​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 1 August 2021

சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1

  

ஓதி மலையில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு பாகம் 1

ஆதி பரம்பொருளை உள் நினைத்து உரைக்கின்றேன் அகத்தியன்

அப்பனே நலன்கள் மேலோங்கும் என்பேன்! நல் முறையாக முருகனும் எவ்வாறு என்பதை உணர்ந்து நல் ஆசிகளை தந்து கொண்டே இருக்கின்றான்!

ஆனால் மக்களோ எதை எதை என்று கூட மாயையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள்.

இப்படியே இவை செல்லச் செல்ல அழிவுதான் ஏற்படும் என்பேன்.

ஆனாலும் நல் முறையாக தாய் தந்தை நீயே அனைத்தும் நீயே என்று வேண்டிக் கொள்பவர்கள் மட்டும் பிழைத்துக் கொள்வார்கள் என்பேன்!

என்பேன் இனிமேலும்,

நல் முறையாக அப்பனே எவை எவை கூறும் அளவிற்கு கூட தகுதியான மனிதர்களை மட்டும் தான் இங்கே அழைப்பான் முருகன்.

நல் முறையாக அனைவரையும் முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு இவனுக்கு பலம் அதிகம் என்பேன்.

அதனால் ஆனாலும் சோதனைகள் அதிகம் என்பேன்

மீண்டும் வர மீண்டும் வர சுபிக்ஷங்கள் ஏற்படும் என்பேன், நல் முறையாக எவை எவை என்று கூற!

முருகன் நினைத்தால் அனைத்தையும் நடத்தி வைப்பான். அதனால்தான் அப்பனே எவ்வாறு என்பதை உணர்ந்து நல் முறையாக அவனை வணங்கி கொண்டே சென்றுவிடுங்கள். நல் முறைகள் ஆகவே பின் பின் எவ்வாறு என்பதை உணர்ந்து மாற்றங்கள் ஏற்படுவது உறுதி என்பேன்.

பின் பின் எவ்வாறு என்பதையும் கூட யோகா காலங்கள் வருவதாலும், அப்பனே நல் முறையாக நிச்சயம் இல்லாதவருக்கு உணவளித்தால் மனமகிழ்ந்து கொள்வான் சனியவன் அப்பனே ( சனீஸ்வரன்).
பின் யோக காலங்கள் வரும் என்பேன் ஆனாலும் கெடுதல்கள் செய்யமாட்டான். எவ்வாறு என்பதை உண்மை நிலை புரியும் அளவிற்கு எடுத்துக்காட்டாக, அளவிற்கும் கூட சில சில கட்டங்கள் மனக்குழப்பங்களும் நடுவிலே பின் எவை என்றும் மனதாக எண்ணங்கள் உயர்வாக இருந்தால் சனியவன் விலகிப் போவான் என்பேன்.

அப்படி இல்லாமல் சில சில எண்ணங்கள் கீழ்தரமாக இருந்தால் அவன் நிச்சயமாக அடிகள், நிச்சயம் வழங்கப்படும்,என்பதை போல் எவ்வாறு என்பதை கூட மீண்டு வரும் அளவிற்கு கூட நீந்தி சென்றாக வேண்டும் அப்பனே.

எண்ணங்கள் மேன்மையாகவே இருக்கட்டும் அப்பனே!

அப்பனே முருகனுடைய ராசிக்காரர்கள் முருகனைப் பாடி பாடி அனுதினமும் வணங்கி வந்தால் நலமாகும். இவ் ராசிக்காரர்கள் கந்தரனுபூதி  தினமும் பாடி தொழுது வந்தால் மேன்மை மேலோங்கும் என்பேன். நல் முறையாக கடக்கும் அளவிற்கு கூட மேன்மையான பலன்கள் உண்டு என்பேன்.

நல் முறையாக இன்றளவும் கூட இவ் ஓதிமலையில் இருந்து முருகன் அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் தந்துவிட்டான் இனிமேலும் எவ்வாறு என்பதையும் கூட  நீங்கள்தான்.

ஒன்றை உரைக்கின்றேன்! பின் பின் யோக காலங்கள் வருவதாலும் வாழ்க்கை எவ்வாறு என்பதை நீந்தி வருவதற்கு முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள், தன் வாழ்க்கை தன் கையில் என்று உண்மையாகவே எவ்வாறு என்பதையும் கூட மேன்மையான எண்ணங்களே நல் முறைகளாக உயர்த்திக் கொண்டே சென்றால் அப்பனே அனைத்து தெய்வங்களும் உதவி புரியும் என்பேன்.

ஆனாலும் வருகின்ற காலம் அழிவை நோக்கித்தான் செல்கின்றது.

அப்பனே யாரால் அழிவு ஏற்படுகிறது என்பதை மனிதனே அனைத்திற்கும் காரணம் என்பேன்.

எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப் பார்த்தால் நல் மனதாக நல்லறிவை கொடுத்துத்தான் நல் முறையாகவே இப்புவிக்கு இறைவன் அனுப்பி வைக்கின்றான் ஆனாலும் மனிதர்கள் மாயைகளில் சிக்கி கொண்டு மேல் எழுந்து நின்று பின் திரும்பவும் பின் எவை என்று கூட இறைவனிடம் இறைவனிடத்தில் வருகின்றார்கள் அப்பனே.

இதனால்தான் அப்பனே அறிவு உள்ள ஜீவிகளாக அனைத்து அறிவையும் கொடுத்து இவ்வாறு நடந்து கொள்ளுதல் வேண்டும் என்றால் கூட மனிதன் மீண்டும் தவறு செய்து திரும்பவும் வருகின்றானே  இது நியாயமா?

நல் முறைகள் ஆகவே அப்பனே மாற்றங்கள் வேண்டும். மாற்றங்கள் வேண்டும் என்பதற்கு இணங்க அப்பனே எவ்வாறு எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப் பார்க்கும் அளவிற்கு யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே!

அழிவு என்பது எதனிடம் இருந்து வருகின்றது? எவ்வாறு என்பதையும் கூட அப்பனே யோசித்துப் பார்த்தால் நன்மைகளே ஏற்படும்.

இதற்கு பரிகாரங்கள் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட மனிதர்கள் தவறு செய்துவிட்டு பரிகாரங்கள் பரிகாரங்கள் என்று அலைகின்றானே இதுவும் நியாயமா?

நல் முறைகளாக அப்பனே எவை எவை என்றுகூட, அன்பே தெய்வம் என்று மூலன் (திருமூலர்) கூட சொல்லிவிட்டான். அப்பனே இதுதான் உண்மை

அன்பாக இறைவனை வணங்கினால் அவன் தானே இறைவனே முழுமைப்படுத்தி அவன்பால் ஈர்த்து அனைத்தும் செய்து விடுவான்.

ஆனாலும் அப்பனே இவ்வுலகத்தில் பின் மனிதர்கள் எவை எவை என்று கூட எதனை எதனையோ நோக்கி அழிவை நோக்கி மாயையில் விழுந்து அழிந்து அழிந்து இனிமேலும் செல்வார்கள் என்பேன் கலியுகத்தில்  அப்பனே.

அப்பனே நல்ல முறையாக கலியுகத்தில் இறைவன் எவ்வாறு என்பதை கூட தேடிய வேட்டைக்கு, முருகா என்று அழைத்தாலே போதுமானது அன்போடு. நல்லெண்ணங்களை கொண்டு, நிச்சயம் வருவான் என்பேன்.

இவ்வாறின்றி நல் முறையாக மாற்றங்கள் மாற்றங்கள் எவ்வாறு என்பதையும் கூட மனிதர்களிடத்தில் தான் இருக்கின்றது என்பேன்.

எவ்வாறு என்பதையும் கூட நிமித்தம் காட்டி, பின் வாழ்க்கையில் எவ்வாறு என்பதையும் கூட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது.

ஆனாலும் இதயம் எவ்வாறு என்பதை கூட எவ்வாறு வருகின்றது என்பதைக் கூட புரியாமல் வாழ்ந்து கொண்டு வருகிறான் மனிதன்.

எவ்வாறு என்பதையும் கூட முன்நின்று பார்க்கும் பொழுது, சில யோசனைகளால் மாற்றப்பட்டு முன்னேற்றம் அடையப்படும் காலத்தில் அப்பனே விதியின் பயன்   எவ்வாறு என்பதையும் கூட ஈசன் கணித்து வைத்திருக்கின்றான்.

மனிதனுக்கு ஒவ்வொரு சோதனைக்கு உள்ளாகி உள்ளாகி பக்குவப் படுத்தினால் தான் திரும்பவும் நல் மனதாக வாழ்வான் என்று.

ஆனாலும் பக்குவப்படுத்த பக்குவப்படுத்த மனிதன் திருந்த போவதாக இல்லை.

அதனால்தான் அப்பனே நல் முறையாக இப்புவியில் பல இயற்கை சீற்றங்களை விளைவித்து நல் முறையாகவும் நல் மனிதர்களை ஈர்த்து கொண்டு பிறப்பற வினைகளால் சூழப்பட்ட மனிதர்களுக்கு நிச்சயம் பல பல நோய்கள் வரும் என்பேன். அப்பனே இவையன்றி கூட இதனால்தான் முன்னோர்கள் இதனையும் விளக்கும் அளவிற்கு தன் வாழ்க்கை தன் கையில் என்று கூறிவிட்டார்கள் அப்பனே. இதில் சூட்சமம் உண்டு யோசித்துக் கொள்ளுங்கள்.

நல் முறைகளாக எவையெவை என்று கூற சொன்னால் போதுமானது என்பதையும் கூட நிமித்தம் காட்டி மேல் நோக்கி பலன்கள் உள்ளன, உள்ளன என்பேன் அப்பனே நல் முறைகள் ஆகவே.

நல் முறைகள் ஆகவே இப்பவே உலகத்தில் இறைவனின் பலங்கள் அதிகமாக அதிகமாக கொண்டு தான் இருக்கின்றது. ஆனாலும் மனிதன் அவ் பலத்தை தானாகவே கெடுத்துக்கொண்டு இருக்கின்றான்.

தானே கெடுத்துக் கொண்டு திரும்பவும் பலம் வேண்டுமென்றால் அப்பனே இறைவன் எப்படிக் கொடுப்பான் என்பேன். அப்பனே தன் பலத்தை இறைவன் நல் முறையாக கொடுக்கும் மனிதனுக்கு அதனை நல் முறையாக ஒழுங்காக பயன்படுத்தவும் தெரியவில்லை.

அப்பனே எவை எவை என்றும் கூற இனிமேலும் குற்றங்கள் பொய் பித்தலாட்டம் தான் மிஞ்சும் என்பேன்.

அப்பனே இவையன்றி பின் நல் யோககாலங்கள் யோக காலங்கள் ஆனாலும் இயற்கை இயற்கை என்கின்றார்களே இதுதான் இறைவன் என்று யான் சொல்வேன்.

நல் முறைகளாக ஒன்றை ஒன்றை எவ்வாறு என்பதையும் கூட உண்மை நிலைகளை அனைவருக்கும் தெரிவிக்கின்றேன் அப்பனை நல் முறைகளாக இறைவனையே நினைத்து இறைவனே கதி என்றால் அப்பனே நிச்சயம் எவ்வாறு என்பதையும்கூட இறைவன் நல்லதே செய்வார் என்பேன்

இவையன்றி மாறுபட்டு அவை வேண்டும் இவை வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அப்பனே திரும்பவும் எவ்வாறு என்பதையும் கூற நினைத்து அனைத்தையும் கொடுத்து ஆனால் அப்பனே எதைப் பெற்றுக் கொண்டாயோ அதன் மூலமே அழிவு நிச்சயம் என்பேன் அப்பனே அதனால்தான் அப்பனே, எதைக் கொடுத்தாலும் நான் வாங்கிக் கொள்வேன் என்ற பக்குவம் மனிதருக்கு வேண்டும் என்பேன் அப்பொழுதுதான் நிலையாக நிற்கும் அப்பனே!

நல் முறைகளாக எவ்வாறு என்பதையும் கூட விளையாட்டாக எவ்வாறு எவ்வாறு உண்மை நிலைகளையும் கூட இம் முருகனும் (ஓதிமலை முருகன்) பலமுறையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட இதன் யோசனைகள் அப்பனே பலமாக ஆனாலும் ஒருவர் கூட எவ்வாறு என்பதையும் கூட நன்றாக இருக்க வேண்டும் நன்றாக எவ்வாறு என்பதைக்கூட அவை வேண்டும் இவை வேண்டும் எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப் பார்க்கும் அளவிற்கு கூட மாயையையே விரும்பிச் சென்று கேட்கிறார்கள் அப்பனே.

ஆனாலும்கூட முருகன் அதனையும் கூட கொடுத்துதான் அனுப்புகின்றான், அனுப்புகின்றான் என்பேன்.

ஆனாலும் இவையன்றி கூற முருகனுக்கும் சிலநேரங்களில் சிரிப்பு வந்துவிடுகிறது, சிரித்து விடுகிறான். ஆனாலும் திரும்பவும் வருவாய் நீ என்றுதான் அனுப்பி வைக்கின்றான்.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட உண்மைக்கு புறம்பாக எவ்வாறு என்பதைக்கூட உண்மை நிலையை கூறி அப்பனே எடுத்துரைக்கின்றேன்  இப்பொழுது.

அப்பனே அனைத்தும் நீயே அனைத்தும் நீயே கதி! உந்தனுக்கு தெரியும் எவை கொடுக்கவேண்டும் என்று பின் நல் முறைகளாக வணங்கி செல்லுங்கள் இறைவன் அனைத்தும் கொடுப்பான் மகிழ்ச்சியான வாழ்வையும் கொடுப்பான்.

இதைத்தவிர எதையெதையோ கேட்டுக்கொண்டிருந்தால், அப்பனே அதனாலேயே அழிவுகள் ஏற்படும் என்பேன்

இதனை நிச்சயமாய் கடை நாள் வரை கடைபிடிக்க வேண்டும் என்பேன், நல் முறைகளாக அப்பனே.

இவ்வுலகத்தில் நிச்சயம் மாற்றம் வரவேண்டும் என்பதற்காக இறைவன் என்னும் சோதனைகள் நடத்துவான் என்பேன். அப்பனை எவ்வாறு என்பதையும் கூட ஈசனும் நல் முறைகளாக பல சோதனைகளுக்கு உட்படுத்தினாலும் அப்பனே மனிதன் திருந்துவதே இல்லை என்பேன்.

அப்பனை எவ்வாறு என்பதையும் கூட நிச்சயம் இறைவன் நேரில் வருவான் ஆனாலும் மனிதர்கள் இறைவனா நீ என்று ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பேன் இக்கலியுகத்தில்.

அப்பனை மக்கள் எவ்வாறு செலுத்த வேண்டும் என்பதையும் கூட நல் முறைகள் ஆகவே உணரும் அளவிற்கு கூட பக்குவங்கள் வேண்டும் அப்பனே முருகா, முருகா அப்பனே எவ்வாறு என்பதையும் கூட சிவசிவா என்று, அப்பனே கடந்து சென்று விடுங்கள், போதுமானது அப்பனே!

எவ்வாறு வாழ்ந்தோம் அப்பனே பிறப்பின் ரகசியத்தை யாருக்கும் புரிவதில்லை என்பேன்.

அப்பனே அனைவருக்கும் எவ்வாறு என்பதையும் கூட பிறப்பின் ரகசியத்தை பிறக்கும்போதே ஒரு துணையாக ஆனாலும் வளர வளர எண்ணங்கள் மாற்றமடைகின்றது. எண்ணங்கள் மாற்றமடைய மாற்றமடைய அதைப் போலத்தான் வாழ்க்கை அமையும் என்பேன் அப்பனே நல் முறைகளாக சிறு குழந்தை தனமாக எவ்வாறு என்பதையும் கூட சிறு குழந்தையாகவே இருந்து கொண்டால் கடைசி நாள்வரை இறைவனே பார்த்துக் கொள்வான், அனைத்தும் செய்வான் அப்பனே நல் முறைகள் ஆகவே!

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

5 comments:

 1. சித்தன் அருள் - 1017 - சேர்க்கவில்லை.Please add 1017

  ReplyDelete
 2. முருகா! முருகா!! முருகா!!!
  அகத்தியா! அகத்தியா!! அகத்தியா!!!
  இறைவா நீயே துணை.

  ReplyDelete
 3. ஒரு மனிதனுக்கு புண்ணியகாலம் என்று ஒன்று உள்ளது. மனிதன் பிறந்ததில் இருந்து செய்யும் புண்ணிய செயல்கள் (சைவம் உணவு.பசுக்களை பராமரிக்க உதவுவது.வாயில்லா ஜீவன்களுக்கு உண
  வு கொடுப்பது.செடிகளை வேரோடு பிடிங்கி எரியாமல் இருப்பது.தீய சொற்கள் பேசாமல் இருப்பது etc....).ஒரு மனிதனுக்கு தான் இறப்பதற்கு முன்பு இந்த புண்ணியகாலம் ஆரம்பிக்கும் போது அகத்தியர் புண்ணியத்திற்கான பலன்களை நமக்கு அள்ளி தருவார். நம் தலையெழுத்து படி நமக்கு கெட்டது நடக்கும் என்று இருக்கும் ஆனால் அதிக பாதிப்பு இல்லாமல் நாம் தப்பித்து கொண்டு இருப்போம்.நம் புண்ணியகாலம் ஆரம்பிக்கும் போது அகத்தியர் வந்து புண்ணியத்தின் பலனை இரட்டிப்பாக நமக்கு தருவார் .
  அதில் ஒன்று தான் தற்போது உள்ள நிலமை அதில் இருந்து தப்புவதற்காக நமக்கு தந்த மூலிகைகள்.
  அகத்தியர் மகரிஷியை அடைக்கலம் அடைந்தால் போதும் அவருக்கு தெரியும் அவர் குழந்தைகளை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று.
  "ஓம் ஹ்ரீம் அகத்திய மகரிஷி யே நமஹ "என்று அவர் மூலமந்திரத்தை நேரம் கிடைக்கும் போது எல்லாம் சொல்லுங்கள்.


  ReplyDelete
 4. முருகா சரணம் 🙏🙏🙏

  அகத்தியர் அய்யன் மூல மந்திரம்
  ஓம் அறம் அகத்தீசாய நமக 🙏🙏🙏

  ReplyDelete