அகத்தியர் அறிவுரை!
Wednesday, 29 June 2022
சித்தன் அருள் - 1155 - அன்புடன் அகத்தியர் - காசியில் பொது கேள்வி/பதில் வாக்கு!
Monday, 27 June 2022
சித்தன் அருள் - 1154 - அன்புடன் அகத்தியர் - திருப்பனந்தாள் குமாரசாமி மட ஆலயம் கேதாரேஷ்வரர் . கேதார்காட்.கங்கை கரை. காசி!
Friday, 24 June 2022
சித்தன் அருள் - 1153 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு, கேதார்காட். கங்கைக்கரை காசி!
12/6/2022 வைகாசி விசாக திருநாள் அன்று கந்தன் உரைத்த பொதுவாக்குரைத்த ஸ்தலம் கேதார்காட். கங்கைகரை காசி.
அழகாக உலகை இயக்கிக்கொண்டிருக்கின்ற என் தந்தையையும் தாயையும் பணிந்து வேலனவன் செப்புகின்றேன் வாக்குகளாக!!!.....
இன்னும் பிறவிகள் மனிதன் எடுத்தாலும் புத்திகள் வரப்போவதில்லை!!!!
வரப்போவதில்லை என்றாலும் இன்னும் பின் சித்தர்கள் வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள்!!!!
ஆனாலும் மனிதன் திருந்துவதாக சரித்திரம் இல்லை!!
சரித்திரம் இல்லை!!
ஆசிகள்!!! என்னுடைய ஆசிகள்!! பல மனிதர்களையும் உயர்த்தி வைத்துக் கொண்டேதான் இருக்கின்றது
ஆனாலும் எப்படி? செய்ய வேண்டும்?? என்பதை கூட உணராமல் தவறு மேல் தவறுகள் மனிதன் செய்து கொண்டே இருக்கின்றான்.
இதனால் நிலைமைகள் நிச்சயம் பின் சரியத்தான் போகின்றது !! போகின்றது!!
ஏன்?? சித்தர்கள் சொன்னதை மனிதர்கள் நிச்சயமாய் வரும் காலங்களில் ஏற்பதும் இல்லை.... அவை மட்டுமல்ல....
இறைவன் எதனை நினைத்து வருந்துகிறான் என்பதையும்கூட.... மனிதன் நினைப்பதுண்டு!!! நினைப்பதுண்டு!!!
நினைப்பதில்லையே!! நினைப்பதில்லையே!!! இறைவனை நிச்சயமாய் கலியுகத்தில்......
தான் சுகத்திற்காகவே எண்ணி எண்ணி பின் சந்தோஷம் அடைகின்றான் சந்தோஷம் அடைந்து தான் ஏற்படுத்திய சுகங்களுக்காகவே வருத்தமும் அடைகின்றான் இதுதான் மனிதப்பிறவி!!!!
மனிதப்பிறவி என்பது அற்பம்!!!!!
என்பதை பல சித்தர்கள் ரகசியங்களாக சொல்லிவிட்டார்கள்....
அதனால் உண்மையான பக்திகள் நீங்கள் செலுத்தினால் மட்டுமே இவ்புவியுலகில் நிலையாகவே பெறமுடியும் அனைத்தையும் கூட.....
அப்படி இல்லையென்றால் ஆனாலும் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.... மனிதன் வாழும் காலங்களில் எதையும் செய்யாமல் கடைசியில் பின் நோய்கள் பற்றிக் கொள்கின்றது இதனால் கடைசியில் என்னிடம் வந்தே... எந்தனுக்கு பின் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் அதை கொடுக்கின்றேன் இதை கொடுக்கின்றேன் அனைத்தும் தருகின்றேன் என்றெல்லாம் பேரம் பேசிக் கொண்டிருக்கிறான் மனிதன்!!!....
இவையெல்லாம் உண்மையா????!!!!!
உண்மையான பக்திகளா??!!!!!
இல்லை!!!!!!
அனைத்தையும் அனுபவித்து விட்டு கடைசியில் இறைவனிடம் வந்து ஐயோ!!!!! இறைவா!!!!
என்று இறைவனைப் பிடித்துக் கொண்டால்.... என்ன?!! இறைவன் நல்லது செய்வானா???!!!!
நிச்சயம் செய்ய மாட்டான்!!!
ஆனால் செய்வான்!!.... புண்ணிய பிறவிக்கு!!!!!
புண்ணியமதை செய்து கொண்டே வர வேண்டும்!!!
இதனைத்தான் யான் மறுபடியும் சொல்லுகின்றேன்!!! மறுபடியும் ,மறுபடியும் சொல்லுகின்றேன்!!
புண்ணியங்கள் செய்ய!!! தர்மங்கள் காக்க!!!
லட்சியமாய் பின் வயதிற்கும் மேலாகவே... தற்போது ஆயுள்காலம் முடிவாயினும்... நிச்சயம் நீண்டு வைப்பான்
யானே நீண்டு வைப்பேன்...பிரம்மாவிடம் போராடியும்... ஆனால் மனிதனிடம் புத்திகள் இல்லையே!!!
வரும் காலங்களில் தாழ்ந்த புத்திகள் தாழ்ந்த புத்திகள் இன்னும் இன்னும். ஏராளம். மனிதன் உண்மையானவன் இல்லை... மனிதன் யாம் தான் வாழ வேண்டும் மற்றவர்கள் எப்படி போனால் என்ன??? என்றெல்லாம் மனதில் சிந்திப்பான்.... ஆனால்!!!! அவையெல்லாம் வீணானவற்றையே சேர்க்கும் என்பேன்.
