​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 19 July 2021

சித்தன் அருள் - 1014 - சித்த பெருமக்களின் வாலைக்குமரி அம்மன்!


சித்த மார்கத்தில் நுழைந்து நடப்பவர்களுக்கு எல்லா நாட்களும் சிறந்ததாயினும், இறை அருளை கூட்டவும், சித்தர்கள் அருகாமையை உணரவும், சக்தியை வாலையாக வழிபடுவது இன்றியமையாத ஒன்று. சக்தி இல்லையேல் சிவமில்லை என்று உணர்ந்த சித்த பெருமக்கள், வாலை என்கிற சிறு வயது பெண்ணாக அம்பிகையை வணங்கி, பூசித்து அவள் அருள் பெற்றுக்கொள்கிற ஒரு மாதமாக "ஆடி" மாதத்தை வகுத்துக் கொண்டுள்ளனர்.

இந்த மாதத்தில், மனிதர்களாகிய நாமும் வாலையை பூசிக்கும் விதமாக செவ்வாய்/வெள்ளிக் கிழமைகளில் அம்மன் கோவில்களில் அலங்காரம் பூசை கண்டு தொழுது அவளருள் பெறுவது இயல்பு. சக்தியை, 9 வயது பெண்ணாக (பூப்பெய்தா பருவத்தில்) அனைத்து விதத்திலும் அலங்கரித்து பூசை செய்வது சிறப்பு. ஒரு சிலர், வயதுக்கு வராத ஒரு சிறுமியை வீட்டில் அழைத்து, ஒரு குழந்தை தன்னை அழகு படுத்திக்கொள்ள என்னென்ன தேவைப்படுமோ, அத்தனை பொருட்களையும் வாங்கி, ஏதேனும் ஒரு கோவிலில் சன்னதியில் வைத்து பூஜித்து, அந்த குழந்தைக்கு கொடுப்பார்கள். இதுவும், வாலை அம்மன் அருளை பெற மிக எளிய வழியாகும்.

இனி, வாலைக்குமரியை பற்றிய ஒரு தொகுப்பை பார்ப்போம்.

வாலையம்மன்: சித்தர்களின் ரகசிய பெண் தெய்வம் வழிபாடு. யார் அந்த வாலையம்மன்? வாலைப் பெண் தெய்வம் எனப்படும் பாலாவின் சிறப்பு என்ன? சித்தர்கள் எவ்வாறு பூஜித்தனர்?

அண்டமெல்லாம் விளங்கும் ஒப்பற்ற சக்தியாக இருக்கக் கூடிய அன்னை பராசக்தியின் பல்வேறு ரூபங்களை நாம் பூஜித்து வருகிறோம்.

இருப்பினும் நமது செந்தமிழ்நாட்டில் வாழ்ந்தும், வாழ்ந்து கொண்டும் இருக்கின்ற சித்த புருஷர்கள் இறை நிலையை அடைய யோக முறைகளையும், பூஜை முறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.
 
சிவ வழிபாடு அனைத்து சித்தர்களும் செய்து வந்தது நாம் அனைவருமே அறிவோம். இருப்பினும் அந்த சித்த நிலையை அடைய வேண்டிய சக்திகளை பெறுவதற்கு சில இரகசிய வழிபாட்டு முறைகளை செய்து வந்துள்ளனர்.

அப்படி அவர்களின் வழிபாட்டில் இருந்த ஒப்பற்ற சக்திகளை வழங்கிய வழிபாடே “வாலையம்மன்“ (பாலா) வழிபாடு ஆகும்.

காளி ஞானத்தின் வடிவமா? காளி வழிபாடு எப்படி தோன்றியது?

நம் தமிழ் இலக்கியங்களில் உள்ள பிள்ளைத் தமிழ் பருவங்களில் “வாலை பருவம்” ஒரு பருவம் உண்டு. ஒன்பது வயது நிரம்பிய பெண் குழந்தையை வாலை என்று கூறுவர்.

