​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 16 July 2020

சித்தன் அருள் - 880 - அகத்தியர் உத்தரவுடன் >> ஆனந்த சாகரஸ்தவம் சுலோகம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சித்தன் அருள் - 872 வது பதிவில் அகத்தியப்பெருமானின் உத்தரவும், ஸ்ரீ மதுரை மீனாக்ஷி அம்மையின் மீது ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்கள் சமர்ப்பித்த "ஆனந்த சாகரஸ்தவம்" சுலோகம் பற்றியும் கூறப்பட்டிருந்தது. அந்த பதிவில், சுலோகம் pdf பதிவாக டவுன்லோட் செய்துகொள்ள லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது. வலைப்பூவில் எங்கு தேடியும், ஒலிநாடாவாக கிடைக்காததால், அடியேனுக்கு தெரிந்த திருமதி.ஜோதி ஸ்தாணுகிருஷ்ணன், திருவனந்தபுரம், என்பவரின் குரலில் mp3 வடிவில் பதிவு செய்து இங்கே தருகிறேன்.

விருப்பமுள்ளவர் இதை டவுன்லோட் செய்து, தினமும் வீட்டில் ஒலிக்க விடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த மந்திரத்தை படிக்க விரும்புகிறவர்களுக்கும் இது எளிதாக இருக்கும் என்று கூறிக்கொள்கிறேன்.

இந்த ஸ்லோகத்தை பதிவு செய்து தந்த திருமதி.ஜோதி ஸ்தாணுகிருஷ்ணனுக்கு, சித்தன் அருள்/அகத்தியர் அடியவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

9 comments:

 1. ஓம் ஸ்ரீ லோபமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
  ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ!

  ReplyDelete
 2. ஓம் ஸ்ரீ லோபமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
  ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமஹ!
  ஓம் ஸ்ரீ அகத்திய குருவே சரணம்

  ReplyDelete
 3. ஓம் அத்தீசாய நம 🙏
  ஓம் நந்தீசாய நம🙏
  ஓம் திருமூல தேவாய நம🙏
  ஓம் கருவூர் தேவாய நம🙏

  ஐயா வணக்கம்.
  நான் பரிகார நிமித்தமாக கால பைரவருக்கு அனையா விளக்கு ஏற்ற வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் கோவிலில் அனையா விளக்கு ஏற்றுவதில் சிரமம் இருப்பதால் வீட்டிலேயே
  அனையா விளக்கு ஏற்றலாமா ? கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றுவதே உத்தமம் ஏனினும் வீட்டில் அனையா விளக்கு ஏற்றலாமா? இது குறித்து தங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை வழங்கவும்.
  மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வீட்டிலேயே அணையா விளக்கு ஏற்றலாம். ஏற்றுக்கொள்வார். காலம் மாறி எல்லாம் நலமாகும் பொழுது கோவிலில் வந்து விளக்கேற்றுகிறேன் என வேண்டிக்கொள்ளுங்கள்.

   Delete
  2. மிக்க நன்றி ஐயா

   Delete
 4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

  நன்றிகள் ஐயா

  ReplyDelete
 5. மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
  மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு.அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

  பாடல் பாடி கொடுத்த திருமதி.ஜோதி ஸ்தாணுகிருஷ்ணன், திருவனந்தபுரம் மிகவும் நன்றி.

  மிக்க நன்றி,
  இரா.சாமிராஜன்

  ReplyDelete
 6. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

  நன்றி ஐயா

  ReplyDelete
 7. ஐயா அன்பு வணக்கம். மிக்க நன்றி ஐயா. ஓம் குருவே போற்றி தாயே போற்றி.

  ReplyDelete