​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 10 December 2021

சித்தன் அருள் - 1050 - அன்புடன் அகத்தியர் - முக்திநாத்/பசுபதிநாத்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

உண்மையான பக்தியும் நம்பிக்கையும் தொண்டுகள் செய்யும் குணமும் நல் மனதும் இருந்தால் அவர்கள் எம்மை தேடி வரத் தேவையில்லை யாங்களே அவர்களைத் தேடிச் செல்வோம் நல் வாக்குகள் தந்து மேலும் உயர செய்வோம் என்று குருநாதர் அடிக்கடி உரைத்துக் கொண்டே இருக்கின்றார்.

அதன்படியே புண்ணிய ஷேத்திரம் ஆன முக்திநாத் ஆலயத்திலும் பசுபதிநாத் ஆலயத்திலும் காசியிலும் குருநாதர் கனிவுடன் கருணை செய்த நிகழ்வுகளை முதலில் பார்ப்போம்.

திரு ஜானகிராமன் ஐயா அவர்களை குருநாதர் பல புண்ணிய  திருத்தலங்களுக்கு அனுப்பி ஆலயத்தின் மகத்துவம் பற்றியும் மனிதர்கள் இனி எவ்வாறு நடந்து கொள்வது என்பதைப் பற்றியும் இறைவன் அருளை எவ்வாறு பெற வேண்டும் என்பதைப் பற்றியும் எடுத்துரைத்து கொண்டே வருகின்றார்.

புண்ணிய திருத்தல யாத்திரையில் அடியவர்களையும் குருநாதரே தேர்ந்தெடுத்து கலந்து கொள்ள செய்வார்.

இவை எல்லாமே குருநாதரின் அனுமதியோடு நடக்கும் நிகழ்வுகள்.

முக்திநாத் பயணத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக கொண்ட வயதான ஒரு வைணவ தம்பதியினர் தன் மகளுடன் முக்திநாத் ஆலயத்திற்கு வந்தனர்.

ஜானகிராமன் ஐயா அவர்களும் அடியவர்களும் முக்திநாத் ஆலயத்தில் தரிசனம் செய்து கொண்டிருந்த பொழுது தமிழில் பேசியதைக் கேட்ட அவர்கள் வந்து உரையாடினர்.

கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு இருந்த பொழுதும்  மூச்சுவிட சிரமப்பட்டாலும் நாராயணா நாராயணா என்று பக்தியுடன் வணங்கிவிட்டு உங்களிடம் விஷ்ணு சகஸ்கரநாமம் உள்ளதா என்று கேட்டனர்.

முக்திநாத் நேபாளத்தில் உள்ள காரணத்தினால் இந்திய செல்பேசி எண்கள் அங்கு தொடர்புகள் துண்டிக்கப்படும் இணையம் வழியாகவோ வேறு எந்த செயலி மூலமாகவோ   தொடர்பு கொள்ள முடியாது. 

இங்கே நேபாள நாட்டின் கைபேசி எண்களை புதிதாக வாங்கிக்கொண்டு வேண்டுமானால் உபயோகம் செய்ய முடியும்.

அந்த வயதான பெண்மணி சகஸ்கரநாமம் கேட்டபொழுது ஒரு அடியவர் கைபேசியில் பாடலாக விஷ்ணு சகஸ்ரநாமம் இருந்தது .

அதை ப்ளூடூத் மூலம் அந்த வயதான பெண்மணிக்கு அனுப்பி கொடுத்தவுடன் அந்த தள்ளாத வயதிலும் கடும் குளிரிலும் பனியிலும் முக்திநாத் ஆலயத்தைச் சுற்றி கிரிவலம் போல் செய்து கொண்டு விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டபடியே நாராயணா நாராயணா என்று உச்சரித்துக் கொண்டு வலம் வந்தார்.

முக்திநாத் ஆலயத்தில் கருவறையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் இருக்கும் நாராயணன் மடியில் ஜீவநாடியை வைத்து வணங்கி தீபாரதனை செய்து ஆலயத்திற்கு உள்ளேயே அமர்ந்து ஜீவநாடியை வாசித்த பொழுது கருணைக்கடல் அகத்தியர். வந்து வாக்குகளை தரத் தொடங்கினார் முதலில் அந்த வயதான பெண்மணியை அழைத்து அவர்களுக்கு தன் ஆசீர்வாதங்களை வழங்கி வாக்குகளை உரைத்தார்.

அம்மையே நாராயணன் லஷ்மி தேவியின் பரிபூரண ஆசிர்வாதம் பெற்றவர்கள் நீங்கள் அந்த நாராயணனே உங்களை காண அழைத்தான் என்பேன்.

நீ என்ன நினைத்துக்கொண்டு வந்தாயோ அது நிச்சயம் நாராயணன் நிறைவேற்றித் தருவான். 

உன் கணவன் நாராயணா உன்னை கண்ணார தரிசனம் செய்த பிறகுதான் எனக்கு முக்தி தர வேண்டும்.

அதுவரை உன் தரிசனம் நான் பெறும்வரை பிறவி எடுத்து கொண்டே இருப்பேன் என்று நாராயணனிடம் வேண்டிக்கொண்டு இந்த பிறப்பு எடுத்து வந்தான்.

இன்றளவும் நல் விதமாக நாராயணன் லட்சுமி தேவியின் அருளை நீங்கள் பெற்று விட்டீர்கள்.

உன் கணவனும் திருப்பதியிலே  அந்த நாராயணனின் தரிசனத்தை பெறுவான் அவனுக்கு முக்தி கிடைத்து விட்டது.

நீங்கள் செய்து வரும் சேவைகள் தானதர்மங்கள் பக்திகள் இறைவனிடம் உங்களை கொண்டு சேர்த்தது.

அம்மையே நீ விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டுக் கொண்டு சுற்றி வந்தாயே அப்பொழுதே உள்ளிருந்து நாராயணனும் லஷ்மி தேவியும் வெளியே வந்து ஆசிர்வாதம் தந்து விட்டார்கள்.

குறையொன்றுமில்லை அம்மையே என்று அந்த அம்மையாருக்கு கருணைக்கடல் அகத்தியர் காட்டிய அன்பைக் கண்டு அனைவரும் பரவசம் அடைந்து போனார்கள்.

அந்த வயதான பெண்மணிக்கும் அவருடைய கணவருக்கும் ஜீவ நாடி என்றால் என்னவென்று தெரியாது. அவர்களுக்கு அகத்தியர் உரைத்த ஜீவநாடி வாக்கைக் கேட்டு ஆனந்த கண்ணீர் விட்டு தரையில் விழுந்து சுவடியை வணங்கினர்.

ஜீவநாடி குறித்து கேள்வி படுவதும் ஜீவநாடி வாக்கை கேட்பதும் இதுவே முதல்முறை.

எங்களுக்கும் கருணையோடு அகத்தியர் வாக்குகளை தந்தார். என்று இனம் புரியாத சந்தோஷமும் பக்தியும் கலந்த உணர்வில் பரவசப்பட்டனர். 

மிக்க மகிழ்ச்சியுடன் வணங்கி விட்டு அவர்கள் சென்றனர்.

முக்திநாத் ஆலயத்தில் இருக்கும் பண்டிதருக்கும் வாக்குகள் தந்தார்.

அப்பனே நீயும் நாராயணனுக்காகவே பிறப்பெடுத்து வந்தவன் முற் பிறவியிலே இங்கேயே பிறந்து இந்த ஆலயத்தின் காவலாளி ஆகவே வாழ்ந்து வந்தாய் வெளியே இருந்து காவல் காத்துக் கொண்டே நாராயணா உன்னை நான் அருகிலிருந்து தரிசிக்க வேண்டும் உனக்கு சேவை செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டே இருந்தாய்.
 
அப்பனே அதனால் இந்தப் பிறவியில் உன்னை அவனுக்கே உன் விருப்பப்படி சேவை செய்யுமாறு பணித்துவிட்டான்.

அதன்படியே நீயும் அவனுக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் சேவைகள் செய்து கொண்டே வருகின்றாய்... 

நீ நல் மனதுடன் செய்துவரும் இந்த சேவையை அனுதினமும் நாராயணன் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறான். அதனால் குறை ஒன்றும் இல்லை உன் விருப்பப்படியே அனைத்தும் நடக்கும்.

இனி உனக்கு பிறவி வேண்டும் என்றாலும் வேண்டாம் என்றாலும் அந்த நாராயணன் கடைக் காலத்தில் உனக்கு தரிசனம் தருவான் அப்பொழுது நீயே உன் விருப்பப்படி பிறவிகள் அவனிடம் கேட்டு பெற்றுக் கொள்ளலாம் என்று அந்தப் பண்டிதருக்கு அருளாசி தந்து கருணையை வழங்கினார் அகத்தியர்.

அதன் பிறகு முக்திநாத் ஆலயத்தில் துப்புரவு பணி தொண்டாற்றி வரும் இரு பெண்மணிகளுக்கும் கருணையோடு வாக்குகள் தந்து ஆசீர்வாதம் செய்தார்  அகத்தியர்.

அவர்களே நீங்கள் இருவரும் லக்ஷ்மி தேவியின் தோழிகளாக பிறந்து அவளுடனேயே விளையாடித்.     திரிந்தவர்கள் நீங்கள் உங்களுக்கு ஒரு குறை ஒன்றும் வராது. அந்த லக்ஷ்மி தேவியே உங்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டு வருகின்றாள்.

இதனால் கவலைகள் இல்லை உங்களுக்கு இப்பிறப்பே கடை பிறப்பாகும் . குறைகள் இல்லை அனைத்தும் நிறைவேற்றி உங்கள் இருவரின் வாழ்க்கையையும் நலம்பெற செய்வான் இந்த நாராயணன் என்று அவர்களுக்கும் வாக்குரைத்து ஆசிர்வாதம் செய்தார் குரு அகத்தியர்.

பசுபதிநாத் ல் குருநாதர் அகத்தியரின் கருணை.

பசுபதிநாத் ஆலயத்தில் தரிசனம் செய்வதற்கு முன்பாக ஆலயத்தின் முன்பே ஜீவநாடியை வைத்து யாகம் வளர்த்து பூஜை செய்யப்பட்டது.

யாகம் ஆகுதி செய்யும் தருவாயில் கருடன் வந்து மும்முறை வானத்தில் வட்டமிட்டு சென்றது மிக ஆச்சரியமாக இருந்தது.

பசுபதிநாத் தரிசனம் கண்ட பிறகு ஆலயத்தின் வெளியே உள்ள ஒரு மண்டபத்தில் ஜீவநாடி சுவடியைப் பிரித்த பொழுது குருநாதர் அகத்தியர் வந்து வாக்குகள் உரைத்தார் பசுபதிநாத் ஆலயத்தின் மகத்துவத்தைப் பற்றி கூறினார்.

அப்பொழுது ஜீவநாடி படிக்க துவங்கிய நேரம் முதல் முடிக்கும் வரை ஒரு நேபாள நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஜீவநாடி வாசிப்பதையே பார்த்துக்கொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தார் குருநாதர் உரைத்த வாக்குகளை அடியவர் ஒருவர் மொழிபெயர்த்து கூறுவதையும் கேட்டுக்கொண்டே அதே இடத்தில் நின்று கொண்டு பார்த்துக்கொண்டே இருந்தார்.

பசுபதிநாத் ஆலயத்தை தரிசனம் செய்ய ஏராளமான தமிழக சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

அவர்களும் ஜீவநாடி வாசிப்பதை கண்டு கொண்டே குருநாதர் தமிழில் உரைப்பதை கேட்டுக்கொண்டே சென்றனரே தவிர யாரும் அருகில் வந்து குருநாதர் உபதேசத்தை கேட்க வில்லை . யாருக்கும் தோன்றவும் இல்லை.

ஆனால் இந்த நேபாள நாட்டை சேர்ந்த சிறுமியோ கடைசி வரை நின்று கொண்ட இருந்ததைப் பார்த்த குருநாதர் அகத்தியர் அந்த சிறுமியையும் அழைத்து வாக்குகள் தந்தருளினார்.

நேபாள் நாட்டில் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து பசுபதி நாதனை தரிசிக்க வந்த அந்த சிறுமிக்கு திரும்பிச் செல்ல போதுமான நிதி அவரிடம் இல்லை செய்வதறியாது நின்றுகொண்டு தவித்த பொழுதுதான் அந்த இடத்தில் குருநாதர் வாக்குகள் அந்த சிறுமிக்கு தந்து ஆசீர்வாதம் செய்து அந்த சிறுமி தனது கிராமத்திற்கு செல்ல நிதியுதவி அனைவரையும் செய்ய வைத்தார் அந்த சிறுமியும் ஆனந்தக் கண்ணீருடன் தேவைக்கதிகமான நிதியும் கிடைத்துவிட்டது இனி நான் என் சொந்த ஊருக்கு செல்வேன் என்று பசுபதி நாதனுக்கும் குரு அகத்தியருக்கும் மனமார்ந்த நன்றி என்று மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் சென்றார்.

இதேபோல் காசி காலபைரவர் சன்னதியிலும் குருநாதர் தன் கருணையை காட்டினார் .

கால பைரவர் சன்னதியின் பின்புறம் இருக்கும் மண்டபத்தில் வாக்குகளும் உரைத்துக் கொண்டிருந்த பொழுது என்னவென்று தெரியாமலே அங்கே ஒரு சிறு கூட்டம் கூடியது.

கோயிலுக்கு உள்ளே தரிசனம் செய்து சுற்றிவந்த ஆந்திராவைச் சேர்ந்த ஏழை பெண் பக்தை ஜீவநாடி வாசிக்கும் இடத்தில் வந்து நின்று கேட்டுக் கொண்டே இருந்துவிட்டு அருகில் வந்தார் அப்பொழுது சுற்றியிருந்த கூட்டம் அவரை விரட்டி விட்டது.

 வருத்தத்துடன் சென்ற அந்தப் பெண்மணியை குருநாதர் அகத்தியர் வாக்குகள் உரைப்பதை நிறுத்திவிட்டு அந்தப் பெண்மணியை இவ்விடத்திற்கு அழைத்து வரச்சொல் என்று கடுமையாக கூறினார்.

அந்தப் பெண்மணியும் பவ்யமாக வந்து நின்றார் குருநாதர் அம்மையே பார்வதி தேவியின் பரிபூரண அருள் பெற்றவள் நீ உன் வாக்கு விரைவில் பலிதமாகும்.

நீயும் பார்வதி தேவியின் அருளால் அனைவருக்கும் உபதேசங்கள் செய்து நல்வழிப்படுத்துவாய் உன் நாவில் பார்வதிதேவி இருந்து வாக்குகள் தருவாள்.

உன் வாழ்வில் இனி கவலைகள் இல்லை என்னுடைய ஆசீர்வாதங்கள் என்று குருநாதர் வாக்குகள் அருளினார்.

விரட்டி விட்டார்களே என்று மன சங்கடத்துடன் சென்ற அந்த ஏழை பெண்மணியையும் அழைத்து வாக்குகள் தந்து மனமகிழ்ச்சியுடன் அந்த பெண்மணியை அனுப்பி வைத்தார் .

குருநாதரின் கருணைக்கு எல்லையே கிடையாது இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்த நிகழ்வுகளிலிருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால் உண்மையான பக்தியும் பரிபூரண இறை நம்பிக்கையும் நல்ல எண்ணங்களும் இருந்தால் நாங்களே அவர்களைத் தேடி சென்று நல்வழிப்படுத்துவோம் என்ற குருநாதரின் வாக்கு நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

கடந்த மாதம் பௌர்ணமி அன்று காசி கங்கைக் கரையில் ஒரு ஏழை படகோட்டி அவருடைய மகளின் திருமணத்திற்காக அந்த இடத்திலேயே நிதி உதவி செய்ய வைத்த குரு அகத்தியர் நல் மனிதர்கள் மேலும் உதவுவார்கள் என்று கூறியிருந்தார் அதன்படியே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒரு அகத்தியர் அடியவர் ஒரு குறிப்பிட்ட பெருந்தொகையை கொடுத்து உதவியுள்ளார் மேலும் சில அகத்தியர் அடியவர்கள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் உதவிக் கொண்டே இருக்கின்றனர் இவையெல்லாம் குருவின் கருணை குருவின் கருணையால் நற்செயல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

அனைவரும் இதை உணர்ந்து குருநாதரின் உபதேசங்களை கேட்டு அதன் வழியே சென்று அவரின் கருணையை பெற்று நல்வழியில் செல்வோம்.

15/11/2021 அன்று குருநாதர் அகத்தியர் மற்றும் பிருகு மகரிஷி உரைத்த பொது வாக்கு

வாக்குரைத்த ஸ்தலம் முக்திநாத். நேபாள தேசம். 

ஆதி ஈசனின் பொற்பாதம் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே யான் கூட இப்போது இங்கே இருக்கின்றேன்.

அனைவருக்கும் என்னுடைய ஆசீர்வாதங்கள்

யானும் உடன் வந்தேனப்பா .... இவ் இடம் பிருகுனவனின் (பிருகுமகரிஷியின் ஸ்தலம்) இடம் இனி அவனே வந்து வாக்குகள் உரைப்பான் இனிமேலும்.

பிருகுமகரிஷி வாக்கு 

யானும் கூட இப்பொழுது இங்கு இருக்கின்றேன் என் அப்பன்களே  

ஆனாலும் தெரிவதில்லை நாராயணனை அலைந்து திரிந்து ஓடோடி பார்த்தால் தான் கர்மங்கள் நீங்கும் ஆனால் இது மனிதர்களுக்கு தெரிவதே இல்லை.

சித்தர்கள் மனிதர்களை இனிமேலும் முட்டாள் முட்டாள் என்று தான் அழைப்பார்கள் இனிமேலும் கூட.

மனிதன் வாழத் தெரியாதவன் .

ஏன்???

 அங்கங்கே இருக்கும் திருத்தலங்களுக்கு ஏன் நாடவில்லை???

எதனால் என்பது கூட தெரிந்து கொள்ளுங்கள்.

கர்மா புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல விடாது என்பேன்.

பின் கர்மா இதனையும் அறிந்து பின் இறைவனை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்து விட்டால் அக் கர்மாக்களை இறைவன் ஏற்றுக்கொள்வான்.

அவர்களுக்கு நல்நேரம் இறைவனே கொடுப்பான்.

ஆனாலும் கர்மா விதிப்படி பின் கர்மா கர்மா என்றெல்லாம் இருக்கின்றார்களே மனிதர்கள் பின் எப்படி செல்லும்??

உதவும் குணம் இல்லை

தவறான எண்ணங்கள், போட்டி பொறாமைகள் இதுதான் மனிதனிடம் மிஞ்சி காணப்படுகின்றது.

இவ்வாறு இருக்க மனிதன் எவ்வாறு? நலமாக வாழ்வான்?

இன்றளவும் எதனையும் என்று கூற பெருமாளுக்கு பிடித்த தினமான இன்று இங்கேயே தவழ்கின்றான் பெருமாளும். நல் ஆசிகளுடன்.

யானும் இங்கிருந்தே என் பிள்ளையை(லக்ஷ்மிதேவி) யானே வளர்த்தேன்.

என் பிள்ளை இங்கே தான் குடி கொண்டு இருப்பாள்.

என் பிள்ளை இங்கேயேதான் விளையாடினாள் அதனால்தான் என் மகளே இங்கே சக்தி வாய்ந்தவள் அதன் பின்புதான் பெருமாள் என்பேன்.

இதனையும் அறிந்து எதனையும் அறிந்து மனிதர்கள் இவையன்றி கூட விஷ்ணு ஆலயம் என்கின்றார்களே இதனை சிவன் ஆலயம் என்பேன் யான். 

இதனையும் அறிந்து அவள்தன் பல மனிதர்கள் கஷ்டங்கள் கஷ்டங்கள் பணத்தேவைகள் இல்லை இல்லை என்ற பூர்த்திகள் ஆகவில்லை என்று புலம்பிக் கொண்டு இருக்கின்றார்கள் ஆனாலும் இங்கு வந்து நிச்சயம் பெருமானை வணங்க அனைத்து தெய்வங்களையும் வணங்கியது போல் ஆகிவிடும்.

இதனால்தான் இதற்கு தகுந்தாற்போல் முக்தி நிலை என்ற நிலையை ஏற்ப முக்திநாத் என்றே அழைக்கப்படுகின்றது.

அழைத்து வருகின்றார்கள் என்பதைவிட ஓதுவது சிறப்பு என்பதை பன்மடங்காக கொள்ளுதல் இங்கே ஹரியும் சிவனும் ஒன்றே.

இங்கே ஹரியும் சிவனும் ஒன்றே.

ஓடோடி வந்து இங்கே என் பிள்ளையை பார்த்தாலே போதுமானது பணத்தேவைகள் நீங்கிவிடும்.

ஆனாலும் மக்களே பணம் பணம் எங்கெங்கோ ஓடுகின்றார்கள் ஆனாலும் அவை எல்லாம் அழியக்கூடியது என்பதை தெரிந்து கொள்ளவில்லை.

என் மகளின் அருளைப் பெற்றுவிட்டால் நிச்சயம் நிச்சயம் சக்தி வாய்ந்த பதவிகள் ஏற்பட்டு எப்போதும் கூட வந்து கொண்டே இருக்கும் எப்போதும் கூட வந்து கொண்டே இருக்கும் ஊற்று நீரைப் போல.