இந்த வாலையம்மன் வழிபாடும் சிறு பெண் குழந்தை வழிபாடே ஆகும். பெண்மை என்றாலே சக்தி, வீரம், ஞானம், தாய்மை, கருணை என அனைத்து குணங்களும் நிரம்பியிருக்கும்.

பெண் குழந்தை என்றாலே அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை வழங்கும். இதனை தான் பாலாவும் செய்கிறாள்.

அன்னை லலிதா திரிபுரசுந்தரி பண்டாசுரவதத்தின் போது தன் படைகளை திரட்டி மந்திரி மற்றும் படைத் தளபதியாக மாதங்கி மற்றும் வாராகியை வைத்து யோகினி சேனைகளுடன் சென்று போர்ப்புரிந்தாள்.

முதலில் போருக்கு வந்த பண்டாசுரனின் புத்திரர்களை அழிக்க லலிதா தன்னுள் இருந்து ஒரு சிறு பெண்ணை தோன்றச் செய்து அனுப்பி வைத்தாள்.

அக்குழந்தையும் அனைவரையும் மாய்த்து வெற்றியுடன் திரும்பியது. அச்சிறு குழந்தை தான் பாலாம்பிகை. இவளே வாலாம்பிகை, வாலையம்மன், அசோக சுந்தரி, பாலா திரிபுரசுந்தரி, பாலா என்ற திருநாமங்களில் அழைக்கப்படுகிறாள்.

வாலையம்மன் (பாலா) சின்னஞ்சிறு குழந்தையாவாள். இவள் குணங்களும் குழந்தைத் தனமாகவே இருக்கும்.

குழந்தையை கொஞ்சி அழைத்தவுடன் ஓடி வருவது போல ஓடி வருபவள். இவளின் வடிவாமானது சொல்லுதற்கரிய பேரழகு பொருந்திய ஒன்பது வயது குழந்தையாகும்.

கையில் ஜெபமாலை, சுவடிகள் கொண்டு அபய வரத அஸ்தத்துடன் பட்டு பாவாடை, ஆபரணங்கள் அணிந்து வெண்தாமரையில் வீற்றிருப்பவள். ஞானமே வடிவாக இருப்பவள் ஆவாள். ஸ்ரீ சக்ர வடிவமானவள், ஸ்ரீபுரத்தில் அன்னை லலிதாவுடன் எப்போதும் இருப்பவள்.


இவளை உபாசனை செய்பவர்களுக்கு ஞானம், தனம், வாக்குவன்மை, சித்து, அறிவு என அனைத்தும் கைகூடும்.

இவளைப் பற்றி பிரமாண்ட புராணத்தில் லலிதா மகாத்மியத்தில் 26-ஆம் அத்தியாத்தில் விரிவாகக் கூறியுள்ளனர்.

இந்த வாலாம்பிகை வழிபாடானது சித்தர்களின் வழிபாட்டில் பெரிய ரகசியங்களை கொண்டதாகும். யோக முதிர்ச்சி, சித்துக்களில் கைதேர்ந்த சித்தர்கள் அனைவரும் வாலையின்றி அந்நிலையை அடைய இயலாது.

இதனை வாலை கொம்மி போன்ற பாடல்களில் சித்தர்களே உணர்த்தி உள்ளனர். கொங்கணவர் தனது வாலை கொம்மியில்,

“வீணாசை கொண்டு திரியாதே 
இது மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு 
காணாத வாலையைக் கண்டுகொண்டால் 
காட்சி காணலாம் ஆகாயம் ஆளலாமே”

என்ற பாடலின் மூலம் வாலையை கண்டு வணங்கினால் ஆகாயத்தை கூட ஆளலாம் என்று எடுத்துரைக்கிறார். மேலும் கருவூராரும் வாலையை போலே ஒரு தெய்வம் இல்லையென கூறியுள்ளார்.

