​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 25 July 2016

சித்தன் அருள் - 387 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"தொடர்ந்து இறைக்கு பூசை செய்ய முடியவில்லையே என்று வருந்தாதே! அந்த ஏக்கமே ஒரு வித பூசைதான். எந்த இடத்திலே அமைதி கிடைக்கிறதோ, அங்கு அமர்ந்து பூசை  செய்யலாம். அங்குதான், இங்குதான், அதிகாலைதான், உச்சிப்பொழுதுதான் என்பதில்லை. இறையை வணங்க, காலம், நாழிகை, சூழல் ஏதும் தேவை இல்லை. மனம் ஒன்றி இருந்தால் மட்டும் போதும். இதனை எண்ணி அமைதியாக வாழ். இறை அருள் கிட்டும்." அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

3 comments:

 1. மரியாதையுடன் வணக்கம் ஐயா
  தங்களிடம் ஒரு ஆலோசனை கேட்க விரும்புகிறேன்.தாங்கள் என்னை விட மூத்தோர் என்பதால் உதவுங்கள்

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Send your mail to agnilingamarunachalam@gmail.com

   Delete