​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 6 June 2022

சித்தன் அருள் - 1148 - அன்புடன் அகத்தியர் - :ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி ஆலயம், எரித்தாவூர்!


26/5/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான்/ முருகர் உரைத்த பொதுவாக்கு

வாக்குரைத்த ஸ்தலம் :ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி ஆலயம். எரித்தாவூர். திருவனந்தபுரம். 

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே நலமாக நலமாக பல பல பல பல ஆண்டுகள் எதையென்று கூற ஆனாலும் அப்பனே இவையன்றி கூற அப்பனே.. யானும் இங்கு வருவேனப்பா இவந்தனும்(முருகர்) பின் கீழே இறங்கி(மலையில் இருந்து)  வருவானப்பா!!! இதையன்றி கூற பல பக்தர்களுக்கும் ஆசீர்வாதங்கள் தந்து கொண்டேதான் இருக்கின்றான்.

அப்பனே யானும் எதை என்று கூறும் பொழுது கூட அப்பனே ஒரு விளக்கத்தை!!! ஒரு சூட்சுமத்தை!!! அதாவது சொல்கின்றேன் அப்பனே!!!

ஆனாலும் எவை என்று கூறாத அளவிற்கு கூட பத்மநாப சுவாமியை அப்பனே.              வடிவமைத்தவனும் யானே!! தான் !!!. ஒரு உண்மையைச் சொல்லிவிட்டேன்.

அப்பனே அவை மட்டுமல்லாமல் அப்பனை எதை என்று கூற ஓர் இடம் அப்பனே... எதை என்றும் கூறாத அளவிற்கு கூட ஈசனிடம் யான் முறையிட்டேன்!!!! 

எதையன்றி கூற யான் பலப்பல மனிதர்களை நல்வழிப்படுத்த வேண்டும் நல்வழிப்படுத்த வேண்டும் பல மக்களை பின் காக்க வேண்டும். இதனால் ஆங்காங்கே பல திருத்தலங்களை உருவாக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் பின் அவ் திருத்தலங்களுக்கும் சக்திகளும் பல இட வேண்டும். இட்டிட்டு!!! இட்டிட்டு!! அங்கு வருபவர்களின் குறைகளை தீர்க்க வேண்டும்!!!.. என்றெல்லாம் யான் பின் ஈசனிடம் முறையிட்டேன். 

ஆனாலும் இவையன்றி கூற....ஈசன்!!!! அப்பனே ஓரிடத்தில் நீ தவம் செய்!!! உந்தனுக்கு என்னவென்று கூற!!!!....பின் அனைத்தும் உந்தனுக்கே தெரியவரும்!! அப்படி சென்றால் எதையன்றி கூற...உன் கண்முன்னே எது தோன்றுகின்றதோ?! அத்திருத்தலத்தை  உருவாக்கு!!!!! என்றுகூட. 

அதனால் தான் அப்பனே அங்கு முருகன் வந்து(பாலராமபுரம்) உரைத்திட்டானே!!!! .... அங்கு தான் யான் தங்கியிருந்து பல வடிவங்களிலும் பல பல ரூபங்களிலும் தவம் இயற்றினேன்.

நலமாக!!! நலமாக!!! இதனால் எதை எதை என்று கூற அப்பனே ஆனாலும்.... இங்கு ஒரு திருத்தலத்தை அமைக்க வேண்டும்!.

எவ்வாறு!??!! ஈசனா!!?? இல்லை பிரம்மாவா!!!??.. விஷ்ணுவா!!??..... ஆனாலும் என் கண்களுக்கு புலப்பட்டது! நாராயணனே!!!!

அதனால் எவை எவை என்று கூற... இங்கிருந்தே எவையென்று கூற அனுதினமும் யான் செல்வேன் அங்கு!!!!

வடிவமைத்து!! வடிவமைத்து!! ஆனாலும் பல அரக்க குணங்கள் கொண்ட மனிதர்கள் அதை தடுத்தார்கள்!!!

நிச்சயம் இவையெல்லாம் அமைய கூடாது என்றெல்லாம்!!!

ஆனாலும் விடவில்லை!! ஆனாலும் இதற்கு பாதுகாவலனாக எவை என்று கூற முருகனும் வந்துவிட்டான்!!!!!

அகத்தியபெருமான் வாக்கினிடையே முருகர் தந்த வாக்கு!!!!!! 

அகத்தியா!!!!! உந்தனுக்கு என்னவென்று? கூறு!!!  ஆனாலும் நீ அமைப்பதைப் பற்றி யான் அறிந்து விட்டேன்!!!!

ஆனாலும் நல்லதை செய்ய இவ்வுலகத்தில் யார் முன் வந்தாலும்!!! அதை கெடுப்பவர்கள் பலர்!!! பல அரக்க குணம் கொண்ட மனிதர்களும் உன்னை கெடுப்பார்களே!!!  நீ எப்படி என்று கூற... ஆனால் எந்தனுக்கு அனைத்தும் தெரியும் யானே செய்து முடிக்கின்றேன் என்று... அகத்தியன் எதையென்று!! எவையென்று!!! கூறும் பொழுது கூட யானே சொன்னேன்!!!

யான் சொன்னதற்கு இவையென்று கூற.... இல்லை!! இல்லை!! அகத்தியா!!! இதையன்றி எவற்றின் மீது பற்று அதிகம் என்பதைக் கூட... மனிதர்களை யான் அறிவேன்.

அதனால் நீ!! தாராளமாக செய்.... உன் வேலைகளை தாராளமாக தவத்தின் மூலமே தவத்தின் மீது நல் விதமாகவே செய்!! யான் உந்தனுக்கு பாதுகாவலனாக ஒரு மலை(எருத்தாவூர்மலை) மீதே வீற்றிருக்கின்றேன்...!! யாராவது வந்தால் எதையென்று கூற இங்கேயே அழித்து விடுவேன்... என்று  கூறிவிட்டேன்.

இதையென்று அறியாமல் ஆனாலும் பார்த்துக்கொண்டே இருந்தேன்!!! ஆனால் அகத்தியனை எதையென்று கூற..... அகத்தியன் திறமையை இம்மனிதர்கள் யாரும் அறிய மாட்டார்கள்.

ஆனாலும் இதை என்று அறிந்த  இவந்தன் எப்படித்தான் திருத்தலத்தை உருவாக்குகின்றானோ என்று... பல மனிதர்கள் தடுத்து ...தடுக்க தடுக்க பார்க்கலாம் என்று கூட.....ஆனாலும் எவை எதையென்று கூற... அகத்தியன்!! என்ன?? பின் எவை  எதையென்று கூற சக்திகள் இல்லையா???... என்று எவற்றின் மீது பற்று அதிகம் கொண்ட மனிதர்களே!!!!! பார்ப்போம் என்று கூட அகத்தியன் அழகாக வடிவமைத்தான்!!!!

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக எங்கெங்கு எதைச் செப்ப!!!!  எவ் மந்திரங்களை செப்ப!!! பின் எதையெதை என்று கூற எங்கெல்லாம் எதை இட வேண்டும்!! எவை பின்பற்ற....  தன்.. தவத்தின் மூலமே பத்மநாபசுவாமி திருத்தலத்தை அமைத்தான் சொல்லிவிட்டேன்.

 அகத்தியபெருமான் வாக்கு 

அப்பனே!! காலப்போக்கில் மனிதர்கள் அப்பனே தெய்வ ரகசியங்களை மறைத்தும் விட்டார்கள்.

ஏனென்றால் தெய்வ ரகசியங்கள் மறைத்து விட்டால் எதையென்று ஆனாலும் அப்பனே பலப்பல உண்மைகள் சித்தர்கள் யாங்கள்  நிச்சயம் வெளிக்கொண்டுவருவோம் அப்பனே....

இதனால் அப்பனே !!! அவ் பத்மநாப சுவாமி திருத்தலத்தை அமைத்தவன் யானே!!!! தைரியமாக சொல்வேன்!!!

வடிவமைத்து இப்படித்தான் இருக்க வேண்டும். எதையென்று ஆனாலும் பின் யானே!! பூலோகத்தை விட்டு மேல் லோகத்திற்கு சென்று...யான் அமைத்து விட்டேன்.!! ஆனால் எதையென்று கூற.... நாராயணனிடம் நீ!! வந்து அங்கு அமர்ந்து இரு!!!! என்று உரைத்திட்டேன்!!

இல்லை!!! யான் உலகங்கள் யாவும் பார்க்க வேண்டும் ஆனால் அங்கேயே அமர்ந்து விட்டால்.... இல்லை !!! என்னிடத்தில் நீ!!  வா!!!  யான் மற்றவை பார்த்துக் கொள்கின்றேன் என்று கூட யானே உரைத்தேன். 

இதையன்றி கூற..... இல்லை!!! ஆனாலும் அகத்தியா!!! நீ சொல்கின்றாய்!!! இவ் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றுகூட நீ விரும்புகின்றாய் !!! ஆனாலும் கடுமையாக உழைக்கின்றாய்!!! ஆனால் மக்களோ நம்பாதவர்கள்!!! எதையென்று கூற அதனால்.... அழிந்தால் அழியட்டுமே!!!! என்றுகூட நாராயணன் எதையென்று கூறாமல் கூறிவிட்டான்!!!

இல்லை!!!!  நிச்சயம் உந்தனுக்கும் பல உதவிகள் செய்துள்ளேன்!!! நாராயணா!!!!!!! மறந்து விட்டாயா????!!!!!

எதையென்று கூற.... சரி!!! அகத்தியனே!!!! நீ!!!  என்ன!?  விட்டுவிடுவாயா!!??  என்ன?!! வருகின்றேன் என்று வந்துவிட்டான். இதனால் ஆனாலும் அகத்தியன் எதையன்றி கூற யான் சொல்வேன் பெருமையாக..... .

ஆனால் தக்க சமயத்தில் பார்த்து!!! எதை என்று கூற நீ இங்கே படு !!!! என்று கூறிவிட்டேன்.

இல்லை!!... அகத்தியா!! நீ எதற்காக ?அழைத்தாய்? என்று சிறிது யோசித்துக்கொண்டு.....

ஆனாலும்.... படு..!! எதையன்றி கூற யான் சொல்கின்றேன். 

அகத்தியா!!! உன் லீலைகள் எந்தனுக்கு...புரிய.. காலம் தாழ்ந்து விட்டது என்று கூட பின் படுத்து விட்டான்!!!! எதையன்றி கூற பின் நாராயணனும்....

அப்படியே அவந்தனுக்கு நல் விதமாகவே உறங்கச் சென்று  உறங்கவும்  எதையென்று கூற ...யான் அவந்தனுக்கு... பாடிட்டேன் பாடல்களை.... ஆனாலும் உறங்கியே கிடந்தான்.... இதனால் மீண்டும் பின் எதனை என்று கூற... சக்திகள் எல்லாம் யான் இறக்கி விட்டேன் அங்கே!!!!

அவந்தன் அதனால் மீண்டும்... எழுந்தான்...பின் நாராயணன்.. பின். அகத்தியா!!! என்ன செய்தாய்???? என் சக்திகள் எல்லாம் இங்கே எதை என்று கூற உடம்பே இப்படியாகிவிட்டதே என்று கூற......

இல்லை... உன் சக்திகள் எல்லாம் இங்கேயே பின் அமைத்து விட்டேன்.

ஏனென்றால் மனிதர்கள் வரட்டும்!!! நன்மைகள் பெறட்டும்!! என்று கூட..... இதனால்தான் அகத்தியா!!!! மனிதர்களைப் பற்றி மனிதர்கள் தரித்திரமுள்ளவர்கள்... மனிதர்கள் எப்பொழுதும் திருந்த மாட்டார்களே!!!! ஆனால் நீதான் பின் நல்லது ஆகட்டும் நல்லது ஆகட்டும் என்று செய்து கொண்டிருக்கின்றாய்.

சரி!!! பின், வரட்டும்!!!.... யானும் என் சக்திகளை இங்கே தங்கி இருக்கின்றன.யானும் எவையன்றி கூற...பின் மேல்லோகத்திற்கு சென்றுவிட்டேன்.எவையென்று எதையென்று கூற.... ஆனாலும் இவையென்று அறியாமல் யானும் சென்று விட்டேன். மேல்லோகத்திற்கு!!!! 

ஆனாலும் அங்கு பட்ட பாடுகள் நாராயணனே எதையென்று கூற.... ஆனாலும் பலப்பல மடங்குகள் ஆனாலும் ரிஷிகள் மூலம் அவந்தனுக்கும் இன்னும் சக்திகள் வந்துவிட்டது.

இதனால் எதையென்று கூறபின் அவந்தனும் நாராயணன் ஆகவே!!! ஆனாலும் இதை என்று அறிவதற்கு அவந்தன் உண்மையாகவே... எவ்வளவு ?சக்திகள் இருக்கின்றதோ!!!! அவ் சக்திகள் அவ் பத்மநாபசுவாமி மீது இருக்கின்றது இப்பொழுதும் கூட!!!!

இதனால் இவையன்றி கூற...இவ் முருகனும் எதற்காக? எதையன்றி கூற...அத் திருத்தலத்தை கட்ட எந்தனுக்கு உதவி புரிந்தான்.

அதனால் எவை எவை என்று கூற....  வருபவர்களையெல்லாம் சாய்த்தான். ஆனாலும் யான் சொன்னேன்.

முருகா!!!!  எதையன்றி கூற தண்டித்து விடாதே!!!! மயக்க நிலையில் எல்லாரையும் இட்டுவிடு!!! அவரவர் கர்மா அவனவன் அனுபவிக்கட்டும்!!! என்று.

அதனால் முருகனும் அகத்தியா!!!! மனிதா!! மனிதா !! என்று இப்படிப் போய்க் கொண்டிருக்கின்றாயே!!! 
ஆனால் மனிதனோ!!?? உன்னையே திட்டித் தீர்த்து கொள்கின்றான் என்று எதை என்று கூற என்னையே!!!!!

ஆனாலும் விடவில்லை!! விடவில்லை!! எதற்காக?? என்று கூட அதனால் வருபவரை எல்லாம் முருகன் தடுத்து நிறுத்தினான்!!!

இதை கண்ட பார்வதிதேவி...!!! எம் எதையென்று கூற இங்கே ஓடோடி வந்து விட்டாள்!!! 

முருகா!! நீ மட்டும் தனியாக இருக்கின்றாயே!!! எதையென்று எவ்வாறு என்பதைக்கூட எந்தனுக்கு மனம்!!! என் பிள்ளைக்கு என்ன ஆகி விடுமோ?? என்று கூட...

ஆனாலும் யானும் இங்கு வந்தேன்!! எதையென்று கூற......அம்மா!!! இவ்வுலகத்தை காக்கும் நீயா??? பயப்படுகின்றாய்??!!!! என்று கூற...

இல்லை!! இல்லை!!! எதையென்று கூற ஒரு நல்லதை செய்ய இறைவன் இல்லை என்று சொல்வான் இக்கால மனிதன்.

அதனால் எதையென்று கூற ஏதாவது கொடுத்தால் இறைவன் இருக்கின்றான் என்று சொல்வான். ஏதும் கொடுக்காவிடில் இறைவன் பொய் என்று சொல்வான். இந்தகாலத்தில் எந்தனுக்கு... பாசம் கண்ணை மறைத்துவிட்டது அகத்தியா!!! ... சென்று வருகிறேன்.!உன்னிடத்தில் விட்டு விட்டு என்று கூட....

முருகன் அழகாக காட்சியளித்தான் இதனால் எதையென்று கூற..... அனைத்தும் செய்து முடித்திட்டேன்!!!!

என்னுடைய அருளால் இல்லை!!! இறைவனுடைய அருளால்!!!!

இறைவன் எதை என்று கூற பின் யான் முன்னே உரைத்திட்டேன். இதன் எதையெதை என்று கூற கூறுமளவிற்கு கூட பல பல பல மனிதர்கள் பலப்பல எங்கெங்கிருந்தோ இங்கு வழிபட்டு பின்பு பல தரித்திரங்களும் நீங்க!! நீங்க!! .. . எதையன்றி கூற பத்மநாப சுவாமியின் பற்று பின் பற்றாகவே இருந்தால் அனைத்தும் கொடுப்பான்.எதையென்று கூட.... 

ஆனாலும் இவன் அருள் இல்லாமல் இங்கே வரமுடியாது சொல்லிவிட்டேன்!!!

இதனால் பல விரதங்கள் எதையென்று.... ஓர் மண்டலம்(48 நாட்கள்) நல் விதமாக....." நமோ நாராயணா " நமோ நாராயணா " என்று சொல்லிட்டு.... நல் விதமாக1008 முறை போற்றிட்டு... நல் விதமாகவே சில சில மனிதர்களுக்கும் தானங்கள் ஈந்து நல் முறையாகவே பத்மநாப சுவாமியை பார்த்தால் அவன் கர்மங்கள் நிச்சயம் அழியும் என்பேன்.

பத்மநாபன் பல பணங்களை ஒர் குகைக்குள் பின் நல் விதமாகவே குவித்து இருக்கின்றான் அதன் அடியிலே!!!! 

இதனால் மனிதர்களுக்கும் எடுத்துச் செல்லுங்கள் என்று தாராளமாக கொடுப்பான்!!!எதையென்று கூற அதனால் தாராளமான மனசுகாரனாக அங்கே திகழ்கின்றான்.

ஏனென்றால் யானும் அதை அவந்தனுக்கு கூறிவிட்டேன்... இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று கூட!!!

இதனால் அப்பனே தெரிந்துகொள்ளுங்கள் அப்பனே திருத்தலங்களைப் பற்றி அப்பனே மனிதன் அழித்துவிட்டான்.

இவ்வாறு திருத்தலங்கள் சென்று சென்று பின் எதை என்று கூட மனிதன் நலம் பெற்று விட்டால் எப்படி வாழ்வது  என்று உயர் செல்வாக்கு உடையவர்கள் அப்பனே மனிதனை தடுத்துவிட்டார்கள் அப்பனே புத்தகங்களை மாற்றியும் எழுதிவிட்டனர். அப்பனே!! தரித்திர மனிதன் அப்பனே இக்கலியுகத்தில் அப்பனே மனிதர்கள் பலவினைகளை சுமந்து எங்கு ?எங்கு ?செல்ல வேண்டும் ?!என்று தெரியாமல் அலைந்து கொண்டு இருக்கின்றார்கள் அப்பனே.

அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே... நலமாக நலமாக அப்பனே பிறவிக் கடலை நீந்துங்கள் அப்பனே ... பிறவிக் கடலை நீந்தாவிடில்... அப்பனே நீந்தி நீந்தி அப்பனே கஷ்டங்கள் தான் வரும் அப்பனே.

அதனால் இறைவன் இல்லை என்ற நிலைமைக்கு வந்திட்டு எதை எதை என்று கூற அப்பனே கஷ்டங்கள் பட்டு பட்டு வாழ்கின்றீர்களா!! இவ்வுலகில்!!!
வேண்டாம் அப்பனே!!!

அதனால் பல திருத்தலங்களை யான் உருவாக்கினேன் அப்பனே... எவ்வாறு??? சூட்சுமம்!!! எவ்வாறு வணங்க வேண்டும் என்பதை கூட நான் சொல்லித் தருகின்றேன் அதைப்போல செய்திட்டு,சென்றிட்டு வணங்கி வாருங்கள் அப்பனே!!! நலமாகவே நலமாகவே உண்டு.

இதனால் அப்பனே இங்கு எதையென்று வேண்டும் என்ற அளவிற்கும் கூட இவ்  முருகனிடத்தில் கேட்டாலும் அவந்தன் நிச்சயமாய் அருள்வான் என்பேன்.

குழந்தை வடிவானவன் முருகன்!!!!!!

எதை என்று எதிர்பார்க்கும் அளவிற்கு கூட அதனால் தான் அப்பனே!!!! ஆனால் தவறு செய்பவர்களை இவன் தண்டிப்பான் என்பேன் அப்பனே.

ஆனால் இவனை கண்ட பல பல மனிதர்களும் போய்விட்டார்கள் என்பேன்!!!