ஆனாலும் இவள்தன் எதனை என்று குறிப்பிட்ட பெருமாளுடைய அருளும் ஈசனுடைய அனுகிரகம் இல்லாமல் இங்கு ஒருவரையும் அனுமதிக்க மாட்டாள் அவள்.  என் பிள்ளை லக்ஷ்மி.

என்னுடைய பிள்ளை இங்கே தான் உறங்குவாள். அப்படியிருக்க எங்கே இருப்பாள்??!!!!

பணம் பணம் என்று ஓடுகின்றீர்களே!!!

மாய நிலையில் ஏற்பட்டு தான் இங்கே தான் நிலையான லக்ஷ்மி இங்கேயேதான் குடி கொண்டு இருக்கின்றாள் என்பது மெய்.

அவள் இங்கேயேதான் தங்கி இருக்கின்றாள். 

என் மகள் லட்சுமியின் அருள் இருந்தால் மட்டும் போதுமானது நீங்கள் பணத்தைத் தேடி தேடி ஓடி ஓடி போக தேவையில்லை. வரும் என்பேன் உங்களை தேடி.

அதுவும் பல புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும் இங்கு வருவதற்கும்.

ஆனாலும் என் பிள்ளை லட்சுமியே இங்கு மனம் வைத்து அனுமதி தந்து வர வைத்தால் தான் உண்டு என்பேன்.

இங்கு வந்திருக்கும் அனைவரும் புண்ணியம் செய்தவர்களே.

இவையன்றி கூற இதனையும் என்றுகூட பணம் பணம் என்று ஓடுகின்றார்கள் எதனை என்று மக்கள் இனிமேலும் கலியுகத்தில் இவ்வாறுதான் ஓடுவார்கள் ஆனாலும் பணம் எதை என்று கூற இத்தேவியின் அருள் இருந்தால் மட்டுமே நிற்கும்.

ஆனாலும் எவை என்று கூற மனிதர்கள் தெரியாமல் அலைந்து திரிந்து கடைசியில் எல்லாம் விட்டு விடுகின்றனர் அதனால் என்ன பயன்???

என்னுடைய மகளின் அருள் ஆசி இல்லாமல் நிச்சயம் எதுவும் தங்காது என்பேன்.

சில மனிதர்களுக்கு யான் சொல்லிக்கொண்டு சொல்லிக்கொண்டே இருப்பேன் இதனால்தான் இனிமேலும் எவ்வாறு எதனை என்று முன்னிறுத்தி சொல்லும் பொழுதும் இல்லை.

 இவ்வுலகத்தில் எவ்வாறு என்பதையும் கூட

பணத்திற்காக ஏதேதோ பரிகாரங்கள் அவையெல்லாம் பொய்.

என்னுடைய ஆசிகள் ஆசிகளுடன் என் மகள் லக்ஷ்மி நிச்சயம் பின் இங்கே அழைத்தால் அவர்களுக்கு பின் வற்றாத ஜீவநதியாக இருக்கும் பணங்கள்.

இதைத்தான் உணர ஆசிகள் தந்துவிட்டாள் என் மகள் இங்கேயேதான் விளையாடுவாள் இங்கேதான் தங்கி இருப்பாள் .அப்போது லக்ஷ்மி இங்கே தங்கி இருக்கும் பொழுது மனிதர்களிடம் பணம் இருக்குமா என்ன???!!

இனிமேலும் மனிதர்களிடையே பெரும் பணத்தை என்மகள் ஈர்த்து அனைவருக்கும் வாரி வழங்குவாள்.

என் பிள்ளை லட்சுமி தேவியை யான் செல்லமான பிரியமான பிள்ளையாக வளர்த்து விட்டேன் அதனால் தான் அவள்தனும் இன்னுமும் விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்து வருகிறாள்.

ஆனாலும் அவளை நம்பி ஓடோடி வந்துவிட்டாள் சிறிது யோசிப்பாள். 

யோசித்து விளையாட்டாக போனால் போகட்டும் விடு என்று சொல்லிவிட்டால் போதும் கோடிக்கணக்கில் குவியும்.

அவள் எப்பொழுதும் விளையாட்டாகவே சிறுபிள்ளைதனமாகவே தவழ்கின்றாள். 

பின் இவை எதனையும் எவ்வாறு நின்றெழும்புவது என்பதையும் கூட நாராயணனும் பின் லட்சுமி தேவியும் நல்அருள்கள்.

 நல் அருள்கள் உண்டு என்பேன்.

இவ் ஆலயத்தில் பல சூட்சுமங்கள் உண்டு என்பேன்.

சாதாரண மலை இவை இல்லை இதன் அடியில் பல வைரங்கள் குவிந்து இருக்கின்றது.

தங்கங்களும் வைரங்களும் இருக்கின்றது.

இவைதன் இங்கே வர நவக்கிரகங்களும் மகிழ்ந்து அனைத்தும் கொடுத்து விடும்.  ஆனால் அதனை பாதுகாக்க நீங்கள் தான் தெரிந்திருக்க கொள்ளவில்லை.

அகத்தியன் ஒருவன் போதும் இந்த உலகத்தில் அனைத்தும் செய்ய.

உலகை ஆளப் போகிறான் என்பதைவிட

ஈசனும்
அகத்தியா !!
உன் இஷ்டம் போல் இவ்வுலகத்தை நடத்து என்று பாதியை அவந்தனக்கும் கொடுத்து விட்டான் ஈசனார். 

அதனால் இனிமேலும் பின் அகத்தியன் படைப்புகளை பெற்று நல் மனிதர்களை பிறக்க வைப்பான் என்பேன்.

ஆனாலும் கலியுகத்தில் நல்லோர்கள் இல்லை என்று அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான் அகத்தியன் பாவம் என்பேன்  யான். 

இனிமேலும் கலியுகத்தில் எங்கள் அருளைப் பெற்றவர்கள் தான் பிறப்பார்கள். பிறப்பார்கள் பிறப்பளிப்போம் என்போம்.

நவகிரகங்கள் எங்கெங்கே இருக்கின்றது? எப்படி இருந்தால் இவ்வுலகத்தில் ஆளலாம் என்பதை கூட யாங்கள் நிச்சயமாய் கணித்தே பிறக்க வைப்போம்.

மனிதனை நம்பி நம்பி பிரயோஜனம் இல்லை.

இனிமேலும் சொல்கின்றேன் இவைதன் நிற்க பின் இவைதன் உணர அவந்தனே உலகத்தை ஆட்சி செய்வான் .

ஆட்சி செய்வான் என்பதைவிட நல்லோர்கள் பிறக்க வழிவகுப்பது அவன் சொல்லை பலிப்பது என்று எவை என்று சனியவனும்
 குரு அவனும்
கேது அவனும்
ராகு அவனும்
உச்சம் அதாவது சக்தி அடைய இவர்களே நியாயமானவர்கள். 

இவர்கள் இடத்திலேயே சித்தர்கள் பேசுவார்கள் என்பேன்.

அதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மக்களே. 

ஆனாலும் இவையன்றி கூட இனிமேலும் சனி அவனின் ஆட்டம் தொடங்கும் என்பேன் நிச்சயம் அவ்வாறு எவ்வாறு என்பதை கூட சித்தர்களும் ஏன் இறைவனும் மனிதர்களை திருந்துவார்கள் திருந்துவார்கள் என்று நினைத்துப் பார்த்தார்கள். மனிதன் திருந்துவதாக இல்லை சனியவன் நிச்சயம் தண்டனை கொடுப்பான் தண்டனை கொடுப்பான்.

ஈசனாரும்(ஈசன்) இவையன்றி கூற சனியவனை அழைத்து யான் பட்டத்தை உந்தனுக்கே கொடுத்தேன் ஆனாலும் இனிமேல் நீ மனிதர்களை தண்டிக்க வேண்டும் நிச்சயமாய் என்று ஈசனும் கூறிவிட்டான்.

நிச்சயமாய் இவ்வுலகத்தை மாற்றுவார்கள் மாற்றுவார்கள் என்பதைவிட 

சித்தர்கள் யாங்கள் நினைத்த நொடி பொழுதில் மாற்றி விடுவோம் ஆனாலும் மனிதர்கள் அதற்கு தகுந்ததாக இல்லை இல்லை என்பதைப் போல் உணர்ந்து இனிமேலும் மாற்றங்கள் இனி பலமாகவே இருக்கும்.

பின் கஷ்டங்களை கொடுத்துத்தான் மனதை மாற்றி இறை வழியில் செல்ல வைப்பான் ஈசனார்.

இவ்வாறே விட்டுவிட்டு வந்தால் மனிதன் யான் தான் பெரியவன் யான்தான் இறைவன் என்ற நிலைமைக்கு வந்து விடுவான் இக்கலியுகத்தில்.

