​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 6 June 2017

சித்தன் அருள் - 690 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தொண்டுகள் தொடர்ந்து செய்கின்ற எல்லோரையும் இறைவன் அருள் பெற்ற சேய்கள் என்று நாங்கள் கூறுவோம். எனவே நல்லதொரு வழிகாட்டக்கூடிய (இந்த பரந்த பாரத பூமியிலே பிறந்தது போல்) நூற்றுக்கணக்கான ஞானிகள் இல்லாத தேசத்திலிருந்தும் கூட ஒரு சில மகான்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய அந்த தேசத்திலிருந்து கூட இப்படி உன்னதமான தொண்டை செய்யக்கூடிய ஒரு நங்கை (அன்னை தெரசா) வந்திருக்கிறாள் என்றால் அது பாராட்டப்படக்கூடிய விஷயம்.  இந்த சேவை இல்லாததால்தான் இந்து மதம் என்று அழைக்கப்படுகின்ற இந்த மார்க்கம் களங்கப்பட்டு இருக்கிறது. எப்பொழுது சேவையும், பிரார்த்தனை எனப்படும் பக்தியும் பிரிந்து நிற்கிறதோ, அந்த மார்க்கம் வளராது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த (இந்து மதம் என்று நாங்கள் கூறவில்லை. புரிவதற்காக கூறுகிறோம்) இந்து மார்க்கமானது வளர வேண்டும் என்று ஆசைப்படக்கூடிய மனிதர்கள் ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து சேவைகளை அதிகப்படுத்தினால் கட்டாயம் இந்த மார்க்கம் உயர்ந்த மார்க்கமாக மாறும். உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட, ஆனால் அந்த கருத்துக்களைப் பின்பற்றாத மனித கூட்டம் கொண்ட ஒரு மார்க்கம் இது.

7 comments:

  1. pls can u share the telephone number of kodaganallur perumal temple priest. then k u

    ReplyDelete
  2. மன்னிக்கவேண்டும், இந்த கருத்து அகஸ்தியர் கூறியதா? அல்லது உங்கள் சொந்த கருத்தா ? நான் அறிந்தவரையில் தெரசா சேவை என்ற பெயரில் மதம் மாற்றமட்டும் செய்தவர்

    ReplyDelete
  3. மன்னிக்கவேண்டும், இந்த கருத்து அகஸ்தியர் கூறியதா? அல்லது உங்கள் சொந்த கருத்தா ? நான் அறிந்தவரையில் தெரசா சேவை என்ற பெயரில் மதம் மாற்றமட்டும் செய்தவர்

    ReplyDelete
    Replies
    1. என் சொந்த கருத்துக்களை இங்கு அகத்தியர் கூறியதாக ஒரு போதும் கூறியதில்லை. இது திரு.கணேசன், தஞ்சாவூ அவர்கள் வாசிக்கும் "ஜீவ நாடியில்" அகத்தியப் பெருமான் ​வந்து அருளியதை அடியவர்களுக்கு சமர்ப்பித்துள்ளேன்.

      Delete
  4. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete