​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 1 December 2014

ஒரு அகத்தியர் அடியவரின் எளிய அனுபவம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியர் அடியவர் என்கிற பெயர் கொண்ட ஒரு சித்தன் அருள் வாசகர், தனக்கு கிடைத்த எளிய ஆனால் அரிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதை உங்கள் முன் தொகுத்து தருவதில் ஆனந்தம் அடைகிறேன். எல்லா அகத்தியர் அடியவர்களும், அகத்தியர் அருள் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறேன்.

கார்த்திகேயன் 

திரு வேலாயுதம் கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு எனது வணக்கம்.

சித்தன் அருள் மூலமாக எனக்கு கிடைத்த அனுபவத்தை நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். பிழை இருப்பின் மன்னிக்கவும். மனம் சுத்தியோடும், நல்ல எண்ணங்களோடும் நாம் செய்யும்   வேண்டுதல் எதுவானாலும் அதற்கு சித்தர்களின் பரிபூரண ஆசிகள் உண்டு என்பதை எனது அனுபவத்தில் கண்ட உண்மை.

நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.  எனது பணிநேரம் முழுவதும் இரவு நேரம் (Night Shift).  எனக்கு சித்தர்களின் மேல் மிகுந்தஆர்வமும் பக்தியும் உண்டு. சித்தர்களின் நூல்கள், கட்டுரைகள் நான் விரும்பிபடிப்பேன். எதேச்சையாக என் நண்பர் மூலம் எனக்கு கிடைத்தது இந்த சித்தன் அருள் Blog. ஒவ்வொரு நாளும் இரவு நேர பணி முடிந்த பின் சித்தன் அருள் Blog கைபடிப்பேன். ஒவ்வொரு அன்பருக்கும் அகத்தியர் அருளால் கிடைத்த அனுபவங்கள் யாவையும் நினைத்து பூரித்து போனேன். அதே சமயம் உங்கள் நண்பர் அவர்கள் இப்போது உயிரோடு இல்லயே என்று வருத்தம் அடைந்தேன். நான் ஒவ்வொரு பதிவையும் படித்து விட்டு,  "அகத்தீசா, இந்த உலகில் இருக்கும் எத்தனையோ பேருக்கு தாங்கள்  உருவமாகவும், அருவமாகவும், ஜீவநாடி மூலமாகவும் அருள் செய்திருக்கிறீர்கள். எனக்கு தாங்கள் ஜீவநாடி மூலமாவது அருள் புரியவேண்டும், என்று மனம் உருக வேண்டிக்கொண்டேன். உங்கள் நண்பருக்கு பின் யாரிடம் ஜீவ நாடி உள்ளது என்று எனக்கு தெரியாது.

சித்தன் அருள் எனக்கு கிடைத்து சரியாக ஒரு மாதம் இருக்கும், என் நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது. கல்லாரில் சில மாதங்களாக அகத்தியர் ஜீவ நாடி வாசிக்கபடுகிறது என்று கூறினான். நான் மிகவும் சந்தோஷமடைந்தேன். நானும் என் நண்பனும் கல்லாருக்கு புறப்பட்டு போனோம். அகத்தியரின் அருளால் எனக்கு ஜீவநாடி வாசிக்கப்பட்து. அன்றிலிருந்து இன்றுவரை, அகத்தியர் எனக்கு எவ்வுளவோ நன்மைகளை செய்துள்ளார். சில கஷ்டமான  நேரங்களில் மந்திர உபாசனைகளையும் உள் நின்று உணர்த்தியுள்ளார். இத்தனையும் சித்தன் அருள் மூலமாக எனக்கு கிடைத்தது. இந்த சித்தன் அருள் Blogகை அறிமுகப்படுத்திய என் நண்பருக்கும், தங்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தங்களது இந்த முயற்சி மேன்மேலும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!


3 comments:

  1. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete
  2. ஐயா எனக்கு திருமணம் ஆகவில்லை கடன்கள் அதிகமாக உள்ளது திருமணம் ஆக மற்றும் கடன்கள் தீர அகத்தியர் மந்திரம் சொல்லலுங்கள்

    ReplyDelete