும் இவை வேண்டும் இன்னும் பணங்கள் வேண்டும்......பின் எதை எதையோ வேண்டுமென்று கூட பின்னே சென்று கொண்டிருக்கிறான் அப்பனே!!!!!

மந்திரங்களாம்!?!?!?!?!!! மந்திரங்களாம்!!!!???!?!!...... அப்பனே!!!!

தந்திரங்களாம்!!!!!????!! தந்திரங்களாம்!!!!???!!! அப்பனே!!!!

அப்பனே!!!!!! தன்னை அறியாமல் எதைச் செய்தாலும் பாவமப்பா!!!!!!

சொல்லிவிட்டேன்!!!! சொல்லிவிட்டேன்!!!!

அவ் பாவத்தை மனித ஜென்மங்களே!!! முட்டாள்களே!!!! பாவப்பட்டவர்களே எதை என்று கூட நீயும் கெடுத்து உன் இல்லத்தவளையும் கெடுத்து உன் பிள்ளைகளையும் கெடுத்து அனைவரையும் கெடுத்து கொண்டு உள்ளாயே!!!!!

அதனால்தான் திட்டி தீர்க்கின்றார்கள் சித்தர்கள்!!!!!

அப்பனே நீ கெட்டால்  உன்னோடு!!!........ நீ தனியாக சென்று விடு!!!!!!

மற்றவர்களை கெடுத்து விடாதே!!!! அப்பனே!!! 

எதை என்று கூட அப்பனே!!!!

""""""" திருத்தலம்""""""திருத்தும் தலம்!!!!!!!

சொல்லிவிட்டேன்!! அப்பனே!!!!!

நன்றாக புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய ஏனோ தானோ என்று தான் அப்பனே..... திருத்தலம் கட்டுவது!!!!!   பணத்தை ஈட்டுவது!!!! பொருளை சம்பாதிப்பது !!!! பின் அனாதையாக விட்டு விடுவது என்பதை கூட!!!! புஜண்ட முனி சொல்லிவிட்டான் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்று கூட அப்பனே பின் இறைவனை அனாதையாக விட்டு விட்டால் அப்பனே பின் எவை என்று அறிய அறிய பிற்போக்கில் பார்த்தால் எதை என்று அறிய அறிய நீயும் அனாதையாகி எவை என்று கூட உன் பிள்ளைகள் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்து பிறப்பெடுத்து!!!!!!!................ . 

அப்பனே!!!! தேவையில்லையப்பா!!!!!

எதை என்றும் அறிய அறிய அன்பால் உன் மனதில் பின் திருத்தலத்தை கட்டுங்கள் அப்பனே!!!!! 

பின் ஈசனே வரவழைத்து அப்பனே பின் எவை என்று அறிய அறிய மனித ரூபத்தில் வந்து அனைத்தும் செய்வான்!!!!

அப்பனே இப்படித்தான் திருத்தலங்கள் கட்டப்பட்டது முன்பெல்லாம்!!!!!!!! அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!!!

இன்னும் அப்பனே திருத்தலங்களை பற்றி யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... எவை என்று கூட!!!!!

இக்கலியுகத்தில் அப்பனே நல்லோர்கள் அப்பனே எவை என்று அறிய அறிய இல்லையப்பா!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே தீயவர்கள் தான் அதிகம்!!!!

ஆனாலும் தீயவை எதை என்று அறிய அறிய அப்பனே எங்கெல்லாம் சென்றுவிடலாம் என்பதை எல்லாம் அப்பனே மனிதனின் போக்கு அப்பனே இன்னும் பொய்கள் தாண்டவமாடுமப்பா!!!!

தன் வாயாலே மனிதன் கெடுத்துக் கொள்வான் வரும் காலங்களில் அப்பனே!!!!

கெடுத்து அப்பனே அனைத்தையும் இழந்து விட்டு அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!!!

"""""" இப்பொழுதும் கூட ஈசன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான்!!! பார்வதி தேவியோடு!!!!!!!!

என்னதான்?? உரைக்கின்றான் அகத்தியன்!!!!!!....என்று!!!! 

அப்பனே உண்மையை எதையென்று கூட உண்மையை பேசுங்கள் அப்பனே....எவை எவை என்று அறிய அறிய உண்மைக்கு சக்திகள் அதிகம்!!!!!

ஆனாலும் எவை என்று கூட அப்பனே காலங்கள் நீளுமே தவிர ஒரு நாள் ஜெயிக்கும்!!!

ஆனால் பொய்களுக்கு சக்திகளும் கூட அதையும் மிஞ்சும் மிஞ்சிய அதிகமப்பா!!!!

உடனே ஜெயித்து விடும் அப்பனே ஆனால் கடைசியில் பார்த்தால் உன்னையை எங்கேயோ அமிழ்த்திவிடும் என்பேன்!!!

பாதாள லோகத்தில் அமிழ்த்து விடும் என்பேன் அப்பனே!!!!!!

யாரும் தூக்கி விடுவதற்கு கூட ஆள் இல்லையப்பா!!!

அதனால்தான் அப்பனே எதை என்று கூடபின்!!!!  மெய் பேசுங்கள் அப்பனே!! 

எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே ஆனாலும் மெய் பேசினாலும் யாரும் மதிக்க மாட்டார்கள் அப்பனே ஆனாலும் பின் எவை என்று கூட!!!..........பின்!!!!! தாழ்ந்து உயருமப்பா!!!!

இதுதான் உண்மையானவை!!!!!

எவை என்று கூட சத்தியத்தை கடைபிடியுங்கள் அப்பனே!!!!

இவ்வுலகத்தில் யார்?? யாருக்கு சொந்தம்???? என்பதை கூட!!!!

அனைவருமே அனாதைகள் தான்!!!!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதை என்று கூட அவ் அனாதைகளை காக்க தான் யாங்கள் வந்து கொண்டிருக்கின்றோம்!!!!!

ஆனாலும் எங்களைக் காக்கின்றார்களாம்!?!?!?!!!!!! மனிதர்கள்!?!?!!..............

அப்பனே எதற்காகப்பா??????????????

யாங்கள் எதுவுமே கேட்கவில்லை அப்பனே மனசாட்சியோடு எதை என்று அறிய அறிய பொய் சொல்லாமல் பொறாமை இல்லாமல் வாழுங்கள் அப்பனே!!!!!

திருடர்களப்பா!!! மனிதர்கள்!!

எங்கள் பெயர்களை வைத்துக் கொண்டு இனிமேலும் திருடர்களானால் அப்பனே நிச்சயம் யாங்களே சாட்டையடி போட்டு விடுவோம் அப்பனே!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எவை என்று கூட

வேடங்கள்!!!!!! அப்பனே எவை என்று கூட... ஏன் வேடங்கள் போட்டு செய்ய வேண்டும்?????????

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் வேடம் போட்டாலே!!!!!!!  அவன் தானப்பா!!!! முதல் வகையான திருடன்!!!!

சொல்லி விட்டேன்!!!!! அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!!

ஈசன் என்ன??!!!!......... வேடத்தையா போட்டுக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!!!

சாதாரண மனிதனாக வந்து வலத்தை( கிரிவலம்) வந்து கொண்டே இருக்கின்றான்!!!! 

ஈசனும் பார்வதி தேவியும் இப்படித்தான் வலம் வந்து கொண்டிருக்கின்றார்களே தவிர!!!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் பின் எவை என்று கூட...... இவ்வுலகத்தில் காப்பாற்றுவதற்கு அப்பனே பின் எவை என்று கூட பின் கண்களுக்கு தெரியாமல் தான் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே ஈசனே அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே ஈசன் இல்லை!!!! பார்வதி தேவியும் இல்லை!!! இன்னும் சித்தர்களும் இல்லை!!!!!

ஆனால் பின் நம் தன் வேடங்கள் போட்டுக் கொண்டால் வாழ்ந்து விடலாம் என்று!!!!!

ஆனால் அப்பனே பாருங்கள்!!!! சிறிது நேரம் தான் ஆட்டங்களே!! தவிர!!! யாங்களே காண்பித்து விடுவோம் இனிமேலும் கூட கலியுகத்தில் எவை என்று கூட!!!!!!!! நீதான் ஏமாந்து!!!! மக்களையும் ஏமாற்றி ஏமாற்றி எவை என்று கூட நீ பிழைத்து!!! பிழைத்து!! எதனாலப்பா?????............

வினைகள் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றாய்!!!!!

கடைசியில் பார்த்தால் அவன் நிலைமையை பார்த்தால் எவை என்று அறிய அறிய!!!!!!

யாங்களும் கண்டுகொள்ளப் போவதில்லை !!!!!!எவை என்று கூட ஒரு மனிதன் கூட அவனை காரி துப்புவதும் இல்லை இதுதான்  நடக்கின்றது அப்பனே!!!!!

யான் எவை என்று கூட பல பல யுகங்களில் கூட பார்த்து விட்டேன் அப்பனே எவை என்று கூட அப்பனே சரியான வழியில் ஏமாற்றுவான் திடீரென்று உயர்ந்து விடுவான் அப்பனே!!!

