​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 15 August 2021

சித்தன் அருள் -1024 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமானின் அருள்வாக்கு!

நாகபஞ்சமி அன்று வடிவேலன் உரைத்த பொது வாக்கு.


இடம். அங்காளபரமேஸ்வரி அர்த்தநாரிஸ்வரர் ஆலயம் தர்மபுரி.

உலகை ஆளும் என் அப்பன் அம்மையை பணிந்துசொல்லுகின்றேன் கந்தனவன்.(கந்தன்)

ஞானப் பிழம்பை என் தந்தை நிச்சயமாய் வழங்குவான் என்பேன்.

பின் என் தாய் அவள் ஆசிர்வாதமும் பரிபூரணமாக இருக்க அப்பனே பின் நல் முறையாக அனைத்து விஷயங்களிலும் ஜெயமாகும் என்பேன்.

இறைவன் என்றெல்லாம் திரிகின்றார்கள் மனிதர்கள் இறைவன் இறைவன் என்றெல்லாம் திரிகின்ற போது அவரவர் செய்த புண்ணிய பாவங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் அவர்களே மனதில் நினைத்து.

அப்பொழுதுதான் நல் முறையாக அப்பனே தவறு செய்துவிட்டேன் என்று திருந்தி விட்டால் நல் முறையாக ஆசிகள் என்னுடைய ஆசிகள் ஆனாலும் பின் பல புண்ணியங்கள் நல் முறைகளாய் செய்யும் பொழுது அவன் தன் கர்மத்தை அவனே விலக்கிக் கொள்கின்றான். என்பேன்.…

நல் முறையாக மாற்றம் உண்டு

தெரியாமல் செய்கின்ற தவறுக்கு எதனை என்று கூற கர்மா கிடையாது எமதர்மன் அதனை எடுத்துக்கொள்வதில்லை. ஆனாலும் தெரிந்தே செய்கின்ற தவறுக்கு நிச்சயம் கர்மாவினை உண்டு. வருகின்றது வினை.

இதனையும் எவ்வாறு என்பதைக்கூட தெரிந்தும் இதற்கும் கூட விமோசனம் உண்டு என்பேன் எதனையும் என்பதைக்கூட எவ்வாறு என்பதையும் கூட இறைவனை வகுத்துக்கொண்டு இறைவனை நினைத்துக் கொண்டால் அக் கர்மவினை பின் பின் சம அளவில் நல் முறையாக இறைவன் எடுத்துக்கொண்டு நல் முறையாகவே இவ்வுலகத்தில் வாழவைப்பான் என்பேன். அதனால் தான் இறை பலங்கள் அனைத்திற்கும் தேவை என்பதைக்கூட நான் நிச்சயமாய் சொல்வேன் என்பேன்.

ஆனாலும் இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது மனிதனுக்கு மாய வலையே மிஞ்சும் என்பேன். மாய வலையில் சிக்கிக் கொள்வான் எவ்வளவு புத்திகள் இருந்தும்.

ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன் நிச்சயமாய் பின் ஐந்து அறிவுகள் அனைத்திற்கும் இருக்கும் என்பதை கூட யான் அறிவேன் ஓர் அறிவை பின் பின் மிகவும் கடுமையாக வைத்திருக்கின்றான் எதனால் பின் என்றால் மனிதன் உண்மை நிலையை அறிந்து புண்ணியங்கள் செய்து நல் முறையாக பிறவிக் கடலை தேற்றும் என்று ஆனாலும் அவ் அறிவை  தவறாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் மனிதன் இப்பொழுதும் கூட இனிமேலும் கூட.

இதனைப் பயன்படுத்திக் கொண்டாலே அதன் மூலமே அழிவு ஏற்படும் என்பதை மனிதனுக்குத் தெரிவதில்லை.

நின்ற பொழுதும் இதனையும் ஆறாவது அறிவை நல் முறைகள் ஆகவே பயன் படுத்தி இதனைத்தான் பின் அனைத்தையும் கடந்து வந்தால் பின் அறுபடையினை(கந்தனின் ஆறுபடைவீடு) தரிசித்து விடலாம் என்பது கூட உண்மை என்பேன்.

என்னை காண முடியும் என்பேன் ஆனாலும் மனிதன் எவ்வாறு என்பதும்கூட முட்டாளாகவே வாழுகின்றான்.

