​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 6 August 2021

சித்தன் அருள் - 1020 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு!


இன்று குரு அகத்தியர் உரைத்த பொதுவாக்கு 

ஆதி ஈசன் பொற்பாதங்களை வணங்கி அகத்தியன் உரைக்கின்றேன் நல் முறையாக அனைவருக்கும் என் ஆசிகள்!

இந்த உலகம் இப்பொழுது அதர்மத்தை நோக்கித்தான் செல்லுகின்றது. அதர்மம் மிகுந்து விட்டது. அப்பனே நல்முறையாக ஈசனும் அதர்மத்தை அழித்து விட இன்னும் பல பரீட்சைகள் செய்வான் என்பேன். இனி நல்லவர்கள் மட்டுமே இந்த பூமியில் வாழ முடியும் என்பேன். தவறான பாதையில் செல்பவர்கள் அழிந்து போவார்கள் என்பேன்.

என் பக்தர்களுக்காக பிரம்மாவிடம் அதிகம் சண்டையிடுவது நான்தான். பிரம்மாவும், நல்முறையாக மனிதர்களுக்கு, அகத்தியா ஏன் இப்படி என்று கேட்க  என்னையே வணங்கி விட்டார்கள் என்ன செய்வது! பாசம் அவர்கள் என்மீது காட்டும் பக்தியையும் அன்பையும் திரும்பவும் அவர்களுக்கு நான் காட்டுகிறேன். என் பக்தர்களை நான் காப்பாற்ற வேண்டும் என்று அவனை அடிக்கடி தொந்தரவு செய்கின்றேன்.

அப்பங்களே நல் முறையாக வாழுங்கள்!

இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

நான் திரும்ப திரும்ப அதையே தான் கூறிக் கொண்டு வந்திருக்கின்றேன்.

நல் முறையாக திரிபலா, திரிகடுகு சூரணம், தினமும் அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதைத் திரும்பத் திரும்ப உரைத்துக்கொண்டே வந்திருக்கின்றேன் நிச்சயம் என் பக்தர்கள் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பேன்.

நான் இப்பொழுதும் பூமியில்தான் வலம் வந்து கொண்டு இருக்கின்றேன். என்னுடைய பக்தர்களை ஒவ்வொருவரையும் பார்த்து நல்லது செய்து கொண்டே வந்து இருக்கின்றேன். நீங்கள் அனைவரும் புண்ணியரே! பல பிறவிகளில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே என் பெயரை உச்சரிக்க முடியும் என்னை வணங்கவும் முடியும்.

இப்பொழுது உலகமே இருளில் இருந்தாலும் நிச்சயம் நல்ல மாற்றங்கள் உண்டு என்பேன். தர்மம் செழித்து மேலோங்கும் பொழுது அனைவரும் நன்றாக வாழலாம் என்பேன். அதர்ம செயல்கள் அதிகமாக அதிகமாக இறைவனின் சோதனைகளும் அதிகமாகும் என்பேன். சில மனிதர்கள், மனிதர்களின் ஆசையைத் தீர்க்க அதைச் செய்கிறேன், இதைச் செய்து தருகிறேன் என்று சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள். அவர்களெல்லாம் ஏமாற்றுக்காரர்கள். என்னுடைய அருள் இல்லாமல் சித்தர்களுடைய அருள் இல்லாமல் அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பேன். அவர்களை நம்பி நீங்கள் ஏமாற கூடாது என்பேன். இறைவனை நம்புங்கள், எங்களை நம்புங்கள். எங்களை நம்புபவர்களுக்கு நாளும் கோளும் எதுவும் செய்யாது என்பேன். நல்ல விதமாக வாழுங்கள் என் அப்பன்களே!  என்னுடைய நல்முறையாக ஆசிகள்! மீண்டும் வந்து வாக்கு உரைக்கின்றேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

5 comments:

 1. பூமியில் உலா வந்து கொண்டிருக்கும் நீங்கள் இந்த பிரச்சனைக்கு முடிவு உடனே கட்டுங்கள்.
  இப்படியே நீண்டு கொண்டே போனால் எப்படி.

  தப்பு செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்து விட்டு மீதி உள்ளவர்களை வாழ விடுங்கள்.
  அனைவரிடமும் சோம்பேறித்தனம் அதிகமாகி விட்டது.

  கெட்டதை கெட்ட மனிதர்களை அழித்து நல்லவர்கள் வாழ வழி காட்டுங்கள்  ReplyDelete
 2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் திருவடிகள் போற்றி 🙏🙏🙏

  தங்கள் சொற்படி வாழ்வோம் ஐயா 🙏🙏🙏

  ReplyDelete
 3. ஓம் பிரம்ம தேவர் திருவடிகள் போற்றி
  அன்னை சரஸ்வதி தாய் திருவடிகள் போற்றி

  ReplyDelete
 4. என்ன தவம் செய்தோமோ அகத்தியர் பக்தர்களாக இருக்க... படிக்கும் போது கண்களில் கண்ணீர். அகத்தியரின் கருணையே கருணை தான்.
  என்றும் அகத்தியர் அன்புடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.

  ReplyDelete
 5. கருணைக் கடலே ..
  ஆசான் அகத்தீசா போற்றி..
  அம்மா லோபமுத்ரா தாயே போற்றி..

  ReplyDelete