​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 17 June 2022

சித்தன் அருள் - 1151 - அகத்தியர் விஜயம் - குருவுடன் இரு நாட்கள்!

​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நாடியில் அகத்தியர் வந்து உரைக்கின்ற விஷயங்கள், நிறைய பேருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கும். இருப்பினும், அடியேனை தனிப்பட்ட முறையில் சந்திக்கிறபொழுது, எப்படி நாடியில் இதெல்லாம் வருகிறது? எனக்கு மட்டும் தெரிந்த விஷயம் ஆயிற்றே என வினவுவார்கள். அனைவருக்கும் அடியேன் கூறுகிற பதில் ஒன்று தான்.

"நாம் மனிதர்களுக்கு, இந்த ஜென்மத்தின் நிகஷ்ச்சிகள் ஞாபகத்தில் நிற்கிற அளவுக்குத்தான் நடந்தது தெரியும். அவருக்கு, மனித ஆத்மாவின், எத்தனையோ ஜென்ம கர்மா வினைகள் தெரியும். ஆகவே, கர்மபாரத்தை கழித்திட எளிய வழியை கூறினால் அப்படியே செய்துவிடுங்கள். உங்கள் பிரச்சினைகளுக்கு அது தான் ஒரே வழி" என்பேன்.

சமீபத்தில், திரு.ஜானகி ராமன் நாடி வாசித்த பொழுது, ஒரு அடியவரின் பூர்வ ஜென்ம கர்மாவும், ஒன்றும் வேண்டாம் என அகத்தியப்பெருமானை தேடி பொதிகை சென்ற பொழுது அங்கு அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகளை, நாடியில் வந்து தெரிவித்தார். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என யோசிக்கிற ஒவ்வருவரும் பூர்வ கர்மா வினைகளை அகத்தியப்பெருமானிடம் கேட்டு தெரிந்து கொண்டால், நம்மிடமிருந்து மறைந்து நின்று அவர் நம்மை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

"எனக்கும் நாடி வாசியுங்கள்! என்று கேட்டுக்கொண்டு" ஒரு அகத்தியர் அடியவர் வந்தமர்ந்தார்.

அகத்தியப்பெருமான் உடனேயே நாடியில் வந்து  அவருக்கு வாக்களித்தார்.

"ஆதி பகவானை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். அப்பனே! நல் எண்ணங்கள் குறித்து நிற்க, கவலை இல்லை. அப்பனே எது அறியாது என்று கூறுவது? அப்பனே! ஒரு ஜென்மத்தில் என்னவென்று கூற என்னிடத்தில் வந்தாய். மனதை பக்குவப்படுத்தாமல், எதை எதையோ யோசித்து, அருகில் வந்து அமர்ந்து விட்டாய் பொதிகை தன்னில். இவை அறிந்து யானும் அனைத்தையும் அறிந்து, உன்னை தட்டி எழுப்பி ஏன் இங்கு அமர்ந்திருக்கின்றாய் என வினவ, நீயும்

வாழ்க்கை ஒன்றும் இல்லை, அனைத்தையும் அனுபவித்துவிட்டேன்! ஆனால், எப்படி கூற, பிறவியின் ரகசியத்தை என்னால் உணர முடியவில்லை, இதுதான் மானிடப் பிறப்பா என்று என்னிடத்தில் நீ கூறினாய்.

ஒன்றும் இல்லாததுதான் வாழ்க்கை அப்பா என்று யானும் கூற, நீயும் என்னுடைய பக்தனாகவே இருந்தாய். பலவழிகளிலும் என்னை வந்தடைந்தாய், ஆனாலும் அனைத்தையும் தெளிவு படித்துவிட்டேன் உந்தனுக்கு. ஆனாலும் சிறிது சிறிதாக செல்வங்கள் வந்து அடைந்துவிட்டது உந்தனுக்கு. ஆனாலும், சிறிது காலத்திற்கு என்னையும் மறந்துவிட்டாய். செல்வம் மிகுந்து காணப்பட்டது. ஆதலின் சில மருந்துகளையும் நீ செய்தாய். செல்வத்தை இன்னும் அடைய எண்ணி, பல முருந்துகளிலும், கலப்படம் செய்துவிட்டாய். பல கர்பிணி பெண்களும், என்னவென்று அறியாமலே அதை உண்டு விட்டனர், அதனால் பல பல குழந்தைகளும்........ என்னவென்று கூற, நீயும் செல்வத்தை பெருக்கிக்கொண்டாய்.

பணம் சேர்ந்து விட்டபின் அதை எப்படி செலவு செய்வது என்று கூட உந்தனுக்கு தெரியவில்லை. இதனால், செல்வத்தை சேர்த்துவைத்தாய், புண்ணியத்தை சேர்க்க மறந்துவிட்டாய். அந்த செல்வம் உன்னை பாதுகாக்கும் என்று நினைத்த உன்னையே நோய்கள் பற்றிவிட்டது. திரும்பவும் வந்தாய் என்னிடத்தில். தேடினாய். இவன் தேடட்டும் என்று விட்டுவிட்டேன். பின் எது என்று அமராமலேயே அங்கேயே (பொதிகையில்) அமர்ந்தாய்.

ஆனாலும் யானும் திரும்ப வந்தேன். வந்து, ஏன் அப்பா இப்படி அமர்ந்திருக்கின்றாயே என்று.

உம்மை பார்த்துவிட்ட பின் அனைத்தும் எந்தனுக்கு வந்துவிட்டது. எவை என்று கூறத்தெரியாமலேயே பணமு சேர்ந்துவிட்டது. ஆனால், எப்படி செலவு செய்வது என்று கூட எந்தனுக்கு தெரியவில்லை. மனமும் காயப்பட்டு நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்ந்து வருகின்றேன் என்று கூறி கண்ணீர் மல்கியது.

அதை எல்லாம் அனைவருக்கும் கொடுத்துவிடு, என்றேன். உடனே சென்று பலவகையான மனிதர்களுக்கும், அப்படியே பிரித்து கொடுத்தாய். ஆனாலும் உனக்கு வந்த நோய்கள், பாதிக்கப்பட்டவர்கள் இட்ட சாபம் அப்பனே, எதை என்று கூற?

ஆனாலும் திரும்பவும் வந்தாய். இப்பிறவியில் யான் செய்த தவறுகள், அதனால் தண்டனைகளுக்காக அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இது போன்ற பிறப்பு இத்துடன் முடிய போகின்றதா? இன்னும் பிறப்புக்கள் உண்டா? என்று நீயும் கேட்டாய்.

நிச்சயம் உண்டு என்று கூற,

அய்யய்யோ! என்று கூறி அழுதாய். புலம்பினாய். பிறவிகள் வேண்டாம். இப்பிறவியிலே அறியாமல் செய்த பாவங்கள் எது என்று கூற? பாவத்துக்கு ஏற்ப அனைத்தையும் கொடுத்துவிட்டேனே, மீண்டும் பிறப்பா, என்று நீ கூற,

தாய்மார்கள் இட்ட சாபம், பின் குழந்தைகளை அழித்த ப்ரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு, அதை அடுத்த ஜென்மத்தில் கழிக்க வேண்டும் என்று கூறினேன்.

அப்பனே, உன்னால், நிச்சயம் பிறவிக்கடலை நீந்திவிட முடியும் என்று கூற, அதை இப்பொழுதே தான் என்று நீயும் கூறிவிட,

இல்லை! இல்லை! பாபத்துக்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்! என்றேன்.

எப்படி என்னால் முடியும்? என்று நீயும், அழுதாய். கால்களையும் பிடித்துக் கொண்டாய், எந்தனுக்கு பிறவிகள் வேண்டாம் என்றாய்.

அப்பனே! நிச்சயம் பிறவிகள் உனக்கு உண்டு. ஆனாலும் யானே உன்னை காப்பேன்! என் அருகிலேயே வைத்துக் கொள்வேன் என்று யான் கூறினேன். ஆனாலும் நீயோ, அடுத்த பிறவி எங்கு பிறப்பேனோ என்று கூற,

இல்லையப்பா! அதுவே கடைசி பிறப்பு. யானே உன்னை அணைத்துக் கொள்வேன்! என்று கூற

இல்லை இல்லை! நீ சத்தியம் செய்து தான் என்று நீ கேட்க, யானும் சத்தியம் செய்து கொடுத்தேன். ஆனாலும் உந்தனுக்கு, அடுத்த பிறப்பில் என்ன வேண்டு என்று கேட்க, நீயும், எந்தனுக்கு ஏதும் தேவை இல்லை. யான் புண்ணியங்கள் செய்ய வேண்டும். அப்பனே! மனிதனாக பிறந்துவிட்டால், ஆசைகள் வந்து சேர்ந்து விடுமே! என்று கூற,

இல்லை எனக்கு எதுவும் தேவை இல்லை. உற்றார் உறவினர்கள் கூட, எவையும் தேவை இல்லை என்று நீதான் கூறிவிட்டாய் அப்பனே. ஆனாலும் யோசித்துக்கொள் அப்பனே என்று யானும் கூற,

இல்லை! எந்தனுக்கு ஏதும் தேவை இல்லை, நீ அருகில் இருந்தாலே போதுமானது. என்று நீயும் கேட்டாய். ஆனால் அப்பனே! இப்புவியில் வந்து பிறந்து விட்டாய், திருமணமே இல்லை, ஆயினும் திருமணமும் நடந்தது, எனது அருளால். ஆகவே, இதுதான் நீ கேட்டு வந்தது.

கேட்டு வந்தது வேறு,

(இப்பொழுது) கேட்பது வேறு! ஆனால், பல காலமாக உன்னை யான் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றேன். எதை செய்ய வேண்டுமோ, அதை செய்கிறேன். இதுவே கடை பிறப்பு. என்னையும் நீ பார்ப்பாய். அதனால், எக்குறைகளும் சொல்ல வேண்டாம் அப்பனே! புரிந்து கொண்டாயா!

என் அருகில் இருக்கும் பொழுது அனைத்தையும் கூறி, உன் தலையில் கூட குட்டினேன். யோசித்துப்பார், ஞாபகம் இருக்கின்றதா?

அனைத்தும் கூறிவிட்டேன்! அப்பனே! இனி என்ன வேண்டும் கூறு என்றார்.

நம்மாளுதான் நிறைய மனதை போட்டு குழப்பிக்கிறவராச்சே! ஜோதிடத்தை பற்றி கூறி வசமாக குருநாதரிடம் மாட்டிக்கொண்டார்.

"அய்யா! நான் ஜோசியம், ஜாதகம் பார்த்து சொல்கிறேன்! அது எப்படி போகும், நல்லபடியாக இருக்கணும்! என்றார்.

"ஓ! அப்படியா! ஜோதிஷம் பார்க்கிறாயா! சரி! நான் ஜோதிடத்தில் கேள்வி கேட்கிறேன். உனக்கு தெரிந்த பதிலை கூறு பார்க்கலாம்!" என்று தொடங்கினார்.

அந்த கேள்வி பதில் நேரம் மிக அருமையாக இருந்தது.

சித்தன் அருள்............... தொடரும்!

1 comment:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete