​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 19 August 2021

சித்தன் அருள் - 1025 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


கருட புராணத்தில் ஒருவரின் எந்தெந்த செயல்கள் அவரின் ஆயுட்காலத்தை குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நாத்திகராக வாழ்வது, கடவுளின் உயர்ந்த சக்தியை நம்பாதவர்,  தர்மம் மற்றும் கர்மாவின் பாதையை பின்பற்றாதவர்களின் ஆயுட்காலம் குறைந்து கொண்டே இருக்கும். கடவுளை நம்பாதது மனிதகுலத்தை நம்பாததற்கு சமம்.

தவறான செயல்கள், வயதில் மூத்தவர்களை தெரிந்தே அவமதிப்பது, தவறான பாதையில் அதன் விளைவுகள் என்னவென்றும் தெரிந்தே செல்வது, ஒருவரின் ஆயுள் குறைய காரணமாக இருக்கும்.

வெறுப்பு எண்ணங்கள், சுற்றி இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது வெறுக்கத்தக்க எண்ணங்களுடன் வெறுப்பில் வாழ்வது, ஒருவரின் ஆயுளை குறைக்கும், என்று கருட புராணம் கூறுகிறது. மனித நேயத்தை வெறுப்பவர்கள் மனிதராக வாழ தகுதியற்றவர்கள்.

கால் மேல் கால் போட்டு அமர்வது. இந்த நிலையில் உட்கார்ந்திருக்கும்போது, இடுப்பு பகுதி முன்னோக்கி உருண்டு,  முதுகெலும்பை வளைத்து, கீழ் முதுகில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தி, சாய்வதற்கு உங்களைத் தூண்டுகிறது, இது பல இடைநிலை வியாதிகளுக்கு வழிவகுக்கிறது. இது ஆயுளை வெகுவாக குறைக்கும்.

கருட புராணம், குறிப்பிட்ட நாட்களில் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்று எச்சரித்துள்ளது. கிருஷ்ண மற்றும் சுக்ல பக்க்ஷ சதுர்தசி, ஒவ்வொரு மாதத்தின் அஷ்டமி, அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் உறவு வைத்துக்கொள்வது பாவத்தின் உச்சமாகும். ஆயுளை வெகுவாக இழக்க நேரும்.

உடைந்த கண்ணாடியில் முகம் பார்ப்பது உங்கள் ஆயுளை குறைக்கும் செயலாகும். 

அதேபோல தவறான திசையில் தூங்குவதும் உங்களின் ஆயுளைக் குறைக்கும். உங்கள் தலையை வடக்கு, வடகிழக்கு, தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைத்து ஒருபோதும் தூங்கக்கூடாது.

இருட்டில் தூங்குவது. முற்றிலும் இருளாக இருக்கும் உங்கள் படுக்கையறைக்குள் நுழைந்து இருளிலேயே ஒருபோதும் தூங்கக்கூடாது. ஒரு சிறு விளக்கு வெளிச்ச்மேனும் வேண்டும். உடைந்த கட்டிலில் படுப்பது மரணத்திற்கான அறிகுறியாகும்.

கடன் வாங்குவது, உணவு, தங்குமிடம், உடைகள் மற்றும் காலணி போன்ற கடன் வாங்கிய பொருட்களைத் தக்க வைத்துக் கொள்வது, நீங்கள் கடன் வாங்கியவருடன் உங்கள் ஆயுட்காலத்தை பகிர்ந்து கொள்வதை குறிக்கிறது.

அழுக்கு கைகளுடன் எழுதுவது, சாப்பிட்டபின் அல்லது வீட்டை சுத்தம் செய்தபின் கைகளை சுத்தம் செய்யாமல் படிப்பது, எழுதுவது அல்லது பாடம் நடத்துவது போன்றவை உங்களின் ஆயுளை குறைக்கும்.

மற்றவர்களின் முதுகில் குத்துவது, புறம் பேசுவது அவர்களைப் பற்றிய பொய்களை கூறுவது போன்றவை ஒருவரின் விரைவான மரணத்திற்கு வழிவகுக்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

3 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. It is stated that one should not sleep keeping thier head on South side, I have heard one should not sleep keeping thier head in the east, north and northeast but south direction is allowed. Which is true.
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்.

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete