​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 21 December 2021

சித்தன் அருள் - 1058 - அன்புடன் அகத்தியர் - ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்!









6/12/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. 

வாக்குரைத்த ஸ்தலம்: ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்., கொத்தகுரிக்கி அருவிக்கரை, பண்டப்பள்ளி. கிருஷ்ணகிரி மாவட்டம்.

ஆதி பகவானின் பாதம் போற்றி போற்றியே பணிந்து உரைக்கின்றேன் அகத்தியன்.

அப்பனே அருள்கள் பலம் என்பேன்.

அப்பனே இவ் மனிதர்கள் இவ்வுலகத்தில் அப்பனே பக்தி என்பது தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் ஒன்றும் பயனில்லை அப்பனே.

நல் விதமாக இன்னும் பல பல ஆலயங்கள் அப்பனே புதைந்து நிற்கின்றது அப்பனே. தெரியாமலும் இருக்கின்றது.

அங்கெல்லாம் சென்று அப்பனே தரிசித்தால் அப்பனே ஈசனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பேன் அப்பனே.

நல் விதமாக அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் ஒரு சூட்சமத்தை!.

அப்பனே குலதெய்வத்தை தெரியாதவர்கள் அப்பனே இங்கு வந்து நல் விதமாக பின் வணங்கி வணங்கி வந்தால் அப்பனே சொப்பனத்திலே வரும் என்பேன் அப்பனே.

அப்போது தெரிந்து கொள்ளலாம் குலதெய்வத்தை.

அப்பனே எங்கு எங்கு செல்லலாம் என்று கூட அப்பனே நல்லவிதமாக சூட்சுமமாக சொல்கின்றேன்.

குலதெய்வத்தை தெரியாமல் இருப்பவர்கள் நிச்சயமாய் இங்கு வந்து அமர்ந்து தியானம் செய்து ஒரு மண்டலம் கழித்து சென்றால் சொப்பனத்தில் வரும் என்பேன் அப்பனே.

அப்பனே அவ் குலதெய்வங்களும் அவர் தம் கனவில் வந்து அப்பனே நல் விதமான ஆட்சிகள் செய்ய தூண்டும் என்பேன்.

இன்னும் அப்பனே உலகத்தில் பல மாற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே.

பல பல தீய பழக்கங்களும் மனிதர்களை ஆட்கொள்ளும் என்பேன்.

அப்பனே பலபல தீய வினைகளால் அப்பனே மனிதன் மனிதனாக செயல்பட மாட்டான் என்பேன்.

அப்பனே பக்தி என்பது ஒரு சாதாரண விஷயமே என்பதைப்போல் அப்பனே இறைவனே இல்லை இல்லை இல்லை என்றே கூறிவிட்டு பின் தன் சுயநலத்திற்காகவே வணங்கி வருவார்கள் என்பேன்.

இதனால் இவையெல்லாம் பக்திகள் இல்லை என்பேன்.

அப்பனே நல் விதமாக இன்னும் பல சூட்சமங்கள் உண்டு இவ்வுலகத்தில் அப்பனே.

மறைந்து கிடக்கும் பொருள்களெல்லாம் அப்பனே ஈசனே வெளிக்காட்டுவான் என்பேன்.

அங்கெல்லாம் சென்று தரிசித்தால் அப்பனே "நலமே...!!.

எண்ணற்ற கோடி பிறவியில் செய்த கர்மாக்கள் ஒழியும் என்பேன்.

இப்படித்தான் அப்பனே பல மனிதர்கள் அப்பனே பல நூற்றாண்டுகளுக்கு பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே அப்பனே வழிபட்டு வழிபட்டு  கர்மாக்களும் விலகி ஓடி பின் நல் மனதாய் வாழ்ந்து வந்தார்கள் அப்பனே.

அதனால் மனிதர்களோ சிலசில வினைகளால் அப்பனே சில அரசர்களோ! அப்பனே இவ்வாறு மக்கள் வாழ்ந்து தெளிவு பெற்று விட்டால்?  நம்தனக்கு (நமக்கு) மரியாதை போய்விடும் என்று எண்ணி அப்பனே அனைத்தும் (ஆலயங்களை) அழித்துவிட்டனர்.

இன்னும் பல திருத்தலங்கள் இருக்கின்றன அப்பனே.

ஒவ்வொன்றாக ஒவ்வொரு முறையும் கூறுகின்றேன் அப்பனே.

இவ்வாறு செல்லச் செல்ல அப்பனே ஆன்மா பலன்கள் அதிகரிக்கும் அப்பனே நல் விதமாக கர்மங்கள் தொலையும் அப்பனே உடலிலுள்ள தோஷங்கள் எல்லாம் நீங்கும் .

அப்பனே நல்விதமாக உடம்பு நல் குளிர்ச்சி பெற்று அப்பனே ஒரு அரசனைப் போன்று உடம்பு வலிமை பெறும் என்பேன்.

இதனால் அப்பனே இன்னும் பல திருத்தலங்கள் மறைந்து கிடக்கின்றது அப்பனே அவையெல்லாம் சொல்கின்றேன் வரும் காலங்களில் அப்பனே.

அங்கெல்லாம் சென்று அமர்ந்து வந்தால் போதுமானது அப்பனே.

தானாகவே ஓடிடும் கர்மாக்கள் அப்பனே.

அப்பனே இவையெல்லாம் மனிதர்களுக்கு! ஏன்? மூடன் என்பேன் மனிதனை.

அப்பனே எவ்வாறு என்று தெரியாமலே வாழ்ந்து வருகின்றான்.

அப்பனே தான் என்னும் எண்ணம் தான் நிறைவேறும் என்று கூட எண்ணி வருகின்றான்.

ஆனால் ஈசனும் நிச்சயமாய் அனைவரையும் தண்டிப்பான் என்பேன்.

தண்டித்துத்தான் திருத்துவான் என்பேன்.

இனிவரும் காலங்களில் கலியுகத்தில் அப்பனே கெட்டவைகளுக்கே அதிகம் மதிப்பு என்பேன்.

இதனால் அப்பனே நிச்சயமாய் ஈசனே வந்து மக்களை நல் விதமாக மாற்றி சிலசில வினைகளால் ஆட்பட வைத்து இறைவன் இருக்கின்றான் என்று உணர்த்துவான் என்பேன்.

இதற்கு யாங்களும் சாட்சியாக இருக்கின்றோம் அப்பனே.

அனைத்திலும் அப்பனே பொய்யே பொய்யே என்பேன் அப்பனே.

அப்பனே பக்தி என்பது பொய்யே அப்பனே.

அப்பனே எவ்வாறு என்பதை கூட யான் பக்தன் என்பான். அப்பனே ஆனால் அனைத்து வேலைகளும் செய்வான் அப்பனே.

அப்பனே இவ்வாறு செய்தால் அப்பனே எங்கு குடி கொள்ளுவான்??? இறைவன்!!!!.

அப்பனே இறைவன் இருக்கின்றான் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான். அப்பனே. 

பொய்யான உலகத்தில் அப்பனே நல் நிலையங்கள் இன்னும் இருக்கின்றது அப்பனே.

பல சித்தர்களும் யோகிகளும் தவம் செய்த இடத்திற்கு சென்றால் அப்பனே ஆன்மா பலம் மேலோங்கும் என்பேன்.

அப்பனே கர்மா பலன் நீங்கி நீங்கி அப்பனே நல்லொழுக்கத்துடன் வாழ்வார்கள் அப்பனே.

ஆனாலும் இவ்வுலகத்தில் எத்தனை ஞானியர்கள் வந்தாலும் எத்தனை சித்தர்கள் வந்தாலும் ஆனாலும் மனிதன் திருந்த போவதாக சரித்திரம் இல்லை என்பேன்.

ஆனாலும் அப்பனே யாங்கள் மனிதனுக்கு அடி பலமாக கொடுத்துத்தான் திருத்துவோம்  இனிமேலும் அப்பனே.

அப்பனே ஒவ்வொருவரும் அப்பனே ஒரு ஒரு கஷ்டத்தில் ஆழ்த்துவார்கள். ஆழ்த்துவோம் என்போம் யாங்கள்.

இதனால் அப்பனே எங்கள் வழியில் வந்தவர்கள் அப்பனே நிச்சயமாய் அப்பனே நல்வழிகளில் மீட்டு இன்னும் பல மனிதர்களுக்கு பல பல பல ஞானியர்கள் அருள்களுக்கும் அப்பனே இப்படித்தான் வாழவேண்டும் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்றெல்லாம் கூறிக் கொண்டே திருத்துவோம் என்போம் அப்பனே.

சித்தர்களும் புவியில் வந்துவிட்டார்கள் அப்பனே.

அப்பனே இங்கு மனிதனுக்கு ஆட்சிகள் இல்லை என்பேன்.

மதிப்பும் மரியாதையும் சில காலமே உண்டு என்பேன்.

இதனால் அவனுடைய சக்திகளும் மங்கி  ஓடும் என்பேன்.

இறைவன் பலமே அதிகரிக்கும் என்பேன்.

இறைவன் ஆட்சி பாருங்கள் அப்பனே எப்படி இருக்கின்றது என்பது.

ஈசனே ஈசனும் அப்பனே போனால் போகட்டும் என்று மனிதர்களை விட்டுவிட்டே கொண்டிருந்தான் கருணையோடு.

ஆனாலும் மனிதனின் செயல்கள் மீறிய செயல்கள் போய்க்கொண்டிருக்கிறது அப்பனே.

சிறிது காலத்திற்கு இப்படியே விட்டுவிட்டால் அப்பனே 

மனிதனே யான் தான் இறைவன் என்று சொல்லிவிடுவான் அப்பனே.

ஆனாலும் அப்பனே அதை யாங்கள் விடமாட்டோம் அப்பனே

நல் வழிக்காக அப்பனே பாடுபட்டு அப்பனே மனிதனை பின்  அடித்து பலமாக அடித்து அடித்து அப்பனே திருத்துவோம்.

அப்பனே இதனால் நிச்சயம் கஷ்டங்கள் வரும் கஷ்டங்கள் வரும் அப்பனே.

அப்பனே எவை என்று கூற நேர்மையான பாதையிலே சென்று இறைவனை வழிபட்டு அப்பனே மோட்சங்கள் பெறுவதற்கான வழிகள் அப்பனே நன்கு மூலமாகவே யான் தெரிவிக்கின்றேன் அப்பனே.

தானம் செய்யுங்கள் அன்னதானம் செய்யுங்கள் மறவாதே அப்பனே.

இயலாதவர்களுக்கு நல்லோர்களுக்கு செய்தால் நல்லோர்களுக்கு செய்யும் தானம் இறைவனுக்கே செய்யும் தானம் என்பேன்.

அப்பனே அதனையும் வரும் காலங்களில் யான் தெரிவிக்கின்றேன்.

யார்? யாருக்கு? தானம் செய்யவேண்டும்?  என்பதைக்கூட குறிக்கோளாகவே இருக்கின்றது அப்பனே.

ஏன் ஈசனே சில விளையாட்டுகளில் அப்பனே  கஷ்டத்தை கொடுப்பான்.

அப்பனே அவந்தனக்கு உதவிகரமாக சென்றால் அப்பனே அவ் பாவத்தை நீங்கள் சுமக்க வேண்டும் என்பேன் அதனால்தான் அப்பனே தர்மங்கள் கூட செய்வது எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும் என்பேன் அப்பனே.

அனைத்தும் இருந்தும் அப்பனே சில மனிதர்கள் ஒன்றுமில்லாமல் தெரிந்து கொண்டிருப்பார்கள் அப்பனே.                 அவந்தனக்கு உதவி செய்தால் பாவம் பற்றிக்கொள்ளும் அப்பனே.

இயலாதவர்க்கு பார்த்து உணவளிக்க வேண்டும் என்பேன்.

இயலாதவனையும் அப்பனே வருங்காலத்தில் சொல்கின்றேன் எப்படி எப்படி இருப்பான் என்று கூட.

அப்பனே நலமாகவே இவ்வுலகத்தில் அப்பனே எவை எவை என்று கூற இனிமேலும் அப்பனே அக்கிரமங்கள் அநியாயங்கள் ஓடோடி வரும் என்பேன் அப்பனே.

மனிதனை எவ்வாறு என்பதைக் கூட நேசிப்பது  தெரியாமல் அப்பனே அழிவுகளுக்காக வருகின்றது அப்பனே.

யாங்கள் இருக்கின்றோம் அப்பனே இத்தலத்தைப் பற்றியும் செப்பு கின்றோம் அப்பனே.

இங்கு மர்மமான சில சில முனிவர்கள் தவம் செய்து கொண்டிருக்கின்றனர் இப்பொழுதும் கூட.

அப்பனே பின் இவையன்றி கூற இங்கே ஆன்மா பலம் அதிகரிக்க அப்பனே தியானம் செய்தாலே போதுமானது அப்பனே.

நல் விதமாக பல பல முனிவர்களும் இங்கே சமாதி அடைந்து விட்டனர் அப்பனே.

இதனால்தான் அப்பனே இங்கு சுய விருப்பத்திற்காக பொழுது போக்கிற்காக வருபவர்கள் நிச்சயம் இவந்தன் (ஆதிலிங்கேஸ்வரர்) அடித்து கஷ்டங்களை ஏற்படுத்துவான் என்பேன்.

அதனால் அப்பனே அமைதியாக இருந்தாலே போதுமானது அப்பனே.

இதனடியில் சித்தர்களும் தவம் செய்திருக்க ஞானியர்களும் தவம் செய்திருக்க அப்பனே மென்மேலும் புகழ் உண்டு உயர்வுகள் உண்டு என்பேன் அப்பனே.

இத்தலத்திற்கு மிகச் சிறப்பாக உள்ளது அப்பனே.

இவ் அடியில் அப்பனே ஈசனுடைய லிங்கமும் அப்பனே நல்ல விதமாக பல தெய்வ அனுகிரகமான லிங்கங்களும் அமைந்துவிட்டது அப்பனே.

இதனால் அப்பனே மென்மேலும் அப்பனே இங்கும் உயரும் என்பேன் வரும் காலங்களில் அப்பனே.

நல் விதமாக அப்பனே இங்கு சக்திகள் உள்ளது அப்பனே.

பல சக்திகள் உள்ள இடத்திற்கு நாம் தன் சென்றால் தான் நமக்கும் அவ் சக்திகள் பலமாக கிடைக்கும் என்பேன் அப்பனே.

அதனால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமாக யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.

அதற்குச் சென்று கொண்டே இருங்கள் அப்பனே சக்திகள் பலமாகும் அனைத்தும் எளிதில் சாதித்துக் கொள்ளலாம் அப்பனே.

அப்பனே நல் விதமாக இன்னும் பல வருடங்களில் அப்பனே நல் விதமாக  இவையும் முன்னேற்றமடையும் என்பேன் அப்பனே.

நல் விதமாகவே தெய்வ சக்திகள் இங்கு அமைந்திருக்க அப்பனே இன்னும் இத் திருத்தலம் பல மாற்றங்கள் ஏற்பட நிச்சயம் வழி வகுக்கும்.

இறைவனை ஈசனே இத் திருத்தலத்திற்கு மென்மேலும் உயர்வுகள் கொடுப்பான் என்பேன் அப்பனே.

பொது வாக்கும் அடுத்த வாக்கும் பொதுவாகவே கூறுகின்றேன் அப்பனே.

அப்பனே நல்விதமாக என்னுடைய ஆசிகள் இன்றளவும் அப்பனே அப்பனே நல் விதமாக அவரவர் மனதிற்கு ஏற்ப தியானம் செய்து கொள்ள அப்பனே நலமே ஆகும் அப்பனே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

16 comments:

  1. தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
    கண்ணாரமுதக் கடலே போற்றி.
    சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

    ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சரணம்
    ஓம் அகதீசாய நம

    ReplyDelete
  2. Om Namahshivaya
    Om Namahshivaya
    Om Namahshivaya

    ReplyDelete
  3. ஐயா சித்தப்பா வருமையிலும். நேர்மையாக வாழும் ஏழைகளுக்கு வழிகாட்டு ஐயா அவர்கள் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து கொள்ள மிகவும் போராடுகிறார்கள் ஐயா அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய கருனைகாட்டப்பா அவர்களுக்கு கடைக்கண் பார்வை காட்டப்பா

    ReplyDelete
  4. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி.

    சில நாட்களாக தொடர்ந்து சித்தன் அருளில் வரும் குருநாதரின் வாக்கு மனதில் அமைதியைத் தருகிறது.

    என் அப்பனே நீங்களே எங்களை வழி நடத்த வேண்டும். தங்கள் திருப்பாதங்களில் விழுந்து சரணடைகிறேன். வழி காட்டுங்கள் ஐயனே.

    ReplyDelete
  5. அருமையான பதிவு. மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  6. ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  7. சென்னையில் இது போன்ற திருத்தங்கள் எங்கு உள்ளது ஐயா

    ReplyDelete
  8. இதனால்தான் அப்பனே இங்கு சுய விருப்பத்திற்காக பொழுது போக்கிற்காக வருபவர்கள் நிச்சயம் இவந்தன் (ஆதிலிங்கேஸ்வரர்) அடித்து கஷ்டங்களை ஏற்படுத்துவான் என்பேன்.

    ������

    எனது சிறிய அனுபவம் -

    இது போல் ஒரு பெரிய புண்ணிய திருத்தளத்திற்கு ஸ்தல பயணம் சென்றேன் .. ஆனால் பக்தியின்றி ஒரு சுற்றுலா செல்வது போல் எங்கள் பயணம் அமைந்தது..

    சென்று வந்த 2 நாள் கழித்து.. கனவில் சித்தர்கள், எனது தவறான, அறியாமை செயல் பாட்டுகளை எடுத்து காட்டி மிக தெளிவாக புரிய வைத்தார்கள்..

    கூடுமான வரை புராதன ஸ்தலங்களுக்கு செல்லும் போதாவது கேலிக்கயாக இல்லாமல்..

    அங்கு பல்வேறு தெய்வ சக்திகள் இருப்பதை உணர்ந்து கொண்டு பய பக்தியுடன் செல்ல வேண்டும் என்பது புரிந்தது..��

    ReplyDelete
  9. சர்வம் சிவார்ப்பணம்

    ReplyDelete
  10. பழமையான கோவில்களுக்கு செல்லும் போது காரில் இடம் இருக்கிறது.அதனால் யாராவது வறுமையில் உள்ளவர்களுக்கு உதவினமாதிரி இருக்கும். அவர்களை கோவில்களுக்கு கூட்டி சென்ற புண்ணியம் நமக்கு கிடைக்கும் என்று நினைத்து யாரையும் கூடவே கூட்டி கொண்டு செல்லாதீர்கள் . விளைவு பயங்கரமாக இருக்கும். அவர்கள் தோஷம் நம்மை சேர்த்து அழித்து விடும்.மீண்டும் அந்த கோவில் போக நாம் நினைத்தால் கூட போகமுடியாமல் போகும். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று அகத்தியர் கூறுவது உண்மை .

    ReplyDelete
  11. ஐயா இந்த கோவிலுக்கு பஸ் வசதி உள்ளதா எங்க இருந்து செல்ல வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. https://www.google.com/search?hl=en-IN&cs=0&cds=2&sxsrf=ATn3GzC4AWgNah5AWjodngzkSeUoV8gL9F:1638698356257&q=Kothagurikki+falls+%26+dam&ludocid=12955210878694392864&gsas=1&client=ms-android-xiaomi-rvo2&v=12.44.23.23.arm64&lsig=AB86z5V4y2uok8W6C7ZmC65iKpmP&kgs=738714f7cce54021&shndl=-1&source=sh/x/kp/local/4&entrypoint=sh/x/kp/local

      Delete
  12. temple located on bandapalli village hamlet in shoolagiri block in Krishnagiri district.its comes under ayarnapalli panchayat.
    It's located 34 KM towards west from district head quarters krishnagiri.14 KM from shoolagiri

    ReplyDelete
  13. Translation:
    https://drive.google.com/file/d/1F64fTzsniE2EJJHQ1SJlWBZtlUpBoikK/view?usp=sharing

    ReplyDelete