​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 13 July 2016

சித்தன் அருள் - 375 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"விதியை மதியால் ஆய்வு செய்யலாம். ஆட்சி செய்ய முடியாது. அகுதொப்ப, விதி, மதி, என்பதையெல்லாம் தாண்டி, பிரார்த்தனை என்ற எல்லைக்கே வந்துவிடு. அது உன்னை கால காலம், காத்து நிற்கும். சென்றது, செல்ல இருப்பது என்றெல்லாம் பாராமல், உள்ளுக்குள் இறையை பார்த்து பழகு. பழகப் பழக, விதி உனக்கு சாதகமாக, அனுபவங்கள், மனோபலத்தை அதிகரிக்கும். மனோபலம் இல்லாது, தெய்வ பலம் கூடாது. சோதனைகளை தாங்கி நடந்து செல்ல, இறையருளால், கடைசியில் நலமே நடக்கும்." அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

3 comments:

  1. Aum Sairam, Om Aagatheesaya Namaha:
    Daily reading Arulvakku, gives us great strength, Thank you Anna for your great service

    ReplyDelete
  2. சரவணன் ஐயாவிற்கு வாழ்த்துக்கள் ஐயா...

    மென்மேலும் அவர் பணி சிறக்க எல்லாம் வல்ல ஸ்ரீ அகத்தியர் பெருமானையும், சித்த குருமார்களையும் பிரார்த்திக்கிறேன் ஐயா...

    ReplyDelete