​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 29 July 2021

சித்தன் அருள் - 1016 - அன்புடன் அகத்தியர் - சுருளிமலையில் பொதுவாக்கு!


சுருளி மலையில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு!

அகத்தியா அகத்தியா என்று பக்தி காட்டி வணங்கினால் பிரம்மதேவன் மனமிரங்கி அருளுவார். ஏனென்றால் பிரம்மதேவனுக்கு அகத்தியன் நான் பல சமயங்களில் உதவி செய்து இருக்கின்றேன்.

அதுபோலத்தான் அப்பனே சித்திரகுப்தன் அவனுக்கும் பல நேரங்களில் நான் உதவி இருக்கின்றேன் பரிகாரங்கள் கூறி இருக்கின்றேன்.

மனிதர்களின் தலையெழுத்து விதியை  பிரம்ம தேவனிடம் சித்ரகுப்தன் இடம் சொல்லி மாற்ற முடியும் என்னால். ஆனால் அது தவறாகிவிடும்.

அப்பனே மனிதர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு விதமான கட்டங்கள் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு வந்தால் தான் இறைவனைக் காண முடியும். இல்லையென்றால் காணமுடியாது அப்பனே. அதனால்தான், என்னை நம்பி வருபவர்களுக்கு சிறிதளவு கஷ்டத்தைக் கொடுத்து அவர்களுக்கு அனுபவத்தைக் கொடுத்தது இறைவனைக் காண்பதற்கு வழி காட்டுகிறேன் அப்பனே!

அப்பனே மனிதர்களுக்கு மேன்மையான எண்ணம் வேண்டும்! மேன்மையான எண்ணம் எவ்வளவு இருக்கிறதோ, அவர்களே முன்னேறி செல்வார்கள். அப்பனே மேன்மையான எண்ணம் இல்லை எனில், இறைவனை எவ்வளவு தேடினாலும், இறைவன் கிடைக்க மாட்டான். மேன்மையான எண்ணங்களும் சிந்தனைகளும் தர்ம காரியங்களும் ஈடுபடுவதும் இறைவனைக் காண வழி செய்யும் அப்பனே!

யாருக்கும் தீங்கு செய்யாத குணமும், யார் மீதும் பொறாமை இல்லாத குணமும், இருந்தால் வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றமும் கிட்டும் அப்பனே!

அறம் செய்ய விரும்பு தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்து அ என்றால் அறம் அப்பனே! அறம் என்றால் தர்மம் நல்வழிகளில் யார் தர்மம் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு இறைவன் நிச்சயம் காட்சி தருவான்! அது வேண்டும் இது வேண்டும் என்று பலனை எதிர்பாராமல் எவரொருவர் தர்ம காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் நல் முறையாக செய்து வருகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் இறை தரிசனம் உண்டு அப்பனே!

அப்பனே அகத்தியா நீயே பார்த்துக்கொள் என்று வணங்கி விட்டால் போதும் நான் பார்த்துக்கொள்வேன்! என்னிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கக்கூடாது! அகத்தியா அகத்தியா என்று அன்பால் வணங்கினால் போதுமானது எனக்கு தெரியும் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அப்பனே!

நல் முறையாக இப்போதே சொல்லி விடுகிறேன் அப்பனே! பிரம்மதேவனுக்கு எந்த மாதிரியான மனிதர்களை பிடிக்கும் என்று சொல்லிவிடுகிறேன் அப்பனே! பொறாமை குணங்கள் இருக்கக்கூடாது. சாந்தமான மனதாய் இருக்க வேண்டும். தியானங்கள் செய்ய வேண்டும். தன்னைப்போல் பிறரை எண்ண வேண்டும். இவை போன்ற எண்ணங்கள் இருக்கும் மனிதர்களை பிரம்மதேவன் விரும்புவான், அவனும் பிரியப்பட்டு தலையெழுத்தை மாற்றி தருவான் அப்பனே!

ஆணவம் அகங்காரம் தீய குணங்கள் இருந்தால் பிரம்மதேவன் மேலும் தட்டி வைத்து கீழே விழச் செய்து விடுவான். கிரகங்களுக்கு கட்டளையிடுவான். மனிதர்கள் நிச்சயமாக அவர்கள் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும் அப்பனே மனிதர்கள் சரியான வழியில் சென்றால் பிரம்மனே அவர்கள் தலையெழுத்தை மாற்றி விடுவான்

வரக்கூடிய காலகட்டங்கள், மனிதர்களுக்கு மேலும் புதிய புதிய நோய்களை தரும் அப்பனே! நோய் நொடிகளிலிருந்து மனிதர்களை காக்க நான் முதலிலேயே மூலிகைகளை கூறி இருக்கின்றேன்! அவற்றை சரியாக உட்கொண்டு வருதல் வேண்டும் அப்பனே! இதுவே மனிதர்களுக்கு பரிகாரமாக உரைத்திருக்கிறேன். நிச்சயம் அனைவரும் நான் கூறிய மூலிகை மருந்துகளை உட்கொள்ளுதல் வேண்டும் அப்பனே.