பல பல மனிதர்கள் அப்பனே பல பல ஆண்டுகளாக இங்கு வந்து விட்டனர். ஆனாலும் தவறுகளை செய்து!!....ஆனாலும் அவர்களுக்கும் தண்டனைகள் கொடுத்திட்டான்.. முருகன்.

அதனால் அப்பனே சரியான பாதையில் எதை என்று கூறி விளக்கும் அளவிற்கு கூட... ஆனாலும் இங்கே வந்து..... முருகனை கேட்டான்!!!!

ஏன்?? அப்பனே எதை என்று கூற....நீ!!! கீழே இருக்கக்கூடாதா!!! என்று கூட...எதை...!!! 

ஆனாலும் முருகன் மனதார நினைத்தான்!!!! 

மக்களே எதையென்று கூற..... பணத்திற்காக சென்றடைந்தீர்கள் ...ஓடி!!! ஓடி!!! ஆனால் எதை எதையோ கர்மத்தை சேர்த்துக்கொள்ள ஓடோடிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால் படியேறி வாருங்கள் !!!!! கர்மத்தை தீர்க்க என்று முருகன் மனதில் நினைத்துக் கொண்டான்.

அதனால்தான் அப்பனே சொல்கின்றேன் அப்பனே!!!

ஏறுங்கள்!!!! கர்மம் கரையட்டும் அப்பனே!!!!!!

பின் எதையென்று கூற பணத்திற்காக ஓடுகின்றீர்களே... அப்பனே எதையென்று கூற.... அதனால் அப்பனே கர்மாக்களை சேர்த்துக்கொள்ள ஓடுகின்றீர்களே அப்பனே.... புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள ஓடோடி வாருங்கள் அப்பனே!!!!!
முருகனை காண அப்பனே!!!!

முருகனை எதை எதை என்று கூற  பல பல வகையிலும் அப்பனே தெரியாத அளவிற்கும் கூட சில சில விதிகள் அமையாயிருப்பினும்...இவ் முருகன் நிச்சயமாய் மாற்றுவான் என்பேன் அப்பனே.

நல் விதமாக என்னிடத்திலும் இரவில்  வந்து தங்கி பேசுவான்... பல உரையாடல்களை இப்பொழுதும் கூட அங்குமிங்கும் வந்துகொண்டுதான் இருக்கின்றான் முருகன்.

நல் முறையாகவே அகத்தியா!!!! அகத்தியா!!! ஏன் இப்புவியுலகத்தில் மனிதர்கள் அழியக்கூடிய நேரமிது......எதையென்று கூற ஆனால் மனிதர்களையும் காத்து நிற்கின்றாயே என்று சொல்கின்றாயே என்று!!!

ஆனாலும் இதை என்று கூற யானும் சொல்வேன் அடிக்கடி..... நிச்சயம் எம் மனிதர்களும்... பாசம் மிகுந்த அகத்தியன் இருக்கின்றான்!!! அகத்தியன் இருக்கின்றான்!!!! அகத்தியன் காப்பாற்றுவான்.... என்றெல்லாம் வந்து கொண்டே இருக்கின்றார்கள்.

ஆனாலும் இதையன்றி கூற... அதற்காகவாவது நிச்சயம்  யான் போராட வேண்டும்...முருகா!!!  எதையன்றி கூற ஆனாலும் சரி இவையன்றி கூற.....போராடு!!!!!

ஆனாலும் கலியுகக் கடவுளே நீயும் நிச்சயம் போராட வேண்டும்.....எவையன்றி கூற யான் ஒருத்தனே போராட முடியுமா!? என்ன??!!!!

ஆனாலும் நீயும் என்னுடன் போராடு என்று கூறி நல்விதமாகவே!!!.....

சரி அகத்தியனே!!!! நிச்சயம் யான் செய்கின்றேன் என்று கூட சத்தியம் செய்து விட்டான் இம் முருகன்(எருத்தாவூர் பாலசுப்ரமண்ய ஸ்வாமி). 

அதனால் நல்லோர்களை நிச்சயம் காப்பான் என்பேன். ஆனால் பொய்யான உலகம் எதை என்று கூற அழிவின் பாதையிலே செல்கின்றது என்பேன்.

ஏனென்றால் அழிவின் பாதயையும் யார் உருவாக்குகின்றனர் என்றால்..மனிதனே!!! 

நிச்சயமாய் மனிதன்!!! திரும்பத் திரும்ப யான் சொல்கின்றேன்.... மனிதன் மாறிக்கொண்டே போனால் யாங்களும் எதை என்று கூற... சித்தர்களும் மாறிக்கொண்டே தான் போவார்கள். மாறிக்கொண்டே போவார்கள்!!!!! இறைவனும் மாறிவிடுவான்... செப்பி விட்டேன்.

அதனால் வாழ்வதும்!! வீழ்வதும்!!! மனிதனிடத்திலே இருக்கின்றது என்பேன்.

மனிதன் பொய்யான பக்திகளை காட்டி விட்டு பின் இறைவனை எதையன்றி கூற ஏதோ தானோ என்று இறைவனை ஒரு சுகத்திற்காகவே வணங்குகின்றான்..... அப்படி வணங்குவது நியாயமா???? இல்லை நியாயமே இல்லை.

எதையன்றி கூற அனைத்தும்.... அனைத்திற்கும் காரணம் இறைவா நீ என்பதை உணர்ந்து நல் விதமாகவே உண்டு உண்டு அனைத்தும் நீயே செய் என்று பின் சொன்னால் நிச்சயம் இறைவன்  மனம் இரங்கி... ஆனாலும் சரி பக்தனை சோதிப்போம் என்று சில காலமே சோதிப்பான்!!.... அதில் வெற்றி பெற்றுவிட்டால் அனைத்தையும் வாரி வழங்குவான். தன்னுடைய பாதத்திலே வைத்துக் கொள்வான்.... இதுதானப்பா இறைவனின் சாட்சி!!!!

 மற்றவையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள் அப்பனே!!!

மனிதன் பல பல வேலைகளிலும் சித்து வேலைகளையும் செய்வான் அப்பனே வரும் காலங்களில் ஆனால் அவன் சித்து வேலைகள் செய்கின்றான் ஆனால் அழிவதற்கு என்று தெரியாமல் போய்விட்டது அப்பனே.

இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கின்றது அப்பனே...... அவன் செய்யும் வேலைகள் எல்லாம் அவன் அழிவதற்கு காரணமாகவே போய்க்கொண்டிருக்கின்றது அப்பனே.

ஆனால் இறைவன் எதையன்றி கூற ஆனால் இறைவன் பெயரை வைத்தே ஏமாற்றுகின்றான் என்பதைக் கூட .... மறுக்க முடியாத உண்மை.

ஆனால் அப்பனே இறைவனை வைத்து ஏமாற்றுபவர்களுக்கு... இறைவன் என்ன......

அப்பனே ஆனாலும் சிறிது ஆகட்டும் ஆகட்டும் என்று சொல்லிக் கொண்டுதான் இருப்பான்.

ஆனால் அடித்தால் எவரும் தாங்க மாட்டார்கள் இதனால்... அழிவின் பாதையிலே செல்கின்றது அப்பனே!!!

எவ்வாறு என்பதையும் கூட வரும் வரும் காலங்களில் காடுகளிலும் மலைகளிலும் எதை எதை என்று கூற..அப்பனே பலத்த பின் எதை  எதை என்றுகூட அழிவுகள்.... அழிவைத்தான் சந்திக்கும் இவ்வுலகம் என்பேன் அப்பனே.

இதனால் மனிதர்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்!!! எதுவும் நிரந்தரம் இல்லை அப்பனே இறைவன் தான் நிரந்தரம்!!!

அவனை வணங்கினால் அப்பனே ஒன்றும் செய்ய இயலாது.

அப்பனே எவையென்று கூற அப்பனே அனைவருக்கும் ஒரு விஷயத்தை சொல்கின்றேன் அப்பனே...

எந்தனுக்கு பின் உடம்புகள் சரியில்லை ஔஷதங்கள்(மருந்துகள்) பின் வேண்டும் இதையன்றி கூற இவையெல்லாம் எவை என்று கூட சொல்கின்றீர்களே அப்பனே.... இவ்வாறெல்லாம் முருகனை நோக்கி  இறைவனை நோக்கி சென்றால் இவ்வுடம்பிற்கு எவ்வாறு?? பின் நல்லது செய்ய விட்டுவிடுவான்!??

நல்லதையே செய்வான் இறைவன்!!! எதையென்று கூற அதனால் தான் அப்பனே உடம்பையும் பாதுகாக்க பல திருத்தலங்களையும் நிச்சயம் அடைய வேண்டும் என்பேன்.

கடைசியில் எந்தனுக்கு பின் உடம்பு இவ்வாறு வலி இருக்கின்றது!!! அவ்வாறு வலி எடுக்கின்றது!!! என்பதெல்லாம் அப்பனே  எவ்வாறு? பிரயோஜனம்? என்பேன் அப்பனே!!!

அதனால் காடுகளிலும் மலைகளிலும் ஏறிப்பார்!!! அப்பனே உன் உடம்பு அப்பனே சாகாது!!! என்பேன். சிரஞ்சீவியாய் வாழும் என்பேன்! அப்பனே!!!

எவையென்று கூற அதனால் அப்பனே பலப்பல இறைவன்கள் அப்பனே எங்கெங்கோ காடுகளிலும் மேடுகளிலும் தங்கியிருக்கின்றனர்.

அங்கு அலைந்து வரட்டும் மனிதன்!!! அப்போதுதான் மோட்சம் கிடைக்கும்... என்பதைக்கூட....

அதனால்தான் அப்பனே சொல்கின்றேன் அப்பனே!!! இளமையிலே தேடுங்கள் அப்பனே இறைவனை... அப்பனே நல் விதமாக... சென்றிட்டுவாருங்கள் ஆங்காங்கே அப்பனே!!!

கர்மம் ஒழியும் என்பேன் அப்பனே!!!

திருத்தலங்கள் எதற்காக???  எவையென்று கூற அப்பனே இன்னும் இன்னும் இன்னும் சூட்சமங்கள் மறைந்துள்ளன அப்பனே!!!

