​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 26 August 2021

சித்தன் அருள் - 1028 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!
24/8/2021 அன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் பற்றிய குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

ஆதி சித்தனை மனதில் தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்!

நல் முறையாக இவ்வாலயத்தில் பலப்பல சித்துக்கள் செய்தனர் முன் ஜென்மமதிலே முன் ஜென்மம் அதில் சித்திக்கள் செய்யும்பொழுது பின் ராஜராஜ சோழன் பின் பின் ராஜாங்கத்தை ஆள நினைக்கும் பொழுது தோல்வியுற்றான் என்பேன். ஆனாலும் அவன்தனை(ராஜ ராஜ சோழன்) கொல்ல மக்கள் பலப்பல வழிகளில் இருந்தார்கள் என்பேன். ஆனாலும் அதனைப் பின் நினைக்காமல் அங்கிருந்து இங்கு ஓடோடி வந்தான் ஆனாலும் இங்கு வந்து தவம் மேற்கொண்டான் என்பேன். 

மேற்கொள்ள மேற்கொள்ள பின் அவன்தனக்கு சக்திகளும் கிடைத்தது என்பேன்.

கிடைத்தது என்பேன் அதனால் மென்மேலும் மேலும் உயர்கின்ற அளவிற்கு எவ்வளவு உயரங்கள் உயர வேண்டுமோ பின் நல் முறைகள் ஆகவே பின் பயந்து ஒளிந்து தவத்தை மேற்கொண்டான் ராஜராஜ சோழன்.

ஆனாலும் நல் முறைகளாக இறைவனே நேரடியாக அவன்தனக்கு காட்சி தந்த இடம் இவ்விடம் .

ஆனாலும் இவை என்று யாருக்கும் தெரியாத சூட்சுமத்தை இப்பொழுது செப்புகின்றேன்.

இங்கு ராஜராஜசோழனின் பின் நல் முறைகளாகவே பின் கருவூராரும் வந்து இங்கு நல் முறைகள் ஆகவே வாழ்ந்து வந்தான் என்பேன்.

பலகோடி நூற்றாண்டுகளில் எவ்வாறு என்பதையும் மெய்சிலிர்த்து நல் முறையாக நல் முறைகள் ஆகவே பலருக்கும் தெரியாத விஷயம் இங்கே இப்பொழுதும் கூட கருவூராரும் வலம் வந்து தான்     கொண்டிருக்கின்றான்.

ஆனாலும் இதைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை என்பேன். இத்தலத்தை பற்றியும் தெரியாமல் போனது . ஆனாலும் பலப்பல யுகங்களில் வாழ்ந்த பெரிய பெரிய அரசர்களும் இங்கு வந்து வழிபட்டு சென்றிருக்கின்றனர் என்பேன்.

நல் முறைகளாக பல சித்தர்களும்   ரிஷிமார்களும் இங்கு வந்து நல் முறைகள் ஆகவே தங்கி பலபல வித்தைகளும் இப்பொழுது கூட பின் எவ்வாறு நலன்கள் ஏற்பட இப்பூமி ஒரு மலைப்பிரதேச பூமி என்பேன்.

நல் முறைகள் ஆகவே இப்பொழுதும் இதனடியில் பலப்பல உண்மைகள் தெரிவதற்கும் எவ்வாறு என்பதை உணர்ந்து பல பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் பாம்புகளும் உலா வந்து கொண்டுதான் இருக்கின்றது.

இதனால் சக்தி வாய்ந்த இத்திருத்தலத்தை  யாருக்கும் தெரியாமல் போனது.

இங்கு வந்து அமர்ந்து தியானங்கள் செய்துவிட்டால் நினைத்ததை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பேன்.

நல் முறைகள் ஆகவே இங்கு அமர்ந்து நல் முறைகள் ஆகவே தியானங்கள் செய்ய இறைவன் தோன்றி முன்னாளில் எவ்வாறு என்பதை நினைக்கும் பொழுது பின்பும் இப்பொழுது பின் தஞ்சை கோயில் திருத்தலத்தைப் பற்றி உண்மைகளாக எடுத்துரைக்க என்பதையும் கூட இங்கு வந்து சரணடைந்து கர்மாவை நீக்கி பின் ராஜராஜ சோழன் தஞ்சை திருக்கோயிலை கட்ட ஆரம்பித்தான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே இங்கு வந்து வழிபட்டு செல்வோர் அப்பனே சிறிது சிறிதாக கர்மத்தை போக்கிக் கொள்வார்கள் என்பேன்.

அனைத்து சித்தர்களின் ஆசிகள்  கிடைக்கும் என்பேன்.

யானும்(அகத்தியர்) இங்கு வந்த பல முறை தங்கி சென்று இருக்கின்றேன் என்பேன்.

நல் முறைகள் ஆகவே இன்றளவும் கூட பின் நல் முறைகள் ஆகவே கருவூரான் இங்கு இருக்கும் பொழுது அவன்தனக்கு பல சேவைகள் செய்தான். பின் திவ்ய முனிசாமி என்பவன். இவன் தன் நல் முறைகள் ஆகவே இவனும் கருவூராரின் பல வித்தைகளை கற்றுக் கொண்டான் என்பேன் இதனால் இவனும் ஒரு சீடன் ஆகவே மாறிவிட்டான் என்பேன். (இவரின் ஜீவசமாதி இந்த ஆலயத்தில் அமைந்துள்ளது )

நல் முறைகள் ஆகவே இவையென்றும் கூற பின் எவ்வாறு என்பதையும் கூட ஐவருக்கும் (பஞ்ச பாண்டவர்)  சாபம் நிவர்த்தி ஸ்தலம் என்பேன் இத்தலம்.

இதனால் இத்திருத்தலத்தை பின் நல் முறைகளாக அவர்களும் சிலசில  விஷயங்களில் இதனையும் ஏற்று செய்தனர் என்பேன் அதனால்தான் இத்திருத்தலத்தை ஐதீஸ்வரர் என்று அழைக்கப்பட்டது.

நல் முறையாக அவர்களின் கர்மாவும் நீங்கி சென்றுவிட்டார்கள் எவ்வாறு என்பது கூட இங்கு வந்து நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் இங்கு வருபவர்கள் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது பல கர்மாக்களை நிச்சயம் இங்கு விலக்கலாம் என்பேன்.

சித்தர்களின் ஆசி பெற்ற பூமி இது ஆனாலும் எவை எவை என்று உண்மைப் பொருள் எவை என்று தெரியாமலே மனிதன் சுற்றி வருகின்றான் என்பேன். அதனால்தான் அப்பனே சொல்கின்றேன் இனிமேலும் வரும் காலங்களில் துன்பங்கள் ஏற்படும் பொழுது, பின் அப்பனே மனிதனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் போய்விடும். அப்பொழுது இத்திருத்தலத்தை நாடி வந்தால் சில சில உண்மைகள் தென்பட்டு பின் ஆசீர்வாதங்களும் நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே கொடுக்கப்பட்டு அனைத்தும் நிறைவேறும் அனைத்து கர்மாக்களும் அழிக்க அழிக்க அழிந்து கொண்டே இருக்கும் என்பேன்.

நல் முறைகள் ஆகவே உயர்ந்த இடத்திற்குச் செல்லலாம். நினைத்தது நினைத்தவாறே பெற்றுக்கொள்ளலாம் என்பேன் ஆனாலும் தடை தாமதங்கள் சிறிது சிறிது நின்ற பின்தான் செய்வான், நல் முறைகள் ஆகவே இவ் ஈசன்.

எதனால் என்பதையும் கூட சிறிது சிறிதாக முதலில் கர்மத்தை நீக்குவான் என்பேன்.

நீக்கப்பட்டு நல் முறைகள் ஆகவே அனைத்தும் செய்வான் என்பேன்.

இத்திருத்தலத்தை பற்றி நல் முறைகள் ஆகவே பல யுகங்களில் எவ்வாறு என்பதையும் கூட நிர்ணயிக்கும் பொழுது அழிந்து அழிந்து வருகின்றது. கலியுகத்திலும் மீண்டு எழும் என்பேன் இத்திருத்தலம்.

நல் முறைகளாக இதற்கு யான்(அகத்தியர்) நல் முறைகள் ஆகவே முயற்சிப்பேன் என்பேன்.

நல் முறைகளாகவே இன்னும் சமநிலைக்கு இவ்வாறு வரும் திருத்தலங்களை பற்றியும் இன்னும் சொல்கின்றேன்.

அங்கு சென்று பின் வழிபட்டு வர பின் நலன்கள் ஆகும் இதுதான் அப்பனே பரிகாரமாக யான் நல் முறைகளாக மக்களுக்கு இன்னும் பல சித்தர்கள் தெரியப்படுத்துவார்கள் என்பேன்.

தெரியாத இடங்கள் பல என்பேன்.

ஆனாலும் அங்கு சென்று சென்று மக்கள் எவ்வாறு என்பதையும் கூட உண்மை நிலை தெரியாமலே வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல சூட்சமங்கள் தெரிவித்து அங்கு சென்று கலியுகத்தில் நல் முறையாக கர்மங்களை நீக்கி வாழுவது எப்படி என்பதையும் கூட வருங்காலங்களில் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

அப்பனே நல் முறைகளாக இதை ஏற்றுக்கொண்டு அனைவரும் நல் முறைகளாக ஒழுக்க சீலராக வாழுங்கள் என்பேன் இவ்வாறு வாழ்ந்து விட்டாலே போதுமானது. இறைவன் நம்மிடையே இருந்து கொள்வான் எப்பொழுதும் கூட நல் முறைகள் ஆகவே.

இதனால் தான் யான் நல் முறைகள் ஆகவே யானும் இம்முயற்சியை நிச்சயம் எடுத்து நல் முறைகள் ஆகவே இவ்வாலயம் எவ்வாறு அழிந்தது என்பதை கூட தெரியாமல் போய்விட்டது. ஆனாலும் கலியுகத்தில் கலியும் முற்றும் எவ்வாறு என்பதையும் கூட, பின் நல்லவைகள் எங்கெங்கு இருக்கின்றதோ அதை அதையெல்லாம் கலியவன் (கலிபுருஷன்) பின் தடுத்துக் கொண்டே இருப்பான். மக்கள் செல்ல அனுமதிக்க மாட்டான் அதனால் தான் இன்னும் சில நல் முறைகளாக திருத்தலங்கள் பற்றி அங்காங்கே யான் தெரிவிக்கின்றேன்.

ஆங்காங்கே சென்று கர்மத்தை நீக்கி  நல் முறைகள் ஆகவே நல் முறைகளாக மோட்சத்தை பெற்றுக்கொள்ளுங்கள். இதுதானப்பா உண்மை.

மனிதனுக்கு வரவர புத்திகள் வராது. அறிவுகள் அழிந்துபோகும் பின் ஞானப் பாதைக்கு செல்லமுடியாது என்பேன். ஏனென்றால் கலியுகத்தில் எவ்வாறு என்பதையும் கூட மேன்மை நிலைகளும் பெற்று திரும்பவும் கீழே இறங்கி விடுவான் எதனால் என்பதையும் கூட மெய்சிலிர்த்து பார்க்கும் பொழுது இன்னும் திருத்தலங்கள் அழிந்து கொண்டுதான் இருக்கின்றது அதனையே மனிதனால் பின் நல் முறைபடுத்தவில்லை. பின் எவை என்று கூற எதனை எதனையோ திரும்பவும் திரும்பவும் வந்து பின் திருத்தலங்களை(புதிய கோயில்கள்)  உருவாக்குகின்றான்.

ஏன்? உருவாக்குகின்றான்?

அதன்மூலம் வருவாய் ஈட்டி அவன் தன் பிள்ளைகளுக்கு பின் பின் எவ்வாறு என்பதை உணர்ந்து இதனையே செய்துகொண்டு இருக்க அவன் தனக்கு எவ்வாறு லாபம் லாபங்களாக புண்ணியங்கள் சேரும்???

ஆனால் சில திருத்தலத்தை பற்றியும் பலமாக உரைக்கின்றேன் வரும் காலங்களில் நல் முறைகள் ஆகவே.

பல திருத்தலங்கள் பல அதிசயங்கள். பின் பல யுகத்திலும் வாழ்ந்த கோயில்களை யான் நல் முறைகளாக எடுத்துரைக்கின்றேன் .

அதன்படி பின் நல் முறைகளாக நல் முறையாகவே அங்கு அமர்ந்து தியானங்கள் செய்யவே பல பலப்பல பிறவிகளில் செய்த கர்மாக்கள் அழியும் என்பேன்.

கர்மாக்கள் அழிந்து புண்ணிய பலன்கள் மேலோங்கி அனைத்தும் நடக்கும் என்பேன்.

இங்கு வந்து செல்பவர்கள் பின் ஒரு பொழுதும் தாழ்ந்து விடமாட்டார்கள் என்பேன்.

உயர்ந்த அளவிற்கு எவ்வளவு உயரம் உயரத்தான் செய்வான்  இங்கு இருக்கும் சிவன் என்பேன்.

நல் முறைகளாக நல் முறைகளாகவே பின் அனைத்தும் நிறைவேறும் என்பேன் நல் முறைகள் ஆகவே.

ஆனாலும் நல்முறைகள் ஆகவே ஈசன் கருணை இருக்க இன்னும் மனிதர்களை எவ்வாறு என்பதையும் கூட ஈசனே தன்னை உட்படுத்திக் கொண்டுதானே எழுவான் என்பேன் சுயம்புவாக இன்னும் பல இடங்களில் இன்னும்.

ஏனென்றால் கலியுகத்தில் அக்கிரமங்கள் அநியாயங்கள் ஓங்கி நிற்கின்றது. இதனால்தான் ஈசன் அங்காங்கே தோன்றி தோன்றி பின் அனைவரையும் திருத்துவான். பின் அழிப்பான் என்பேன் .

யாங்களும்( சித்தர்கள்)  இதற்கு சமமான உரிமைகளைப் பெற்று பின் நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே மக்களுக்கு நல்வழி படுத்துவோமே தவிர பின் இவ்வாறு செய்தால் அவ்வாறு நடக்கும் அவ்வாறு பரிகாரங்கள் செய்தால் இவ்வாறு நடக்கும் என்றெல்லாம் மனிதன் மனிதனை ஏமாற்றும் வேலைகளையும் அப்பனே இவை என்றும் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது அப்பனே உண்மை விஷயங்களை இன்னும் சொல்வேன் என்பேன்.

சொல்லும் திருத்தலங்களுக்கு அங்கு சென்று ஆசிர்வாதங்கள் பெற்று அப்பனே நலமுடன் வாழ்க என்பேன்.

அப்பனே பல சூட்சமங்கள் ஒளிந்திருக்கின்றது  இவ்வுலகத்தில் ஒவ்வொன்றாக எடுத்துரைக்கின்றேன்  .

உலகம் பின் ஆன்மீக பூமியாக மாறட்டும் இன்னும்.

ஆனாலும் ஆன்மீகம் ஆன்மீகம் என்று சொல்லுகிறார்களே

ஆனாலும் பின்பற்றுவதுமில்லை.

எதனை எதனையோ ஆன்மிகம் என்றால் ஆண் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது பின் எவன் ஒருவன் நல் முறைகளாக எதனை என்றும் கூறாமலே இறைவனிடத்தில் சரணடைந்து பின் பிரம்ம முகூர்த்தத்தில் நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே மனதில் இறைவனை நினைத்துக்கொண்டு நல் முறைகளாக பின் அனைத்தும் எவை எவை என்று அதிகாலையில் பல உயிரினங்களுக்கு உணவு அளித்து தானும் உணவு உண்டு பின் நல் முறைகளாக தன் சேவைகள் செய்ய பின் இரவில் உறங்கும் முன் பொழுதும் நல் முறைகளாக பல உயிரினங்களுக்கு சேவை செய்து தானும் உண்டு பின் உறங்கினால் அப்பனே புண்ணியம் சேர்த்து கொண்டே போகலாம் என்பேன்.

ஆனாலும் இதனை யாரும் செய்வதில்லை என்பேன். எதனால் எவை என்று இதனால் துன்பம் வருகின்றது தானுண்டு தானே எண்ணம் உண்டு என்றெல்லாம் கூட பிறக்கின்றான் இறக்கின்றான் இதன் நடுவே எவை எவையெல்லாம் செய்கின்றான் என்பதையும் கூட மனிதனால் பின் உணர முடிவதே இல்லை.

அப்பனே திருமணம் செய்கின்றான். பின் எவ்வாறு என்பதையும் கூட கஷ்டத்திற்கு குழந்தைகளும் வருகின்றது பின் அப்பனே குழந்தைகளும் நன்றாக இருப்பார்களா?? பின் மனைவி நன்றாக இருப்பாளா?? இவைதாம் கேள்விகள் மனிதனுக்கு இனிமேலும் வரும் என்பேன்.

ஆனாலும் அப்பனே நல் முறைகள் ஆகவே இறைவனை பிடித்து இறைவா நீதான் அனைத்தும் என்று செல்ல அனைத்தும் இறைவன் அருளால் நடக்கும் என்பேன்.

நடக்கும் என்பேன் இன்னும் பல அதிசயங்களும் பல திருத்தலங்களை பற்றியும் இன்னும் சொல்கின்றேன் நல் முறைகள் ஆகவே.

அங்கு சென்று வாருங்கள் நல் முறைகள் ஆகவே மனமாற்றம் ஏற்பட்டு அதி விரைவிலேயே தேவையானது அனைத்தும் கிடைக்கும் என்பேன் நல் முறைகள் ஆகவே.

என்னுடைய ஆசிகள் அனுகிரகங்கள் எப்பொழுதும் இருக்கும் அப்பனே மீண்டும் வந்து வாக்குகள் உரைக்கின்றேன் அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..................தொடரும்!

15 comments:

 1. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் காஞ்சி பெரியவா சரணம்
  ஓம் சத்குரு மகான் சேஷாத்திரி சுவாமிகலே சரணம்
  ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  ReplyDelete
 2. ஓம் அகத்தீசாய வித்மஹே,
  பொதிகை சஞ்ஜாராய தீமஹே,
  தந்நோ ஞானகுரு பிரசோதயாத்.
  🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா,கோவில் முகவரியை தெரியபடுத்தவும்,நன்றிகள் கோடி.

  ReplyDelete
  Replies
  1. Sri agailandeswari sameth iravatheswarar temple.
   Palla soolagarai. Village.
   Mallapuram.
   Uthangarai.tk
   Krishnagiri dt.

   Delete
 4. பள்ளசூளகரை ஐராவத ஈசுவரர் கோயில் (iradheeshwar sivan temple) என்பது கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள பள்ள சூளகரை என்ற ஊரில் உள்ள பழமையான சிவன் கோயில் ஆகும். இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தகோயில் கருதப்படுகிறது. இக்கோயிலில் மழை நீர் சேகரிப்பு தொட்டி போன்றவை உள்ளன. தற்காலத்தில் கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் உள்ளது. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ

  ReplyDelete
 5. Om Agatheesaya Namaha!!

  Please let me know if any one has temple point of contact to donate money for maintaining iradheeshwar sivan temple. Thanks for your help in advance!!

  ReplyDelete
  Replies
  1. Each readers 10 rupees போட்டால் இந்த மாதிரி கோவில்களை சீர்படுத்தி எடுத்து விடமுடியும். அகத்தியர் கிட்ட கேளுங்கள். யாரை அவர் சொல்கிறாரோ அவரிடம் பணத்தை கொடுத்து மாதம் சம்பளமும் கொடுத்து கோவிலை சீர்படுத்தி தர சொல்லுவோம். அகத்தியர் வாக்கை முதலில் கேட்டு தகுதி வாய்ந்த நபரை அவரிடம் தேர்ந்து எடுத்து வேலையை ஆரம்பித்தது முடித்துகாட்டுவோம் .

   Delete
 6. அகத்திய மகரிஷிக்கு கோடான கோடி நன்றிகள். என்றென்றும் வழிகாட்டி அருள வேண்டும். அகத்தியன் பாதம் பணிந்து வணங்குகிறேன்.

  ReplyDelete
 7. அகத்தியர் அய்யன் நமக்கு தருகின்ற இந்த அருள் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்... ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏

  ReplyDelete
 8. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  கருணையே உருவான அகத்திஸ்வரர் நமக்கு நல்வழியை காட்டுகின்றார், ஓம் ஸ்ரீ சத்குரு அகத்தியர் திருவடிகளே சரணம்.

  ReplyDelete
 9. Google map location
  https://maps.app.goo.gl/fdygCxEpUUKPHw1g7

  ReplyDelete
 10. Sir please ஜானகிராமன்sir ஜீவ நாடியில் பார்த்து இந்த கோவில் பழைய படி பராமரிப்பு செய்ய யாரை அகத்தியர் பரிந்துரை செய்கிறார் என்று கேளுங்கள். சித்தன் அருள் படிக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து பழைய நிலைக்கு கொண்டு வருவோம்.
  அகத்தியர் பரிந்துரை செய்த நபரை நாம் தேர்ந்து எடுத்து பணத்தை அனைவரும் சேர்ந்து ஒப்படைத்து கோவில்களை காப்பாற்றுவோம்

  இதை ஏற்றுகொள்பவர்கள் பதில் போடவும். தங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்

  ReplyDelete
  Replies
  1. I agree madam. Please someone talk to Janakiramman sir.

   Delete
  2. I agree,best Idea madam

   Delete
 11. அகத்தியன் அருளால் நேற்று இங்கு சென்று வணங்கி வந்தேன்.பெருமாள் கோவில் பூசாரி பெயர் பங்காரு அவரிடம் செல் நம்பர் இல்லை. சிவன் கோவில் சாவி கந்தசாமி என்பவரிடம் உள்ளது. அங்கு விசாரித்தால் சொல்வார்கள். அகத்தியர் அடியவர்கள் சென்று வாருங்கள். G. K Sreenivasan

  ReplyDelete