அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
தொண்டுகள் தொடர்ந்து செய்கின்ற எல்லோரையும் இறைவன் அருள் பெற்ற சேய்கள் என்று நாங்கள் கூறுவோம். எனவே நல்லதொரு வழிகாட்டக்கூடிய (இந்த பரந்த பாரத பூமியிலே பிறந்தது போல்) நூற்றுக்கணக்கான ஞானிகள் இல்லாத தேசத்திலிருந்தும் கூட ஒரு சில மகான்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய அந்த தேசத்திலிருந்து கூட இப்படி உன்னதமான தொண்டை செய்யக்கூடிய ஒரு நங்கை (அன்னை தெரசா) வந்திருக்கிறாள் என்றால் அது பாராட்டப்படக்கூடிய விஷயம். இந்த சேவை இல்லாததால்தான் இந்து மதம் என்று அழைக்கப்படுகின்ற இந்த மார்க்கம் களங்கப்பட்டு இருக்கிறது. எப்பொழுது சேவையும், பிரார்த்தனை எனப்படும் பக்தியும் பிரிந்து நிற்கிறதோ, அந்த மார்க்கம் வளராது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த (இந்து மதம் என்று நாங்கள் கூறவில்லை. புரிவதற்காக கூறுகிறோம்) இந்து மார்க்கமானது வளர வேண்டும் என்று ஆசைப்படக்கூடிய மனிதர்கள் ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து சேவைகளை அதிகப்படுத்தினால் கட்டாயம் இந்த மார்க்கம் உயர்ந்த மார்க்கமாக மாறும். உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட, ஆனால் அந்த கருத்துக்களைப் பின்பற்றாத மனித கூட்டம் கொண்ட ஒரு மார்க்கம் இது.
pls can u share the telephone number of kodaganallur perumal temple priest. then k u
ReplyDeletecontact me thro agnilingamarunachalam@gmail.com
Deleteமன்னிக்கவேண்டும், இந்த கருத்து அகஸ்தியர் கூறியதா? அல்லது உங்கள் சொந்த கருத்தா ? நான் அறிந்தவரையில் தெரசா சேவை என்ற பெயரில் மதம் மாற்றமட்டும் செய்தவர்
ReplyDeleteமன்னிக்கவேண்டும், இந்த கருத்து அகஸ்தியர் கூறியதா? அல்லது உங்கள் சொந்த கருத்தா ? நான் அறிந்தவரையில் தெரசா சேவை என்ற பெயரில் மதம் மாற்றமட்டும் செய்தவர்
ReplyDeleteஎன் சொந்த கருத்துக்களை இங்கு அகத்தியர் கூறியதாக ஒரு போதும் கூறியதில்லை. இது திரு.கணேசன், தஞ்சாவூ அவர்கள் வாசிக்கும் "ஜீவ நாடியில்" அகத்தியப் பெருமான் வந்து அருளியதை அடியவர்களுக்கு சமர்ப்பித்துள்ளேன்.
Deleteஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDeleteThank you so much 🙏
ReplyDelete