​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 23 July 2016

சித்தன் அருள் - 385 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அடியவர் வினா:-

"அய்யா! சுற்றி உள்ளோர் எல்லோரும், நண்பர்கள், உறவினர், குடும்பத்தார் எல்லோரும் - இப்படி பணத்தை இறைத்துக் கொண்டு கோவிலை சுற்றிக் கொண்டிருக்கிறாயே என்று ஏளனம் செய்கிறார்கள். இப்படி எல்லாம் ஒரு வாழ்க்கை வாழ்கிறாயே என்று கேலி செய்கிறார்கள் அய்யா!"

அகத்தியர் விடை:-

"மிகவும் நல்ல விஷயமப்பா! உன் கடனை தானே முன்வந்து அவன் அடைக்க ஒப்புக் கொண்டு, உண்மையில் உனக்கு உதவுகிறானப்பா!" 

அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!

2 comments:

 1. ஜீவ நாடி ஏன்னவாயிற்று எங்கே யாரிடம் போய் சேர்ந்தது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் கடந்த இரண்டு மாதமாக முழுவதும் படித்து விட்டேன் இன்றைய செய்தியே எதிர் பார்த்து இருக்கிறேன்
  நன்றி
  ஜெகநாதன் ஹரி

  ReplyDelete
  Replies


  1. வணக்கம்! நாடி வாசித்த அகத்தியர் மைந்தனின் வீட்டில் இத்தனை காலம் அந்த ஜீவ நாடி இருந்தது. அவரின் குடும்பத்தார் அதன் பெருமை அறியாமல், கவனிப்பாரற்று வைத்திருந்ததால், போன வருடம் நவம்பரில் சென்னையில் வந்த வருண பகவான் அனைத்தையும் கொண்டு சென்று விட்டதாக தகவல். இனி நம் மனிதகுலத்திற்கு மனமிரங்கி அருளவேண்டியது அகத்தியப் பெருமானின் கையில்தான் உள்ளது.

   Delete