அவையெல்லாம் ஆனாலும் அப்பனே பின் திருத்தலத்திற்கு வந்து நல்லவையாக நடக்கட்டும் என்று கூட மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான். 

ஆனால் நீ அவ்வாறு செயல்பட்டால் தான் இறைவனும் கொடுப்பான் இறைவன் சில சோதனைகளையும் கொடுத்து.....

ஆனாலும் அப்பனே சாதாரணமாக யாங்கள் ஓர் திருத்தலத்தை உருவாக்கவில்லை!!!!

பலப்பல எதையென்று கூட எவ்வாறு சித்தர்கள் எதையென்று கூட பலப்பல ஜீவ சமாதிகளும் பலப் பல வழிகளிலும் ஏதேதோ எதையென்று பல பல மூலிகைகளைக்கொண்டும் எதையென்று கூற ஆனாலும் அவையெல்லாம் வைத்துத்தான் உருவாக்கியுள்ளோம்.!!

அதனால்தான் அப்பனே சில சில திருத்தலத்திற்கு சென்றால்... அப்பனே நலன்களே மிஞ்சும் என்பேன் அப்பனே.. எவையென்று கூற... 

ஆனால் கர்மா சுமந்தே செல்கின்றான் மனிதன்! அக் கர்மாவையும் எப்படி எத் திருத்தலத்திற்கு சென்றால் நலமாகும் என்பதைக் கூட வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!! 

இவையன்றி கூற அப்பனே பத்மநாபன் அப்பனே உயிரோட்டம் ஆகவே இருக்கின்றான்!!!! கேட்கும் வரத்தை அப்படியே தருவான்!!! ஆனாலும் அப்பனே எப்படி? போகவேண்டும் என்பதைக் கூட யான் சொல்லிவிட்டேன் அப்பனே... நல் விதமாக இன்னும் சொல்லிக் கொண்டே போவேன். அப்பனே!!!!

நல் விதமான வாக்குகள் ஆசிகள்!!! ஆசிகள் !!!உண்டு என்பேன்!!!! 

பின் மற்றொரு வாக்கிலும் ஒரு சித்தன் வந்து வாககுரைப்பான் !!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

பாலசுப்பிரமண்ய சுவாமி கோயில். எரித்தாவூர், பாலராமபுரம்.

எரித்தாவூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவில், பாலராமபுரம். பாலராமபுரம்-ஊரூட்டம்பலம் சாலை,  பாலராமபுரம், திருவனந்தபுரம் , கேரளா 695507.
போன் 0471 240 3388

அகத்தியர் இம்மலையில் முருகப்பெருமானை நினைந்து தவமியற்றினார் என்றும் அவர் வழிபட்ட இடமே இன்று முருகன் கோயிலாக எழுப்பப்பட்டுள்ளதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதேபோல், தாரகாசுரனால் அவதிப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களைக் காத்தருள வேண்டுமென முருகப்பெருமானிடம் முறையிட்டனர்.

அதற்கு செவிசாய்த்த முருகன் அசுரனை வதம் செய்தார். அந்த மகிழ்ச்சியினால், தேவர்களும், முனிவர்களும் இறைவனுக்கு இம்மலையில் கோயில் எழுப்பி விழா கொண்டாடினர் என்றும் கூறப்படுகின்றது.

மூன்றாவதாக, எருத்தாவூரைச் சேர்ந்த முருகன் அடியார் ஒருவர், தவறாமல் திருச்செந்தூர் சென்று அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்வது வழக்கம். முதுமை காரணமாக செல்ல முடியாமல் வருந்தினார். அவர் கனவில் தோன்றிய முருகன், "இம்மலையின் உச்சியில் நான் வாழ்ந்து வருகிறேன். என்னை இங்கேயே தரிசிக்கலாம்,' என்றார். இதையறிந்த ஊர்மக்கள் மலைமீதேறி முருகனைக்கண்டு மகிழ்ந்து, வழிபடத் தொடங்கினர் என்றும் கூறப்படுகின்றது.

கேரள பழனி: திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள எரித்தாவூர் மலை முருகன், பழனி மலையைப்போல உயரமான மலையில் அமைந்துள்ளது, வேண்டுதலுக்கு மொட்டை அடித்தல்,ஆயிரக்கணக்கானோர் காவடி எடுத்தல் போன்ற காரணங்களால், இத்தலத்தை கேரளாவின் பழனியாக இப்பகுதி பக்தர்கள் போற்றுகின்றனர்.

இதேபோல, திருச்சூர் மாவட்டம், புத்தூர், சேர்ப்பூர், இடுக்கி மாவட்டம், ஓலமட்டம், ஆலப்புழா மாவட்டம், ஹரிப்பாடு ஆகியத் தலங்களின் ஆலயங்களையும் மலையாளப் பழனியாக குறிப்பிடுகின்றனர்.

சுமார் 700அடி உயரத்தில், சுமார் 250 எளிதானப் படிகள் கொண்ட , பசுமையான மலையுச்சியில் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம், கிழக்கு நோக்கி கேரள பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.

கொடிமரம், பலிபீடம், மயில்வாகனத்தோடு கருவறை முன் மண்டபத்தைத் தாண்டியதும், முருகன் கருவறை காட்சி தருகின்றது.

