[கோடகநல்லூர் தூரப் பார்வையில் ]
[கோடகநல்லூர் பச்சைவண்ணப் பெருமாள் கோவில் ]
[ தாமிரபரணி நதி ]
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
சித்தன் அருளில், "அந்த நாள் இந்த வருடம் - 2015" என்கிற தொகுப்பில் ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட நல்ல நாட்களை பற்றி படித்திருப்பீர்கள். அப்படி கூறியதில், கோடகநல்லூரில் இறைவனும், சித்தர்களும் பெரியவர்களும் ஒன்று கூடி இருந்து, அன்று நடந்த நிகழ்ச்சிகளை பற்றி அகத்தியப் பெருமான் விவரித்துக் கூறியதை நாம் அனைவரும் தெரிந்து கொண்டோம்.
அந்த முகூர்த்தம், (ஐப்பசி மாதம், சுக்லபக்ஷ த்ரயோதசி திதி (அன்று இரவு 10.47 வரை), உத்திரட்டாதி நட்சத்திரம் (அடுத்தநாள் காலை 4.01 வரை), அமிர்த யோகம்), இந்த வருடம் 25/10/2015, ஞாயிற்று கிழமை அன்று வருகிறது. உங்கள் ஞாபகத்தை தட்டி எழுப்ப அன்று (1800 வருடங்களுக்கு முன்) என்ன நடந்தது என்பதை அகத்தியர் விவரித்ததை, சுருக்கமாக கீழே தருகிறேன்.
"எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிரபரணி நதியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்."
அப்படிப்பட்ட அந்த புண்ணிய நாளில், அதுவும் இந்த வருடம் எல்லோருக்கும் வசதியாக இறைவன் ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் படி தீர்மானித்திருப்பதால், அகத்தியர் அடியவர்கள் ஒன்று கூடி அங்கு சென்று எல்லோருடைய அருளையும் பெற்று கொள்ள வேண்டும் என்பதற்காக அன்றைய நிகழ்ச்சிகளை கீழே தருகிறேன்.
அன்றைய தினம், தாமிரபரணியில் நீராடி, அகத்தியர், லோபாமுத்திரா தாய், கங்கை போன்ற புண்ணிய நதி தேவதைகளின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள், நீராடலாம்.
"தர்மத்ரவா, பகவதீ, தாம்ரா, மலயநந்திநீ
பராபரா, அமிருதஸ்யந்தா, தேஜிஷ்டா, கர்மநாசிநீ
முக்திமுத்ரா, கர்மகலா, கலிகல்மஷநாசினி
நாராயணி, பிர்ம்மநாதா, நாதெயி, மங்களாலயா
மருத்வதீ, அம்பரவதீ, மணிமாதா, மஹோதயா
தாபக்நீ, நிஷ்களா, நந்தா, த்ரயீ, திரிபதகாத்மிகா"
காலை 11 மணி அளவில் பெருமாளுக்கு, அகத்தியர் அடியவர்கள் சார்பாக திருமஞ்சனம் (அபிஷேகம்), அலங்காரம், மந்திரோத்தமான பூசைகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. (11 மணிக்கு வைத்த காரணம் எல்லா அகத்தியர் அடியவர்களும் வந்து சேர்ந்து அவர் அபிஷேகத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக). மதியம் 2 மணிக்குள் அனைத்தும் முடித்து அருள் புரிய இறைவனிடம் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது. (இதுவும், அகத்தியர் அடியவர்கள், பெரியவர்கள் அருள் பெற்று திரும்பி ஊர் செல்ல ஏதுவாக இருக்கட்டுமே என்று).
மற்றவை, பெருமாள், அகத்தியப் பெருமான் அருள்வதை பொறுத்து.
"ஒதிமலை முருகர் பிறந்த நாள்" தொகுப்பில் சொல்ல விட்டுப் போன ஒரு விஷயம்.
கோடகநல்லூரில், போன வருடம் சந்தித்துக் கொண்ட இரு அகத்தியர் அடியவர்கள், ஒதிமலையில் அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது சந்திக்க நேர்ந்ததாம். ஒருவருக்கொருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் அவரில் ஒருவர்
"ஆமாம்! போனவருடம் கோடகநல்லூர் வந்து அருள் பெற்று வந்தீர்களே! பெருமாள் அருள் எப்படி இருந்தது?" என்று வினவ,
"ஆமாம்! போனவருடம் கோடகநல்லூர் வந்து அருள் பெற்று வந்தீர்களே! பெருமாள் அருள் எப்படி இருந்தது?" என்று வினவ,
மற்றவர்,
"அதற்குப் பின் கடந்த ஒருவருடமாக மிக அருமையாக இருந்தது. இந்தவருடமும் வந்துவிட வேண்டியதுதான். இதன் பின், பெருமாளை சும்மா விடமுடியுமா?!" என்றாராம்.
போன வருடம் சென்ற அகத்தியர் அடியவர்களின் வேண்டுதல்களை, நிச்சயமாக அகத்தியரின் பரிந்துரையின் பேரில், பெருமாள் நிறைவேற்றி வைத்தார் என்பது இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது.
2014இல் நடந்த நிகழ்ச்சிகளை ஒரு முறை கூட படித்து மகிழ, நினைவுக்கு கொண்டு வர கீழே உள்ள தொடுப்பில் பார்க்கவும்.
கோடகநல்லூர் செல்ல வேண்டிய வழித்தடம்:-
- ரயிலில் வருபவர்கள், திருநெல்வேலி ஜங்க்ஷன் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து நேர் எதிரே இருக்கும் ஜங்க்ஷன் பஸ் நிலையத்தில் "சேரன்மாதேவி" செல்லும் வண்டியில் ஏறி, நடுக்கல்லூர் என்கிற நிறுத்தத்தில் இறங்கவும். நடுக்கல்லூரிலிருந்து கோடகநல்லூர் ஒரு கிலோமீட்டர் தூரம்தான். நடந்தும் (வயல் வரப்பை ரசித்தபடி) செல்லலாம், இல்லையென்றால் ஆட்டோவில் செல்லலாம்.
- வெளியூர் பஸ் நிலையத்திற்கு (பாளையம்கோட்டை) வருகிறவர்கள், அங்கிருந்தே சேரன்மாதேவி பஸ்சில் ஏறி, சேரன்மாதேவி சென்று அங்கிருந்து நடுக்கல்லூர் வந்து, பின் கோடகநல்லூர் செல்லலாம்.
அடியவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்:- கோடகநல்லூரில், அடிப்படை வசதி குறைவு. ஆதலால், சாப்பாட்டு விஷயத்தை பொருத்தவரை, ஏதேனும் (நொறுக்குத் தீனி கூட) வாங்கி வைத்துக் கொள்வது நலம். நிச்சயமாக பெருமாளுக்கு நிவேதனம் செய்த பிரசாதம் கிடைக்கும்.
எல்லோரும் சென்று அவர் அருள் பெற்று வரலாம்! வாருங்கள்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி!
Thank you very much Ayya.
ReplyDeleteThank you very much Ayya for the wonderful information. I cannot wait to arrive at Kodaganallur on 25th morning. This will be my 2 nod visit to this lovely place
ReplyDeleteThank you very much Ayya
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.முதல் முறையாகச் செல்கிறேன்.அகத்தியர் அடியவர் கூட்டத்தைத் தரிசித்து பெருமாளையும் தரிசனம் செய்ய த் திருவருள் கூட்டியுள்ளது
ReplyDeleteஎன்றே நினைக்கிறேன்.எல்லாம் அவன் செயல்.