அதனால்தான் இறைவனே நிச்சயமாய் தண்டனைகள் கொடுப்பான் என்பது மெய்.

என் பிள்ளை லட்சுமி தேவிக்கும் யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் கலியுகத்தில் நீ விளையாட்டாகவே இருக்காதே.

அனைவரிடத்திலும் இவ்வாறு ஏழ்மையாக வே இருக்கின்றது. 

பெரும்பெரும் கெட்டவன் இடத்திலே அதிகம் பணம் தங்கியுள்ளது அதனால் அவற்றை எல்லாம் ஈர்த்து நல்லோர்கள் இடத்தில் பக்தி உள்ளவர்கள் இடத்தில் கொடு என்று கூட நான் இனிமேலும் என் பிள்ளைக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.

யோசித்துப்பாருங்கள் ஆனாலும் இதனிடையே கெட்டதை செய்பவர்களிடம் கெட்டதை செய்து செய்து தங்கி இருப்பவர்களிடம் என் பிள்ளை ஈர்த்து இனிமேலும் எதனையும் என்று கூற மிச்சம் வைக்க மாட்டாள் அவள் தன் சொத்தை.

நிறைந்திருக்கின்றது. நல் முறையாய் அகத்தியன் வந்து வாக்குகள் உரைப்பான்.

அகத்தியர் வாக்கு:- 

நல் பிள்ளையாக இருந்து கொண்டு இந்த உலகத்தில் நன்மைகளை செய்யுங்கள் நன்மைகள் செய்தால் நிச்சயம் என் அருள் கட்டாயம் கடை நாள் வரை கிடைக்கும் கிடைக்கும் என்பது உண்மை.

அதைத் தவிர்த்துவிட்டு எதை எதையோ செய்து கொண்டிருந்தால் நிச்சயம் என் அருள் கிட்டாது.

அகத்தியனே அகத்தியனே என்றாலும் யான் நிச்சயமாய் வரமாட்டேன் இது அனைவருக்கும் பொருந்தும் என்பேன்.

இதனையும் அறிந்து பிருகுனவன் (பிருகுமகரிஷி) உரைப்பான்

பிருகுரிஷி வாக்கு:-

நல்லெண்ணத்தோடு நல் உயர்வான எண்ணங்களை இனிமேலும் வளர்ப்பாள் என் மகள்.

இனிமேலும் இவ்வுலகத்தில் பல மாற்றங்கள் வரப்போகின்றது.

இவ்வுலகத்தில் பல பல விதமான மாற்றங்கள் ஒழுக்கங்கள் கெட்டது.

ஆனாலும் கலியுகத்தில் இனிமேலும் சொல்வோம் நல் மனிதர்களை நாங்கள் இனி பிறக்க வைப்போம் இறை அருளால் நிச்சயம் நலமே உண்டு நலமே உண்டு.

அடுத்த வாக்கும் ஓர் சரியான திருத்தலத்தில் என் மகளோடு வந்து செப்புகின்றேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................. தொடரும்!

8 comments:

  1. AAHA ARPUTHAM APPA.THIRUVADI SHARANAM GURUVADI SHARANAM

    ReplyDelete
  2. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA


    ReplyDelete
  3. அருமை நீண்ட இடைவெளிக்கு பிறகு சித்தர்கள் வாக்கு கிடைத்தது. நல்லவர்கள் கையில் இந்த உலகம் ஒப்படைக்க பட வேண்டும். நல்லோர் ஆள வழி வகை செய்ய வேண்டும். அகதியனே சரணம்.

    ReplyDelete
  4. ஐயனின் இந்த அருள் வாக்கை படிக்க வே புண்ணியம் செய்திருக்க வேண்டும் அருமை அருமை ஓம் அகத்தியர் போற்றி

    ReplyDelete
  5. ஓம் அன்னை லோபமுத்திரை அப்பன் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  6. இருக்க இடம் கூட இல்லாமல் அப்படியே இருந்தாலும் வாடகைவாடகை என்று உழைத்த பணத்தை இழந்து தவிக்கும் ஏழைகளுக்கு அன்னை அருள்புரி தாயே பணம் இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் தாயே

    ReplyDelete
  7. English or hindi translation please🙏

    ReplyDelete
  8. Translation:
    https://drive.google.com/file/d/1jqUJ5ipIteF5LT-cEdDOkatMTRHvC_4m/view?usp=sharing

    ReplyDelete