பாலசுப்பிரமணியன், எளிய வடிவில் ஒளிவீசும் முகத்துடன், தண்டம் ஊன்றி காட்சி தருகின்றார். தீபஒளி வெள்ளத்தில் திருவுருவம் ஜொலிக்கின்றது.

கருவறையின் பிரகார சுற்றில், விநாயகர், அன்னை பார்வதி தேவி, பஞ்சலோக ஆறுகமுகப்பெருமான் சந்நிதிகளும். வெளிப் பிரகாரத்தில் நாகராஜன், நாகராணி, நாகக்கன்னிகள், நவகிரக சந்நிதிகளும்அமைந்துள்ளன.

வேண்டுதல்கள்: இத்தலத்து முருகன், பழனியைப் போலவே மொட்டை போடுதல், அங்கப்பிரதட்சனம், முழுக்காப்பு போன்றவற்றிற்கு புகழ்பெற்றதாகவிளங்குகின்றது.

இது தவிர, திருமணம்,குழந்தைப்பேறு, உள்ளிட்ட, வேண்டுதல்களுக்கும் கண்கண்ட தெய்வமாக திகழ்கின்றார். திருமண வரம், வேண்டுவோர் நான்கு சஷ்டிகளில், சிறப்பு அபிஷேகம், செவ்வாய்தோஷம் உள்ளவர்கள், ஏழு செவ்வாய்க் கிழமை களில் பத்ம அபிஷேகமும், ராகு, கேது, தோஷம் உள்ளவர்கள் 21 வெள்ளிகிழமைகள் பன்னீர் அபிஷேகம் செய்து வந்தால் அதற்குள்ளாகவே திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

விழாக்கள்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், சஷ்டி, விசாக நட்சத்திர நாட்களில் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், நடைபெறும்.

பெருவிழாவாக, பத்து நாள் தைப்பூச விழாவும், ஆறு நாள் கந்த சஷ்டியும் கொண்டாடப்படுகின்றன.

தைப்பூசத்தன்று, அடிவாரத்தில் உள்ள பாலராமபுரம் முத்தாளம்மன் கோயிலில் இருந்து, பால், சந்தனம், நீர், புஷ்பம் என பல்வேறு காவடிகளைத் தூக்கும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி, முருகனிடம் வந்து காவடிகளை சமர்ப்பித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். உருள்நேர்ச்சி எனும் அங்கப்பிரதட்சினம் செய்பவர்களும் உண்டு. இதேபோல, கந்த சஷ்டி விழா ஆறு நாட்கள் நடைபெறும். சூரசம்ஹாரம் கிடையாது.

தரிசன நேரம்: தினமும் காலை 05.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி, மாலை 05.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம்.

விசாகம், சஷ்டி மற்றும், வெள்ளிக்கிழமைகளில், பிற்பகல் 1.00 மணிவரை சுவாமி தரிசனம், செய்யலாம்.

அமைவிடம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில், திருவனந்தபுரம் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் திருவனந்தபுரத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில், பாலராமபுரம் ஜங்சனில் இறங்கி, காட்டகடா செல்லும் சாலையில் இரண்டு கி.மீ.தொலைவு சென்றதும் மலைப்பாதை தொடங்குகிறது.

மற்றொரு பழைய வழி, பாலராமபுரம் முன்பாக இரண்டு கி.மீ.முன்பாக முடவூர் பாலாவில் இறங்கி மலையேற வேண்டும். ஆனால், காட்டகடா அமைவிடம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில், திருவனந்தபுரம் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் திருவனந்தபுரத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில், பாலராமபுரம் ஜங்சனில் இறங்கி, காட்டகடா செல்லும் சாலையில் இரண்டு கி.மீ.தொலைவு சென்றதும் மலைப்பாதை தொடங்குகிறது.

மற்றொரு பழைய வழி, பாலராமபுரம் முன்பாக இரண்டு கி.மீ.முன்பாக முடவூர் பாலாவில் இறங்கி மலையேற வேண்டும். ஆனால், காட்டகடா பாதையே மலையேற எளிதானதாகும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

4 comments:

  1. அகத்தியனுக்கு நிகர் அகத்தியன் தான். அன்பு கருணை போன்றவற்றில்... கடை நாள் வரையிலும் அகத்தியணை மறவாதிரு மனமே என்று இறையை வேண்டி கொள்கிறேன்.

    ReplyDelete
  2. Om Muruga saranam. Shanmuga Saranam

    ReplyDelete
    Replies
    1. பத்மநாப சுவாமி இலுப்பை மரத்தில் ஆனது தீ பற்றி எரிந்த பின்னர் சாளகிராம கல் கொண்டு அமைத்து தற்போது வழிபாடு செய்யும் சிலை உள்ளதாக தினமலர் செய்தியில் உள்ளது. எது உண்மை. அகத்தியர் அய்யா வடிவமைத்த நாராயணன் சிலை என்ன ஆனது.ஏன் தீ பிடித்து எரிந்தது. கொஞ்சம் நாடியில் கேட்டு விளக்கம் சொல்லுங்கள்.

      Delete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete