​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 22 August 2021

சித்தன் அருள் - 1026 - அன்புடன் அகத்தியர் - முத்தம்பட்டி அனுமார் ஆலயம்!18/8/2021 அன்று தர்மபுரி முத்தம்பட்டி அனுமன் ஆலயத்தைப் பற்றி குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு:-

அப்பனே நல்லாசிகள் நல் முறையாக முறையாக இந்த ஆலயத்திற்கு என்று ஒரு சிறப்பு உள்ளது அப்பனே

இறைவன் ராம அவதாரத்தில் நல் முறையாக இலங்கையில் யுத்தகளத்தில் ராமனுக்கு மூலிகைகள் தேவைப்பட பின் நல் முறையாய் அனுமனை பணித்து நல் முறையாக சென்று மூலிகைகளைப் பறித்து வா என்று கட்டளை இட்டான்.... அனுமனும் நல் முறையாகவே மூலிகைகளை தேடி அலைந்து கடைசியில் சஞ்சீவி மலையை பெயர்த்து பின் நல் முறையாக ராமனிடம் கொண்டு சேர்த்தான்.

ராமனும் நல் முறையாக மூலிகைகளை பரிசோதித்து சில மூலிகைகள் கிடைக்கவில்லை மீண்டும் சென்று அந்த மூலிகைகளை பறித்து வா என்று கூறினான்.

அனுமனும் அந்த மூலிகைகளை தேடி இந்த காட்டிற்கு வந்தான் தொப்பூர் காடு என்ற பெயர் இந்த காட்டிற்கு வந்த பொழுது அந்த மூலிகைகள் கிடைத்தது அதை பறித்து செல்ல முற்படும் பொழுது நல் முறையாக அந்த மலையிலும் காட்டிலும் வாழ்ந்து வந்த தேவதைகள் ஆஞ்சநேயா இந்த மூலிகைகளை பறித்து செல்ல எங்களது அனுமதி தேவை எங்களின் அனுமதி வேண்டும் என்றால் நீ இங்கே இருக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும் இந்த மலையில் பல அக்கிரமங்களும் அநியாயங்களும் வருங்காலத்தில் நடந்தேறும். இவ்வாறு நடக்காமல் நீ இங்கேயே இருந்து காக்க வேண்டும் தவறான காரியங்களை செய்ய வருபவர்களை தண்டிக்க வேண்டும் அப்போதுதான் இந்த மூலிகைகளை நாங்கள் தருவோம் என்று கூறிய பின் நல் முறையாக 

பின் நல் முறையாக அனுமனும் சரி என்று சொல்லி மூலிகைகளை தாருங்கள் என்று கேட்டு மூலிகைகளை பறித்து பின் நல் முறைகள் ஆகவே புறப்பட்டான் அப்போது தேவதைகள் என்ன ஆஞ்சநேயா நீ உரைத்ததை மறந்து விட்டாயா?

நீ இங்கேயே இருக்கப் போவதாக வாக்கு தந்தாய் இப்பொழுது நீசெல்கின்றாயே இது நியாயமா?

அனுமனும் பின் நல் முறையாக தேவதைகளே நோக்கி நான் இந்த மூலிகைகளை என் இறைவன் ராமனிடத்தில் கொண்டு சேர்க்கவேண்டும் சற்று பின்னால் திரும்பிப் பாருங்கள் என்று கூறினான். அப்பொழுது அவர்கள் பின்னால் சுயம்பு வடிவாக கல்லால்  அனுமன் சிலையாக தோன்றினான். 

பின் நல் முறைகள் ஆகவே தேவதைகளே நான் இந்த காட்டில் இருக்கப் போகின்றேன். தவறான எண்ணம் கொண்டு வருபவர்கள் தவறை செய்ய வருபவர்கள் அனைவரையும் தண்டிப்பேன். இந்த காடுகளையும் மலைகளையும் நான் இங்கிருந்தே காப்பேன் என்று வாக்கு தந்தான். அந்த இடம்தான் இந்த கோயில் அப்பனே! இப்பொழுதும் இந்த இடத்திற்கு தவறான எண்ணம் கொண்டவர்கள் வரமுடியாது. தூய பக்தியுடன் நல் மனதாய் வருவோருக்கு அருள் தந்து கொண்டுதான் இருக்கின்றான், இந்த அனுமன்.

அப்பனே என்னுடைய நல்லாசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................தொடரும்!

10 comments:

 1. அகத்தியர் அன்பு அதிகம் அதிகம். பணிகிறேன் சுவாமி

  ReplyDelete
 2. ஜெய் ஆஞ்சநேயா🙏🙏🙏

  ReplyDelete
 3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

  ReplyDelete
 4. கோயில் முகவரி https://g.co/kgs/f3QKGz

  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ

  ReplyDelete

 5. ஸ்ரீவீர ஆஞ்சநேயர் - முத்தம்பட்டி கிராமம்
  தருமபுரியில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில், சுமார் 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது முத்தம்பட்டி அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில்.

  ஸ்ரீவீர ஆஞ்சநேயர் - முத்தம்பட்டி கிராமம்
  ஸ்ரீவீர ஆஞ்சநேயர் - முத்தம்பட்டி கிராமம்
  சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஓரிடத்தில், மலையில் இருந்து சரிந்து விழுந்த பாறைகள் குவியலாகக் கிடந்ததைக் கண்ட மக்கள், அவற்றை அகற்றிய போது மலைப்பாறையில் புடைப்புச் சிற்பமாகத் திகழும் இந்த அனுமனைக் கண்டு மெய்சிலிர்த்தனர். அந்த இடத்தில் அனுமனுக்குப் பொதுமக்கள் சேர்ந்து கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.

  இன்றைக்கும், அமாவாசை தினங்களில் இந்த அனுமனை வழிபடப் பெருந்திரளாக பக்தர்கள் இங்கே கூடுகிறார்கள். சனிக்கிழமைகள், அனுமன் ஜயந்தி, ஆங்கில மற்றும் தமிழ் வருடப் பிறப்பு ஆகிய தினங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடைமாலை சாற்றி மனமுருகப் பிரார்த்தித்தால், நினைத்தது நடக்கும், வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

  ReplyDelete
 6. முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் தொடர்வண்டிப் பாதையில் முத்தம்பட்டி தொடர்வண்டி நிறுத்தத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் தொப்பூர் வனப்பகுதியில் உள்ள ஒரு அனுமன் கோயிலாகும். இக்கோயிலை அடைய பேருந்து வசதி கிடையாது சாலைவழியாக வரவேண்டுமானால் தருமபுரியில் இருந்து நல்லம்பள்ளி வந்து அங்கிருந்து வாடகை தானியில் வரவேண்டும் இக்கோயிலுக்கு பெரும்பாலானவர்கள் தொடர்வண்டி வழியாகவே வருகின்றனர்.

  ReplyDelete
 7. இக்கோயிலைச் சுற்றி குன்றுகளும், மரங்கள் சூழ்ந்த நிலையில் அவற்றிற்கு இடையில் சலசலக்கும் ஓடைகள் அதன் கரையில் உள்ள ஒரு பாறையில் ஏழு அடி உயர ஆஞ்சநேயரின் புடைப்புச் சிற்பமாக ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளா்.

  ReplyDelete
 8. தர்மபுரி: நல்லம்பள்ளி அடுத்த முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில்

  ReplyDelete
 9. ஓம் வீர தீர மஹாராஜா ஆஞ்சநேயருக்கு ஜெய்
  ஓம் வீர தீர மஹாராஜா ஆஞ்சநேயருக்கு ஜெய்
  ஓம் வீர தீர மஹாராஜா ஆஞ்சநேயருக்கு ஜெய்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்

  ReplyDelete
 10. ஓம் வீர தீர மஹாராஜா ஆஞ்சநேயருக்கு ஜெய்
  ஓம் வீர தீர மஹாராஜா ஆஞ்சநேயருக்கு ஜெய்
  ஓம் வீர தீர மஹாராஜா ஆஞ்சநேயருக்கு ஜெய்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்

  ReplyDelete