வரக்கூடிய காலங்களில் உண்மைக்கு காலங்கள் இல்லை அப்பனே. என்போன்ற சித்தர்களை வணங்குங்கள் நாங்கள் கூறும் வாழ்க்கை முறைக்கு மாறுங்கள் நல்லதே நடக்கும் அப்பனே. நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை சித்தர்கள் ஆகிய நாங்கள் எடுத்து சொல்லுவோம். நல்லவர்கள் இந்த காலகட்டத்தில் மறைந்து வாழ்வார்கள். அவர்கள் தம்மை வெளிப்படுத்த மாட்டார்கள் அப்பனே. இருக்கும் நல்லவர்களை  சித்தர்கள் ஆகிய நாங்கள் வெளிக் கொணர்வோம்.

ஒன்றுமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு அப்படி கஷ்டப்பட்டாலும் நல்லதே நினைத்துக்கொண்டு நல்லது செய்து வரும் அவர்களை நாங்கள் வெளியே வர வைத்து அனைவருக்கும் தெரிய வைப்போம். மனிதர்களால் முடியாத தெய்வ காரியங்களையும் நல்ல காரியங்களையும் சித்தர்கள்  நாங்கள் செய்து முடிப்போம். சித்தர்கள் அனைவரும் பூமியில் தான் உலாவி கொண்டிருக்கின்றோம் அப்பனே. சித்தர்கள் அனைவரும் இறங்கி வந்து விட்டார்கள். மனிதர்களை நம்பி நம்பி ஏமாந்தது போதும் சித்தர்கள் நாங்கள் இனி பார்த்துக்கொள்வோம் அப்பனே!

மனிதர்கள் புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும் பல மனிதர்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே.

மனிதர்கள் புண்ணிய காரியம் செய்து விட்டு நான் அதைச் செய்வேன் இதைச் செய்தேன் அந்தப் புண்ணிய காரியத்தை செய்தேன் இந்த புண்ணிய செயலைச் செய்தேன் என்று கூறிக்கொண்ட நடந்தால் அவர்கள் செய்த புண்ணியத்தின் பலன் அவர்களுக்கு கிடைக்காது அப்பனே. நான் அவ்வளவு புண்ணிய காரியம் செய்து இருக்கிறேன் இதையெல்லாம் செய்து இருக்கின்றேன் எனக்கு ஒன்றுமே நடக்கவில்லை என்றும் கூறக்கூடாது அப்பனே. நீங்கள் செய்யும் புண்ணிய செயல்கள் இறைவனுக்கும் எங்களுக்கும் தெரிந்தால் மட்டும் போதுமானது நிறைய மனிதர்களை நாங்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம் அப்பனே. அவர்கள் புண்ணியச் செயல்கள் செய்தாலும் கஷ்டங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. ஏன் அவர்களுக்கு கஷ்டம் வருகிறது? ஏனென்றால் நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று கூறிக் கொண்டு திரிகின்றார்கள். இதனால் தான் அவர்களுக்கு புண்ணிய பலன் கிடைக்காமல் கஷ்டம் வருகிறது மனிதர்கள் அவர்கள் செய்யும் புண்ணியச் செயல்களை இறைவா உன்னருளால் அனைத்தும் நன்றாக நடக்கட்டும் என்று கூறி எவரொருவர் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் பலனுண்டு அப்பனே.

மனிதர்கள், குலதெய்வம் விஷயங்களில், மனிதன் தவறு செய்கின்றான் அப்பனே பெண்களுக்கு இரண்டு குல தெய்வம் அவர்கள் பிறந்த வீட்டில் வழிபடும் குலதெய்வம் திருமணமாகி கணவன் வீட்டுக்குச் சென்றால் கணவன் வழி குலதெய்வம் அதுவும் குல தெய்வமாகி விடுகிறது. அதனால் பெண்களுக்கு இரண்டு குல தெய்வங்கள் இரு குல தெய்வங்களையும் வணங்கி வர அவர்கள் வாழ்க்கையில் சிறப்பைத் தரும் அப்பனே.

மனிதர்கள் இறைவனை தேடும்பொழுது கஷ்டத்தை தான் முதலில் சந்திக்க வேண்டும் அப்பனே. கஷ்டங்களெல்லாம் அனுபவங்கள் ஆகிவிடும் கடைசியில் இறைவனே மெய் என்று உணர்வார்கள் மனிதர்கள் அனைவரும். மாயையின் பிடியிலேயே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் அப்பனே. மாயைவழியே சென்று கொண்டிருக்கின்றார்கள் அப்பனே. இறைவனை வணங்குவதற்கு கஷ்டமாக நினைப்பார்கள். கஷ்டங்கள் வரும். கஷ்டத்திலும் நிலையாக நின்று இறைவனை நினைத்து இறைவா நீயே என் கதி என்று நினைத்தால் அந்த இறைவனே வந்து அழைத்துச் செல்வான் அப்பனே. ஆகையால் நல்முறையாக அப்பனே நேர்வழியில் செல்லுங்கள்.  யாருக்கும் துரோகங்கள் செய்யாதீர்கள். வஞ்சகம் ஏமாற்றுதல் போன்றவை செய்துகொண்டு இருந்தால், நீங்களே ஏமாந்து போவீர்கள் அப்பனே. வாழ்க்கையில் ஒன்றும் செய்ய இயலாது. நாங்கள் காட்டிய வழிகளில் வாருங்கள். இறைவனை நிச்சயம் நாங்கள் காண்பிப்போம். வரும் காலகட்டங்களில் கூட உண்மை மறைந்துவிடும். ஆனால் எவர் ஒருவர் நேர்மையை கடைப்பிடித்து தர்ம சிந்தனையுடன் கூடிய பக்தியை காட்டுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் பலன் உண்டு. அதனால் அப்பனே நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்.

மீண்டும் வந்து வாக்கு உரைக்கின்றேன்!

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............... தொடரும்!

18 comments:

 1. ஓம் ஈஸ்வராய நமஹ:
  அகத்திய மகரிஷி அவர்கள் ஞானாலயம் தனிலே 9ஆம் வட்ட மலர்களுக்கு அருளிய தசவித அறிவுரைகள்

  அகத்திய மகரிஷி அவர்களின் அறிவுரை - 1

  ஆன்ம விடுதைலையினை எதிர் நோக்கிக் காத்திருக்கும் ஆன்மாக்களே, உங்களுக்காக யாம் வழங்கும் முதல் அறிவுரைதனை ஏற்கக் கடவது . புவிக் கோளினிேல வாழ்கின்ற நிலை என்பது உகந்ததாகவும் , ஏற்புடயதாகவும் அமைந்திடாதக் காரணத்தினால் உங்களுடைய ஆன்மாவானது பிறப்பு ஒண்றினை ஏற்றுவிட அனுமதியாதீர்கள் . அகத்தீசன் ஆகிய யாம் இறையாற்றல்களின் பிரதிநிதியாவோம். ஈசனும், ஆதிசக்தியும் உரைத்திட முனைவதனையே யாம் முன்னின்று வழங்குகின்றோம். ஆன்மாவினை குறித்து சிந்தனை புரிந்திட இத்தருணமே உகந்ததாகும்.

  ஏன் மானுடக் குலத்திற்கு இத்தகைய சூழ்நிலை உருவானது? என்றே சிந்தியுங்கள் .
  மனிதர்கள் ஆன்மசிந்தனையினை துறந்து , மாயையில் மூழ்கிடும் தருணங்ளில் எல்லாம், கலி எனப்படும் தீய நஞ்சாற்றலானது, ஆற்றலில் ஓங்கி நிலைக்கின்றது. கலியின் மூலம் மனிதகுலமானது துன்பங்களை எதிர்க்கொள்கின்றது எனில், அதற்கான மூலகாரணம் ஒன்றே என்று உணர்க.

  ஆன்மாவினை மறைத்தாள்வது, முக்தி மற்றும் பிறவா பெருநிலைக் குறித்த சிந்தனை எழாது, மாய உலகில் உழல்வது மற்றும் தீயவற்றையே அகத்தினிலும், புறத்தினிலும் உணவாக ஏற்று, தீயச் செயல்களையே விளைவிப்பது ஆகிய யாவுமே கலி எல்லைதனை தீர்மானிக்கின்றன.

  இயற்க்கையின் நியதிக் காரணமாக நல் ஆற்றல்கள் ஓங்குவதும், பின்னர் தீயவையே ஓங்குவதும் ஓர் தொடர்ச் செயலாய் அமைகிறது. எனினும், மானுடர்கள் நன் நிலைதனை எத்தருணத்திலும் காத்தருள வேண்டும். தீயவை ஓங்கிடும் தருணத்திலும்.

  நற்செயல்களையேப் புரிபவர்கள் யாவரும் உயர் தெய்வங்களால் ஈர்க்கப்படுவர். நற்காலம் உதிக்கையிலும் தீயவற்றையே வெளிப்படுத்துபவர்கள் யாவருமே தனது ஆன்மாவினை அழித்து துன்பத்திற்கு உட்படுவர்.

  தெய்வங்களே உதவிட முற்பட்டாலும் ஏற்க்கும் பக்குவ நிலையில் திகழ்ந்திடாத மானுடர்களுக்கு உயர் ஆன்மா என்னும் நிலை நின்று யாம் ஒன்றினை உரைக்கின்றோம். ஈசனே அனைத்து ஆன்மாக்களுக்கும் தந்தையாவார். அகத்தீசன் ஆகிய யாமே கலியுக எல்லையில் வாழ்கின்ற ஆன்மாக்களை ஈசேனாடுப் பிணைத்திட முற்படும் இடைப்பாலமாவோம்.

  மானுட ரூபம் தரித்து வாழ்கின்ற எமது மகளாரே குருவாய் இயங்கி எமக்குத் துணைப்புரிகின்றார். மாய உலகினை விடுத்து அக உலகம் என்னும் ஆன்ம உலகினை நோக்கியே உங்கள் எண்ணங்களைச் செலுத்திடுங்கள். இறைவனே எம்முள் ஆன்மாவாக வசிக்கின்றார் என்கின்ற அடிப்படைத் தத்துவத்தினை உணருங்கள்.

  வெகு விரைவினில் ஆன்ம விடுதலைதனை ஏற்க உள்ள மானுடர்களே யாம் வழங்கும் அறிவுரையினை ஏற்கக் கடவது. எங்கே எனது ஆன்மா? என்கின்ற வினவினைத் தொடுத்து அதனை அறிந்திட முற்படுங்கள். எம்மோடு பயணித்து, விடுதலை அடைந்து, வின் முகடு கடந்து, ஈசக் களிப்பினை ஏற்றுவிட, ஆன்மாவினை அறிதல் எனும் நிகழ்வு உதவிடும்.

  அறிவினால் ஆன்மாவினை ஏற்றிட, உணர்வுநிலைப் பெருகிடும். உங்களது ஆன்மாவினை அறியக் கடவது.

  ReplyDelete
 2. Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!

  ReplyDelete
 3. ஆசான் அகத்தீசர் பாதங்கள் போற்றி..
  அம்மா லோபமுத்ரா தாயே போற்றி போற்றி....

  ReplyDelete
 4. அய்யா நமஸ்காரம். தங்களுக்கு மிக்க நன்றி. அம்மா ரேவதி அடியவருக்கு நன்றி. அகத்தியர் சொன்னவாரே மூலிகைகளை கொண்டு தயார் செய்த பொடி 1kg ரேவதி அம்மாவிடம் வாங்கி நான் 100gm வீதம் ..... பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து அவர்கள் அந்த............ நோயில் இருந்து விடுபட்டு இன்று பரிபூரணமாக குணம் அடைந்துள்ளனர்..சித்தன் வாக்கு சிவன் வாக்கு என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.
  நான் தனி தனியாக மூலிகை பொடியாக வாங்கி கலந்து தயாரித்து பார்த்தேன் அதன் விலையை விட அம்மாவிடம் வாங்கின மூலிகை பொடி 500 rs குறைவாக உள்ளது கலப்படம் இல்லாமல் சுத்தமானதாக இருந்தது..

  அகத்தியர் அடியவர்களுக்கு ஒரு வேண்டுகோள் அம்மா எனக்கு மருந்து தயாரித்து கொள்ள மஞ்சள் தூள் கொடுத்தார்கள். என் வாழ்நாளில் இந்த மாதிரி ஒரு சுத்தமான மஞ்சள் தூள் நான் பார்த்ததே இல்லை...என் குழந்தைகளுக்கு நான் தினமும் மஞ்சள் தூள் கலந்த பால் குடுத்து வருகின்றேன்..

  யாராவது அம்மாவிடம் மஞ்சள் வாங்கி உபயோகப்படுத்திய அனுபவம் இருந்தால் அதை தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள்..அகத்தியர் அடியவர்களுக்கு போய் சேரவேண்டும்..உண்மையை உரக்க சொல்லுங்கள்..

  ReplyDelete
  Replies
  1. Sir, I second your opinion. I live in Canada. With the grace of Agathiar appa, I got medicines and turmeric from Revathy madam. I strongly recommend to use Turmeric powder from Revathy madam due to high quality. Every moment of mine and my family is blessed by Agathiar appa and Muruga peruman. God bless Revathy madam for her service!!

   I wanted to thank Karthikeyan sir for his time and effort to consolidate information from various sources and list out here. Thank you sir!

   Small suggestions:
   1, Can we have monthly zoom call to share devotees experience in their life which will be inspiration for the needy people.
   2, Any thoughts of publishing as Agathiar appa book [consolidating all the life events happened to Hanumandasan ayya]

   Apologies and Ignore if my requests too much to execute.

   God Bless you all!!

   Om Agatheesaya Namah!
   Om Saravana Bhava!
   Om Aadhiprasakthi annai Potri!
   Om Eswaraya Namaha!

   Delete
  2. Thanks a lot about your feedback. .இதுவரை நாங்கள் எங்கள் பூமியில் ரசாயனம் உபயோகப்படுத்தியது இல்லை அதனால் தான் மஞ்சள் மஞ்சளாக உள்ளது.தேவை எனில் தொடர்பு கொள்ளவும் 9629496486.

   Delete
  3. நானும் ரேவதி மேடத்திடம் வாங்கி வீட்டில் பயன்படுத்த கொடுத்தேன். எனது தாயார் பயன்படுத்தி பார்த்து அவர்கள் சிறு வயதில் பயன்படுத்தியபொழுது கிடைத்த சுவை மற்றும் மணம் மற்றும் தன்மைகளுடன் இருப்பதாக கூறினார், தரமாக உள்ளது.

   Delete
  4. Agathiyar Appa Pottri 🙏
   Lobamudra Annaye Pottri 🙏

   Revathy madam- all products are done with excellent care and precision..i too have bought doopam from madam and the quality was simply indescribable 👍

   Like Sasi Kumar sir pointed out i too feel it will be nice to have online satsangam through zoom🙏🙏🙏

   Delete
  5. அனைத்து வாழ்த்துக்களையும் அகத்தியர் மகரிஷி பாதங்களில் சமர்பணம் செய்கின்றேன். அகத்தியர் இல்லை என்றால் நான் இல்லை.

   Delete
 5. 🌻 சங்காிசூலி சாம்பவிநீலி சகலகலா மாயி

  🌻மங்கள தத்துவ மரகதமேனி மாயவன் தங்கையளே

  🌻சங்கினை ஏற்றி சங்கடம் தீா்க்கும் காமகலா மாயி

  🌻மந்திர சக்தி மஞ்சுளதேவி மஞ்சள் அளித்திடுவாய்.

  இதை,இயற்றியவா் அகஸ்திய மகா பிரபு ஆவாா். இப்பாட்டை வைத்துக் கொண்டு இகலோக சித்திகள் அனைத்தும் பெறலாம்.

  சிவனின் பாதியாகிய அம்பிகையே நோில் தோன்றி அகஸ்திய பெருமானுக்கு வழங்கிய பெருமையுடையது மஞ்சள்.

  சர்வம் லலிதார்ப்பணம் 🙏

  காமாட்சியே சரணம் 🙇‍♂️🌻🙇‍♀️

  ReplyDelete
 6. அய்யா தயவு செய்து இதை சித்தன் அருள் போடுங்கள் .அகத்தியர் அடியவர்கள் பயன்பெற வேண்டும்.

  ReplyDelete
 7. திருமணம் ஆன பின்பு கணவர் குலதெய்வம் வழிபாட்டை செய்து வருகிறேன். பெண்கள் பிறந்த வீடு,புகுந்த வீடு என்று இரண்டு குலதெய்வம் வழிபாட்டை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று எங்கள் தவறை சுட்டிக்காட்டி உண்மையை உணர செய்த தங்களுக்கு மிக்க நன்றி அகத்தியர் மகரிஷி..

  ReplyDelete
 8. Agasthiya Maharishi put padangal portty

  ReplyDelete
 9. Om Sri lopamudra Samantha Agasthiar thiruvadi Saranam.Ayya Revathi avargalathu contact no kotuka mudiuma. Medicine vanga Ayya.


  ReplyDelete
 10. மெய்சிலிர்க்க வைக்கிறது அய்யனின் அருள் ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏

  ReplyDelete
 11. ஓம் குரு வாழ்க 🙏 குருவே துணை 🙏 குருவே சரணம்🙏🙏🙏

  ReplyDelete