கருட பகவான், ஸ்ரீமந்நாராயணனிடம் ஐயம் தெளிவதற்காக கீழ் காணும் கேள்விகளை சமர்ப்பித்தார்.
- உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்?
- அவர்கள் மரணமடைந்த பிறகு, என்ன காரணத்தால், சுவர்க நரகங்களை அடைகிறார்கள்?
- எந்த பாபத்தால், ஜீவர்கள், மரித்த பிறகு பிரேத ஜென்மத்தை அடைகிறார்கள்?
- எந்த புண்ணியத்தை செய்தால் அந்த ஜென்மம், நீங்கும்?
- எந்த கர்மத்தால், நிரதிசய இன்ப வீடான தங்கள் லோகத்தை அடைவார்கள்?
- முன்பு செய்த பாபங்களை, எவ்வாறு, மரண காலத்தில் நீக்கிக்கொண்டு, நல்லுலகம் அடையலாம்?
- எத்தகைய கர்மங்களால், பாவங்கள் விலகும்?
- இறக்கும்போது, யாரை நினைத்தால், நற்கதி கிடைக்கும்?
இவற்றை எல்லாம் அடியேனுக்கு உரைக்க வேண்டும் என்றார், கருட பகவான்.
பகவான், ஸ்ரீஹரி, "கருடனே! நல்லதொரு கேள்வியை கேட்டுவிட்டாய். அதையும், நல்ல முறையில் கேட்டாய். நீ கேட்டதெல்லாம், உலகினருக்கு புரியாத ரகசியங்கள். அவற்றை, யாம் கூறுகிறோம், கவனமாக கேள்" என்றார்.
எத்தனை நாட்கள் வாழ்ந்தாலும் என்றாவது ஒருநாளில் இறப்பது நிச்சயம், என்பதை, ஒரு மனிதனும் நினைப்பதில்லை. உலகில் பிறந்து விட்டது உண்மை, என்பது போல், இறத்தலும் உண்மை என்று நினைப்பவன், கோடியில் ஒருவனாவது இருக்கிறானோ, இல்லையோ? உயிர்களை கவர்ந்து செல்லும் கூற்றுவன் என்று எமதர்மன் ஒருவன் இருக்கிறான் என்றும், வாழ்வின் இறுதி காலத்தில், அவன் கையில் அகப்பட்டே ஆகவேண்டும் என்றும், அடுத்து அடுத்து நினைத்து திடுக்கிடுபவன் எவனோ, அவனே, "நேற்றய பொழுது போய்விட்டது! இன்றைய போகுதும் போய்விட்டது! இதுபோல் நாளாக நாளாக நமது வாழ்நாள் வீண்நாளாக கழிக்கின்றதே? நம் வந்து விட்டால் என்ன செய்வது? என்று நினைத்து பயந்தாவது, நல்ல தர்மங்கள் இயற்றி, அறநெறிப்படி வாழ்வான். ஒருவன், தனக்குரிய கர்மங்களை ஒழுங்காக செய்து வருவானாகில், அக்கருமங்களே, அவனை காப்பாற்றும். இன்ன குலத்தில் பிறந்தவன், இன்ன மரபு படி இத்தகைய கர்மங்களை செய்ய வேண்டும் என்று, வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றன. கருடா! அத்தகைய குலாச்சார தர்மங்களை உணர்ந்து ஒருவன் தான் பிறந்த குலத்திற்கு, ஏற்ற கர்மங்களை செய்வதோடு, மேலும், கீழும் செல்லாமல், உரிய கர்மங்களையே, எவன் ஒருவன் முறைப்படி செய்கிறானோ, அவனே, எல்லா இடத்திலும் மேன்மை அடைவான்."
"ப்ரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்திரர் என நான்கு வருணத்தார் இருக்கிறார்கள். அவர்களில்,
- பிராமணருக்கு, ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு கர்மங்கள் உள்ளன.
- க்ஷத்ரியருக்கு, ஓதல், வேட்டல், ஈதல், உலகோம்பல், படை பயிற்றல், பொருதல் என்ற ஆறுவகை கர்மங்கள் உண்டு.
- வைசியருக்கு, ஒதல், வேட்டல், பொருளீட்டல், ஈதல், பசுக்களை காத்தல், ஏர் ஊழல் என ஆறு கர்மங்கள் உண்டு.
- சூத்திரருக்கு, ஓதல், முன்னவருக்கு பணியாற்றல், பொருளீட்டல், உழுதல், பசுக்களை காத்தல், வேட்டல் முதுகிலிய ஆறு கர்மங்கள் உண்டு.
அவரவர் குலமரபுக்குரிய ஒழுக்கப்படி நடப்பதே அவரவருக்கு பெரிய தவமாகும். அத்தவத்தில், வழுவாது ஒழுங்காக வாழ்பவர் எவரோ, அவரே போகத்தையும் யோகத்தையும் ஒருங்கே அடைந்து நெடுநாள் வாழ்ந்து இறுதியில், தமக்குரிய உலகத்தை அடைவார்கள். ஆகையால், யாவரும், தத்தமக்கு உரிய ஓழுக்கத்தில் நிலை நிற்பதே சிறப்பாகும். யாவராயினும், எந்த பொருளையும், விரும்பலாகாது. எத்தகைய மாதவத்தையும், அத்தகைய இச்சையே கொடுத்துவிடும். அவாவை ஓழித்து பற்றற்றவர்களே பேரறிஞர்களாவர்!" என்று திருமால் திருவாய் மலர்ந்து அருளினார்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்............ தொடரும்!
Om Agatheesaya Namaha !!!
ReplyDeleteOm Agatheesaya Namaha !!!
Om Agatheesaya Namaha !!!
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை
ReplyDelete