அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
தாங்கள் வகுத்துக் கொடுத்ததுள்ள சாஸ்திரங்களிலும், பூஜா முறைகளிலும், யாகங்களிலும் உள்ள இடைசெருகல்களை நீக்கி மூலத்தை தந்து அருள வேண்டும்.
இடையிலே ஏற்பட்டுள்ள கருத்துப் பிழைகளையெல்லாம் நீக்க வேண்டுமென்றால், அப்படி நீக்கினாலும் அவற்றை ஏற்கும் மனம் ஒரு மனிதனுக்கு வரவேண்டும் என்றால், அதற்கு பரிபூரண இறையருள் வேண்டுமப்பா. அத்தனை எளிதாக மனித மனம் ஏற்றுக்கொள்ளாது. உலகியல் சார்ந்த முன்னேற்றத்தைத் தராத, சுகத்தைத் தராத, நலத்தைத் தராத எந்த சாஸ்திரமும், எந்த மரபும் மனிதனால் அத்தனை எளிதாக பின்பற்றக்கூடிய நிலைக்கு வந்து விடவில்லை. அதனால்தான் இத்தனை இடைசெருகல்கள் காலகாலம் வந்திருக்கின்றது. உதாரணமாகக் கூறுவோம். சிலவற்றை மனிதன் அறிவு கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். முற்காலத்திலே நாணயங்கள் புழக்கத்தில் இல்லை. ஆனால் மனிதர்களிடையே நாணயம் புழக்கத்தில் இருந்தது. அது போன்ற தருணங்களிலே ஒரு சிரார்த்தம் என்றால், திதி என்றால், அதை செய்கின்ற ஊழியனுக்கு தானியங்களையும், காய்கறிகளையும் தருவது மரபாக இருந்தது. காரணம் என்ன? அதைக் கொண்டு அவன் குடும்பம் பிழைக்க வேண்டும் என்று. ஆனால் இன்றும் அதைத்தான் தரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேவையான தனத்தைத் தந்தால் அவனுக்கு என்ன வேண்டுமோ அவன் அதை வாங்கிக் கொள்வான். ஆனால் இன்னமும் அதை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு ‘"நான் காய்கறிதான் வாங்கித் தருவேன் " என்று இவன் கூற, அவன் என்ன செய்கிறான்? காலையில் முதலில் ஒருவனுக்கு வாங்கிய அதே காய்கறியை வைத்துக் கொண்டே அனைவருக்கும் செய்து கொண்டிருக்கிறான். இந்தத் தவறுக்கு யார் காரணம்? யாருடைய மன நிலை காரணம்? எனவே சாஸ்திரங்களும், மரபுகளும் எதற்காக ஏற்படுத்தப்பட்டன? என்பதை புரிந்து கொண்டு கால சூழலுக்கு ஏற்ப சிலவற்றை தன்னுடைய சுயநலம் அல்லாமல் பொது நலம் கருதி மாற்றிக் கொள்வது தவறல்ல. ஆனால் சாஸ்திரங்களை மனிதன் சுய நலத்திற்காக மட்டுமே எப்பொழுதும் மாற்றுகிறான். பொது நலத்திற்காக மாற்றுவதில்லை. "தர்மம் செய்" என்றால் மட்டும், "இன்று வெள்ளிக் கிழமை. இப்பொழுதுதான் தனத்தை வாங்கி வந்திருக்கிறேன். நீ இரண்டு தினம் கழித்து வா. இப்பொழுதுதான் அந்தி சாய்ந்து இருக்கிறது. இப்பொழுதுதான் அந்தியிலே விளக்கேற்றி இருக்கிறேன். இப்பொழுது எதுவும் தரக்கூடாது. இன்று செவ்வாய்க்கிழமை. எதுவும் தரமாட்டேன். இன்று புதன்கிழமை. அதைத் தரமாட்டேன்" என்று, தருவதற்கு, ஆயிரம் சட்ட,திட்டங்களைக் கூறுகின்ற