வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
சமீபத்தில், அகத்தியப்பெருமானின் உத்தரவின் பேரில் திரு.ஜானகிராமன், பாலராமபுரம் வந்திருந்தார். அவர் வரும்போது குருநாதரின் உத்தரவால்
காசியிலிருந்து கங்கை தீர்த்தம்
நேபாளத்திலிருந்து கண்டகி நதி தீர்த்தம்
ராமேஸ்வரத்திலிருந்து 21 ஆழி தீர்த்தம்
முக்கூடல் சங்கமத்திலிருந்து நதி தீர்த்தம்
முடிவாக
கிரௌஞ்சகிரியிலிருந்து விபூதி(பால்கட்டி)
அகத்தியர் ஜீவநாடி
போன்றவையுடன், அபிஷேகத்துக்காக கொண்டு வந்தார்.
திருவனந்தபுரம் வந்து சேர்ந்த பொழுது காலை மணி 9.40 ஆகிவிட்டது. ஆகையால், அகத்தியர் கோவிலுக்கு மாலை அடியேன் கொண்டு விடுகிறேன், அதுவரை அனுமதி இருந்தால், அடியேனின் வீட்டில் தங்கலாம் என்றேன். அவரும் சம்மதித்தார். இருப்பினும், நேரமாகிவிட்டபடியால், அருகிலிருந்த ஒரு நண்பரின் கடைக்கு சென்று டிபன் சாப்பிட்டுவிட்டு, "நண்பரே! காசு கைல இல்லை இப்ப, பிறகு தருகிறேன்! இல்லைனா, அகத்தியர் கணக்குல எழுதிக்கோ!" என நகைச்சுவையாக கூறிவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.
நாடியை எங்கே வைக்கலாம்? என அவர் கேட்டபொழுது, மேலே பூஜை அறையில் ஓதியப்பர் இருக்கார். அவர் பாதத்தில் வைத்துவிடு. அது அவருக்கு (குருவுக்கு) ரொம்ப பிடித்தமான ஒன்று என்றேன். நாடி ஓதியப்பரின் பாதத்துக்கு சென்று சேர்ந்தது.
அப்பொழுது தான் டிபன் சாப்பிட்டிருந்ததால், குறைந்தது 2 1/2 நாழிகை கழிந்து தான் குளிக்க முடியும். குளிக்காமலேயே சாப்பிட்டாகிவிட்டது என்று திருப்பி கூறிக்கொண்டிருந்தார்.
"பரவாயில்லை! உன்கிட்ட குரு கேள்வி கேட்டா, என்னை பார்த்து கை காட்டிவிட்டு. அடியேன் பதில் கூறிக்கொள்கிறேன்" என்றேன்.
ஒரு மணி நேரம் இருந்ததால், தான் பயணம் செய்த இடங்களை பற்றியும், நடந்த அதிசயங்களையும், எப்படி அகத்தியப்பெருமான் நம்மை பாதுகாத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்து, மொழி பிரச்சினைகளுக்கு மாற்று வழிகாட்டி அழைத்து செல்கிறார் என்பதை விளக்கினார். ஒரே ஆச்சரியமாக இருந்தது.
பாலராமபுரம் கோவில் நிர்வாகிகளுக்கு முன்னரே இவர் வந்து இங்கிருப்பது தெரிவிக்கப்பட்டிருந்ததால், அடியேன் வீட்டுக்கு தேடி வந்தனர். அடியேனின் நண்பர்களுக்கு தெரிவித்திருந்தால் இருவர் வந்துவிட்டனர்.
வீட்டின் சூழ்நிலை கலகலப்பானது. ஒரு மணி நேரம் கடந்து செல்ல காத்திருந்த போது பல விஷயங்களை விவாதித்தோம்.
திரு.ஜானகிராமன், மாலை பாலராமபுரம் வந்து, இரவு அங்கேயே தங்கி, மறுநாள் காலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனைகளுக்கு பின், நாடி வாசித்தபின், எரித்தாவூர் சென்று முருகர் பாதத்தில் நாடியை வைத்து பூசை செய்தபின் அங்கும் அகத்தியர் அனுமதித்தால் நாடி வாசிக்கலாம், என தீர்மானமானது.