ஆனால் இறைவன் யோசிப்பான்!!!!
நீ அப்படி நினைக்கிறாயா?!!!
யான் இப்படி நினைக்கின்றேன் சரி என்று கூட .....
இன்னும்... கலியுகத்தில் என்னென்ன?? மாயங்கள் நிகழப் போகின்றது??? என்பதை கூட சித்தர்கள் வரும் காலங்களில் தொடர்கதையாகவே சொல்வார்கள்.
மனிதனின் கதைகள் தொடர்கதைகள்!!!
ஆனாலும் மனிதனுக்கு வாயில் தான் பொய்யே!!!! பொய்யே!!!!
யானே பல தலங்களில் அழகாக இருக்கின்றேன்.
ஆனாலும் என் முன்னே காசுக்காக காசுக்காகவே பிழைப்பு நடத்திக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனாலும் அவர்களையும் யான் தண்டித்துக் கொண்டேதான் வருகின்றேன்.
அதனால் யான் இறைவனை வணங்கியும் பின் இப்படி ஏன்? வருகின்றது?? என்பதைக்கூட பின் வந்து வந்து நிற்பார்கள் இனிமேலும்!!!
இனிமேலும் பல சித்தர்களும் இங்கே தவம் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
அகத்தியனோ மாபெரும்....!!! அகத்தியனுக்கு கூட இவைதன் பிடிக்கும் ஸ்தலம் (காசி).... அதனால்தான் என்னவோ!!!! பின் அவனுடைய சுவடியை (ஜீவநாடி) இங்கே அடிக்கடி வரவழைத்து கொண்டே இருக்கின்றான்.
இன்னும் ஏனைய சித்தர்களும் வருவார்கள்..!!! எவையென்று கூற இன்னும் பல ரிஷிகளும் இங்கே தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!
அதனால் சாதாரணமாக வர முடியாது....
என் தந்தையின் அருள் இருந்தால் தான் இங்கே வரவும் முடியும்!!! காலடியும் வைக்கமுடியும்!!!
ஆனால் ஒரு வாக்கில் புசுண்டனவன் (காக புஜண்டர்) அழகாக உரைத்துவிட்டான்.....
காசிக்குச் செல்லுங்கள் என்று!!!!!!
[16/4/2022 அன்று காகபுஜண்டர் ரிஷி சித்ரா பவுர்ணமி அன்று திரயம்பகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் வாக்கில்..
""""வைகாசி என்று சொல்கின்றீர்களே... அதுவே காசி...
அவ் காசிக்கு அவைதன் முறையாகவே பயணம் மேற்கொள்ள வேண்டும் ...
மேற்க்கொண்டால் நலன்களே உறுதியானது அதனால்தான் வைகாசி. !!....என்று உரைத்திருந்தார்.
சித்தன் அருள் 1116 ல் வெளிவந்துள்ளது]
ஆனால் எத்தனை??? மனிதர்களுக்கு அவ் பாக்கியம்!!! கிடைத்ததென்றால்!!!! நிச்சயம் இல்லை...சில மனிதர்களுக்கே!!!!!
ஆனால் காகபுஜண்டன் அனைத்தும் உணர்ந்தவன்... அவன் பேச்சுக்கு இடமில்லையென்றால் அப்பொழுது பார்த்துக் கொள்ளுங்கள்!!! மனிதன் என்ன கர்மத்தில் இருக்கின்றான் என்று!!!!!
நிச்சயம் மனிதர்களைச் சொல்கின்றேன் நீங்கள் கர்மாவை சம்பாதித்துக் கொண்டே இருக்கிறீர்கள்!!
இதனால் எவை நிச்சயம் தன் தன் கேட்காமலே நிச்சயம் அனைத்தும் வரும் என்பேன்.
மனக் குழப்பங்கள் வரும்!!! நோய்கள் வரும்!!!
ஆனால் எதையும் ஆசைப்படாமல் இறைவனே நீயே !!கதி!!! என்று நீ தான் காக்க வேண்டும்! என்று இருந்தால் நிச்சயம் எதிரே வந்து நிற்பான் என் தந்தை ஈசன்!!!!!
என் அம்மை பார்வதி!!! என் அன்பான குருவானவன்.
பின் அதை உணர்த்துவதற்கு குருநாதன் பின் அனைவரும் சொல்வார்கள்!!!!
அகத்தியனுக்கு பின் அகத்தியனுக்கு குருநாதன் முருகன் என்று!!!!
ஆனால் யானும் சொல்வேன்... எந்தனுக்கு குருநாதன் அகத்தியனே என்று!!!!!
யார் அறிவார்கள்!!!!???
மனிதன் பல பொய்களைச் சொல்லி நடித்துக் கொண்டே இருக்கின்றான்!!! பின் எப்படி?மனமிரங்கி சித்தர்களும் காப்பாற்றுவார்கள்???
எண்ணிப் பாருங்கள்!!!
மாயாஜாலத்தை நம்புவது இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்பதைக்கூட இன்னும் பல மனிதர்கள் ...
தான் அனைத்தும் வசியம் செய்து கொள்ள வேண்டும் !!
தான் நினைப்பது அனைத்தும் நடக்க வேண்டும்!!!! இவையெல்லாம் பொய்!!
நிச்சயம் எங்கள் அருள் இல்லாமல் எதை !??அதைவிட... என் அப்பன் ஈசன் அருள் இல்லாமல் ஒன்றும் நடக்கப்போவதில்லை!!!!
ஆனால் மனிதா!!! இவையெல்லாம் செய்துகொண்டே இருந்தால் கடைசியில் மடிந்து போவாய்!!!
நீ மட்டும் மடிந்து போக மாட்டாய், உன் பிள்ளைகள் இதை குறிப்பிட்ட அளவில் என்ன சொல்வது ???யான்!!!
அதனால் திருந்திக் கொள்ளுங்கள்!!!!
மனிதனே!!! மனிதர்களே!!!
நீங்கள் திருந்திக் கொண்டால் நிச்சயம் சித்தர்கள் அவரவர் இல்லத்திற்கே வந்து நிச்சயம் வாக்குகள் செப்பி செல்வார்கள்.... இதுதான் முடிவுகள்!!!
அதை மீறியும் கூட ஆனால் இன்னும் இன்னும் பல ஆண்டுகளில்.... பல ஆண்டுகள் அல்ல!!!! சில ஆண்டுகளில் வருகிறது இன்னும் பல நோய்கள்!!!
அதனால் நீங்கள் உங்களை காத்துக் கொண்டால் நல்லவை!!!
அதனை விட்டுவிட்டு அனைத்தையும் செய்துவிட்டு பக்தனாக நடித்துக்கொண்டிருந்தால்
என்ன லாபம்???
என்ன லாபம்??? யான் ஈசனுக்கு பிரியன்!!! யான் ஈசனுக்கு பிள்ளை!! என்றுதான் சொல்லி நீங்கள் அலைந்து கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் என் தந்தை எதை விரும்புவானென்றால்!!!!!
அன்பை!!!!... அன்பை விரும்புவான் என் தந்தை.
என் தந்தைக்கு அவ் அன்பை காட்டினாலே போதுமானது என் தந்தைக்கு!!!!!
இதை பல சித்தர்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!
ஆனாலும் உண்மை பொருளை யார்?? நம்புவது?? இவ்வுலகத்தில்!!
ஏதோ சொல்கின்றார்கள்!! ஏதோ செய்கின்றார்கள்!!ஆனால் நம் தனக்கும் பிழைப்பா கடைசியில் வந்து வந்து எதை என்று கூற பின் மாண்டிருக்கும்பொழுது பின் பிணத்தை பார்த்து மனிதன் அழுகின்றான்!!!
நியாயமா????
முதலிலே பின் சாகும் நேரம் என்பதுகூட அழகாக குறித்து வைக்கப்பட்டுள்ளது ஆனால் அதன் முன்னே என்னென்ன?? செய்ய வேண்டும் என்பதைக்கூட மனிதன் மறந்து விடுகின்றான்... கடைசியில் மாண்டு போய் விடுகின்றான்.
இதனால் அனைவரும் எதை என்று?? யாங்கள் சொல்ல!!!!!
ஆனாலும் திரும்பவும் திரும்பவும் வந்து பிறக்கின்றானே!!!! அதுதான் வேதனைக்குரியதும் கூட....
ஆனாலும் இதனை நிறுத்தலாம்!!
எப்படி நிறுத்தலாமென்றால்? பின் சுகங்களுக்கு ஆசைப்படாமல் இறைவனை மனதில் வைத்து மனதில் இறைவனை நேசித்துக் கொண்டே வந்தால்... நிச்சயம் உலகம் சிறப்படையும்!!!
சிறப்படையும் என்பது திண்ணமான வாக்கு!!!
வாக்கு இன்னும் பல சித்தர்கள் சொல்லிக்கொண்டே தான் வந்து கொண்டிருக்கின்றார்கள்!!
ஆனாலும் இப்படி செய்க!!! இப்படி செய்க!!!
ஆனாலும் பின் அப்படி செய்வதுமில்லை!!!
எதனால் வாக்குகள் உரைப்பது என்பதைக்கூட இனிமேலும் சித்தர்கள் கடுமையானவை பின் சோதித்து மனிதர்களை பின் வந்து இழுப்பார்கள்.
இதை நிச்சயம் யான் மனமுவந்து தெரிவித்து விடுகின்றேன்!!!
ஆனால் நம்பினால் நம்புங்கள்!!! இல்லையென்றால் நடுவில் தான் நிற்க போகின்றீர்கள்.... ஆனால் நடுவில் நிற்பது எவ்வளவு கடினம் என்றால் பின் மனிதன் ஆராய்ந்து விடுவான்!!
ஏன்? கடலின் நடுவில் நிற்பது எவ்வளவு?? கடினம் என்று தெரிந்து கொள்ளுங்கள் மனிதர்களே!!!
மனிதர்களே நீங்கள் இப்பொழுது கடலில் நடுவில் தான் நின்று கொண்டிருக்கின்றீர்கள்... அப்படியும் போகாமல் இப்படியும் போகாமல் எப்படிப் போவது??? என்பதை கூட......
ஆனால் இன்னும் மனிதர்கள் பின் தவறான பாதையில் சென்று சென்று தன்னையே அழித்துக் கொண்டு.... தன் குடும்பத்தையும் அழித்துக்கொண்டு தன் பிள்ளைகளையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திருந்துங்கள் இன்னும்... ஏராளம்!!
சித்தர்களின் ரகசியமான பேச்சுக்களை கேளுங்கள்!!
நல் விதமாக தான தர்மங்கள் செய்யுங்கள்!!!
இவையெல்லாம் செய்தால் தான் நிச்சயம் வரும் காலங்களில் பிழைத்துக் கொள்ளலாம்!!!
ஏன் ?இன்னும் ஏராளமான சூட்சுமங்களை நிச்சயமாய் பின் பல சித்தர்கள் இங்கு செல்லலாம் !!அங்கு செல்லலாம்!! என்றெல்லாம் சொல்வார்கள்.
ஆனாலும் திருத்தலங்களுக்கு சென்றாலும்....நீ... எதனை ?எதனை? பயன்படுத்துகின்றாய் என்பதைத்தான்... முக்கியம்!!
நிச்சயம் தாய் தந்தையரை வணங்காமல் என்னிடத்தில் வந்தாலும் யான் வரங்கள் கொடுக்கப் போவதில்லை!!!
யார் ஒருவன் தாய் தந்தையரை நல் முறையாக மதித்து வருகின்றானோ அப்பொழுது என் அழைப்புக்கள் பலமாக இருக்கும்....
ஏன் என் தந்தையின் அழைப்புகளும் பலமாக இருக்கும்...!!!
ஏன் சித்தர்களின் அழைப்பும் இன்னும்......
அதனால்தான் முதலில் மனிதன் எப்படி வாழ வேண்டும் ??என்பதை கூட கற்றுக் கொண்டாலே!! அப்பொழுது தான் உண்மை நிலை பின் புரிய புரிய இன்னும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
உண்மை நிலை புரிந்தால் வெற்றிகள் நிச்சயம் ஒன்று என்பேன்!!!
என்பேன் என்பதற்கிணங்க இன்னும் பல மாற்றங்கள் இவ்வுலகத்தில் வரத்தான் போகின்றது!!! வரத்தான் போகின்றது என்றில்லாமல் இன்னும் பல பல வினைகள் மனிதனை சூழ்ந்துகொள்ளும்!!!
ஆனாலும் ஒழுக்கமில்லையே!! பெண்டிர்களுக்கு (பெண்களுக்கு) ஒழுக்கம் இல்லையே!!! வரும் காலங்களில் சற்று தாய் தந்தையர் தன் பிள்ளைகளுக்கு இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒழுக்கத்தினை நிச்சயமாய் சொல்லித்தாருங்கள்!!!
அதை கேளாவிடினும் அதன் கர்மம் நிச்சயம் அதை அனுபவித்தே தீர வேண்டும்..
தீர வேண்டும் என்பது இல்லை!! பொறுப்புக்கள் இல்லை!! வீண் விரயங்கள் இன்னும் பல பல வழிகளிலும் மனிதர்களுக்கு வந்துகொண்டே இருக்கும்!! இருக்கும் என்பதை கூட மறந்துவிட்டான்!!! இல்லாததை தேடுகின்றானே மனிதன்...
இல்லாததை பொல்லாததை என்று நினைத்து தேடுகின்றானே ஓடோடி!!!!!
எதனை தேடுகின்றாய்??? மனிதா!!!
நீ தேடினாலும் கிட்டியது என்ன???
கிட்டியது என்ன??
இன்னும் சொல்லப்போனால் யான் ஒரு பாடலை அழகாக அருணகிரி...தாளாததை கூட செப்புகின்றான் என்னிடத்தில்....
நிதானத்துடனே
இருந்தால் எதனையும்
முற் கொள்ளலாம்!!
முற் கொள்ளாதபடி
நடந்து கொள்ளலாம்!!
நடந்து கொள்ளாதபடி
முற்பிறவியின் ரகசியத்தை
எப்படியோ அப்படியே
வகுத்து அதை
நீங்கலாக்கி நீக்கி
நீங்கியபின் தரித்திரம்
தரித்திரம் இதனையும்
அன்றி அன்றி வாழ
கற்றுக்கொள்.
வாழக் கற்றுக்கொள்
நிதானத்துடன்.
நிதானத்துடன் இன்றி இன்றி இரு!!
அன்று அன்றிரு
அன்றிரு இன்றிரு
மற்றொன்று மூலமாக
தெரிவித்திரு!!
தெரிவித்து இரு அலைபாயுது
அலைபாய்வதற்குள்
என்னவென்று
என்னவென்று இருக்குதடா
மனிதா! இதனையும்
கற்றுக்கொள்ளாதது ஏதடா
கற்றுக்கொள்ளாதது கற்றுணர்ந்து தெளிவு பெறுவது ஏதடா?
தெளிவு பெற்றபின் முற்றிலும் துறவி ஆகாதது ஏதடா?
ஏதடா ?குட்டுணர்ந்து
குன்றிய பிறகு
இறைவனை வந்து வணங்குவது ஏனடா?
வீணடா !வீணடா!
வீணாவது ஏதடா?
மனிதனின் நிலைமைகள்
பார்த்தால்
முன்னால் பின்னால்
வருங்கால் இன்னுங்கால்
இன்னும் வருங்கால்
வருங்கால் ஏதடா?
பிறவி ஏதடா
முற்பிறவியின்
ரகசியத்தை தெரிந்து
கொள்ளாதது கூனடா!
கூன் விழுந்த போது
இறைவனை நாடி
ஏதடா? !!பலன்கள்
பலன்கள் வந்ததடா
போனதடா ஆனால்
நீ ஒன்றும் திருந்தவில்லையடா!!!
என்று என்னிடத்தில் பாடியும் அசைத்தான் பின் அருணகிரி.
ஆனால் இதையும் உணர்ந்தால் இன்னும் பல பாடல்களையும் அருணகிரி அருணகிரிநாதன் அழகாக இயற்றியுள்ளான்...
ஆனால் யானே சொன்னேன்.... கலியுகத்தில் அப்பாடல்கள் மனிதனுக்கு நிச்சயம் கொண்டு சேர்க்க வேண்டும். அதனால் சில பாடல்களை நிச்சயமாய் மனிதருக்கு போய் சேரக்கூடாது என்பதை யானே தெரிவித்துவிட்டேன்.
அதனால் அருணகிரி தந்தையே!!! தந்தையே!!!
நிச்சயம் என் பாடல்கள் சில மனிதர்களுக்கு கடைசியில் கலியுகத்தில் போய் சேரும் என்று...
அதனால் நிச்சயம் அவனுடைய பாடல்கள் வரும் காலங்களில் நிச்சயம் அவந்தனே வந்து பாடுவான்.
இதனை இதுவரையில் யாரும் தெரிந்திருக்கவில்லை.
இன்னும் பல சூட்சமங்கள் ரகசியங்கள் நிச்சயமாய் நல்லோருக்கு சித்தர்கள் செப்புவார்கள்....
பிழைத்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளுங்கள்!!!
யாங்கள் இப்படித்தான் இருப்போம் என்றால் அப்படியேதான் இருங்கள்..
அழகாக இறைவன் அனுப்புகின்றான் அனுப்புகின்றானே!!!
வயது ஆக ஆக ஆசைகள் மனிதனை பிடுங்குகின்றது
அவ் ஆசைகள் ஆனால் ஆசை!! ஆசை!! ஆசை!!
எதன் மீது ஆசை??
சுகத்தின் மீது ஆசை!!
கடைசியில் சுகமே பின் பலமான சக்திகளை ஈர்த்து அழித்து விடுகின்றது....
இப்பொழுது புரிகின்றதா?? மனிதா!!
எதை நீ சென்று தேடி போனாயோ அதன் மூலம்தான் நிச்சயம் பின் அழிவுகள் நிச்சயம் என்பது கூட பின் அனைவருக்கும் தெரிந்ததே!!!!
திரும்பவும் ஞாபகப்படுத்தி விடுகின்றேன்...
எதனை நீ நம்பி போகின்றாயோ!?? நிச்சயம் அதன் மூலம் அழிவுகள்.
ஏன்?? இந்த ஆசைகள்!!!
நடுவில் வந்தவையா!!! ??? வந்தவையா இல்லையே பின் பிறப்பின் போதே வந்தவையா??
பிறப்பின் போது ஏதும் தெரியாமல் தான் வந்து நிற்கின்றாயே!!! ஆனால் அனைத்தும் உந்தனுக்கு கிடைக்கின்றது.... ஆனால் வயது ஆக ஆகத்தான் அனைத்தையும் தெரிந்துகொண்டு மனிதா...
ஆனால்?? இறைவன் நிலையை தெரிந்து கொள்ளவில்லையே!!!!!
இறைவன் நிலையை நீ தெரிந்து கொண்டால் நிச்சயம் நீ தான் மனிதன்.
ஆனால் இப்பொழுது மனிதன் நிச்சயமாய் காட்டில் தான் வாழ போகின்றான்...
இதற்கும் அர்த்தங்கள் உண்டு!! அர்த்தங்கள் உண்டு!!!
விலங்கினங்கள் எல்லாம் வரப்போகின்றது பின் எதனையென்று நேர்மையாகவே.... நேர்மையாகவே விலங்கினங்கள் போலில்லாமல் மனிதர்களைப் போல் நடந்து கொள்ளுங்கள்!!!!
நடந்து கொள்ளுங்கள் ஆனால் விலங்குகளுக்கும் மனசாட்சி என்று ஒன்று இருக்கின்றது!!!!
ஆனால் மனிதனுக்கு கலியுகத்தில் மனசாட்சி என்று ஒன்றுமே இருக்காது. இருக்காது.
சித்தர்கள் இல்லையென்றே!!! நினைத்து பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்.
ஆனால் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாய் தண்டனைகள் உண்டு... உண்டு இன்னும் ஏராளம்!!!
என் தந்தையானவனும் நிச்சயம் மனிதர்களுக்கு எப்படியெல்லாம் பாடத்தை உணர்த்த வேண்டும் என்பதையெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கின்றான்... ஏற்கனவே உணர்த்தியும் விட்டான்!!
இக்கலியுகத்தில் உண்மையானவைகள் எல்லாம் சித்தர்கள் இனிமேலும் நிச்சயம் ஏற்படுத்துவார்கள்... உண்மையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் நன்மைகளை செய்ய வைப்பார்கள்.
ஆனால் இன்னொரு விஷயத்தை மட்டும் சொல்கின்றேன்....
பக்தன் என்று ஏமாற்றுகின்றானே!!!
அவனை நிச்சயம் யாங்கள் தேர்ந்தெடுக்க மாட்டோம்..
எந்தனுக்கே அனைத்தும் தெரியும் என்கின்றானே!!
அவந்தனையும் யான் தேர்ந்தெடுக்க மாட்டேன்.
அமைதியாக இருக்கின்றானே ஆனால் இருக்கின்றார்கள் பலர் தூய்மையானவர்கள் ஆனால் அவர்களைப் பார்த்தால் மனிதர்கள் திருடர்கள் என்று தான் சொல்வார்கள்.... ஆனால் எங்களுக்கு அவர்கள் நல்லோர்கள்!!!
அவர்கள் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.. அவர்களை தேர்ந்தெடுப்போம்.