மனிதன், பெறுவதற்கு எந்த சட்ட, திட்டமாவது போடுகிறானா? "வெள்ளிக்கிழமை எனக்கு தனம் வேண்டாம்" என்று யாராவது கூறுகிறார்களா? வெள்ளிக்கிழமைதானே மகாலக்ஷ்மிக்கு உகந்த தினம் என்று வழிபாடு செய்கிறான். எனவே தனக்கென்றால் ஒரு நியாயம், பிறருக்கென்றால் ஒரு நியாயம் என்பது மனிதனின் சுபாவமாகப் போய்விட்டது. இஃதொப்ப நிலையிலே ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லும் ஒருவனிடம் மனிதன் எப்படிக் கேட்கிறான் ? "என் ஜாதகம் நன்றாக இருக்கிறதா? நிறைய செல்வம் சேருமா?" என்றுதான் கேட்கிறான். "நிறைய புண்ணியம் செய்தேனா? நிறைய தர்ம, காரியங்களில் எனக்கு நாட்டம் வருமா?" என்று யாரும் கேட்பதில்லை. அதுமட்டுமல்லாமல் ஜாதகம் சொல்கின்ற மனிதன் எப்படி சொல்கிறான்? "நீ பிறருக்கு எந்த உதவியும் செய்து விடாதே. யாருக்காவது உதவி செய்தால் தேவையற்ற அபவாதம்தான் வரும், எனவே ஒதுங்கி இரு. அதுதான் உனக்கு நன்மையைத்தரும்" என்றெல்லாம் போதிக்கின்ற நிலைமைக்கு இன்றைய தினம் அனைவருமே ஆளாகி விட்டார்கள். எனவே நல்லதை, தர்மத்தை, சத்தியத்தை, விட்டுக்கொடுக்காமல், பொது நலத்தை, பொது சேவையை விட்டுக்கொடுக்காமல், ஒருவன் சாஸ்திரத்தை அனுசரித்தும் சாதகமோ அல்லது பாதகமோ இல்லாமல் பொது நலம் கருதி அதில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
Om Agatheesaya Namah
ReplyDeleteமதிப்பிற்குரிய அய்யா திரு.அகினிலிங்கம் அருணாச்சலம் அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteதிரு.கார்த்திகேயன் அய்யா நலமாக உள்ளாரா? அவருக்கும் என் மரியாதை கலந்த வணக்கம்.
நான் பல முறை ஆச்சரியம் அடைந்துளேன், எப்பவும் இந்திய நேரப்படி 10.35am / 11.00am-குள் தாங்கள் பதிவு செய்து விடுவீர்கள். இது குரு அகத்தியர் கொடுத்த உத்தரவா இல்லை தங்களுக்கு உகுந்த நேரமா எனத் தெரியவில்லை. ஆனால் தற்பொழுது அதில் நேர மாற்றம் உள்ளது(சில பதிவு 4am). இவ்வளவு அதிகாலையில் பதிவு போட காரணம் நிச்சியம் குருவின் உத்தரவாக தான் இருக்கும் என்று எனது எண்ணம். இது என்ன காரணம் என்று தெரிந்து சொல்ல ஆசை. குருவின் கட்டளையா? அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா?
தயவு செய்து தாங்கள் தவறாக நினைக்க வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களுக்கு தட்டச்சு செய்ய/திருத்தும் பார்க்க அல்லது வேறு ஏதேனும் பணி இருந்தால் தாராளமாக கூறவும். அதை சிரமேற்கொண்டு செய்கிறேன்.
மறுபடியும் தாங்கள் தவறாக என்ன வேண்டாம். சில மாற்றம் இருந்தால் மனதில் உள்ளதை கேட்கிறேன்.
கேட்டது தவறாக இருப்பின் தயை கூர்ந்து மன்னிக்கவும்.
தங்களின் இந்த குருவின் பணி மென்மேலும் சிறக்க குருவின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.
மிக்க நன்றி அய்யா,
இரா.சாமிராஜன்.
வணக்கம் அகத்தியர் அடியவர். திரு.கார்த்திகேயன் அவர்கள் இந்த வலைப்பூவை நிர்வகிக்க தரும் பொழுது, ஒரு விஷயத்தை தெரிவித்தார். த்யானத்தில் அகத்தியப் பெருமானிடம் வெளியிட உத்தரவு கேட்ட பொழுது "ப்ரம்ம முகூர்த்தத்தில் என் வாக்குகளை தெரிவித்தால், அதை படிப்பவர்கள் மனதுள் நான் இருந்து உணர்த்துகிறேன்" என்று உத்தரவு கொடுத்தார். அதனால் சித்தன் அருள் தொகுப்புகள் அனைத்தும், அவர் காலத்தில், காலை உதயத்திற்கு முன்னரே வந்துவிடும்.
Deleteஎன்னால் முடிந்தவரை ஒரு சில நாட்களில் அந்த நேரத்தில் போட்டு வந்தேன். பிறகு முடியாமல் போன போது, அலுவலகம் சென்று இதற்க்கென 10 நிமிடம் ஒதுக்கி 10.30 மணிக்கு போட்டு வந்தேன். தற்போது வேறு கிளைக்கு மாற்றி விட்டார்கள். அங்கு இன்டர்நெட் கிடையாது. ஆதலால், நேரம் கிடைக்கும் போது வெளியிடுகிறேன் என்று அகத்தியப்பெருமானிடம் வேண்டிக் கொண்டுவிட்டு சில நேரங்களில் மாலையில் கூட போடுகிறேன். நான் செய்வது தவறா, சரியா என்று தெரியவில்லை. அப்பொழுதுதான் அமைகிறது. மறுபடியும் ப்ரம்ம முஹுர்த்தத்துக்கு மாறவேண்டும், அப்பொழுதுதான் அகத்திய பெருமான் நிறைய வழங்கிட அருள் புரிவார் என்று தோன்றுகிறது. அதற்கும் அவர்தான் அருள் புரிய வேண்டும்.
திரு.கார்த்திகேயன் அவர்கள் நலமாக உள்ளார். பேசுவது மிகவே குறைந்துவிட்டது. சித்தன் அருள், இன்றும் ஜீவனாக இருப்பதில் அவருக்கும் சந்தோஷம்தான்.
அக்னிலிங்கம் !
Email id annupunga ayya..
Deleteஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDeleteசுவாமி ராஜன் ஐயா
ReplyDeleteவணக்கம் ஓம் அகத்தீசாய நம
தாங்கள் எழுப்பிய இந்த வினா என் மனதிலும் இருந்தது ஆனால் வெளியிடுவதற்கு தயக்கமாக இருந்தமையால் யோசித்து கொண்டுருந்தேன் , பதிவிட்டமைக்கு மிக்க நன்றி உங்கள் மூலம் விடை கிடைத்தது
அக்னிலிங்கம் ஐயா
ReplyDeleteவணக்கம், ஓம் அகத்தீசாய நம
உங்கள் விளக்கத்துக்கு மிகுந்த கடமைப்பட்டு இருக்கிறோம்
கார்த்திகேயன் ஐயா பற்றி பதிவிட்டது பற்றி மிக்க சந்தோஷம், நிறைய விளக்கங்கள் தந்துருக்கிறார்
அகத்தியர் மஹான் அரவணைப்பில் நீடுழி வாழ பிராத்திக்கிறேன்
தங்களது வேலை பழு மற்றும் நேரமின்மை காரணமாக சித்தன் அருள் வலைப்பூ விற்கு என்னால் முடிந்தவரை செய்கிறேன் (if needed)