நல் முறைகளாக மக்களுக்கு தெளிவுகள் தெளிவுகள் இனி மேலும் பிறக்காவிட்டால் அப்பனே மனிதன் அவனே அவன் தன் போக்கிலே சென்று அழித்து விடுவான் மந்திரங்கள் பல உபதேசங்கள் செய்து செய்து ஆனாலும் மனிதர்கள் எண்ணங்கள் பின் உயர்வாக இல்லாதபோது அவை எல்லாமே வீண் என்பேன்.

நல் முறைகள் ஆகவே விளக்கம் தந்து நான் ஏற்றுவேன் நல் முறைகள் ஆகவே இத்திருத்தலத்தில் (அங்காளபரமேஸ்வரி அர்த்தநாரிஸ்வரர் ஆலயம் தர்மபுரி) இதை திருத்தலம் என்றே சொல்லலாம் அவ்வளவு பக்திகள் சக்திகள் இங்கே நிறைந்திருக்கின்றது என்பேன். இதனைத்தான் முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்று.

இதனால் அன்புடன் நல் மனதாய் எதனையும் என்பதைகூட அன்பை மட்டும் செலுத்தினால் நாங்கள் வருவோம்.

இவ்வுலகம் நிலையில்லாதது என்பதை கூட மனிதன் தெரிந்து கொள்வதில்லை. ஆனாலும் அதை தெரிந்து விட்டால் நாங்கள் (மனிதர்கள் )கூட நிரந்தரம் இல்லை என்பது தெரிந்து விடும்.

இதனைத் தெரிந்து விட்டால் ஓடோடிச் சென்று இறைவனிடத்தில் சரணடைந்து விடுவான் மனிதன் ஆனால் மனிதன் எண்ணங்களோ பின் நிலையற்று நிலையற்றவையே தேடிச் செல்லுகின்றது ஆனால் அப்படி தேடி தேடி செல்ல அவன் தனக்கு மனக்குழப்பங்கள் மன வருத்தங்கள் வந்துகொண்டே இருக்கும்.

ஒன்றை மட்டும் சொல்கின்றேன் இறைவா அனைத்தும் நீயே என்று பின் அவனிடத்தில் விட்டுவிடு பின் அனைத்தும் நடக்கும் என்பேன்.

அதைவிட்டுவிட்டு நல் முறைகளை அதைச் செய்கிறேன் இது நடக்கும் இதைச் செய்கிறேன் அது நடக்கும் அவை வேண்டும் இவை வேண்டும் என்று சென்று கொண்டு இருந்தால் நிச்சயம் கிடைக்காது என்பேன்.

இறைவன் மனிதனுக்கு கஷ்டத்தை தருவதை கூட மனிதனுக்குத் தெரிவதில்லை கஷ்டத்தின் மூலம் அனுபவத்தை பெற வேண்டுமே தவிர பின் மனக்குழப்பங்கள் ஆகிவிடக் கூடாது என்பேன் அப்படி மனக்குழப்பம் ஆகிவிட்டால் அவன் வாழ்க்கை வீணாகிவிடும் இதனால் தான் கஷ்டம் வரும்பொழுது இறைவா இறைவா என்று அழைத்தாலே போதுமானது கஷ்டங்கள் பகுதியாய் குறைந்துவிடும் என்பேன்.

ஆனாலும் மனிதன் அழைப்பதில்லை.

நல் முறைகள் ஆகவே அனைத்தும் நிறைவேறும் என்பேன் இவ்வுலகத்தில் படிப்படியாக ஏற்றங்கள் அதனால்தான் அகத்தியனும் சரி முறையாக நல் முறையாக மக்களை நல்வழிப்படுத்தி கொண்டிருக்கின்றான். யானும் பக்கபலமாக என் குடும்பத்தில் ஒருவனாக இருந்தும் போராட்டத்தில் இருந்து மீட்க கடைசிவரை என் தாயவளும் என் தந்தை அவனும் துணையாக இருந்து உயர்வை நோக்கி பின் எவ்வாறு உயர்வை எவ்வாறு உலகத்தில் பெறவேண்டுமா பெறச் செய்வோம் யாங்கள். நிச்சயம் கூட. சத்தியம் கூட.

நல் முறைகள் ஆகவே மனிதன் நிலையை ஆராய்ந்து பார்த்தால் தேடி வருபவர்கள் எவ்வாறு என்பதையும் கூட மேன்மையான நல் எண்ணங்களோடு தேடி செல்ல வேண்டும்.

உண்மைகளை நினைக்கும்பொழுது நல் முறையாய் புண்ணியம் செய்பவர்களுக்கு மட்டுமே இவ்வுலகத்தில் இனி இடமுண்டு. அதனால் தான் சொல்கின்றேன் ஒவ்வொருவரும் சிறு புண்ணியமாவது தர்மங்கள் செய்திருந்தால் மட்டுமே இறைவன் தேடி வருவான்.

நில்லாததை நில் என்று சொல்பவன் தான் மனிதன்.

மனிதன் இதற்கு தகுதி படைத்தவனா?? என்பதை நினைத்தால் பின் மேலோங்கும் என்பேன் அநியாயங்கள் அக்கிரமங்கள் இன்றளவும் கூட நடந்து கொண்டு இருக்கின்றது.

பின் பின் எவ்வாறு என்பதையும் கூட போலி வருடங்கள் போலியான வருடங்கள் செல்லச் செல்ல போலியான மனிதர்கள் இன்று என் தலத்திற்கு வருகின்றார்கள் முருகா முருகா என்று போலி பக்தியும் காட்டுகிறார்கள்.

ஆனாலும் இதனை கண்டு கொள்ள இறைவனுக்கு சிலை தானே என்று கூட சிலர் எதனையும் என்றுகூட நினைக்க தெரியாமல் ஓடிவிடுகிறார்கள் ஆனாலும் அவர்களைத் தான் நாங்கள் கவனித்துக் கொண்டு இருக்கின்றோம் என்பது மெய்.

இதனையும் கூட முன்னிறுத்தி பார்க்கும் பொழுது அப்பனே இதனையும் ஒன்றும் இல்லை உலகில் உலகில் பின் மனிதன் நினைத்து விட்டால் இறை பலத்தோடு அனைத்தும் சாதித்துவிடலாம். ஆனாலும் பின் மனிதன் பின் நின்ற பொழுதெல்லாம் மனதிற்கு தேவையானதே தான் வாழவேண்டும் என்றே கேட்கின்றான் இவ்வாறு கேட்கும்பொழுது அவன்தனுக்கு நிச்சயம் கிடைக்காது அவனுக்கு அதிர்ஷ்டங்கள் இருந்தாலும் கூட சில நேரங்களில் அவன்தனுக்கு கொடுத்து பின்பு நாங்கள் எடுத்து விடுவோம்.

மற்றவர்களுக்காக அனைவரும் நல் முறைகள் ஆகவே மற்றவர்களுக்காக உழைக்கின்றவன் எங்களுடைய அருளை எப்பொழுதும் பெறுவான் இதைத்தான் யான் செப்புகின்றேன். இதனை தெரிந்து கொள்ளுங்கள் மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்பதனை கூட.

நல் முறைகள் ஆகவே இன்னும் சில உண்மைகளை தெரிவிக்கின்றேன்.

நின்று கொண்டிருக்கும் நல் முறைகளாய் யான் எப்பொழுதும் எங்கு என் வீடுகளிலும்  எப்பொழுதும் நின்று கொண்டிருப்பேன் நின்று கொண்டிருப்பேன் எதனால் என்பதைக்கூட மனிதனுக்குத் தெரிவதில்லை தெரிவதில்லை இதனையும் சூட்சுமத்தை அறிவிக்கின்றேன் இப்பொழுதே எதனை என்றும் மனிதன் என்னிடத்தில் கேட்கும்பொழுது பின் நல்  முறைகள் ஆகவே ஆசீர்வாதம் ஆசிர்வாதங்கள் கொடுத்து அனுப்புகின்றேன் ஆனாலும் அதனை பயன்படுத்தாமல் தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டு அனைத்தையும் இழந்து பின் நல் முறைகள் ஆகவே மீண்டும் தேடி வருகின்றான் அதனால்தான் யான் சொன்னேன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் நின்றபடி . நின்றபடியே  பார்த்துக் கொண்டேதான் இருப்பேன் எப்போதும் கூட கடைநாள் வரையிலும்கூட.

ஆனாலும் நல் முறைகள் ஆகவே என் தந்தை அமர்ந்து கொள்வான். அமர்ந்து கொள்வான் என்பதை கூட பின் பின் நல் முறைகள் ஆகவே அனைத்தும் கூறும்பொழுது, பின் உனது கர்மாக்கள் கழியட்டும் கழியட்டும் என்று கூட பின் கர்மத்தை கஷ்டங்களைக் கொடுத்து அழித்து கொண்டு இருப்பான் என் தந்தை.

ஆனாலும் பின் நல் மனதாய் என் தந்தைக்கு பிடித்துவிட்டால் ஏற்றங்கள். பின் உயர்ந்தோர். பிடித்தவாறு மனிதர்கள் எவரும் இல்லை என்பேன், என் தந்தைக்கு.

ஆனாலும் இனிமேலும் வருவார்கள் நான் சிவனின் குழந்தை! முருகனின் குழந்தை! அகத்தியன் குழந்தை! என்று. ஆனால் அவர்கள்தான் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டுமே  தவிர நாங்கள் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை.

எதை என்றும் எதனை என்றும் கூட தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே நாங்கள் தரிசனம் தருவோம். செய்வோம். நிச்சயம் செய்வோம் என்பதைக்கூட இதனை திரும்பவும் உரைக்கின்றேன்.

பின் பின் எவ்வாறு என்பதையும் கூட தொழுது நிற்கும் பொழுது யானே அறிவேன்  பின் இறைவனே நீ என்னிடத்தில் வந்து விடு என்று கூறி விட்டால்  நானே நிச்சயம் வந்துவிடுவேன் என்பதுகூட உண்மை ஆனால் மனிதர்கள் இதுபோல் யாரும் அழைத்ததில்லை மகனே.

இதனை நல் முறைகள் ஆகவே பயன்படுத்தி, பயன்படுத்தி முருகன் நல் முறைகள் ஆகவே யான் என்பேன் எனது பல ரூபங்களில் இருக்கின்றது சுப்பிரமணியர் என்பதிலும் கூட இதிலும் கூட ஒரு சூட்சுமம் அடங்கி இருக்கின்றது அடங்கி உள்ளது என்பேன் சுப்பிரமணியன் என்பதைக்கூட எவ்வாறு நின்று தொழுது பார்த்தால் இதில் சூட்சுமமான விஷயம் உள்ளது. இதனை கண்டுபிடித்து விட்டால் நல் முறைகள் ஆகவே உங்களுக்கு கஷ்டம் என்பதே வராது என்பேன்.

அதனால்தான் முதலில் சு என்பதை எடுத்துக் கொண்டார்கள் என்பேன்.

இதிலும் நன்கு உணர்ந்து சொல்கின்றேன் நல் முறைகள் ஆகவே பின் பின் பின் எந்தனையும்  நல் முறைகள் ஆகவே பிடித்துக் கொண்டு பின் வருடங்களுக்காவது நல் மனதோடு நல் மனதோடு நவ முறை அறுபடை வீடுகளை தரிசனம் செய்துவிட்டு( ஒரு வருடத்தில் ஒன்பது முறை ஆறுபடைவீடு தரிசனம்) சென்று விட்டால் அவன் தனக்கு பிரம்மாவும் மனமிரங்கி பின் விதியையே மாற்றி விடுவான் என்பதையும் கூட சுப்பிரமணி என்கின்றார்கள்.

ஆனாலும் இச் சூட்சுமத்தை இதுவரை மனிதர்கள் அறிந்ததே இல்லை இன்று வரையிலும் கூட.

நல் முறைகள் ஆகவே பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு ஈசனின் சக்திகள் நல் முறைகள் ஆகவே, என் தாய் அவளும் நல் முறைகள் ஆகவே இந்த பூலோகத்தில் சுற்றி திரிவாள் என்பேன். மேன்மேலும் நல் முறையில் ஆகவே அனைத்தும் செய்வித்து எவ்வாறு என்பதை உணர்ந்து அனைத்தும் நிறைவேற்றி வைக்கும் சக்திகள் கூட, என் தாய் என் தந்தை நல் முறைகள் ஆகவே தருவார்கள் மனிதர்களுக்கு மனிதர்களுக்கு தரும் பொழுதும் அதன் பலத்தை அறியாமல் அதன் தகுதியை இழந்து விடுவார்கள் மனிதர்கள்.

இதனால் தான் சொன்னேன் கற்றவை கற்றபடியாகவே  நிற்க வேண்டுமே ஆனாலும் இதனை மனிதர்கள் கற்றதோடு மட்டும் ஓடிவிடுகிறார்கள் இதனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்பேன்.

நல் முறைகள் ஆகவே மனமிரங்கி யான் சொல்ல வந்தேன் இப்  புண்ணியங்கள் பெறும் பொழுது. புண்ணியங்கள் பெற்று பெற்று நல் முறையாக எங்களை வணங்குபவர்களை முதலில் யாங்கள் புண்ணியம் தேட வைப்போம் புண்ணியம் தேடி தேடி அலைந்து திரிந்தால்  யாங்கள் காட்சி அளிப்போம் இக்கலியுகத்தில்.

நான் நிச்சயமாய் காட்சியளிப்பேன்.என் பக்தர்களுக்கு ஆனாலும் எங்களுக்கு நல் முறைகள் ஆகவே எங்களுக்கு தகுந்தவாறு மனிதன் நடக்க வேண்டும் என்பேன், என்பதுதான் மெய்.

ஆனாலும் யாரும் நடப்பதில்லையே அதனால் தான் யாரும் எங்களை காணுவதும் இல்லை.

இதனை கூட யானும் சொல்லிவிட்டேன் எங்களை பார்ப்பதற்கு எவ்வாறு என்பதையும் கூட உத்தரவிட வேண்டும் என்பதைக்கூட இதனை நடத்தி கொண்டு புண்ணியம் செய்து கொண்டு இருந்தால் நிச்சயம் என் தரிசனம் கிடைக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு ரூபத்தில்.

பின் நல் முறைகள் ஆகவே என் தாயவளும் என் தந்தையவனும். சற்று நிதானத்துடன் தான் செயல்படுவார்கள். ஆனாலும் தண்டனைகள் உண்டு இதனையும் நான் சொல்லி விடுகின்றேன். இப்பொழுது முதன்முறையாக இப்பிறப்பில் செய்யும் தவறுகள் அடுத்த பிறவி எடுக்கும்பொழுது பல பாவங்கள் வினைக்கு ஏற்ப பிறவிகள் பின் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதை கூட விதியில். ஆனாலும் என் தந்தையோ கிரகங்களை அழைத்து நல் முறையாகவே பரிசளித்து விட்டான் கிரகங்களே மனிதர்களில் இந்த ஜென்மத்தில் இந்த ஜென்மத்தில் செய்யும் தவறுகளுக்கு இப்பொழுது நீங்கள் உடனடியாக தண்டனை கொடுத்து தீர்க்க வேண்டும் என்பதைக்கூட கூறிவிட்டான் இதுதான் உண்மை அதனால் தான் சொல்கின்றேன் பின் தவறுகள் செய்து விட்டு பின் என் தந்தையை வணங்கினால் நல் முறைகள் ஆகவே பின் நிச்சயமாய் இப்பிறவியில் செய்த தவறுகளால் இப் பிறப்பிலேயே அடி நிச்சயம் பலமாக உதிரும் என்பேன்.

நல் முறைகளாக சம்பந்தங்கள் பல உண்டு சம்பந்தங்கள் பெற்ற பின்புதான் யான் வாக்குகளாக சொல்கின்றேன் இன்றளவும் நல் முறையாக ஆசிகள்.

வடிவேலன் உரைத்த பொது வாக்கு முற்றிற்று.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................ தொடரும்!

14 comments:

 1. அகத்தியர் அன்பு பெரியது

  ReplyDelete
 2. இறைவா நீயே துணை.முருகா நீயே அருகில் நின்று வழி நடத்தி விடு. அகத்தியன் முருகன் சிவன் சக்தி அனைத்தும் துணையாக இருந்து அனைவருக்கும் நல் வாழ்க்கை கிடைக்க இறைவா நீ இறங்கி வர வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ungal anbana parvaikku. Divangal Erkanave kizh irangi vandhu vittargal. see www.enlightenedbeings.org or Gnanalayam AT youtube. _Nandrigal Ravi-Agathiyarbakthan,Mogappair

   Delete
 3. Om Lopamudra Mata samhet Agasthisaya Namah

  Om Muruga

  ReplyDelete
 4. வெற்றிவேல் வீரவேல்.கந்தனுக்கு அரோகரா
  🙏🙏🙏

  ReplyDelete
 5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

  ReplyDelete
 6. Ayya can you provide your email id .... ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

  ReplyDelete
 7. ஓம் சரவணபவ!
  ஓம் சரவணபவ!
  ஓம் சரவணபவ!
  ஓம் சரவணபவ!
  ஓம் சரவணபவ!
  ஓம் சரவணபவ!

  ReplyDelete
 8. ஓம் முருகா சரணம்
  ஓம் முருகா சரணம்
  ஓம் முருகா சரணம்
  வேலுண்டு வினையில் லை
  மயிலுண்டு பயமில்லை
  குருட்டு குறைவில்லை
  ஓம் வள்ளி தேவசேன மணாளா
  சண்முகா அரோகரா.
  ஓம் முருகா சரணம்
  ஓம் முருகா சரணம்
  ஓம் முருகா சரணம்

  ReplyDelete
 9. Om Agasthiyar ayyan thunai 🙏🙏🙏. Your email id Sir

  ReplyDelete
 10. குரு வாழ்க 🙏 குருவே துணை 🙏 குருவே சரணம் 🙏🙏🙏

  ReplyDelete
 11. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

  ReplyDelete