​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 1 December 2014

அபிஷேக எண்ணை - தீப மை!

[படம்பக்கநாதர், திருஒற்றியூர்]
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கார்த்திகை மாதம் என்றாலே சிவபெருமானின் கோவில்கள், முருகரின் கோவில்களில் தீபம் ஏற்றுவது ஒரு திருவிழா போல நடக்கும். தீபம் என்றதும் நம் நினைவுக்கு வருவது, திருவண்ணாமலை. ஒரு கொண்டாட்டமே அங்கு நடக்கும். சித்தர்களும், முனிவர்களும் கூட வந்திருந்து இறை அருளை பெற்றுக் கொள்வர்.

திருவண்ணமலையில், மலை உச்சியில் ஏற்றப் படுகிற தீபக் கொப்பரயிலிருந்து  எடுக்கப் பட்ட "மையை" புனுகு, ஜவ்வாது சேர்த்து, அங்கே கோவிலில் உரையும் நடராஜா பெருமானின் சிலைக்கு அணிவித்தப் பின் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். இந்த மை, அதை அணிகிற பக்தனுக்கு கவசமாக நின்று காப்பாற்றுகிறது என்பது நிதர்சன உண்மை.

இதே போல், சென்னையில், படம்பக்க நாதர் கோவில், திருஒற்றியூரில், அன்றைய தினம் புற்றை மூடி இருக்கும் கவசத்தை விலக்கிவிட்டு , பரணி நட்சத்திரத்தன்று, எண்ணை அபிஷேகம் செய்வார்கள் (04/12/2014). பக்தர்கள் யார் வேண்டுமானாலும் அபிஷேகத்துக்கு எண்ணை வாங்கிக் கொடுக்கலாம். புற்றுக்கு அபிஷேகம் செய்தபின், பிரசாதமாக தருவார்கள். அதை உடலில் அணிந்து கொள்ள, நல்ல பாதுகாப்பை, இறை அருளை பெற்றுத் தரும்!

சென்னையில் வசிப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!



  

1 comment: