​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 2 August 2021

சித்தன் அருள் - 1018 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-2

அனைவருக்கும் சித்தன் அருளில், இன்றைய ஆடி கார்த்திகையின்,  ஓதியப்பரின் நல் நாள் வாழ்த்துக்கள்!

ஓதிமலையில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு  பாகம் 2.

அப்பனே பெண் பிறக்கும் பொழுது எவ்வாறு என்பதையும் கூட நிமித்தம் காட்டி தாயவள் எவ்வாறு என்பதை என்கூட நிமித்தம் காட்டி அப்பனே தன் பிள்ளைக்கு தாயவள் என்னென்ன வேண்டும் என்றுகூட நல் முறையாகவே செய்வாள். ஆனாலும் இதனை வளரும் பொழுது மனிதனின் மனதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கர்மத்தில் குதிக்கிறான். இவ்வாறு குதிக்க, குதிக்க அவன் தன் வாழ்க்கையை அவனே கெடுத்து கொண்டு இருக்கின்றான்.

அதேபோல் அப்பனே சிறுபிள்ளையாக எவ்வாறு வந்தாயோ அதேபோல் கடை நாள் வரை இருந்துவிட்டால் அனைத்தையும் நல்குவான் என்பேன் ஆனால் மனிதர்கள் இவ்வாறு இருப்பதில்லை.

இதனால்தான் அழிவுகளும் வருகின்றன என்பேன்.

நல் முறைகளாக அப்பனே எவை என்றும் அனைத்தும் நல் முறைகள் ஆகவே மனிதனுக்கு அனைத்தும் எவ்வாறு என்பதையும் கூட நிமித்தம் காட்டி இறைவன் அனைத்தும் இலவசமாக தான் கொடுத்துக் கொண்டிருக்கிறான். ஆனாலும் மனிதன் அதனையும் கூட சற்று செயற்கையாக மாற்றிக் கொள்ளும் தகுதி படைத்துவிட்டான். தகுதி படைத்துவிட்டான் என்பதற்கு இணங்க இனிமேலும் கலியுகத்தில் அப்பனே கலியுகக் கடவுளான முருகனே ஒவ்வொருவரையும் திருத்துவான் என்பேன்.

எவ்வாறு என்பதையும் ஆனாலும் ஈசன் கூட கட்டளைப்படி முருகா இவையெல்லாம் மனிதனை எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப் பார்க்கும் அளவிற்கு மனிதன் எப்போதும் திருந்த போவது இல்லை இல்லை என்பேன். இனிமேலும் சில கட்டங்கள் கொடுக்கத்தான் போகின்றேன் என்பதையும் கூட ஈசனின் சவாலாக விளங்குகின்றது.

அப்பனே இனிவரும் காலங்களில் அப்பனே எவ்வாறு எவ்வாறு என்பதையும் கூட ஏமாற்றங்கள் அதிகம் ஆனாலும் இவற்றை விட ஏமாறுபவர்கள் அதிகம். இவ்வாறு இன்றி அப்பனே நல் முறையாக இறைவனை சரணாகதி அடைந்துவிட்டால் தான் கலியவன் (கலிபுருஷன்) நன்றாகவே செய்வான் என்பேன். கலியவனும் எவ்வாறு என்பதையும் கூட இறைவனிடத்தில் அப்பனே சில மனிதர்களையும் நல்நோக்கி சிலபக்தி உள்ளவர்களையும் சில கஷ்டங்களுக்கு உள்ளாக்குவான் என்பேன்.

ஆனாலும் அப்பனே இறைவனிடத்தில் கெட்டியாக பிடித்துக் கொள்ளும் அளவிற்கு தகுதி உள்ளவர்களை இறைவனை நிச்சயம் காப்பாற்றுவான் என்பேன் சிலசில வினைகளில் இருந்து அப்பனே.

நல் முறைகள் ஆகவே அப்பனே எவ்வாறு என்பது என்கூட  சனியவனும் (சனீஸ்வரன்)  கூட பின் பின் சனி சனி என்று கூட சனியின் காலத்தில் சில தீங்குகள் நடைபெறுகின்றன. நடைபெறுகின்றனஎன்பதையும் கூட சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள் ஆனால் அது தவறானது என்பது விடயம்(விஷயம்)

சனியவன் எவ்வாறு என்பதையும் கூட மனமகிழ்ந்து பின் நல்லவைகளாக நல்லதையே செய்துகொண்டு இருந்தால் சனி அவனும் மேன்மையான பலன்களை கொடுப்பான் என்பேன் அதற்கிணங்க மாறுபாடாக செய்து கொண்டு வருபவர்களை நிச்சயம் தண்டிப்பான் என்பேன்.

ஆனாலும் சனி கொடுத்தால் எவ்வாறு என்பதையும் கூட நலன்களே ஏற்படும் என்பேன். அப்பனே ஆனாலும் அனுபவத்தைத் தான் கொடுக்கின்றான் என்பேன். ஆனாலும் அவை அனுபவம் எப்படி இருக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அப்பனே நலமாக நலமாக எண்ணிய எண்ணங்கள் நல் முறையாகவே ஈடேறட்டும் எனது ஆசிகள் அப்பனை நல் முறையாக.

நல் முறையாக எவ்வாறு என்பதையும் கூட வரும் காலங்களில் அப்பனை நல் முறையாக இயற்கையான உணவுகளை உட்கொள்ளுங்கள் அப்பனே அதிகமாக.

அப்பனே நல் முறையாக நிச்சயம் ஒன்றை சொல்கின்றேன் அப்பனே நல் முறையாக எங்கள் மூலிகையான கடுக்காயை நிச்சயம் மறக்காதீர்கள் அப்பனே. ஒரு மாதத்திற்கு ஐந்து முறையாவது உட்கொள்ளுங்கள்

அப்பனே நல் முறையாக அடிக்கடி கிராம்பையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் அப்பனே.

அப்பனை நல் முறையாக இதனைத்தான் யான் சொல்லிக்கொண்டே வந்து கொண்டிருக்கின்றேன் நல்ல முறையாக திரிபலா திரிகடுகம் மூலிகைகளை மறக்காமல் நிச்சயம் எடுத்து வாருங்கள். இவற்றில் உள்ளவை எதையும் உங்களை தாக்க விடாது என்பேன்.

நல் முறைகளாக எவ்வாறு என்பதையும் கூட  மேன்மை நிலை பெற்று இவற்றையும் கூட முருங்கை எனும் நல் மூலிகையை நிமித்தம் காட்டி நல் மூலிகைகளான பொன்னாங்கண்ணி மூலிகை மணத்தக்காளி எனும் மூலிகையையும் பின் பின் எவ்வாறு என்பதையும் கூட ஆவாரம்பூ நல் முறைகளாக எடுத்துக்கொள்ள அது விரைவிலேயே மாற்றங்கள் வரும் என்பேன்.

வரும் என்பேன் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நிமித்தம் காட்டி எவ்வாறு என்பதையும் கூட நலங்கள் எழுவதற்கு சொல்கின்றேன் அப்பனே.

இவ்வாறு என்பதையும் கூட நல் முறைகளாக நின்ற பொழுதே முருகனையும் வணங்கி செல்லுங்கள் எவ்வாறு என்பதையும் கூட நல் முறைகள் ஆகவே கலியுக தெய்வம் முருகன் நிச்சயம் காப்பாற்றுவான் என்பேன்.

கலியவனும் முருகனிடத்தில் சில சண்டைகள் இடுவான் என்பேன். ஆனாலும் நல் முறைகள் ஆகவே முருகன் நிச்சயமாய் கலியுகதெய்வமாக கலியவனை வெற்றி கொள்வான்.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட காலங்கள் மாறுகின்றதா? மனிதர்கள் மாறுகின்றார்களா? அப்பனே காலங்கள் மாறுவதில்லை மனிதர்கள் மாறுகின்ற படியால் பின்காலங்களும் மாறிக் கொண்டேதான் செல்கின்றது.

அப்பனே இவ்வாறு என்பதையும் கூட நிமித்தம் காட்டி இக்காலங்களில் தான் இறைவன் என்று வைத்துக்கொள்ளலாம்.

அப்பனே நல் முறைகளாக மனிதர்களாக பிறந்துவிட்டோம் ஆனாலும் அப்பனே வாழவேண்டும் வாழ துடிக்க எவ்வாறு என்பதையும் கூட மேன்மை நிலைகள் பெற்று அப்பனே ஆனாலும் மோட்ச கதியை நல் முறையாக நான் தருகின்றேன் அப்பனே.

நல் முறையாக அனைவருக்கும் ஆசிகள் பலமாக அப்பனே, பலமாக அப்பனே இன்னும்கூட மீண்டும் மீண்டும் பிறவிகள் பிறந்து கஷ்டப்பட தேவையில்லை என்பேன். இப் பிறப்பே போதும் நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்பதையும் கூட அப்பனே ஒன்றை உணருங்கள் அப்பனே

இப் பிறப்பில்  இவ்வளவு காலம் கடந்து வந்து விட்டீர்களே இவ்வளவும் என்பதை கூட  சோதனைகள் தான் அனைவருக்கும்!

அப்பனே நல் முறையாக இதனையும் கடந்தால் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நிற்கும் அளவிற்கு இன்று முருகன் நிச்சயமாய் அருளாசிகள்.

அருளாசிகள் ஆக தெரிவித்துக் கொள்ளும் அளவிற்கு இதனடியில் (ஓதிமலை) பல பல சித்தர்களும் தவங்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்

அப்பனே இதனை உணர்வதற்கு அதனால்தான் அப்பனே நல் முறையாக இங்கு வந்து சென்றவர்களும் சில மன மாற்றங்கள் நிச்சயம் உருவாகும் என்பேன்.

நல் முறைகளாக அப்பனே எவ்வாறு என்பதையும் கூட உண்மை என்றும் கூட விளங்கும் அளவிற்கு இவன்தனும்(ஓதிமலை முருகன்) நிச்சயமாய் நல்ல முறைகள் ஆகவே நடந்து வலம்வந்து கொண்டுதான் இருக்கின்றான்

(இந்த இடத்தில் முருகன் வலம் வரும் வாக்கினை உரைத்த நேரத்தில் அதனை ஆமோதிப்பது போல ஓதிமலை முருகன் சன்னதியில் இருந்து கௌளி சத்தம் ஒலித்து இருப்பது தெளிவாக ஆடியோவில் பதிவாகி உள்ளது)

அப்பனே எப்பொழுது எதை எதை தர வேண்டும் என்பதை நிச்சயமாய் தருவான் என்பேன்.

அப்படி எதுவும் நல் முறையாய் கடைசியில் எதுவும் காப்பாற்றாது என்பேன் அப்பனே இறை பலங்கள் தரிசனங்கள் மட்டுமே காப்பாற்றும் என்பேன் இதனை நிச்சயம் மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்பனே ஆனால் மனிதன் இறைவனை தேட தேட கஷ்டங்கள் தான் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட எதனையும் என்பதைக்கூற ஆனாலும் மனிதனை மாயையின் மடியில் போகச் சொல்லும் அப்பனே அவை அழியக்கூடியது.

ஆனால் இறையின் அருள் அப்பனே அழியாதது

ஆனாலும் அழியாததற்கு தேடுதல் தேடுவதற்கு சிறிது கஷ்டங்கள் ஆனாலும் அதனுள் நுழைந்து விட்டால் பெரும் மாற்றங்கள் உண்டு என்பேன்.

அப்பனே வாழ்க்கையின் பாதையை புரிந்துகொண்டு அப்பனே நலமாக நலமாக மீண்டும் பிறப்புக்கள் தேவையில்லை என்பேன்.

அப்பனே ஒரு சூட்சமத்தை விளக்குகின்றேன்! இங்கு அனைவரும் இருக்கின்றீர்களே(ஓதிமலையில் வாக்கு உரைத்தபோது வாக்கு கேட்க கொடுத்துவைத்த பக்தர்கள் ,கோயில் அர்ச்சகர்கள்) இங்கு இருக்கும் அனைவருக்கும் நிச்சயமாய் கடை(கடைசிபிறவி) பிறப்பு என்பதை சொல்லுகின்றேன்.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட போதும் போதும் அப்பனே ஒன்றை தெரிவிக்கின்றேன். பல கஷ்டங்களில் இருந்து மீண்டு வந்து இருக்கிறீர்கள் நீங்கள் அனைவரும்

இனியும் பிறந்து கஷ்டங்கள் தேவையா?

அப்பனே வேண்டாம் அப்பா

அப்பனே இதுவும் நல் முறைகளாக முருகனின் விளையாட்டே என்பேன்.

அப்பனே நல் மாற்றங்கள் எவ்வாறு என்பதைக்கூட இப்புவியில் நல் மாற்றங்கள் நிச்சயம் நடைபெற செய்வான் முருகன் நல் முறைகள் ஆகவே அப்பனே எவ்வாறு என்பதையும் கூட வெவ்வேறு பாதைகள் நல் முறைகள் ஆகவே இனிமேலும் சித்தர்களின் ரகசியங்கள் பலப்பல உள்ளங்களில் ஏற்படுத்தப்பட்டு அப்பனே நல் முறைகள் ஆக்கும் என்பேன்.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நல் முறைகள் ஆகவே திருத்தல முருகனை நல் முறையாகவே வணங்கி வணங்கி சென்றுகொண்டே இருந்தாலே போதும் .

கர்மாக்கள் பல அழியும் என்பேன். ஆனாலும் அப்பனே முருகன் அதிவிரைவில் விடமாட்டான் என்பேன்.

அப்பனே நல் முறைகளாக உருவாக்குவதற்கு சமமான கர்மாக்களை போகன்(போகர் சித்தர் பழனி நவபாஷண சிலை உருவாக்குவதற்கு முன் ஓதிமலைக்கு வந்து சிலகர்மாக்களை கழித்து விட்டு சென்றதை குரு அகத்தியர் குறிப்பிடுகிறார்) இங்கு வந்துதான் கழித்தான் என்பேன்!

அப்பனே எவ்வாறு என்பதையும் கூற பல சித்தர்களும் இங்கு நல் முறையாகவே இங்கு தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

பல சித்தர்கள் இங்கு இருந்து தவழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இப்போதும் கூட.

அப்பனே ரகசியமாக எவை என்று கூற! இரவில் தங்கி செல்கின்றார்கள் என்பேன்.

அப்பனே அதிவிரைவில் ஓர் சித்தனும் காண்பான் என்பேன் ஒருவன் மனித வடிவில் இங்கு.

அப்பனே நல் முறைகள் ஆக நல் முறைகள் ஆக அப்பனே எதை வேண்டுமானாலும் முருகனிடம் கேட்டுச் செல்லுங்கள்.

நல் முறைகள் ஆகவே வரங்கள் அதிகம் கொடுப்பான் என்பேன். ஆனாலும் அதனை தக்க வைத்துக் கொள்ளுவது உங்களிடத்திலே!

அப்பனே நல் முறைகளாக எதனை என்றும் பின் நல் யோகங்கள் குறைகள் இல்லை அப்பனே.

யானும் நல் முறையாகவே ஆசீர்வதிக்கிறேன் அனைவருக்கும் நல்முறைகளாகவே மீண்டும் வந்து பல வாக்குகள் பல சூட்சுமங்கள் உரைக்கின்றேன்  உரைக்கின்றேன் இங்கு.

ஓதிமலை குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு முற்றிற்று!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................... தொடரும்!

5 comments:

 1. ஓதி மலை முருகன் பிரசாதம் அனுப்ப முடியுமா?
  ஒரு நாள் சென்று வணங்க வேண்டும். எந்த நாட்கள் திறந்து இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

   வெள்ளிக்கிழமை
   பௌர்ணமி
   அம்மாவாசை
   சஷ்டி
   கிருத்திகை

   காலை 10 மணி அளவில் அர்ச்சகர் கோவிலுக்கு செல்வார்.

   இது 4 வருடங்கள் முன்பு நான் அங்கு சென்ற போது கிடைத்த தகவல்

   ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் துணை 🙏🙏🙏

   Delete
 2. anbu muruga,gnana muruga saranam
  agathiyar appa thiruvadi sharanam

  ReplyDelete
 3. ஓம் சரவணபவ!!
  ஓம் சரவணபவ!!
  ஓம் சரவணபவ!!
  ஓம் சரவணபவ!!
  ஓம் சரவணபவ!!
  ஓம் சரவணபவ!!

  ReplyDelete
 4. Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!

  ReplyDelete