வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!
பத்மநாபஸ்வாமி கோவில் பிரச்சினை தொடங்கி போன வாரம் வரை என்னிடம் அறிமுகமுள்ளவர். நண்பர்கள், அடியவர்கள் எல்லோரும் கேட்ட கேள்வி ஒன்று தான்.
"என்ன! இப்படியாகிவிட்டது! இனிமேல் நிம்மதியே போய்விடுமே!" என்றனர்.
உண்மைதான், தொடக்கூடாததை தொட்டால் நிம்மதி போய்விடும் என்பது உண்மை. இதை, பலரின் வாழ்க்கையில் இந்த காலங்களில் அவர் நிரூபித்து காட்டினார்.
இதன் தொடர்பாக, அடியேன் அனைவருக்கும் தெரிவித்த ஏக பதில் இது ஒன்றுதான்.
"வைத்தவனுக்கு தெரியும், அதை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று. நம் மனம் ஒரு பொழுதும் நிதியில் செல்ல வேண்டாம்!"
இன்று, தீர்ப்பு வந்த பொழுது, அதைத்தான் அடியேன் உணர்ந்தேன். வைத்தவன் அதை காப்பாற்றிக் கொண்டான்.
இனி. சித்தனருளில் விளக்கப்பட்ட "அகத்தியரும், அனந்தசயனமும் என்கிற தொகுப்பை ஒரு முறை படித்தால், நிறைய விஷயங்கள் புரியும்.
அனந்தபத்மநாபருக்கு, அடியவர்கள், தெற்கு வாசலில், இன்று மாலை விளக்கு போட்டு நன்றி தெரிவித்தனர்.
கிழக்கு வாசலில் போடப்பட்ட தீபம்!
அனந்த பத்மநாபர்!
அகத்தியப்பெருமானுக்கு நன்றி தெரிவித்து அடியேன் வீட்டில் போட்ட விளக்கு!
இதைவிட சிறப்பாக பத்மநாபாருக்கு யார் நன்றி தெரிவிக்க முடியும்?
ஓம் பத்மனாபோ, அமரப்பிரபோ!
ஓம் ஸ்ரீ லோபாசமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
சித்தன் அருள்...................தொடரும்!
ஸ்ரீ பத்மநாப சுவாமிக்கு நன்றி
ReplyDeleteSree Anantha Padma Nabha Swamigaley Namaha . Ulagil ella athmakkalayum cornavilirunthu Kappattaname enru thazmayudan vendi kolkiren
ReplyDeletePlz pray Tamil nadu Hindu temple sir
ReplyDeleteAyya plz send agathiyar kalyana photo
ReplyDeleteஅகத்தீசாய நம நன்றி அய்யா
ReplyDelete