ஒரு மணி நேரம் கழிந்தபின், சென்று ஸ்நானம் செய்து வந்தவரிடம்,
"அனைவரும் நாடி வாசிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். குருநாதரிடம் கேட்டு சொல்லுங்களேன்" என்றேன்.
குருநாதரும் சம்மதிக்கவே, நாடி வாசிக்க தொடங்கலாயிற்று.
"ஆதி மூலனை மனதில் என்ன, செப்புகின்றேன் வாக்குகளை. அப்பனே! அப்பனே, அனுதினமும் உன்னை பார்த்துக்கொண்டுடேதான் இருக்கின்றேன். நீயும் என்னை பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றாய். ஆயினும் அப்பனே! உன் மனதில் உள்ளதை யான் அறிவேன். அப்பனே! யான் குழந்தையாக இருக்கின்றேன். என்னை அனுதினமும் குளிப்பாட்டி வா. அதுவே போதும். மற்றவை யான் பார்த்துக் கொள்கிறேன்." என ஒரு நண்பருக்கு அருளினார்.
அவர் கேள்வி: அடியேனை ஒரு நிமித்தமாக இந்த வேலையில் அமர்த்தியுள்ளீர்கள். அது இரண்டு பக்கங்களை உடையது. இப்பொழுது முதல் பாகம் நடந்து கொண்டிருக்கிறது. அது நிறைவு பெறுகிற நேரம் வந்துவிட்டதா? உங்களுக்கு திருப்திதானா? இரண்டாம் பாகம் எப்பொழுது தொடங்கும்?
அவர் பதில்: "அப்பனே! அதனால் தான் யான் செப்பவில்லை எதையும். யானே செய்வேன், நீ கேட்க்காவிடினும். யானே செய்வேன். அமைதியாக இரு!
அவர் கேள்வி: "பாலராமபுரத்தில் நீங்கள் வந்து அமர காரணம் என்ன. இத்தலத்தின் புராணத்தை விளக்க முடியுமா?"
அவர் பதில்: "அப்பனே! இதை பற்றி விளக்கமாக கூறுகின்றேன், அத்தலத்துக்கு அருகில் வைத்து."
சித்தன் அருள்..............தொடரும்!
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteஓம் பஞ்சட்டி ஸ்தலத்தின் நாதனே கருணை உள்ளம் கொண்ட சித்த ரே போற்றி
ReplyDeleteகுழைத்த பத்து பாடல் வரிகள்
ReplyDeleteகுழைத்த பத்து
ஆத்தும நிவேதனம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
அந்தாதித் தொடை
அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் எண் : 8
நாயிற் கடையாம் நாயேனை
நயந்து நீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே
வைத்திட் டிருக்கும் அதுவன்றி
ஆயக் கடவேன் நானோதான்
என்ன தோஇங் கதிகாரம்
காயத் திடுவாய் உன்னுடைய
கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே.
பொழிப்புரை :
நெற்றிக் கண்ணையுடைய பெருமானே! நாயினும் கீழான, அடியேனை விரும்பி, நீயே அடிமை கொண்டாய். மாயா காரியமான இப்பிறப்பை உன்னிடம் ஒப்புவித்து உன் ஆணைவழி நடப்பதன்றி ஆராயும் தன்மை நானோ உடையேன்? இவ்விடத்தில் அதிகாரம் என்னுடையதோ? இல்லை; ஆதலால் என்னை நீ இந்த உடம்பில் வைப்பினும் வைப்பாய். உன்னுடைய திருவடி நீழலில் சேர்ப்பினும் சேர்ப்பாய். அஃது உன் விருப்பம்.
திருச்சிற்றம்பலம்.
ஓம் நம சிவாய நமஹ.
ஓம் அகத்தீசாய நமஹ.
மணிவாசகர் திருவடிகள் போற்றி