​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 4 July 2020

சித்தன் அருள் - 876 - குருபூர்ணிமா தீபம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமானின் உத்தரவின் பேரில், இன்று லோகஷேமத்துக்காகவும், இப்போதய பிரச்சினையிலிருந்து எல்லா ஜீவனும் விடுபடுவதற்காகவும், 16 முக தீபம் ஏற்றச் சொல்லியிருந்தார். இன்று குருபூர்ணிமா தினமாக அமைந்ததால், குருவுக்கு (அகத்தியப் பெருமானுக்குத்தான்), பூசை செய்தபின், அவர் அருளுடன் வீட்டின் முன் 16 முக தீபம் ஏற்றப்பட்டு, வேண்டுகோளும் சமர்பிக்கப்பட்டது. அந்த புகைப்படத்தை உங்கள் பார்வைக்கு தருகிறேன். நீங்களும் எடுத்த படத்தை அனுப்பித்தந்தால் இங்கு பிரசுரிக்கிறேன்.

[அடியேன்]
[திரு.ஆனந்த், எர்ணாகுளம்]
[திரு.முகுந்தன், சென்னை]
[திரு.ஸ்ரீனிவாசன் கோபால்]
[திருமதி.மேனகா, கோபிச்செட்டிபாளையம்]
[திரு.மணிகண்டன், சென்னை]
[திரு.சிவகுமார், திருவனந்தபுரம்]
[திரு.சுவாமிநாதன், பாண்டிச்சேரி}
[திரு & திருமதி.அபிராமி ரமேஷ், கோவை]
[திரு.ரவிக்குமார், கோவை]
[திரு.கோபிநாத் மருதை, நாமக்கல்]
[திருமதி.பாமா ருக்மணி, தேனி]
[திருமதி.ஜெயந்தி ரமேஷ்]
[திரு ராகேஷ், கூடுவாஞ்சேரி]
[அகத்தியர் தீபக்குழு, காரைக்குடி, மதுரை]
[திரு.அய்யனார்]

சித்தன் அருள்........... தொடரும்!

21 comments:

 1. ஐயா உங்களுக்கு படம் அனுப்பி இருக்கிறேன். ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி

  ReplyDelete
 2. அகத்தீசாய நம

  ReplyDelete
 3. pls help,how to attach photos

  ReplyDelete
 4. அய்யா எப்படி அனுப்புவது email id pls

  ReplyDelete
 5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

  ஐயா நல்லபடியாக பூஜை செய்து வேண்டுதல் சமர்ப்பித்தோம் கணவர் குழந்தைகளுடன்...

  அண்ணை மீனாட்சியம்மன் அருள் கிடைக்கும்

  ReplyDelete
 6. எப்படி ஐயா அனுப்புவது

  ReplyDelete
 7. EMAIL ID :agnilingamarunachalam@gmail.com

  ReplyDelete
  Replies
  1. அய்யா,
   தங்களுக்கு தீப தரிசனம் அனுப்பி வைத்துள்ளேன்.

   Delete
 8. ஐயா வணக்கம்
  குருவின் கிருபையால் செய்தியை படித்து விளக்கு ஏற்றும் பாக்கியமும் கிடைக்கப்பெற்றோம்
  குரு, மீனாட்சி அம்மன் ஆவாஹனம் செய்தமையால் புகைப்படம் எடுக்க மனம் இடம்தரவில்லை மன்னிக்கவும்
  16 முகம் ஒரே அகலில் ஏற்றி உலக ஷேமத்திற்காகவும் எங்களுடைய பிரார்தனையும் சமர்பித்தோம்
  குரு சாய் கோவிலில் குரு பௌர்ணமியை முன்னிட்டு சத்யநாராயண பூஜையின் போது வெளியில் சந்திர பகவானின் பார்வைக்கு விளக்கு ஏற்றினோம்
  lockdown என்பதால் சேவர்த்திகள் இல்லை
  எல்லொர்க்கவும் பிரார்த்தனை செய்தோம்
  ஓம் லோபா முத்ரா சமேத அகத்தீசாய நமஹா
  ஓம் சாய் Ram

  ReplyDelete
 9. வாழ வழி காட்டும் குருவே வருக!
  அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

  இறை,சித்தர்கள் என்று நாம் பேசும் போது ஸ்ரீ அகத்திய பெருமான் பற்றி நாம் பேசாமல் இருக்க முடியாது. நாம் உரைக்கும் வார்த்தைகள் அனைத்தும் அந்த அகத்தியரின் வார்த்தைகள் தான். நம்முடைய பயணத்தை திரும்பி பார்க்கும் போது, நம்மை எப்படி நம் குருமார்கள் செதுக்கி உள்ளார்கள் என்பது கண்கூடாக தெரிகின்றது. நாம் அது வேண்டும், இது வேண்டும் என்று தினமும் வேண்டுகின்றோம். வேண்டுவனவற்றிற்கு நம்மை நாம் தகுதியாக்கி உள்ளோமா? நம்முள் உள்ள தீமைகளை வேரறுத்து வருகின்றோமா ? ஹ்ம்ம்..ஏதும் இல்லை. பின்னர் எப்படி நாம் வேண்டுவது கிடைக்கும். வேண்டுவது கிடைக்க இறையோடு பேசுங்கள். நித்தம் வழிபாடு செய்யுங்கள். வழிபாட்டில் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள். நம் தளத்தில் கூட்டுப் பிரார்த்தனை பற்றிய அறிவிப்பு செய்து இருந்தோம். அருப்புக்கோட்டை திரு.சிவபெருமாள் ஐயா அவர்கள் உடல்நலம் பெற்று வீட்டிற்கு வந்து விட்டார்கள். அருப்புக்கோட்டை திரு.சிவபெருமாள் ஐயாவிற்கு கூட்டுப்பிரார்தனையோடு நம் தளம் சார்பில் பொருளுதவி செய்தோம். இங்கே அனைவருக்கும் நம் தளம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  இது தான் கூட்டுப் பிரார்த்தனையின் சக்தி. கூட்டுப் பிரார்த்தனை விதியையும் மாற்றக்கூடியது. அடுத்து மீண்டும் ஒரு அன்பருக்காக கூட்டுப்பிரார்த்தனை செய்தோம். 36 வயது அன்பர் திரு.பிரதீப் அவர்களும் பூரண உடல்நலம் பெற்று வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அவர்களின் நண்பர் திரு.குருசாமி நம்மைத் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்து மகிழ்ந்தார்கள். அனைத்தும் குருவருளால் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நம் தளம் சார்பில் அனைவருக்கும் குரு பூர்ணிமா வாழ்த்துக்களைத்
  (தாமதத்திற்கு வருந்துகின்றோம்) தெரிவித்துக் கொள்கின்றோம்.

  Read more - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_5.html

  தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழுவில் இணைய விரும்பினால் - https://chat.whatsapp.com/GWcY0q5P7zK4lN7W4pmlWC

  ReplyDelete
 10. ஐயா அன்பு வணக்கம். ஐயா 8 முகம் என 2 விளக்கிகில் 16 முகம் தீபம் ஏற்றினாம் ஐயா.சரியா என்று தெரியவில்லை ஐயா. குரு அருள், தங்கள் அன்பு மூலம் இதை செய்யும் பாக்கியம் கிடைத்தது. மிக்க நன்றி ஐயா. ஓம் அகத்தியர் ஐயன், லூபா அம்மா திருவடிகள் போற்றி!

  ReplyDelete
  Replies
  1. அகத்தியப் பெருமான் ஏற்றுக்கொள்வார்.

   Delete
 11. ok lopamudra samata agastiyar thiruvadi saranam.Ayya intha thogupai parka thavari bitten.ettra mudayavillai.maanikaum..

  ReplyDelete
 12. thriumpaum eppo ettralam,Ayya.

  ReplyDelete
  Replies
  1. வரும் வியாழனன்று அகத்தியரிடம் வேண்டிக்கொண்டு விளக்கேற்றுங்கள். ஏற்றுக்கொள்வார்.

   Delete
 13. Sir, how to do guru poornima pooja
  Pl guide us

  ReplyDelete