மனிதா!! நீ !! எதனையென்று கூற எங்களால்... படைக்கப்பட்டவர்களை எப்படி?? நீங்கள் திருடர்கள் என்று.....
ஆனாலும் நிச்சயமாய் இது கலியுகம் நல்லோர்களை திருடர்கள் தான் என்று.
ஆனாலும் ஒருவன் பாதையை சரியாக கணிக்க கணிக்க கணிக்க எங்களுக்கு மட்டுமே தெரியும்!!!
எப்படி நீ சொல்கின்றாய் ???ஒரு மனிதன் நல்லவன் தீயவன் என்று கூட.... உன்னால் கணித்து விட முடியுமா என்ன???
ஆனால் அவன் ஆன்மா என்னென்ன செய்து கொண்டிருக்கின்றது என்பதை கூட எங்களுக்கு நன்றாகவே தெரியும்!!!
நன்றாகவே தெரியும்!!!
முற்றுப்பெற்ற மனிதா!!!!
முற்றுப்பெற்ற மனிதா!!!
முற்றும் இல்லாததை எதை உணர்த்தி கொண்டிருக்கின்றாய்???
உணர்த்தி கொண்டிருக்கின்றாய்???
இனிமேலும் மனிதன் வாழ்வாங்கு வாழ்வான்!!
எதையென்று நினைக்கும் அளவிற்கும் கூட... பெண் சுகங்களைத் தேடி தேடி அலைந்து போய்க்கொண்டே இருப்பான்.. கலியுகத்தில் நிச்சயமாய்!!! இதைத்தான் வரும் காலங்களில் இன்னும் பல சித்தர்கள்...
முதலில் யாங்கள் சொல்லிவிடுவோம் எதையென்று....
இப்படிச் சென்றால் இப்படி நடக்குமென்பதை கூட...
ஆனால் அதற்கும் கூட மனிதன் ஒழுங்காகவில்லேயே... ஒழுங்காகவில்லையே அதனால் தான் மனிதனை ஒரு நிலைப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் சித்தர்களின் நோக்கமாக உள்ளது.
அதனால்தான் மனிதர்களை ஒரு நோக்காக ஏற்படுத்தி பின் இப்படி நடந்தால் வெற்றிகள் கிடைக்கும் என்று சுலபமாக சொல்லிவிடுவார்கள்... அதன்படியே நிச்சயம் வெற்றி கொள்ளலாம்.
அதனால் மனிதா!!!!
அதைச் செய்கின்றேன் இதைச் செய்கின்றேன் என்னால் முடியும் இதை வைத்துக்கொள்!! அனைத்தும் நடக்கும்!!
என்பதெயெல்லாம் வீணே!!! வீணே!!!
மந்திரமாவது ஏதடா!!?? தந்திரமாவது ஏதடா!!??
என்ற பாடல் வரிகளையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்!!
ஆனால் இவ்வளவு பாடல்களும் இன்னும் மறைத்து வைக்கப்பட்டுள்ளது!! என்பதுதான் தெரியாத மனிதனின் முட்டாள் குணங்கள்!!!
ஆனால் சித்தர்கள் விடப்போவதில்லை வரும் காலங்களில்!!!
தான் தன் பாடல்களுக்கு ஏற்ப இன்னும்.....
ஆனாலும் யானும் கூட நிச்சயம் மனிதனை எப்படி வழி நடத்துவதெல்லாம் நிச்சயம் வந்து புவிதனில் உரைத்து உரைத்து விட்டுவிட்டு செல்வேன்!!!
நம்புங்கள்!!!! நிச்சயமாய் உயர்வு பெறுவீர்கள்!!!
எதனால் என்பதையும் கூட ஆனாலும் என்னிடத்தில் வந்து எதையும் கேட்காதீர்கள்!!!!
யான் எதை? தன் பக்தனுக்கு தரவேண்டுமென்பதை கூட யான் அறிவேன்!!! அதனையே கொடுக்கின்றேன்!!!!
அனைத்தும் செய்துவிட்டு அனைத்தையும் செய்துவிட்டு.....கந்தா!!! முருகா!!! என்று என்னை அழைத்தால்??? யான் என்ன!??? என்ன செய்ய முடியும்????
உந்தனிடத்தில் ஏதாவது!!! சிறு துளியாவது புண்ணியம் இருக்கின்றதா??
புண்ணியம் இருந்தால்தான் நிச்சயம் அனைத்தும் செய்ய இயலும்!!!
இதனால் தன்னைப்போலவே மற்றவர்களை எண்ணும் எண்ணம் இருக்க வேண்டும் என்பதை கூட பல சித்தர்கள் பல பல வாக்குகளிலும் உரைத்து விட்டார்கள்!!!
இதனால் முதலில் பிறரை பிறரை பின் பிறர்நலம் காக்க வேண்டும் என்பது உறுதியாக.....
பின் சித்தர்கள் இன்னும் வருவார்கள் மனித ரூபத்திலே!!!!!!!!
நிச்சயம் வந்து கொண்டே இருப்பார்கள்!!!
நிச்சயம் ''பழிக்குப் பழி'' என்பதைப்போல் நீங்கள் என்ன செய்கின்றீர்களோ..??? அப்பொழுதே தண்டனை கொடுப்பார்கள்!!!!
சித்தர்கள் நிச்சயம் மனித ரூபத்தில் திரிவார்கள்!!!
திடீரென்று அவதாரம் எடுத்து!! எடுத்து!! எடுத்து!!
ஆனால் நிச்சயம் ஏதோ ஒரு உடம்பின் மூலம் வந்து நிச்சயம் காப்பார்கள்!!! இதுதான் சத்தியம்!!!
இன்னும் ஏராளமான இக் காசி!! தன்னில் பின் பல பிறவிகள் எடுத்து எடுத்து இன்னும் என் தகப்பனிடத்தில் எந்தனுக்கு சாவுகள் வரக்கூடாது பல மனிதர்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்று பல ஆன்மாக்கள் வேண்டிக்கொண்டன!!!!
இதனால் பல ஆத்மாக்கள் இங்கேயெல்லாம் தியானங்கள் செய்து கொண்டேதான் இருக்கின்றது!!!
இதனால் தான் இங்கு வந்தால்... அவர்கள் கண்ணில் பட்டால் கர்மம் போகும் என்பதை கூட... வரமாக யான் சொல்லிவிட்டேன்!!!!!
ஆனால் அதைக் கூட உன்னால் நிச்சயம் ஏற்க முடியவில்லையே???!!!!! என்றுகூட புசுண்ட (காகபுஜண்டர்) முனியும் வருத்தம்!!!!!!
யான் சொல்லியதை கூட மனிதன் சிறிதுகூட காதால் கேட்கவில்லை!!!!
ஏன்???? என் பக்தனே இதைக் கேட்கவில்லை..!!!
அவந்தனுக்கு யான் எப்படி?? அருள் கொடுப்பது என்பதையெல்லாம் சற்று............!!
ஆனாலும் புசுண்ட முனியோ!!! யான் விடப்போவதில்லை!!! மனிதனை!!! மனிதனை நிச்சயம் விடப்போவதில்லை கஷ்டங்களில் ஆழ்த்தி!! ஆழ்த்தி.... புத்திகள் வைத்தால்தான்......
இன்னும் பிறவிகள் கடந்து போகும் ஆனால்...என்னை!! என் பெயரைச் சொல்லியும் கூட புசுண்டன் என்று கூட மக்களை ஏமாற்றுகின்றான்..
ஆனால் அவன் ஒரு முறை கூட நிச்சயம் காசி தன்னில்... ஆனால் பக்தன்!!! சித்தன்!!! ஞானி!!! என்றெல்லாம் பொய் கூறி உரைத்துக் கொண்டிருக்கின்றானே!!! என் தந்தையிடத்திற்கு (காசி) வரச் சொல்லுங்கள் பார்ப்போம்!!!!!!!!!!!
நிச்சயமாய் அப்பொழுது தெரியும்!!! உண்மையானவனா நீ???? என்று கூட.......!!!!
பயந்து பயந்து ஒளிந்து கொண்டிருக்கிறான்!!!
காசுகளுக்காக காசுகளால் ஏற்படுத்திக்கொண்டு எதை எதையோ செய்து செய்து ஆனால் கர்மா என்று ஒன்று இருப்பதை மறந்துவிட்டானே!!!! மனிதன்.
நிச்சயமாய் நிச்சயமாய் கர்மா வருவது எப்படி என்று எண்ணிப் பார்த்தால் தப்பித்துக்கொள்ளலாம்!!
அதனால் கடைசியில் கர்மா விடாது மனிதனே!!!!
எதைச் சொன்னால்....பிரம்மன்!!!!
ஒன்றைச் சொல்கின்றேன் பிரம்மன் அழகாக இப்படி தான் பின் வாழ வேண்டுமென்று மனிதனை வகுத்து சரியான முறையில் அனுப்பி விடுகின்றான்.
ஆனால் அதை மனிதனால் திருத்த முடியுமா???
சிரித்தேன் யான்!!!!!!
சிரித்தேன் யான்!!! மனிதனால் அனைத்தும் செய்ய முடியுமா??? இவையெல்லாம் வீணான பேச்சுக்கள் என்பதைக்கூட பல சித்தர்களும்........
ஆனால் ஆனால் பிரம்மா எழுதியதை நிச்சயமாய் மனிதனால் நிச்சயமாய் உரைக்க முடியாது.
சித்தர்கள் சித்தர்களால் தான் உரைக்க முடியும்!!!
அப்படிப்பட்ட சித்தர்கள் இவ்வுலகத்தில் யாரும் இல்லையப்பா!!!!!
அதனால் பொய்யானவர்களே அதிகம்.... அதை நம்பியவர்களும் பொய்யானவர்களே தான்.....
உண்மை!!!
ஒருவன் பொய்யானதை நம்பினால் அவனும் பொய்யானவனே !!!இதுதான் உண்மை!!!!
ஒரு திருடன் என்றால் அத்திருடனை நம்பினால் அவனும் திருடனே!!!
ஒரு பொய்யான துறவி என்றால் அவ் பொய்யான துறவியை ஒரு மனிதன் நம்பினால் அவனும் பொய் யானவனே!!!!
திருடன் திருடனை நம்பினால் எப்படி இருக்கும்???
திருடன் திருடன் என்று தான் மனிதனை....
இன்னும் சித்தர்கள் பல சித்தர்கள் மனிதர்களை பலப் பல ரூபங்களில் பல பலகாலங்களில் கூட காத்து நின்றனர்....!!!
ஆனால் கலியுகத்தில் சுலபம் என்பதை கூட அருமையாக புசுண்டன் புசுண்டன் நிரூபித்து விட்டான்!!!
நிச்சயம் பின் மனிதனுக்கு நோய்கள் மூலமாகத்தான் இனியும் பலமான அடிகள்!!!!
இன்னும் வரப்போகின்றது!!!
என்னென்னவென்றால்??? சொல்ல முடியாத அளவிற்கும் கூட... இன்னும் நீர்நிலைகள் இதன்மூலம் பலமாகவே மனிதன் அழியப் போகின்றான்!!!
வருகின்றது... இன்னும் மழை எவையென்று கூற!!!.... இன்னும் கற்கள் ஒளி கற்கள்(விண்கல்) திடீர் திடீரென்று மனிதன் மீது விழும் என்பேன்!! அங்கேதான் சூட்சுமங்கள் இருக்கின்றது!!
அதனால் திருந்திக் கொள்ளுங்கள் மனிதா!!!
உலகம் நிரந்தரமில்லை!!!!
அனைவருக்கும் செய்யுங்கள்!!!
பிறர் மனதை ஆராய்ந்து செய்தால்தான் தர்மம்!!!
பிறர் வாங்கிக் கொடுப்பது தர்மமே இல்லை!!!
இதனையும் உணர்த்துவதற்கு கேட்காமலே செய்கின்றார்களே!!! அதுதான் தர்மத்தில் போகும்!!!!
அதனால் மற்றவர்களை உணர்ந்து இந்த சூழ்நிலையில் இருக்கின்றாயே!!!! என்றுகூட தர்மத்தை செய்தால் அது பெரும் புண்ணியமப்பா!!!!!
இதனை உணர்த்த உணர்த்த உணர உணர இன்னும் ஞானங்கள்!!!
என் தாய் தந்தையரும் (ஈசன் பார்வதி தேவி) மிக்க மகிழ்ச்சி ஆகவே இங்கு வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள்!!! இதனால் பல பல பல பல சித்தர்களும் பல ஞானியர்களும் ரிஷிகளும் இங்கு வந்து அழகாகவே அதிகாலையிலே நீராடுகிறார்கள்!!!!
இதையென்று கூற பின் மேலே!!!! எதையென்று கூற இமயமலையிலிருந்து இன்னும் பல பரிசுத்தமான ஆன்மாக்கள் பின் உடம்பு தான் இல்லையே..... உயிரோடு நீராடிக் கொண்டிருக்கின்றது!!! அந் நீரானது வந்து கொண்டே தான் இருக்கின்றது!!!
நிச்சயம் பின் அதில் மூழ்கினால் கர்மங்கள் பல கர்மவினைகள் தீரும்!!!!
அதற்கும் என் தந்தையின் அருளாசிகள் பெற வேண்டும்!!!!
என் தந்தையின் அருள் ஆசிகள் பெற வேண்டும் என்பதற்கிணங்க யான் சொல்லி விடுகின்றேன்!!!!
அனுதினமும் அதிகாலையிலே என் தந்தையினை 108 முறை சுற்றியும் என் தாயவளை 108 முறை சுற்றியும்(ஈசனையும் பார்வதி தேவியையும் தனித்தனியாக 108 முறை சுற்றி வணங்க வேண்டும்) சுற்றியே மாதங்கள் வந்தால்.... பல மாதங்கள் இப்படியே செய்து கொண்டிருந்தால் நிச்சயம் என் தந்தையே அனுமதித்து விடுவான் இக் காசி தன்னில் நீராட!!!!!!
மற்றவையெல்லாம் செல்லாது!!!!! செல்லாது!!!!
சொல்லிவிட்டேன் ரகசியத்தை!!!!
இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!!
ஆனாலும் அனைவருக்கும் கிடைக்குமா??? என்பதை கூட.... சந்தேகமே!!!!!!
இவையென்று கூறாத அளவிற்கும் கூட..... இன்னும் இறைவனை நேரில்.........
ஆனாலும் என்னையும் பார்த்து நீ இறைவனா!??? என்று கூட பல நபர்கள் கேட்டு விட்டனர்....
ஆனால் என்னவென்று ??கூற....... பல அடிகள் பல அடிகள் !!!!
எதற்காக ??மனிதா நீ பிறந்தாய்??
உன்னுடைய வேலை என்ன!?...... அதை மட்டும் செய்து விட்டு போனாலே இறைவன் பக்கபலமாக இருப்பான்!!! அனைத்தும் செய்வான்!!!!
செய்வான்!!! இன்னும் பல சித்தர்கள் பல ரகசியங்களோடு சொல்வார்கள்.... அதைக் கேட்டுக்கொண்டே நன்குணர்ந்து பின் மீண்டு வாருங்கள்!!!! பிறவிக்கடலிலிருந்து!!!!!!
வந்தால் இன்னும் நலன்களோடு பல ரகசியங்களை செலுத்தி நீங்கள் நல்படியாக வாழலாம்!!!
முதலில் ஒழுக்கங்கள் எப்படி.... இப்படி இருந்தால் எப்படி வாழலாம் என்பதை கூட சித்தர்கள் முதலில் சொல்வார்கள்...!!! அதற்கு பிறகுதான் பல சூட்சுமமான விஷயங்கள் ரகசியங்கள் இத்திருத்தலத்திற்கு சென்றால்... அங்கே என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் சொல்வார்கள்!!! வரும் காலங்களிலப்பா!!!!
பிழைத்துக்கொள்ளுங்களப்பா!!!!!
பின் மீண்டும் எதையென்று உணராமலே.... என் தலத்திலே அற்புதமான வாக்கை ஒன்றை விளக்குகின்றேன்!!!!!!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்............. தொடரும்!