சித்தர்களின் முதல்வரான அகத்தியரும் லலிதா சகஸ்ரநாமத்தில் “பாலா லீலா வினோதினி” என்று இவளை குறிப்பட்டுள்ளார். திருமூலர், போகர் என அனைத்து சித்தர்களும் வாலையம்மனை வழிபட்டுள்ளனர்.

இந்தக் குழந்தையை வழிபட்டு தான் சித்தர்கள் சித்திகளை பெற்றனர் என்பது நமக்கு தெளிவாகிறது.

பாலா பரபிரம்மத்தை காண நம்மை கைப்பிடித்து அழைத்து செல்பவள். இவளை மூல மந்திரங்கள் மூலம் ஜெபம் செய்ய சீக்கிரமே நம்வசப்படுபவள்.

மூன்று வித மான மூல மந்திரத்தின் மூலம் இவளை துதிக்கின்றனர்.

பாலா திரியட்சரி மூல மந்திரம்

“ஓம் ஐம் க்லீம் சௌ” என்ற மந்திரம் பாலாவின் மூல மந்திரம் ஆகும்.

ஐம் என்பது பிரம்மா, வாணி பீஜம் ஆகும். க்லீம் என்பது விஷ்ணு, லட்சமி மற்றும் காளி பீஜமாகும்.

சௌம் என்பது சிவன், சக்தி மற்றும் முருகன் பீஜமாகும். எனவே பாலாவை இம்மந்திரத்தால் வழிபட கல்வி, செல்வம், வீரம் என அனைத்தும் கிடைக்கும்.

பாலா சடாட்சரி மூல மந்திரம்

“ஓம் ஐம் க்லீம் சௌ
சௌ க்லீம் ஐம்”

திரியட்சரி மூல மந்திரம் பலித்தமான பின்பு சடாட்சரியால் வழிபடலாம்.

பாலா நவாட்சரி மூல மந்திரம்

“ஓம் ஐம் க்லீம் சௌ

சௌ க்லீம் ஐம்

ஐம் க்லீம் சௌ”

சடாட்சரி மூல மந்திர பலத்தமான பின் நவாட்சரி மூல மந்திரத்தால் வழிபடலாம்.

பாலா தியான மந்திரம்

"அருண கிருண ஜாலா ரஞ்சிதா சாவகாசா
வித்ருத ஜப படீகா புஸ்தகா பீதி ஹஸ்தா
இதரகர வராட்யா புஹ்ல கஹ்லார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா!!!"

என்று அவளை தியானித்த உடனே குழந்தையாய்  ஓடி வருபவள்.

பாலா திரிபுரசுந்தரியை அக கண்ணினாலே கண்டு தான் சித்தர்கள் பூஜித்தனர். எனவே பாலாம்பிகைக்கு கோயில்கள் மிக குறைவாகும்.

நம் தமிழகத்தில் ஸ்ரீ பால திரிபுரசுந்தரி கோவில் பாலா பீடம் நெமிலி என்ற ஊரில் அமைந்துள்ளது. மேலும் சில இடங்களில். லலிதா திரிபுரசுந்தரி கோயிலில் பாலாவிற்கான சன்னதி அமையப் பெற்றுள்ளது.

கலியுகத்தின் ஒப்பற்ற சக்தி பாலாம்பிகை. நாம் வாழுகின்ற இக்கலியுகத்தில் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகி வ​​ருகிறோம். நற்கதிக்கான வழி தெரியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறோம்.

இந்த நரக வாழ்வில் இருந்து விடுபட்டு நற்பேறு அடைய வழிக்காட்டுபவள் பாலாம்பிகையே ஆவாள். அவள் பாதம் பணிந்து சரணாகதி அடைந்து எல்லா வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வோம்.

சித்தன் அருள்.................. தொடரும்!

8 comments:

  1. மிக்க நன்றி. இந்த அம்மாவை நாம் நேரில் தரிசனம் செய்தால் தரிசனம் செய்த நபருக்கு உடனே முக்தி கிடைக்கும். இது உண்மை. ஒரு சமயம் மகாபெரியவரை தரிசனம் செய்ய ஒரு பாட்டி மற்றும் ஒரு 7வயது குழந்தை சென்றனர். உமகா பெரியவரிடம் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பாட்டி வேண்ட, குழந்தையோ மகாபெரியவரிடம் தாத்தா அந்த குழந்தை போட்டு இருப்பது மாதிரி பட்டுபாவாடை சட்டை வேண்டும் என்று அடம்பிடித்து அழுதது.பெரியவர் உடனே மடத்தில் உள்ளவர்களிடம் சொல்லி பட்டுபாவாடை சட்டை வாங்கி வரசொல்லி அந்த குழந்தைக்கு கொடுத்து அனுப்பினார். ஒரு வாரம் சென்று மீண்டும் மகாபெரியவர் தரிசனத்திற்கு அந்த பாட்டி வந்து குழந்தை இறந்து விட்டது என்று கதறினார். மகாபெரியவர் அந்த பாட்டியிடம் அந்த குழந்தை அன்று அந்த பொண்ணுபோட்டுஇருப்பது போல் பட்டு பாவாடை சட்டை வேண்டும் என்று உன் பேத்தி அடம்பிடித்த போது , அங்கு யாரும் இல்லை உளராதே என்று நீ குழந்தையை அதட்டினாய்.ஆனால் அந்த குழந்தை கண்களுக்கு பாலாதிரிபுரசுந்தரி உட்கார்ந்து இருந்தது தெரிந்தது.பாலா நேரில் காட்சி கொடுத்தால் முக்தி என்பது உண்மை. குழந்தை முக்தி அடைந்து விட்டது என்று சொன்னார். பாலா தரிசனம் முக்தி உடனே கிடைக்கும்.
    அருமை அய்யா. இது மாதிரி தீபம் தூபம் வழிபாடு முறைகள் பற்றிய தகவல்களும் அவ்வப்போது சொல்லுங்கள். தெரியாதவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Revathy ma neenga innum dhoobam seidhu kondu irukareergala..
      kindly inform..

      Delete
    2. ஆமாம் அம்மா .அகத்தியர் அடியவர்களுக்கு போய் சேர்ந்து கொண்டு தான் இருக்கிறது.கோவில்களுக்கும் சைவம் சாப்பிடும் அகத்தியர் அடியவர்களுக்கும் ஐஸ்வர்யம் தீபம் எண்ணெய் விளக்கேற்ற அனுப்பி கொண்டு தான் உள்ளேன். (அகத்தியர் கூறிய படியே ஐஸ்வர்யத்திற்கான மூலிகைகளை சுத்தமான நல்லெண்ணெய்யில் ஒருமண்டலம் ஊற வைத்து 49 வது நாள் தர்ப்பை புல் மூலம் சித்தி ஆவதற்கான மந்திரத்தை எண்ணெய்யில் உறுவேற்றி வடிகட்டி விடுவேன். )இதன் மூலம் வரும் வருமானம் தெருவில் உள்ள பைரவர் வாகனம் போக மீதி காசு ஒரு ஏக்கர் இடம் வாங்கி மாமிசத்திற்காக விலைக்கு போகும் பசுக்களை விலை கொடுத்து வாங்கி பராமரிக்கவும் அகத்தியர் உத்தரவின் பேரில் முயற்சி எடுத்து கொண்டு உள்ளேன். (9629496486)

      Delete
  2. ஓம் அகத்தீசாய நமக அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. ஓம் அகத்திசாய நமஹ

    ReplyDelete
  4. Namaste Agnilingam Aiya,
    The last part of the Bala Mantra - is it spelled as சௌஹு or சௌ: (सौ: in Devnangari).
    I have heard this explained by Sri M in his YouTube video and also read in websites on Tantra. Kindly advise, even though சௌம் is also a beeja syllable, is it சௌ: or सौ: .

    நன்றி

    ஓம் அம் அகத்தீசாய நமஹ ||

    ReplyDelete
    Replies
    1. Namaskaram! Typing error rectified. "சௌ:" is the correct pronounciation.

      Delete