ஆனாலும் கடைசியில் பார்த்தால் அப்பனே பின் எவை என்று கூட பிச்சை எடுத்துக் கொண்டிருப்பான் என்பேன் அப்பனே அனைத்தையும் இழந்து!!!!

அப்பனே இவ்வாறு தான் இவ்வுலகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே!!!!

பொய்கள் சொல்லி சொல்லி ஏமாற்றி ஏமாற்றி அதை செய்கின்றேன். இதை செய்கின்றேன் என்பார்கள் அப்பனே!!!!!!

பாவங்கள் விட்டு விடாது!!!!

எதை என்று அறிய அறிய நீ இன்றைக்கு ஏமாற்றலாம்!!

எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட ஆனால் ஒரு நாள் அவ் பாவம் உன்னை வந்தடையும் பொழுது யாராலும் காப்பாற்ற முடியாதப்பா!!!!!!!

இதன் தன்மையைக் கூட அறிவியல் வழியாகவே ஒரு திருத்தலத்தில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!!! நலமாகவே!!!

இன்னும் கிரகங்கள் பற்றி மனிதனுக்கு தெரியவே இல்லை அப்பனே!!!!!

எவை என்று அறிய அறிய இதனால் அங்கு சென்றால் இது நடக்கும் இங்கு சென்றால் அது நடக்கும்!!!! இவையெல்லாம் பொய்களப்பா!!!!!!!

இதையாவது வைத்துக் கொண்டு பிழைத்து விடலாம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கின்றான்!!!!!

முட்டாள் மனிதன்!!!!!

கிரகங்களைப் பற்றி யார் ஒருவன் சொல்கின்றானோ........????

அவந்தனுக்கு பாவங்கள் நிச்சயமாய் வரும்!!!!!

 சொல்லிவிட்டேன்!!!!

எவை என்றும் அறிந்து அறிந்து அவன் மட்டும் பின் பாவத்தை சம்பாதிக்கவில்லை அவன் பிள்ளைகளும் சம்பாதித்து பின் கடைசியில் அவன் குலமே நாசமாகின்றது அப்பனே!!!!! 

தேவையா????? இது!!!!!!!!!!! 

உண்மையைச் சொல்லுங்கள் அப்பனே !!!!!

ஈசனுக்கு காசுகள் இல்லையப்பா!!!!!!!!

பின் எவை என்று கூட

பார்வதி தேவிக்கும் காசுகள் இல்லையப்பா!!!!

ஆனால் மனிதா!!!!! எதை என்று அறிய அறிய பின் இவ்வாறு ஈசன் நிலைமையை செப்புவதற்கு காசுகளாம் !!?!?!?!!?!!?!...........

அப்பனே எவை என்றும் உணர்ந்தும் அறிந்தும் செய்யுங்கள் அப்பனே!!!!!

நீங்களே பாவத்தை சம்பாதித்துக் கொண்டு கடைசியில் பார்த்தால்!?!!!!!!

யான் ஈசனை வணங்கினேனே!!!!!!!

யான் அங்கு சென்றேனே!!!! அபிஷேகம் செய்தேனே!!!!!!

எவை எவை என்று கூட அப்பனே அதனால் அப்பனே நீங்களே உங்களை எதை என்றும் அறிந்து அறிந்து புரிந்து கொண்டால் நல்முறையாகும் அப்பனே!!!

இதனால்தான் அப்பனே எவை என்று கூட பதிகங்களை!!!!!!(பன்னிரு திருமுறைகள்) திருவாசகத்தை அப்பனே பாடி க்கொண்டே இருங்கள் அப்பனே!!!!!

நிச்சயம் ஒவ்வொரு கருத்தும் எதை என்று கூட மேன்மை நிலை........ அவ்வாறு எதை என்றும் அறிய அறிய இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே ஏற்கனவே எவை என்றும் அறிந்து அறிந்து சொல்லிவிட்டார்கள் அப்பனே!!!!!!

அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அப்பனே கலியுகத்தை வெற்றி கொள்ளலாம்!!!!!

அப்படி இல்லையென்றால் அப்பனே சாகும் நிலைகள் தான் நோய்கள் வந்து!!!! அப்பனே

அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து மீண்டும் வாக்குகள் செப்புகின்றேன்!!!

அனைவருக்கும் நலம் எம்முடைய ஆசிகள்!! ஆசிகள்!! அப்பனே கோடிகளப்பா!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!